உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்பு ரணகளமா இருக்கு!

தலைவா நீங்க சூழ்நிலைவாதியா? சுயநலவாதியா? சந்தர்ப்பவாதியா?



ரஜினி மனதினுள்: போஸ்டர் ஒட்டி உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்பு ரணகளமா இருக்கு!

ரஜினி ரசிகர்கள் மனதினுள்: நீங்க பஞ்ச் டயலாக் பேசி பேசி, தேர்தலுக்கு தேர்தல் வாய்ஸ் கொடுத்து உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் எங்க உடம்பு ரணகளமா இருக்கு!

பொது ஜனம்: நல்லவேளை நாங்க தப்பிச்சோம் ரணமாகாம....

ஒரு வலைப்பதிவர்: அப்போது உடல் மண்ணுக்கு உயிர் ரஜினிக்கு என்று கூறிவிட்டு தலைவர் அரசியலுக்கு வரவில்லை, வரவே மாட்டார் எம்.எல்.ஏ கனவு மண்ணாகி போனவுடன் இப்போ சூழ்நிலைவாதியா? சுயநலவாதியா? சந்தர்ப்பவாதியா? என போஸ்ட்டர் அடிக்கும் இவர்கள் பெரிய சுயநலவாதியா? அல்லது ரசிகர்களை சொந்த பகை தீர்க்க பயன்படுத்திய ரஜினி பெரிய சுயநலவாதியா?

நன்றி
தினமலர்

தினமலர் சுட்டி

10 பின்னூட்டங்கள்:

said...

இதைச் செய்தவர்கள் யாரென்று எனக்குத் தெரியும்;

அவர்களை 2011 தேர்தலில் கவனித்துக் கொள்கிறேன்!

இறைவா என்னை (மட்டும்) காப்பாத்து.

said...

குழலி,

இந்த தலைப்பு நீங்க வைச்சதா? சூப்ப்ப்ப்ப்பர்....

ரணகளம் மட்டும் அல்ல..வீங்கியும் கிடக்கு..புரிய வேண்டியவங்களுக்கு புரியுமா?

ஞான்ஸ்,

:)))))

said...

1996ல் முதல்வர் பதவியை அவர் இழக்கவில்லை.கலைஞருக்கு கொடுத்தார்.

1998ல் அமைதியை அவர் இழக்கவில்லை.மக்கள் தான் அமைதி இழந்து 13 மாதமே நீடித்த ஒரு ஆட்சிக்கு போட்டனர்.

2004ல் அவர் தன்னம்பிக்கையை இழக்கவில்லை.யார் மேலும் தனக்கு நம்பிக்கை இல்லை,அதனால் யாருக்கும் ஆதரவு இல்லை என்று தான் சொன்னார்.

2006ல் அவர் இழக்க இருப்பது ரசிகர்களை அல்ல.அரசியலில் குதிக்கும் கனவோடு மன்றத்தில் இருக்கும் போலிகளை.உண்மையான ரஜினி ரசிகன் உயிர் போயினும் ரஜினியை விட்டு போக மாட்டான்.

1996ல் காங்கிரசை ஆட்சியில் அமர்த்த அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது மூப்பனாருக்கு தெரியும்.நரசிம்மராவ் மட்டும் ஒத்துக்கொண்டிருந்தால் சிதம்பரம் இன்று தமிழக முதல்வராயிருப்பார்.காங்கிரஸ்காரனே மறந்த காமராஜர் ஆட்சியை அவர் மட்டும் தான் நினைவு வைத்திருந்தார்.

தமக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று என்றும் அவர் ஆசைப்பட்டதில்லை.தமிழனுக்கு நல்ல ஆட்சி வேண்டும் என்று தான் ஆசைப்பட்டார்.



1996 டிசம்பரில் அவரிடம் தூர்தர்ஷன் டீவியில் இதே கேள்வியை தான் கேட்டனர்

கேள்வி:முதல்வர் பதவியை பிடிக்க சரியான சந்தர்ப்பம் வருகிறதே.இதை நழுவ விடுகிறீர்களே..

ரஜினியின் பதில்:ஹா ஹா ஹா...காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ள நான் அரசியல்வாதி அல்ல.

1996ல் இருந்து 2006 வரை வெற்றியோ தோல்வியோ தமது கொள்கையை அவர் மாற்றிக் கொள்ளவில்லை.

said...

இங்கே பிளாகில ஒருத்தரு - வைகோவும், விஜயகாந்த்தும் சேர்ந்து அதிமுக-வுக்குப் பிரசாரம் பண்ணா வெற்றி வாய்ப்பு அம்மாவுக்குத்தான் என்று எழுதியிருக்காரு... இது போல தமிழர் விரோத அரசியலை ஊதி விட தமிழ்நாட்டுல ரொம்பப் பேரு கிளம்பியிருக்காங்கப்பேய்!

said...

//1996ல் முதல்வர் பதவியை அவர் இழக்கவில்லை.கலைஞருக்கு கொடுத்தார்.
//
தலைப்பை படிச்சிங்களா? செல்வன், பாவம் ரஜினி அவரை விட்டுவிடுங்கள்

//1996ல் காங்கிரசை ஆட்சியில் அமர்த்த அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது மூப்பனாருக்கு தெரியும்.நரசிம்மராவ் மட்டும் ஒத்துக்கொண்டிருந்தால் சிதம்பரம் இன்று தமிழக முதல்வராயிருப்பார்.காங்கிரஸ்காரனே மறந்த காமராஜர் ஆட்சியை அவர் மட்டும் தான் நினைவு வைத்திருந்தார்.
//
அது எப்படிங்க இப்படி??.....

//1996ல் இருந்து 2006 வரை வெற்றியோ தோல்வியோ தமது கொள்கையை அவர் மாற்றிக் கொள்ளவில்லை.
//
தைரியனு யாருப்பா அது ஆரம்பிக்கிறது...

இதை செல்வன்(மற்றும் ரஜினி ரசிகர்கள்) அவர்கள் போர்ட்டிவாகவே எடுத்துக்கொள்வார்கள் என நம்புகின்றேன்...

said...

//அவர்களை 2011 தேர்தலில் கவனித்துக் கொள்கிறேன்!

இறைவா என்னை (மட்டும்) காப்பாத்து.
//
ஞான்ஸ் வாங்க வாங்க...

//இந்த தலைப்பு நீங்க வைச்சதா? சூப்ப்ப்ப்ப்பர்....
//
ஆமாம்.... நன்றி
ஜெர்மனி முத்து எங்க ஆளையே காணவில்லை
//இங்கே பிளாகில ஒருத்தரு - வைகோவும், விஜயகாந்த்தும் சேர்ந்து அதிமுக-வுக்குப் பிரசாரம் பண்ணா வெற்றி வாய்ப்பு அம்மாவுக்குத்தான் என்று எழுதியிருக்காரு... இது போல தமிழர் விரோத அரசியலை ஊதி விட தமிழ்நாட்டுல ரொம்பப் பேரு கிளம்பியிருக்காங்கப்பேய்!
//
இது யாருங்க நியோ?

said...

ஏற்கனவே இட்லி வடை பதிவுல ரஜினியை எதிர்க்குறதே எனக்கு பொழப்பா போச்சுண்ணு சொல்லிட்டாங்கப்பா! நான் ஏன் வாய தொறக்குறேன்!ஆனாலும் வாய் நமநமக்குறதாலே ஒண்ணே ஒண்ணு சொல்லிடுறேன் ..ரஜினி நல்ல மாடாத் தான் தெரியுறாரு..ஆனா அவர் ரசிகர்கள்..ஐயகோ ?

said...

அப்படிபோடு அவர்களின் பின்னூட்டம் இங்கே
-----------------
//"உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்பு ரணகளமா இருக்கு!"//
ரீப்பீட்டு....! எல்லா நடிகர்களுக்குமே இதுதான்., இவராவது வராம கைக்காச காப்பாத்திக்கிறாரு...!

said...

குழலி,

அதை எழுதியவர் ஒரு தொழிற்சங்கத் 'தொண்டர்'. புரிஞ்சிக்கோங்க :)

said...

அப்பாவிதமிழன் தொடர்ந்து பதிவுக்கு தொடர்பில்லாத பின்னூட்டங்களை அள்ளித்தெளித்து கொண்டிருப்பதால், அது பதிவை திசை திருப்பும் என்பதால் அவருடைய பதிவுக்கு தொடர்பில்லாத பின்னூட்டங்கள் இந்த பதிவில் வெளியிடப்படவில்லை, அப்பாவிதமிழனனின் முந்தைய பின்னூட்டம் வெளியிடப்பட்டது கூட அவர் நான் இதையெல்லாம் வெளியிடமாட்டேன் என நினைக்க கூடாது என்பதற்காக.

அப்பாவிதமிழன் அவருடைய பதிவில் அவர் கேட்ட கேள்விகளை எழுதி அவரே ஒரு விவாதகளனை தொடங்கலாம், அல்லது அது தொடர்பான பதிவில் பின்னூட்டமிடலாம் அதுவுமில்லையென்றால் வேறொருவரின் பதிவில் பின்னூட்டமாக வெளியிடலாம் பதிவுக்கும் பின்னூட்டத்திற்கும் பதிவருக்கும் தொடர்பேயில்லையென்றாலும் அந்த மாதிரி பின்னூட்டங்கள் அங்கே வெளியிடப்படும்..(யாருடையது என்று புரிகின்றதா? உங்களுக்கே தெரியாமல் இருக்குமா?)