போலி மூர்த்தி- திராவிட ஆஃப் பாயில் குஞ்சுகள் - சுகுணாதிவாகர்

கடைசியாக எழுதியபோது போலி மூர்த்தி தொடர்பான விவகாரங்களை ஆஃப் லைனில் எடுத்து சென்றுவிடுகின்றோம் என்றேன், டோண்டு முரளி மனோகர் என்ற பெயரில் எழுதி மாட்டிக்கொண்டபோது எத்தனையோ பேர் கும்மு கும்மென்று கும்மினார்கள், அதில் எத்தனையோ பேர் மூர்த்தி பிரச்சினையில் அமைதியாக வேடிக்கைப்பார்த்தனர், அட எதற்கு கருத்து சொல்லனும், எப்போது சொல்லனும் என்ன சொல்லனுமென்பது அவரவர்கள் விருப்பம், அதை கேள்வி கேட்கும் அதிகாரமோ உரிமையோ எவருக்குமில்ல விமர்சனத்தை தவிர.

சுகுணாதிவாகர் போலி தொடர்பாக ஒரு பதிவு எழுதியிருந்தார், அதில் அவர் அள்ளித்தெளித்த கருத்துகளுக்கு பேசாமல் மூடிக்கொண்டே இருந்திருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து. அதில் அவர் அள்ளித்தெளித்த கருத்துகளில் ஒன்று

"முதலில் நான் போலியை ஆதரிக்கவில்லை. ஆனால் அதேநேரத்தில் நான் போலியை எதிர்ப்பதெல்லாம் அவர் ஒரு ஆதிக்கச் சாதி வெறியராகவும் ஆணாதிக்கப் பாசிஸ்ட்டாகவும்
இருக்கிறார் என்பதாலுமே தவிர மற்றபடி அவர் கெட்டவார்த்தைகளில் திட்டுகிறார் என்பதற்காக அல்ல. இது என் வீட்டிலுள்ள பெண்களை நாளை அவர் கெட்டவார்த்தையில்
திட்டினால் அதற்கும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.ஆனால் இப்போது போலியை எதிர்ப்பவர்களுக்கும் சரி இதற்கு முன்னால் போலியை எதிர்ப்பவர்களுகும் சரி இப்படியான
நிலைப்பாடுகள் எதுவும் கிடையாது."

"போலியை ஆதரிப்பவர்களுக்கும், எதிர்ப்பவர்களுக்கும் சித்தாந்தம், அறம் என ஒரு புண்ணாக்கும் கிடையாது. தன்முனைப்பு, தனிமனித அரிப்பு, அப்போது யாரை எதிரியாய் வரித்துக்கொண்டோமோ அந்த
எதிரியை ஒழித்துக்கட்டும் வெறி இது மட்டும்தான் இரண்டுதரப்பிற்குமான அடிப்படை."


மற்றவர்களின் நிலைப்பாடு காரணங்கள் என்னவோ ஏதோ ஆனால் இதோ இப்போது வெளிப்படையாக சொல்கின்றேன், மூர்த்தி அசிங்கமாக என் குடும்பத்தையெல்லாம் கேவலமாக எழுதியபோதும் மின் மடல் அனுப்பிய போதும் தொடக்க காலங்களில் எனக்கு கோபம் வந்தது உண்மை, ஆனால் தொடர்ந்து அவன் மின் மடல்கள் வந்த போது மிக சாதாரணமாக அதை முழுவதும் படிக்கும் மனநிலைக்கு வந்துவிட்டேன்,

தொடர்ந்து அவன் அனுப்பிய மடல்களால் மரத்து போனது ஒரு காரணமெனில் தி.க. தலைவர் வீரமணி அவர்கள் சொன்னது அவரை திட்டி வரும் கடிதங்களில் சில "விபச்சாரி மகனே" என்று தான் ஆரம்பிக்கும் என்றும் ஆனால் அவைகளாலெல்லாம் காயப்படாமல் அவர் செயல்படுவதாகவும் பேசினார், அப்போதே ஆபாச மடல்களுக்கு உணர்ச்சி வயப்படும் நிலை குறைந்துவிட்டது.

போலி மூர்த்தியை எதிர்ப்பதற்கு எனக்கு சித்தாந்த புண்ணாக்கு எதுவுமில்லையென்றாலும் சில காரணங்கள் உண்டு....

1. மிக மேலோட்டமான மொக்கையான விவாதகளங்கள் நடத்தி வரும் காட்சி ஊடகங்களாக இருந்தாலும் சரி, அச்சு ஊடகங்களாக இருந்தாலும் சரி வெகுசன ஊடகங்கள் திராவிட, சபால்ட்டர்ன் கதையாடல்களுக்கு எந்த விதமான இடமும் அளிக்காமல், தம் இனத்தின் நலனுக்கான, தம் சாதிக்கான கருத்தாக்கங்களை, வேறு யாரும் ஊடகத்துறையில் வந்தாலும் கட்டமைக்கப்பட்ட ஊடக ஒழுக்கத்தை மீற முடியாதவாறு பொதுப்புத்தியாக மக்கள் மனதில் புகுத்திக்கொண்டிருக்கும், இருக்கின்ற இந் நிலையில் இந்த இணைய வெளி ஏற்படுத்தியிருக்கும் சுதந்திரவெளியில் மிகப்பெரிய தொடர் விவாதங்கள், உரையாடல்கள், கதையாடல்கள் எல்லாம் நடந்து கொண்டிருந்த சூழலில் பார்ப்பனர்களை எதிர்க்கிறேன் பேர்வழி என்று ஆபாசமாக பேசி வெகுசன ஊடகங்கள் மறுத்திருக்கும் ஒரு விவாத களத்தை இணையத்தில் சாத்தியமாக்கியிருக்கும் விவாத, உரையாடல் சூழலை நாசமாக்கும் மூர்த்தியின் போலி செயல்பாடுகளினால் இந்த மாதிரியான தளம் வீணாவதை தடுக்க போலி மூர்த்தியை எதிர்ப்பதற்கான முதல் காரணம்.

2. நான் முதன் முதலில் தமிழ் வலைப்பதிவுலகிற்கு வந்த போது
தங்கமணி, சுந்தரவடிவேல், ரோசாவசந்த், சுந்தரமூர்த்தி மற்றும் பலர் பதிவுகள் படித்த போது பெரியார் கொள்கைகள் பற்றி நிறைய புரிதல்கள் ஏற்பட்டன, இவர்கள் பெரியார் சித்தாந்த வெளிப்பாட்டு பதிவாளர்களாக இனம் காணப்பட்டனர், இவர்களின் எழுத்து மேலும் பலரை பெரியார் பற்றி அறிந்து கொள்ளவும் சித்தாந்தத்தை புரிந்து கொள்ளவும் தூண்டியது. இவர்களின் பதிவுகள் ஒரு எல்லையில் ஒரு கோட்பாட்டில் சிக்கிக்கொண்டு சிந்திக்காமல் பரந்துபட்ட சிந்தனை வெளியை காண்பித்தது

முதன்முறையாக இரண்டாண்டுகளுக்கு முன் தமிழ்மணத்திலிருந்து மூர்த்தி நீக்கப்பட்ட போது ஒரு சிறு சலசலப்பும் இல்லாமல் கேட்க நாதியில்லாமல் வெளியேற்றப்பட்டான் மூர்த்தி, கடந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த போலி மூர்த்தி பிரச்சினை நடந்து கொண்டிருந்த போதும் விடாது கருப்புவாக வலைப்பதிவுலகின் மூர்த்தியின் ரீ-எண்ட்ரி தனது சொந்த அரிப்பை தீர்த்துக்கொள்ள பெரியார் பெயரை சொல்லிக்கொண்டும் பெரியாரின் தொண்டனாகவும் நடந்தேறியது.

விடாது கருப்பு மூர்த்தி போன்ற போலி பொறுக்கிகளும், பார்ப்பன எதிர்ப்பிற்கும் ஆளைஎதிர்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் தெரியாத மூர்த்தியின் ஓரிரு அல்லக்கை ஆஃப் பாயில் திராவிட குஞ்சுகள் எல்லாம் பெரியார் தொண்டர்களாகவும் பெரியார் சித்தாந்த வெளிப்பாட்டு பதிவர்களாகவும் கருதப்படுகின்ற நச்சு சூழல் ஒழிக்கப்பட வேண்டுமென்றது இரண்டாம் காரணம்.

3. பெரியார் பெயரை சொல்லிக்கொண்டு பொறுக்கி மூர்த்தியும் அவனுடைய அல்லக்கை ஆஃப் பாயில்களும் நடத்தும் போலி கூத்தில் திராவிட சிந்தனை உடையவர்களே இப்படித்தான் என்று நடத்தப்படும் தவறான பிரச்சாரத்திற்கு மூலக்காரணமே இந்த போலி மூர்த்தியும் அவனுடைய அல்லக்கை ஆஃப் பாயில் களும் என்பதால் எதிர்க்கின்றேன்.

4. மேலும் மேலும் புதியவர்கள் இணைய வலைப்பதிவு உலகில் வர வர வெகு சன ஊடகங்கள் திணித்திருக்கும் கட்டமைத்திருக்கும் பொதுப்புத்தி உடைக்கப்படும் ஆனால் அதற்கான சூழலை நாசம் செய்யும் இம்மாதிரியான செயல்களை எதிர்க்கின்றேன்.

5. நமக்கு தெரிந்து நம் வட்டத்தில் நம் முன்னே நடந்து கொண்டிருக்கும் ஒரு அராஜக ஆபாச அத்துமீறல்களை தைரியமும் திராணியுமல்லாமல் கேள்வி கேட்கவோ எதிர்க்காமல் அதிகாரத்துவத்துக்கு எதிரான கலகக்குரல், மனித உரிமை மீறல்களை எதிர்க்கும் குரல், அரஜாகத்துக்கு எதிரான குரல் என்றெல்லாம் நாமே சொல்லிக்கொள்வதும் அபத்தமாக தோன்றியது.

6. தலித் கம்னாட்டி(பல இடங்களில் இதையும் விட மோசமாக), என்றெல்லாம் எழுதுபவனும் பேசுபவனுமெல்லாம் சாதி ஒழிப்பாளன், சாதியத்தின் எதிரி என்பது போன்ற தோற்றத்தை விடாது கருப்பு மூர்த்தி சிலரிடம் உருவாக்கி வைத்திருந்தான், அவர்களுக்கெல்லாம் மூர்த்தி என்கிற பொறுக்கியின் உயர் சாதி செயல்பாடுகளை தோலுரிக்கவும் எதிர்த்தேன்... விடாது கருப்புவின் இந்த பதிவில் வெளியான சில பின்னூட்டங்கள்

வெங்காயம் said...
இத்தனைநாள் தீண்டாத் தகாதவனா பாப்பான் வெச்சிருந்தான்.
நீங்க இந்த அளவுக்கு இறங்கி வந்து இவன்களுக்காக போராடுகிறீர்களே அதுவே பெரிய விஷயம்.நீங்க போங்க சார். அவனுங்க பாப்பானிடம் அடிபட்டு மிதிபட்டு செருப்படி வாங்கினால்தான் திருந்துவானுங்க

அழகரசன் said...
இந்த தலித்து நாதாரிக்காக நீங்க இவ்ளோ தூரம் இறங்கி வந்திருக்க வேண்டாம். உங்க ஜாதி என்ன இந்த பரதேசியின் ஜாதி என்ன? நீங்க இவனுக்காக போராடினால் இவன் டோண்டுகூட தொடுப்பு வெச்சிருக்கான்.

சிவா said...
தியாகு என்ற பரபோக்கி நாதாரி

செந்தில் said...
சார்,
உயர்ந்த ஜாதியான நீங்க ஏன் இந்த பர நாய்களுக்காக கஷ்டப்படுறீங்க? அவனுங்க பாப்பானிடம் ....


தனக்கு தானே போட்டுக்கொண்ட பின்னூட்டமோ அல்லது இந்த மாதிரி பின்னூட்டங்களை அனுமதிப்பதன் மூலம் மூர்த்தியின் ஆதிக்க சாதி பொறுக்கித்தனம் வெளிப்படையாக தெரிந்தாலும் இதையும் மீறி அவனையெல்லாம் ஒரு சாதி எதிர்ப்பாளன் என்று நம்பிக்கொண்டிருக்கும் சில புண்ணாக்குகளுக்கு அம்பலப்படுத்த வேண்டியதேவை இருந்ததால் எதிர்க்கின்றேன். இந்த மாதிரியான பின்னூட்டங்களை அனுமதித்ததற்காகவே மூர்த்தியை "வன் கொடுமை தடுப்பு சட்ட்த்தின்" கீழ் காவல்துறையிடம் புகார் அளிக்கலாம்.

6. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், எந்த சித்தாந்த புண்ணாக்கும் தேவைப்படாமலேயே பொறுக்கி மூர்த்தியின் போலி செயல்பாடுகள் தவறானவை, அத்துமீறல்கள் என்று தெரிந்ததால் எதிர்க்கின்றேன்.

ஒன்றரையாண்டிற்கு முன்பே போலியை எதிர்த்து நான் போட்ட பதிவில் ஆரம்பித்த நாளிலிருந்தே ஆபாச பின்னூட்டங்கள், மின் மடல்கள் வர ஆரம்பித்தது, தொடக்கத்தில் கோபம் வந்த போதும் பிறகு அவைகளை சுலபமாக தாண்டி போக ஆரம்பித்துவிட்டேன், பலருக்கும் அவனைப்பற்றி எச்சரித்ததிலிருந்து அவனது போலி செயல்பாட்டுக்கு எதிராக என்னென்ன வேலைகள் செய்தேன் என போலியை எதிர்க்க என்னோடு தொடர்புகொண்ட பலருக்கும் தெரியும், இத்தனை காரணங்களுக்கும் பிறகே என் குடும்பத்தை ஆபாசமாக பேசினான் என்ற காரணமும்....

சுகுணாதிவாகர் மட்டுமே போலியை அவர் ஒரு ஆதிக்கச் சாதி வெறியராகவும் ஆணாதிக்கப் பாசிஸ்ட்டாகவும் எதிர்க்கிறாராம் மற்றவர்களெல்லாம் தனி மனித அரிப்புக்காகவும், தன் முனைப்புக்காகவும் தான் என்கிற வார்த்தைகளில் சுகுணாதிவாகர் தம்மை தாமே ஒரு புனித பீடத்தில் ஏற்றி வைத்துக்கொண்டு போலியை எதிர்க்கும் மற்றவர்களை பார்த்து ஏளனம் செய்யும் அந்த வரிகள் ஒரு கலகக்காரனுக்கான செயலாக தெரியவில்லை... நண்பர் ஒருவர் பகிர்ந்து கொண்டது போல நான் ஒஸ்தி நீ மட்டம் என்ற வார்த்தைகள் அங்கே மிதக்கின்றன.

பச்சையாக சொல்லவா சுகுணா? நீங்கள் ஒரு அடி உயரத்தில் மிதந்து கொண்டிருக்கின்றீர், அது மாதிரி மிதப்பவர்களுக்கு பதின்ம வயது நிலை, பணம், புகழ் போதை, என பல காரணங்கள் இருக்கலாம் ஆனால் நீங்கள் மிதந்து கொண்டிருப்பதற்கான காரணம் இவைகள் இல்லையென்றாலும் நண்பர் கூறியது போல உங்களை நீங்களே ஒரு புனித பீடத்தில் ஏற்றிவைத்திருப்பதுவே என கருதுகின்றேன், நக்சல்கள், போராளிகள் பின்னாலான உளவியல் காரணங்கள்(சமூக காரணங்களை சொல்லவில்லை) அவர்கள் தம்மை பற்றி இப்படியான ஒரு உயர்ந்த புனித எண்ணத்தில் இருப்பதுவும் என சில இடங்களில் படித்திருக்கின்றேன். சுகுணா திவாகர் ஒரு தோழனாக சொல்கிறேன் நீங்கள் சுய ஆய்வு செய்ய வேண்டும், உங்களை நீங்களே சுய ஆய்வுக்குட்படுத்தும் நேரம் இது...

16 பின்னூட்டங்கள்:

said...

சுகுணா ஏற்கனவே எழுதி வைத்த பதிவு இது, இதை போடலாம் என்ற நிலையில் அப்போதைய சூழல் சரியாக இல்லை என்பதால் போடவில்லை... இப்போது நீ சகஜமடைந்திருப்பாய் என்பதால் போடுகின்றேன்...

said...

பொறி பறக்குது...!!! பிறகு என்னோட கருத்துகளோடு வருகிறேன்...

இந்த பதிவை படித்து சுய ஆய்வை செய்யும் அளவுக்கு விவரம் அறித்தவர்தான் சுகுணா என்பது அறிந்ததே !!!

said...

என் குடும்பத்தையெல்லாம் கேவலமாக எழுதியபோதும் மின் மடல் அனுப்பிய போதும் தொடக்க காலங்களில் எனக்கு கோபம் வந்தது உண்மை, ஆனால் தொடர்ந்து அவன் மின் மடல்கள் வந்த போது மிக சாதாரணமாக அதை முழுவதும் படிக்கும் மனநிலைக்கு வந்துவிட்டேன்,
>>உண்மை. முதன்முறை கோபம் வந்தாலும், அடுத்த முறை போலியின் மின்னஞ்சலை 'ஸ்பாம்'-இல் போட்டதும் விட்டது தொல்லை. நான் பாட்டுக்கு மற்ற வேலைகளைப் பார்க்கப் போய்விட்டேன். கத்தியிருந்தால் இன்னும் அவனுக்கு ஏறியிருக்கும்.

பெரியார் தொண்டர்களாகவும் பெரியார் சித்தாந்த வெளிப்பாட்டு பதிவர்களாகவும் கருதப்படுகின்ற நச்சு சூழல்
>>இல்லை என்று என் தாழ்மையானக் கருத்து. இவர்களின் கழிவுகளை ஒதுக்கி சென்றுவிட்டனர் என்பது என் கணிப்பு.

said...

குழலி,

சுகுணா திவாகர் பதிவுகளை விரும்பி படிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். சுகுணா திவாகர் எழுத்துக்களில் தான் ஒரு அறிவுஞீவி
என்ற மிதப்பு வெளியில் மிதந்து கொண்டிருப்பது மிகவும் தெளிவானவை. அந்த அறிவுஞீவி மிதப்பில் அவர் வெளியிட்ட கருத்துக்கள் தான் "தோழர் போலி" :-) குறித்த அவரது சிந்தனைகள்.

அத்தகைய ஒரு அறிவுஞீவி பிம்பத்தை அவரே "வலைப்பதிவை விட்டு விலகுகிறேன்" என்று கூறி உடைத்தும் கொண்டார். அதற்கு அவர் கூறிய காரணம் நகைப்பிற்குரியது. என்றாலும் அவரது நோக்கம் சாதிக்கு அப்பாற்பட்டவராக தன்னைச் சுற்றி எழுப்பிக் கொண்ட ஒரு பிம்பத்திற்கு ஏற்பட்ட இழுக்காக நினைத்து அதை காப்பாற்றிக் கொள்ள முனைகிறார். அவர் யாரிடம் இத்தகைய அங்கீகாரத்தை எதிர்நோக்குகிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.

அவ்வாறு சாதி ரீதியில் தாக்கப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியாத சுகுணா கடந்த காலங்களில் அவர் இடுகைகளில் அதே சேற்றை பிறர் மீது வாரி இறைத்து இருக்கிறார். அவரது ஈழம் தொடர்பான ஒரு இடுகையில் காரணமேயில்லாமல் நெடுமாறனையும், அருணாச்சலம்
அவர்களையும் சாதி வெறியர்களாக சித்தரித்து இருப்பார். அதற்கு அவர் முன்வைத்த ஆதாரம் எதுவும் இல்லை என்பது தான் வேடிக்கையானது.

http://sugunadiwakar.blogspot.com/2007/03/2.html

நெடுமாறன் வெள்ளாளர் என்பதால் மட்டுமே பிரபாகரனை ஆதரித்ததாகவும், அருணாச்சலம் கள்ளர் சாதி வெறியர் என்றும் கூறுவதன் மூலம் அவர்களது தமிழ் தேசியத்தை சாதி என்ற அடையாளம் கூறி மறைப்பது தான் சுகுணாவின் நோக்கம். தமிழ் தேசியம் என்பதன்
மீது எனக்கு பல விமர்சனங்கள் இருந்தாலும் சாதி சேற்றை வாரி அந்த தமிழ் தேசிய அடையாளத்தை சிதைப்பது ஒன்றும் புதியது அல்ல. அது ஒரு வகையில் பார்ப்பன உத்தியும் கூட. சாதி ரீயிலான பிளவுகள் இருப்பதால் தான் தமிழ் தேசியம் என்ற ஒன்றை அடைய முடியாமல் போவதும் நிகழ்கிறது. தேசிய மறுப்பாளர்கள் கூட தேசியத்தை மறுக்க இவ்வாறான பார்ப்பன உத்தியை பின்பற்றுவது தான்
வேடிக்கையானது.

இணையத்தில் வலைப்பதிவு செய்யவே சொந்த காசு செலவுசெய்யாமல் அலுவலக ஓசி காசில் வலைப்பதிவு செய்யும் சுகுணா (அவர் தனது ஒரு இடுகையில் இதைக் கூறியதால் இங்கே குறிப்பிடுகிறேன்), அருணாச்சலம் தனது மொத்த பொருளாதாரத்தையும் இந்த தமிழ் தேசிய எழவிற்காக இழந்ததது தெரியுமா ?

தன்னுடைய ஒரு கருத்தை நிலைநிறுத்த மற்றவர் மீது சாதி முத்திரையை குத்தி விட்டு, தன்னை அது போல கூறியவுடன் அலறியடிப்பது தான் அறிவுஞீவித்தனமோ ?

சுகுணா திவாகர் தொடர்ந்து எழுத வேண்டும். தனது போலி அறிவுஞீவி மிதப்பை கலைந்து விட்டு எழுத வேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள்.

- இது குறித்த தொடர் விவாதங்களில் பங்கேற்க நேரம் இல்லாத காரணத்தால் எனது பெயரை குறிப்பிட விரும்பவில்லை.

said...

Piss off kuzhali..

why the fuck you try to plug in suguna here. Everyone has their own view on everything.

Your stupidity was exposed in one of those ravi's posts.

Pls. grow up instead of asking others.

What the fuck u really want from others?

Cheers

said...

//why the fuck you try to plug in suguna here//
நெஜமா தெரியலையா? அப்போ இந்த பதிவே வேஸ்ட்..... எனக்கு சரியாக express செய்ய தெரியவில்லை என்று நினைக்கின்றேன்...

//Everyone has their own view on everything.
//
ஆமாம் அவரவர்களுக்குள் வைத்திருக்கும் வரை எந்த விமர்சனங்களும் இல்லை, பொதுவில் வைத்தால் விமர்சனங்கள் வரும்... சுகுணா பொதுவில் வைத்ததாலேயே விமர்சனம்.... thats it....

said...

குழலி அய்யா,

சபாஷ் குழலி அய்யா;நீங்க கேவலமா கொள்கை விளக்கம் தருவதில் மரம் வெட்டி கும்பல் ரேஞ்சையெல்லாம் தாண்டி மஞ்ச காலர் போட்ட கும்பல் அளவுக்கு தேறிட்டீங்க.வாழ்த்துக்கள்.

பாலா

said...

அன்பான திராவிட தோழர்களே

நீங்கள் உங்களுக்குள் அடித்துக் கொள்வதால் பார்ப்பான் குளிர் காய்கிறான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். வலைப்பதிவை விட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடிய முகமிலிகள் வெட்கமில்லாமல் மறுபடியும் வந்துள்ளதை கவனியுங்கள்

said...

ஓர‌ளவு தெளிவாக எழுதப்பட்ட பதிவு.

இந்த‌ சாதி ச‌ண்ட‌ எப்போ ஒழிஞ்சி ஆக்க‌பூர்வ‌மான‌ ப‌திவுக‌ள பாக்க‌ற‌து? படிச்சவங்களே இப்படி இருக்கும் போது, ந‌ம்ம‌ ஊரு அர‌சிய‌ல்வாதிக‌ள‌ வாய்க்கு வ‌ந்த‌மாதிரி திட்ற‌து சிரிப்பா இருக்கு. சாதிய‌ல்லாம் அந்த‌ந்த‌ எட‌த்துல‌ இருக்குட்டும், யார‌ திட்டியும் யாருக்கும் ப‌ல‌ன் இல்ல‌. திருந்துங்க‌ ம‌க்க‌ளே.

ந‌ல் வ‌ழியில் செல்க‌. த‌மிழுக்கும் த‌மிழ‌னுக்கும் பெருமை சேர்க்க‌.

Peace out.

MBLA

said...

//லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், எந்த சித்தாந்த புண்ணாக்கும் தேவைப்படாமலேயே பொறுக்கி மூர்த்தியின் போலி செயல்பாடுகள் தவறானவை, அத்துமீறல்கள் என்று தெரிந்ததால் எதிர்க்கின்றேன்.
//

அன்புள்ள குழலி மூர்த்தி ஒழிக்கப்படவேண்டியவன் தான் அவனைபோல ஒரு சைக்கோ நடமாட கூடாது அதே நேரத்தில் டோண்டு என்கிற சைக்கோவுக்கும் சைடு வாங்கிட வேண்டாம்

said...

//சுகுணா திவாகர் ஒரு தோழனாக சொல்கிறேன் நீங்கள் சுய ஆய்வு செய்ய வேண்டும், உங்களை நீங்களே சுய ஆய்வுக்குட்படுத்தும் நேரம் இது...//

வழிமொழிகிறேன் :)

said...

உங்கள் கருத்துக்களுடன் முழுதும் ஒத்துப் போகிறேன குழலி்.

இதுக்கு மேலயும் ஏதாவது சொல்லலாம்தான். அப்புறம் பொட்டீகடை வந்து "Everyone has their own view on everything.What the fuck u really want? "ன்னு கேப்பாரு.

ஆனால் ஒன்றை மட்டும் கண்டிப்பாய் சொல்லியே ஆக வேண்டு. தான் மட்டும்தான் சித்தாந்த ரீதியாக எதிர்க்கிறேன். மற்றவர்கள் எல்லாம் தன் சொந்த அரிப்புக்காகத்தான் எதிர்க்கிறார்கள் என்று சொல்ல சுகுணாவுக்கு எவ்வளவு உரிமையுள்ளதோ, அதே உரிமை அந்த கருத்தை மறுத்துப் பேச எனக்கும் உரிமையுள்ளது. எனவே, குழலியின் கருத்துக்களுடன் ஒத்துப் போகிறேன்.

பி.கு: எனக்கு அப்படி அந்த உரிமை இல்லை என்று சொல்லும் எவருக்கும், போலிக்கும் அதிக வித்தியாசமில்லை.

said...

Pot 'tea' stop being an idiot mate

//Everyone has their own view on everything. //

If you really believe this then Kuzhali has a right for his own view about Suguna too. Suguna does not have horn on head

piss off you nut

said...

thank you

said...

நண்பர் குழலி,

பிரச்சினைகள் கொஞ்சம் ஆறட்டும் என்றுதான் இடைவெளி விட்டிருந்தேன். நான் போலி பிரச்சினை பற்றி கருத்துகூறியபோது உங்களுக்கு விமர்சனங்கள் இருந்திருந்தால் அப்போதே வந்து எனது பதிவில் உங்கள் கருத்துக்களைப் பதிந்திருக்கலாமே. எப்போதும் மூடப்படுவதில்லையே என் கதவுகள்? அல்லது அப்போதே நீங்கள் இந்தப் பதிவைப் போட்டிருக்கலாம். அதையெல்லாம் மீறி ஒரு நெருக்கமான நண்பனாக நினைத்திருந்தால் ஒரு போன் செய்து, 'என்ன இப்படிச் செய்துவிட்டீர்கள்' என்றாவது கேட்டிருக்கலாம். ஆனால் எனக்கு ஒரு பிரச்சினை வரும்போது 'மாட்டினியாடா மவனே?' என்று நீங்கள் கேட்பது மட்டும்தான் உறுத்தலாகவிருக்கிறது. மற்றபடி உங்கள் கருத்தைப் பரீசீலிப்பதில் எனக்கு எந்த தயக்கமுமில்லை. நான் எப்போதும் உரையாடலுக்குத் (இப்போது இந்த வார்த்தைக்குக் காபிரைட் பிரச்சினையில்லை என்றே கருதுகிறேன்) தயாராயிருப்பவன் என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள் என்றே நம்புகிறேன். மற்றபடி அருணாசலம் குறித்தும் நெடுமாறன் குறித்தும் எனது கருத்துக்களில் மாற்ரமில்லை. அந்த முகம் தெரியாத நண்பருக்கு சரியாக விளக்காமல் விட்டிருந்திருப்பேன் போலும். நேரம் கிடைக்கும்போது விரிவாக எழுதுகிறேன்.

said...

// நான் போலி பிரச்சினை பற்றி கருத்துகூறியபோது உங்களுக்கு விமர்சனங்கள் இருந்திருந்தால் அப்போதே வந்து எனது பதிவில் உங்கள் கருத்துக்களைப் பதிந்திருக்கலாமே.
//
அந்த நேரத்தில் ஒரே குறி மூர்த்தி மட்டுமே, கிட்டத்தட்ட ஓய்வு நேரமேஏ இல்லாமல் அலுவலக சொந்த வேலை இருந்த போது எனக்கு மிகக்குறைந்த நேரம் மட்டுமே கிடைத்தது அதுவும் என் தூக்கத்தை குறைத்துக்கொண்ட நேரம் அது, அந்நேரத்தில் ஆங்காங்கே போய் விளக்க விவாதங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தால் மூர்த்தியை அம்பலப்படுத்த வேண்டுமென்று முயன்ற நேரத்தில் மற்ற விவாதகள் சக்தியை வீணாகிவிடுமென்ற ஒரே காரணம் மட்டுமே...

//அதையெல்லாம் மீறி ஒரு நெருக்கமான நண்பனாக நினைத்திருந்தால் ஒரு போன் செய்து, 'என்ன இப்படிச் செய்துவிட்டீர்கள்' என்றாவது கேட்டிருக்கலாம்.
//
ஒரு டெக்னிக்கல் பிரச்சினைக்கு சட்டென்று போன் அடித்து உங்களிடம் கேட்க முடிந்த என்னால் இந்த பிரச்சினைக்கு கேட்க முடியவில்லை, காரணம் அதற்கு முன் சிலரிடம் போன் அடித்து பேசி ஏற்பட்ட விளைவுகள் தான்... இப்போது நினைக்கிறேன் போன் செய்திருக்கலாமென....

//ஆனால் எனக்கு ஒரு பிரச்சினை வரும்போது 'மாட்டினியாடா மவனே?' என்று நீங்கள் கேட்பது மட்டும்தான் உறுத்தலாகவிருக்கிறது.
//
என்ன இப்படி சொல்லிட்டிங்க முதல் பின்னூட்டத்தை பார்க்கலையா? இது ஏற்கனவே எழுதிவைத்த பதிவு படு பயங்கர நேரப்பற்றா குறையினால் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக எழுதினேன், போலி மூர்த்தி வாரத்திற்கு அடுத்தவாரம் பதிவிடலாமென பார்த்தபோது வளர்மதியோடு பிரச்சினையாகிவிட்டதா? சரி அதான் கொஞ்சம் பொறுக்கலாமென பொறுத்து போட்டேன்.... ரொம்ப காலமெல்லாம் தள்ளிவிடவில்லை ஒரு 2 வாரம் மட்டுமே, உங்களுக்கு பிரச்சினை ஏற்படாமல் இருந்திருந்தால் இது போன வாரமே ரிலீஸ் ஆகியிருக்கும்....