வன்முறை என்பது வெறும் இரத்தத்தின் தெறிப்பா?!

//ஒவ்வொரு சமூகத்திலும் ஒரு சில ஊடகங்கள் மூலம் அரசியலதிகாரம் கைப்பற்றப்படுகிறது. இது வன்முறையற்றதாக இருக்கிறது என்ற ஒரு காரணத்துக்காகவே இதனை ஆதரிக்கவும் நான் (தனிப்பட்ட முறையில்) செய்கிறேன்.//

http://www.thinnai.com/pl0930053.html திண்ணை இணைய இதழில் சின்னக்கருப்பன் அவர்கள் கலாச்சார புரட்சியாளர்களும் கலாச்சார காவலர்களும் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் இடம் பெற்ற சில வரிகள், அந்த கட்டுரையின் மற்ற வரிகளுக்குள் போக விரும்பவில்லை, மேற்குறிப்பிட்ட வரிகளில் கட்டுரையாளர் உடல் சார்ந்ததாக குறிப்பிடுகிறார் என்று புரிந்து கொண்டுள்ளேன். மேற்கண்ட வரிகளில் என் புரிதல் தவறெனில் திருத்திக்கொள்கின்றேன்.

வன்முறை என்பது உடல் சார்ந்தது மட்டுமே என்பது போன்ற கருத்துகள் பலரிடமும் பரவியுள்ளன.

வன்முறை என்பதன் அளவுகோல் உடலளவில் துன்பப்படுத்துவது மட்டுமே என்ற கருத்தை என்னளவில் ஏற்றுக்கொள்ள இயலவில்லை, வன்முறை என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல, வன்முறைகளின் வடிவம் பல, அதில் உடல் சார்ந்த வன்முறையும் ஒன்று, ஆனால் பலர் உடல் சார்ந்ததை தவிர மற்றவைகள் வன்முறை என்ற வரையரையில் கொண்டுவரவில்லை.

தீண்டாமை, இரட்டை குவளை முறைகள் வன்முறையில்லையா?, இங்கே இரத்தமில்லை, யாரும் உடலளவில் யாரையும் காயப்படுத்துவதில்லை(சாதிக் கலவரம் வேறு) அதற்காக இந்த தீண்டாமை வன்முறையல்ல என்று கொள்ள முடியுமா?

ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட சிலர் மீது குறிவைத்து நடத்தும் தாக்குதல்கள், பொது மக்களிடம் குறிப்பிட்ட சிலரை பற்றி தவறான உருவகத்தை பதியவைக்க வேண்டும் என்று பத்திரிக்கை தர்மத்தை மீறி வெளியிடும் தவறான தகவல்கள் அதனால் ஏற்படும் சேதம் ஊடகங்களின் வன்முறையல்லவா? நேர்மையற்ற முறையில் ஒரு சில ஊடகங்கள் மூலம் அரசியலதிகாரம் கைப்பற்றப்படுவது ஊடகங்கள் சமுதாயத்தின் மீது நடத்தும் வன்முறையல்லவா, இங்கேயும் கூட கத்தியில்லை, இரத்தமில்லை உடலளவில் துன்பமில்லை, அதற்காக இது ஊடக வன்முறையல்ல என்று உருவகித்துக் கொள்ள இயலுமா?

சனாதானம்,மனு நீதி என்ற பெயரில் கடவுள் குடி கொண்டிருக்கும் கோவில்களிலும் கூட உரிமைகளை மறுப்பது என்பது வன்முறையல்லவா? இங்கும் கூட கத்தி, இரத்தமில்லை தான், அதற்காக இது வன்முறையல்லவா?

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் விமர்சிப்பதும், தீய கருத்துகளை சொல்லி பலரை மனதளவில்,உணர்ச்சிகளை காயப்படுத்துவதும் வன்முறை என்ற அளவீட்டில் அடங்காதவையா?

மொழி திணிப்பு, மொழிகளை நீச மொழி என்பது, தாய்மொழியில் கோவில் குடமுழக்கு நடத்தினால் பாவம் என்பதெல்லாம் மொழிகளின் மீது நடத்தப்படும் மொழி வன்முறையில்லையா? இங்கும் கூடத்தான் உடல் சார்ந்த துன்பப்படுத்துதல் இல்லை.

இராசதந்திரம் என்ற பெயரில் இழைக்கப்படும் துரோகங்கள் எல்லாம் வன்முறையல்லவா? இரத்தம் தெறிக்காமல் இருப்பினும்.

வியாபார தந்திரம் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் சந்தையை கைப்பற்றுதலில் கூட உடல் காயப்படுவதில்லை தான், ஆதலால் இது வன்முறையல்ல என்றாகிவிடுமா?

வன்முறை என்பது வெறுமனே உடல் சார்ந்தது என்று மட்டும் சுருக்கிவிடாதீர்கள், வன்முறையின் ஒரு வடிவம் தான் உடல் சார்ந்த துன்பம், மேற்குறிப்பிட்டது போன்ற வேறு பல வடிவங்களும் வன்முறைக்கு உள்ளன.

33 பின்னூட்டங்கள்:

said...

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

புண்ணைவிட வடுக்களின் வாசம் அதிக காலம்.
தெளிவாகச் சொன்னீர்கள்

said...

நன்றி தாணு,

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

பதிவிற்கு பொருத்தமான குறளை தந்தமைக்கு நன்றி

said...

A different, yet impressive view.

Good post kuzhali.

said...

//நேர்மையற்ற முறையில் ஒரு சில ஊடகங்கள் மூலம் அரசியலதிகாரம் கைப்பற்றப்படுவது ஊடகங்கள் சமுதாயத்தின் மீது நடத்தும் வன்முறையல்லவா//

100% சரி.

said...

வன்முறை என்பது வெறுமனே உடல் சார்ந்தது என்று மட்டும் சுருக்கிவிடாதீர்கள், வன்முறையின் ஒரு வடிவம் தான் உடல் சார்ந்த துன்பம், மேற்குறிப்பிட்டது போன்ற வேறு பல வடிவங்களும் வன்முறைக்கு உள்ளன.
பல வடிவங்களை காணலாம்.

said...

நல்ல பதிவு குழலி. மீடியாவின் வன்முறைக்கு ராம்வாட்சரை பார்க்கலாமே! அது எத்தனை பேரை அழித்தொழிக்கிறது; எத்தனை குழந்தைகளை அனாதையாக்குகிறது என்பதை எல்லாத் தளங்களையும் கூர்ந்து கவனித்தால் (அந்தத் தேவை இருந்தால்) புரியும்.

said...

சின்னக்கருப்பன் (இதுவும் ஒரு முகமூடிப் பெயர்தான். நிஜப்பெயர் அல்ல) சுவாரசியமான இந்து கலாச்சார சனாதானி. இந்துத்துவ கருத்தியலோடு ஜீன், பரிணாமவியல் போன்ற அறிவியல் வார்த்தைகளை கலந்து பிசைந்து உருட்டிய சாணி உருண்டைகளை திராவிட/விளிம்பு நிலை அரசியல் மீது எறிவதே இக்கட்டுரையின் நோக்கம். இந்த விவகாரத்தில் அடித்துக்கொண்ட இரு சாராரையும் ஒரே சாணியுருண்டையில் அடித்து வீழ்த்தும் சாகசமும் கவனிக்கத்தக்கது. இந்த அபூர்வமான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் அவசரத்தில் இதே விவகாரத்தில் முத்துக்களை உதிர்த்த பாஜகவினரை மறந்துவிட்டதும் தற்செயலானதல்ல.

சிகவின் மரபணுவியல், பரிணாமவியல் அறிவும், புரிதலும் ஆழமற்றது என்பது அறிவியல் பயிற்சியுடையவர்கள் ளிதில் புரிந்துகொள்ளக்கூடும். ஆனால் இதில் சராசரி வாசகன் மிரண்டுபோய் "இதுல ஏதோ விஷயம் இருக்கும்போல" என்று கைத்தட்டக்கூடும். இதுவும் தமிழ் அறிவுச் சூழலின் இன்னொரு அவலம்.

said...

// சின்னக்கருப்பன் (இதுவும் ஒரு முகமூடிப் பெயர்தான். நிஜப்பெயர் அல்ல) சுவாரசியமான இந்து கலாச்சார சனாதானி //

சில சமயங்களில் தனியாக அலசப்படும் அளவு விஷயம் கொண்டிருக்கும் நிலையில், ஒரு கட்டுரையின் ஒரே ஒரு வரியை தனியாக அலசலாம். தப்பில்லை... இங்கும் ஒரு கட்டுரையின் ஒரே ஒரு வரி அலசப்படுகிறது... ஆனால் அந்த "அலசல் குறித்த விவாதத்தில்", ஒரிஜினல் கட்டுரை முழுவதும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாத ஒரு இடத்தில், ஒரிஜினல் கட்டுரையாளரின் பெயர், ஊர், கலாச்சாரம், அவர் போடும் சட்டை, அவருக்கு பிடித்த உணவு முதலியவை குறித்தெல்லாம் பேசப்படுகிறது... திராவிட/விளிம்பு நிலை அரசியல் மீதுள்ள தமது பற்று வேறு பிரகடனப்படுத்தப்படுகிறது (இன்னிக்கி தேதியில கூட்டம் சேர்க்க இதான் மச்சி ஹாட்)

"ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட சிலர் மீது குறிவைத்து நடத்தும் தாக்குதல்கள், பொது மக்களிடம் குறிப்பிட்ட சிலரை பற்றி தவறான உருவகத்தை பதியவைக்க வேண்டும் என்று பத்திரிக்கை தர்மத்தை மீறி வெளியிடும் தவறான தகவல்கள் அதனால் ஏற்படும் சேதம் ஊடகங்களின் வன்முறையல்லவா?" என்ற உங்களின் கேள்விக்கு இதையும் உட்படுத்தலாமா திரு. குழலி?

said...

ஒரு தகவலுக்காக:
என்னுடைய முந்தைய பின்னூட்டத்தை சின்னக்கருப்பனின் முழுகட்டுரையும் மீள்பதிவு செய்யப்பட்டுள்ள அரவிந்தன் நீலகண்டனின் பதிவிலும் ஒரே நேரத்தில் பதிவு செய்திருக்கிறேன். இங்கு அதைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் அங்கு போய் முழுக்கட்டுரையையும், பின்னூட்டத்தையும் ஒருசேர படித்துக்கொள்ளலாம்.

said...

//இந்தி படிக்க உடாம இங்கேயே தமிழ் நாட்டிலேயே அல்லாடிக்கிட்டிருக்கோம்..//

நீங்க இருப்பது எந்தத் தமிழ்நாடு?
ஏன் இந்தி படிக்க காசில்லையா? அல்லது அப்பா அம்மா விடுறாங்களில்லயா?
உங்க அல்லாடுறதுக்கான காரணத்தச் சொன்னா நம்மளால ஆன உதவியச் செய்யலாமுன்னுதான் கேக்கிறேன்.

said...

nice post. keep it up Kuzhali!

said...

அருமையான பதிவு குழலி.

வார்த்தைகளின் சக்தியும், அதைக் கேட்டு அல்லாடுறமனமும்.....ம்ம்ம்

வன்முறை வெறும் உடல் சார்ந்தது அல்ல.

said...

இன்று பொத்தாம் பொதுவான அறிவியல் நாணயம் எங்கும் கிடையாது!இஃது அனைத்துத் தளத்திலும் அதீதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.மேலைத்தேய மரபானது கீழைத்தேயத்தை எப்படிக் கீழ்மைப்படுத்திக் கருத்தியல்கட்டியுள்ளதோ,அதற்குக் குறையாத வகையில் இந்துமதப் பரிவாரங்கள் நமது மக்களின் மரபுசார்ந்த வாழ்வைப் பாழ்படுத்தியுள்ளது.

திரு.சுந்தரமூர்த்தி அவர்கள் குறித்துரைக்கும் கருத்துக்கள் யாவும் நேர்மையான சிந்தனையாளரின் கருத்தாகவே வெளிவருகிறது.அவர்கூறிவது யாவும் சரியானது.

இன்றைய விளிம்பு நிலை மக்களின் வாழ்வைச் சிதைக்கும் அதிகாரத்துவத்தைக் கொண்டிருக்கும் ஆளும் வர்க்கங்களுக்கு இனமேன்மையும்-மதமேலாண்மையும் தேவையாகி வருகிறது.இதைச் சாத்தியமாக்கும் கருதுகோளுக்குப் பரிணாமா அறிவைத் துணைக்கழைக்க மேற்குலகம் முனைகிறது.

லாமார்க்ஸ் காலத்திலிருந்து தொடங்கிய இந்த இனவாதப் புலம்பல் சிம்சன் வரை நீடித்து டார்வினைக் கரையொதுக்க முனைந்த வரலாறு வெறும் தற்செயல் நிகழ்வல்ல.

இன்றைய இயற்கை விஞ்ஞானத்தால் முற்றுமுழுதானவொரு பரிணாமத்துவ உயிரியல் வரைவுப்படத்தைத் தொட முடியாது.

இப்படித் தொட்டவர்கள் இந்தவுலகத்தில் எந்த மூலையிலுமில்லை.இது இப்படியிருக்கும்போது'சமூகப் பண்பாட்டு உயிரியின் பரிணமம்'குறித்து இன்றைய இந்துமதப் பரிவாரங்கள் தமது 'எஜமானக் கருத்தியல்' மீள்கட்டுமானத்துக்கு எவ்வழியிலும் முனைந்து வருவது காரணத்தோடுதாம்.அவர்களினது ஆரோக்கியமற்ற இன்றைய சமூகவொழுங்குகள் விளிம்பு மனிதர்களால் உடைத்தெறியப்படும்போது,இவர்தம் இருப்பை யோசித்துப்பார்க்கவும்.பயம்,உளமேலாத்திக்க தன்முனைப்பாக மாறும்போது-அதுவே பற்பலப் பித்தாலாட்டத்தைச் செய்யத் தூண்டுகிறது. இது குறித்து நீண்ட விவாதம் தொடர்ந்தால் அவ்விவாதத்தை எதிர்கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

ப.வி.ஸ்ரீரங்கன்.

said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி,

//வியாபார தந்திரம் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் சந்தையை கைப்பற்றுதலில் கூட உடல் காயப்படுவதில்லை தான், ஆதலால் இது வன்முறையல்ல என்றாகிவிடுமா?
//
பில்கேட்ஸ் முதல் பெப்சி வரை இந்த நேர்மையற்ற முறையிலான சந்தை கைப்பற்றுதலை நடத்துகின்றனர், உள்ளூர் பானங்களை ஒழித்து சந்தையை கைப்பற்ற ஒரே இரவில் (பல ஆண்டுகளுக்கு முன் படித்தது) உள்ளூர் குளிர்பான கண்ணாடி புட்டிகளை வாங்கி கண்ணாடி புட்டி தட்டுப்பாட்டை உண்டாக்கி அந்த நிறுவனத்தையே செயலிழக்க வைத்தனர்.

சந்தைக்கு வந்த முதல் சில ஆண்டுகளுக்கு மிகக் குறைந்த விலையில் பண்டத்தை வழங்கி மற்றைய நிறுவனங்களின் பொருட்களை அழித்துவிட்டு மோனோபாலி யாக சந்தையில் நிற்கும் போது விலையேற்றுகின்றனரே இதெல்லாம் வியாபார தந்திரம் அல்ல, நேர்மையற்ற சந்தை கைப்பற்றுதல்.

இறைவன் உங்கள் மற்ற கேள்விகளுக்கான பதில்களை நேரம் கிட்டும் போது தனிமடலில் அனுப்புகின்றேன்.

நன்றி

said...

//I see a good feminist in you.
//
என் மனசாட்சி அறிந்து, நான் ஃபெமினிஸ்ட் என்பது உண்மை இல்லை, அதே சமயம் கடுமையான ஆணாதிக்கவாதியும் அல்ல, கட்டுப்பாடுகளை உடைக்க முடியாத அல்லது சில சமயங்களில் விரும்பாதவன்.
//I am afraid that you are making the same mistake which periyar and Marx did
//
அவங்கெல்லாம் ரொம்ப பெரியவங்க, அவர்கள் செய்த சாதனைகள், தியாகங்கள்,சிந்தனைகள், சித்தாந்தங்கள் மிக மிக பெரியன, அதைப்பற்றியெல்லாம் முழுமையாக படித்தது கூட இல்லை... அவர்களை சொந்த வாழ்க்கையில் பல சமயங்களில் பின்பற்றுவது கூட இல்லை

எனக்கு கடந்த சில ஆண்டுகளாகவே கடவுள் நம்பிக்கை குறைந்து கொண்டு வருகின்றது, ஆனாலும் எனக்குள்ளாகவே வலுக்கட்டாயமாக கடவுள் நம்பிக்கையை பிடித்துக் கொண்டுள்ளேன், எங்கேயாவது, எப்போதாவது கடுமையாக தோற்கடிக்கப்படும் போதும், வீழும் போதும், என் கையை மீறி நிலமை மோசமாகும் போதும் என்னை பொறுத்த அளவில் கடவுள் நம்பிக்கை இதிலிருந்து என்னை மீட்டு வர உதவும் என நம்புகின்றேன், வேறு வழியோ, பற்றிக்கொள்ள இடமோ இல்லாத சமயத்தில் நம்பிக்கை இழக்காமல் இருக்க கடவுள் நம்பிக்கை உதவும், இதற்கு உளவியல் காரணமாகவும் இருக்கலாம், புத்தி உண்மை நிலையை எடுத்து சொன்னாலும் மனசு கடவுள் நம்பிக்கையால் செயல்படும், இதற்காக கடவுள் பெயரால் நடத்தப்படும் அநீதிகளை மனதளவில் கூட என்னால் ஏற்கமுடியாது அதை மாற்ற முயலாவிட்டாலும்/முடியாவிட்டாலும்.

உங்கள் கருத்துகளுக்கு நன்றி இறைவன்

said...

குழலி சரியான குழப்பவாதி

said...

இன்றுதான் உங்கள் பக்கம் வந்தேன்
ஆழமான அழுத்தமான பதிவுகள் நிறைய.
மனிதனுக்கு இயலாமையும் பொறாமையும்
என்று தோன்றியதோ அப்போதே வன்முறையும்
தோன்றியிருக்கவேண்டும்,
வீட்டில் வெளியில் நடக்கும் நேரடியான மறைமுகமான
வன்மத்தனங்கள் ஏராளம்,
தூங்கும்போதுகூட மனிதன் சுத்த சுதந்திரத்துடன்
இருப்பது சந்தேகமே!

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...

முகமூடி ஒருவர் ஒரு கட்சிக்கு ஆதரவாக இருக்கும் காரணத்தினாலே அவர் சொல்லும் செய்யும் எல்லாவற்றுக்கும் கட்சியை இழுத்து அர்த்தம் கண்டுபிடிப்பதும் மிகப்பெரும் வன்முறைகளில் ஒன்று

said...

நல்ல பதிவு குழலி, வன்முறை பற்றி தெளிவாக கூறியுள்ளீர்கள்..அருமை..

இப்படி கலக்கல் பதிவு போட்டு எங்களை எல்லாம் திக்கு முக்காட வெக்கறீங்களே நீங்க, முகமூடி , இன்னும் சிலர்.. இது எந்த வகையான வன்முறை? ஹி ஹி .. just for fun ! :)

said...

அனானி பின்னூட்டமளிக்க வசதி வைத்திருப்பது என்னை பற்றிய கருத்தளிக்கவும், என் பதிவுகளை பற்றிய கருத்தளிக்கவும் மட்டுமே, மற்றவைகளுக்கு அனானி பின்னூட்டமுறையை பயன்படுத்த வேண்டாம்,

இரண்டு அனானி பின்னூட்டங்களும் முகமூடியின் பின்னூட்டத்தையும் நீக்குகின்றேன், மன்னிக்கவும் இதை கவனிக்கவில்லை தற்போது தான் கவனித்தேன்.

இனி என் எல்லா பதிவுகளிலும் அனானி பின்னூட்டங்கள் என்னை தவிர பிற தனி மனிதர்களை பற்றியதெனில் நீக்கப்படும்.

நன்றி

said...

ஈழநாதன். உங்கள் கருத்துக்கு நன்றி... ஆனா நைசா ஒரு கட்சிக்கு ஆதரவாக இருக்கும் என்று குறிப்பிடுகிறீர்களே, அது என்னை பற்றியா? எனில் எனக்கும் தெரிந்து கொள்ள ஆசைதான். எந்த கட்சி (ப.ம.க தவிர) என்று தெரியப்படுத்துங்களேன்..
;-))

said...

என்னங்க நீங்க குழலி சார் முகமூடியோட சொம்பாட்ட உள்குத்தை ஓக்கே பண்ணிருக்கீங்க. என்னோடதைமட்டும் நீக்கிட்டீங்க. சுந்தரமூர்த்தி சார் சொன்னது வெபரமா முகமூடி எழுதினபின்னாடி புரியுதுன்னு சொன்னதுக்கா நீக்கினீங்க. அதுலே தப்பா என்ன சொல்லீட்டேன்னு நீக்கினீங்க. என்ன இருந்தாலும் இது ரொம்ப ஓவருங்க. என்னவோ உங்க ப்ளாக். உங்க இஷ்டம்

said...

//என்னங்க நீங்க குழலி சார் முகமூடியோட சொம்பாட்ட உள்குத்தை ஓக்கே பண்ணிருக்கீங்க. என்னோடதைமட்டும் நீக்கிட்டீங்க.
//
பிற விமர்சனங்களை பிளாக்கர் கணக்கை பயன்படுத்தி எழுதவும் (ஏன் இப்படி சொல்கின்றேன் என்றால் இங்கே நான் உட்பட பலர் சொந்த பெயரில் எழுதுவது இல்லை, மேலும் பலர் மொத்த அடையாளங்களையும் மறைத்து எழுதுகின்றனர்) இதனால் பல குழப்பங்கள் குறையும், புரிந்து கொண்டிருப்பீர் என நம்புகிண்றேன்

said...

enna thala busy ya?? paarka mudiyala..

said...

குழலி என்பது பெட்டையா? அல்லது குழல் இலியா? அல்லது அலியா?

said...

வன்முறை என்பது ரத்தத் தெறிப்பு மட்டுமல்ல. குழலி சொன்ன அனைத்தும் வன்முறைகள்தான். அதே நேரத்தில் ரத்தத் தெறிப்பும் வன்முறைதான். அடுத்தவர் கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பொருள் இல்லை. ஆனால் அடுத்தவருக்கும் கருத்து இருக்கலாம் என்ற நினைப்பை மறந்து விளாசுவதும் வன்முறைதான்.

சுருங்கச் சொன்னால்நடுநிலைச் சிந்தனையோடு இல்லாத எந்தச் சொல்லும் செயலும் வன்முறைதான்.

said...

//குழல் இலியா? அல்லது அலியா?
//
வாங்க அனானி, பரவாயில்லை என்னை பற்றி எழுதுங்க, ஆனால் மற்றவர்களை பற்றி பெயரில்லாமல் குறைந்த பட்சம் என் பதிவில் எழுதாதீர்கள், என்னை பற்றிய உண்மை விமர்சனம் எழுதினால் கருத்தில் எடுத்துக் கொள்வேன் காழ்ப்புணர்ச்சியெனில் .யிர் க்கு சமானமாக நினைத்து அலட்சியப் படுத்துவேன்...

23 இணை குரோமோசோம்களில் ஒரே ஒரு குரோமோசோம் சேட்டை செய்திருந்தாலும் கூட நீங்களும் இந்த நேரத்தில் அப்படித் தான் இருந்திருப்பீர்.

said...

வன்முறை என்பது ரத்தத் தெறிப்பு மட்டுமல்ல. இன்னாசொல்லும் கடும்பேச்சும் மற்றவரின் மனதை நோகடிக்கும் செயல்களும் கூட வன்முறைதான்.

said...

kuzhali, I could see, you are writing more against brahmins.

they are not alone left reasons to make scheduled people this level. But also, in some other castes..

To speak generally, I am prefering not to mention case anywhere, except our bathroom.

What do you say ?