சாருவை மிரட்டிய ரசிகர்கள்

சாருநிவேதிதாவின் இணையதளம் வேலை செய்யவில்லை, எனவே சுட்டிகள் கொடுக்க முடியவில்லை

சாருநிவேதிதா சில நாட்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த்தை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதினார், ஆகா கெளம்பிட்டாங்கய்யா அவரு ரசிகர்கள், அவங்க எல்லாம் யாரோட ரசிகர்கள் ஆன்மீகவாதி யின் ரசிகர்கள் அல்லவா?! வன்முறையின் ராஜா என மற்றவர்களை பேசுபவரின் ரசிகர்கள் அல்லவா?! அன்பின் இமயமலை அல்லவா?! அதான் ஏகப்பட்ட ஈ-மெயில் கொசு மெயில் மிரட்டல்கள் அனுப்பினர் சாருவிற்கு

அதைப்பற்றி அவர் சொன்னதை நினைவில் இருந்து எழுதுகின்றேன், "நடிகர் ரஜினிகாந்த்தை விமர்சித்து எழுதிய கட்டுரைக்கு ஏகப்பட்ட மிரட்டல் மெயில்கள் 'டேய் நாயே' என்று ஆரம்பித்து 'அடிவாங்கி சாகதடா' என்று முடிந்த மெயில்கள், அதை ஒரு முறை கூட படித்து பார்க்காமல் முதல் வரியையும் கடைசி வரியையும் தவிர வேறு எதையும் படிக்காமலே அழித்துவிடுவது அராஜகம் தான்" என்று எழுதியிருந்தார்.

ஆகா படித்த ஈமெயில், கொசு மெயில் அனுப்பத் தெரிந்த ரசிகர்களே இப்படி மிரட்டினால் படிப்பறியாத கொடி தோரணம் கட்-அவுட் கட்டும் ரசிகர்கள் எப்படியிருப்பார்கள்(?!) நல்ல வேளை தமிழ்நாட்டை யார் யாரிடமிருந்தோ காப்பாற்ற ஆண்டவனை கூப்பிட்டார்கள் ஆனால் இவர்களிடமிருந்து அந்த ஆண்டவன் தான் இந்த தமிழ்நாட்டை காப்பாற்றினாருங்கோ!!!

151 ஆவது பதிவாக ரஜினியை விமர்சித்து எழுதியவுடனே 152வது பதிவாக சில மாதங்களுக்கு முன் திரைப்படங்களில் புகைப்பிடிப்பதை எதிர்த்து கொண்டுவரப்பட்ட சட்டத்தை அப்போதே விமர்சித்து எழுதாமல் இப்போது மருத்துவர் இராமதாசுவை விமர்சித்து எழுதினார், பாவம் சாரு அவருக்கு என்ன கட்டாயமோ நடிகர் ரஜினிகாந்த்தை விமர்சித்து எழுதியவுடன் மருத்துவர் இராமதாசுவைப் பற்றியும் எழுத வேண்டுமென என்ன செக்கியூலரிச பிரச்சினையோ.

அது சரி நடிகர் ரஜினியைப்பற்றி எழுதியவுடன் ஈமெயில் கொசுமெயில் மிரட்டல் விட்டார்களே விசிறிகள், அதே சாரு இராமதாசுவைப் பற்றி எழுதியவுடன் எந்த ஈமெயில் மிரட்டலோ கொசுமெயில் மிரட்டலோ வந்ததாக சொல்லவில்லையே ஒரு வேளை ஈமெயில் கொசுமெயில் அனுப்ப தெரிந்த ஒரு பாமக தொண்டன் கூட இல்லையோ என்னமோ ஹா ஹா....

வாழ்க அன்பின் இமயமலை ரசிகர்கள்

ஏதோ ஒரு அப்பாவி என்னமோ சொல்றாரே என்னங்க கொஞ்சம் சத்தமாதான் சொல்லுங்க என்னது

'அவங்கள்ளாம் எத்தனை ஈமெயில் கொசுமெயில் அனுப்புனாங்களா...' அட அவங்ககிட்டயே கேட்டுக்குங்களேன்...

வாங்க கண்ணுங்களா வாங்க பின்னூட்ட பெட்டி திறந்து தான் இருக்கு... அப்புறமா போய் கூலா ஒரு லைம் ஜீஸ், ஐஸ் தண்ணி எதுனா குடிங்க.

முதல் பின்னூட்டம் இடப்போறவர் யார் என்று சொல்லுங்க

அவரா? அவரே தான்...

16 பின்னூட்டங்கள்:

said...

i think charu is a self professed intellectual..."like strayed...." which tries to "lolz" at everyone.
I read his blog on TiS by Illayaraja...Damn! I dont have any respect for him!

I guess talking about him itself a waste of energy and time!

cheers
satya

said...

சாருலதாவும் சாருநிவேதிதாவும் ஒருவரா?

said...

//சாருலதாவும் சாருநிவேதிதாவும் ஒருவரா?
//

சாருநிவேதிதாவைத்தான் சாருலதா என ஒரு இடத்தில் தவறுதலாக குறிப்பிட்டுவிட்டேன்.

தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி வசந்தன்,

said...

சாருலதா வலைப்பூ லின்க் கொடுத்தாதான் கருத்துப்போட வசதியா இருக்கும் தல..

argument continues..... எப்போ தான் முடியும் இந்த டாபிக்.. வெற்றிகரமான 2 ஆண்டுக்கள்... 3 .... 5 .. ஆண்டுகள் மாதிரி தொடரும் போல இருக்கே!!

said...

There can not be any mails from PMK. I am very sure and bet. Because they'll directly go and hit. We saw what they did at Madurai be fore their leader, ofcoure the king of violance.

For god's sake, dont quote Charu's articles.

said...

போட்டு தாக்கு

said...

//இராமதாசுவைப் பற்றி எழுதியவுடன் எந்த ஈமெயில் மிரட்டலோ கொசுமெயில் மிரட்டலோ வந்ததாக சொல்லவில்லையே //
They never show their response in e-mails, please check highways you can see fallen trees, thats their response.

said...

PMK activists are not that educated to post a comment in the blogger. Do you know most of the Rajani fans are Vanniayans.

said...

>> பாவம் சாரு அவருக்கு என்ன ??>>கட்டாயமோ நடிகர் ரஜினிகாந்த்தை >>விமர்சித்து எழுதியவுடன் மருத்துவர் >>இராமதாசுவைப் பற்றியும் எழுத >>வேண்டுமென என்ன செக்கியூலரிச >>பிரச்சினையோ

என்ன குழலி இப்படி சொல்லிடீங்க.. ரஜினியைப்பற்றி எழுதினால் அது நடுநிலையான விமர்சனம், ராமதாஸைப்பற்றி எழுதினால் செக்குலரிசமா.. அதையும் விமர்சனமாக எடுத்துக்கொள்ள முடியவில்லையா..

உங்களை மாதிரியே, எதாவது வலைப்பூவில் ஒருவர், விஜயகாந்த் இருக்கையில் ஏன் அனைவரும் ரஜினியின் மீது பாய வேண்டும் என்று நியாயப்படுத்த முயன்றால்.. அப்போது ரஜினியின் மீதான விமர்சனம் ஒருதலைப்பட்சமாகிவிடுமா .. ???

said...

//>> பாவம் சாரு அவருக்கு என்ன ??>>கட்டாயமோ நடிகர் ரஜினிகாந்த்தை >>விமர்சித்து எழுதியவுடன் மருத்துவர் >>இராமதாசுவைப் பற்றியும் எழுத >>வேண்டுமென என்ன செக்கியூலரிச >>பிரச்சினையோ
//

செந்தில் இராமதாசைப் பற்றி எழுதியதை சரி என்றோ தவறென்றோ நான் சொல்லவில்லை எழுதப்பட்ட பிரச்சினையையும் நேரத்தையும் தான் சொல்கின்றேன், திரைப்படங்களில் புகைப்பிடிப்பதை தடுக்கும் சட்டம் வந்து சில மாதங்கள் ஆகிவிட்டன, சாரு எழுதியிருந்தால் அப்போதே எழுதியிருக்க வேண்டும் 151 வது பதிவாக ரஜினியை விமர்சித்தவுடனே 152வது பதிவாக சில மாதங்களுக்கு முன் நடந்ததை வைத்து விமர்சித்ததை கண்டவுடன் எனக்கு சந்தேகம் அதனால் தான் கீழ் கண்டவாறு எழுதினேன், நீங்க இரண்டாவது வரியை மட்டும் மேற்கோள் காட்டிவிட்டீர்.
//151 ஆவது பதிவாக ரஜினியை விமர்சித்து எழுதியவுடனே 152வது பதிவாக சில மாதங்களுக்கு முன் திரைப்படங்களில் புகைப்பிடிப்பதை எதிர்த்து கொண்டுவரப்பட்ட சட்டத்தை அப்போதே விமர்சித்து எழுதாமல் இப்போது மருத்துவர் இராமதாசுவை விமர்சித்து எழுதினார்
//

said...

//PMK activists are not that educated to post a comment in the blogger.
//
நல்ல நகைச்சுவை... இருந்தாலும்
ரசிகர்கள் அளவிற்கு இல்லை என்பது உண்மைதான்.

// Do you know most of the Rajani fans are Vanniayans.//
அனானிமஸ் இந்த பதிவில் சாதி எங்கே வந்தது?? எதற்கு தேவையில்லாமல் சாதியை இழுக்கின்றனர்,

சரி உங்களுக்காக ஒரு தகவல் ரஜினி-பாமக மோதல் வந்தபோது பல ரஜினி ரசிகர் மன்றங்கள் கலைக்கப்பட்டன, அதில் நூற்றுக்கும் அதிகமானவை பதிவு செய்யப்பட்ட மன்றங்கள் ஆனால் ஒரு பாமக கிளை கூட கலைக்கப்படவில்லை என்பதை நினைவு படுத்த விரும்புகின்றேன்.

said...

எழுதப்படும் விஷயத்தை விட, அதை வெளிப்படுத்தும் விதமே.. புரிதலுக்கு முக்கிய காரணம் தானே குழலி.. சரிதானே...

நீங்கள்,

>>"சில மாதங்களுக்கு முன் திரைப்படங்களில் புகைப்பிடிப்பதை எதிர்த்து கொண்டுவரப்பட்ட சட்டத்தை >>அப்போதே விமர்சித்து எழுதாமல் இப்போது மருத்துவர் இராமதாசுவை விமர்சித்து எழுதினார்"

என்பதை விட.. , செக்குலரிசத்தைப்பற்றிய உங்கள் நக்கல் :-) காமெண்ட்டே, முன்னே தெரிந்தது.. தவறிருந்தால் மன்னிக்கவும்..

தங்கர் விவகாரமே, இதற்கு ஒரு சரியான உதாரணம் என்பது என் கருத்து, உங்களுக்கும் அத்தகைய கருத்தில் உடன்பாடு இருப்பதால்தான், பின்னூட்டமிடுங்கள் ஆனால் நாகரிகத்துடன் நடந்துகொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்..

உங்களுடைய பல நல்ல பதிவுகள், வேறு ஒரு அர்த்தமானதற்கு காரணம், இராமதாஸ் எது செய்தாலும் அதற்கு ஒரு காரணம் சொல்லி, அதை விமர்சனம் செய்யலாகாது என்று ஒரு தோற்றத்தை உருவாக்கியதால் தான் என்பது என் கருத்து, அதைப்பற்றி ஏற்கனவே பின்னூட்டமிட்டுள்ளேன்..

தவறான அர்த்தம் கற்பிப்பவர்கள் எப்பவுமே இருப்பார்கள், எல்லோருக்கும் இனிக்கும் வகையிலும் எழுதமுடியாதுதான்..

இருந்ததாலும், எழுதப்படும் விஷயத்தை விட, அதை வெளிப்படுத்தும் விதமே.. புரிதலுக்கு முக்கிய காரணம் தானே குழலி ??????????

சில நல்ல விஷயங்கள், அந்த காரணத்தால் ஒதுக்கப்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்திலேயே கூறினேன்.. தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம்..

said...

செந்தில் முதலில் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி,

//இருந்ததாலும், எழுதப்படும் விஷயத்தை விட, அதை வெளிப்படுத்தும் விதமே.. புரிதலுக்கு முக்கிய காரணம் தானே குழலி ??????????
//
எனக்கு சில இடங்களில் இந்த சொதப்பல் நடைபெறுகின்றது பாலா கூட சுட்டியிருந்தார், இன்னும் எழுத்து நடை முழுக்க பழகவில்லை, எனினும் சற்று கவனமாக இருக்க வேண்டும் என புரிகின்றது.

//தவறான அர்த்தம் கற்பிப்பவர்கள் எப்பவுமே இருப்பார்கள், எல்லோருக்கும் இனிக்கும் வகையிலும் எழுதமுடியாதுதான்..
//
புரிந்து கொண்டேன், மிக சமீபத்தில்தான் புரிந்து கொண்டேன்.

நன்றி செந்தில்

said...

சாருவின் இணையதளம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. நீங்கள் கொடுத்தப் பதிவு எண்கள் தவறானவை. சுட்டிகள் இதோ:

1. http://www.charuonline.com/kp151.html
கண்காணிப்பின் அரசியல் - ரெண்டாம் ஆட்டம்

2. http://www.charuonline.com/kp150.html
க்ரியா யோகமும் இருபது கோடியும்

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

நன்றி டோண்டு அய்யா, நினைவிலிருந்து எழுதியது அதனால் தகவல் தவறு ஏற்பட்டுவிட்டது

நன்றி

said...

சாரு எழுதுவதெல்லாம் சத்திய வாக்கு என்று அறியத்தந்தமைக்கு நன்றி...

***

இது செந்திலுக்கு

// இராமதாஸ் எது செய்தாலும் அதற்கு ஒரு காரணம் சொல்லி, அதை விமர்சனம் செய்யலாகாது என்று ஒரு தோற்றத்தை உருவாக்கியதால் //

ராமதாஸ் மீது தொடர்ந்து "ஊடக வன்முறை" செய்வதால் அதை ஆட்சேபித்து எழுத வேண்டிய "செக்கூலரிஸ" நிலைக்கு குழலி தள்ளப்பட்டார் என்பதே சரி. இது போலவே ஊடக வன்முறை நடக்கும் அனைத்து தலைவர்களின் நல்ல விஷயங்களையும் குழலி வெளிச்சம் போட்டுக்காட்டத்தான் முயற்சி செய்கிறார். ஆனால் நேரம் போதவில்லை என்று நினைக்கிறேன்.

எதுக்கும் ஒரு ஸ்மைலி போட்டுக்கறேன் ;-))