பாப்பாபட்டி, கீரிப்பட்டி - முதல்வர் கலைஞருக்கு நன்றி

சன் தொலைக்காட்சியின் செய்திகளில் சாதிவெறியின் முக்கிய இருப்பிடமாகவும் தமிழகத்தின் அவமான சின்னமாகவும் உள்ள பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் மற்றுமொரு ஊராட்சியும் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது போலவே தலித்களுக்கே மீண்டும் ஒதுக்கப்படுகின்றது, சில நாட்களுக்கு முன் இந்த தொகுதிகள் சுழற்சி முறையில் பொதுத்தொகுதியாக மாற்றப்படலாம் என்ற பேச்சு எழுந்ததாக நினைவு, ஆனால் அப்படி அந்த தொகுதிகளை பொதுத்தொகுதியாக சுழற்சி முறையில் மாற்ற இடமிருந்தாலும் அப்படி மாற்றினால் ஏற்கனவே இழைக்கப்பட்டிருக்கும் அநீதியோடு சேந்து அது மாபெரும் சமூக அநீதியாகவிடும் மேலும் இது ஆதிக்க சாதிவெறிக்கு அடிபணிவது போலாகும், ஆதலால் மீண்டும் அந்த பஞ்சாயத்து தொகுதிகளுக்கு தலித்கள் மட்டுமே போட்டியிடும்படியான ஒதுக்கீடு செய்த முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நன்றி...

இதே போன்று இந்த தொகுதிகளில் அமைதியான முறையில் தேர்ந்தல் நடந்து ஒரு தலித் பஞ்சாயத்து தலைவராக எந்த வித அச்சுறுத்தலும் இல்லாமல் நல்ல முறையில் பணியாற்ற தமிழக அரசு முனைந்து செயல்படவேண்டும், ஆதிக்க சாதிவெறியர்களின் கொட்டம் அழிய வேண்டும்.

இதை காங்கிரஸ், பாமக மற்றும் அனைத்து கட்சிகளும் வரவேற்றுள்ளன, அதிமுகவின் நிலை இதில் எப்படி என்று சன் செய்திகளில் சொல்லப்படவில்லை...

14 பின்னூட்டங்கள்:

said...

அவசரப்படுகிறீர்கள்.. ஒழுங்கான முறையில் தேர்தல் நடக்கட்டும். முப்பது முக்கோடியார்களின் ஒட்டுக்காகளை மறந்து இந்த அரசியல் கட்சிகள் எந்தளவுக்கு முனைப்போடு இந்த தேர்தலை நடத்துகிறார்கள் என பார்ப்போம் .

said...

நல்லதொரு செய்தியை அறியத் தந்ததற்கு நன்றி திரு குழலி!

சமூகநீதி ஒருநாள் கிடைத்தே தீரும் அது காலத்தின் கட்டாயம்.

said...

முதல்வர் கலைஞருக்கு நன்றி

same!!

said...

"....பஞ்சாயத்து தொகுதிகளுக்கு தலித்கள் மட்டுமே போட்டியிடும்படியான ஒதுக்கீடு செய்த முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நன்றி..."

மிகச் சரியாக சொன்னீர்கள் குழலி.
இந்த ஆட்சி காலத்தில் இந்த பகுதியில்
அமைதித் திரும்பி "தலித்" ஊர் தலைவராக வரட்டும்.

நன்றி
மயிலாடுதுறை சிவா...

said...

அய்யா குழலி,

இதுக்கே நன்றின்னா இதுக்கு முன்ன மூணு(?)முறை தேர்தல் நடத்துன புர்ச்சி தலிவிக்கு என்னா சொல்றது?

மேலும் மேலும் 'ஷ்பெஸல் ஆபீஸர்' அதிகாரத்திலேயே இக்கிராம நிர்வாகம் இருக்கப்போவது உறுதி!

தேவர்கள் ஆதரவு பெற்ற, கள்ளர் இன சசிகலாவின் உயிர்த்தோழி, ஜெயலலிதா தலமையிலான எதிர்க்கட்சி, இன்னும் அப்பகுதியில் செல்வாக்குடனுள்ள நிலையில் நீங்கள் எதிர்பார்க்கும் எதுவும் நடந்துவிடாது!

//சாதிவெறியர்களின் கொட்டம் அழிய வேண்டும்//

நல்ல எண்ணம் தான்! அந்த கிராம மேல் சாதி தலைகள் செய்வதெல்லாம் சாதி வெறியாக உங்களுக்கு தோன்றினால் - கிராமங்கள் பற்றிய உங்கள் புரிதலை தயவுசெய்து மறு ஆய்வு செய்யுங்கள்.

இப்போதைக்கு இவ்வளவே!

said...

அய்யா குழலி,

இதுக்கே, இப்பவே நன்றின்னு பதிவு போட்டா எப்படி? இது சரின்னா, இதுவரை மூணு முறை (?) தேர்தல் நடத்துன புர்ச்சி தலைவிக்கு என்னா சொல்றது?

இங்கே தேர்தல் மட்டும் தான் (நடந்தாலும்) நடக்கும். மத்தது (இராஜினாமா + அதை நியாயப்படுத்தும் பேட்டிகள் + அதை வரிக்கு வரி பிரசுரிக்கும் பத்திரிக்கை நியாயவான்கள்(இடிவிழ)) எல்லாம் ரிப்பீட்டு தான்.

உச்ச சாதி ஜெயலலிதா, அவர் உயிர் தோழி கள்ளர் இன சசிகலா, இவர்களாலேயே அங்கே ஓர் தாழ்தப்பட்டவரை பதவியில் வைக்க இயலாதபோது, இப்போதய அரசு முயன்றாலும், நடக்க விடுவார்களா?

அன்றைக்கு ஓர் மூப்பனார் இல்லாமல் இருந்திருந்தால், போக்குவரத்து கழகங்கலுக்கு தலைவர்கள் பெயர் நீக்க இன்றிருக்ககுமா கலைஞரால்? (அது சரியா தவறா என்ற விவாதம் உயிர்ப்புடையது என்றபோதும்)

//ஆதிக்க சாதிவெறியர்களின் கொட்டம் அழிய வேண்டும்//

இங்கே 'ஆதிக்க சாதிவெறியர்கள்' என யாரை சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஒரு வேலை அக்கிராமங்களில் வசிக்கும் பெரும்பான்மை மேல் சாதியினரான பிரமனை கள்ளர் மக்களை என்றால், தமிழக சாதிய கூறுகள் பற்றி நீங்கள் அறிய வேண்டியது அதிகம்.

எல்லாவற்றையும் பொதுமைப்படுத்தும் தமிழில் வெளிவரும் இந்திய ஊடகங்களின் பார்வையையே நீங்களும் கொண்டுள்ளீர்கள் என்பதுடன் இதை முடிக்கிறேன்.

said...

//அப்படி மாற்றினால் ஏற்கனவே இழைக்கப்பட்டிருக்கும் அநீதியோடு சேந்து அது மாபெரும் சமூக அநீதியாகவிடும் மேலும் இது ஆதிக்க சாதிவெறிக்கு அடிபணிவது போலாகும்,
இதை அநீதின்னு சொல்வதா. இல்ல தலித் பஞ்சாயத்து தலைவரா வரக்கூடாது என்பதற்கான திட்டமிட்ட சதியா ?

முந்தைய ஆட்சியின் போதும் ( 1996-2000) கலைஞரால் தேர்தலை நடத்த முடியவில்லை. கலைஞர் மட்டும் எப்படி அங்கே தேர்தலை நடத்திவிடுவாரென்று பார்க்கலாம். அப்படி அவரால் முடியவில்லையெனில் அது தலித்களுக்கான கலைஞரின் துரோகமாகவே பார்க்கப்படும். பாப்பாபட்டி, கீரிப்பட்டிய்யில் தேர்தலில் தலித்துகளைத் தேர்ந்தெடுக்கும்வரை மேலும் இரண்டு தொகுதிகளை தலித்துகளுக்காக் ஒதுக்கியிருந்தால் அவர் எதோ சாதிச்சுட்டார் (தலித்துகளுக்கு சமூக நீதி வழங்கிட்டார்ன்னு) என்று சொல்லலாம்.
இதெல்லாம் அவரின் பம்மாத்து...

said...

லபக்குதாசு நீங்கள் சொல்வது சரிதான் என்றாலும் தேர்தலை நடத்தவிடாமல் ஆதிக்க சாதிகளை பகைத்துக்கொள்ளக்கூடாது என்று சுழற்சி முறையில் பொதுத்தொகுதியாக மாற்றிவிடாமல் இருந்ததற்கே இந்த நன்றி நவிலல்...

said...

Can you be brave enough to mention whether these "Aadhika Saadhis" include Paarpaans - whom you say are responsible for all the evils in the Tamil society.

said...

மேற்கண்ட தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்து விட்டார்களா?

எவ்வித தடையும் இன்றி தேர்தல் நடந்து முடியவேண்டும். அப்போதுதான் எதுவும் சொல்ல முடியும். தேர்தல் நடந்த பின்னரும் கூட பதவி ஏற்பு முடிந்தௌடனேயே ராஜினாமா செய்யும் அவலமும் இந்த தொகுதிளில் நடந்துள்ளதே!

:(

said...

அனானி ஆதிக்க சாதியினர்தான் இந்த தொகுதிகளில் கீழ்சாதியினர் தேர்தலில் பங்குபெற்று பஞ்சாயத்து தலைவராக டேர்ந்தெடுக்கப்படுவதா என்று அவர்களை தேர்தலில் பங்கு பெற இயலாமல் செய்கிறார்கள்.

இதை சொல்வதற்கு பிரேவ் எதற்கு என்று தெரியவில்லை!

said...

அனானி சொன்னது

"Can you be brave enough to mention whether these "Aadhika Saadhis" include Paarpaans - whom you say are responsible for all the evils in the Tamil society"

நாமக்கல் சிபி சொன்னது.
"அனானி ஆதிக்க சாதியினர்தான் இந்த தொகுதிகளில் கீழ்சாதியினர் தேர்தலில் பங்குபெற்று பஞ்சாயத்து தலைவராக டேர்ந்தெடுக்கப்படுவதா என்று அவர்களை தேர்தலில் பங்கு பெற இயலாமல் செய்கிறார்கள்.

இதை சொல்வதற்கு பிரேவ் எதற்கு என்று தெரியவில்லை!"

அனானி,

உங்களுக்கு இன்னும் புரியல..
ஆதிக்க சாதிகளுக்கு," ஆதிக்கம் செய்யுங்க,
தலித்துக்களுக்கு ஆப்பு அடிங்கன்னு சொல்லிக்கொடுத்தது "பார்ப்பன ஆரியம்.

இல்லையென்றால் இவங்க, ஆதிக்கமே வேண்டாம்னு போயிரூப்பாங்க.இப்பேர்பட்ட நல்லவர்களை வில்லனா மாத்தியது ஆரியம்.

அதனால வில்லன்களை, விட்டு விட்டு, இவர்கள் சொல்றபடி வந்தேறிய பாப்பான்களை அடிப்பது தான் நியாயம்.அது தான் திராவிடீயம்.

பாலா

said...

இன்னும் அதிக தூரம் கடக்க வேண்டியுள்ளது. பல தடைகளில் ஒரு தடை, சுழற்சி முறையில் பொது தொகுதிகளாக மாற்ற வேண்டாமென்ற சட்ட திருத்தத்தினை எதிர்த்து இரு நீதி பேராணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது...

said...

//அன்றைக்கு ஓர் மூப்பனார் இல்லாமல் இருந்திருந்தால், போக்குவரத்து கழகங்கலுக்கு தலைவர்கள் பெயர் நீக்க இன்றிருக்ககுமா கலைஞரால்?//

இதென்ன புதுக்கரடி? விளக்கமாகச் சொல்லவும்.....