ஒரு ரஜினி ரசிகனின் ஆசை

இந்த பதிவு ரஜினியின் முரட்டு பக்தருக்கு சமர்ப்பணம்

குழலி மற்றும் இன்ன பிற வலைப்பதிவர்களுக்கும் ரஜினி தொடர்பான வேலைகளிலிருந்து ரஜினி ரசிகர்கள் ஓய்வளித்துள்ளனர், ஒரு ரஜினி ரசிகனின் ஜீனியர் விகடனில் வெளிப்படுத்திய ஆசை இதோ...

"முட்டாள் ரசிகனாக ரஜினி பிறக்க வேண்டும்"

கோவை மாவட்ட ரசிகர்மன்ற பிரதிநிதியான செளந்தரபாண்டியனிடம் பேசிய போது "இந்த விவகாரம் தொடர்பாக தலைமைக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன், அதையே எனது கருத்தாக போட்டுக்கொள்ளுங்கள்" என்று கடித நகலை கொடுத்தார்.



அதிலிருந்து...

வாய்ஸ் கொடுக்கும் போது ரசிகர்கள் வேண்டும் (சொந்த ஈகோவை தீர்த்துக்கொள்ள), மதுரையில் அடிவாங்க ரசிகர்கள் வேண்டும், படத்தை பார்க்க ரசிகர்கள் வேண்டும்(ஈகோ தீர்ந்தால் போதுமா? துட்டு துட்டுடா கண்ணா). மற்ற எதற்கும் ரசிகர்கள் வேண்டாம் என்பது என்ன நியாயம்? (உதிர்ந்த ரோமம்னு யாருப்பா அங்கே முனகுவது...)

ரசிகர்கள் வேண்டாம் என்றால் எனக்கு ரசிகர்களே வேண்டாம் என்று அறிவித்து விடுவது தானே? (அதெப்படி சிவாஜி படம் ஓடவேண்டாமா? வாய்ஸ் தந்து வெட்டி பந்தா உடவேண்டாமா?)

ஆன்மீகம்,அமைதி என்று அலைந்து கொண்டிருக்கும் உங்களுக்கு ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்(ஆன்மீகம்,அமைதி என்று அலையும்போது கூடவே போட்டோகிராபர்,நிருபர்னு சேர்த்துக்கொண்டே தானே அலைகின்றார்...), தமிழகத்தில் உள்ள அனைத்து ரசிகர்கள் உள்ளம் மகிழாமல்....(ரசிகர்களுக்கு மகிழ்ச்சியா?!... அதுவும் ரஜினி ரசிகர்களுக்கா?!) உங்களால் ஆண்டவனையோ, அமைதியையோ காண முடியாது (என்ன இப்படி சொல்லிட்டிங்க, அவர் ஏற்கனவே ஜெயலலிதாவை தைரியலட்சுமியா கண்டிருக்கின்றார், ஒரு வேளை வருங்காலத்தில் இராமதாசை கடவுளா காண்பாரோ என்னமோ? ). மறுஜென்மம் என்று ஒன்று இருந்தால் நான் உங்களைப் போல புத்திசாலி தலைவனாகவும்(உசாரான பார்ட்டிப்பா நீங்க), நீங்கள் எங்களைப்போல முட்டாள் ரசிகனாகவும்(ஆகா அப்படிபோடு அருவாளை!!!), இதே சத்தியநாராயணா அகில இந்திய தலைவனாகவும் அமைய வேண்டும்(அது சரி அப்போ அடுத்த பிறவியிலும் சத்தியநாராயணாவுக்கு ரசிகர்மன்ற தலைவர் தானா?). ரசிகர்களாக இருந்த நாங்கள் பட்ட, படுகின்ற துயரத்தை துன்பத்தை நீங்களும் சத்தியநாராயணாவும் படவேண்டும், இதற்காக இறைவனைப் பிரார்த்திக் கொண்டே இருப்பேன்....(ம்....)

நன்றி
ஜீனியர்விகடன்

அடைப்புக்குறிக்குள் இருப்பவைகள் மட்டும் நம்ம எழுதியதுங்கோ!!!

7 பின்னூட்டங்கள்:

said...

thirudanai paathu thiruntha vittal thiruttai olika mudiyadu...

said...

தமிழ் சினிமா ரசிகர்களே,
உங்களுக்கும் சினிமா நடிகர்களுக்கும் உள்ள உறவு எப்படி இருக்க வேண்டுமெனில்,
படம் பார்த்து வெளியே வந்து படம் நல்லா இருக்கா இல்லேயா எனறு சொல்வதுடன் மட்டும் தான். அவர்கள் சம்பாதிக்க நாம் ஏன் முட்டுக் கொடுக்க வேண்டும்? அவர்கள் தெருவில் நடந்தால் நாம் ஏன் வேட்டிக்கை பார்க்க வேண்டும். அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் எப்படி சாப்பிடுகிறார்கள் என்பதில் நாம் ஏன் கவனிக்க வேண்டும்? அவர்களால் நமக்கும், நம் நாட்டிற்கும் ஒரு சல்லிக்காசு பிரயோஜனமா?. இது ரஜினிக்கு மட்டுமல்ல அனைத்து சினிமா நடிகர்கள்/நடிகைகளுக்கும் தான்.

said...

kuzali it's your turn :-)

said...

Well said...

---------------------
அவர்களால் நமக்கும், நம் நாட்டிற்கும் ஒரு சல்லிக்காசு பிரயோஜனமா?. இது ரஜினிக்கு மட்டுமல்ல அனைத்து சினிமா நடிகர்கள்/நடிகைகளுக்கும் தான்.
---------------------------

said...

பகுத்தறிவென்பது இதிலும் பயன்படுத்தலாம்... ஆனால் இப்போது பகுத்தறிவாளர்களே (?) மூட நம்பிக்கைகளை நாடும்போது.. அதை இங்கே பயன்படுத்த அவர்கள் முன்வராதது எதிர்பார்த்ததுதான்...

said...

எதையும் முட்டாள்தனம் என்று சொல்லி விட முடியாது. ரசிகர்களிடம் தேடல் இருக்கிறது. கல்வி நிலை உயரும் போது பொழுதுபோக்கு நிலைகளும் உயரும். சமூக கூட்டமைப்புகள் உருவாகவும் ரசிகர் மன்றங்கள் காரணமாய் உள்ளன.

said...

ஒரு நடிகனை நடிகனாக பார்க்காமல், அவனும் மற்றவர்களை போல ஒரு சராசரி மனிதனை என்பதை உணராமல், அவனும் மற்றவர்களை போன்றவனே என்ற அடிப்படை உணர்வு கூட இல்லாமல் இவர்கள் இருந்தால் அதற்காக குற்றம் சாட்ட படவேண்டியவர்கள் இவர்களே. இவர்கள் ரசிகர்களே அல்ல, கண்மூடித்தனமான அடிமைகள். அவர் பேச்சை கேட்டு செய்தோம் என்றால், இவர்களுக்கு என்று சொந்த புத்தி இல்லை என்று தானே பொருள். இனிமேலாவது இவர்கள் திருந்த்தட்டும். தன்னுடைய தொழில் நன்றாக நடக்க வேண்டும் என்பதில் ரஜினி கண்ணும் கருத்துமாக இருப்பது(அவ்வாறு இருப்பது ஒன்றும் தவறில்லை) இவர்களுக்கு இப்போதுதான் உரைத்திறுக்கிறது. ஆனால் தன் தொழில் நலனை மட்டுமே ரஜினி மனதில் வைத்திருப்பது இவர்களுக்கு இப்போது தான் புரிகிறது. ரஜினி கொஞ்சம் சாமர்த்தியமாக, ரசிகர்களை சந்தித்து கன்வின்ஸ் பண்ணியிருந்தால் இவர்கள் அவருக்கு இன்னமும் ரசிகர்களாகா(அடிமைகளாகவே ) இருந்திருப்பார்கள்.

குழலி இது போலவே, மற்ற நடிகர்களின் அடிமைகள் திருந்திய கதையை எழுதுங்கள்.