புதுப்பேட்டை - பின் நவீனத்துவம்

புதுப்பேட்டை - திரைப்பட விமர்சனம்

சில ஆண்டுகளுக்கு முன் வட சென்னையில் ஒரு இராத்திரியில் அய்யப்ப சாமிகளின் கன்னி பூசை "சாமியே சரணம் அய்யப்பா" என்ற முழக்கங்களோடு களைகட்டியிருந்தது, நாற்பதுக்கும் மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களுடன் திடீரென அந்த கூட்டத்தினுள் புகுந்தனர் முதல் முறை சபரிமலைக்கு செல்லும் கன்னி சாமி ஒருவரை குறிவைத்து பாய்ந்தனர், ஐந்துக்கும் மேற்பட்டோர் கன்னி சாமியின் தலைக்கு வைத்த குறிவைத்தனர் அவரின் முதுகில் வெட்டு வாங்கி கத்தி முதுகிலேயே தொங்க ஓடி ஒளிந்தார், எல்லாம் முடிந்து பார்த்தபோது இருவர் ஆயுதங்களால் குதறப்பட்டு உயிரிழந்திருந்தனர், ஆனால் குறி வைக்கப்படிருந்த தலை தப்பிவிட்டார், அன்று தப்பியவர் சென்ற ஆட்சியிலும் இந்த ஆட்சியிலும் சட்ட மன்ற உறுப்பினர் என செட்டிலாகிவிட்டார் எதிரிகள் அத்தனை எளிதில் இனி ஸ்கெட்ச் போடமுடியாது, என்கவுன்டர் பயமும் இருக்காது, யார் கண்டது அடுத்த ஆட்சியில் அமைச்சராகக் கூட ஆகலாம், எதிர்கட்சியாக இருக்கும் போதும் யாரையோ குளிர்விக்க முதல்வரையே சட்டசபையில் கை ஓங்கிக்கொண்டு சென்றார், புதுப்பேட்டை படம் பார்க்கும் போது இவர் ஞாபகமும் பல முன்னாள் இன்னாள் அமைச்சர்கள் ஞாபகமும் வருவதை நிச்சயம் தவிர்க்க முடியாது.


"அக்கா அக்கா உன் தம்பி என்ன மாதிரி வரணும்னு நீ நெனக்கிற?'
"மாமா மாதிரி இஞ்சினியராவோ, இல்ல டாக்டராவோ வரணும்டா நீ! "
"உனக்கு பேராசைதான், 'தீ...சாரதீ' 'சாரதி' விஜய் மாதிரி தான் வருவேன்"

ஆறாவது படிக்கும் தம்பிக்கும் அவன் அக்காவுக்கும் நிஜத்தில் நடந்த உரையாடல்.பொதுவாக தாதாப்படங்கள் என்றாலே எனக்கு கடும் வெறுப்பு ஏற்படுவதுண்டு, இந்த மாதிரியான படங்கள் தாதாவை மிக நல்லவராகவும், கருணை மிக்கவராகவும் காண்பிப்பார்கள், திரைப்படங்கள் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் இளவயதினர் (15-21வயது) இந்த மாதிரியான படங்களினால் வழிதவறும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கின்றது, மேலும் இது மாதிரியான படங்கள் (நாயகன், ரெட், தளபதி, மேலும் பல…) தாதாக்களின் மீதான ஒழுக்க குறியீட்டை உரசிப்பார்க்கின்றன, இதனால் தாதாத்தனம் செய்வது தவறில்லை என்பது மாதிரியான தோற்றத்தை உருவாக்கும்.

இதை புரட்டி போட்ட படம் புதுப்பேட்டை, தாயை இழந்து தந்தையினால் கொலைவெறியில் துரத்தப்பட்டு பிச்சை எடுக்கும் தனுஷ் கொஞ்சம் கொஞ்சமாக எப்படி கொடூரமான தாதாவாகின்றார் அதன் பின் என்ன ஆகின்றார், நிறைய சிரத்தை எடுத்திருக்கின்றார், படம் முழுக்க இரத்தம் என்ற போதும் ஒரு தாதா தொழிலுக்கு பின்னால் இருக்கும் ஆபத்துகளை மிக உண்மையாக படம் முழுக்க காண்பித்துள்ளார், மேலும் தாதாக்கள் எல்லாம் நல்லவர்களாகவும், கருணையுள்ளம் கொண்டவர்களாகவும் பார்த்து பழகிப்போன தமிழ் திரையுலகில், தாதாக்களின் கொடூர குணத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ள படம் புதுப்பேட்டை, தாயை கொலை செய்த தந்தையை நயவஞ்சகமாக கொலை செய்வதும், நண்பனின் தங்கையின் திருமணத்திற்கு தாலியெடுத்து கொடுக்க போய், அவருக்கே சட்டென்று தாலிகட்டுவதும், தனக்கு சொல்லி கொடுத்த குரு பிணமாக கிடக்கும் போது முதலிரவு கொண்டாடுவதும், தல தல என உருகும் தாதா படங்களிடையில் இந்த கதாநாயகன் துதிபாடல் இல்லாமல் "நீ குழந்தை டா" என்றும் தாதாவான பிறகும் தனுஷ் அடி வாங்குவதும், தன் உயிருக்கு பயந்து நடுங்குவதும், கூட்டத்தில் தனுஷை ஆளாளுக்கு மிரட்டுவதும் தமிழ் படங்களின் தாதா இமேஜ்ஜிற்கு கிடைத்த அடி.

தனுஷ் மாதிரியான ஒல்லிப்பிச்சானுக்கு தாதா வேடம் எப்படி பொறுந்தும், அதுவும் தனுஷிடம் ஒரே அடி வாங்கி அடிபட்டவன் சாவது நகைச்சுவையாகிப்போகும் என்ற போதும், தனுஷிடம் அடிவாங்கி சாகும் தாதாவின் தம்பி ஒரு நோயாளி போன்ற அந்த இருமல் காட்சி சித்தரிப்பு அந்த காட்சியை நம்பும்படியாக்குவதில் இயக்குனரின் திறமை பளிச்சிடுகின்றது, “தினம் தினம் கழுத்துக்கு மேலே தலை இருக்கிறதா என்று தொட்டு தொட்டு பார்த்துக்கிட்டே இருக்க முடியுமா?” என்ற வசனங்கள் நிதர்சனத்தை கண் முன் நிறுத்துகின்றது, சோனியா அகர்வால் தனுஷிடம் பேசும் வசனங்களில் பின்நவீனத்துவ(?!) டச் இருந்தாலும் கூர்மையான வசனங்கள்.

கட்சி தலைவராக வரும் தமிழ்வாணனும் தேன்மொழி அவரின் பெண்ணின் பெயராக குறிப்பிடுவதும் தமிழகத் தலைவர் ஒருவரை கண்முன் நிறுத்த செய்யும் (இப்போதைக்கு அவரை மட்டும் தான் என்ன வேண்டுமானாலும் கேலிசெய்யலாம்! ) தனுஷுக்கு தொழில் நுணுக்கங்கள் கற்று கொடுக்கும் காட்சிகளில் இயக்குனரின் உழைப்பு தெரிகின்றது, படம் முழுக்க வன்முறையை வீரமாக காண்பித்து கடைசியில் வன்முறை வேண்டாமென்று அறிவுரை சொல்லும் படங்களுக்கு மத்தியில் படம் முழுக்க தாதாத்தொழிலின் கொடூரத்தை காண்பித்தது புதுப்பேட்டை, அந்த கடைசிகாட்சி மட்டும் இல்லையென்றால் (அதை படத்திலேயே பார்த்துக்கொள்ளுங்களேன்) படம் முழுக்க இரத்த வாடை அடித்தாலும் இந்த படம் பார்க்கும் இளவயதினர் வன்முறை பாதையில் திரும்புவதற்கு சற்று தயங்க வைக்கும் படம் என்பதில் சந்தேகமில்லை (அளவுக்கதிகமான வன்முறை காட்சிகள் இருப்பதால் சிறு குழந்தைகள் பார்ப்பதற்கு ஏற்றதில்லை) , பாடல்கள் எதுவும் நினைவில் இல்லை, தனுஷிலிருந்து அத்தனை நடிகர்களின் நடிப்பும் அற்புதம், திரைப்படம் பார்க்கும் உணர்வில்லாமல் ஏதோ நிசத்தை காண்பது போல.

புதுப்பேட்டை பின் நவீனத்துவம்.

survival of the fittest சரிதான் மிருக இனத்திலும், மிருகமாக இருக்கும் மனிதர்களிடத்திலும்...

16 பின்னூட்டங்கள்:

said...

நல்ல விமர்சனம். மற்ற 'தாதா' படங்களைப்போல் இதையும் மக்கள் எடுத்துக்கோண்டதுதான் வேதனை. இவ்வளவு தெளிவாக சொல்லியும், படம் சரியாக போகவில்லை என்பது சோகம்!

//survival of the fittest சரிதான் மிருக இனத்திலும், மிருகமாக இருக்கும் மனிதர்களிடத்திலும்...// -இது படம் சொல்லும் கருத்து அல்ல. செல்வராகவன் சொல்ல விழைந்திருப்பது எல்லோருக்கும் பொதுவாய் இருக்கிற survival of the fittest!

இப்படித் தவறாக புரிந்துகொள்ளப் படுவதால்தான் படம் சரியாகப்போகவில்லை :(

said...

பெயர்சொல்லும் இயக்குநர்கள் வரிசையில் செல்வா போன்ற இளையவர்கள் இருப்பது சரிதான் என்பதை மற்றுமொருமுறை நீருபித்திருக்கிறார். நல்ல விமர்சனம்.

said...

Kuzhali said...

"இந்த மாதிரியான படங்கள் தாதாவை மிக நல்லவராகவும், கருணை மிக்கவராகவும் காண்பிப்பார்கள், திரைப்படங்கள் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் இளவயதினர் (15-21வயது) இந்த மாதிரியான படங்களினால் வழிதவறும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கின்றது, மேலும் இது மாதிரியான படங்கள் (நாயகன், ரெட், தளபதி, மேலும் பல…) தாதாக்களின் மீதான ஒழுக்க குறியீட்டை உரசிப்பார்க்கின்றன, இதனால் தாதாத்தனம் செய்வது தவறில்லை என்பது மாதிரியான தோற்றத்தை உருவாக்கும்."

Dear Kuzhali,

I applaud your take on this issue. Romanticisizing violence and bandits is definitely not acceptable. However, this being Kuzhali, I can't help but think of someone "special" to you defending sandalwood smuggler because he belongs to his caste and a protector of tamil culture.

I am sorry Kuzhali, I could not help but notice the irony in your post.

This is a good review. Goodluck

Vignesh

said...

//I applaud your take on this issue. Romanticisizing violence and bandits is definitely not acceptable. However, this being Kuzhali, I can't help but think of someone "special" to you defending sandalwood smuggler because he belongs to his caste and a protector of tamil culture.
//
வீரப்பனின் சாதியெல்லாம் இழுத்து அடேங்கப்பா.... இது என்ன உங்க கற்பனையா? வீரப்பனி செயல்களை எங்கேயாவது நியாயப்படுத்தியிருக்கிறேனா என்பதை என்பதிவுகளிலோ பின்னூட்டத்திலோ காண்பியுங்கள் பார்ப்போம்....

வீரப்பனை பிடிக்கிறேன் என்று அதிரடிப்படை செய்த அட்டகாசங்களை பாலியல் பலாத்காரங்களை எதிர்ப்பது வீரப்பனின் செயல்களை நியாயப்படுத்துவதாகாது என்பது புரிகின்றதா உங்களுக்கு.....

said...

விக்னேஷ் என்ன செய்ய என் ராசி அப்படி....

said...

படம் பார்க்கவில்லை. என்னதான் ஜஸ்டிfஐ பண்ணினாலும் தாதாத்தனமான படங்கள் தவறானவையே!

said...

விக்னேஷ் ஒரு பி.சி அதுவும் நாத்திகர்.(பெரியார் போல் அல்ல).

அவரை போய் தாக்கறீங்களே? உடனே உங்க பதிவுல இருந்து வீரப்பனை ஆதரித்து நீங்க எழுதுனதை காண்பிச்சுட்டுத்தான் அவர் ஓய்வாரு.

மானஸ்தனாக்கும்.

said...

சும்மா டைம் பாசுக்காக நானும் இந்தப் படத்துக்கு ஒரு விமர்சனம் எழுதி இருக்கிறேன்... உங்கள் அளவுக்கு அறிவுப்பூர்வமாக எனக்கு எழுத வராது....

http://madippakkam.blogspot.com/2006/06/blog-post_06.html

said...

குழலி,

ஒரு + குத்திட்டேன்! :)

said...

//உங்கள் அளவுக்கு அறிவுப்பூர்வமாக எனக்கு எழுத வராது....
//
ஆகா கெளம்பிட்டாங்கய்யா கெளம்பிட்டாங்க...


உங்கள் பதிவிலிருந்து
//பெற்ற அப்பாவையே நயவஞ்சகாக போட்டுத் தள்ளுவது...//
அய் இது எப்படிங்க ஒரே மாதிரி எழுதியிருக்கோம்....

said...

//ஒரு + குத்திட்டேன்! :)//
தேங்க்ஸ்ங்க...

said...

செல்வராகவன் படங்களில் தொடர்ந்து அடித்தட்டு மக்களே கதையின் நாயகர்களாக அமைவதைக் கவனித்திருக்கிறீர்களா?அவரது படங்களில் ஒரு மெல்லிய அரசியல் ,வெளிப்படையான பிரச்சாரமின்றி இயங்குகிறது.அபபாவைக் கொல்லுவது...போன்ற வக்கிரங்கள்(அ)ஆழ்மன விருப்பங்கள்,தாதாக்களிடம் மட்டுமல்ல,நம்மிடமும் இருக்கத்தான் செய்கின்றன.மேலும் வாழ்க்கையே வன்முறையாய் அமைந்திருக்கும்போது சினிமாவில் மட்டும் வன்முறை வருகிறது என்று ஓலமிடுவது என்ன நியாயம் என்று எனக்குத் தெரியவில்லை.தமிழ்ச் சமூகத்தின் போலி ஒழுக்கவியல் பண்பாட்டையும்,செல்வாவின் படங்கள் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கின்றன.படத்தில் ஒரெ நெருடல்,அடித்தட்டு மக்களின் வாழ்க்கை குறித்து அறிவில்லாத பார்ப்பன பாலகுமாரனின் வசனங்களே.

said...

செல்வராகவன் படங்களில் தொடர்ந்து அடித்தட்டு மக்களே கதையின் நாயகர்களாக அமைவதைக் கவனித்திருக்கிறீர்களா?அவரது படங்களில் ஒரு மெல்லிய அரசியல் ,வெளிப்படையான பிரச்சாரமின்றி இயங்குகிறது.அபபாவைக் கொல்லுவது...போன்ற வக்கிரங்கள்(அ)ஆழ்மன விருப்பங்கள்,தாதாக்களிடம் மட்டுமல்ல,நம்மிடமும் இருக்கத்தான் செய்கின்றன.மேலும் வாழ்க்கையே வன்முறையாய் அமைந்திருக்கும்போது சினிமாவில் மட்டும் வன்முறை வருகிறது என்று ஓலமிடுவது என்ன நியாயம் என்று எனக்குத் தெரியவில்லை.தமிழ்ச் சமூகத்தின் போலி ஒழுக்கவியல் பண்பாட்டையும்,செல்வாவின் படங்கள் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கின்றன.படத்தில் ஒரெ நெருடல்,அடித்தட்டு மக்களின் வாழ்க்கை குறித்து அறிவில்லாத பார்ப்பன பாலகுமாரனின் வசனங்களே.

said...

செல்வராகவன் படங்களில் தொடர்ந்து அடித்தட்டு மக்களே கதையின் நாயகர்களாக அமைவதைக் கவனித்திருக்கிறீர்களா?அவரது படங்களில் ஒரு மெல்லிய அரசியல் ,வெளிப்படையான பிரச்சாரமின்றி இயங்குகிறது.அபபாவைக் கொல்லுவது...போன்ற வக்கிரங்கள்(அ)ஆழ்மன விருப்பங்கள்,தாதாக்களிடம் மட்டுமல்ல,நம்மிடமும் இருக்கத்தான் செய்கின்றன.மேலும் வாழ்க்கையே வன்முறையாய் அமைந்திருக்கும்போது சினிமாவில் மட்டும் வன்முறை வருகிறது என்று ஓலமிடுவது என்ன நியாயம் என்று எனக்குத் தெரியவில்லை.தமிழ்ச் சமூகத்தின் போலி ஒழுக்கவியல் பண்பாட்டையும்,செல்வாவின் படங்கள் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கின்றன.படத்தில் ஒரெ நெருடல்,அடித்தட்டு மக்களின் வாழ்க்கை குறித்து அறிவில்லாத பார்ப்பன பாலகுமாரனின் வசனங்களே.

said...

புதுப்பேட்டை படம் பார்த்து விட்டேன். நீங்கள் சொன்னது போல தாதாக்கள் என்றால் அரசாங்கத்தை , அதிகாரத்தை எதிர்த்து போராடும் நல்லவர்கள் என்ற மாதிரிதான் மத்த படங்கள் காட்டுகின்றன. ஆனால் புதுப்பேட்டை அந்த விதத்தில் ஒரு பெரிய மாற்றம். தனுஷ் கத்தி காட்டி விட்டு அடி வாங்கி விட்டு வருவது படத்தின் முக்கியமான , சிறப்பான காட்சி. அப்படியே அவர் அடி வாங்கி அழிவது போல படம் முடிந்திருக்க வேண்டும். ஆனால் முடிவு சாதாரணமாக அமைந்து விட்டது. தாதாக்கள் என்றால் வாட்டசாட்டமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நிஜ வாழ்க்கையில் ரவுடிகளை சந்தித்ததில்லை. இன்னமும் சொல்ல போனால் மற்ற படங்களில் ஹீரோக்களை வீரர்களாக காட்டும் விதம் நம்பும் படியாகவா உள்ளது?

said...

//நல்ல விமர்சனம். மற்ற 'தாதா' படங்களைப்போல் இதையும் மக்கள் எடுத்துக்கோண்டதுதான் வேதனை. இவ்வளவு தெளிவாக சொல்லியும், படம் சரியாக போகவில்லை என்பது சோகம்!//

ஐயோ! அருள், personally I feel, இதைப் போன்ற படங்களுக்கு நாம் ஆதரவு தரக்கூடாது என்பது தான்.

//பெயர்சொல்லும் இயக்குநர்கள் வரிசையில் செல்வா போன்ற இளையவர்கள் இருப்பது சரிதான் என்பதை மற்றுமொருமுறை நீருபித்திருக்கிறார்.//

தரண்,
செல்வாவிடம் திறமை இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால், அது சரியாக உபயோகிக்கலாமே. தமிழ் சினிமாவின் இன்றைய போக்கு பற்றி என்னுடைய பதிவு.

//மேலும் வாழ்க்கையே வன்முறையாய் அமைந்திருக்கும்போது சினிமாவில் மட்டும் வன்முறை வருகிறது என்று ஓலமிடுவது என்ன நியாயம் என்று எனக்குத் தெரியவில்லை//

மிதக்கும் வெளி,
அதாவது, நிஜ வாழ்க்கை வன்முறையில் 5 கொலைகள் என்றால், சினிமாவின் மூலம் மேலும் ஒரு கொலை. ஆக மொத்தம் ஆறு. எல்லோரும் தங்களால் முடிந்த பிரசாரம்(!) செய்தால் எப்படி சார்?

//படத்தில் ஒரெ நெருடல்,அடித்தட்டு மக்களின் வாழ்க்கை குறித்து அறிவில்லாத பார்ப்பன பாலகுமாரனின் வசனங்களே.//
அப்பப்பா...பார்ப்பனர்களுக்குத் தான் எத்தனை எதிரிகள், அவர்களைப் போலவே.

//தாதாக்கள் என்றால் வாட்டசாட்டமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நிஜ வாழ்க்கையில் ரவுடிகளை சந்தித்ததில்லை//

பாலசந்தர் கணேசன்,
ஆனால், தனுஷைத் தவிற அனைவரும் வாட்டசாடமாக இருப்பதை கவணித்தீர்களா?