தேர்தல் 2006 - சிங்கப்பூரிலிருந்து சிலுக்குவார்பட்டி

இது ஒரு தற்பெருமை பதிவு, தம்பட்டம் அடிக்கும் பதிவு...

அப்பாடி ஒரு வழியாக தேர்தல் முடிந்து அரசும் அமைந்துவிட்டது, அடேய் அடேய் விட்டா என்னது எம்.ஜி.ஆர் அமெரிக்காலருந்து ஆப்பரேசன் முடிச்சி வந்துட்டாரானு கேப்ப

போலிருக்கேனு யாரோ கலாய்க்கிறார்ங்கப்பா.... அது சரி நல்லா எலிக்சன் வந்தாலும் வந்துச்சி ஒரே கலாய்ச்சல் தான் தமிழ்மணத்துல, தேர்தல் 2006 னு ஒரு வகைப்படுத்தும் வாய்ப்பை

குடுத்த தமிழ்மணத்துக்கு நன்றினு சொல்லிகிறேன், அப்பாலிக்கா எலிக்சன் கமிசன் சைட்டும், தினமலரும் படுத்துக்கிச்சா அன்னிக்கு இட்லி வடை தான் எலிக்சன் அப்டேட்டு சொல்லி

காப்பாத்துனாரு.

அட இதுல என்னன நம்ம வலைப்பதிவு மக்கள் கருத்துகணிப்பு போட்டாங்க பாருங்க அட்றா சக்கை அட்றா சக்கை கலக்கிப்புட்டாங்க, முந்தைய தேர்தல் வாங்கிய வாக்குகள்,

தொகுதியின் தற்போதைய நிலமை, வேட்பாளர்கள் பலம் பலவீனம் என அக்கு வேற ஆணி வேற அலசிட்டாங்கோ, அட நம்ம அச்சு ஊடகத்தில கூட குமுதம் சொம்மானாச்சிக்கும்

திமுக கூட்டணி 36% அதிமுக கூட்டணி 42% விஜயகாந்த் 13%னு போட்டுக்கினே போச்சி ஆனா என்ன கணக்குல இப்பிடி போட்டுச்சினு கடசி வரிக்கும் சொல்லலை, ஆனா நம்ம

வலைப்பதிவர்கள் போட்டாங்க பாருங்க எல்லாத்தையும் கணக்கு செஞ்சி கலக்கிட்டாங்க, சசி, அப்படிப்போடு, இப்னு, ஜோ, நயனம், சிங்.செயக்குமார், ரஜினி ராம்கி அப்புறம் இந்த குழலி, இன்னும் பலர் கருத்து கணிப்பு போட்டாங்க, ஆனா எல்லோருமே தெளிவா எந்த கணக்குல இப்படி ஒரு முடிவுக்கு வந்தாங்க அப்படினு தெளிவா ஆதாரத்தோடா சொன்னாங்க ஆனா

அதுக்கு இன்னா நக்கலு இன்னா குசும்பு, ஒரு ஊருல இறங்கி பெட்ரோல் போட்டாங்களாம் அதுனால அந்த ஊருக்கு கருத்து கணிப்பு எழுதுனாங்களாம், ஒரு ஊருல எறங்கி மூச்சா போனாங்களாம் ஒடனே கருத்து கணிப்பு எழுதுனாங்களாம்... ஹா ஹா... போற போக்குல மூஞ்சில எச்சி துப்புனாங்க... அடேய் அடேய் அதெல்லாம் அங்கதம் டோய் இது புரியாம பேசுறானாம் கருத்து சொதந்திரம்னா கிலோ என்னா வெலனு கேக்குறானுங்க... அப்படினு நீங்க சவுண்டு வுடுறது கேக்குதுங்கோ!

1998, 1999, 2001 தேர்தல்களில் தேர்தல் முடிவுக்கு மிக நெருக்கமாக முடிவுகளை முன்பே சொன்னேன் என்பதற்கு அதை கேட்ட என் நண்பர்களும் ஹீரோ சரவணனின் அறையில் 40 தொகுதிகளையும் எழுதி யார் வெற்றி பெறுவார்கள் என எழுதி வைத்ததும் தான் ஆதாரம், 1998ல் ஊடகங்கள் திமுக-தாமக கூட்டணி பெரும் வெற்றிபெறும் என எழுதிய போது நான் முப்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகள் (அடைக்கலராஜ் தோற்பார், தனுஷ்கோடி ஆதித்தன், சரத்குமாருக்கு சங்கு, நாகர்கோவிலில் பாஜகவிற்கு நிச்சய தோல்வி, மாயவரத்தில் பாமக தோல்வி) அதிமுக கூட்டணிக்கு என்ற போது சிரித்த நண்பர்கள் தேர்தல் முடிவுக்கு பிறகு ஹீரோ சரவணன் எப்படிடா இவ்வளவு சரியா சொன்னெ என்ற போது எனக்கு நானே வெள்ளக்காரன் சொன்னான் வெரிகுட்னு நானே சொல்லிக்கிட்டேன், கல்லூரியில் பல ஊர்களிலிருந்தும் படித்த மாணவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசியதும், பத்திரிக்கைகள் படித்தது, கூட்டணி கூட்டல் கழித்தல்கள், வேட்பாளர் பலம், பலவீனம், அப்போதைய ட்ரெண்ட் என பல விடயங்கள் தேர்தல் கணிப்பு முடிவுக்கு நெருக்கமாக இருக்க காரணம், அதைவிட முக்கிய காரணம் நாம யார் ஜெயிக்கனும்னு நினைக்கிறத சொல்றதை விட யாரு ஜெயிப்பாங்கன்ற நெலவரத்தை மூனாம் மனுசனா இருந்து சொல்லனும்.

இந்த 2006 தேர்தலில் கொஞ்சம் தம்பட்டம் அடிச்சிடறனே....


பண்ருட்டி தொகுதி நிலவரம் தே.மு.தி.க. வில் பண்ருட்டியார் என்று அக்டோபர் 14, 2005ல் எழுதினேன் அதிலிருந்து சில வரிகள்

பண்ருட்டியாரை வைத்து தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் கணக்கைத் துவக்கும் என்பது நடக்காத விடயம் போலத் தோன்றுகின்றது.

பண்ருட்டி தேர்தல் முடிவு பண்ருட்டியாருக்கு மூன்றாமிடம், பாமக வேல்முருகன் வெற்றி

அப்பாலிக்கா நம்ம பொட்டீகடை சத்யா நெல்லிக்குப்பம் தொகுதி பத்தி எழுதனாரு அங்கே நம்ம பின்னூட்டம்

(அப்போது வேட்பாளர்கள் முடிவு செய்யப்படவில்லை)

//நெல்லிக்குப்பம் தொகுதியின் நாடித்துடிப்பை சரியாக கூறியுள்ளீர்... தொகுதியை மதிமுகவிற்கு கொடுத்துள்ளதால் வி.சி.எஸ் சின் வெற்றி கிட்டத்தட்ட முடிவு செய்த மாதிரி

//அதிமுக கூட்டணியில் மதிமுகவிற்கு இத்தொகுதியைக் கொடுத்திருப்பது...கையில்லாத ஜாக்கியிடம் சவாரிக் குதிரையை கொடுத்தது போன்றது!/
சரியாக கூறியுள்ளீர், ஆச்சரியமான ஆச்சரியம் நெல்லிக்குப்பம் தொகுதிக்கு சம்பத்,தாமோதரன்,சொரத்தூர் ராஜேந்திரன் என பல தலைகள் போட்டியிட இருக்கும் போது

நெல்லிக்குப்பத்தை மதிமுகவிடம் கொடுத்துவிட்டு அதிமுக வின் பலவீனமான தொகுதியான கடலூரில் போட்டியிடுகின்றது(மதிமுக பத்மநாபன் போட்டியிட்டிருந்தால் கடலூர் தொகுதி கடும்

போட்டியிலிருக்கும்- பழிதீர்ப்பாரா பத்மநாபன் என்று ஒரு பதிவெழுதி வைத்திருந்தேன், இனி பயன்படாது) விளைவு திமுக கூட்டணிக்கு எளிதாக விசிஎஸ், புகழேந்தி(கடலூர்) என இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள்...
//

நெல்லிக்குப்பத்தில் திமுக வெற்றி

குறிஞ்சிப்பாடி தொகுதி தொடர்பாக நயனம் அவர்கள் பதிவில் இட்ட பின்னூட்டம்
//2004ல் திமுகவின் வாக்குகளில் மதிமுகவின் இருப்பு -7119//
உங்கள் கணிப்பில் தவறுவது இங்கே.... உள்ளூர்காரர்கள் தவிர்த்து வேறு யார் கணித்தாலும் இந்த வாக்குகள் மதிமுகவின் வாக்குகளாக கணிப்பார்கள், குறிஞ்சிப்பாடியில் 2000

வாக்குகளும், நெல்லிக்குப்பம், பண்ருட்டி என அண்டை தொகுதிகளில் மதிமுகவின் வாக்குகள் வெறும் 2000 ஆனால் கடலூரில் ஏழாயிரம் என்றால் அதற்கு காரணம் மதிமுக மாவட்ட

செயலாளர் செள.பத்மனாபன், இவர் 1989ல் சுயேட்சையாக நின்று 5000வாக்குகள் பெற்றவர், இவைகள் திமுக வாக்குகள் முன்னாள் திமுக காரர், சொந்தகாரர், சாதிக்காரர் என்று இந்த

வாக்குகள் பத்மனாபன் நின்றால் மட்டுமே விழும் வாக்குகள் பத்மனாபன் களத்தில் இல்லாத நிலையில் அது திமுகவிற்கு விழும் வாக்குகள், இரண்டாவதாக சிறுத்தைகளின் முகாமில்

திருவள்ளுவன் மூலமாக விஜயகாந்த் போட்டுள்ள ஓட்டை, அதிமுகவின் மற்றொரு பலவீனம் அமைப்புரீதியாக பிரபலங்கள் இல்லாதது....
//குறிஞ்சிப்பாடியைப் பொறுத்தவரை சசி ஒப்புக்கொள்ளமாட்டார்.
//
நானும் ஒப்புகொள்வது இயலாது, ஏனெனில் குறிஞ்சிப்பாடியில் கட்சி மீறிய சாதிப்பாசம் எம்.ஆர்.கே.பியிடம் சென்ற தேர்தலிலேயே எதிர்கூட்டணியில் இருந்த போதும் பாமக

எம்.ஆர்.கே.பி.க்கு உதவியது, விடுதலை சிறுத்தைகள் பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகள் திருமாவளவன் போட்டியிட்டதால் விழுந்த வாக்குகள் திருமா போட்டியில்

இல்லையென்றால் அத்தனை வாக்குகள் விழாது, எம்.ஆர்.கே.பி.யின் ஒரே பலவீனம் அவரின் வளர்ச்சி பிடிக்காத உள்குத்து வேலை செய்யும் உள்ளூர் திமுகவினர் என்பது மட்டுமே....

ஆனால் இது கூட்டணி பலம், சொந்த செல்வாக்கு, சாதிப்பாசம் எதிரணியில் பலமில்லாத கட்சி, வேட்பாளர் என்ற நிலையில் பன்னீர் தோற்பது திமுகவிற்கு எதிராக ஏதேனும் பெரும்

அலையடித்தால் மட்டுமே உண்டு
//

குறிஞ்சிப்பாடியில் திமுகவின் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெற்றி

கடலூர் தொகுதி பற்றிய என் அலசல் அதில் நான் குறிப்பிட்டது
//முக்கூடல் பலத்தினால் கடலூரில் திமுக வெற்றியின் அருகில், எட்டி பிடிக்க முடியாத அளவில் அதிமுக பின் தங்கியுள்ளது//
கடலூரில் திமுக 7000ற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி


ஆண்டிமடம் தொகுதி பற்றிய என் அலசல் அதில் நான் குறிப்பிட்டது

//தொகுதி பங்கீட்டில் ஆச்சரியமளித்த ஆண்டிமடத்தின் தேர்தல் முடிவில் அலையடித்தாலும் ஆச்சரியமில்லை//

இங்கேயும் திமுக வெற்றி

பரங்கிப்பேட்டை தொகுதி பற்றி இப்னு எழுதிய பதிவில் என் பின்னூட்டம்
//இப்னுவிற்கு எனது கடுமையான கன்டணத்தை தெரிவித்துக்கொள்கின்றேன், தொகுதிப்பங்கீடு செய்து கொள்ளாமல் புவனகிரி தொகுதியை எடுத்துக்கொண்டதற்கு, ஏற்கனவே தமிழ்சசியினால் குறிஞ்சிப்பாடி,விருத்தாசலம் தொகுதியையும், பொட்டீக்கடை சத்யாவினால் நெல்லிக்குப்பம் தொகுதியையும் இந்த இருவரினால் பண்ருட்டி தொகுதியையும் இழந்திருந்தேன், கேவிஆர் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் தொகுதிகளுக்கு துண்டு போட்டுவிட்டார் தற்போது தான்ஆச்சரிய ஆண்டிமடம் என்று ஆண்டிமடம் தொகுதிப்பற்றி எழுதிவிட்டு வந்தால் புவனகிரி கையைவிட்டு போய்விட்டது, நான் எழுதியதிலிருந்து சில வரிகள் இங்கே,கடலூர் மாவட்டத்தில் பல அதிமுக புள்ளிகள் குறிவைத்தது புவனகிரி தொகுதியை, கிழக்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராசேந்திரன் நெல்லிக்குப்பம், பண்ருட்டி தொகுதியோடு புவனகிரி மீதும் கண்வைத்திருந்தார், அருள்மொழித்தேவனும் புவனகிரியை குறிவைத்தார், வருமானத்திற்கு மீறிய சமீபத்தில் சிறைசென்று வந்து அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் சமீபகாலமாக கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மல்லிகாவும் பெயருக்கு கேட்டுவைத்தார் பரங்கிப்பேட்டையில் சில காலங்களுக்கு முன் 'ஒத்தக்கை' பாண்டியன் கோஷ்டியினருடன் ஏற்பட்ட சாராய மோதலில் அதிமுக பிரமுகர் ராமஜெயமும், அவரது சொந்தக்காரரும் வெட்டிக்கொல்லப்பட்ட சில மணிநேரங்களில் ராமஜெயம் கோஷ்டியினரால் 'ஒத்தக்கை' பாண்டியனின் தங்கையும் தாயும் வெட்டிக்கொல்லப்பட்டு ஒரே நாளில் நான்கு கொலைகளை பரங்கிப்பேட்டை பார்த்த பயங்கரத்திற்கு பின் 1996ல் ராமஜெயத்தின் மனைவி செல்வி ராமஜெயம் பரங்கிப்பேட்டை சிறப்பு பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு அதிமுக சார்பாக போட்டியிட்டார், அப்போது தான் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவிற்கு எதிரான அலையடித்து அதன் தொடர்ச்சி உள்ளாட்சி தேர்தல்களில் வெளிப்பட்ட போதும் செல்வி ராமஜெயம் வீடுவீடாக திண்ணைகளில் அமர்ந்து வாக்கு கேட்டதும் செல்வி ராமஜெயம் வெற்றி பெற உதவியது, அதனைத் தொடர்ந்து 2001 உள்ளாட்சி தேர்தலில் இப்படியெல்லாம் அனுதாப அலை தேவையில்லாமலே அவருடைய முந்தைய செயல்பாடுகள் வெற்றி பெற வைத்தது, மாவட்டத்தின் செல்வாக்கு அதிமுக பிரமுகர்கள் குறிவைத்த போதும் புவனகிரி தொகுதி அவருக்கு கிடைத்தது இவைகள் தெரிந்தவர்களுக்கு ஆச்சரியமில்லை, மேலும் அதிமுக, திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் என்ற வரிசையில் செல்வாக்கு பலமிருக்கும் தொகுதியில் செல்வி ராமஜெயம் வெற்றியின் அருகில், புவனகிரி கடலூர் மாவட்டத்தில் அதிமுகவின் இலுப்பைப்பூ //

புவனகிரி தொகுதியில் அதிமுகவின் செல்வி இராமஜெயம் வெற்றி

இதுவரை தனித்தனியாக தொகுதிகள் அலசியதில் ஒவ்வொரு தொகுதிக்கும் எழுதிய கருத்து கணிப்பு, தேர்தல் முடிவுகளுடன் 100% சரியாக உள்ளது

இட்லிவடை பதிவில் நடந்த தேர்தல் கருத்து கணிப்பு போட்டியில் குழலிக்கு பரிசு

//கலந்து கொண்ட 40 பேரில் பிரபு ராஜா மற்றும் குழலி பரிசு பெறுகிறார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். //

போட்டியின் கேள்விகளும் என் பதில்களும் முடிவுகள் அடைப்புகுறிக்குள்

1) எந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள் ?
அதிமுக கூட்டணி: 36 (69)
திமுக கூட்டணி: 197 (169)
விஜயகாந்த்: 0 (1)
மற்றவை: 1 (1)
(No Range allowed)

2) ஜெயலலிதா எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ? ( அல்லது தோற்பார் ) ( Range allowed ) 15000-18000 (25,000 வெற்றி)

3) விஜயகாந்த் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ( அல்லது தோற்பார் ) ( Range allowed ) 2000-3000 (14,000 வெற்றி)

4) தேமுதிக ( விஜயகாந்த் கட்சி ) எத்தனை சதவிகிதம் வாக்கு பெறும் ? ( No Range allowed ) 8% (8.38%)

5) கூட்டணி ஆட்சியா ? அல்லது தனிக் கட்சி ஆட்சியா ? தனி (தனி)

6) மதிமுகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 4 (6)

7) விடுதலை சிறுத்தைகளுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 2 (2)

8) பாமகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 27 (18)

9) காங்கிரஸுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 36 (35)

10) முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் ? 2ரூபாய் அரிசி (2ரூபாய் அரிசி)

மேலே எத்தனை கணிப்புகள் சரியாகவும் எத்தனை தேர்தல் முடிவுகளுக்கு நெருக்கத்தில் இருந்தது என்றும் உங்கள் முடிவுக்கே விடுகின்றேன், விருத்தாசலம் தொகுதியின் முடிவில் சறுக்கிவிட்டேன்.

அது சரி இப்போ ஏன் இப்படி ஒரு தம்பட்டம் அடிக்கிறேன்னு கேக்குறிங்களா எல்லாம் காரணமாத்தான், சிங்கப்பூரிலிருந்து சிலுக்குவார்பட்டிக்கு கருத்து கணிப்பு எழுதினாலும் புள்ளிவிபரங்கள், தொகுதிக்குட்பட்ட சிலரின் பொதுவான கருத்துகள், தேர்தல் கூட்டணி கூட்டல் கழித்தல்கள், அப்போதைய போக்கு, வேட்பாளர்கள், கட்சிகளின் பலம் பலவீனம் வைத்து தான் எழுதுகிறோம்...

போற போக்குல நம்ம வலைப்பதிவர்கள் எழுதிய தேர்தல் கருத்து கணிப்பு பற்றி நக்கலாக மூஞ்சியில துப்பிய ஆளுங்கலாம் முடிஞ்சா எதுனா ஆக்கப்பூர்வமா எழுதலாம் இந்த மாதிரி மூஞ்சியில் துப்புவதை விட... சரிங்க

நீங்க சொல்லுங்க சிங்கப்பூரிலிருந்து சிலுக்குவார்பட்டிக்கு தேர்தல் கருத்து கணிப்பு எழுதலாமா? எளவு அதான் எழுதிட்டியே இப்போ இன்னாத்துக்கு கேக்குறனு சவுண்டு வுடாதிங்க, அடுத்த தேர்தலுக்குதான் இப்பமே கேட்டுக்கறன்.

6 பின்னூட்டங்கள்:

said...

//நீங்க சொல்லுங்க சிங்கப்பூரிலிருந்து சிலுக்குவார்பட்டிக்கு தேர்தல் கருத்து கணிப்பு எழுதலாமா? எளவு அதான் எழுதிட்டியே இப்போ இன்னாத்துக்கு கேக்குறனு சவுண்டு வுடாதிங்க, அடுத்த தேர்தலுக்குதான் இப்பமே கேட்டுக்கறன்.//

:-)))))))))))))))

said...

இப்போதைக்கு சிங்கப்பூருல இருக்கோம்கிறதுக்காக ஜோகூர் பாரு தொகுதி அலசலா எழுத முடியும் .நம்ம ஊர் பத்தித் தான் எழுத முடியும்.

நல்லாத் தான் கணிச்சிருக்கீங்க .என்னைப்பொறுத்தவரை நாகர் கோவில் பற்றி நான் கணித்தது நடந்தது .சென்னையில் அதிமுக நிறைய இடங்களைப்பிடிக்கும் என்று நினைத்ததும் நடந்தது.

said...

தலைவரே,

வேற மேட்டர்னு நம்ம்ம்ம்பி வந்தேன்.
கழுத்தறுத்தீட்டீரே....

said...

//கேவிஆர் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் தொகுதிகளுக்கு துண்டு போட்டுவிட்டார் //

துண்டு போட்டு என்ன பிரயோஜனம், எழுதலையே!!!!!!!!!

ஆனால், நயனம் இளங்கோவன் ஐயாவிடம் நான் இந்த இரண்டு தொகுதிகளுக்கு கணிச்சுச் சொன்னதே தான் நடந்துச்சு.

1. சிதம்பரம் தொகுதியிலே என்ன தான் பாலகிருஷ்ணனுக்கு நல்ல பெயர் இருந்தாலும் திமுக எம்எல்ஏவா இருக்கிற (இருந்த) சரவணனுக்கு சீட் கொடுக்காததாலே திமுக ஒழுங்கா வேலை செய்யாது. அதனால அதிமுகவுக்கு வாய்ப்பு அதிகம்.

2. கா.குடியிலே வள்ளல்பெருமான் இதுவரை ஜெயிச்சப்போல்லாம் பெருசா ஒண்ணுமே செஞ்சது இல்லை. இது சிறுத்தைகளுக்கு சாதகம்.

உள்ளாட்சித் தேர்தலுக்கு கணிப்பு உண்டா?

said...

//உள்ளாட்சித் தேர்தலுக்கு கணிப்பு உண்டா?//

நெல்லிகுப்பம் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி உறுதியானது.

:-))

said...

//இப்போதைக்கு சிங்கப்பூருல இருக்கோம்கிறதுக்காக ஜோகூர் பாரு தொகுதி அலசலா எழுத முடியும் .நம்ம ஊர் பத்தித் தான் எழுத முடியும்.
//
ஹி ஹி...