முதுகெலும்புள்ள அஜீத் - என்னய்யா தப்பு செய்தார்?

மண்புழு மண்ணில் கிடப்பதற்க்கு காரணம் அதற்க்கு மூளையில்லாததால் அல்ல, முதுகெலும்பில்லாததால்... சில நாட்களுக்கு முன் யாரோ ஒருவர் இப்படி பேசிகேட்டேன், முதுகெலும்பில் 12 அறுவை சிகிச்சைகள் செய்திருந்தும் முதுகை வளைத்து குழைந்து பயந்து நடுங்கிபோகாமல் தன் மனதில் பட்டதை பேசியிருக்கிறார் அஜீத்.



ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட ராஜகம்பீர மன்னர் கருணாநிதி அவர்களுக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாரா வாரம் நடைபெறும் பல மணிநேர புகழுரைகள், நடிகைகளின் அரைகுறை ஆடை நடனங்கள் அதை படம் பிடித்து தங்கள் தொலைக்காட்சியில் போட்டு காசு பார்ப்பது என மன்னர் ரசிக்கும் ஒரு பாராட்டுவிழாவில் தான் இப்படி பேசியிருக்கார், எல்லாத்துக்கும் நாங்க வரணுமென்று மிரட்டுகிறார்கள் என்று... இதில் என்ன தவறு??

சினிமாவிலும் பேட்டிகளிலும் அரசியல் பொறிபறக்க ரசிகர்களை தூண்டிவிட்டு அதனால் சொந்த லாபம் சம்பாதித்து அதே நேரத்தில் தமிழகத்திற்க்கும் தமிழனத்துக்குமான கூட்டமென்றால் காணாமல் போய்விடும் திருட்டு நடிகன் அல்ல அஜீத். எதற்க்கும் வரமாட்டார், பொதுவாகவே எந்த விழாக்களிலும் எந்த கூட்டங்களிலும் கலந்து கொள்ளாதவர் அனல் பறக்க அரசியல் பேசிவிட்டு இனம் மொழி என்று பேட்டிகளில் பரபரப்பு காட்டுபவர் அல்ல, அவர் தன் வேலைகளுண்டு என்று போய்க்கொண்டே இருப்பவர், எல்லோருக்கும் அரசியல் ஆர்வமும் சமூக ஆர்வமும் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை அவர்களை வற்புறுத்துவது எதற்காகவும் தவறு. ஆனால் எந்த அரசியல் சமூக காரணமுமின்றி இவர்களின் முகங்களை படம்பிடித்து தம் தொலைக்காட்சியில் அரைகுறை நடனங்களுக்கு நடுவே காட்டி இதன் மூலம் காசு சம்பாதிக்கும் பொறுக்கிதனத்திற்க்கு எதிராக ஆவேசமாக கூட இல்லை லேசாக முனகி எதிர்ப்பு தெரிவித்ததற்க்கே அஜீத்தை இந்த பாடு படுத்துகிறார்கள்...

முதலில் ஜாக்குவார் தங்கம் என்ற ஸ்டண்ட் மாஸ்டர் அஜீத் மீது வழக்கு போட கூறுதல் அதன் தொடர்ச்சியாக உடனடியாக அஜீத் ரசிகர்கள் ஜாக்குவார் வீட்டை உடைத்ததாக வழக்கு என அஜீத் மீது தொடர்ச்சியான அழுத்தங்கள், இந்த இடத்தில் நான் கடவுள் படம் தொடர்பான பண விவகாரம் தொடர்பாக பாலாவும் அவருக்கு ஆதரவாக சீமான் மற்றும் சில அரசியல் தொடர்புள்ளவர்கள் அஜீத்தை மிரட்டியதாக செய்தி வந்திருந்த நேரம் அது அப்போதும் கூட அஜீத் தன் ரசிகர்களை தூண்டிவிடாமல் என் பிரச்சினையை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று அமைதியாக்கியவரை தான் ஜாக்குவார் தங்கம் வீட்டை அடிக்க தூண்டியதாக கேஸ் போடுகிறார்கள், ஜாக்குவார் தங்கம் நாடாராம் அதனால் நாடார் சங்கம் கொதிக்குதாம்...

அஜீத் போன்ற முதுகெலும்புள்ள சுயமரியாதை உடையவர்களை நிச்சயம் நாம் ஆதரிக்க வேண்டும்... ஆம் அஜீத் மீதான அதிகாரத்துவத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக என் கண்டனத்தை பதிப்பிக்கின்றேன்(இந்த ஒரு எழவைத்தவிர வேறென்ன செய்ய முடியும் என்னால்)

43 பின்னூட்டங்கள்:

said...

முதுகெலும்பு மன்னன் நேற்று முதலமைச்சரை பார்த்து வளைந்தாராமே? வீரத்துடன் எதிர்த்திருந்தால் நல்லா இருந்திருக்கும்..

said...

யோவ்... அஜித்து, தமிழ் திரைப்பட உலகத்திலே , மீச வச்ச , முதுகெலும்பு உள்ள ஒரே ஆம்பள நீ தான்யா..............

said...

unmaithaan kuzhali. karunaithimun pesiyathal ajithkku kudaichchal varum enpathu ellorukkum therinthathey... ithu kuriththu naanum oru katturai reddy pannikkondirukkirean... naalai pathivuseiyalam... ellorum ithu kuriththu pathipu veliyittall nallathu. ungal katturaikku en vazhththukkal.

said...

//முதுகெலும்பு மன்னன் நேற்று முதலமைச்சரை பார்த்து வளைந்தாராமே? வீரத்துடன் எதிர்த்திருந்தால் நல்லா இருந்திருக்கும்
//
பதிலுக்கு உங்களை நக்கலடித்து உங்களை காயப்படுத்த விரும்பவில்லை... அஜீத் தனக்காக மட்டும் பேசவில்லை எல்லோருக்காகவும் தான் பேசியிருக்கார் அந்த எல்லோரில் உங்கள் எளம் தளபதியும் உண்டு... பாயிண்ட் நெம்பர் டூ நான் அஜீத்தின் சினிமா ரசிகன் அல்ல

said...

வணக்கம் குழலி , நான் கடந்த ஒரு வருடமாக தினமும் தமிழ்மணம் வாசிக்கிறேன். எந்த செய்திக்கும் கமெண்ட்ஸ் அனுப்பியது இல்லை. அஜித் போன்ற நல்ல எண்ணம் உடையவர்களுக்காக நீங்கள் எழுதியதற்கு நன்றி .(நான் அஜித் ரசிகன் இல்லை)

said...

என்னதான் நடக்குதுன்னு பார்க்கலாம்..!

said...

//"முதுகெலும்புள்ள அஜீத் - என்னய்யா தப்பு செய்தார்?"//

எந்த தவறையும் செய்து விட வில்லை.. இது ஒரு ஆரம்பம் அவ்வளவே..! எல்லாம் சிறிது காலமே..!

எல்லாவற்றிற்கும் தமிழக முதல்வரை காக்கா பிடிக்கும் திரைவுலகம் சற்று அளவோடு நிறுத்திருந்தால்
ஆரம்பத்திலேயே அதிகார ஆணவங்களை நிறுத்திருக்கலாம்.

said...

பாக்கலாம் பாக்கலாம்.. சமரசம் செய்துக்கொள்ளாமல் இருந்தால் அஜித்தை பாராட்டலாம் தான்.. பொறுத்திருந்துப் பார்ப்போம்..

//சீமான் மற்றும் சில அரசியல் தொடர்புள்ளவர்கள் அஜீத்தை மிரட்டியதாக செய்தி வந்திருந்த நேரம் அது //

வேற எதுக்கு இருக்கு சீமான்கனியின் ”நாம் அடியாட்கள்” இயக்கம்?

ரஜினியை திட்ற பதிவுக்கு அஜித் பேர்ல தலைப்பா?

said...

http://thatstamil.oneindia.in/movies/specials/2010/02/19-vc-guhanathan-kalaipuli-sekaran-s.html

ஊரோடு ஒத்துப் போகணும்... இல்லேன்னா மிரட்டவும் செய்வோம்!-வி.சி. குகநாதன்

-------------
ஒரு அரசியல் கட்சித் தலைவனுக்கு தொண்டர்கள் கட்டுப்படுவது போல, குறிப்பிட்ட சினிமா அமைப்புகளுக்கு அதன் உறுப்பினர்கள் கட்டுப்பட்டே தீர வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு வழிக்குக் கொண்டுவருவோம்.. மிரட்டவும் செய்வோம்" என்று பகிரங்கமாகவே தெரிவித்தார் ஃபெப்ஸி தலைவர் விசி குகநாதன்.

அவர் சொன்னதை ஆதரித்துப் பேசினார் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் ஜி.சேகரன்.

தேவ விஜயம் பிலிம் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பாடகசாலை என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குகநாதன் பேசியது:

சினிமா கலைஞர்களுக்காக எவ்வளவோ செய்துவிட்டார் முதல்வர் கருணாநிதி. அவருக்கு நன்றி சொல்ல முறையாக விழா எடுக்கிறோம். அதில் பங்கேற்பதில் என்ன கஷ்டம்?.

திரைப்பட அமைப்பு என்பது ஒரு அரசியல் கட்சி என்றால், அதன் உறுப்பினர்கள் தொண்டர்கள் மாதிரி. தலைவனுக்கு கட்டுப்பட்டு நடப்பதுதானே தொண்டர்களின் கடமை. அதை விட்டுவிட்டு விதண்டாவாதம் செய்கிறார்கள்.. இவர்களுக்கெல்லாம் சிலர் ஆதரவு தருகிறார்கள்.

வற்புறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் இவர்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை. நாங்கள் மிரட்டவில்லை... வற்புறுத்தினோம்.

ஊரோடு ஒத்துப் போக வேண்டும் என்பது பழமொழி. அதை உணர்ந்து அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும். தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்க்கவும். எதிர்த்துதான் நிற்போம் என்றால், இவர்களை எப்படி மேலே கொண்டு வந்தோமோ அதேபோல இருக்குமிடம் தெரியாமலும் செய்ய முடியும்.

நாங்கள் பண்பாகவும் கேட்போம். பணிவாகவும் கேட்போம். வற்புறுத்தி அல்லது மிரட்டியும் கேட்போம்.
என்ன செய்துவிட முடியும் இவர்களால்? அப்படியும் கேட்காவிட்டால் அவர்களை எப்படி ஓரங்கட்ட முடியும் என்ற வழிமுறையும் எங்களுக்குத் தெரியும்... என்ன செய்ய முடியும் இவர்களால் என்றார்.

அடுத்து பேச வந்த விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி ஜி சேகரன், இங்கே விசி குகநாதன் பேசியதை முழுமையாக ஆதரிக்கிறேன். நான் பேச நினைத்ததையெல்லாம் அவர் பேசிவிட்டார்.

நாங்கள் யாரைச் சொல்கிறோம் என்று உங்களுக்குத் தெரியும். மீடியாக்காரர்கள்தான் இதைப் பெரிதாக்கிக் கொண்டே போகிறார்கள் என்றார் சம்பந்தமில்லாமல்.

இந்த இருவரின் பேச்சும் திரையுலகினை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நடிகர்களுக்கான பகிரங்க சவாலாகவே இதை திரையுலகம் பார்க்கிறது. நடிகர் சங்கம் என்ன செய்யப் போகிறது என்று அங்கேயே கேள்வி எழுப்பினார் விழாவுக்கு வந்த ஒரு நடிகர்

said...

http://thatstamil.oneindia.in/movies/news/2010/02/19-jaguar-thangam-threats-ajith.html

அஜீத் வீட்டை ஜாதிக்காரர்களுடன் முற்றுகையிடுவேன்! - ஜாகுவார் தங்கம் மிரட்டல்

அஜீத் வீட்டை தனது ஜாதிக்காரர்களுடன் முற்றுகையிடப் போவதாக ஜாகுவார் தங்கம் என்ற சினிமா ஸ்டன்ட் நடிகர் மிரட்டியுள்ளார். இதனால் அஜீத் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் அஜீத் பேசியது தொடர்பாக அவருக்கு தொடர் மிரட்டல் கள் மற்றும் விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன.

இது தொடர்பாக ஜாகுவார் தங்கம் என்பவர் சில தினங்களுக்கு முன் அஜீத்தை கடுமையாகத் தாக்கி பேட்டியளித்தார். ஆனால் அஜீத் தரப்பில் அதை யாரும் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் அவர் ரஜினி உள்ளிட்டவர்களையும் கடுமையாக விமர்சித்தார். ஆனால் அப்படியும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

இந் நிலையில் நேற்று அவரது வீடு மீது அடையாளம் தெரியாத நபர்கள் கல் வீசினார்களாம். இதில் அவர் காரின் பின்பக்க கண்ணாடியும், லைட்டும் மட்டும் உடைந்துள்ளது. ஆனால் இதை, 'என் காரை நொறுக்கிவிட்டார்கள்' என்று படங்களைக் காட்டி பத்திரிகையாளர்களிடம் மிகையான செய்தியைத் தந்துவிட்டார்.

இதற்கிடையே, இந்த தாக்குதலை அஜீத்தும் அவரது மேனேஜரும்தான் திட்டமிட்டு செய்ததாக போலீஸில் புகார் செய்தார் ஜாகுவார் தங்கம்.

ஆனால் விசாரித்ததில், அஜீத் அந்த இடத்துக்கே வரவில்லை என்றும், ஜாகுவார் குறிப்பிட்ட நபர்கள் யாருக்கும் இதில் தொடர்பில்லை என்றும் போலீசார் கூறிவிட்டனர்.

ஆனால் ஜாகுவாரின் தொடர் வற்புறுத்தல் மற்றும் இதை ஜாதிப் பிரச்சனையாக்கும் அவரது பத்திரிகை பேட்டிகள் காரணமாக, அஜீத் மேனேஜர் உள்பட 14 பேர் மீது எப்ஐஆர் போட்டு வழக்குப் பதிவு செய்துள்ளனர் சென்னை மாநகர போலீசார்.

போலீஸ் பாதுகாப்பு:

இப்போது, அஜீத் வீட்டை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளார் ஜாகுவார் தங்கம். தனக்கு ஆதரவாக தனது சமூக பிரமுகர்கள் திரண்டு வருமாறு பகிரங்கமாக அழைப்பும் விடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து திருவான்மியூரில் உள்ள அஜீத் வீடு, சாலிகிராம அலுவலகம் போன்ற இடங்களில் பெருமளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல ஜாகுவார் தங்கத்தின் வீட்டுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

said...

http://no-bribe.blogspot.com/2010/02/blog-post_5431.html

நடிகர் அஜித் கைது செய்யப்படுவாரா?

திரைப்பட ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம் கொடுத்த புகார் அடிப்படையில், நடிகர் அஜீத்தை தவிர 14 பேர் மீது ஜாமீனில் வெளிவர முடியாதப்படி 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் அஜீத் மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்திருந்தார்.

அந்த மனுவில், கடந்த 18.02.2010 அதிகாலை சுமார் 2 மணி அளவில் என் வீட்டுக் கதவை யாரோ சத்தமாக தட்ட எனது மகனும், கதாநாயகனுமான சிரஞ்சீவி, யார் என்று கேட்டுக்கொண்டு கதவு இடைவெளி வரியாக பார்த்துள்ளார். அப்பொழுது சுமார்பதினைந்து நபர்களுக்கு மேற்பட்டு கையில் பட்டாகத்தி, உருட்டுக்கட்டை, அரிவாள், பெட்ரோல் குண்டு, கடப்பாறை ஆகியவற்றை வைத்துக்கொண்டு நடிகர் அஜீத்தின் மேலாளர் தலைமையில், மாவட்டச் செயலாளர், அஜீதின் உதவியாளர் மற்றும் சுமார் 15க்கு மேற்பட்ட தென் சென்னை அஜீத் மன்ற நிர்வாகிகள் கெட்ட வாத்தையில் திட்டிக்கொண்டு இருந்தார்கள்.

said...

என் மகன் என்ன வேண்டும் என்று கேட்பதற்குள் ''ஜாக்குவார் வெளியே வாடா. உன் தலையை எடுக்கச் சொல்லி எங்க தல சொல்லியிருக்காரு'' என்று கூறி கட்டையால் ஜன்னல்கள் அடித்தார்கள். உடனே ஒருவன் ''அட நாட்டான், அண்ணாச்சி பலசரக்கு கடைக்கே இவ்வளவுவா'' என்று ஏலனமாக கேட்டுள்ளான்.


உடனே எனது மகன் வீட்டிற்குள் ஓடி போன் மூலமாக நடந்து கொண்டிருக்கும் சம்பவத்தை எனக்கு தெரிவித்தான். அப்பொழுது நான் மதுரையில் சூட்டிங்கில் இருந்தேன். உடனே எனது மகனிடம் கதவை திறக்காதே. எதுவாயிருந்தாலும் நாளை நான் வந்து பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி விட்டேன். என் மகன் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே கம்பி, கட்டையை வைத்து எனது ஸ்கார்பியோ காரை அஜீத்தின் மேனேஜர், தென் சென்னை அஜீத் மன்ற தலைவர், அஜீத்தின் உதவியாளர் மற்றும் அவருடன் வந்தவர்கள் அனைவரும் சேர்ந்து கார் கண்ணாடி மற்றும் அனைத்து விளக்குகளையும் அடித்து உடைத்து, காரையும் சேதப்படுத்தி விட்டார்கள். இதன் மதிப்பு சுமார் 2 லட்சம் ரூபாய் இருக்கும்.


மேலும் என்னையும், என் குடும்பத்தையும் கேவலமாக பேசியும், என் சாதியைப் பற்றி கெட்ட வார்த்தையில் திட்டியும் என் குடும்பத்தையே கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். மீண்டும் என் மகனிடம் வெளியே செல்லாதே, கதவை திறக்காதே என்று கூறினேன்.

உடனே நான் மதுரையில் இருந்து சென்னைக்கு காலை விமானத்தில் டிக்கெட் கிடைக்காததால் மதியம் 2.20 விமானத்தில் சென்னை வந்தேன். விமான நிலையத்தில் இருந்து உடனே என் வீட்டிக்குச் சென்று நடந்தவைகளை நேரில் பார்த்தேன். உடனே எனது மகனுக்கும், குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறி விட்டு சேதாரங்களை பார்த்து விட்டு இந்த புகார் மனுவை தங்களிடம் அளிக்கிறேன்.


சினிமாவில் இருக்கும் அனைத்து கதாநாயன், கதாநாயகி, தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், சக நடிகர்கள் உடன் அன்பாகவும், கண்ணியமாகவும் பழக கூடியவன் நான். கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் நான் சேர்த்து வைத்த புகழையெல்லாம் கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்úôடு, நண்பர் அஜீத் அவர்களின் நேரடியான தூண்டுதலின் பேரில் அவருடைய மேலாளர், தென் சென்னை மாவட்ட தலைவர், அஜீதின் உதவியாளர் (டச்சப் பாய்) மற்றும் 15க்கும் மேற்பட்ட தென் சென்னை அஜீத் மன்ற நிர்வாகிகள் ஆகிய அனைவரும் சேர்ந்து நள்ளிரவில் 2 மணிக்கு என்னையும், என் குடும்பத்தாரையும் தாக்கி, கொலை செய்யும் நோக்கத்தோடு வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்து கேவலமாக பேசி கெட்ட வார்த்தைகளால் திட்டி, பயங்கர ஆயுதங்களுடன் என் வீட்டையும், என் காரையும் தாக்கி சேதாராம் ஏற்படுத்திய அஜீத் உள்பட அனைவரின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் தக்க பாதுகாப்பு அளிக்கும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.


இந்த மனுவை வாங்கிக் கொண்ட போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தியாகராய நகர் துணை கமிஷனர் பெரியய்யாவை உடனடியாக தனது அலுவலகத்திற்கு வரவழைத்தார். ஜாக்குவார் தங்கம் கொடுத்த புகார் மனுவையும் அவரது வீட்டையும், காரையும் சேதப்படுத்தியது தொடர்பான புகைப்படங்களையும் துணை கமிஷனர் பெரியய்யாவிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்கும் படியும் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.


இந்த புகாரை விசாரித்த உயர் அதிகாரிகள், ஜாக்குவார் தங்கம் கொடுத்த புகாரில், அஜீத் பிரச்சனை நடந்த இடத்தில் இல்லை என்று கூறப்பட்டுள்ளால், அவரைத் தவிர 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்தனர்.

நடிகர் அஜீத் மீது சினிமா ஸ்டண்டு மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் கொடுத்த புகார் அடிப்படையில் சென்னை எம்.ஜி.ஆர். நகர் போலீசார் கொலை மிரட்டல் உள்பட 4 சட்ட பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளதாக தெரிகிறது.

அஜீத்தின் மானேஜர், உதவியாளர், ரசிகர் மன்றத்தின் மாவட்ட செயலாளர் ஆகியோர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துளது. புலன் விசாரணைக்கு பிறகுதான் அஜீத்திற்கு தொடர்பு உள்ளதா என்பதை முடிவு செய்து அவரது பெயரும் வழக்கில் சேர்க்கப்படும் என்றும் தெரிகிறது.

பொதுசொத்துக்கு பங்கம் விளைவித்தது, கொலை முயற்சியில் ஈடுபட்டது உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதால், அந்த 14 பேரும் ஜாமீனில் கூட வெளிவர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே அஜீத் தனது வழக்கறிஞர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். முன்ஜாமீன் கோரி மனு செய்வது உள்ளிட்ட அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து வழக்கறிஞர்கள் மற்றும் நண்பர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

said...

கத்தியைக் கூட கண்ணால்ப் பார்க்காத தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர் குழைக்க எதிர்கட்சியினர் பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம்.. தமிழகம் அமைதிப் பூங்கா.. ஜாதிகள் எல்லாம் இங்கே ஓய்வெடுத்து உறங்கிக் கொண்டுதானிருக்கிறது.. கேட்டைத் திறந்து வெளியே வருவதே இல்லை..

said...

intha visayathil nakeeran pathirikai seikira velaiyaiyum kavanikka vendum.

said...

இந்த ஒரு எழவைத்தவிர வேறென்ன செய்ய முடியும் என்னால்)

,,,,,,,,

aaஆமாம்

said...

'ரஜினி ஒரு ஜோக்கர்'!-ஜாகுவார் தங்கம் தாக்கு

ரஜினி ஒரு ஜோக்கர், அவர் பேச்சை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை என்று கூறியுள்ளார் சினிமா ஸ்டன்ட் மாஸ்டரான ஜாகுவார் தங்கம்.

முதல்வர் விழாவில், அஜீத் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் ஜாகுவார் தங்கம் என்பவர்.

இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு, அனாமிகா என்ற கவர்ச்சி நடிகையை கற்பழித்தது மற்றும் மிரட்டி தன் கஸ்டடியில் வைத்துக் கொண்டது போன்ற குற்றச்சாட்டுகளுக்காக சென்னை போலீஸாரால் கைது செய்யப்பட்டவர் என்பது நினைவிருக்கலாம்.

பின்னர் வழக்கு, போலீஸ் விசாரணையைத் தவிர்க்க மீண்டும் அந்த நடிகையுடன் சமரசம் பேசவும் முயன்றவர்.

இப்போது அஜீத் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பாகிவிட்டார்.

said...

முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் பேசிய அஜீத், விழாவுக்கு நடிகர் நடிகைகளை மிரட்டிக் கூப்பிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது முதல்வருக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ரஜினி உடனே எழுந்து நின்று அஜீத்துக்கு கைதட்டி தனது பாராட்டைத் தெரிவித்தார்.

ஆனால் இந்த விஷயத்தை முடிந்தவரை அரசியலாக்கும் முயற்சியில் சிலர் இறங்க, ஜாகுவார் தங்கமும் களத்தில் குதித்தார்.

அஜீத்தை ஒருமையில் திட்டியதோடு, அவரை தமிழ் சினிமாவிலிருந்தே ஒழிக்க வேண்டும் என்று பேட்டி கொடுத்தார்.

இந் நிலையில், தனது காரை அஜீத் ரசிகர்கள் நேற்று உடைத்துவிட்டதாக பரபரப்பு கிளப்பினார். அஜீத்தை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

குறிப்பாக அஜீத்தே சம்பவ இடத்து ரசிகர்களுடன் வந்து தாக்குதல் நடத்தியதாக புகார் செய்தார். விசாரித்ததில் இது பொய் என்று தெரிந்து அஜீத் பெயரை புகாரில் சேர்க்க வேண்டாம் என போலீசார் கூறிவிட்டனர்.

ஆனால் ஜாகுவாரின் தொடர் வற்புறுத்தல் மற்றும் இதை ஜாதிப் பிரச்சனையாக்கும் அவரது பேட்டிகள் காரணமாக, அஜீத் மேனேஜர் உள்பட 14 பேர் மீது எப்ஐஆர் போட்டு வழக்குப் பதிவு செய்துள்ளனர் சென்னை மாநகர போலீசார்.

நடிகர் சங்கத்தில் புகார்...

இதற்கிடையே இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஜாகுவார் தங்கம் அஜீத்துக்கு எதிராக நடிகர் சங்கத்தில் புகார் செய்துள்ளதாகக் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், "அஜீத் மேனேஜர் மற்றும் ரசிகர்கள் என்னை ஜாதிப் பெயரைச் சொல்லித் திட்டினர். என் காரை உடைத்தனர். அஜீத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் எந்த ஊரிலும் நடக்க விடமாட்டோம். அவர் மன்னிப்பு கேட்டே தீர வேண்டும். அஜீத்துக்கு சோறு போட்டது தமிழ் நாடு. ஆனால் அவர் நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்கிறார்" என்றார்.

ரஜினி...

அப்போது அஜீத்துக்கு ரஜினி அளித்த ஆதரவு குறித்து கேள்வி எழுப்பினர் நிருபர்கள்.

அதற்கு, "ரஜினி ஒரு ஜோக்கர் மாதிரிதான். அவர் பேச்சையெல்லாம் யார் சீரியஸாக எடுத்துக் கொள்ளப் போகிறார்கள்" என்றார் ஜாகுவார் தங்கம்.

போலீஸ் பாதுகாப்பு:

மேலும் அஜீத் வீட்டை முற்றுகையிடப் போவதாக ஜாகுவார் தங்கம் அறிவித்துள்ளதாலும் தனக்கு ஆதரவாக தனது சமூக பிரமுகர்கள் திரண்டு வருமாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளதாலும் திருவான்மியூரில் உள்ள அஜீத் வீடு, சாலிகிராம அலுவலகம் போன்ற இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அதேபோல கார் தாக்கப்பட்டதால் ஜாகுவார் தங்கத்தின் வீட்டுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

said...

received from a forwarded mail
-----------------------------
நீங்க சொல்றது மக்கள் டி.வி.தானே! மக்கள் செய்தி;மணி பத்துனு நியூஸ் போடுவாங்கள்ல. அதுலதான் கருணாநிதிக்கிட்ட அஜித் மன்னிப்பு கேட்டுறத போட்டு காட்டுனாங்க. அஜித் சாரி...ன்னு சொல்லி இழுத்தார். அதுக்கு கருணாநிதி... அவருக்கே உரிய நக்கல் தொனில ஆ.... ஆ...ன்னு கேட்டார். அப்போ அஜித்... இல்ல ஐயா., அந்த பங்ஷன்ல நான் தெரியாம பேசிட்டேன். சாரி..னனு சொன்னார். அதுக்கு கருணாநிதி... அது என்ன சினிமாவாய்யா... நீ பாட்டுக்கு பேசுற..ன்னு கடுமையா கேட்டார். இத மக்கள் டிவில மட்டும்தான் ‌தெளிவா போட்டுக் காட்டுனாங்க. இன்‌னோரு சேதி. அஜித் மன்னிப்புகேட்கம்போது பத்திரிகைகாரங்க, டிவிகாரங்கல்லாம் அந்த ரூமுக்குள்ள அனுமதிச்சிருக்காரு கருணாநிதி. அதனால அஜித் ரொம்ப தயங்குனபடி மன்னிப்பு கேட்டார். அஜித்த அசிக்கப்படுத்துறக்குத்தான் இந்த ஏற்பாடுல்லாம். by ச. தமிழரசு,சென்னை,India Feb 19 2010 4:38AM IST

said...

தி மு க இருக்கும் வரை தமிழ் நாடு உருப்பட வாய்ப்பே இல்லை. எல்லாம் குடும்பத்தோட காலி பண்ணிட்டு ... சேட்டு வுட்டு சேட்டு .. சேட்டு வுட்டு சேட்டு ... ன்னு கவுண்டமணி ஸ்டைல்ல ஓட வேண்டியதுதான்.

said...

சாதியை இழுக்கும் ஜாக்குவார் தங்கம் , தமிழ் படஉலகில் இதுவரை சாதியோ , மதமோ நுழைந்தது இல்லை முதன் முறையாக இப்போது நுழைக்க பார்க்கிறார் ஜாக்குவார் தங்கம்! இந்த மோசமான முன் உதாரணத்தை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த தமிழ் பட உலகம் முன் வர வேண்டும் .இல்லாவிட்டால் வரும் காலங்களில் ஒவ்வொரு திரைப்பட கலைங்கருக்கு பின்னும் ஒரு சாதி சங்கம் போராட்டம் தொடங்கிவிடும்.

ஜாக்குவார் தங்கம் , அஜித்திற்கு எதிரான சொன்ன சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு அஜித் தன்னை மாற்றி கொள்ள முயற்சியை மேற்கொள்ள வேண்டும் ''அஜீத் தமிழ்நாட்டில் நடித்துக்கொண்டிருக்கிறாய். தமிழ் மக்கள் பணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறாய். தமிழ் சாப்பாட்டை சாப்பிடுகிறாய். இப்படி இருக்கும்போது தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், போராட வரமாட்டாயா?''

said...

கொழலி தன் பதிவுகளுக்கு "வக்கிர" தலைப்பை விடவா அவங்க போடுர ஆடை ஆபாசமா இறுக்கு?

said...

பதிவர்களுக்கு அவல் கிடைத்தாலே விடமாட்டார்கள். கரும்பு கிடைத்திருக்கிறது கேட்கவா வேண்டும்.

said...

குழலி,

// ஜாக்குவார் தங்கம் நாடாராம் அதனால் நாடார் சங்கம் கொதிக்குதாம்... //

இந்த செய்தியை எங்கே பார்த்தீர்கள். சுட்டியை பகிர வேண்டுகிறேன்.

-- வேல் --

said...

//பொற்கோ said...
பதிவர்களுக்கு அவல் கிடைத்தாலே விடமாட்டார்கள். கரும்பு கிடைத்திருக்கிறது கேட்கவா வேண்டும்
//
இதை வெறும் பதிவர்களுக்கு கிடைத்த அவல் என்ற அளவில் சுருக்குவது இந்த பிரச்சினையின் தீவிரத்தை குறைக்கும் செயல், ஒரு பிரபலமான நடிகன் அவன் குரல் மீடியாக்களில் எளிதாக சென்றடையும் அப்படி பட்ட ஒருவரையே மிரட்டுகிறார்கள் என்னும் போது பணம், செல்வாக்கு, பிரபலம் இல்லாத ஒரு சாதாரண குடிமகனுக்கு என்ன நடக்கும்??

மேலும் ஒரு சேடிஸ்ட் மனப்பாண்மையோடு கருணாநிதி மீடியா முன்பு அஜீத்தை மன்னிப்புகேட்கிற நெருக்கடியை உருவாக்கியுள்ளார், அஜீத் என்ன தவறு செய்தார் மன்னிப்பு கேட்க, சரி அப்படி கேட்கும்போதும் கூட மீடியாவை உள்ளே அனுமதித்தது ஜெயலலிதா காலில் விழ வைக்கும் செயலையும் விட்க மோசமான சேடிஸ்ட்தனமானது...

said...

//''அஜீத் தமிழ்நாட்டில் நடித்துக்கொண்டிருக்கிறாய். தமிழ் மக்கள் பணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறாய். தமிழ் சாப்பாட்டை சாப்பிடுகிறாய். இப்படி இருக்கும்போது தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், போராட வரமாட்டாயா?
//
அனானி அவர்களே,அஜீத் ஏன் வரவேண்டும்? எல்லோருக்கும் அரசியல் ஆர்வமும் சமூக அக்கறையும் இருக்க வேண்டிய ஆர்வம் இல்லையே, ஆனால் நிஜமாகவே சுலுக்கெடுக்கப்பட வேண்டியவர்கள், ரசிகர்களை அரசியலுக்காக தூண்டிவிட்டி, தமிழ்மண் தமிழ் வியர்வை, தமிழ்ழ்ரத்தமென பேசிக்கொண்டு கேமராவுக்கு வெளியிலும் அரசியல் பேசிக்கொண்டு தமிழனுக்கு ஒரு பிரச்சினை என்று போராட வரும்போது வராமல் அதை குழப்பும் வேலை செய்யும் ரஜினி போன்றவர்களை தான் சுலுக்கெடுக்க வேண்டும், எதற்க்குமே வராத அஜீத்தை ஏன் நோண்டுகிறார்கள்? அஜீத் எதுக்கும் வரலை இதுக்கும் வரலை...

said...

Enjoy maadi!

said...

http://www.thiruma.in/2010/02/blog-post_20.html
இதில் என் மறுமொழி
-------------------
திருமா அண்ணனுக்கு வணக்கம், விடுதலை சிறுத்தைகள் என்ற அமைப்பின் மீதும் அதன் அரசியல் மீதும் திருமா அண்ணனின் செயல்திறன் மீதும் நம்பிக்கையோடிருக்கும் தம்பிகளில் ஒருவன்...

அஜீத்தை முன்னிறுத்தி கருணாநிதி நடத்திக்கொண்டிருக்கும் கேவல அரசியலில் விசி அமைப்பும் திருமா அண்ணனும் சிக்க வேண்டாம்...

அஜீத் தாங்கள் மிரட்டப்பட்டது என்று கூறியதில் தவறேதுவும் இல்லையே, நடிகர்களை விழாவுக்கு கூப்பிட்டு அவர்களின் முகத்தை படம் பிடித்து அதை அவர்களின் தொலைக்காட்சியில் வெளியிட்டு காசு பார்க்கத்தானே துடிக்கிறார்கள்...

அஜீத்தோ அல்லது மற்ற சில நடிகர் நடிகைகளோ தமிழ் தமிழென்று பேசுவிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி கேமராவுக்கு வெளியேயும் நடித்துக்கொண்டு தமிழனுக்கு ஒரு போராட்டமென்றால் ஓடிப்போய் ஒளிந்து கொள்வதோ அதை கலைப்பதோ இல்லையே, நிதர்சனத்தில் நாம் கண்டிக்க வேண்டியது அம்மாதிரியான நடிகர்களை தான்... அஜீத் போன்றோர் எதற்க்குமே வருவதில்லை, இதற்க்கும் வருவதில்லை....

அஜீத் ஏன் வரவேண்டும்?? எல்லோருக்கும் அரசியல் ஆர்வமும் சமூக அக்கறையும் இருக்க வேண்டிய அவசியம் இல்லையே, அப்படி இல்லாதவர்களை ஏன் வற்புறுத்த வேண்டும். அது மட்டுமின்றி அஜீத் எதிர்ப்பு தெரிவித்ததின் பிண்ணனியாக திரைப்பட கலைநிகழ்ச்சி பாராட்டுவிழாக்களுக்கு வந்தாக வேண்டுமென்று மிரட்டப்படுவதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன... இவர்கள் தொலைக்காட்சியில் போட்டு சம்பாதிக்க ஏன் நடிகர்கள் சிரமப்படவேண்டும்.

ஜாக்குவார் தங்கத்தின் பிண்ணனி என்ன? ஓரிரு ஆண்டுகளுக்கு முன் அனாமிக்க என்ற நடிகையை கற்பழித்ததாக வழக்கு போடப்பட்டுள்ளது... மேலும் அஜீத் அவர்களின் ரசிகர்களால் தாக்கப்பட்டதாக சொல்வதில் அவர் ஒரு கதை சொல்கிறார் அவர் பையன் ஒரு கதை சொல்கிறார் அவர் மனைவி வேறொன்று சொல்கிறார் டிவிக்களில்.

அழித்துவிடுவோம் என்று மிரட்டுகிறார் வி.சி.குகநாதன், கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும் ஏன்கிறார்... இவர்கள் டிவியில் முகத்தை காண்பித்து காசு சம்பாதிக்க நடிகர்கள் ஏன் கட்டுப்படவேண்டும்? அத்துமீறு அடங்கமறு என்று அதிகாரத்துவத்துக்கு எதிராக லேசாக அஜீத் முனகியதற்க்கே இத்தனை சலசலப்புகள்...இத்தனைக்கு அஜீத் பொதுநலமாக பேசவில்லை சுயநலமாக தான் பாதிக்கப்படுவதை தான் பேசியிருக்கார், ஒரு சொறிநாயை கூட யாரேனும் கல்லெறிந்தால் திரும்ப குலைக்கதான் செய்யும், அப்படியான ஒரு லேசான எதிர்ப்பு குரல்தான் அஜீத்தின் அந்த முனகல். ஆனால் அதை தமிழர் போராட்டத்துக்கு எதிராக அஜீத் கூறியதாகவும் ஜாதி பிரச்சினையாகவும் ஆக்கும் சில்லறை அரசியலுக்கு விடுதலை சிறுத்தைகள் அமைப்பு பலியாகக்கூடாது...

நான் எந்த திரைப்பட நடிகனின் ரசிகனுமல்ல, இன்னமும் கேட்டால் நடிகர்களின் நடிப்பை தாண்டிய கேவலமான அரசியலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவிப்பவன்.

மேலும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு இம்மாதிரியான சில்லறை விசயங்களில் கவனத்தை சிதறவிடாமல் ஒடுக்கப்பட்ட நம் மக்களின் எழுச்சிக்கும் அரசியலுக்கும் தொடர்ச்சியாக குரல் எழுப்ப வேண்டுகிறேன்.

இந்த தளத்தின் நிர்வாகி அவர்களே, இதை திருமா அண்ணனின் கவனத்திற்க்கு கொண்டு செல்லுங்கள்

அன்புடன்
குழலி
சிங்கப்பூர்

said...

ஒரு தொழிலாளர் சங்கம் ஒரு போராட்டத்தை நடாத்துகிறது. அஃதில் உள்ள உறுப்பினர் ஒவ்வொருவரும் கலந்து கொள்ள்வேண்டும். இயலவில்லையென்றால், தலைவரிடம் முன்னனுமதி பெறவேண்டும்

எடுத்துக்கொண்ட போராட்டத்தின் நோக்கம் சரியில்லை; என்று சொல்வதை சங்கக்கூட்டத்தில் சொல்லலாம். அங்கு அவர் கருத்து உதாசீனப்படுத்தப்பட்டால், உறுப்பினராக தொடர்ந்து இருக்கும் பட்சத்தில், போராட்டத்தில் கலந்து கொள்ளத்தான் வேண்டும். முடியாவிட்டால் சங்கத்திலிருந்து விலகிவிட வேண்டும்.

நடிகர் சங்கத்தில் உறுப்பினர் இல்லயென்றால், அஜித்துக்கு எந்தவுதவியும் சங்கத்திலிருந்து கிடைக்காது.

சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. அஜித்தை மட்டும்வைத்து ஒரு படம் பண்ணமுடியாது. அங்கு எல்லாரும் பெப்சி உறுப்பினர்களாக இருந்து, அவர்கள் சங்கம் அஜித்தின் படத்திற்கு வேலை பார்க்கக்கூடாது என்றால், அஜித்தின் நிலை என்ன?

-----------------------------

அவர் தேமேவென தன் வழியில் போனால் என்ன தப்பு என்று குழலி கேட்டதற்கு பதில்தான் மேலே எழுதியது

said...

//தமிழ் படஉலகில் இதுவரை சாதியோ , மதமோ நுழைந்தது இல்லை//

எப்படி சொல்கிறார்?

அக்காலத்திலிருந்தே சாதி இருக்கிறது. தமிழ் திரைப்பட உலகத்தில் பார்ப்பன்ர்கள் ஆதிக்கம் முதலில் இருந்தது. அனைத்து சிறப்புக்கலைஞர்களும் அவர்களே. இசையப்பாளர்கள், நடிக, நடிகைகள், மேனேஜர்கள் என்று. கீழ்த்தட்டு தொழிலாளர்களில் ஆந்திரர்கள், மலையாளிகள் ஆதிக்கம்.

எண்டிஆர், பத்மாலயா ஸ்டுடியோ ஹைதராபாத்தில் ஆரம்பித்தவுடன் ஆந்திர தொழிலாளிகள் அங்கு சென்றவுடன், தமிழ், மலையாளத்தொழிலாளிகள் இங்கு தேறினர்.

பார்ப்பன் ஆதிக்கம் தானேகாவே தோன்றியது. காரணம்,அக்காலத்தில் திரைப்படத்தொழில் கேவலமான ஒன்றாக எடுத்துக்கொள்ளப்பட்டதால் மற்றவினத்துப்பெண்கள் நடிகைகளாக்க தடுக்கப்பட்டார்கள். பார்ப்பன்ர்களிடையேயும் திரைப்படத்தொழிலில் இருந்த குடும்பன்கள் கேவலமாக பார்க்கப்பட்டன.

சாதிகள் வந்த்து, மற்றவர்கள் நுழையாஆரம்பித்தவுடந்தான்.

நடிகர் சங்க்த்தேர்தலில் பார்ப்பன்ர்-பார்ப்பன்ரல்லாதோர், ஆந்திரர்- தமிழர் என்றெல்லாம் உண்டு.

விசு தலைவர் பதவிக்கு நின்றபோது, எஸ்.வி.சேகர், சக்தி, போன்ற பார்ப்பனர்கள் வேலை செய்தார்கள். ஆனால் ஜெயிக்கமுடியவில்லை.

தயாரிப்பாளர் சங்கத்தில், ஆந்திரர்-தமிழர் என்று உண்டு.

ராம நாராயணன் vs கேயார்.

கேயாருக்கு ஏன் ஆதரவு பண்ணுகிறீர்கள் இராதிகா? அவர் ஒரு ஆந்திரர் என்று கேட்டதற்கு, இராதிகா சொன்ன பதில்: என் தாய் மொழி தெலுங்கு என்றார்.

ரவிகுமார் படத்தில், ஏகப்பட்ட மலையாளிகள் வேலை செய்வார்கள். கமல் பார்ப்பன்ர்களைத்தூக்கி விடுவார். இப்படியெல்லாம் சாதிப்பற்று உண்டு.

விசுவனாதன் என்ற பார்ப்பனர் இசையுலகில் கோலோச்சியிருந்துகொண்டிருந்த போது, இளையராஜா என்ற பறையர் வந்தவுடன், மக்கள் சொன்னது:

அப்பாடா, இசை எங்களுக்கே வரும் என்று இனி பார்ப்பன்ர்கள் சொல்ல் மாட்டார்கள்.

அஜித் தமிழே சரியாக பேசத்தெரியாதவர். தமிழர்கள் அதைப்பொறுத்துக்கொண்டு மேலே கொண்டுவந்தார்கள்.

அவரின் அப்பா பாலக்காட்டு ஐயர். அம்மா பெங்காலி.

இவருக்கு தமிழ், தமிழ்நாடு, என்றெல்லாம் பற்றுக்கிடையாது. இருந்தால் வெளிப்பட்டிருக்கும்

தமிழச்சி ஒரு எருமை என்று சொன்ன மற்றொரு பாலக்காட்டு ஐயர் ஜெயராம். அவர்கள் நம்மை மட்டமாகத்தான் பார்ப்பார்கள்.

பணம்தான் பிரதானம்.

said...

//ஒரு தொழிலாளர் சங்கம் ஒரு போராட்டத்தை நடாத்துகிறது. அஃதில் உள்ள உறுப்பினர் ஒவ்வொருவரும் கலந்து கொள்ள்வேண்டும். இயலவில்லையென்றால், தலைவரிடம் முன்னனுமதி பெறவேண்டும்
//
அஜீத் பெஃப்சி Vs படைப்பாளிகள் சங்க பிரச்சினையின் போது அஜீத் தொழிலாளிகள் பக்கம் நின்று நிறைய பிரச்சினைகள் வலுவான டைரக்டர்களிடம் பிரச்சினைகளை சந்தித்தார்... இது போரட்டம் கூட இல்லையே இவனுங்க வாராவாரம் பாராட்டுவிழா நடத்துவானுங்க அதை டிவியில் போட்டு சம்பாதிப்பானுங்க இதுக்கு ஏன் நடிகர்களை தொந்தரவு செய்றானுங்க...

//எடுத்துக்கொண்ட போராட்டத்தின் நோக்கம் சரியில்லை; என்று சொல்வதை சங்கக்கூட்டத்தில் சொல்லலாம். அங்கு அவர் கருத்து உதாசீனப்படுத்தப்பட்டால், உறுப்பினராக தொடர்ந்து இருக்கும் பட்சத்தில், போராட்டத்தில் கலந்து கொள்ளத்தான் வேண்டும். முடியாவிட்டால் சங்கத்திலிருந்து விலகிவிட வேண்டும்.
//
யார் பெயரை சொல்லி மிரட்டுகிறார்களோ அவர்களிடம்தானே சொல்ல முடியும் அதான் சொன்னார்...

இவர்கள் தாராளமாக அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு "மாமா" வேலை பார்க்கட்டும் ஆனால் அதற்காக வர விருப்பமில்லாதவர்களை ஏன் தொந்தரவு செய்கிறார்கள்...

மேலும் சாதி தொடர்பாக சொல்வதெல்லாம் ஓகே, ஆனால் அஜீத் பிரச்சினையை சாதி பிரச்சினையாக்குவதோ அல்லது தமிழ் மலையாளி பிரச்சினையாக்குவதோ பார்ப்பான் பிரச்சினையாக திரிப்பதோ கேவலத்திலும் படு கேவலமான செயல்... இதனால் ஏற்படும் பாதிப்பு என்ன தெரியுமா? நாளை உண்மையாகவே ஒரு பார்ப்பன பிரச்சினையோ சாதி பிரச்சினையோ மொழி பிரச்சினையோ திரிப்பாகவே பார்க்கப்படும் நிலையாகும் அதனால் இதெல்லாம் எப்போது எடுக்கப்பட வேண்டுமெ அப்போது மட்டும் எடுக்கப்பட வேண்டும்

said...

//இது போரட்டம் கூட இல்லையே இவனுங்க வாராவாரம் பாராட்டுவிழா நடத்துவானுங்க //

தீபாவளியன்றோ அல்லது ஆண்டுப்பிறப்ப்னறோ, மேலதிகாரியின் வீட்டிற்கு ப்ரிசுமழை பொழியும். இதன் பொருளை அவரின் அன்புகாட்டி பண்ணுகிறார்கள் என்று எடுத்துக்கொள்வீர்களென்றால் நீங்கள் உலகம் தெரியாதவர். எல்லாம் ஒரு quid pro quoதான்.

அதைப்போலத்தான் பாராட்டுவிழாக்களும். எதிர்பார்த்த்துச்செய்வது.

பலன் கிடைக்கிறது. செய்கிறார்கள். அதை அஜித் தன் சுயகவுரத்திற்காக தடுக்க முயற்சிக்கிறார்.

ஒருமனிதனின் சுயகவுரவும் உங்களுக்கு முக்கியமா? பலரது வாழ்க்கை உங்களுக்கு முக்கியமா?

said...

//கேவலத்திலும் படு கேவலமான செயல்... இதனால் //

பிறகு எங்களுக்கு நல்ல செயலாகத் தெரியுமாக்கும்?

தோழரே, உலக நடப்பைப் புரிந்துகொள்ளுங்கள்.

எங்கும் எதிலும் சாதிகள் தமிழகத்தில் உண்டு.

அதை இல்லையென்றார் ஒரு பின்னூட்டக்காரர். அது உண்டு என்கிறேன் நான்.

பணம், பதவி, புகழ் - என்றெல்லாம் வரும் போது சாதிகளைத்தூண்டிவிட்டு அதை அடைய முயற்சிப்பது ஒரு வகை.

தெலுங்கர்-மலையாளி-கன்னடியர்-தமிழ் என்று போராட்ட்மே உண்டு. பார்ப்பனர் vs பார்ப்பனரல்லாதோர் என்று எப்போதும் உண்டு. உடனே இது பார்ப்பன் எதிர்ப்பு பிரச்சாரம் என்று நினைத்து விடாதீர். அவர்கள் அவர்கள் ஆட்களைத்தான் தூக்கிவிடுவார்கள் (வெளியேயிருந்து பார்த்தால் உங்களுக்குத் தெரியாது)

இளையராஜா மிகவும் பல எதிர்ப்புக்களையும் அவமானங்களையும் தாண்டித்தான் வந்தார்.

’கேவலமா..கேவல்மான் செயலா’ என்பது கேள்வியில்லை இங்கே.

இருக்கிறதா இல்லையா? என்பதுதான் கேள்வி.

எப்போதும் இருக்கும்.

மலையாளிகளுக்கு மலையாளிப்பற்று உண்டு என்று நான் உங்களுக்குச் சொல்லித்தெரிய வேண்டுமா?

said...

http://thatstamil.oneindia.in/movies/news/2010/02/no-need-apology-i-have-not-said.html

சென்னை: எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் யாரிடமும் மன்னிப்புக் கேட்க மாட்டேன். நான் தவறாக எதுவும் பேசவில்லை. தேவைப்பட்டால் நடிப்புத் தொழிலைவிட்டே விலகுகிறேன்... மீண்டும் ரேஸுக்குப் போகிறேன்," என்று அதிரடியாக கூறி விட்டார் நடிகர் அஜீத் குமார்.

முதல்வர் கருணாநிதியை அஜீத் சந்திப்பதற்கு முன்பு டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு ஒரு சிறப்புப் பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது..

"முதல்வருக்கு நடந்த விழா மேடையில் நான் பேசியது எழுதித் தயாரிக்கப்பட்ட பேச்சல்ல. அந்த நேரத்தில் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசினேன். என் இதயத்தின் ஆழத்திலிருந்து வந்த பேச்சு அது. அதில் எந்தத் தவறும் இல்லை. உண்மைகளைப் பேசினேன்... என்ன நடந்ததோ, அதைத்தான் சொன்னேன்.

நடிகர்களை, விளையாட்டு வீரர்களை உருவாக்கியது சமூகம்தானே... அவர்களுக்கு சமூகப் பொறுப்பு வேண்டாமா?

நடிகர்களுக்கும் பிரபலங்களுக்கும் மட்டும்தான் சமூகப் பொறுப்பு இருக்க வேண்டும் என்பதே விவாதத்துக்குரிய ஒன்று. ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூகப் பொறுப்பு இருக்கிறது. ஆனால் அரசியல் என்று வரும்போது, நடிகர்கள் விசேஷ கவனம் பெறுகிறார்கள். பல சமையல்காரர்கள் சேர்ந்து விருந்தைக் கெடுத்த மாதிரி ஆகிவிடுகிறது. என்னைப் பொறுத்தவரை, அரசியல் விவகாரத்தை அரசியல்வாதிகளும் அதற்கான கட்சிகளும் பார்த்துக் கொள்ளட்டும். எனக்கு இந்த அரசியல் முறை மீது நம்பிக்கை உண்டு. நடிகர்களுடன் அரசியல் தலைவர்கள் சுமுகமாக இருந்தாலே போதும்.

ஏன் இங்கு ஒரு நடிகரால் சுதந்திரமாக கருத்து சொல்ல முடிவதில்லை?

இங்கே எல்லா பிரச்சினைகளைப் பற்றி பேசவும், தீர்க்கவும் நடிகர்கள் வேண்டும் என்கிறது ஒரு கூட்டம். அதேநேரம் நடிகனுக்கு சமூகப் பிரச்சினைகளில் என்ன வேலை... அவன் வேலையை மட்டும் பார்க்கட்டும் என்று கேட்கவும் ஒரு கூட்டம் இருக்கிறது. இதற்கு இடையில் மாட்டிக் கொண்டு விழிப்பது நாங்கள்தான்.

யாராவது ஒரு நடிகர் பெரிய முயற்சி செய்து அரசியலுக்குள் நுழைந்தால் உடனே அவரைத் தடுக்கப் பார்க்கிறார்கள், தாறுமாறாகத் திட்டுகிறார்கள். ஒரு நடிகன் வாழும் மாநிலத்தின் அரசியலில் பங்கெடுக்கக் கூடாது என்று சொல்பவர்களுக்கு, அவனை சமூகப் பிரச்சினைகளில் ஈடுபட வேண்டும் என்று சொல்லவும் எந்த உரிமையும் இல்லை. இதில் அவனது பிறப்பு, இனம் போன்றவை குறித்த கேள்வி எதற்கு வருகிறது? ஒரு நடிகர் பல லட்சம் மக்கள் மனதில் இடம் பிடித்த பிறகும், அந்த மக்கள் அவனது பேச்சைக் கேட்டு பின்னால் வரத் தயாராக உள்ள நிலையிலும் அரசியலுக்கு வரக்கூடாது என்று சிலர் எதிர்ப்பு காட்டுவது என்ன நியாயம்?

பிறப்பு, இனம்தான் பிரச்சினையாக்கப்படுகிறதா இங்கே?

அது இங்கு மட்டுமல்ல... எல்லா இடத்திலும்தான். ஒரு சினிமா ரசிகன் டிக்கெட் வாங்கி படம் பார்க்கச் செல்லும்போது அல்லது கிரிக்கெட் பார்க்க செல்லும்போது, தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்து பார்க்கும் ரசிகன் என்ன ஜாதி, மதம், நிறம், இனம் என்றெல்லாம் பார்ப்பதில்லை. அதுதான் கலையின் சிறப்பு. அந்தக் கலைதான் இந்த மொத்த தேசத்தையும் ஒரு கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஆனால் திரைக்கு வெளியே அதே கலைக்கு ஜாதி, இன வர்ணம் பூசுகிறார்கள். எந்த நடிகரின் ரசிகர் கூட்டத்தை எடுத்துக் கொண்டாலும், அவர்கள் குறிப்பிட்ட இனம், மொழிக்கு மட்டும் சொந்தக்காரராக இருக்க மாட்டார்கள். விளையாட்டு, சினிமா போன்ற கலையால் மட்டுமே ஒன்றுபட்டிருப்பதைப் பார்க்கலாம்.

நக்சல் இயக்கத்தவராக, மனித வெடிகுண்டு போன்ற பாத்திரங்களில் நடிப்பீர்களா?

said...

கடந்த சில நாட்களாக நடப்பதைப் பார்க்கும்போது, எனக்கு மீண்டும் காமிராவுக்கு முன்னால் நிற்கவே பிடிக்கவில்லை. ஒரு நடிகனுக்கு இங்கே படைப்புச் சுதந்திரமே இல்லை. ஒரு நடிகன் திரையில் புகைப்பிடிப்பது போன்ற காட்சியில் நடித்தால் அது இளம் தலைமுறையை பாதிக்கும் என்கிறார்கள். ஆனால் அதே நடிகன் அரசியலுக்குள் நுழைந்து இளம் தலைமுறையை தன்வசப்படுத்த முயற்சித்தால், 'நடிகனுக்கு இங்கே என்ன வேலை?' என்கிறார்கள்.

ஆனால் நீங்கள் 50 வது படம் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளீர்களே...

உண்மைதான். தயாநிதி அழகிரி தயாரிக்கும் படம் இது. கண்டிப்பாக பண்ணணும்தான். ஆனால், எப்போது எனது பிறப்பும், இனம் குறித்த கேள்விகளும் இங்கே எழுந்துவிட்டதோ, இனி நடிக்கணுமா என்றுதான் தோன்றுகிறது. மீண்டும் எனது பார்முலா 2 கார் பந்தயங்களில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தரவே நான் விரும்புகிறேன்.

பார்முலா 2 பிரிவில் எனது நுழைவு அனுமதிக்கப்பட்ட ஒன்று. ஐரோப்பாவில் ஏப்ரல் - அக்டோபர் மாதங்களில் மோட்டார் ரேஸ் நடத்தும் 10 நாடுகளில் 8-ல் என்னால் நிச்சயம் பங்கேற்க முடியும்.

நாட்டின் 10 முன்னணி ரேஸ் வீரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதில் இந்த மாநிலம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். நரேன் கார்த்திகேயன், கருண் சந்தோக் இருவரும் இப்போது பார்முலா 1 பந்தயங்களில் பங்கேற்பவர்கள். அர்மான் இப்ராகிம், பர்திவா சுரேஷ்வரன், நான், அஸ்வின் சுந்தர் போன்றவர்கள் வேறு பிரிவுகளில் பங்கேற்கும் தகுதி நிலையை அடைந்தவர்கள். பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளோம்.

பைக் ரேஸிலும் நிறைய வீரர்கள் உள்ளார்கள் இங்கு. இதற்கு நல்ல ஸ்பான்ஸர்ஷிப்பும் கிடைக்கிறது. எதிர்காலத்தில் வெளிநாடுகளில் உள்ளது போல, ஸ்ட்ரீட் மோட்டார் ஸ்போர்ட் போட்டிகளை நடத்தவும் திட்டமிருக்கிறது..."

said...

தமிழ்நாட்டில் முதுகெலும்புடன் இருப்பதே பெரும் தவறு! அதுவும் முத்தமிழ் அறிஞர் முன்பு முதுகெலும்புடன் இருப்பது பஞ்சமா பாதகம். மனதில் இருப்பதை வெளிப்படையாக பேசக்கூட அனுமதிக்காத சமூகமாக தரமிழந்து கொண்டிருக்கிறது தமிழகம். இந்த விசயத்தில் அண்ணன் திருமாவளவனின் தலையீடு தேவையில்லாதது மட்டுமல்ல அபத்தமானதும் கூட. கலைஞரின் சுய அரிப்புக்கு சொறிவதை விட வேறு பல பணிகள் அவருக்காக காத்துக்கொண்டு இருக்கிறது. அரசின் ஆதரவோடு நடிகர்கள் மிரட்டப்படுகிறார்கள் என்பதிலிருந்தே பொதுமக்களின் நிலை என்னவென்பதைப் புரிந்து கொள்ளலாம். மூன்று மணி நேரம் விழா எடுத்த்து அதை ஏழு மணி நேரம் ஒளிபரப்பி காசு பார்க்கும் ஈனர்களுக்கு பல்லக்குத் தூக்கும் எடுபிடி குகநாதன் தன் பேரன் சம்பாதிக்க அஜித் நடிக்க ஒப்பந்தம் பண்ணி இருக்காரே அந்த படத்தில் நடிக்க ரெட் கார்ட் போட சொல்லுங்கள் பார்ப்போம்?

மானட மயிலாட மாராட்டம் பார்த்து விட்டு முல்லைப் பெரியாரை மறந்து போயாச்சு! தமிழகத்தை பிரதிநிதித்துவப் படுத்திய வழக்கறிஞரை புதிய அணைகட்டுவதில் தமிழகத்துக்கு ஆட்சேபனை இல்லை என்கிறான் வழக்காடு மன்றத்தில்! அதையெல்லாம் கவனிக்க நேரமில்லாது திரைத்துறைக்கான கட்டப்பஞ்சாயத்து நாட்டாமையாகவே நம் நாடாள்பவர் இருப்பதிலே பூரித்துப் போகிறார் முதல்வர்! துத்தேறி

said...

//வேற எதுக்கு இருக்கு சீமான்கனியின் ”நாம் அடியாட்கள்” இயக்கம்? //

அதானே அடிவருடாமா!

said...

////வேற எதுக்கு இருக்கு சீமான்கனியின் ”நாம் அடியாட்கள்” இயக்கம்? //

அதானே அடிவருடாமா! //

இது தானே அவங்க பொழப்பே..

said...

அஜீத் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் ரஜினிக்கு கண்டனங்கள் தெரிவித்து உள்ளது திரை உலக கூட்டு சங்கஙள். என்ன செய்ய போகிறார்களோ அஜீத் மற்றும் ரஜினி. இருவரையும் நன்றாகவே கார்னர் செய்திருக்கிறார்கள் வி.சி அண்ட் கோ. கோ நடிகர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லா நடிகர்களுக்காகதானே அஜீத் பேசினார். அப்போது எல்லோரும் சந்தோஷமாகவும் உள்ளூர அதரித்து விட்டு இப்போது எல்லோரும் ஒதுங்குவது யாருக்கும் முதுகெலுபு இல்லையோ என்று தோன்றுகிறது.

said...

http://thatstamil.oneindia.in/movies/specials/2010/02/24-jaguar-starts-his-next-stunt.html

ஜாகுவாரின் அடுத்த ஸ்டன்ட்!

என் மகனைக் கடத்தப் போவதாக அஜீத் ரசிகர்கள் மிரட்டுகிறார்கள் என்ற புதிய புகாரோடு மீண்டும் பரபரப்பு செய்திப் பக்கத்தை ஆக்கிரமித்துள்ளார் ஜாகுவார் தங்கம். இதுகுறித்து எம்ஜிஆர் நகர் போலீசில் புகாரும் தந்துள்ளார்.

தமிழ் திரை உலகம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் அஜீத் விழாக்களுக்கு வரும்படி நடிகர்களை மிரட்டுகிறார்கள் என்று கூறியதும், அதற்கு ரஜினி ஸ்பாட்டிலேயே பாராட்டு தெரிவித்ததும், அதைக் கண்டித்து தாறுமாறாக பேட்டிகள் கொடுக்கு ஜாகுவார் பாப்புலர் ஆக முயற்சித்ததும் தெரிந்ததே.

இவரது பேட்டியால் ஆத்திரம் அடைந்த ரஜினி, அஜீத் ரசிகர்கள் ஜாக்குவார் தங்கத்தின் வீட்டில் கல்வீசித் தாக்கியதாக அவர் புகார் கொடுத்த வண்ணம் உள்ளார். போலீசில் கொடுத்தது போக, இப்போது அஜீத்தை கைது செய்யக் கோரி நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள ஜாக்குவார் தங்கத்தின் வீட்டுக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளதாம். இதில் அவரது மகன் விஜய சிரஞ்சீவியைக் கடத்தப் போவதாக அஜீத் ரசிகர் ஒருவர் மிரட்டியுள்ளாராம்.

ஜெயந்தன் நாயர், சென்னை-18 என்ற முகவரியில் இருந்து இந்தக் கடிதம் வந்துள்ளதாம்.

இந்தக் கடிதத்தில் இப்படி உள்ளதாம்:

பகவதி அம்மன் கோவில் துணை.

ஜாக்குவார் தனது கவனத்துக்கு...

டேய், ஜாக்குவார் தங்கம், எங்க தலகிட்ட மோதினா, சென்னையில் நீ இருக்க முடியாது. எச்சரிக்கை. உனது மகனை கடத்தி.... செய்து விடுவோம். அடுத்து தல தாண்டா முதல்வர். எங்கள் அல்டிமேட் ஸ்டாரிடம் நீ சரியாக மாட்டிக் கொண்டாய்.

இனி, நீயும், சரத்குமாரும் நெல்லைக்கு செல்ல வேண்டியதுதான். உன் கதை முடிந்தது என்று நினைத்துக் கொள். இனி உன் குடும்பம்?" என்று உள்ளதாம்.

இதுகுறித்து ஜாக்குவார் தங்கம் எம்.ஜி.ஆர். நகர் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் குணசேகரன் விசாரணை நடத்தி வருகிறார். மிரட்டல் கடிதம் அனுப்பிய அஜீத் ரசிகரை பிடிக்க தேடுதல் வேட்டையை போலீசார் துரிதப்படுத்தியுள்ளனர்.

ஜாகுவாரின் மகன் விஜய சிரஞ்சீவி, 'சூர்யா' என்ற படத்தில் ஹீரோவாக நடித்ததும், அந்தப் படம் தியேட்டர்களுக்கு போன வேகத்தை விட திரும்பி வந்த வேகம் மிக அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது

said...

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=27679
திரை உலகினர் கட்டுப்பாடு காக்க வேண்டும்: அஜீத் பிரச்சனை: கலைஞர் விளக்கம்


"இனிமேல் எவர் ஒருவரும் கலை உலகில் சிறுகலகமும் விளைவித்திட முடியாது என்று திரைஉலகினர் கட்டுப்பாடு காக்க வேண்டும்'' என முதல் அமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்.



அழகான குழந்தையை மேலும் அலங்கரித்து பள்ளிக்கு அனுப்பும் தாய் அதன் கன்னத்தில் ஒரு சிறிய கருப்புப்பொட்டு வைத்து அனுப்புவதை பார்க்கிறோமே அதைப்போன்றதொரு பொட்டு அந்த விழாவில் வைக்கப்பட்டதை பெரிதுபடுத்தி அந்தப்பொட்டின் வண்ணத்தை முகம் முழுதும் பூசிக்கொள்ளும் புரியாத குழந்தையைப்போல ஒரு நிகழ்ச்சி அமைந்து விட்டது உண்மைதான்.



இது குறித்து முதல் அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:



தீராத பிரச்சினையாக திரையுலகில் இருந்து வரும் பல பிரச்சினைகளுக்கு அடித்தளமாக இருப்பவை அசூயை ஏமாற்றம் அகந்தை எனும் தீமைகளாகும். திரையுலகத்தினர் பொதுவாக கலைஞர்கள், தொழிலாளர்கள் என்மீது என்தலைமையில் உள்ள அரசின் மீது நம்பிக்கை கொண்டு நன்றி காட்டும் உணர்வுடன் விழாக்கள் நடத்துவதுண்டு. அரசு அவையில் நான் அமராமல் இருந்த காலத்திலே கூட என் கலைவாழ்வுக்கு பொன்விழா பவளவிழா என்று விழாக்கள் எடுத்து எனக்கு ஊக்கமளித்திருக்கிறார்கள்.


கலை உலகத்தில் ஒரு காலும், அரசியலில் ஒரு காலும் என்று என் இரண்டு கால்களையுமே சறுக்கல் வராமல் அழுத்தமாக பதியவைத்து, அதே வேளையில் கலையுலகில் நலிந்தோர்க்கு நலநிதி வழங்கியும் அரசு பொறுப்பேற்றிருந்த காலங்களில் கலையுலகத்தினரின் கஷ்டநஷ்டங்களை புரிந்து கொண்டு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றியும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரியே இல்லாத நிலைமையை உருவாக்கியும் படப்பிடிப்பு கட்டண சலுகை போன்று பல்வேறு விதமாக நன்மைகளை அவர்கள் மகிழத்தக்க வண்ணம் வழங்கியும் திரைப்படத்துறையினர் நல வாரியம்'' அமைத்தும் அவர்களில் ஒருவனாக நான் விளங்கிக்கொண்டிருப்பதால் தான் பெற்ற குழந்தைகளில் ஒன்றுக்கு விழா நடத்துவது போலவும் தன்னை காத்திடும் கரங்களுக்கு கணையாழி அணிவிப்பது போலவும் நான் எங்கிருந்தாலும் அதாவது அரசுப்பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரு கலைஞன் என்ற முறையில் இரண்டையும் ஒன்றாகக்கருதி கலையுலக நண்பர்கள் எனக்கு எத்தனையோ விழாக்களை எடுத்துள்ளனர்.








இப்போது எனக்கு கலையுலகத்தினர் எடுத்து நன்றி தெரிவிக்கும்விழா கூட என்னை விளம்பரப்படுத்துவதற்காகவோ அல்லது யாரும் தங்களை விளம்பரப்படுத்தி கொள்வதற்காகவோ எடுக்கப்பட்ட விழா அல்ல. "நன்றி மறப்பது நன்றன்று'' எனும் வள்ளுவரின் குறள் மொழிப்படி நடந்து கொள்வதற்காக நமது கலைஞர்கள், திரையுலகத் தொழிலாளர்கள் இணைந்து நடத்திய விழா தான்!

"எல்லா முதல் அமைச்சர்களுக்கும் இப்படித்தான் விழா எடுப்பார்கள்'' என்று வக்கணையோடு சொல்லி எரிச்சலை தணித்துக்கொள்வோர் சிலர் உண்டு. அந்த வக்கணையாக இல்லாமல் இந்த விழா எல்லா முதல் அமைச்சர்களுக்கும் எடுக்கின்ற விழா வரிசையிலே ஒன்றல்ல அதாவது பத்தோடு பதினொன்று அல்ல! திரையுலகத்தினருக்கு குறிப்பாக கலைப்பணியாற்றும் நண்பர்களுக்கு தோழர்களுக்கு அவர்தம் குடும்பங்கள் குறைவின்றி வாழ்வதற்கு அவர்கள் விடுத்த கோரிக்கையையேற்று 90 ஏக்கர் அரசு நிலத்தை முறைப்படி அவர்களுக்கு வழங்கியதற்காக அவர்கள் காட்டிய நன்றிப்பெருக்கு அந்த விழா!


சென்னை மாநகரத்தில் ஒரு பகுதியில் 90 ஏக்கர் நிலம் வழங்குவது என்பது எவ்வளவு பெரிய காரியம் என்பதை உணர்ந்து மகிழ்ந்து உணர்ச்சியுள்ளவர்கள் அதனைக்காட்டி கொள்ள எடுத்த விழாதான் அந்த நன்றி தெரிவிக்கும் விழா.

said...

அகில இந்தியப்புகழ் வாய்ந்த கலைஞர் பெருந்தகை அமிதாப்பச்சன் நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலைஞானி கமலஹாசன் இவர்கள் எல்லாம் வாழ்த்துரைத்து அள்ளித்தெளித்த அன்பு மலர்களுக்கிடையே அஜித் எனும் தும்பை மலரும் என் மேல் விழுந்து அது மாசற்ற மலர் எனினும் அந்த மன்றத்தில் எனக்கு நடத்திய விழாவிற்கு எதிராக விழுந்த மலரோ என்ற ஐயப்பாட்டை எழுப்பி அதைத்தொடர்ந்து எழுந்த கையொலிகள், பேச்சொலிகள் இவற்றையெல்லாம் "இதுதான் சமயம்'' என்று சிலர் எனக்கு நடந்த விழாவினை திசை திருப்ப முயன்று "இருக்கவே இருக்கின்றனவே சில பத்திரிகைகள் அவைகள் அதனைப் பூதாகரமாக உருவாக்கிட முனைந்தபோது அதனை மேடையேற விடாமல் ஒத்திகையிலேயே ஒரு வழி செய்து, முற்றுப்புள்ளி வைத்திடும் முயற்சியாக அஜித் என்னை சந்தித்து விளக்கமளித்தார். "நான் குறிப்பிட்டது இந்த விழா பற்றியல்ல இதற்கு முன்பு நடைபெற்ற சில நிகழ்வுகளில் கலையுலகில் ஏற்பட்ட கசப்பு பற்றி தான் குறிப்பிட்டதாக'' அவர் விளக்கம் அளித்ததும் இதனை பெரிதுபடுத்தக்கூடாது என்று பெருந்தன்மை பூண்டு ரஜினி போன்றவர்கள் அமைதி காத்ததும் திரையுலக தொழிலாளர்களும், கலைஞர்களும் அதற்கு ஒத்துழைப்பு நல்கியதும் பெரிதாக வெடிக்கப் போகிறது என்று எதிர்பார்த்த வாணம் புஸ்வாணமாகி விட்ட கதையாயிற்று! கலாம் விளையும் கலையுலகத்தில் அதற்கு இந்த விழாவை ஒரு காரணம் ஆக்கலாம் என்று கருதியோர்தாம் கண்ட கனவு கலைந்ததே என்று கை பிசைந்து நிற்கின்றனர்.


உடன்பிறப்பே, இந்த கடிதத்தின் நோக்கத்தையும் இதில் இடம்பெற்றுள்ள கருத்துக்களையும் விழாவிலே கலந்து கொண்டோர் மாத்திரமல்ல; விழாவினை முன்நின்று நடத்திய ராமநாராயணன், குகநாதன், தம்பிகள் சரத்குமார், ராதாரவி ஆகியோரும், அவர்களோடு உடனிருந்து உழைத்தவர்களும் உணர்ந்து இனி எவர் ஒருவரும் கலையுலகில் சிறு கலாம் விளைவித்திடவும் முடியாது என்று கட்டுப்பாடு காப்பார்களேயானால் அது அவர்கள் நடத்திய விழா தந்த மகிழ்ச்சியை விட பெருமகிழ்ச்சியாக எனக்கு அமையும் என்பதை அவர்களே அறிவார்கள்!


இவ்வாறு முதல் அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.

said...

http://thatstamil.oneindia.in/movies/news/2010/02/issues-with-rajini-ajith-solved-s.html

ரஜினி-அஜீத்துடன் மனக்கசப்பு தீர்ந்தது!-விசி குகநாதன்

ரஜினி-அஜீத் துடனான பிரச்சினை தீர்ந்தது என்று பெப்ஸி தலைவர் விசி குகநாதன் தெரிவித்துள்ளார்.

திரையுலகம் சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், பல்வேறு விழாக்களில் பங்கேற்க வேண்டுமென நடிகர் நடிகையர் மிரட்டப்படுகிறார்கள் என நடிகர் அஜீத் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

இதற்கு ரஜினி ஆதரவு தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

ரஜினி, அஜீத்தை பெப்சி, திரைப்பட விநியோகஸ்தர் சங்கங்கள் கண்டித்தன. திரைப்பட கூட்டு நடவடிக்கைக்குழு கூட்டத்தில் அஜீத் வருத்தம் தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தியும், ரஜினிக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் முதல்வர் கருணாநிதி, திரையுலகினர் கட்டுப்பாடு காக்க வேண்டும் என்றும் கலை உலகில் யாரும் கலகம் விளை வித்திட முடியாது என்றும் அறிக்கை வெளியிட்டார்.

முதல்வர் கருணாநிதி வேண்டுகோளை ஏற்று திரைப்பட சங்கத்தினர் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றுபடுவதாகவும் போராட்டங்கள் அனைத்தும் கைவிடப்படுவதாகவும் பெப்சி தலைவர் வி.சி. குகநாதன் இன்று அறிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

"எங்கள் கலை உலகத்தின் பிதாமகன் கலைஞர். அவர் கேட்டுக்கொண்டபடி கருத்து வேறுபாடுகளை கைவிடுகிறோம். திரையுலகினரை விமர்சித்தவர்களை கண்டித்து இன்று வாயில் கறுப்பு துணி கட்டி போராட்டம் நடத்த இருந்தோம். அந்த போராட்டமும் ரத்து செய்யப்படுகிறது.

கலை உலகில் உள்ளவர்களுக்குள் உரசல் வரலாம். ஆனால் மற்றவர்கள் அதை ஊதி பெரிதாக்கு வதை ஏற்க மாட்டோம்.

கலைஞர் வேண்டுகோள்படி கலை உலகினர் ஒன்று பட்டு செயல்படுவோம். எங்களுக்குள் எழுந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்தன. ரஜினி, அஜீத்துடன் ஏற்பட்ட மனக்கசப்பும் அகன்று விட்டது. ஒரே குடும்பமாக செயல்படுவோம்...", என்றார்.

said...

இந்த எப்பிசோட்டின் இயக்குனர் கதை வசனகர்த்தா கருணாநிதி அவர்களின் தும்பைப்பூ அறிக்கைக்கு பின் இன்ன பிற அல்லக்கைகள் பிரச்சினை தீர்ந்தது என அறிக்கை விட்ட தால் இது வரை இந்த பதிவின் பின்னூட்டங்களில் தொகுக்கப்பட்ட அறிக்கைகள் இத்துடன் நிறைவடைகின்றன...