தே.மு.தி.க. வில் பண்ருட்டியார்
பண்ருட்டியார் என அழைக்கப்படும் பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்கள் எம்.ஜி.இராமச்சந்திரனின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர், எம்.ஜி.ஆரின் நெருக்கமான வட்டத்தில் இருந்தவர், எம்.ஜி.ஆரின் அரசியல் மற்றும் ஆட்சி முடிவுகளில் ஓரளவிற்கு முக்கிய காரணியாக இருந்தவர்,பொருளாதாரநிலையில் கீழிருந்த ஒரு குடும்பத்திலிருந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் B.E.(Hons.) பட்டப்படிப்பு படித்தவர், நாகரீகமான அரசியல்வாதியெனப் பெயரெடுத்தவர்.
இன்றைக்கும் பண்ருட்டித் தொகுதியில் ஓரளவிற்கு செல்வாக்கோடு வலம்வரும் அரசியல்வாதி,
பண்ருட்டித் தொகுதி முழுக்க முழுக்க கிராமங்கள் அடங்கிய தொகுதி, சாதாரணமாக ஊரும் வயலும், தோப்பும் தனித்தனியாக இருக்கும், ஆனால் பண்ருட்டித் தொகுதி கிராமங்கள் முந்திரித் தோப்பினுள் இருக்கும். முந்திரித் தோப்பின் நடுவில் செம்மண் மற்றும் தார் சாலையில் இன்றைக்கும் நகர பேருந்துகள் சென்று வந்து கொண்டிருப்பதுதான் பண்ருட்டியார் இன்றும் தொகுதியில் ஓரளவிற்கு செல்வாக்காக இருப்பதற்கான காரணம்.
எம்.ஜி.ஆரின் மறைவிற்குபின் 1989ல் சுயேச்சையாக போட்டியிட்டு (இரண்டாமிடம்)தோல்வியடைந்து பின் 1991ல் பா.ம.க. சார்பில் போட்டியிட்டு பா.ம.க.வின் சட்டமன்ற கணக்கை யானை மீதேறிச்சென்று துவக்கியவர் பண்ருட்டியார், 2001ல் மீண்டும் சுயேச்சையாக போட்டியிட்டார், கடும் போராட்டத்தில் பா.ம.க.வின் தி.வேல்முருகனிடம் தொகுதியை பறிகொடுத்த அவரால் மூன்றாமிடத்தையே பிடிக்கமுடிந்தது, பா.ம.க.வில் மருத்துவர் இராமதாசுக்கு அடுத்து இரண்டாமிடத்திலிருந்தவர் பா.ம.க.விலேயே தொடர்ந்திருந்தால் மத்திய அமைச்சராகியிருப்பார்.
சில நாட்களுக்கு முன் வரை கிட்டத்தட்ட அரசியல் துறவறம் சென்ற நிலையிலிருந்தார் பண்ருட்டியார், இதோ மீண்டும் தே.மு.தி.க. வில் சேர்ந்து பண்ருட்டி வட்டார அரசியலை சூடாக்கியுள்ளார்.தே.மு.தி.க.வினர் தற்போது பண்ருட்டி தொகுதியை நிச்சய வெற்றி தொகுதியாக கணக்கெடுப்பர், பண்ருட்டியாரின் வருகை தே.மு.தி.க விற்கு எந்த அளவிற்கு வெற்றி தரும் என்று கூற முடியாவிட்டாலும் தே.மு.தி.க. விற்கு பிணைத்தொகை பறிபோகாமல் இருக்கும் இரண்டாவது தொகுதி (விசயகாந்த் போட்டியிடுவது முதல் தொகுதி) யாக பண்ருட்டி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பண்ருட்டி தொகுதியின் தற்போதைய கட்சிகளின் பலத்தில் முதலிடத்தை தி.மு.க.வும் சிறிய அளவு வித்தியாசத்தில் பா.ம.க. இரண்டாமிடத்திலும் அதற்கடுத்ததாக அ.தி.மு.க.வும் விடுதலைசிறுத்தைகளும் சமபலத்தில் இருக்கின்றனர், இதற்கடுத்த நிலையில் பண்ருட்டியார் சொந்த பலத்திலுள்ளார்.
தற்போதைய பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகனும் (பா.ம.க.) பண்ருட்டியாரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள், ஒரு வகையில் உறவினர்களும் கூட, தி.வேல்முருகன் அதிரடி அரசியல்வாதி மற்றும் இளைஞர் எதற்கும் நேரடியாக களத்தில் இறங்கி போராடுபவர், பா.ம.க.வின் ரஜினியுடனான மோதலின் போது பண்ருட்டி பகுதியில் பல ரஜினி மன்றங்கள் கலைக்கப்பட காரணமாக இருந்தவர், தற்போதைய நிலையில் இளைஞர்கள் பலர் இவரின் பலமாக உள்ளனர், நிறைய நல்லது செய்து நல்ல ச.ம.உ. என்று பெயரெடுக்கவில்லையென்றாலும் கெட்ட பெயர் எடுக்காததும் ஒரு வகையில் இவருக்கு பலம்தான், மேலும் தொகுதியில் அனைவரோடும் தொடர்பிலிருப்பவர்.
பண்ருட்டியாரின் பலமாக இருப்பவர்கள் அவர்காலத்து நண்பர்கள், எல்லோரும் நடுத்தரவயதினர், பண்ருட்டியார் இளைஞர்கள் பலத்தில் குறைவாக இருந்தார், விசயகாந்த் மன்றத்தினர் எல்லோரும் இளைஞர்கள் இதில் முக்கியமான விடயம் பெரும்பாலானோர் முதல்முறையாக வாக்களிக்க இருப்பவர்கள் ஆனால் இவர்களின் எண்ணிக்கை மற்ற கட்சிகளுடன் பொருத்தி பார்க்கும் போது மிகக் குறைவானதே.
வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் பண்ருட்டி தொகுதி பா.ம.க.விற்கு என்பதானது ஏறக்குறைய முடிவான விடயம், இந்த முறையும் தி.வேல்முருகனே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு முந்தைய தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது பண்ருட்டியார் சுயேச்சையாக போட்டியிட்ட போது வெற்றிபெற்றதில்லை, ஏதேனும் ஒரு கட்சி பலத்துடன் போட்டியிட்டபோது தான் வெற்றி பெற்றுள்ளார், இதையெல்லாம் பார்க்கும்போது பண்ருட்டியாரை வைத்து தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் கணக்கைத் துவக்கும் என்பது நடக்காத விடயம் போலத் தோன்றுகின்றது.
ஒருவேளை அதிமுக வோடு தேமுதிக கூட்டணி வைத்தால் அதிமுக பண்ருட்டி தொகுதியை விட்டுத்தருமா என்பது சந்தேகமே, பாஜக கூட்டணியில் புதுக்கோட்டை தொகுதியை திருநாவுக்கரசருக்காக தராமல் இருந்தவர் தான் செல்வி.ஜெயலலிதா, இதே நிலை பண்ருட்டியாருக்கும் ஏற்படலாம், எப்படி பார்த்தாலும் பண்ருட்டியாரின் அரசியல் கணக்கு எந்த அளவிற்கு எடுபடும் என்பதில் பலத்த சந்தேகமே மிஞ்சுகின்றது.
பண்ருட்டியார் தே.மு.தி.க.வில் இணைந்ததால் பிணைத்தொகை பறிபோகாத தொகுதிகளில் ஒன்றை அதிகப்படுத்தியுள்ளது அந்த கட்சி, ஆனால் இத்தனை நாள் சட்டமன்ற உறுப்பினர் கனவில் மிதந்த மன்ற நிர்வாகிகளுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளது, இது மாதிரி தே.மு.தி.க.வில் ஆங்காங்கே அரசியலில் காணாமல் போனவர்களை சேர்த்தால் தே.மு.தி.க.விற்கு பெரிய எதிர்காலமோ, வெற்றியோ கிடைத்துவிடும் என்று சொல்லமுடியாது ஆனால் கனவிலிருக்கும் மன்றநிர்வாகிகளுக்கு பலத்த ஏமாற்றமே மிஞ்சும், மன்ற பலமும் ஆட்டம் காணும் என்பது நிதர்சனமான உண்மை.
தே.மு.தி.கவினால் பண்ருட்டியாருக்கு இலாபம் என்பதை விட பண்ருட்டியாரால் தேமுதிகவிற்கு இலாபம் என்பதுதான் தற்போதைய நிலை...
பின் குறிப்பு:
பண்ருட்டியார் தே.மு.தி.க.வில் சேர்ந்த போதே இந்த பதிவை எழுதினேன், இப்போது தான் பதிவிட முடிந்தது.
21 பின்னூட்டங்கள்:
//எம்.ஜி.ஆரின் நெருக்கமான வட்டத்தில் இருந்தவர்//
ஆர்.எம்.வீக்கு அடுத்தது பண்ருட்டியார்தான்.
//பண்ருட்டியாரின் பலமாக இருப்பவர்கள் அவர்காலத்து நண்பர்கள், எல்லோரும் நடுத்தரவயதினர்//
நடுத்தரவயதா???!!
//ஒருவேளை அதிமுக வோடு தேமுதிக கூட்டணி வைத்தால் //
தனித்துப் போட்டியிடுவோம்னு ("ஓட்டப் பிரிப்போம்னுல்ல") கூவுதுக?!.
//மன்றநிர்வாகிகளுக்கு பலத்த ஏமாற்றமே மிஞ்சும்//,
பண்ருட்டியெல்லாம் ஆள் சேர்க்கத்தான்!., பதவி வேணாம்னுதான் அவரே பேசியிருக்காரே?...
//நடுத்தரவயதா???!!
//
சரி விடுங்க எல்லோரும் 55+
//பண்ருட்டியெல்லாம் ஆள் சேர்க்கத்தான்!., பதவி வேணாம்னுதான் அவரே பேசியிருக்காரே?...
//
நீங்க நம்புகின்றீரா?
லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட் பதிவு தல... ஹ்ம்ம்ம்...
////ஆனால் கனவிலிருக்கும் மன்றநிர்வாகிகளுக்கு பலத்த ஏமாற்றமே மிஞ்சும், மன்ற பலமும் ஆட்டம் காணும் என்பது நிதர்சனமான உண்மை.//
நிச்சயமாக ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை..
//இரண்டாமிடத்திலிருந்தவர் பா.ம.க.விலேயே தொடர்ந்திருந்தால் மத்திய அமைச்சராகியிருப்பார்.//
ஏன் ப ம க வை விட்டு வந்தாருனு சொல்லுங்க தல...
//ஒருவேளை அதிமுக வோடு தேமுதிக கூட்டணி //
உங்க கணக்கு இப்படி இருக்கு.. எனக்கென்னமோ அதிமுக - பா ம க ..... அப்படிதானு தோனுது தல. என்ன சொல்றீங்க???
அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொள்வதைவிட கட்சியின் கொள்கையை காற்றில் கரைப்பதற்கு விரைவான வழி இல்லை..
ஊழலை ஒழிப்போம் என்பது தானே இந்த கட்சியின் தாரக மந்திரம் ?!
//பண்ருட்டியெல்லாம் ஆள் சேர்க்கத்தான்!., பதவி வேணாம்னுதான் அவரே பேசியிருக்காரே?...
நீங்க நம்புகின்றீரா?\\
குழலி., எம்.ஜி.யார்க்கு அவர் ஏற்கனவே கட்சியில இருந்ததால... அங்கேயிருந்து வந்தவங்கள பெரிசா நினைச்சு உயரத்துல வச்சாரு... ஆனா இப்ப அரசியல் டிரெண்ட்... புது முகங்களை அப்படியே புதுசா இறக்கரதுதான்... அப்பதான் பழைய இமேஜ் மறைஞ்சு போகும். வேணும்னா நம்மள ஒரு காலத்துல நல்லா எதுத்து... தரக் குறைவாப் பேசுறவங்களுக்கு ஒரு சபாநாயகர் பதவி கொடுத்து அழகு பார்க்கலாம். நம்ம கருப்பு... ம்.... எம்.ஜி.யாரும் சினிமாவிலேயே இயக்குனர்கள்., வில்லன்கள்னு புது முகங்கள அறிமுகப் படுத்துரவரு... பண்ருட்டிக்கு பதவி ஆசை இருக்காதுன்னு நான் சொல்லமாட்டேன்... ஒரு காலத்துல தமிழ்நாட்டுல கொடிகட்டிப் பறந்த அரசியல்வாதி... கடைசி காலத்துல பதிவில இருக்கணும்னு நினைக்கிறது தப்பில்ல.... நண்டு, சிண்டு கூட முதல்வர் ஆகணும்னு வசனம் பேசுது.... அமைச்சரா இருந்தவருக்கு ஆசை இருக்காதா?., ஆனா கிடைக்குமாங்கிறதுதான் கேள்வி!!.
வீ.எம். கேப்டன் விஜயகாந்த் பாமகவின் எதிர் கூட்டணியில் இருப்பார், கூட்டணியில்லாமல் அவர் தேர்தலில் போட்டியிட மாட்டார், அப்படியே போட்டியிட அவர் நினைத்தாலும் அண்ணி விடமாட்டாங்கோ...
//பா.ம.க.வின் ரஜினியுடனான மோதலின் போது பண்ருட்டி பகுதியில் பல ரஜினி மன்றங்கள் கலைக்கப்பட காரணமாக இருந்தவர்
//
குழலி,
நல்லாத்தான் சீரியஸா எழுதுறீங்க. அப்பப்போ இந்த மாதிரி ஜோக்கெல்லாம் நடுவுல எதுக்கு?
கூட்டணியில்லாமல், தோல்வியே வந்தாலும் பரவாயில்லைன்னு களம் இறங்கினால்தான் நன்றாக இருக்கும், கட்சியின் தரமும் கூடும். வி.காந்துக்கு வயசும் இருக்கு , அரசியல் பற்றி ஓரளவு புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயமும் இருக்கு. கூட்டணியால் கிடைக்கும் சிறுபான்மை வெற்றி கூட, விழலுக்கிறைத்த நீராகத்தான் போகும்.
விசயகாந்து அதிமுகவோட கூட்டணி சேந்தா காஞ்சி மடத்த காப்பாத்தறது
யாருங்கோ?
////பா.ம.க.வின் ரஜினியுடனான மோதலின் போது பண்ருட்டி பகுதியில் பல ரஜினி மன்றங்கள் கலைக்கப்பட காரணமாக இருந்தவர்
//
குழலி,
நல்லாத்தான் சீரியஸா எழுதுறீங்க. அப்பப்போ இந்த மாதிரி ஜோக்கெல்லாம் நடுவுல எதுக்கு?
//
என்ன ராம்கி அந்த சமயத்தில தினமலர்லயே செய்தியாக வெளியிட்டிருந்தார்களே, அதுவும் ஒரே நாளில் 8 மன்றங்கள் கலைக்கப்பட்டது, அதையும் விட என் நண்பர் அவர் தலைமையிலிருந்த ரஜினி ரசிகர் மன்றத்தை கலைத்தார், ஊர் பெயர் வேண்டுமென்றால் மின் அஞ்சலில் தரவா? ராம்கி நீங்கள் ரஜினியின் தீவிர ரசிகர் தான் ஆனால் அதற்காக உண்மை மாறாது, பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிட்டது என நினைத்துக் கொள்ளுமாம்....
தினமலர் 2002ஆகஸ்ட்16,17,18,19 செய்திதாளில் பாருங்கள் (தினமலரில் முந்தைய நாட்களின் செய்திகளை பார்ப்பது எப்படி?) கலைக்கப்பட்ட ரஜினி ரசிகர்மன்றங்கள், மன்றத்தலைவர்களின் பேட்டி எல்லாம் வந்திருக்கும்...
panrotti raamachandran avargal, raamadass kudmba arasiyal meethaana veruppin kaaranamaga vijayakanth katchiyil saernthiruppar ena ninaikkairaen. raamadass arasiyalai atruk kollatha innum palarum jagathratchakanin jananaayagamunnetrakazagathil ullanar avargalai dmdk kku izukkum vaelayai panrotti seyyumpothu, athu jmk vs dmdk vaka ethirplikkum pmk laabam adayum arasiyali ithella sakajamappa!
/பண்ருட்டியாரால் தேமுதிகவிற்கு இலாபம் /
என்னது பன்னும், ரொட்டியுமா?
//panrotti raamachandran avargal, raamadass kudmba arasiyal meethaana veruppin kaaranamaga vijayakanth katchiyil saernthiruppar ena ninaikkairaen.
//
பண்ருட்டியார் பாமகவிலிருந்து வெளியேறியது 1993-94 என நினைக்கின்றேன், அந்த சமயத்தில் அன்புமணி அரசியலில் இல்லை.
நன்றி
நான் மதிக்கும் அரசியல்வாதிகளுள் ஒருவர் பண்ருட்டியார். தொகுதியில் தனிப்பெரும் செல்வாக்கு மிக்க மனிதர். ஆனால் அவரது அரசியல் வாழ்க்கை முடிந்து வருடங்கள் பல ஓடிவிட்டது. மேலும் தாய் கட்சியிலிருந்து விலகியவர் வேறு கட்சி(யில்) ஆரம்பித்தோ (அ) இணைந்தோ பெரிதாக சாதித்ததாக வரலாறு இல்லை. பா.ம.க வில் இருந்து விலகியவர்களது அரசியல் வாழ்க்கை திரும்ப பிரகாசித்ததாகவும் வரலாறு இல்லை.எ.கா. கொடுக்க வேண்டிய தேவையும் இல்லை.
ரஜினிகாந்தோடு ஒப்பிடும் போது, விஜயகாந்திற்கு மனவலிமை சற்று அதிகம் மற்றும் தெளிவான மன ஓட்டமும் இருப்பது ரஜினியின் அடிபொடிகளால் கூட மறுக்க முடியாத உண்மை. மேலும் பண்ருட்டி, நெல்லிக்குப்பம்(சார்ந்த) கிராமங்களில் என்ன தான் ரசிகர் மன்றங்கள் இருந்தாலும் அவை தேர்தல் நேரங்களில் மருத்துவரின் பேச்சை மட்டுமே கேட்கும் என்பது கடந்த 8 தேர்தல்களின் முடிவைப் பார்த்தால் மிக நன்றாகவேப் புலப்படும்.
நன்றி!
சத்யா.
//தினமலர் 2002ஆகஸ்ட்16,17,18,19 செய்திதாளில் பாருங்கள் (தினமலரில் முந்தைய நாட்களின் செய்திகளை பார்ப்பது எப்படி?) //
குழலி, தினமலரில் ஜனவரி 1 2004 தொடங்கி உள்ள இதழ்கள் மட்டுமே தற்பொழுது இணையத்தில் கிடைக்கிறது.
பழைய இதழ்களைப் பார்க்க http://www.dinamalar.com/2004jan01/frontpage.asp என்ற சுட்டியில் தேதி, மாத, வருடங்களை மாற்றி பார்த்துக்கொள்ளலாம்.
தகவல்களுக்கு நன்றி கேவிஆர்
அவைத்தலைவர் பதவி என்பது கட்சியில் பெருசுகளை டம்மியாக்கும் முதல் முயற்சி என்பதே என் கருத்து. விஜியும் அரசியலில் தேறிவருவது தெரிகிறது,
//அவைத்தலைவர் பதவி என்பது கட்சியில் பெருசுகளை டம்மியாக்கும் முதல் முயற்சி என்பதே என் கருத்து. விஜியும் அரசியலில் தேறிவருவது தெரிகிறது,
//
அது சரி
//இரண்டாமிடத்திலிருந்தவர் பா.ம.க.விலேயே தொடர்ந்திருந்தால் மத்திய அமைச்சராகியிருப்பார்//
ஒரே ஒரு தடவையா? அடுத்த தடவை ஏ.கே. மூர்த்தி நெலமை தான் வந்திருக்கும். தப்பிச்சார் பண்ருட்டி கொஞ்சம் நஞ்சம் மானம் மரியாதையை காப்பத்திக்க.
மக்களுக்கு என்ன செய்தார் என்பதை சாதனைகளாக குறிப்பிட இயலாமல் ரஜினி மன்றங்களை கலைத்த்தை எல்லாம் சாதனைகளாக குறிப்பிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் உங்களைப் பார்த்து வேதனைப்படுகிறேன்
Post a Comment