பழைய கலாச்சார காவலர்களும் மாற்றங்களும்
எவையெல்லாம் பொதுவாக உயர் கலாச்சாரம் என உருவகப்படுத்தப்பட்டு வந்ததோ அதெல்லாம் பிறரால் கை கொள்ளப்படும் போது அதே உயர் கலாச்சாரம் என உருவகிக்கப்பட்டு வந்த விடயம் தாழ்த்தப்படுகின்றது,
புத்தமதம் உயிர் கொல்லாமையை வலியுறுத்திய அதே சமயம் புத்தமதம் உணவு பழக்கத்தில் அசைவ உணவை கட்டுப்படுத்தாத காலகட்டம் அது, புத்தமதத்தின் உயிர் கொல்லாமை மிக உயரியதாக கருதப்பட்டு வந்த நேரத்தில் அசைவம் புசிப்பதைவிட்டு சைவ உணவு உட்கொள்ளும் பழக்கம் உயரியதாக உருவகப்படுத்தப்பட்டது என்று அக்னிகோத்ரம் தாத்தாச்சாரி அவர்கள் எங்கே செல்கிறது இந்து மதம் என்ற தொடரில் கூறிப்பிட்டுள்ளார்.
குடிப்பழக்கம் ஒரு சமூக நோய் எனவும், அதிலிருந்து மக்கள், முக்கியமாக அடித்தட்டு மக்கள் வெளிவர வேண்டும் என வலியுறுத்தி போராடினால் அதும் கூட கேலியாக்கப்படுகின்றது/மறைக்கப்படுகின்றது, அது மட்டுமின்றி தற்போது அது தனி மனித சுதந்திரம் அதில் என்ன தவறு என தாங்கிப்பிடிக்கின்றனர், இத்தனை காலமும் கீழ் கலாச்சாரமாகவும் ஒழுக்ககேடாகவும் கருதப்பட்டு வந்த குடி பிரச்சினையை இந்த தலைவர்கள் கையில் எடுத்தவுடன் திடீரென தனி மனித சுதந்திரம் என பிதற்ற ஆரம்பிக்கின்றனர் சிலர், ஆனால் இதே குடியை விட்டு வெளிவரவேண்டுமென காந்தியிலிருந்து,ராஜாஜி மற்றும் பலர் போராடியபோது வராத தனிமனித சுதந்திரம் இப்போது இந்த தலைவர்கள் கையில் எடுத்தவுடன் வருகின்றது.
சில பல ஆண்டுகளுக்கு முன் கைம்பெண் திருமணமும் மறு மணங்களும் மிக சாதாரணமாக இருந்த இந்த சமூகத்தில் திருமணம் ஒரு முறை தான் என பரப்பி அது உயர் கலாச்சாரமாகவும் மறு மணங்கள் வழக்கமாக இருந்த சமூகத்தை "அறுத்து கட்டிய சாதி" என்றும் "கட்டுகழுத்தி" என்றும் ஏளனம் பேசி உயர் கலாச்சாரம் என்றால் எத்தனை சிறிய வயதில் கணவன் இறந்திருந்தாலும் மறு மணம் செய்துகொள்ளாமல் இருப்பதுவேயாகும் அதுவே தியாகம் என்று உருவகப்படுத்தியது இதற்கு ஊடகங்களும் கதைகள்,கட்டுரைகள், புராணக்கதைகள் என்ற பெயரில் இதை தாங்கிபிடித்தன(இதை முதலில் இலக்கிய உலகில் உடைத்தெறிந்தவர் ஜெயகாந்தன் தான்) முறையான திருமண பாலியல் உறவுகளுக்கு தரப்பட்ட ஏளன பெயர்கள் தான் அறுத்துகட்டுற சாதி,கட்டுக்கழுத்தி. இன்று முறையற்ற பாலியல் உறவுகளை கூட தனி மனித சுதந்திரம் என்று கூறி வக்காலத்து வாங்குகின்றன இதே ஊடகங்களும் மற்ற சிலரும்.
இந்த இடித்தலுக்கும் உரைத்தலுக்கும் பெரியாரை வேறு துணைக்கிழுக்கின்றனர், 50 ஆண்டுகாலமாக அழைக்கப்படாத பெரியாரை, பெரியார் கூறிய பெண்ணிய கருத்துகளை இத்தனை ஆண்டுகளாக ஆதரிக்காமல், இத்தனை ஆண்டுகளாக கேலி கிண்டல் பேசிவிட்டு தற்போது இந்த தலைவர்களை தாக்க மட்டும் துணைக்கழைக்கின்றனர் இத்தனை காலம் கலாச்சார காவலர்களாக இருந்தவர்கள்.
இவர்களுக்கு பிரச்சினை பெண்ணியம் பற்றியும் அல்ல, கருத்து சுதந்திரம் பற்றியும் அல்ல, அந்த தலைவர்களின் மீது சாணியெறிய வேண்டுமென்பது மட்டுமே.
இதை பாதி எழுதி முடித்திருந்த சமயத்தில் திண்ணையில் மாதவி ஸ்ரீபிரியாவின் சீரழிக்கும் சினிமா, மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் என்ற கட்டுரையை படிக்க நேர்ந்தது, கிட்டத்தட்ட என் கருத்தை ஒத்திருந்ததால் இங்கே அதன் சுட்டி http://www.thinnai.com/pl1006052.html
இத்தனை காலம் கோலோச்சியிருந்த கலாச்சார காவலர்களின் குரல் பலவீனமாவதும், அவர்களின் வேடதார சட்டை கழற்றப்படுவதும், புதிய கலாச்சார காவலர்கள் தோன்றியிருப்பதும் எனக்கு மகிழ்ச்சியே...
தம் ஆயுதத்தை எதிரியை தேர்ந்தெடுக்கவிடுபவன் புத்திசாலியல்ல, பழைய கலாச்சார காவலர்களின் ஆயுதத்தை புதிய கலாச்சார காவலர்கள் முடிவு செய்கிறார்கள் என்பது பழைய கலாச்சார காவலர்களின் முதல் தோல்வி...
பழைய கலாச்சார காவலர்களின் இந்த தோல்வி எனக்கு மகிழ்ச்சியே, தொடரட்டும் இந்த தோல்வி, அவர்கள் முழுத் தோல்வி அடையும் வரை புதிய கலாச்சார காவலர்களின் வெற்றி அவசியமாக இருக்கின்றது.
14 பின்னூட்டங்கள்:
சரியான நேரத்தில் சரியான பதிவு, பாராட்டுக்கள்
Good one.
nalla katturai.. periyaar sonnavaRRAi maRRA vishyanggaLukku (kadavuL maRRuppukku mukkiyamaaga) pin paRRum thalaivargaL peNsuthanthiram vishayaththil een vittu vidukiRaargaL enpathee keeLvi.
en pathiviRkku vanthathaRkum intha katturaiyaip padiththathaRkum nanRi
anbudan vichchu
neyvelivichu.blogspot.com
விச்சு உங்கள் பதிவிற்கான பதில் இந்த பதிவிலேயே உள்ளதே...
"பழைய கலாச்சார காவலர்களின் இந்த தோல்வி எனக்கு மகிழ்ச்சியே, தொடரட்டும் இந்த தோல்வி, அவர்கள் முழுத் தோல்வி அடையும் வரை புதிய கலாச்சார காவலர்களின் வெற்றி அவசியமாக இருக்கின்றது."
indha oru idathil mattumdhan konjam idikkiradhu. pudhiyavargalum aangal.
pazhayavargalum aangal. idhai thaan periyar poonai endrum eliku viduthalai kodukkathu. eli than sudhandhirathai thaane thedikollavendiyadhudhan endru solgirar.
idhanaalthaano ennavo eligal kushbuvai atharikinranar.
//இந்த இடித்தலுக்கும் உரைத்தலுக்கும் பெரியாரை வேறு துணைக்கிழுக்கின்றனர்//
எங்கே நெஞ்சில் கொஞ்சமேனும் துணிவிருந்தால்., பசும் பொன் முத்துராமலிங்கத் தேவரை துணைக்கழைக்கச் சொல்லுங்கள். தன்னுடைய சொத்து முழுவதையும் நாட்டுக்குப் பள்ளிகளாகவும், கல்லூரிகளாகவும் விட்டுச் சென்றவரை., நேற்று மழையில் வந்ததெல்லாம்., கன்னடர் என்றும், தமிழை கேலி செய்தவர் என்றும் இன்று எழுதுகிறது., அதை பரப்ப ஒரு கூட்டம். எச்சில் கையால் கூட காகம் விரட்டாத கூட்டம். நகைத்துவிட்டு போவோம் விடுங்கள்.
இந்த கலாச்சாரக் காவலர்களே எதுக்கு? கலாச்சாரம் என்பது ஒரு நிகழ்வு, அதைத் தாங்கிப்பிடிக்கும் தேவையற்ற காவலர்களால்தான் எல்லாத் தொல்லைகளும். சுட்டி படிக்க முடியலை, யூனிகோடில் இல்லையோ?
உங்கள் பதிவில் பல பிழைகள் உள்ளன. விதவை மறுமணம் உள்ளிட்ட பல சமூக சீர்திருத்தக்
கருத்துக்களை பாரதி உட்பட பலர் போன நூற்றாண்டின் துவக்கத்தில் வலியுறுத்தியிருக்கிறார்கள். ராஜாஜி மது விலக்கினை அமுல் செய்ய, ஆதரிக்க ஒரு முக்கிய காரணம் அது காந்தியின் கொள்கை,
காங்கிரஸ் ஏற்றுக்கொண்ட கொள்கை. பெரியார் காங்கிரசில் இருக்கும் போது அதை ஏற்றார்.
ஆனால் பின்னர் அதை ஏற்கவில்லை. (இதை நினைவிலிருந்து எழுதுகிறேன்). கலாச்சார,சமூக
விஷயங்களில் பிற்போக்கான நிலைப்பாடு எடுத்த தேசபக்தர்களும் உண்டு, முற்போக்கான
நிலைப்பாடு எடுத்துக் கொண்டு காங்கிரசை எதிர்த்தவர்களும் உண்டு. மது விலக்கு உட்பட பல்வேறு பிரச்சினைகளில் தனி நபர் உரிமை, அதன் சமூகத் தாக்கங்கள் குறித்து விவாதிக்க வேண்டும்.மது விலக்கினை ஒரு அறப்பிர்ச்சினையாக அல்லது குடிப்பதை பாபம் என்ற கண்ணோட்டமோ அல்லது மது குடிப்பதை தனி நபர் உரிமையாக மட்டும் பார்ப்பதோ ஒரு பக்கத்தினை மட்டும் வலியுறுத்துவதாகும். மிகவும் எளிமைப்படுத்தி
இவற்றைப் புரிந்துகொள்ள முடியாது.
சில பல ஆண்டுகளுக்கு முன் கைம்பெண் திருமணமும் மறு மணங்களும் மிக சாதாரணமாக இருந்த இந்த சமூகத்தில் திருமணம் ஒரு முறை தான் என பரப்பி அது உயர் கலாச்சாரமாகவும் மறு மணங்கள் வழக்கமாக இருந்த சமூகத்தை "அறுத்து கட்டிய சாதி" என்றும் "கட்டுகழுத்தி" என்றும் ஏளனம் பேசி உயர் கலாச்சாரம் என்றால் எத்தனை சிறிய வயதில் கணவன் இறந்திருந்தாலும் மறு மணம் செய்துகொள்ளாமல் இருப்பதுவேயாகும் அதுவே தியாகம் என்று உருவகப்படுத்தியது இதற்கு ஊடகங்களும் கதைகள்,கட்டுரைகள், புராணக்கதைகள் என்ற பெயரில் இதை தாங்கிபிடித்தன(இதை முதலில் இலக்கிய உலகில் உடைத்தெறிந்தவர் ஜெயகாந்தன் தான்)
நிச்சயமாக இல்லை. ஜெயகாந்தனுக்கு முன்பே விதவைகள் நிலை, விதவை மறுமணம் போன்றவை
கதைகளில் பேசப்பட்டுள்ளன.
நன்றி ரவி ஸ்ரீனிவாஸ்,
//விதவை மறுமணம் உள்ளிட்ட பல சமூக சீர்திருத்தக்
கருத்துக்களை பாரதி உட்பட பலர் போன நூற்றாண்டின் துவக்கத்தில் வலியுறுத்தியிருக்கிறார்கள்
//
ஆம், இல்லையென்று நானும் சொல்லவில்லை ஆனால் அப்போதும் கூட அந்த சமயத்தில் சமுதாயத்தில் இவைகள் உயர் கலாச்சாரமாக மதிக்கப்படவில்லை என்பதும் மறுக்க முடியாத உண்மை.
//மது விலக்கினை ஒரு அறப்பிர்ச்சினையாக அல்லது குடிப்பதை பாபம் என்ற கண்ணோட்டமோ அல்லது மது குடிப்பதை தனி நபர் உரிமையாக மட்டும் பார்ப்பதோ ஒரு பக்கத்தினை மட்டும் வலியுறுத்துவதாகும்
//
மது குடிப்பதை பாவம் என்று பேச வரவில்லை, அது ஆளுக்கு ஆள் மாறுபடும், ஒரு முறை சாரு கூட மற்றொரு எழுத்தாளரை கிண்டலடித்திருப்பார், மது குடிப்பது தவறு ஆனால் பியர் மட்டும் சாப்பிடலாம் என்று அந்த எழுத்தாளர் கூறுவாரென,
ஆனால் அதே சமயத்தில் அடித்தட்டு மக்கள் மதுவினால் வாழ்க்கையையும் குடும்பத்தையும் இழக்கின்றனர் என்பதும் கருத்தில் கொள்ளவேண்டி இருக்கின்றது, நீங்கள் சொல்வது போல இது ஒற்றை பரிமாணம் கொண்டதில்லை, இதில் பல பரிமாணங்கள் உள்ளன.
//நிச்சயமாக இல்லை. ஜெயகாந்தனுக்கு முன்பே விதவைகள் நிலை, விதவை மறுமணம் போன்றவை
கதைகளில் பேசப்பட்டுள்ளன.
//
இந்த விடயத்தில் தகவல் பிழைக்கு வருந்துகின்றேன், ஜெயகாந்தனுக்கு முந்தைய காலகட்டத்தில் புதுமைபித்தன் தவிர மற்றவர்களின் படைப்புகளை நான் படித்ததில்லை, ஜெயகாந்தனின் பல படைப்புகள் இதை வலியுறுத்தியிருக்கின்றன, ஜெயகாந்தனுக்கு முந்தைய காலகட்டத்து எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகம் செய்து வைத்தால் நலம்
நன்றி
//Your posting was mostly a reply to viswamithra
//
விசுவாமித்திரருக்காக இதை எழுதவில்லை, சில நாட்களுக்கு முன்பே எழுத ஆரம்பித்தது, ஆனால் இது விசுவாமித்திரரின் திண்ணை கட்டுரைக்கு பதிலாகவும் அமைந்துவிட்டது. பலரின் எண்ணங்களும் விசுவாமித்திரரைப் போலவே தானே இருக்கின்றது, என்ன செய்ய...
இறைவன் உங்கள் விமர்சனம் என் எழுத்து மேம்பட உதவும்... மிக்க நன்றி
காலத்துக்கு காலம் கலாச்சாரங்கள் மாறிக்கொண்டே இருக்கும்!
இது ஒரு பரிமாண வழற்சி என்றே எனக்கு படுகின்றத!
மற்றவர்சொல்கிறார்கள் என்று நாம் அதை செய்யாமல் எமக்கு எது தேவையோ அதை தெரிவு செய்வது நன்று!
Post a Comment