விஜயகாந்தின் விஜயம் ஜெயமாகுமா? மீள்பதிவு

இது முன்பே எழுதப்பட்ட பதிவு இங்கே ஒருமுறை மீண்டும் மீள் பதிவு செய்கின்றேன்.

விஜயகாந்த் அவர்களே தாங்கள் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளீர், மக்கள் மாற்றாத்தை விரும்புவதாக வேறு ஒவ்வொரு கூட்டத்திலும் கூறுகின்றீர்... இதற்கு தினமலரும்,குமுதம் வேறு அது இது என்று உங்கள் ஆதரவு நிலையெடுத்துள்ளன, அவர்கள் சொல்வதெல்லாம் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர், இந்த நிலையில் இப்போதுள்ள அரசியல்வாதிகளிடமிருந்து எந்த விதத்தில் மாறுபடுகின்றனர்.

முதலில் புரட்சிக்கலைஞர் என்று ஒரு பட்டப்பெயர் வைத்துள்ளீரே நீங்கள் செய்த புரட்சி என்ன? ஒருவேளை கதாநாயகியின் தொப்புளில் பம்பரம் விட்டதோ! உங்களைவிட 20 அல்லது 25 வயது குறைந்த கதாநாயகியோடு டூயட் பாடுகின்றீரே அதுவா? 45 வயதிற்கு மேலும் இன்னமும் சுவற்றில் கால்வைத்து படங்களில் சண்டை போடுகின்றீரே அதுவா? சற்று விளக்கம் தருகிறீரா?

ஆடம்பர அரசியலில் இருந்து மாறுபடப்போகின்றீரா?

மாவட்ட எல்லையிலிருந்து 100 கார்களில் பவனி வருகிறீர், கட்-அவுட்,சுவரொட்டி எல்லாம் தூள் பறக்கின்றதே உங்களின் விழாக்களில்.

சட்டத்தை மதிது நடக்கப்போகிறீரா? வன்முறைக்கு முடிவுகட்டப்பொகின்றீரா?

பாமகவோடு மோதியபோது உங்களது விசிறிகள் கூட பாமக கொடிக்கம்பங்கள்,அலுவலகங்களை உடைத்தனரே? இவர்களை வைத்துக்கொண்டா வன்முறைக்கு முடிவு கட்டப்போகின்றீர்

நேர்மை மற்றும் ஊழலுக்கு எதிரானவரா?

ஒவ்வெரு படத்திற்கும் பல கோடி வாங்குகின்றீரே சரியான வருமான வரி கட்டுகின்றீரா? உமது பொறியல் கல்லூரி விதிப்படிதான் இயங்க்குகின்றதா? அங்கே அரசாங்கம் அனுமதித்தற்கு மேல் எந்த விதத்திலும் கட்டணம் வாங்கப்படவில்லையா?

குடும்ப அரசியலுக்கு முடிவு கட்டுவீரோ?
கருனானிதி,மூப்பனார்,இராமதாசு,வாழப்பாடி இராமமூர்த்தி வாரிசுகள் இப்போது அவர்களின் அரசியல் வாரிசாக உள்ளனர், உமது மன்றங்களில் கூட உங்கள் மனைவி மற்றும் மைத்துனரின் ஆதிக்கமாமே? இந்த கிச்சன் கேபினட் அரசியலிலும் தொடருமா?

தனி மனித ஒழுக்கம்?
இது சற்றே அதிகப்படியான எதிர்பார்ப்புதான்,எல்லோருக்குமே தெரியும் அது எந்த அளவுக்கு உள்ளது என்று.

விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகளை எதிர் நோக்கும் சகிப்புத்தன்மை?
தங்களை எதிர்த்து நடிகர் சங்கத்தேர்தலில் பெயர் தெரியாத நாடக நடிகையை மிரட்டியது, அவர் 200க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றது அவரை பேட்டிகண்ட நிருபரையும், பத்திரிக்கைகாரையும் பத்திரிக்கையிலிருந்த செல்வாக்கை வைத்து திரைய்லக செய்தி சேகரிப்பு பிரிவிலிருந்து நீக்கியது இவையெல்லாம் உங்களது விமர்சனங்களை எதிர்நோக்கும் சகிப்புத்தன்மையை காட்டுகின்றது.

ஆடம்பர,வன்முறை,குடும்ப அரசியல்,தனிமனித ஒழுக்கம்,விமர்சனங்களை எதிர்நோக்கும் சகிப்புத்தன்மையின்மை, நேர்மை இவைகளில் இப்போதிருக்கும் அரசியல் வாதிகளுக்கும் உங்களுக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை, எனவே என்ன வித்தியாசம் காட்டபோகின்றீர் என தெரிந்து கொள்ளலாமா?
உங்கள் ஆதரவு நிலை எடுத்திருக்கும் குமுதமும் தினமலரும் உங்களிடமிருந்து என்ன வித்தியாசத்தை கண்டுகொண்டார்கள் என தெரியவில்லை.

கீழ்கண்டவைகளை அரசியலுக்கு வருமுன் சற்று யோசிக்கவும்

சினிமாக்கார்கள் தும்மினாலும் கூட செய்தியாகும்,கூட்டம் கூடும் பூமியிது.... ஆனால் கூட்டமெல்லாம் ஓட்டாகுமா? ராமராஜனுக்கும்,பாக்கியராஜீக்கும் கூடிய கூட்டமெல்லாம் வேறெந்த நடிகருக்கும் கூடியதில்லை... ராமராஜன் 500 ரூபாய்க்கு சிங்கி அடிக்கின்றார், பாக்கியராஜ் கடனில் மூழ்கியுள்ளார்,
நீங்கள் வரும்படி வரும் பொறியியல் கல்லூரி,திருமணமண்டம, திரையரங்கம் என முதலீடு செய்துள்ளீர், இதெல்லாம் நிலைக்க வேண்டும்?

ஊருக்கு நூறு ரசிகன் (இதில் ரஜினி கமல் விஜய் அஜீத் என அவர்கள் ரசிகர்களும் அடங்கும்) என்றாலும் அந்த நூறும் உம் ரசிகர்கள் என எடுத்துக்கொள்வோம்... இந்த நூறு ஓட்டும் உமக்கே என்றாலும் மன்றம் என்று குடும்பத்தை கவனியாமல் அலையும் அவர்களுக்கு எதிராகத்தான் அவர்கள் குடும்ப ஓட்டு விழும்

நீர் கோலத்தில் பாய்ந்தால் அரசியல்வாதிகள் புள்ளியில் பாய்வர், உம்மைவிட அதிக விசிறிகள் பலம் வாய்ந்த ரஜினிக்கு அரசியல்வாதிகளொடு மோதி ஏற்பட்ட தோல்வியை எண்ணிப்பார்க்கவும்,

தமிழக அரசியலில் கட்சியைவிட சாதிக்கு முக்கிய இடம் உண்டு, தங்களுக்கு அந்த பலம் உண்டா? தமிழகத்தை மட்டும் கணக்கில் கொள்ளவும், ஆந்திராவிலிடுந்து இங்கு வந்து ஓட்டு போடமுடியாது!

பத்திரிக்கைகளை நம்புகிறீரா? அய்யோ பாவமே... உங்கள் பேட்டியை நடுப்பக்கத்தில் போட்டுவிட்டு முதல் பக்கத்தில் கும்பகோணம் தீ விபத்திற்கு நீங்கள் அறிவித்த பணம் எங்கே என கேள்வி கேட்பர், ரஜினிக்கு ஆப்பு வைத்தவர்களே இந்த பத்திரிக்கைகள் தான்.

சுனாமி உமக்கு ஒரு நல்ல வாய்ப்பு தந்தது, பாதிக்கப்பட்டபர்களுக்கு உதவி செய்து நல்லப்பெயர் வாங்கியிருக்கலாம்... இருந்தாலும் விவேக் ஓபராய் செய்த உதவிகளை கொச்சைப்படுத்தி அவர்மீது பாய்ந்ததெல்லாம் ஒரு விடயமே இல்லை... தமிழக மக்களுக்கு ஞாபக மறதி அதிகம்.

உமது நிர்வாக திறமை அனைவரும் அறிந்ததே, நடிகர்கள் கோடிகோடியாக சம்பாதித்தாலும் நடிகர் சங்கக்கடனை நடிகர்களிக் கைக்காசை போடாமல் கலைநிகழ்ச்சிவைத்து ரசிகர்களிடமிருந்து வசூலித்து அடைத்ததே நல்ல சான்று.

முதல்வராக முதல்லில் எதிரியை மாற்றுங்கள்... பாமகவும், மருத்துவர் இராமதாடுவும் தமிழக அரசியலில் 3 (அ)4 வது இடத்திலுள்ளனர், அவரோடு மோதினால் உமக்கு அதிக பட்சம் 3 (அ)4 வது இடம் தான் கிடைக்கும், இப்போது உமது படம் பிரச்சினையின்றி வெளியாகவும் உமது பொறியியல் கல்லூரி வியாபாரம் நன்றாக நடக்கவும் செல்வி.ஜெயலலிதாவை எதிக்கவில்லையென்றால் உமக்குக் முதலிடம் கனவு மட்டுமே

உமக்காக ஜெயலலிதா பாமகவின் மீது நடவடிக்கை எடுக்க அவர் ஒன்றும் அரசியல் கத்துக்குட்டி அல்ல, பாமகவின் பலமும் வட மாவட்டங்களிலே அவர்களது கூட்டணியின்றி வெற்றிபெறுவது கடினம் எனவும் அவருக்கு தெரியும்.

கும்பல் கூடினால் 4 பேர் வருங்கால முதல்வர் என கூவினால் மனசுக்குள் பட்டாம்பூச்சி பறக்கத்தான் செய்யும், அதுவும் பாமகவின் கோட்டையான கள்ளக்குறிச்சியிலும் திருவண்ணாமலையிலும் கூடிய கூட்டம் இன்னும் 2 பட்டாம் பூச்சிகளை கூடுதலாக பறக்கச்செய்யும்... ஆனால் கூட்டமெல்லாம் ஓட்டாகுமா?

அரசியலுக்கு வாருங்கள் அது உமது உரிமை, ஆனால் நான் வித்தியாசமானவன்,மக்களுக்கு மாற்றம் தரப்போகின்றேன் என ஜல்லியடிக்காமல் வாருங்கள், உங்களுக்காக குமுதமும் தினமலரும் ஜல்லியடித்தாலும் ஒரே ஒரு தோல்வி அவர்களை உமக்கு எதிராக மாற்றிவிடும், ரஜினிக்கும் அதேதான் நடந்தது.

அரசியலில் வாழ்ந்த நடிகர்களைவிட வீழ்ந்தவர்கேளே அதிகம். எனவே கவனம் தேவை

14 பின்னூட்டங்கள்:

said...

முதலில் ரஜினி,கமல், இப்பொழுது விஜயகாந்த் இன்னும் எத்தனை நடிகர்கள் உன் வாயில் விழப்போகின்றனரோ

said...

வெகு அழகாக ஆராய்ந்து , எழுதியுள்ளீர்கள்... படித்து ரசித்தேன்.. ரசித்து படித்தேன்.. !!

இவ்வளவு விடயங்கள் எழுதிவிட்டு, என் வலைப்பூவில் அப்படி ஒரு பதிவு (comment) ஏன் செய்தீர்கள்... இது தான் குசும்பு என்ப்படுவதோ?? :)

நட்புடன்
வீ எம்.

said...

அண்ணே குழலி, நல்ல சூப்பரா எழுதுகிறீர்கள். ஆனா இந்த பாமாக வாடை கொஞ்சம் தூக்கல இருக்கே :-))

said...

பின்னூட்டமிட்ட வீ.எம் மற்றும் அல்வாசிட்டி விஜய்க்கும் நன்றி, பதிவிட்டு பல நாட்கள் ஆகியும் பின்னூட்டங்களையே காணவில்லையே (அட திட்டிக்கூட பின்னூட்டம் வரவில்லையே) என எண்ணியிருந்தேன், ஒரு வேளை இன்னும் விஜயகாந்த்திற்கு இணையத்தில் ஆதரவாளர்கள்,எதிர்ப்பாளர்கள் இல்லை போல?!

said...

குழலி நல்ல பதிவு. வாழ்த்துக்கள். அண்மையில் விஜயகாந்த் ஒரு நாளேட்டுக்கு செவ்வியளிக்கும்போது தான் கறுப்பு எம்.ஜி.ஆர் என்று அழைக்கப்படுவதை விரும்புவதாக. மற்றும் தான் எம்.ஜி.ஆர் போல ஏழைகளுக்கு உதவுகிறாராம். கூட்டம் கூட்டி பத்துப் பதினைஞ்சு பத்திரிகையாளரைக் கூப்பிட்டு நாலைஞ்சு தையல் இயந்திரம் கொடுப்பதுதான் ஏழைகளுக்கு உதவி புரிவதா? இதெல்லாம் தனக்கு விளம்பரம் தேடிக்கொள்வதற்கான வழிமுறையே தவிர உதவி இல்லை.(பல வர்த்தக நிறுவனங்கள்போல்). குமுதம் இதழில அவர் எழுதிற தொடரைப் பார்த்தால் இவர் தமிழக முதல்வராக வந்தால் ஒரே இரவில தமிழகத்தை மாத்திடுவேன் என்கிறமாதிரி எழுதுகிறார்.(அந்தத் தொடரை எழுதுகிற முகம் தெரியாத நண்பனுக்கு நன்றி) அந்தக்கதையை சினிமாவை எடுத்தால' நூறு நாள் ஓடும் என்று நினைக்கிறேன். (ஐயா விஜயகாந்த் அரசியல் சினிமா மாதிரி இலகுவான வேலையில்லை)

நன்றி
இளையவன்

said...

பின்னூட்டத்திற்கு நன்றி இளையவன், உங்களது வலைப்பதிவைத்தேடினேன் கிடைக்கவில்லை, இருந்தால் சுட்டி தாருங்களேன்

said...

ம்ம்....நல்ல பதிவு.நானும் குமுதத்தில் அந்த தொடரைப் படித்தேன்.ஏதோ கட்சி பத்திரிக்கைகளில் வரும் தொடர் போல இருக்கு.விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கும்முன்பே,அவருடன் கூட்டணிக்கு தயாரென துண்டுபோடும் பாஜக போல,குமுதமும் கட்சிப் பத்திரிக்கையாக துண்டு போடுதோ என்னவோ போங்க...
இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா....

said...

// மக்கள் மாற்றாத்தை விரும்புவதாக // மக்கள் மாற்றத்தை விரும்புறாங்கன்னா என்னான்னு நினைச்சீங்க குழலி... திமுக சுருட்டுன வரைக்கும் போதும் ஒரு மாறுதலா அதிமுக சுருட்டட்டும்னு அதிமுகவுக்கு ஓட்டு போடுவாங்க... அடுத்த எலக்ஷன்ல அப்படியே உல்டாவா ஒரு மாற்றம் கொண்டுவருவாங்க.... இப்படியே எத்தன வருசமா மாற்றமே இல்லாத ஒரு மாற்றத்த வச்சிக்கிட்டு போராடுறது. அதான் ஒரு மாற்றமா இருக்கட்டுமேன்னு அடுத்த எலக்சன்ல விசயகாந்துக்கு ஒரு வாய்ப்பு. (ஒரு மாற்றத்துக்காக் கூட பாமகவ முழுசா சுருட்ட உட சனங்க தயாரா இல்லையேன்ற உண்மைய சொல்லி உங்கள சீண்டனுமான்னு யோசிச்சு சொல்லாம் விட்டுட்டேன்)

said...

குழலி!
அவசியமான பதிவு., இது போன்ற பதிவுகளை படித்த அனைவரும், சிரித்துவிட்டுப் போகமல், சிறிது சிந்திக்கட்டும். கோடிகளில் புறள்கிற நடிகர்கள்., அரசியலில் நல்லவர்களைத் தூக்கிவிடட்டும்!.

இளையவன்!,
எழுதித் தருவது ஒன்றும் முகம் தெரியாத ஆளல்ல., லியாகத் அலிகான் தான்!!.

said...

//ஒரு மாற்றத்துக்காக் கூட பாமகவ முழுசா சுருட்ட உட சனங்க தயாரா இல்லையேன்ற உண்மைய சொல்லி உங்கள சீண்டனுமான்னு யோசிச்சு சொல்லாம் விட்டுட்டேன்//

அட என்னங்க இப்படி பாமக முத்திரை குத்துகின்றீர், ஊடகங்கள் பாமகவின்மீது காட்டும் காழ்ப்புணர்ச்சியையும், அளவுக்கதிகமாக செய்யும் தேவையற்ற விமர்சனங்களையும் அதனால் ஏற்படும் எதிர்விளைவுகளையும் தான் எதிர்கிறேன்,இதையே விடுதலை சிறுத்தை அமைப்பிற்கும்,புதியதமிழகத்திற்கும் செய்கின்றனர், இதையும் சேர்த்தே தான் எதிர்க்கின்றேன், மற்றபடி வேறொன்றுமில்லை.

said...

kuzali,

nallathoru pathivu !
pArAttukkaL

enRenRum anbudan
BALA

said...

சினிமா நடிகன் முதல்வர் ஆக ஆசைப்படுவது என்றுதான் ஒரு முடிவுக்கு வருமே தெரியவில்லை!

said...

ஏன் சினிமா நடிகன் மனிதன் இல்லையா? எவ்வளவு காலம்தான் சினிமாவிலேயே நடிப்பது? நிஜ வாழ்க்கையிலும் கொஞ்சம் நடிக்கட்டுமே!

said...

Came to know about this post from mugamoodi's.

I don't agree with your view..