காதில் புகை

நானும் பதிவுபோட்டு நிறைய நாட்களாகின்றதே, அட நம்ம வீ.எம். நம்மை காணாமல் போனவர்கள் பட்டியிலில் சேர்த்துவிட்டார், அதுவும் இல்லாமல் ஒரு முறை நினைவூட்டல் வேறு செய்துவிட்டார், தற்போதைக்கு எழுதும் அளவிற்கு நேரம் (டேய்... அடங்கு அடங்கு என சொல்வது எனக்கு கேட்கின்றது...)இல்லையே, சரி ஒரு படப்பதிவாவது போடலாம் என நினைத்தேன்...

சரி நம்ம இருப்பையும் சொல்லிய மாதிரி ஆனது, சிலர் புகையற மாதிரியும் ஆனது என்று தான் நம்ம மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி அவர்கள் இன்று பி.பி.சி. தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் பேசியதை கைத்தொலைபேசியை பயன்படுத்தி படம் பிடித்து இங்கே பதிக்கின்றேன்.

Image hosted by Photobucket.com

5 பின்னூட்டங்கள்:

Anonymous said...

Super Built up! Singapore time ippo 2.30 a.m. Early morning postings?!

குமரேஸ் said...

அப்ப எய்தவர் வீ.எம் இருக்க குழலி அம்பை நோகவேண்டாம் என்று எல்லாருக்கும் சொல்கிறீர்கள் - சரிதானே

என்ன வகையான கைத்தொலைபேசி? படம் நன்றாக வந்துள்ளது

குழலி / Kuzhali said...

//Super Built up! Singapore time ippo 2.30 a.m. Early morning postings?! //
வெள்ளிக்கிழமை, கடந்த இரண்டு வாரமாக கடுமையான வேலை, சரி கொஞ்சம் தமிழ்மணம் பார்க்கலாமே என்றுதான்....

//என்ன வகையான கைத்தொலைபேசி? படம் நன்றாக வந்துள்ளது
//
Samsung SGH-D410, படத்தின் தரம் நன்றாக இருக்கும், ஆனால் கைத்தொலைபேசியின் மற்றைய பயண்பாடுகள் அத்தனை நன்றாக இல்லை, உதாரணமாக MP3,FM இல்லை, சில நிமிடங்களுக்கு மட்டுமே அசைபடம் எடுக்க முடியும் இது போன்று பல குறைகள், ஆனால் தற்போது இது சந்தையில் இல்லை, மேற் கூறிய குறைகளை நீக்கப்பட்டு புதிதாக வெளிவந்துள்ளது.

நன்றி

Srikanth Meenakshi said...


சொட்டு நீலம், டோய், ரீகல் சொட்டு நீலம் டோய்...

குழலி / Kuzhali said...

//சொட்டு நீலம், டோய், ரீகல் சொட்டு நீலம் டோய்...
//
அடடா வெள்ளை சொக்கா போட்டிருப்பதை சொல்கின்றீரா? இன்னும் சிறிது நேரத்தில், தமிழ் உணர்வுள்ள தமிழன் எப்படி வெள்ளை சொக்காய் போடலாம், ஆங்கிலேயர்களின் தொலைக்காட்சியான பி.பி.சி நிகழ்ச்சியில் தமிழ் உணர்வு பற்றி பேசுபவரின் மகன் எப்படி பேசலாம் என பின்னூட்டமிடப் போகின்றனர்... :-)