ஆணாதிக்கமும் பெண்ணியமும் சொந்த வாழ்க்கையும்

குஷ்புவின் பேட்டியும், அதைத் தொடர்ந்து வலைப்பதிவுகளில் நடந்த விவாதங்களும் பிரச்சினைகளின்/கருத்துகளின் பல பரிமாணங்களை காண்பித்தன, பெரும்பாலும் நாகரீகமாகவும், சில இடங்களில் அநாகரீகமாகவும் நடந்தேறின, அநாகரீகங்கள் கண்டிக்க வேண்டியவை, முழுமையாக நீக்கப்படவேண்டியவை.

தங்கரை முழுமையாக எதிர்ப்பதும் குஷ்புவை முழுமையாக ஆதரிப்பதுமே ஆணாதிக்கத்தையும் பெண்ணியத்தையும் அளக்கும் அளவுகோலாக வைத்து இங்கே பேசப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில் எனக்கு தோன்றிய/ நான் இதற்கு முன் கேட்ட, மற்ற சிலரின் கருத்துகளையும் விடயத்தையும் பகிர்ந்துகொள்கின்றேன், முழுவதும் படிக்காமல் இரண்டு வரிகளை படித்துவிட்டு பின்னூட்டமிடுவதும் திரித்து பின்னூட்டமிடுவதையும்,பதிவிடுவதற்கும் விளக்கம் சொல்லி துடித்த காலங்கள் கடந்து அலட்சியப்படுத்தும் மனநிலைக்கு வந்து பல நாட்களாகிவிட்டன.... எல்லா கேள்விளோடும் என்னை பொறுத்தி பார்க்க வேண்டாம், கேள்வி கேட்பதாலேயே இதை நான் ஆதரிக்கிறேன் என்றோ எதிர்க்கிறேன் என்றோ இல்லை.


1. அமெரிக்காவிலோ,சிங்கப்பூரிலோ,சப்பானிலோ வேலை செய்து கொண்டிருக்கும் ஆண்கள் தாங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் நாட்டிற்கு திருமணமானவுடன் அந்த மங்கையும் இடம்பெயர வேண்டுமென்ற கோரிக்கையை தங்கள் திருமணத்திற்கு பெண் பார்க்கும் போது வலியுறுத்தவில்லையா?

2. அமெரிக்காவிலோ,சிங்கப்பூரிலோ,சப்பானிலோ வேலை செய்து கொண்டிருக்கும் ஆண்கள் திருமணமானவுடன் அவரின் மனைவி வேலைசெய்து கொண்டிருக்கும்/ வாழ்ந்து கொண்டிருக்கும் ஊர் சூழலை விட்டு முழுமனதோடு வரவில்லையென்றால் பரவாயில்லை நான் அங்கே வருகின்றேன் என புலம்பெயர்ந்துள்ளனரா?
(என் மனைவி அப்படியெல்லாம் சொல்லவில்லையே என்றால் இன்று கேட்டுபாருங்கள் எத்தனை முழுமனதுடன் அவர் வந்தார் என, ஒரு வேளை நீங்கள் மனைவி வாழும் ஊருக்கு புலம் பெயர தயாராக இருந்தால் அவர் நீங்கள் இருக்கும் நாட்டிற்கு வந்திருப்பாரா என கேட்டு பாருங்கள்)

3. பண்பாடு,வழக்கம், கலாச்சாரம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்று கூறி அப்பா,அம்மா விருப்பம், நாலு பேர் கேவலமாக பேசுவார்கள் என்பதை புறந்தள்ளி உங்கள் மனைவிக்கு தாலி கட்டாமல் இருந்தீர்களா?

4.வழக்கம்,விருப்பம் என கூறி தாலி கட்டியிருந்தாலும் கூட அதற்கு இணையாக ஆண்கள் தாலி அணிந்துள்ளீர்களா? அட கூறைந்தபட்சம் ஒரு மனைவி படம் போட்ட லாக்கெட் வைத்த சங்கிலியாவது அணிந்துள்ளீர்களா?

5. தாலி என்பது பெண்ணடிமைத்தனம், ஊரில் நாலு பேர் கேவலமாக பேசுவார்கள் என்பதற்காகத்தான் கட்டினேன், வெளிநாட்டில் யாரைப் பற்றியும் கவலை இல்லை, அதனால் தாலியை கழற்றிவிடு என்று மனைவியிடம் சொல்லியிருக்கின்றீரா? அல்லது உங்கள் மனைவி அப்படி செய்துள்ளாரா?

6.எத்தனை ஆண்கள் வீட்டில் சமைக்கின்றீர், வார இறுதியில் சமைப்பதை கேட்கவில்லை, குறைந்த பட்சம் முறை வைத்து இன்று நான் சமைக்கின்றேன் நாளை நீ சமையல் செய் என்று கூறுகின்றீரா?

7.நீங்கள் வீட்டு வேலையை உண்மையாகவே மனைவியுடன் பகிர்ந்து கொள்கின்றீர்களா?

8.கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் வேலையை விட்டுவிட வேண்டும் என்ற சூழலில் தன் வேலையை உதற தயாராக இருக்கின்றீரா?

9.குழந்தை வளர்ப்பில் உதவி செய்கிறேன் என்று கூறாமல்(உதவி என்று கூறும் போதே அது பெண்களின் பொறுப்பு என்ற பொருள் தொணிக்கின்றது) உண்மையாக பகிர்ந்து கொண்டுள்ளீர்களா?

10. தங்கள் காதல் பிரதாபங்களை முகம் மலர அகம் மலர் மனைவியிடம் பீற்றிக்கொள்ளும் போது உங்கள் மனைவியும் அவருடைய காதல் அனுபவத்தை அல்லது இன்பாக்சுவேஷனையாவது பகிர்ந்து கொண்டுள்ளாரா? (பகிர்ந்து கொள்ளவில்லையென்றால் உங்கள் மீது நம்பிக்கையில்லை என்று பொருள்)

11. உங்கள் மனைவி அவரின் காதல்/இன்பாக்சுவேஷன் அனுபவத்தை சொல்லும் போது அதை உண்மையான ஆர்வத்தோடு கேட்டு இருக்கின்றீரா?

12.அப்படி மனைவியின் காதல்/இன்பாக்சுவேஷன் அனுபவத்தை சொல்லும் போது அதை உண்மையான ஆர்வத்தோடு கேட்டு பிறகு அதை எதிலாவது எங்கேயாவது இணை(கம்பேர்)வைத்து பார்க்காமல் இருந்ததுண்டா?

13.சாலையிலோ கூட்டத்திலோ இருக்கும் பெண்ணை காண்பித்து அழகாக இருக்கிறாள் என்று உங்கள் மனைவியிடும் கூறும் உங்களிடம் உங்கள் மனைவி சாலையிலோ கூட்டத்திலோ இருக்கும் எந்த ஆண்மகனையாவது உங்களிடம் சிலாகித்து பேசியதுண்டா?

14.அப்படி சிலாகித்து பேசும்போது எள் முனையளவு வேற்றுணர்ச்சி தோன்றவில்லையா?

15.வெளிநாட்டில் இருக்கும் போது மிடியும் ஜீன்சும் பனியனுமாக இருக்கும் உங்கள் மனைவி உங்கள் பெற்றோர் முன்னும் அதே போல அணிந்துள்ளாரா? அல்லது நீங்கள் அணிய சொல்லியிருக்கின்றீரா?

16.வெளிநாட்டில் உங்களை பெயர் சொல்லி அழைக்கும் மனைவி ஊரில் உங்கள் பெற்றோர் உறவினர் முன் பெயர் சொல்லி அழைத்துள்ளாரா?

17.வெளிநாட்டில் வீட்டு வேலைகளில் உதவி செய்யும் நீங்கள் ஊரிலும் உங்கள் பெற்றோருடன் இருக்கும் போதும் உங்கள் மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்துள்ளீர்களா?

18.உங்கள் மனைவி உங்களிடம் அனுமதி பெறாமல் அவரின் பெற்றோருக்கு அல்லது யாருக்காவது பணம் அனுப்பியதுண்டா?

19.வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்துள்ளீரா?

20.வரதட்சனை நாங்களாக கேட்கவில்லை, பெண் வீட்டில் அவர்களாக தந்தார்கள் என்பதை வேண்டாம் என்று சொன்னீர்களா?

21. திருமணத்தின் போது நாம மாப்பிள்ளை வீட்டுகாரங்க என்று பேசிய உங்கள் பெற்றோர்களை அடக்கியது உண்டா?

22. உங்கள் மனைவி உண்மையிலேயே பொருளாதார சுதந்திரநிலையில் உள்ளாரா? வேலைக்கு போய் சம்பாதிப்பதற்கும் உண்மையான பொருளாதார சுதந்திரத்திற்கும் பெரிய வேறுபாடு உள்ளது.

மேற்கண்ட கேள்விகள் அனைத்தும் ஆண்களுக்கு, தற்போது பெண்களுக்கு சில கேள்விகள்

23. ஒரு வேளை உங்கள் கணவர் மேற்கண்ட கேள்விகளில் இல்லையென்று பதிலளிக்கும் நிலையில் உள்ளபோது என்றாவது உங்கள் எதிர்ப்பை காண்பித்துள்ளீரா? இதில் குழந்தை வளர்ப்பிற்காக வேலையை விடுவதிலிருந்து கணவன் வேலை நிமித்தமாக புலம்பெயரும் எல்லா இடங்களுக்கும் விருப்பமில்லையென்றாலும் புலம்பெயர்ந்தவையும் அடங்கும்.

இனி திருமணத்திற்கு பெண் தேடிக்கொண்டிருக்கும் ஆண்களுக்கு

'அ' என்றொரு பெண்
'ஆ' என்றொரு பெண்

'அ' என்ற பெண் உங்களின் எதிர்பார்ப்பிற்கு 100% பொருத்தமானவர், ஆனால் இதற்கு முன் வேறொரு ஆணுடன் பாலியல் ரீதியான தொடர்பு உள்ளவர் என்றும் தற்போது அந்த தொடர்பு இல்லையென்றும் உங்களுக்கு தெரியவந்துள்ளது

'ஆ' என்ற பெண் உங்களின் எதிர்பார்ப்பிற்கு 90% தான் பொருத்தமானவர், ஆனால் இதற்கு முன் வேறொரு ஆணுடன் பாலியல் ரீதியான தொடர்பு உள்ளவரா இல்லையா என்று உங்களுக்கு தெரியாது.

24.இந்த தொடர்பு விடயம் உங்களுக்கு மட்டுமே தெரிந்தது என்ற சூழ்நிலையில் 'அ' பெண்ணை திருமணத்திற்கு தேர்ந்தெடுப்பீரா?

25.'அ' என்ற பெண்ணை நீங்கள் திருமணத்திற்கு தேர்ந்தெடுத்த பின் அவருடைய பாலியல் தொடர்பு உங்கள் பெற்றோருக்கு தெரிந்து வேண்டாம் என கூறும் போது உங்கள் பெற்றோரை எதிர்த்து/ சமாதானப்படுத்தி அந்த பெண்ணையே திருமணம் செய்வீர்களா?

26. லேடி பாஸ்கிட்ட வேலை செய்வதே கடினமானது சரியான நச்சரிப்பு என்று புலம்பாமல் இருந்துள்ளீரா?

27. லேடி கொலீக்ஸ் உடன் வேலை செய்வதே கடினமானது எல்லாவற்றிலும் இந்த பெண்கள் Slow என்று புலம்பாமல் இருந்துள்ளீரா?

28. லேடிஸ்னா சீக்கிரம் வீட்டுக்கு போய்விடுவார்கள், எல்லா வேலையும் என் தலையில் விழுது என்று புலம்பாமல் இருக்கின்றீரா?

29. மகளின்,சகோதரியின் திருமணத்தில் அவர்களின் விருப்பம் எந்த அளவு இருந்தது, நீங்கள் தேர்வு செய்த சில வரன்களில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் தந்திருப்பீர்கள் ஆனால் சொந்தமாக அவரே தேர்வு செய்தாரா?

30. தந்தையிடம் பகிர்ந்துகொண்டு ஆலோசனை கேட்கும் எல்லா விடயங்களையும் தாயிடமும் பகிர்ந்து கொண்டு ஆலோசனை கேட்டுள்ளீர்களா?

31. பொம்பளைனா புடவை கட்டனும் ஆம்பளைனா வேட்டி கட்டனும் என்று தனக்கு மிகப்பிடித்த திரைப்பட நடிகன் வசனம் பேசும் போது அதனை அருவெறுப்பாக பார்த்துள்ளோமா?

32.இப்படி பேசும் நடிகனை/ அரசியல் தலைவனை ஒரு முறையாவது கண்டித்திருப்போமா?

கடுமையான முகத்தில் அறைய கூடிய சில கேள்விகள் இன்னும் உள்ளன ஆனால் தற்போது அதை பகிர்ந்துகொள்ளும் நிலை இல்லையென்பதால் பிறிதொரு சமயத்தில் அதை பார்ப்போம்.

மேலே உள்ள கேள்விகளில் எத்தனை 'ஆம்' சொல்லியிருக்கின்றோம், மேற்சொன்ன விடயங்களில் ஆணாதிக்கத்தை அழிக்க அரசியல் தலைவனோ, திரைப்பட நடிகனோ அவ்வளவு ஏன் உங்களை சுற்றியிருப்பவர்கள் கூட தேவையில்லை, நீங்கள் ஒருவரே போதும். வாழ்வில் ஒவ்வொரு இடத்திலும் கூடவே இருக்கும் சக மனுஷிகளின் பிரச்சினைகளை கவனிப்போம், அதற்காக விளிம்பு நிலை மனிதர்களையும், மற்ற கருத்துகளையும் பேசவே கூடாது என்பதில்லை ஆணாதிக்கத்தையும், பெண்ணியத்தையும் பற்றி ஒவ்வொருமுறை பேசும் போதும் பின்னூட்டமிடும்போதும் பதிவிடும்போதும் மேலே கேட்ட கேள்விகளில் ஒவ்வொரு முறையும் குறைந்தது ஒரு இல்லை என்ற பதிலையாவது ஆம் என மாற்றிவிட்டு பேசலாம்.

மற்ற சித்தாந்தங்களில் கொள்கைவிடயத்தில் ஆதரிப்பதற்கும் நடைமுறைக்கும் வித்தியாசம் உள்ளது, உதாரணமாக கம்யூனிச கொள்கையை இந்தியாவில் முழுமையாக கடைபிடிக்க முயற்சி செய்யும் போது அங்கே அரசியல்,சமூகம், தன் வாழ்வு, தன் குடும்பத்தின் வாழ்வு என எத்தனையோ புறக்காரணிகளும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, ஆனால் மேலே உள்ள கேள்விகளுக்கு ஆம் சொல்லி கடைபிடிக்க நம் ஒரு ஆள் ஒரே ஆள் போதும், இதனால் பாதிக்கப்படப்போவதும் யாரும் இல்லை, அதனால் இந்த ஆணாதிக்க விடயத்தில் வெறுமனே கொள்கை ஆதரவு என்று பேச்சில் மட்டுமில்லாமல் நடைமுறையிலும் கடைபிடிக்கலாம் யாரையும் பாதிக்காமலே...



குஷ்புவின் பேட்டியை ஆதரிக்கும்(இதை தவறு சொல்லவில்லை நான்) அதே நேரத்தில் அரசுவின் http://arrasu.blogspot.com/2005/09/blog-post_26.html இந்த பதிவில் வீக் என்ட் பார்ட்டியைப் பற்றி கவலைப்பட்டு 'வருங்காலப் பெண்மை பற்றிய நியாயமான கவலைகளுடன், ஒரு தாய்' எழுதியுள்ளாரே இது தான் நிதர்சனமான உண்மை நிலை இதற்கு மேலும் விளக்கமாக சொல்லத் தேவையில்லை என கருதுகின்றேன்.

இந்த பதிவை பிரதியெடுத்து உண்மையான/ மனசுக்கு நேர்மையான பதிலை எழுதுங்கள் பாஸா/பெயிலா என உங்கள் மனசுக்கு தெரியும், பின்னூட்டத்தில் எழுத வேண்டியதில்லை.

இதோ முதல் ஆளாக நான் இந்த பதிவை அச்செடுத்து பதிலளிக்கப் போகின்றேன், பார்ப்போம் பாசாகின்றேனா/பெயிலாகின்றேனா என்று

கற்பு அது உடல் சார்ந்ததா? மனம் சார்ந்தததா? இருக்கா இல்லையா என்று பேசும் நிலையில் தற்போது நான் இல்லை, இந்த சச்சரவுகள் அடங்கி பிறிதொரு நாளில் ஒரு நல்ல சூழ்நிலையில் திறந்த மனதோடு பேசலாம் நான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றது.

50 பின்னூட்டங்கள்:

said...

குழலி,
எத்தனை 'ஆம்' வந்தால் பாஸ் என்று நினைக்கிறீர்கள்?

said...

ஜோ பாஸ்/பெயில் ஆளுக்கு ஆள் மாறுபடும்... கலாச்சார த். தூ.. யவர்கள் நூற்றுக்கு நூறு எடுப்பார்கள் என நம்புவோமாக...

said...

யோவ் குழலி,

பல கேள்விகளை சாய்ஸில் விட்டபிறகும் பெரும்பாலும் 'இல்லை'யென்றுதான் வருகிறது. நான் என்ன வாதி!?

இந்த பதிவு/கேள்விகள் சொல்லவிழைவதென்ன?

said...

//பல கேள்விகளை சாய்ஸில் விட்டபிறகும் பெரும்பாலும் 'இல்லை'யென்றுதான் வருகிறது. நான் என்ன வாதி!?//

அன்பு,நீங்க ஒரு குழப்பவாதியா இருப்பீங்களோ? ஹி..ஹி..

said...

//இந்த பதிவு/கேள்விகள் சொல்லவிழைவதென்ன?
//

கடலிலிருந்த ஒரு அலை இன்னொரு அலையிடம் கேட்டதாம் 'கடல் என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது என்று' அதற்கு இன்னொரு அலை சொன்னதாம் 'நீ,நான் எல்லாம் சேர்ந்தது தான் கடல், கடலில் தான் நாம் இருக்கின்றோம், நாம் இல்லாமல் கடல் இல்லை' என்று கேள்வி கேட்ட அலை சொன்னதாம் 'நீ பொய் சொல்ற, கடல் என்பது பெரியதாக இருக்கும் நானெல்லாம் கடல் இல்லை' என்று...

புரிகின்றதா அன்பு....

உள்ளே இருக்கும் ஆணிவேரில் கொதிநீரை ஊற்றுவதை விட்டு விட்டு.....ஏமாற்றிகொண்டுள்ளோம்

said...

உபதேசம் எல்லாம் ஊருக்குத்தானுங்கோ. கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருசன் இதுதாங்க எனக்கு புடிச்ச பழமொழி இப்பக்கி. சமஉரிமை, சமதர்மம் ன்னாக்கா விபச்சார கேசுல உள்ள தூக்கி போட்டுருவானுங்க. இருங்க இருங்க இப்ப சமஉரிமைன்னு பேசிக்கிறிங்களே அது படுக்கிறதுலத்தானங்க? ஏன்னா குஸ்பு ஆன்டி சொன்னாங்களே படுக்கிறதுல அவங்க பிள்ளைகள் கூட ரொம்ப இடஞ்சலா இருக்காங்கன்னு. கலிமுத்திடுத்துங்கோ...

said...

அன்பு,நீங்க ஒரு குழப்பவாதியா இருப்பீங்களோ? ஹி..ஹி..

ஓய் ஜோ... குழம்பிப்போய் கேட்டா குழப்பவாதியா!?

கடலிலிருந்த ஒரு அலை இன்னொரு அலையிடம் கேட்டதாம் 'கடல் என்றால் என்ன? அது எங்கே இருக்கிறது என்று' அதற்கு இன்னொரு அலை சொன்னதாம் 'நீ,நான் எல்லாம் சேர்ந்தது தான் கடல், கடலில் தான் நாம் இருக்கின்றோம், நாம் இல்லாமல் கடல் இல்லை' என்று கேள்வி கேட்ட அலை சொன்னதாம் 'நீ பொய் சொல்ற, கடல் என்பது பெரியதாக இருக்கும் நானெல்லாம் கடல் இல்லை' என்று...

புரிகின்றதா அன்பு....

உள்ளே இருக்கும் ஆணிவேரில் கொதிநீரை ஊற்றுவதை விட்டு விட்டு.....ஏமாற்றிகொண்டுள்ளோம்


ஏதோ புரிஞ்சாமதிரியும் இருக்காது, புரியாதமாதிரியும் இருக்குது. அதனாலதான் இப்படி (என்னையையே) ஏமாத்திட்டு அலையறேன்!

said...

சாரே.!
முற்போக்கு முகமூடிங்கள இந்தளவுக்கு தண்ணில அலசக்கூடாதுங்க, அப்புறம் hypocraticஆ இளிச்சிடும்
-Raaja

said...

Dear Kuzhali,

There is nothing like 'ஆணாதிக்கம்' or 'பெண்ணியம்' in real life.

I have two daughters. The elder is married and settled in Kuala Lumpur. The younger one is studying in the final semester BE. She should be married in about 4 years' time.

I have given them total freedom to do as they please. Both are very outspoken (can I say just like you?) and have their own ideas about feminism.

May be due to this, it took more than two years for me to finalise the marriage for my elder daughter.

Boys may appreciate the outspokenness in women if they are friends (I could see this from some of the feedback to your post) but when it comes to marriage they are reluctant to appreciate such ideas.

Luckily my son-in-law who is woking in a MNC in KL liked my daughter the way she is. Unfortunately my in-laws are still the old conservative people though settled in Malaysia for more than 5 decades! They now feel she is not the daughter-in-law they wanted for they boy!!

What I am trying to say is it is easy to have such fancy ideas when we are young but the real life is not as rosy as you think.

I hope you understand what I am trying to say.

I wish you all the very best in your life.

tbrjoseph

please visit my http://enkathaiulagam.blogspot.com site which contains some of my shortstories written about some of the so called 'பெண்ணியம்' and what is reality.

said...
This comment has been removed by a blog administrator.
said...

Atlast, someone with real questions!! Now, I do have hope that the change is coming..

said...

நல்ல பதிவு.

1. அமெரிக்காவிலும் ஜப்பானிலும் வேலை செய்யும் பெண்ணை திருமணம் செய்து
தங்கள் சொந்த, பந்தம், தாய் தந்தை அனைத்தையும் விட்டு புலம் பெயரும்
ஆண்களை நீங்கள் பார்த்ததில்லையா ?

4. இது தமிழ்(இந்திய நாட்டு ) ஆண்களுக்கே உள்ளா தனி வழி. அமெரிக்க ஆண்கள்
கையில் திருமண மோதிரம் அணியாவிட்டால் வீட்டில் சுளுக்கெடுத்துவிடுவார்கள்.
தமிழ் ஆண்களுக்கு மெட்டி என்று ஒன்று அணிவிப்பார்கள். அதையும் தங்கள்
வசதிக்காக(உஷாராக) கழற்றி வைத்துவிட்டார்கள். இங்கு ஒரு அமெரிக்க
பெண்மணி இப்படி கேட்பார் " உங்கள் இந்திய ஆண்கள் திருமணம் ஆனவரா , இல்லையா
என்று தெரிந்துக் கொள்வது? இவர்கள் எளிதில் ஏமாற்றி விடுவார்களே என்று?"
நம் கலாச்சாரம் தான் கோவலன் கலாச்சாரமாச்சே என்று சொல்ல முடியுமா?

said...

//1. அமெரிக்காவிலும் ஜப்பானிலும் வேலை செய்யும் பெண்ணை திருமணம் செய்து
தங்கள் சொந்த, பந்தம், தாய் தந்தை அனைத்தையும் விட்டு புலம் பெயரும்
ஆண்களை நீங்கள் பார்த்ததில்லையா ?
//
மனைவிக்காக தான் வேலை செய்த தனக்கு பிடித்தமான ஊரைவிட்டு வேறு ஊருக்கு குடியேறிய என் சொந்தத்தை நன்றாக அறிவேன்...

நன்றி

said...

நாங்க உண்மைய சொன்னா, அது திருமாவுக்கும் ராமதாஸுக்கும் புடிக்காம போய் எதையாவது தூக்கிகிட்டு மகளிர் அணி வூட்டு முன்னாடி வந்திருச்சின்னா...

இதில் எந்த கேள்விக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்பதையும் உங்க சன நாய்க தலைவர்களிடம் கேட்டுச்சொல்லுங்கள்...

said...

//நாங்க உண்மைய சொன்னா, அது திருமாவுக்கும் ராமதாஸுக்கும் புடிக்காம போய் எதையாவது தூக்கிகிட்டு மகளிர் அணி வூட்டு முன்னாடி வந்திருச்சின்னா...
//
உண்மையை எங்களிடம் ஏன் சொல்கின்றீர் உம்ம மனசாட்சியிடம் சொல்லுங்கள்

நன்றி

said...
This comment has been removed by a blog administrator.
said...

பதிவின் போக்கு திசை மாறிவிடும் என்பதால் முகமூடிக்கான ஒரு செய்தியை நீக்கியுள்ளேன்...

said...

நீங்கள் கேட்ட கேள்விகளின் வெப்பம் தாளாமல் எத்தனை '-'?. எவ்வளவு '-' விழுகின்றதோ., அவ்வளவு இப்பதிவின் வெற்றி குழலி.

said...

நிஜமாவே கலக்கிட்ட My dear friend.

சரியான நேரத்தில் சரியான பதிவு.

//பதிவின் போக்கு திசை மாறிவிடும் என்பதால் முகமூடிக்கான ஒரு செய்தியை நீக்கியுள்ளேன்...//
- நல்ல முதிர்ச்சி தெரிகிறது. கூடவே உன் தன்மானமும். முகமூடி அவர்களின் அனாவசிய வார்த்தைகளை இதை விட அழகாக handle செய்ய முடியாது.

said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி முதல் முறையாக பின்னூட்டமிட்டtbrjoseph,இனோமினோ,பிரேமலதா அவர்களின் வரவு நல்வரவாகுக....

ஆணாதிக்கம் எங்கேயோ இல்லை, அருகில் மிக அருகில் நம்மிடையே தான் இருக்கின்றது என்பதற்காகத் தான் இந்த பதிவேயொழிய யாரையும் புண்படுத்த வேண்டுமென்றில்லை....

மேலும் ஆணாதிக்கத்தின் அளவுகோலே யாரையாவது திட்டுவதும் ஆதரிப்பதும் என்ற மட்டையான அளவீட்டையும் மறுதலிப்பதற்காகத் தான் இந்த பதிவு,

பலர் புண்பட்டிருக்க வாய்ப்புண்டு (உண்மை சுடுமென்பதால்) இருந்தாலும் முத்திரை,prejudice மனப்பாண்மையிலிருந்து வெளியில் வந்து சற்று பார்த்தால் நியாயம் புரியும்

நன்றி

said...

குழலி,

said...

குழலி,

இந்தப் பதிவுக்காக பிடியுங்கள் ஒரு கூடைப் பூக்களை! ('பூங்குழலி' ஆகிடலாம்!)

உண்மையில் 'பெரியாரியல்' அளவுகோலில் நாம் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம்.

ஆனால், இந்த 'குஷ்பூ' விவகாரத்தில் - மிக மிகக் குறுகிய பார்வை பார்த்துக் கொண்டு இருப்பதுதான் கவலை தருகிறது.

இது முழுக்க முழுக்க திரையுலகினரின் எதேச்சதிகார எண்ணத்திற்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் தருகிற (அல்லது தருவதாக மருத்துவரும், திருமாவும் எண்ணுகிற) ஒரு முயற்சி என்பது மட்டுமன்று, காலச்சூழலின் காரணமாக இது போல் அமைந்தது என்பதை உணர மறுப்பது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை.

'பெரியாரியல்' அளவுகோலை வைத்துக் கொண்டு தங்கமணி போன்றவர்கள் விமர்சிப்பதை என்னால் முழுமையாக உணர்ந்து கொள்ள முடிகிறது. (ஆனால், இந்தக் குறிப்பிட்ட போராட்டம் தவிர்ர்க இயலாதது என்பது என் கருத்து)

ஆனால், இதற்கு மட்டும் புதிதாக 'பெரியாரியல்' பாடம் படிக்க வருபவர்கள் குறித்து ஒன்றும் சொல்வதற்கில்லை!

பெண் வலைப் பதிவர்கள் உங்களுடைய பதிவுக்கு வந்து நேர்மையான பின்னூட்டம் இடுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

said...

திருமணமாகவில்லை என்றாலும் ஆகியிருந்தால் என்ன செய்திருப்பேன் என்ற நோக்கில் பதில்களை எழுதி தனிமடலில் அனுப்பியிருக்கிறேன்.

குழலி உங்களது இந்த பதிவிற்கு எனது நூறு கோடி பாராட்டுதல்கள். கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்வியும் சுட்டெறித்தது. வேரூன்றிப்போன ஒரு விஷயத்தை இவ்வளவு யதார்த்தமாக யாராலும் சொல்ல முடியாது.

பாராட்டுக்கள்

said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி முதல் முறையாக பின்னூட்டமிட்டtbrjoseph,இனோமினோ,பிரேமலதா அவர்களின் வரவு நல்வரவாகுக....

Thanks.

Ungaloda homepage padikka mudiyala. everytime I have to download pdf or I have to read as archive. but, it is fine when i read the archives/archive mode. comments are fine too. is there any setting i have to do?

said...

குழலி,

அவரவர் மனசாட்சியிடம் கேட்க சொல்லியிருக்கிறீர்கள்... "கலாச்சார த். தூ.. யவர்கள் நூற்றுக்கு நூறு எடுப்பார்கள் என நம்புவோமாக..." என்று அடுத்தவர் மனசாட்சிக்குள் புகுந்து பார்க்க ஆசைப்படுகிறீர்கள். உங்கள் தளமும் என் தளமும் வேறென்று... மேலும் பார்க்க...

said...

கேள்விகளுக்கு நன்றி! தமது ஆணாதிக்கக்கூறுகளை ஒருவர் எதிர்கொள்ள இவை உதவலாம்.

said...

குழலி, தங்களைப் பற்றி ஒருவர் தெரிந்து கொள்ள ஒரு கையேட்டைப் போல கேள்விகளை தொகுத்திருக்கீங்க. அதற்கு நன்றி.

என் வீட்டில் கணவர் பாஸ் பாஸ் தான்! (Boss, Boss இல்லை, pass, pass!) :-)

said...

At 7:42 PM, inomeno said…
நிங்கள் இதுவரையிட்ட பதிவுகளில் இது சிறந்ததாக கருதுகிறேன்.நன்றி.


கண்டிப்பாக சொல்லலாம். சமீப காலங்களில் வரும் பல வெட்டிப் பதிவுகளுக்கு மத்தியில், ஒரு சமூக அக்கரையோடு, சுய அலசலோடு கூடிய நல்ல ஒரு பதிவு. குழலி - இதற்காக நீங்கள் கண்டிப்பாக பெருமைப்பட்டுக்கொள்ளலாம்... பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
(அதேநேரத்தில் - இந்தப்பெருமையை தற்காக்கவேண்டிய பொறுப்பும் இனி உங்களுக்கு இருக்கிறது என்பது நான் சொல்லனுமா என்ன:)

8:28 AM
Ramya Nageswaran said...

என் வீட்டில் கணவர் பாஸ் பாஸ் தான்! (Boss, Boss இல்லை, pass, pass!) :-)


ரம்யா கொடுத்துவைத்தவர்தான்... வாழ்த்துக்கள்.

said...
This comment has been removed by a blog administrator.
said...

வேல்ராம்ப்ட்டு முருகனை காப்பாற்ற கூப்பிட்ட அனானி உங்கள் கருத்து நீக்கப்படுகின்றது...

said...

டிஹுவானா-வும், பஹ்ரம்ப்-உம் செல்ல கனவு காணும் நான், ஸ்ட்ரிப் க்ளப் சென்ற நான், லாப் டான்ஸ் பெற்ற நான், பெண்களின் (திறந்த) மார்பை உற்றுப் பார்க்கும் நான், நண்பர்களோடு XXX பார்த்த நான், இணையத்திலிலிருந்து போர்னோவை இறக்கும் நான், டீவியில் XX பார்க்கும் நான், கல்லூரியில் 'பலான' புத்தகம் படித்த நான், காமசூத்திரம் நூலை படித்த நான், 30 வயதான மணமாகாத, (படித்த) ஆண்.

1. பதின்ம வயது தொடங்கி மணமாகும்வரை என் பாலுணர்வைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நான் என்ன முற்றும் துறந்த முனிவனா?

அய்யா, நானொரு சராசரி ஆண்.

2. மேனைகைகள் என் முன்னால் நடமாடும்போது நான் விசுவாமித்திரனானால் தவறா?

என்னுடைய ஆப்ஷன்ஸ்தான் என்ன?

1. ஒரு ஒழுக்கமுள்ள மனைவியை எதிர்பார்த்தால், நானொரு ஹிப்போக்ரைட்?

2. வரப்போகும் மனைவியின் குணத்தைப் பற்றி பெரிதும் கவலைப்படவில்லையென்றால், நான் உலகத்தை புரிந்தவனா?

தெரியலையேப்பா.....

said...

குழலி,
"Moderate" என நான் என்னை கருதிக்கொண்டாலும் உங்களது கேள்விகள் நானும் மாற எவ்வளவோ உண்டு என புரிந்துகொண்டேன். நன்றிகள் பல.

very honest!!:)

said...

1. ஒரு ஒழுக்கமுள்ள மனைவியை எதிர்பார்த்தால், நானொரு ஹிப்போக்ரைட்?


How do you define ozhukkam? you are 30 years old and have been controlling your feelings. same applies to other party!!! if you can't be sadhu, nor can others.

what happens to women expecting "ozhukkam vaaintha kanavan"?

you don't have guts to reveal your name? how pathetic!!!

said...

ஸ்ட்ரிப் க்ளப் சென்ற நான், லாப் டான்ஸ் பெற்ற நான், பெண்களின் (திறந்த) மார்பை உற்றுப் பார்க்கும் நான், நண்பர்களோடு XXX பார்த்த நான், இணையத்திலிலிருந்து போர்னோவை இறக்கும் நான், டீவியில் XX பார்க்கும் நான், கல்லூரியில் 'பலான' புத்தகம் படித்த நான், காமசூத்திரம் நூலை படித்த நான்,


This is what women are trying to start doing.. you men have been doing it for a long long time and that is "included" in the culture without a single noise?

said...

குழலி,
கலாச்சார புரட்சீ காரர்கள் அளவுக்கு 100/100 இல்லைன்னாலும் நான் கணிசமான மார்க்குகள் பெற்றிருப்பது தெரிகிறது.இன்னும் முன்னேற முடியும் என்றும் தெரிகிறது.சுய சோதனைக்கு வித்திட்ட உங்களுக்கு நன்றி.

said...
This comment has been removed by a blog administrator.
said...

//Ungaloda homepage padikka mudiyala. everytime I have to download pdf or I have to read as archive. but, it is fine when i read the archives/archive mode. comments are fine too. is there any setting i have to do?
//
Hi Premalatha,
I added dynamic font in my blog, if still you are not able to view the page,could you please gothrough the Font Help for browser settings.

said...

உங்கள் கேள்விகள் நல்ல கேள்விகள்.
ஆனால் அதை கேட்பதின் மூலம் உங்களின் முந்தைய குஷ்பு பதிவில் சிதறிய வார்ததை பிறழ்வுகளை நியாயப் படுத்தாதீர்கள். உங்கள் வாதம் நீங்கள் ஒருததனும் சரியில்லை ,அதனால் என்னைப் பற்றி பேசாதே என்பதாக எனக்குப் படுகிறது.

மற்றபடி பலரால் உங்களின் கேள்விகளுக்கு ஆம் என முடியும் . ஆனால் மொத்த தமிழ் மக்கள் கண்டிப்பாக failயாகத் தான் செயவார்கள். பெரும்பான்மயோர் செய்யும் யாதார்த்த்ம் என்பதற்காக செய்யும் தவறை ஒத்துக் கொள்ள வேண்டும் என்றில்லை. நல்ல முன்னேற்றத்துக்கு செய்யும் தவறுகளை
முதலில் தவறு என ஒத்துக்கொள்ள வேண்டும் .அதைத் தான் நாங்கள் செய்து கொண்டு இருக்கிறோம் ,தவறே செய்ய வில்லை என்று சொல்லவில்லை.

said...

உங்கள் கேள்விகள் நல்ல கேள்விகள்.
ஆனால் அதை கேட்பதின் மூலம் உங்களின் முந்தைய குஷ்பு பதிவில் சிதறிய வார்ததை பிறழ்வுகளை நியாயப் படுத்தாதீர்கள். உங்கள் வாதம் நீங்கள் ஒருததனும் சரியில்லை ,அதனால் என்னைப் பற்றி பேசாதே என்பதாக எனக்குப் படுகிறது.

மற்றபடி பலரால் உங்களின் கேள்விகளுக்கு ஆம் என முடியும் . ஆனால் மொத்த தமிழ் மக்கள் கண்டிப்பாக failயாகத் தான் செயவார்கள். பெரும்பான்மயோர் செய்யும் யாதார்த்த்ம் என்பதற்காக செய்யும் தவறை ஒத்துக் கொள்ள வேண்டும் என்றில்லை. நல்ல முன்னேற்றத்துக்கு செய்யும் தவறுகளை
முதலில் தவறு என ஒத்துக்கொள்ள வேண்டும் .அதைத் தான் நாங்கள் செய்து கொண்டு இருக்கிறோம் ,தவறே செய்ய வில்லை என்று சொல்லவில்லை.

என்னுடைய பதிவு http://koothaadi.blogspot.com/

said...

போட்டோ எல்லாம் போட்டு கலக்குறீரு !

said...

//போட்டோ எல்லாம் போட்டு கலக்குறீரு !
//
ஹி ஹி ஒரு சின்ன குழப்படி நடந்துவிட்டது அதான்...

said...

எல்லாம் தெரிந்த இறைவா
குழலி ஒரு ஆண் என்பதும், அவரின் படம் இந்த பதிவுகளிலே இருப்பதை பற்றி அறியாமல்
Ms குழலி என்று அழைக்கிறீரே இது நியாயமா ?

said...

முதல்ல About Me படிங்க !
அப்புறம் நீங்க மத்தவங்கள கரையேத்தலாம் !!
:-))

said...

தன்னைத்தானே அலசிக்கொள்ள கேள்விகளை எழுப்புவது, தன் கருத்தை நிலைநிறுத்த உதவும் பதில்களுக்கான கேள்விகளைத் தயாரிப்பது - இந்த விஷயத்தில் நீங்கள் எந்தக் கட்சி என்று எனக்கு விளங்கவில்லை.

//மேலும் ஆணாதிக்கத்தின் அளவுகோலே யாரையாவது திட்டுவதும் ஆதரிப்பதும் என்ற மட்டையான அளவீட்டையும் மறுதலிப்பதற்காகத் தான் இந்த பதிவு,//

//31. பொம்பளைனா புடவை கட்டனும் ஆம்பளைனா வேட்டி கட்டனும் என்று தனக்கு மிகப்பிடித்த திரைப்பட நடிகன் வசனம் பேசும் போது அதனை அருவெறுப்பாக பார்த்துள்ளோமா?//

//இவர்கள் என்ன செய்துவிட்டார்கள் என தினமலர் இந்த குதி குதிக்கின்றது?!//

//எனக்கென்ன ஒரு வருத்தம் குஷ்புவிடம் என்றால் அதென்ன கல்யாணம் ஆவதற்கு முன்பு (மட்டும்) என ஒரு கால வரையறை கல்யாணம் ஆன பின்பும் வேறு ஆண்களுடன் உறவு கொள்வது என்ன பாவமா?!

இத்தனை நாட்கள் குஷ்புவிற்கு கோவில் கட்டிய தமிழ்ரசிகர்களின் மீது எனக்கு ஒரு விதமான ஏளனமான பார்வை இருந்தது, ஆனால் இப்படிப்பட்ட ஒரு புரட்சிப்பெண்ணிற்கு தான் கோவில் கட்டினார்கள் என்பதற்கு என் தமிழ் ரசிகர்களை பார்த்து பெருமிதம் கொள்கின்றேன்.//

வெட்டி வெட்டி ஒட்டுவது நன்றாயில்லைதான் - ஆனால் உங்கள் சமீபத்திய சில பதிவுகளைப் படித்தபின், இந்த கேள்விப்பதிவைப் படித்ததும், சரி pattern recognition என்பது அவ்வளவு வெறுக்கத்தக்க விஷயமில்லையோ என்று தோன்றியதால் இந்தப் பின்னூட்டம்! சிலமாத தமிழ் வலைப்பதிவு(வர்கள்)களைப்பற்றி நீங்கள் செய்துள்ள pattern recognition வழியாகவும் சில கேள்விகள் வந்திருப்பதாகத் தோன்றுவதால்தான் இப்படியொரு குழப்பமான பின்னூட்டம். குழம்பித் தெளிக, அல்லது தெளிந்து குழம்புக, அல்லது தெளிவிக்க அல்லது எனக்கு விக்க ;-)

said...

நல்ல கேள்விகள் குழலி,

எவ்வளவு தான் முற்போக்கு .. அது இது என்று பேசினாலும்... சில விஷயங்களை ஓதுக்கினாலும்..பல இடங்களில் பெற்றோர், சூழல் ஆகியவற்றால் சமாதானம் செய்துக்கொள்ள வேண்டியுள்ளது..

fail தான் வருகிறது..

இந்த பதிவோடு குஷ்புவின் பதிவுகள் ஓய்ந்தால் நலம்.. ! :)

said...

அன்பின் குழலி,
கற்பு என்பது உண்மை. அதாவது உண்மையாயிருத்தல்.

ஆண், பெண் என்ற இரு தொடைகளுக்குள் அடைபட்டு குறுகிவிட்ட இந்த வார்த்தைக்கு உண்மையில் பரந்து விரிந்த பொருள் இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
இதில் பால் வேறுபாடுகளை கலக்காமல் பார்த்தால் ஒவ்வொருவரும் தான் சம்பந்தப்படுகிற ஒவ்வொன்றிலும் (அ) ஒவ்வொருத்தருக்கும் உண்மையாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் இவ்வுலகினூடே கடந்துசெல்கிற காட்சிகளில் கவனம் பிசகி தன்னுணர்வு இன்றி அறியாமல் 'நிகழ்ந்து' விடுகிற விபத்துக்களை விட்டுவிட்டால், மனப்பூர்வமாக உண்மையாக இருப்பதற்கு முழுமனதுடன் முயற்சிக்கவாவது செய்ய வேண்டும்.

தம்பதிகள் ஒருவருக்கொருவர் உண்மையாக இருப்பது மட்டுமின்றி, பெற்றோர் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் உண்மையாக இருப்பது, நண்பர்கள் ஒருவருக்கொருவர் உண்மையாக இருப்பது, நிறுவனமும் ஊழியர்களும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருப்பது என்று விரிக்கப் பெருகும் பொருள் அது.

இங்கு ஆன்மிகம் தீண்டத்தக்கதா என்று தெரியவில்லை. தீண்டத்தக்கதெனில்,

ஆன்மீகப்படி, உலகில் நாமனைவரும்
நாம் சம்பந்தப்பட்டுள்ள ஒவ்வொருவருடனும் 'கற்பு' பேண கடமைப்பட்டுள்ளோம். இதை சுருக்கமாக சொன்னால், ஒருவன் தன் இறைவனுக்கு உண்மையாக இருந்தாலே போதும். அவனுக்கு, மற்ற அனைவருடனும் உண்மையாக இருப்பது எளிதாகவும் இயல்பான கடமையாகவும் ஆகிவிடுகிறது.

"நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள், உங்கள் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்" என்று என் மதத்தில் சொல்லப்பட்டிருப்பதை நம்புகிற நான், என்னாலியன்றவரை என் பொறுப்புகளை சரிவர நிறைவேற்ற முயலுகிறேன். அதையே 'கற்பு' என்று கருதவும் செய்கிறேன். பொறுப்புகளை சரிவர நிறைவேற்றுவது என்பது, பொறுப்பின்மையாக செயல்படாதிருப்பதையும் குறிக்கும்.


"இறைவனுக்கான வழிபாடுகள்; வணக்கங்களில் குறை வைப்பதை இறைவன் நாடினால் மன்னித்து விடலாம்.(அவன் அளப்பெரும் கருணையாளன்). ஆனால், சக மனிதனுக்கு குறை வைத்தால், அந்த மனிதன் மன்னிக்காத வரை இறைவனும் மன்னிக்க மாட்டான்' என்பதை என் மதம் எனக்கு சொல்லித்தந்துள்ளது. இவ்வாறே அனைத்து மதங்களும் சொல்லியிருக்க கூடும். இதை உணர்ந்து நடந்துக்கொள்ளும் போது, சுமூகமான சமூகம் சாத்தியமாகிறது. வெறுப்பு மறைகிறது. அந்த ஆதிக்கம், இந்த ஆதிக்கம் என்பதும் இல்லாமலாகி விடுகிறது.

(ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் என்று பேசுகிற பதிவில் சம்பந்தமில்லாமல் ஆன்மீகம், கற்பு என்று கதைப்பதாக நீங்கள் கருதினால், தயைகூர்ந்து இப்பின்னூட்டத்தை அழித்துவிடுங்கள்). நன்றி.

said...

நிறைய பேர் பள்ளிக்கூடத்தில் வஞ்சப்புகழ்ச்சி அணியை சாய்ஸ்-ல் விட்டு விட்டார்கள் போலிருக்கிறது.

said...

அருமையான பதிவு குழலி... வாழ்த்துக்கள்...

said...

துணையின் படம்போட்ட சங்கிலியை அணிந்துகொள்வது என்ற காதல் மிகுந்த யோசனை ஒன்றை தந்ததற்கு மிகவும் நன்றி.நனும் வளர்ந்து பெரியவனான பிறகு எனது வாழ்க்கைப்பங்காளியின் படம் போட்ட சங்கிலி அணிந்துகொள்வேனே....

//கம்யூனிச கொள்கையை இந்தியாவில் முழுமையாக கடைபிடிக்க முயற்சி செய்யும் போது அங்கே அரசியல்,சமூகம், தன் வாழ்வு, தன் குடும்பத்தின் வாழ்வு என எத்தனையோ புறக்காரணிகளும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, ஆனால் மேலே உள்ள கேள்விகளுக்கு ஆம் சொல்லி கடைபிடிக்க நம் ஒரு ஆள் ஒரே ஆள் போதும், இதனால் பாதிக்கப்படப்போவதும் யாரும் இல்லை, அதனால் இந்த ஆணாதிக்க விடயத்தில் வெறுமனே கொள்கை ஆதரவு என்று பேச்சில் மட்டுமில்லாமல் நடைமுறையிலும் கடைபிடிக்கலாம் யாரையும் பாதிக்காமலே...//

அப்படி இல்லை குழலி,

ஆணாதிக்க அரசியல் தனி மனிதர் சம்பந்தப்பட்டதில்லை.
அதனால்தன் அது இப்படி இறுகித்தடித்துப்போய் இருக்கிறது.

ஆரசியல் இயக்கங்களையும் ஆயுதப்போராட்டத்தையும் வேண்டிநிற்கிறது.

பெண்ணடிமைத்தனத்தை தனிமனிதர்களால் அவ்வளவு இலகுவாக அழித்துவிட முடியாது.

ஆணாதிக்கம் ஏதோ துணைவன்-துணைவி இடையே மட்டும் இருப்பதுபோல உங்கள் பதிவு சொல்ல முனைகிறது.

அது அரசியல்ரீதியாக, கலாசாரரீதியாக, நன்கு நிறுவனமயப்படுத்தப்பட்ட அதிகாரமாக இருக்கிறது.

அந்த நிறுவனமயப்பட்ட அதிகாரத்தை ஏதோ உள்வீட்டு பிரச்சனை போல "அமரிக்க" பாணியில் பூசி மெழுக முயற்சிக்கிறீர்கள்.

பெண்ணடிமைத்தனத்தும்மும் தனித்தனி ஆண்களுக்கும் அப்படி அதிகளவு சம்பந்தம் ஏதாவது இருக்கும்போல படவில்லை.

ஆணாதிக்கம் என்ற சொல்லின் ஊற்றுமூலம் "தந்தைவழி ஆதிக்கம்" என்பதே.

said...

எத்துனைப் பெண்கள் தங்கள் கணவனுக்காக தங்கள் பெற்றோரை அடக்கி உள்ளன்ர்?
மேலும் ஆண்களே உங்கள் பெற்றோரை உங்கள் மாமனாரின் வீட்டாறிடம் கேள்வி கேட்பதிலிறுந்து தடுக்காதீற்கள், இல்லியெனில் சங்கு ஊதி விடுவார்கள்.
எது எப்படி இருந்தாலும் உங்கள் துனைவி தான் உங்கள் முதல் குழந்தை என்பதை மறக்காதீற்கள். உங்களின் குடும்பத்தில் இருப்பவற்களை உங்களின் அன்பெனும் ஆண்மையால் வெற்றி நடையிட்டுச் செல்லுங்கள்.
பெண்களே நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு(திறுமணத்திற்கு பிறகு) எது சறியோ அதற்கு ஏற்றார் போல பிடிவாதம் பிடியுங்கள்