தமிழ் ஆயுதத்தை கொண்டு மக்களை இழிவு படுத்தும் தமிழ்கடல் கண்ணன் & குழு


மிகை உணர்ச்சிகளை நீக்கிவிட்டு வரலாற்றுக் கண் கொண்டு பார்த்தால், இரண்டு விஷயங்களை விளங்கிக் கொள்ள முடியும்:

1.தமிழ் அறிவு என்பது ஒரு சமநிலைச் சமூகத்திற்கான (egalitarian society) விழைவை நோக்கி இட்டுச் செல்லும் ஒன்று
2.தமிழ் உணர்வு என்பது அதிகாரத்திற்கெதிரான, குறிப்பாக -வலியார் சிலர் எளியோர் தமை வதை செய்குவதை- போர்க் குணத்தை அளிப்பது. (anti -establishment)

தமிழ் உணர்வு தமிழ் அறிவு இவற்றிடையே திட்டவட்டமான வேலிகள் கிடையாது. ஒன்றிலிருந்து கிளைப்பது மற்றொன்று. ஒன்று மற்றொன்றுக்கு இட்டுச் செல்வது.


மேலே குறிப்பிடப்பட்டவைகள் மாலன் அவர்களின் பதிவிலிருந்து....

தமிழ் உணர்வும் தமிழறிவும் தமிழும் அதிகாரத்திற்கெதிரான, மக்களை சிறுமை படுத்துவதற்கெதிரான, ஒரு ஆயுதமாகவே வரலாற்றில் இருந்திருக்கின்றது... இன்றும் இருந்து கொண்டிருக்கின்றது, தமிழே பார்ப்பனியத்திற்கு எதிரான கலக குரலாக அடையாளப்படுத்தப்படுகிறது, தமிழே சமத்துவத்தை எதிர்ப்பவர்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது...

ஆனால் தமிழ்கடல் கண்ணன் என்ற மனப்பாடப்புகழ் கண்ணன் அவர்கள் நடுவராக இருந்து நடத்தும் "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு" என்ற விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் என்ற சமத்துவத்தை எதிர்ப்பவர்களுக்கு எதிரான ஆயுதம் மக்களை இழிவுபடுத்துவர்களுக்கு எதிரான இந்த தமிழ் ஆயுதம் மக்களை இழிவு படுத்தவும் சமத்துவத்துக்கு எதிராகவும் பயன் படுத்தப்படுகின்றது.

தன்னம்பிக்கையின் பெயர் தமிழ் என்று விளம்பரப்படுத்தப்பட்ட தமிழ்பேச்சு எங்கள் மூச்சில் "சுயமரியாதை" என்பது பெயரளவில் கூட இல்லை என்பது சில போட்டியாளர்களை நடுவர்(?) மனப்பாடபுகழ் கண்ணன் அவமானப்படுத்தியதிலே தெரிகின்றது, போட்டியாளர் பிரசன்னாவை அவமானப்படுத்தியதில் ஆரம்பித்து ஒரு கல்லூரி விரிவுரையாளர்(பெயர் நினைவில் இல்லை) அவமானப்படுத்தப்பட்டது வரை நிறைய ஒளிபரப்பானது, ஒளிபரப்பாகாதது எத்தனையோ?

எப்போதெல்லாம் எங்கெல்லாம் இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் இடஒதுக்கீட்டை இழித்தும் பழித்தும் பேசுவதும் தேவையென்றால் ஆவேசமாகவும் சில நேரங்களில் அழுது பரிதாபத்தை ஏற்படுத்தும் வகையிலுமான உத்தி பார்ப்பனர்களாலும் உயர்த்தப்பட்ட சாதியினராலும் அரங்கேற்றப்படுகின்றது, இதே விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா வில்
ஒரு பார்ப்பனர் தாம் மருத்துவராக ஆசைப்பட்டதாகவும் "Being a Brahamin" அப்படியென்று கூறி அழுதார், உடனே நிகழ்ச்சி நெறியாளர் கோபியும் உங்கள் வேதனை புரிகிறது என்றார்... என்னே நாடகம் என்னே நாடகம்!!! (மருத்துவர் ஆகவில்லையென்றாலும் ஐந்து மொழியில் பேசுவதாகவும் நல்ல நிலையில் இருப்பதாகவும் பெருமையடித்துக்கொண்டார்), "Being a Backward, most backward, scedule caste" எத்தனை எத்தனை அநியாயங்கள் நிகழ்த்தப்படுகின்றது, எத்தனை வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றது, இடஒதுக்கீடின்றி வாய்ப்பு மறுக்கப்பட்டால் அந்த பார்ப்பனர் அடைந்த நிலையை இவர்களால் அடைய முடியுமா? அம்மாதிரியான வாய்ப்புகள் எத்தனை பேருக்கு அமைகிறது? அந்த உணர்வுகளெல்லாம் கோபியால் புரிந்து கொள்ளப்பட்டதா?(இடஒதுக்கீடு பற்றி பல நேரங்களில் பேசியாகிவிட்டது, தொடர்ந்தும் பேசப்பட்டு வருகின்றது இந்த பதிவில் அதை பேசாமல் பதிவு தொடும் விசயத்தை தொடரலாம்)

இம்மாதிரியான ஒரு தளமமைப்பு தமிழ் பேச்சு எங்கள் மூச்சில் நடந்து கொண்டுள்ளது, தொடக்க சுற்றில் ஒரு பெண்மணி சாதிஒழிப்பு பற்றி பேசிக்கொண்டிருந்தார், அப்போது மனப்பாட புகழ் கண்ணன் குறுக்கிட்டு சாதியெல்லாம் ஒழியாதும்மா என்று கூறிவிட்டு அதற்கு காரணமாக சாதி சர்ட்டிபிகேட்டையும் இடஒதுக்கீட்டையும் கூறினார்,

BCக்கும் MBCக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? வெறும் 500ரூபாய் தான், 500ரூபாய் கூட கொடுத்தால் MBC சர்ட்டிபிகேட், குறைத்து கொடுத்தால் BC சர்ட்டிபிகேட் என்றார், சொல்லிவிட்டு நான் FC என்றார்,

போட்டியாளர்கள் ஆங்கில சொற்களை கலக்கும் போது கண்ணன் அவர்கள் தமிழ் பேச்சு எங்கள் மூச்சு தமிழிலே பேசுங்கள் என்பார், ஆனால் அவர் மட்டும் தான் FC என்று ஆங்கிலத்தில் சொன்னார், இது எப்படித்தெரியுமா? தமிழில் குண்டி என்று சொல்லாமல் "Butt" என்று சொன்னால் அந்த தாக்கம் குறைவாக இருக்குமே, அது போல நான் "உயர்சாதி" என்றும் BC, MBC, SC யை பிற்படுத்தப்பட்ட சாதி, தாழ்த்தப்பட சாதி என்று சொல்லியிருந்தால் பளிச்சென்று பார்வையாளர்கள் மண்டையில் உட்கார்ந்துவிடும் அவரின் நோக்கமும் புரிந்துவிடும், அதனாலேயே தமிழ்கடல் கண்ணன் உயர்சாதி என்று தமிழை பயன்படுத்தாமல் FC என்று ஆங்கிலத்தை பயன்படுத்தினார்.


நான் "FC" என்று சொல்கிறாரே கலர் காம்பினேசன் ஒத்துவரலையே என்றால் பிறகு தான் தெரிய வந்தது தமிழ்கடல் கண்ணன் "சைவப்பிள்ளை"யாம் தமிழ் சமூகத்தில் பார்ப்பனர் இடத்தில் இருக்கும் உயர் சாதி, அப்படி போடு அறுவாளை அதான் தமிழையே சமத்துவத்திற்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தியிருக்கிறார்.


தமிழ்கடல் மனப்பாட புகழ் கண்ணன் சொன்னது போல BC க்கும் MBCக்கும் மான 500ரூபாய் வித்தியாசம் உலகின் புராதான தொழிலில் வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் நிதர்சனத்தில் அதையும் தாண்டியது. அந்த வித்தியாசத்தை பக்கத்தில் அமர்ந்திருந்த MBC அறிவுமதி அண்ணனிடம் கேட்டிருந்தாலே சொல்லியிருப்பார்,ஆனால் இதையெல்லாம் அறிவுமதி அண்ணன் கேட்டுக்கொண்டு சும்மாவே உட்கார்ந்திருந்தது மிகவும் வருத்தத்திற்குறியது,

தாழ்த்தப்பட்டவர்களிலிருந்து தீண்டாமை என்பதைத் தவிர சமூக, பொருளாதார, கல்வி, விழிப்புணர்வில் பெரிய வேறுபாடில்லாத சமூகங்கள் தான் MBC, சொன்னது நானில்லை தலித் எழுத்தாளர் ஆதவன் தீட்சன்யா, தமிழ்கடல் கண்ணன் தயாரென்றால் MBC களின் வாழ்க்கை தரத்தையும் இன்ன பலவற்றின் வித்தியாசங்களை நேரடியாக காண்பிக்க தயாராக இருக்கிறோம்.

விஜயன் என்றொரு போட்டியாளர், வைகோவை பிரதியெடுத்து பேசுபவது போல பேசுபவர் ஒரு முறை பேசுகிறார் "உயர் குடியில் பிறந்தார்கள் என்பதற்காக அவர்களுக்கு கல்வி மறுக்கப்படுவது அநியாயம்" என்றார், அடி செருப்பால இடஒதுக்கீட்டுக்கு தகுதியில்லாத பார்ப்பனர்களோ உயர்த்தப்பட்ட சாதிகளோ உயர்குடிகள் என்றால் மற்றோரெல்லாம் தாழ்ந்த குடியா?


இப்படியான மக்களுக்கெதிரான சமத்துவத்துக்கெதிரான பார்ப்பன சிந்தனைகளோடு பேசும் விஜயனைத்தான் கட்டித்தழுவி புகழ்ந்திருக்கிறார் மனப்பாட புகழ் கண்ணன்(என்ன எழவு விஜயன் பேசினாரென்று இந்த வாரம் தான் தெரியும்- இங்கே விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒரு வாரதாமதத்தில் ஒளிபரப்பப்படும்)

சென்ற வார நிகழ்ச்சியில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக ஒருவரை நிற்கவைத்து சக போட்டியாளர் "அவாள்" பெண் ஒருவர்,சைவப்புள்ளை மனப்பாடப்புகழ் கண்ணன் மற்றும் பட்டிமன்ற ராஜா (இந்த ராஜா சமயம் கிடைக்கும் போதெல்லாம் இடஒதுக்கீட்டிற்கு எதிராக தகுதி தகுதி என்று உளறுவார், ஏற்கனவே சில பட்டிமன்றங்களில் நகைச்சுவையாக பேசுகிறேன் என்று இடஒதுக்கீட்டை கேவலப்படுத்தும் போது கைதட்டி ஆரவாரித்த சொரனை கெட்ட பிறவிகளாகவே இருந்தனர் அங்கிருந்த பார்வையாளர்கள் அதில் பெரும்பாலும் ராஜா கேவலப்படுத்தும் இடஒதுக்கீட்டின் உரிமையாளர்கள்).

கோபமெல்லாம் வேகமாக என்றொரு கவிதை தமிழ்கடல் கண்ணன் அவர்கள் வலைப்பதிவில்

செஞ் சீனம் ஜப்பான் கொரியா ரஷியா

ஜெர்மனி மேலும் சில நாடுகளே

தஞ்சம் என்று கறுப்பினத்தை நாடி இன்று

தங்கங்கள் குவிக்கவில்லை போட்டியிலே

வஞ்சகர்கள் தம் நாட்டில் அவர்களையே

வதை செய்து வாழ்வொழித்த நாட்டிற்கெல்லாம்

கொஞ்சமல்ல தங்கங்கள் குவிப்ப தெல்லாம்

குன்றாத மனம் கொண்ட கறுப்பினமே

பசித் துன்பம் ஒழியாத கறுப்பர் நாட்டார்

பாய்ந்து ஒடி தங்கங்கள் பெறுகையிலே

வசிப்பதற்கு வழியின்றி வறுமைத் துன்பம்

வாட்டையிலும் வெல்லுகின்ற அவரைப் பார்த்தால்

கசியவில்லை கண்ணிரண்டும் கண்ணீரையே

கார் மழையாய்ப் பொழிகின்றது அவ்வினத்தின்

பசியதனைத் தீர்க்காத இறைவன் மீது

பாய்கிறது கோபமெல்லாம் வேகமாக

ஒடுக்கப்பட்ட கறுப்பர்களுக்காக இறைவன் மீது கோபம் கொண்டு இப்படி உருகி உருகி கவிதை வடித்திருக்கும் தமிழ்கடல் கண்ணன் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இதுநாள் வரை(இன்னமும் கூட) பார்ப்பனர்களுக்கும், சைவப்புள்ளைகளுக்கும் இன்னும் உயர்த்தப்பட்ட சாதிகளுக்கும் உழைத்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இருக்கும் இடஒதுக்கீட்டை தாக்குவதில் இடஒதுக்கீட்டை கேவலப்படுத்துவதில் தெரிகிறது இவரின் போலித்தனம். கறுப்பர்களுக்காக கண்ணீர் வடிக்கிறாராம்? யாரை ஏமாற்றுகிறார் தமிழ்கடல் கண்ணன்? அவருக்காவது அவர் உண்மையாக இருக்கட்டும்.


மொத்தத்தில் தமிழ் எதன் அடையாளமாக பயன் படுத்தப்படுகிறதோ எதற்கான ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறதோ அதற்கு எதிராகவே தமிழ்பேச்சு எங்கள் மூச்சில் தமிழ் பயண்படுத்தப்படுகின்றது. ஆனால் இந்த நுண்ணரசியல் தெரியாமலிருக்க அறிவுமதி, சுப.வீ போன்ற தமிழ் ஆர்வலர்களும் இந்த களத்தில் பயன் படுத்தப்பட்டிருக்கின்றனர் என்பதே வேதனை.

தமிழைக்கொண்டு மக்களை இழிவு படுத்தப்படுமெனில் அந்த தமிழையே தூக்கி எறியவும் தயங்கமாட்டோம்....
தமிழுக்கெதிராக பெரியார் உதிர்த்த கருத்துகள் எந்த சூழலில் உதிர்த்திருப்பார் என்பதை மிக அனுபவப்பூர்வமாக இப்போது உணர்கிறோம்.

தமிழ்கடலாகவே இருந்தாலும் குடிக்க பயனில்லா உப்பாக இருக்குமெனில் அந்த தேவையில்லாத ஒன்று தான், அது போல தமிழ்கடல் கண்ணன் மக்களுக்கு எதிரான, சமத்துவத்துக்கு எதிரான, சாதியத்துக்கு ஆதரவான செயல்களில் இருப்பதால் அவர் தமிழை கடல் போல கற்றிருந்தாலும் அவரின் தமிழறிவு குப்பைக்கு சமம்...

தமிழ்பேச்சு எங்கள் மூச்சு - ஒடுக்கப்பட்டவர்களின் ஆயுதத்தை கொண்டு ஒடுக்கப்பட்டவர்களையே இழிவுபடுத்தும் ஒரு களம்

36 பின்னூட்டங்கள்:

said...

//தமிழ்கடலாகவே இருந்தாலும் குடிக்க பயனில்லா உப்பாக இருக்குமெனில் அந்த தேவையில்லாத ஒன்று தான், //

சூப்பர்,

எப்போதாவது எழுதினாலும் கலக்குறிங்க !

said...

இந்த இடுகையை நெடுநாட்களாக எதிர்ப்பார்த்திருந்தேன்.

கலக்கல்..

மனப்பாடப்புகழ் என்ற வார்த்தைப் பிரயோகத்தை தவிர்த்திருக்கலாம். ஆனாலும் உங்கள் கோபம் நியாயமானதே..

//தமிழைக்கொண்டு மக்களை இழிவு படுத்தப்படுமெனில் அந்த தமிழையே தூக்கி எறியவும் தயங்கமாட்டோம்.... //
ஆச்சரியமாகவும் பிரமிப்பாகவும் இருக்கின்றது

said...

//இந்த இடுகையை நெடுநாட்களாக எதிர்ப்பார்த்திருந்தேன்.
//
எதிர்பார்த்திருந்தீரா? நீங்களும் இதை தமிழ்பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் கவனித்திருந்தீரா?

said...

////தமிழைக்கொண்டு மக்களை இழிவு படுத்தப்படுமெனில் அந்த தமிழையே தூக்கி எறியவும் தயங்கமாட்டோம்.... //
ஆச்சரியமாகவும் பிரமிப்பாகவும் இருக்கின்றது
//

நிச்சயமாக .... தமிழ் என்ற மொழியாயுதம் தாழ்வுமனப்பான்மையையும் இழிவையும் நீக்கவும் அதிகாரத்துவத்துக்கும் எதிரான குறியீடு ஆனால் அதே தமிழை வைத்து மக்களை இழிவு படுத்தினால் அந்த தமிழே தேவையில்லை...

said...

மாறுபட்ட பார்வை!

மனப்பாடப்புகழ் தமிழ் கடலை, விஜய் TV புகழ் லாவண்யா அய்யங்கார் இருக்கும் லிஸ்ட்டில் சேர்த்துட்டீங்க போல தெரியுது!

- வேல் -

said...

good one after looooooooooong time...

said...

//BCக்கும் MBCக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? வெறும் 500ரூபாய் தான், 500ரூபாய் கூட கொடுத்தால் MBC சர்ட்டிபிகேட், குறைத்து கொடுத்தால் BC சர்ட்டிபிகேட் என்றார், சொல்லிவிட்டு நான் FC என்றார்,//

http://www.payanangal.in/2008/07/blog-post_4684.html

said...

இந்த நிகழ்ச்சியை இதுவரை பார்த்ததில்லை என்ற போது, தவறான ஒரு கருத்தை அல்பமா விளம்பர படுத்தூவது கேவலம், விஜய் டி.விக்கு எழுதிடுவோம், தமிழ் பேச்சு என்ற போர்வையில் இது போன்ற கருத்து தினிப்பு, அந்த நிகழ்ச்சியின் நோக்கத்தை அழிப்பதாகவே தோன்றுகிறது!

தமிழ்கடல் கண்ணன் என் கண்டனங்கள்..

//ஒரு பார்ப்பனர் தாம் மருத்துவராக ஆசைப்பட்டதாகவும் "Being a Brahamin" அப்படியென்று கூறி அழுதார்//

கண்ணீர், சண்டை போன்ற விசயங்கள் ஏற்கனவே மைலேஜ் விசயங்கள் என்று விஜய் டி.வியும் கண்டுகொள்ளாமல் விடுகிறது என்று நினைக்கிறேன்.

said...

வாருங்கள் புருஷோத்தமரே.

கவலைப்படாதீர்கள். உங்கள் சந்ததிகளுக்கு கட்டாயம் 'குறுக்குப் பாதை' உண்டு. எதற்காக வெட்டியாக உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டு, கண்ணில் வெளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு எல்லாரையும் திட்ட வேண்டும்.

தமிழ் சுவைபட சொல்லும் ஒருவரையும் 'மனப்பாடப் புகழ்' என்று ஏசி அதில் ஒரு இன்பச் சுகம்... என்றைக்கு அய்யா திருந்தப் போறீர்....:((

said...

குழலி,
உருப்படியான ஒரு நிகழ்ச்சி என்றாலும் சில உறுத்தல்கள் இருந்தது உண்மை .

முதலாவது போட்டியாளர்கள் பேசி முடிக்கும் வரை பொறுக்காமல் இடைமறித்து வாதம் செய்வது எரிச்சலை ஏற்படுத்தியது .

இந்த காலகட்டத்தில் இளையோர்கள் இவ்வளவு ஆர்வமாக கலந்து கொள்வது ஊக்குவிக்க தகுந்தது .ஆனால் சில நேரம் அவர்களை மட்டம் தட்டுவதை போல நடுவர் நடந்து கொண்டது வருத்தமாக இருந்தது.

பாரதியைப பற்றி குறை சொல்லுவதை இம்மன்றம் அனுமதிக்க முடியாது .. ராணுவ வீரனை குறைசொல்லுவதை அனுமதிக்க முடியாது என்றெல்லாம் பாய்ந்து வந்த்து உணர்ச்சி வசப்படும் நெல்லைக் கண்ணன் அவர்கள் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை சிறுமைப்படுத்துவதை மட்டும் அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது .

முதலில் இந்த நிகழ்ச்சி பேச்சுத்திறனை எடை போடுவதாக இரூக்க வேண்டும் .முந்தைய சுற்றுகளில் இவர்களாகவே ஒரு தலைப்பைக் கொடுத்து பேச சொல்லிவிட்டு ,ஏதோ பேச்சாளர் அவர் கருத்தை சொல்லுவதைப்போல சண்டைக்கு போவது வேடிக்கை.

said...

தொலை காட்சி நிகழ்சிகளில் கண்ணீர் விடுபவன் சிறந்த நடிகன். விஜய் தொலைகாட்சி ரியாலிட்டி ஷோ எனப்படும் இது போன்ற நிகழ்சிகளில் கண்ணீர் விடுவதையும், சுவாரசியத்தை அதிகப்படுத்துவதற்காக நடுவர், போட்டியாளர்களுக்கிடையே சண்டையை மூட்டுவதையும் தொடர்ந்து செய்து வருகின்றார்கள். அது உண்மையிலேயே அவர்களது நிகழ்சிகளின் மீது வெறுப்பைத்தான் ஏற்படுத்துகிறது. எல்லா நிகழ்சிகளையும் காப்பியடிக்கும் மற்ற தொலைகாட்சிகள் இந்த போலி சண்டைகளையும் காப்பியடிப்து இன்னும் கேவலம்.

தொலைகாட்சியில் நிஜ நிகழ்சிகள் எனும் நிகழ்சிகளில் கூட கண்ணீரை கொண்டுவந்து, அதன் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கிய பெருமை விஜய் தொலை காட்சிக்குத்தான் உண்டு.

said...

//Anonymous said...
வாருங்கள் புருஷோத்தமரே.

கவலைப்படாதீர்கள். உங்கள் சந்ததிகளுக்கு கட்டாயம் 'குறுக்குப் பாதை' உண்டு. எதற்காக வெட்டியாக உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டு, கண்ணில் வெளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு எல்லாரையும் திட்ட வேண்டும்.

தமிழ் சுவைபட சொல்லும் ஒருவரையும் 'மனப்பாடப் புகழ்' என்று ஏசி அதில் ஒரு இன்பச் சுகம்... என்றைக்கு அய்யா திருந்தப் போறீர்....:((
//

அனானி,

குழலி என்ன சொல்கிறார் என்று புரிந்து கொள்ளமுடியாவிட்டால் ஏன் காழ்புணர்வுடன் எதேதோ பேசுகிறீர். குறுக்குப் பாதை உங்கள் வழியில் குறுக்கிட்டால் அதைப்பற்றி பேசுங்கள். கண்ணன் மனப்பாடப் புகழாக இருப்பதால் பிரச்சனையே இல்லை.

ஆனால் பிழைப்பாக எடுத்துக் கொண்டு தமிழை இழிவு படுத்திக் கொண்டு இருக்கிறார் என்பதைத்தான் எழுதி இருக்கிறார்.

கண்டனங்கள் தெரிவிக்கும் போது 'நெல்லைக் கண்ணன் ஐயாவின் தமிழ்சேவை வாழ்க' என்றா எழுதமுடியும்.

said...

நெல்லைக்கண்ணனை கொழும்பு கம்பன் கழகம் ஒருமுறை அழைத்துப்பட்ட அவமானம். அதன்பின்னர் அவர்கள் இவரை அழைப்பதே இல்லை. ஏதோ சண்டித்தன அரசியல்வாதிபோல் இவர் தமிழில் பேசுவார், விஜயன் என்ற பேச்சாளருக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள் சிலவேளைகளில் விஜயனும் லாவண்யாபோல் ஒரு ஐயங்கரோ தெரியவில்லை.

கடந்தவாரம் விலக்கப்பட்ட பேச்சாளரை அடிக்கடி இடைமறித்த நெல்லைக்கண்ணன் பின்னர் அவரை திறமை இல்லையென்று விலக்கியது அபத்தத்தின் உச்சக்கட்டம்.

விஜயன் என்பவர் தான் திரு.வைகோ அவர்களுக்கு முன்னர் அவரது பாணியில் பேசுவதாகத் தெரிவித்தது நகைச்சுவையின் உச்சம்.

நெல்லைக்கண்ணன் வலையுலகிலும் இருக்கின்றார் இந்தப் பதிவிற்க்குப் பதில் அளிக்கின்றாரோ என பொறுத்திருந்துபார்போம்.

said...

//இப்படியான மக்களுக்கெதிரான சமத்துவத்துக்கெதிரான பார்ப்பன சிந்தனைகளோடு பேசும் விஜயனைத்தான் கட்டித்தழுவி புகழ்ந்திருக்கிறார் மனப்பாட புகழ் கண்ணன்(என்ன எழவு விஜயன் பேசினாரென்று இந்த வாரம் தான் தெரியும்- இங்கே விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒரு வாரதாமதத்தில் ஒளிபரப்பப்படும்)//

நான் கடந்த வாரமே பார்த்தேன்
குழலி. அப்படி ஒன்றும் பிரமாதமாக பேசவில்லை. மிக சராசரியாகவே தான் அவர் பேச்சு இருந்தது.. அமெரிக்காகாரன் அனுப்பி வைக்கும் பூச்சிக் கொள்ளிகளை பற்றி பேசினார். இதனால் நம் விவசாயம் விஷமாக மாறிவிட்டது என்பது போல் பேசினார். அவர் பேசியதில் பெரிய தவறுகள் எதுவும் இல்லை. ஆனால் அதற்கு தமிழ்கடலின் கண்ணீர் ட்ராமா ரொம்பவே ஓவர்.( ஒருவேளை கடல் மட்டும் உயர்ந்து கரை புரண்டுவிட்டது போலும் :P) இதை பற்றி நான் கூட எழுத நினைத்தேன். இந்த வாரம் பார்த்துவிட்டு தயவு செய்து அதை பற்றி எழுதுங்கள்.

said...

உருப்படியான ஒரு நிகழ்ச்சி என்றாலும் சில உறுத்தல்கள் இருந்தது உண்மை


விஜயன் என்ன பேசினார் என்று 1 வாரம் பொறுக்க வேண்டியதில்லை இந்த லிங்கில் போய் பார்த்துக் கொள்ளவும்
http://www.youtube.com/watch?v=eypR4JcTxYM

http://www.youtube.com/watch?v=-z8X_MAWggA

said...

ha ha.. seen enough when those so called Tamil Greats talks on Affirmative action! These guys lacks stuffs to put forward in an online forum where every point will be dissected to the max! If This OCEAN is ready to face us in the blog media or in TV media... we are ready to face him on this reservation issues! So called Forwards are really Backwards.. when it comes to thinking abilities.. my own experience!

Cheers for this article!

With reagrds
Osai Chella
Coordinator, Reservation FAQs

said...

நெடு நாட்களாகவே உங்களிடம் எதிர்பார்த்த படைப்பு ..நன்றி குழலி ..உண்மையில் போட்டிகள் என்று வருகிறபோதே பேதங்கள் வந்து விடுகின்றன ..தமிழ் வளர்க்கும் போட்டிகள் ஒரு கலந்துரையாடலாக ..தமிழை ஒரு தளத்திலிருந்து மேலே எடுத்து செல்ல முனையாமல் இன்னும் ராமாயணம் கதை பேசுவது சரி அல்ல .. பாரதியின் சிந்தனை இங்கு அனைவருக்கு வேண்டும் .நெல்லை கண்ணன் அடுத்தவர்க்கு மரியாதையை தர கற்று கொள்ள வேண்டும் ?ஒரு கேள்வி மட்டும் ?வல்லைபூ முழுவுதமே ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொண்டும் ..திட்டி கொண்டும் இருக்கும் ஒரு கழிப்பறை சுவர் மாதிரி ஆகி போனது ஏனோ ?

said...

ஒரு கோணத்திலிருந்தே முழு விஷயத்தையும் ஆராய்ந்திருப்பது அப்பட்டமாகத்தெரிகிறது.

//மனப்பாடப்புகழ்//
நீங்கள் மனப்பாடம் செய்து ஒப்பித்துப்பாருங்களேன். அட..குழலியாலும் மனப்பாடம் பண்ணமுட்யும்.நெல்லை கண்ணன் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்று ஒத்துக்கொள்ளலாம். இது நம்மால் முடியாதபோது ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி!!!

//சைவப்பிள்ளை//
யார் யார் என்னன்ன ஜாதி என்று நோண்டிப்பார்ப்பதுவும், அதனடிப்படையில் அவர்களை எடைபோடுவதுவும்தானே பார்ப்ப்பனீயம்...
அப்ப நீங்க?


//இடஒதுக்கீடு//
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை...
அதுவும் அதற்குச்சம்பந்தமே இல்லாமல்
தொலைதூரத்திலிருந்து..
அவர்கள்கூட நினைக்காத கோணத்திலிருந்து உங்கள் மனதில் தோன்றுவதை எல்லாம் வலியுறுத்திப்பார்ப்பதுதான்...
ஆச்சர்யமாக இருக்கிறது.
அதற்கும் மேல்...மெகா தொடர்
என்ற பெயரில்..
ஊரையே அழித்துக்கொண்டிருக்கும்
கிருமிகளைப்பற்றி யோசித்துப்பாருங்களேன்.
அதன் நுண்ணரசியல்கள் நேர்படப்புரியும்.
அதைவிட்டுவிட்டு...
:)


இவர்கள் பேசுவதாலோ...
நீங்கள் மறுப்பதாலோ..
இட ஒதுக்கீட்டில் இம்மியளவும் மாற்றம்
வந்துவிடாது நண்பரே!
என்னவோ இவர்கள் கூவியதால்
இடஒதுக்கீட்டை அரசு
பிடுங்கிக்கொண்டுவிடும் என்பது போல்
எழுதாதீர்கள்!
ஒடுக்கப்பட்டவர்கள் என்றுமே
மேலே வர உலகம் உழைத்துக்கொண்டுதான் இருக்கிறது.
நீங்களும்..நானும் உட்பட!

மேலும்...இடஒதுக்கீட்டால்..
பாதிக்கப்பட்டவன் கொஞ்சம் முனகத்தான் செய்வான். அதை ஏன் பெரிதாக எடுத்துக்
கொள்ளவேண்டும்.
அப்படிப்பார்த்தால்..

இந்த முடிவுகள்
எதைக்கூறுகின்றன?
http://www.payanangal.in/2008/06/500.html
இதற்கும் இடஒதுக்கீட்டுக்கும் என்ன
சம்மந்தம்?
கொஞ்சம் விளங்கவையுங்களேன்?

பதிவுலகில் இப்படி எழுதி பெயர்வாங்கும் புலவர்கள் அட்டவணையில் நீங்கள் வரவேண்டாம். நன்கு எழுதுங்கள்!
உங்கள் எழுத்தில்..ஒரு குறிப்பிட்ட எல்லைக்குமேல், ஒற்றைச்சார்பு ஓவராகி
விட்டதாக உணர்ந்ததால்..
இந்த பின்னூட்டமும் ஓவராகிவிட்டது
:)

said...

//ஒரு கேள்வி மட்டும் ?வல்லைபூ முழுவுதமே ஒருவரை ஒருவர் குறை சொல்லிக்கொண்டும் ..திட்டி கொண்டும் இருக்கும் ஒரு கழிப்பறை சுவர் மாதிரி ஆகி போனது ஏனோ ?
//
என்ங்க செய்வது இங்கே தான் பலரின் 'மூல'நோய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது, அதனால் இப்படி ரத்தமும் சீழுமாத்தான் இருக்கும், வெகு சன ஊடகத்தில் இதையெல்லாம் பேச விட்டுடுவாங்களா என்ன?

//நீங்கள் மனப்பாடம் செய்து ஒப்பித்துப்பாருங்களேன். அட..குழலியாலும் மனப்பாடம் பண்ணமுட்யும்.நெல்லை கண்ணன் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்று ஒத்துக்கொள்ளலாம். இது நம்மால் முடியாதபோது ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி!!!
//
நாங்கெல்லாம் இங்கிலிபிசு பரிட்சை எப்புடி எழுதினோம்னு நினைக்கிறிங்க?... ஹா ஹா....
இது தவிர மற்றபடிக்கு உங்கள் கேள்விகளுக்கு உங்களுக்கே பதில் தெரியும், இருந்தாலும் சும்மா போட்டு பாக்குறிங்க.... அதனால் என்சாய்ய்ய்ய்ய்ய்

said...

vaada,podaa ena avar pesuvathai ,paamara makkalum ,kooda ..paarthu mugam sulikkindranar..sariyaana pathivu.thelivana karuthu.

said...

i agree with the post. i am ashamed i do not know to type in tamil

said...

//யார் யார் என்னன்ன ஜாதி என்று நோண்டிப்பார்ப்பதுவும், அதனடிப்படையில் அவர்களை எடைபோடுவதுவும்தானே பார்ப்ப்பனீயம்...
அப்ப நீங்க?//

ரைட்! ஆனால் தமிழ்கடல் தான் மேல்சாதி என்று மார்தட்டும் போது எந்த அல்லது எத்தனையாவது அடுக்கில் (level) இருந்துகொண்டு பேசுகிறார் என்று ஒடுக்க பட்டோர் ஆராய்வது பார்ப்ப்பனீயம் அல்ல.

- வேல் -

said...

விமர்சனங்கள் தவிர்க்கமுடியாதவை,முகம் காட்டமறுக்கும்(புகைப்படத்தில்)குழலி உட்பட.

said...

அய்யா நான் மட்டுமல்ல உலகம் முழுவதும் த்மிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியைப் பார்க்கின்றனர்.500 ரூபாய்க்கு சாதிச் சான்றிதழ் தந்து போலியாக மற்றவர்கள் பிற்படுத்தப்பட்ட
தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளைத் திரூகின்றார்கள் என்றுதான் நெல்லைக்கண்ணன் சொல்லுகின்றார் என்பதனைப் புரிந்து கொள்ளாமல் அவரைத் திட்டுவது என்ன நியாயம்.தங்கள் எழுத்தில்முதலில் குறிப்பிட்டு இருக்கும் மாலன் பார்ப்பனர் தங்களுக்குத் தெரியுமா.தமிழ்க்கடல் எந்த இடத்திலும் தான் FC என்று சொல்லவேயில்லை. ராஜாதான் இட
ஒதுக்கிட்டீற்கு எதிராக பேசினார்.
அதில் பங்கேற்பாளர்கள் தங்களுக்குத் தரப் படுகின்ற தலைப்புக்களிலேதான்
பேசுகின்றனர்.அவர்களுக்கு வேறு வழியில்லை. விஜயன் தஞ்சாவூர்க்காரர் எங்கள் நண்பர்.அவர் கள்ளர் குலத்தைச் சார்ந்தவர்.அவரை யாரோ ஒருவர் அய்யங்கார் என்கின்றாரே.பொதிகைத் தொலைக்காட்சியில் ஒரு பெரிய சாதனையை தமிழ்க்கடல் அய்யா அவர்கள் செய்தார். தந்தை பெரியாரைப் பற்றி ஒரு பட்டி ம்ண்டபம் நடத்தினார். அவரின் பல
பேச்சுக்களைக் கேட்டிருக்கின்றோம்.அவர் சாதியக் கொடுமைகளுக்கு எதிரானவர்.நான் ஒரு தாழ்த்தப் பட்ட இனத்தைச் சேர்ந்தவன்.நெல்லைக் கல்லூரியில் பயின்றவன். பல முறை அய்யா அவர்களிடம் சந்தேகம் கேட்கச் சென்ற போதெல்லாம் அவர் இல்லத்தில் அவரோடு உணவு அருந்தியிருக்கின்றோம்.எல்லாத் தரப்பு
இளையவர்களும் அங்கே அய்யாவைக் காண வருவார்கள்.நெல்லையில் தாழ்த்தப் பட்ட மக்களுக்கு ஆதரவானவர் என்பதனாலேயே அவரைக் கொலைசெய்ய முயன்றார்கள்.மனப் பாடம் என்று எழுதியுள்ளீர்கள்.எந்தப் பாடலையும் மிகச்சிறப்பாகப் புதுமையாகப் பொருள் சொல்லக் கூடியவர்கள்.நான் பணி புரியும் கல்லூரியில் இன்று மாணவர்களால் போற்றப் படுகின்றேன் என்றால் அதற்கு அய்யா அவர்களே காரணம். ஒருவரைச் சரியாகத் தெரியாமல் அவரைக் குற்றம் சாற்றுவது முறையன்று.

said...

உயர்ந்த குடி என்று தம்மை கூறிக்கொள்ளும் இப்பிரவிகளை வேரறுக்க வேண்டும் எனெனில் இவைகள் தமது விதைகளை பதித்துவிட்டு சென்று விடுகின்றன

//யார் யார் என்னன்ன ஜாதி என்று நோண்டிப்பார்ப்பதுவும், அதனடிப்படையில் அவர்களை எடைபோடுவதுவும்தானே பார்ப்ப்பனீயம்...
அப்ப நீங்க?//

இந்த நரி பசுதோளை உடுதியுள்ளது அம்பலமாகிவிட்டது

தமிழனாய் இருடா என்றல் இங்கே உயர் பிறந்தவன் தாழ்ந்தவன் என்று இன்னும் பார்ப்பான் அளித்த போதையில் கிடக்கிறீர்கள்

said...

அய்யா வணக்கம்.நான் அனுப்பிய பின்னூட்டத்தை நீங்கள் வெளியிடாத பொழுதே உங்களின் நோக்கம் தெளிவாகி விட்டது.ஒரு சிறந்த தமிழறிஞரை வேண்டும் என்றே அவமானப் படுத்தும் நோக்கம் ஒன்றே உங்களுக்கு என்று புரிந்து கொண்டேன்.நான் ஒரு பள்ளர்.வேண்டுமென்றால் என்னையும் சாதி குறித்து எழுதுங்கள்

said...

அய்யா வணக்கம்.உங்கள் எண்ணம் ஒரு நல்ல தமிழறிஞரை அவ்மானப் படுத்துவது என்பதனை புரிந்து கொண்டேன்.தமிழ் நாட்டில் மக்கள் தொலைக் காட்சி தொடங்கிய நாள் முதலாய் அதனை தான் பேசும் நிகழ்ச்சிகள் தோறும் எந்த இடத்திலும் பாராட்டி வருபவர் அய்யா தமிழ்க்கடல் மட்டும்தான்.ம்ருத்துவர் அய்யாவிற்கும் மக்கள் தொலைக் காட்சி நண்பர்களும் நன்கறிவார். வந்தியத்தேவன் என்ற நண்பர் பச்சைப் பொய் ஒன்றை எழுதியுள்ளார்
கொழும்புக் கம்பன் கழகம் சென்ற
அய்யா அவர்களை கொழும்பின் நாளேடுகள் வீரகேசரியும். தினகரனும்
பல துறை அறிஞர் என்று பாராட்டிச் செய்தி வெளியிட்ட்தோடு அல்லாமல் அய்யாவின் தலைமையில் நடந்த கவி அரங்கத்தை 30 ஆண்டுகளில் நடந்த உச்சமான கவி அரங்கம் என்று பாராட்டி எழுதின.அய்யா அவர்களை அப்பா என்று அழைக்கும் அண்ணன் அறிவுமதி அவர்களிடம் அந்த நாளேடுகளின் படிகள் உள்ளன.
சாதிகளுக்கும் மதங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு நல்ல தமிழறிஞரை கொச்சைப் படுத்திச் சுகம் காணுவதில்தான் உங்களுக்குச் சுகமென்றால் சுகம் காணுங்கள்.சாதிஎழுதுகின்றீர்களே.அவர் சாதியைச் சேர்ந்த ஜெயகாந்தன் அவர்கள் வருணாச்சிரம தர்மத்தை ஆதரித்தும் வ்ட மொழியைப் பாராட்டி தமிழை இழித்தும் பேசிய பொழுது எந்தத் தமிழறிஞரும் அதனைக் குறித்துப் பேசாத போது குமுத்ம் பத்திரிக்கையில் அவரைக் கடுமையாகக் கண்டித்து கடிதம் எழுதிய ஒரேதமிழறிஞர் அய்யா தமிழ்க்கடல்மட்டுமே.உண்மை எழுதுங்கள். உணர்ந்து எழுதுங்கள்

said...

தமிழ்க்கடல் என்று கூட சரியாக சந்தியோடு எழுதாத தாங்கள் அவரைக் குறைத்து எழுதுவது அழுக்காற்றின் வெளிப்பாடு என்று நன்கு புரிந்து கொண்டேன்.இல்லையெனில் என்து பின்னூட்டத்தை வெளியிட்டிருக்க வேண்டுமே.உங்களுக்கு என் சாதியை ஏற்கனவே எழுதியிருந்தேன். நான் தமிழ்க்கடல் அவர்களால் மகன் என்று அன்போடும் அவர் குடும்பத்தார் எல்லோராலும் உறவாக உண்மையாகக் கொண்டாடப்படும் ஒரு பள்ளன்.

said...

http://www.youtube.com/watch?v=m72_ttxnlFE&feature=related

நெல்லை சைவப்புள்ளையிலிருந்து தஞ்சாவூர் கள்ளர் விஜயன் வரை பெரிய அளவிலான எல்லைகளில் நல்ல நண்பர்களை பெற்றிருக்கும் பள்ளர் என கூறிக்கொள்ளும் அனானிக்கு இதோ இந்த சுட்டியில் http://www.youtube.com/watch?v=m72_ttxnlFE&feature=related
உள்ள வீடியோவில் "இராணுவத்தில இடஒதுக்கீடு இருக்கா? இருக்கா? என்று புருவங்களை உயர்த்தி காண்பித்து பின் அத்தனை நக்கலோடும் நையாண்டியோடும் முகபாவனை வைத்து காண்பிக்கிறாரே இதை வைத்து முடிவு செய்யலாம்... இதுக்கு பெயர் என்ன தெரியுமா? எங்க ஊர்ல வேற ஒரு உயர்சாதி பெயரை சொல்லி அந்த சாதி குசும்பு என்பார்கள்.

தனியார் கல்லூரி மேனேஜ்மெண்ட் கோட்டா, என்.ஆர்.ஐ கோட்டா என்றெல்லாம் பணத்தை வைத்து இடஒதுக்கீடுகள் நடந்து கொண்டிருக்கும் போது அங்கெல்லாம் ஏழ்மை வருமாண வரம்பு பணம் பற்றியெல்லாம் பேசப்படாத ஏழைகளின் மீது வெளிப்படாத கரிசனம் எப்போதும் இடஒதுக்கீடு என்று வரும்போது மட்டும் வெளிப்படும் இவர்களுக்கு...

said...

அய்ய வணக்கம்.என்து பின்னூட்டத்தை இட்ட தங்களின் நேர்மைக்கு என்து பராட்டுக்கள்.இராணுவம் குறித்து அய்யா
பேசியதைக் குறிப்பிட்டுள்ளீர்கள்.அது குறித்து அய்யா அவர்களின் கருத்தை நாங்கள் ஏற்கனவே அறிவோம்.தனியார்துறைகளிலும் இட ஒதுக்கீடு தேவை என்பதனை அய்யா பல மேடைகளில் இன்றும் உரத்த குரலில் பேசி வருபவர்.ஒரு முறை அவர் பேச்சை நேரிலே கேளுங்கள்/பின்னர் அவரை புரிந்து கொள்வீர்கள்.நான் நெல்லையில் கல்லூரியில் படித்துக் கோண்டிருந்த நேரம் முற்படுத்தப் பட்டோர் பட்டியலில் இருந்த கிறிஸ்தவர்கள் பிராம்மணர்கள் ந்கரத்தார் சைவப் பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து ஒரு மாநாட்டினை மதுரையில் நடத்தினார்கள். கவியரசர் கண்ணதாசன்.அய்யா அவர்களும் அதிலே கலந்து கொண்டார்கள்.அந்த மாநாட்டிலேயே சிலர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் பேசிய போது
அதனைக் கடுமையாகக் கண்டித்துப் பேசியதோடு நம்மிலே வாய்ப்பற்ற ஏழைகளுக்கு ஒரு 2 அல்லது 3 சதவீதம் இட ஒதுக்கீடு கேளுங்கள்.இட ஒதுக்கீடே கூடாது என்பது பச்சை அயோக்கியத்தனம் என்று கண்டித்தார்கள்.விடுதலைக்குப் பிறகு அரசியல் காரணங்களுக்காக கொங்கு வேளாளர்கள் போல பல இனங்கள் பிற் படுத்தப் பட்ட இனமாக ஆக்கப்பட்டதை பல அரங்கங்களில் கடுமையாகக் கண்டித்தவர் அய்யா. தொடர்ந்து பலரைப் பிற் படுத்தப் பட்ட இனமாக்கி
உண்மையான பிற்படுத்தப் பட்ட ஒடுக்கப் பட்ட இனங்களின் உரிமைகளை மேலும் மேலும் பறிக்கின்றார்கள் என்று மேடைகள் தோறும் சாடுகின்றவர் அவர்.நன்றி

said...

//.இராணுவம் குறித்து அய்யா
பேசியதைக் குறிப்பிட்டுள்ளீர்கள்.அது குறித்து அய்யா அவர்களின் கருத்தை நாங்கள் ஏற்கனவே அறிவோம்.
//
அது என்னவென்று பொதுவில் சொல்லுங்களேன் நாங்களும் தெரிந்து கொள்கிறோம்...

said...

//தமிழ்க்கடல் எந்த இடத்திலும் தான் FC என்று சொல்லவேயில்லை.//
தமிழ்க்கடல்(?) நெல்லை கண்ணன் என்ன சாதியென்று அந்த நேரத்தில் எனக்கு தெரியாது, உங்கள் தமிழ்க்கடல் தானே எஃப்.சி என்று சொன்னதால் தான் தெரியும், அதன் பின் மதிமாறன் அவர்களின் பதிவில் தெரிந்து கொண்டேன் சைவப்புள்ளையென்று, நெல்லை கண்ணன் எஃப்சி என்று சொன்னதை விஜய் டிவி ஒலி ஒளிப்பேழைகளில் தெரிந்து கொள்ளலாம், அதைவிட மிக சுலபமான ஒரு வழி இருக்கிறது, உங்கள் தமிழ்க்கடலிடமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் அன்று சொன்னாரா இல்லையா என்று...

said...

அய்யா வணக்கம்.இராணுவம் குறித்து அய்யா அவர்கள் சொன்னது.தம்பி பிற்படுத்தப்பட்ட இளைஞர்களும். ஒடுக்கப்பட்ட இளைஞர்களுமே இராணுவப் பணியில் சேர்வார்கள்அவர்களின் இயல்பான வீரம் அதற்குக் காரணம்.மேல்தட்டு மக்கள் அங்கேயும் அலுவலகப்பணியில் இருப்பார்களேயொழிய படை வீரர்களாக இருக்க மாட்டார்கள்.இட ஒதுக்கீடு இல்லாமலேயே படை என்றால் அவர்கள் என்று உரிமையோடு அதிலே அதிகம் அவர்களே இருக்கின்றனர்.அதிலேயும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் திராவிட இயக்கங்களைக் கூட ஆட்டிப் படைப்பவர்கள் பெரிய பதவிகளுக்கு திருட்டுத்தனமாக வந்து விடுகின்றனர்.என்பார்.அந்தக் குறிப்பிட்ட நாளில் நான் எனது கிராமத்திற்குச் சென்றிருந்தேன் நிகழ்வைப் பார்க்கவில்லை. அப்படிப் பேசியிருந்தால் அதற்கு நியாயமான் ஒரு காரணம் இருந்திருக்கும்.அய்யாவை நன்கு அறிந்தவன் என்ற முறையில் சொல்லுகின்றேன்.என்து தாயின் மீது உண்மையாக சாதி மதங்களையெல்லாம் கடந்தவர் அய்யா.மூறையான தங்களின் பதில்களுக்கு நன்றி அய்யா.நம்மீது அன்பு கொண்டுள்ளவர்களையும் நாம் தெரிந்து கொள்ளாமல் சாடி விடுகின்றோமே என்கின்ற எண்ணாத்தில் இந்த இடுகைகளை இட்டேன் நன்றி அய்யா.

said...

லோஹியா, ராஜ்நாராயண், சுப்பிரமணியசாமி வரிசையில், ஒரு புகழ் பெற்றவரை இகழ்ந்து தான் பெயர் பெற நினைக்கும் வரிசையில் நீங்களும் சேர்ந்தமைக்கு நன்றி.

வேறு எந்தத் தொலைக்காட்சியும் செய்யாத ஒரு நல்ல காரியத்தை விஜய் டிவி நடத்தி, பரிசும் வழங்கி தமிழை வளர்ப்பது ஏன் உங்களுக்குஇவ்வளவு காழ்ப்பாய் இருக்கிறது என வியந்து நோகிறேன்!

said...

இப்பத்தான் படிக்கிறேன்...:))

said...

வருத்தமாக இருக்கின்றது