நூறு! நூறு!! நூறு!!!
அது என்னமோ தெரியலைங்க நூறுக்கும் நமக்கும் ராசியே இல்லை, 90 அடிச்ச டெண்டுலகர் அடுத்த 10 அடிக்கறதுக்குள்ள கட்டையை போட்டு படுத்துவாரே அது மாதிரி வேகமாக வந்த பதிவுகள் கடந்த சில வாரங்களாக கட்டை போட்டுக் கொண்டிருக்கின்றது, 90க்கு அப்புறம் அப்படி இப்படி தட்டி போங்கு ஓட்டங்கள் எடுப்பது மாதிரி நானும் அமைச்சர் அன்புமணி படம், குரங்கு படம், .ஜினி படம் அப்படினு போங்கு பதிவுகளா போட்டாலும் நூறு வருவதற்குள் ஸ்ஸ்ஸ்ஸ் மூச்சு வாங்குது.
நூறுனாலே ஒரு கவர்ச்சி தானுங்க, கவர்ச்சின்ன உடனே கற்பனை குதிரையை வாய்வேகம், மனோவேகத்துல(பாடகர் மனோ இல்லீங்க) தட்டிவிட்டுடாதிங்க. ஆனா பாருங்க நான் முன்பே சொன்னது மாதிரி நூறுக்கும் நமக்கும் ராசியே இல்லிங்க, இது வரை ஒரு தடவை கூட நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்ததேயில்ல அட முதல் ரேங்க் கூட எடுத்துருக்கேன் (நெசமாதாங்க!!!) ஆனால் 12+4=16 வருசத்துல ஒரு முறை கூட நூற்றுக்கு நூறு எடுத்ததேயில்லை, நூறுனா உடனே எனக்கு மூன்று நூறு ஞாபகத்துக்கு வரும், என்னோட சித்தி வீட்டுக்கு போயிருந்தப்ப பக்கத்து வீட்டுல ஒரு பாட்டி நூறு நூறுனு நூறு தடவை நூறை கூப்பிட்டு இம்சை செஞ்சாங்க, அப்புறமா தான் தெரிந்தது நூறு நூறுனு கூப்பிட்டது நூறு இல்லை நூரு ன்னு, நூரு அந்த வீட்டு குட்டி பாப்பா...
11வது படிக்கும்போது நானும் நம்ம நண்பரும் கணக்கு பாடத்துக்கு டியூஷன் போயி சேரலாம்னு பிரபலமா இருந்த ஒரு ஆசிரியர் கிட்ட சேர போனோம், அப்போ கேட்டாரு தம்பி நீ எத்தனை மதிப்பெண் கணக்குலனு உடனே நம்ம நண்பர் நூறு அப்படின்னாரு, அந்த ஆசிரியர் ரொம்ப சந்ததோசமா கணக்குல சென்டமா கிரேட் கிரேட்னு புகழ்ந்தாரு, என்னை கேட்டாரு எத்தனைனு நான் நாம எடுத்த மதிப்பெண்ணை சொன்னோம், அப்புறமா நம்ம நண்பர் மச்சான் நான் அவர் +1 காலாண்டுல எடுத்த மார்க்க கேட்கிறார்னு(+1,+2 லாம் 200க்கு தான் மதிப்பெண்கள்) சொன்னேன்டா அவர் 10வது பரீட்சை மார்க்குனு நினைச்சி என்னை ரொம்ப புகழ்ந்துட்டாரு வெட்கமா இருக்கு அப்படின்னான்.
பெங்களூர் கொரமங்களாவில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்த போது எங்க அலுவலகத்தின் செக்யூரிட்டியை அழைக்க இன்டர்காமில் 100 அழுத்த வேண்டும், அன்னைக்கு பாருங்க ஏதோ நினைப்பில் 100 அழுத்திவிட்டேன், பேசியது ஹலோ கோரமங்களா போலீஸ் ஸ்டேஷன் அப்படின்னாங்க, சாரி சார் தவறுதலா அழைத்துவிட்டேன் என்று பேசி வைத்துவிட்டேன் பிறகுதான் எத்தேச்சையாக '0' அழுத்தி பிறகு 100 அழுத்தியது புரிந்தது, 0 அழுத்தி பிறகு எண் அழுத்தினால் உள்ளூர் தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளலாம்.
இந்த கிரிக்கெட் விளையாட்டுல பைத்தியமா பள்ளியில் படிக்கும் போது அலைந்து கொண்டிருப்பேன், நமக்கு உடம்பில் வலுவே இருக்காது, ஆனா மட்டையடிக்க முதல்லயே அனுப்புவாங்க அதாங்க ஓப்பனிங் பேட்ஸ்மேன், கட்டை போடுறதுல மன்னனாச்சே, சோயிப் அக்தர் மாதிரி மாங்கு மாங்குனு ஓடி வந்து போடுவான் நம்ம சின்னி, அத ஒரு கட்டை வைத்தா பந்து எந்திரிக்கவே எந்திரிக்காது, ஒரு கட்டத்துல நம்ம ஆளுங்களே டென்சனாயி டேய் ஒன்னு அடி இல்ல அவுட் ஆகு அப்படின்னுவாங்க, நாமளும் எப்படித்தான் நூறு அடிக்கறது அதனால் பொடிப்பசங்களை கூப்பிட்டு வச்சி கிரிக்கெட் விளையாடுறது, எப்படியும் நூறு அடிச்சிடறதுனு ஆடினேன் 95 வந்துட்டேன், கேட்ச் எடுக்கவே தெரியாத பக்கத்து வீட்டு பையன் கீப்பிங் கேட்ச் எடுத்துட்டாங்க, அன்னையோட இந்த நூறு ரன் அடிக்கிற கனவை மறந்துட்டேன்.
சரி சென்டமும் செஞ்சுரியும் தான் நம்ம பள்ளி வாழ்க்கையில கனவாவே ஆயிடுச்சி, கல்லூரியிலாவது செய்முறை தேர்விலாவது நூறு எடுக்கன்னும்னு பார்த்தா எழுத்து தேர்வுலயாவது சொல்லிக்கிற மாதிரி மதிப்பெண் வந்தது, செய்முறை தேர்வில் அரை செஞ்சுரி தான் எப்பவும் நல்ல புள்ளயா செஞ்ச பிராஜெக்ட் ஒர்க்குக்கே 67% தான் டேய் உன்னையெல்லாம் பொழச்சி போனு பாஸ் போட்டது பெரிய விடயம்னு மனசாட்சி சொன்னது.
சரி கல்லூரியிலும் நூறு எட்டாத கனியாகவே ஆயிடுச்சா, இந்த நூறை எப்படியாவது புடிச்சிடனும்னு பார்த்தேன், அப்போதான் அப்பா ஆசையா ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளென்டர் வாங்கி தந்தாரு, அத எடுத்துக்கொண்டு பாண்டிச்சேரி கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனைய தாண்டினா ஒரு நேரான நெடுஞ்சாலை வரும் அதுல அது கழுத்தை திருகினேன்... 70கி.மீ. வேகம் வந்தப்ப ஸ்பெளென்டர் கொஞ்சமா அதிர ஆரம்பிச்சது அப்படியே 80, 90னு போனேன்.. 95 க்கு திருகினேன் எதிர மினிலாரி ஒன்னு வந்து அப்படியே லேசா ஆட்டம் காமிச்சாபுள நம்ம முன்னாடி பப்பரக்கானு ஒரு குட்டிகரணம் அடிச்சி அப்படியே நெடுஞ்சாலையில் தேய்த்துக்கொண்டே போனது பிறகு பார்த்தா வண்டி பள்ளத்துல கிடக்குது, கை, தோள்பட்டை, லேசா முகத்துல, கால் என எல்லாம் இடத்திலும் அடி, இன்னைக்கு வரை தெரியாது மினி லாரி நம்ம வண்டி கண்ணாடியை தட்டினாரா என்னனு, அப்புறமா பாண்டி ஜிப்மர் மருத்துவமனைக்கு போனா அந்த செவிலியம்மா அடிச்ச நக்கலும் கிண்டலும், தெரியும் உன்னை மாதிரி பசங்கலாம் இங்க கண்டிப்பா வருவிங்க, என்னமோ வண்டியில உக்காந்தா ப்ளைட் ஓட்டுறதா நினைப்பு உங்களுக்குனு டோஸ் விட்டாங்க, அதுல இருந்து என் வண்டி 60வதையே தொட்டது இல்லை, என்னடா நீ இவ்ளே மெதுவா வண்டி ஓட்டுறனு கொட்டு வேற விழுந்திருக்கு, இப்படியே நூறு கி.மீ. வேகம் போலாம்னா அந்த நூறும் ஊத்திக்கிச்சி.
அப்புறமா நூறுக்கு வேலையே இல்லாம போயிடுச்சி, நண்பர் செந்தில் மூலமா தமிழ்மணம் வந்து வந்து கொஞ்ச நாள் மேய்ந்து கொண்டிருந்துவலைப்பதிவு வந்து பதிவு போட ஆரம்பிச்சா ம்... நம்மள ஒரு ஆள் திரும்பி பார்க்கனுமே... எப்பவும் படிக்கிற என் இருபது நண்பர்கள் கிட்ட சுட்டி கொடுத்து படிக்க சொல்லி அப்படியே போய்கொண்டிருந்தது நானும் கதை,கவிதை (அப்படிதான் நாஞ் சொல்லிக்கிறேன்) எழுதறதுனு போய்கொண்டிருந்தேன், நம்ம வலைப்பதிவு நண்பர்கள் மருத்துவர் இராமதாசுவை போட்டு பொறட்டி பொறட்டி எடுத்துக்கொண்டிருந்தாங்களா, சரி நமக்கு தெரிஞ்ச விடயத்தை சொல்லலாமே மத்த இடத்த பார்க்க சொல்ல இங்கே எல்லாம் ரீஜன்டா இருக்காங்க அப்படினு மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் அப்படினு ஆரம்பிச்சேன், கொஞ்சம் பேரு வந்து எட்டி பார்த்தாங்க இது யாருடா இங்க கூவுறதுனு, அப்புறமா அப்படியே போயி 99 பதிவு போட்டாச்சி, ஒரு தடவை கொஞ்சம் நிதானமிழந்துட்டேன் தினமலர் வாசகர் கடிதத்துல ஒரு அறிவுசீவி எழுதிய கடிதத்தை பார்த்து ஒரு பதிவு போட்டேன், அப்புறமா நம்ம நண்பர்கள் புத்தி சொன்னாங்க உடனே அந்த பதிவை அழித்துவிட்டு கொஞ்சம் நிதானமாக எழுதினேன். பிறகு தங்கர் விடயத்தில் சண்டை அப்புறம் அடுத்த விடயத்தில் இன்னும் கொஞ்சம் நிதானம், இன்னும் சிறிது நாளில் சின்ன புள்ள மாதிரி சண்டை புடிக்கிறதை நிறுத்தி முழு நிதானம் அடைவேன் என நம்புகின்றேன்.
அப்புறம் நம்ம தமிழ்மணத்தால நிறைய நிறைய நண்பர்கள் கிடைத்தாங்க, இப்போ அதுக்கு முன்னாடி நான் எழுதியதை என் நண்பர் வட்டத்துக்கு அனுப்புவேன் ஒரு 20 பேர் அதை படிப்பாங்க (அப்படினு நம்புகின்றேன்) அந்த வட்டம் இங்கே வந்த பிறகு பெருசானது, எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சி, சிங்கையில் பல நண்பர்கள் கிடைச்சாங்க, அமெரிக்கா,துபாய்,ஜெர்மனி,மலேசியா, இந்தியா, வளைகுடா நாடுகள், ஆஸ்த்திரேலியா,பிரான்சு மற்றும் பல நாடுகளிலிருந்து எல்லா வயதிலும் வலைப்பதிவு நண்பர்கள் கிடைச்சாங்க, இதுக்கெல்லாம் காரணம் என் எழுத்து திறமை அப்படினு நான் நினைத்தால் அது என்னுடைய தவறு அதற்கு காரணம் நிச்சயம் தமிழ்மணமும் நான் எழுதறதையும் படிக்கிறாங்களே நண்பர்கள் அவர்களும் தான்.
எனக்கு எப்போதுமே கட்டுபாடுகளற்ற, அளவற்ற சுதந்திரத்தில் நம்பிக்கை இருந்ததில்லை, அதற்கு காரணம் ஒரு வேளை நான் வளர்ந்த, வாழும் விதமாக கூட இருக்கலாம், கட்டுப்பாடுகளும் அதே சமயம் தேவையான சுதந்திரமும் அளிக்கப்பட்டு வளர்க்கப்பட்டவன் நான், அதன் நல்ல பலனை முழுமையாக தற்போது அனுபவிக்கின்றேன், அட இதை சிலர் அடிமை மனோபாவம்னு கூட சொல்லலாம் எனக்கு இதனால் நட்டமில்லை என்பதைவிட இலாபம் தான் அதிகம், அதனால் எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை.
வலைப்பதிவுகள் இன்றைய நிலையில் ஒரு மாற்று ஊடகமாக வளர ஆரம்பித்துள்ளது இன்னும் இது மாற்று ஊடகமாக முழுவதும் வளரவில்லை, தொடக்க நிலையில் தான் உள்ளது. ஆனால் இதன் வளர்ச்சிக்கு நிச்சயம் தமிழ்மணம் உதவியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை, இருந்தாலும் எப்போதுமே எனக்கு கட்டுபாடுகளற்ற, அளவற்ற சுதந்திரத்தில் நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் வலைப்பதிவுகளின் தனித்துவமே அதன் சுதந்திரம் மட்டுமே...
கடந்த சில நாட்களாக தமிழ்மணத்தில் காசியின் அறிவிப்பை தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சிகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றன, காசி பந்தாடப்படும் விதம் சத்தியமாக என்னளவில் ஏற்புடையதில்லை, என் பதிவு நீக்கப்பட்டிருந்தால் காசிக்கு ஒரு தனி மடல் என் பதிவு நீக்கப்பட்டிருக்கின்றதே, தவறுதலாக நீக்கிவிட்டீர்களா? சொல்ல முடிந்த காரணம் இருந்தால் சொல்லலாம் என்ற ஒரு தனி மடல் மட்டுமே அனுப்புவேன், அதைத் தாண்டி எதையும் கேட்க எனக்கு தார்மீக உரிமையும் இல்லை, சட்டப்பூர்வ உரிமையும் இல்லை, சத்தியமாக நக்கல் அடிக்கவோ, கிண்டல் அடிக்கவோ என் மனசாட்சி இடம் தராது காசி என்ற தனிமனிதனின் உழைப்பையும் தமிழ்மண நிர்வாகிகளின் உழைப்பையும் பயன் படுத்தி இத்தனை இணைய தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு பின் கிண்டலடிப்பதும் நக்கலடிப்பதும், காசியை குற்றவாளி கூண்டில் ஏற்றுவதும் காசி மீது ஏவப்படும் ஒரு வன்முறையாகத் தான் இதை பார்க்கின்றேன், காசியின் முடிவில் முரண்பட்டால் கருத்தும்,ஆலோசனையும் சொல்வது நிச்சயம் தவறில்லை, அது தேவையான ஒன்றும் கூட, ஆனால் கேலியும் கிண்டலும் மனோகரா வசனம் பேசுவதும்... ஆண்டவா காசி நிலையில் நான் இருந்திருந்தால் ?? எனக்கு எக்காலத்திலும் வேண்டாம்பா இந்த நிலமை.
எந்த வித தார்மீக உரிமையும், சட்ட உரிமையும் இல்லாத போதும், சமூகத்தில் படித்த, ஓரளவு நல்ல பொருளாதார நிலையில் இருக்கும் இங்கேயே இப்படியான தாக்குதல் என்றால் நிச்சயமாக தங்கர் நடிகர் சங்கத்திலிருந்து உயிரோடு வெளிவந்ததும், குஷ்பு இன்னமும் தமிழகத்தில் இருப்பதும் மிக ஆச்சரியமான விடயம் தான்.
48 பின்னூட்டங்கள்:
vaazththukkaL kuzali ..
சூப்பர் தல ! வாழ்த்துக்கள்!! தொடரட்டும் உங்கள் சேவை! :)
நான் வலைப்பூ எழுது தொடங்கியதில் இருந்து உங்களின் அனைத்து பதிவுகளையும் ரசித்து படித்து வருகிறேன்..
உங்கள் எழுத்துக்கள் பற்றி ஒரு + - அனாலிஸிஸ் பதிவே போட்டு விட்ட காரணத்தால் ..இங்கே எதுவும் சொல்லவில்லை..
தொடருங்கள்! வாழ்த்துக்கள்
அப்புறம் உங்க 100 வது பதிவுக்கு என்னுடையது தான் 1 கருத்து என்று டைப்பிட்டு எடுத்து வந்து போடறதுக்குள்ளே தாஸீ முந்திட்டாரு ..சோ 2 வது கருத்து.... :)
இருந்தாலும் என் எகிப்து அழகி பதிவுக்கு - குத்து விட்டதை மறக்கவே மாட்டேன் தல.. எல்லாம் அந்த அசினுக்காக அப்படி பன்னிட்டீங்க.. மறக்க மாட்டேன்.. :)
வீ எம்
என்ன தாஸீ சவுக்கியமா??? ஆளயே கானோம்.??
வாழ்த்துக்கள் குழலி !!
இது 100 சீஸன் போல. வாழ்த்துக்கள், 1000 லாம் சுளுவா தாண்டிடுவீங்கன்னு நெனைக்கிறேன். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
அப்டியே ஒரு ரீவைண்ட், அப்புறம் ஒரு ஃபாஸ்ட் ஃபார்வர்ட் பண்ணியிருக்கிங்க இந்த பதிவுலே. :)
வாழ்த்துக்கள் குழலி..
நூறாவது பதிவு அசின் பத்தி போடாம போய்ட்டீங்களே? பதிவு இல்லேன்னா கூட போது.. ஒரு போட்டோ கூடவா கிடைக்கல??
வாழ்த்துக்கள் குழலி..
நானும் உங்கள் பதிவுகளை, நீங்கள் குறிப்பிட்டிருந்ததிலிருந்து தான் படிக்க ஆரம்பித்தேன்..
பல புதிய கோணங்களையும், விஷயங்களையும் எனக்குள் புகுத்தியதில் உங்கள் பதிவுகளும்
மேலும் தெளிவான, செரிவான பதிவுகள், இதே உற்சாகத்துடன் தொடர வாழ்த்துக்கள்...
-
செந்தில் / Senthil
asin illatha kuzhaliyin 100avathu pathiva ?///
குழலி,
அருமையான இன்னிங்ஸ்..வாழ்த்துக்கள்!
அனைவருக்கும் நன்றி! நன்றி!!!
I just get in to the "katturai" and your flow of words bring me along till the end of "katturai"...
i amd posting a comment after long time... and i have started it with some one who deserved it !
வாழ்த்துக்கள் குழலி
வாழ்த்துக்கள் குழலி
வாழ்த்துக்கள் குழலி
அன்புடன்
ராஜ்குமார்
(mailme2rajkumar@yahoo.co.uk)
வாழ்த்துக்கள் குழலி. நான் முன்பே இட்ட பின்னூட்டம் எங்கே போனதென்று தெரியவில்லை
வாழ்த்துக்கள். தொடர்ந்து சண்டை போடவும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
டாக்டர் அய்யா கிட்டேர்ந்து வாழ்த்துச் செய்தி வாங்கி போடக்கூடாதா? :)
ivarum ayyaavum kushbuva vida maattaanga pola.
avarukku katchi nadathavum, ivarukku 100-aavadhu padhivu podavum kooda kushbu thevaiyaa irukku!!!
vaazhthukkal.
ungal 'oru padhivil' penn adimaithanathai patriyellam pesi irukireergal endru ninaivu paduthiyadharku nandri.
வாழ்த்துக்கள். தங்களின் 200 பதிவை மிக விரைவில் எதிர்பார்ப்போம். :-))
வாழ்த்துக்கள், குழலி..
வாழ்த்துக்கள் குழலி, தொடர்ந்து எழுதுங்க பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள், குழலி!
வாழ்த்துக்கள் குழலி
:)
வாழ்த்திய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி
அசின் பற்றி எதுவும் நூறாவது பதிவில் இல்லையென்று சிலருக்கு வருத்தும், எனக்கும் தான், அதனால் இங்கே ஒரு தீவிர ஒரு அசின் ரசிகரின் சுட்டியை பாருங்கள்
http://asinphoto.blogspot.com/
//டாக்டர் அய்யா கிட்டேர்ந்து வாழ்த்துச் செய்தி வாங்கி போடக்கூடாதா? :)
//
டாக்டர் அய்யாவை எனக்கு தெரியும் ஆனால் அய்யாவுக்கு என்னை தெரியாதே என்ன செய்வது....
நன்றி
நூறு பதிவுகளா?
வாழ்த்துகள் வாழ்த்துகள்.
:)
-மதி
வாழ்த்துக்கள் குழலி!
ஆழம்னா என்னா அது குழலியோட பதிவுமா...:)
பல்கலையில் கொஞ்சம் வேலை பளு....சீக்கிரம் வந்து நானும் சோதியில் ஐக்கியம் ஆயிடரேன்.
கங்கைகொண்ட சோழனின் படையை ஆட்சி செய்தவர்கள் இன்று டில்லியை வென்ற படையையும் ஆட்சி செய்கிறார்கள்.:))
வீழ்ந்தது மரமாயிருந்தாலும் வென்றது தமிழன்!!!
வாழ்க தமிழ், வளர்க தமிழ்மணம்!
வாழ்த்துக்கள், குழலி
"சமூகத்தில் படித்த, ஓரளவு நல்ல பொருளாதார நிலையில் இருக்கும் இங்கேயே இப்படியான தாக்குதல் என்றால் " - இதுதான் எனக்குத் தாங்கல, குழலி. இது எப்படி, ஏன்னும்னும் தெரியலையே...
வாழ்த்துக்கள்.
மென்மேலும் பல சிறந்த பதிவுகள் இட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
குடும்பத்திற்கும் உங்களுக்காகவும் போதுமான நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள் என்றும் பணிவோடு கூறிக்கொள்கிறேன்.
வாழ்த்துக்கள் குழலி
anpin Kuzhali,
Happy to read your 100vathu pathivu...Vaalthukal...Keep it up...It's "meaningful" 100..You show your "brand' on this pathivu too....
Even i'm not writing in blog,but read some ,whenever getting facilities to read.
Upto my knowledge i found yours's is one of "broad thinking" pathivu,mostly.You've made noticeable "opportunities" to think some "issues",which inspired "different" feedbacks.
Yes,you covered a "muti-dimensional" view and areas...
Since you have interested in literay realted meetings/discuusions and have attended some,hope atleast few "pathivukal" on that type of events in the future.Hope this will be useful to others,who're unable to attend and who are in different nations.
Do well and perform well!!
anpudan,
shanthan
ktps24@yahoo.co.uk
வாழ்த்துகள் வாழ்த்துகள்
பின்னூட்டி வாழ்த்திய அனைவருக்கும் நன்றி, ஷாந்தன் நிச்சயம் அடுத்த முறை நம் சந்திப்புகள் பற்றிய பதிவிடுகின்றேன்.
வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்
Congrats Kuzhali.
M.K.
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது குழலி. மேலும் பலப்பல பதிவுகள் காண என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஆடிக்கொரு தடவை, அமாவாசைக்கொரு தடவை வலைப்பதிய வருகிற எனக்கு உங்களின் வேகம் உத்வேகமூட்டுகிறது. சச்சினைப் போல நல்ல ஓப்பனிங்குடன் தொடங்கி விரைவாக 'நூறு' அடிக்கிறீர்கள். அதனால் உந்தப்பட்டு எங்களைப் போன்ற ஜாகீர்கான்கள் அவ்வப்போது நாலு, ஆறு அடித்தால் உண்டு.
(இப்போது தான் பார்த்தேன், என் பதிவுக்கும் தொடுப்பு கொடுத்துள்ளீர்கள், மிக்க நன்றி.)
Vaaztthukkal!
//இன்னும் இது மாற்று ஊடகமாக முழுவதும் வளரவில்லை, தொடக்க நிலையில் தான் உள்ளது. //
நூத்துல ஒரு வார்த்தை!
வாழ்த்துக்கள் குழலி.
வலை நண்பர்கள் லிஸ்டுலே நியூஸியையும் சேர்த்திருக்கலாமுல்லே.
ஆயிரம் பதிவுக்குக் கண்டிப்பா சேர்த்துருங்க:-)
நல்லா இருங்க.
அன்புள்ள குழலி,
பல்லாயிரம் பதிவுகள் எழுத வாழ்த்துகிறேன்.
அடடே!
இப்பதானே இந்தப் பதிவைப் பார்த்தேன். நூறுக்கு வாழ்த்துக்கள்.
ஆனால் உங்கள் பதிவு உறுத்திய பிறகுதான் என் பதிவுகளின் எண்ணிக்கையை எண்ணிப் பார்த்தேன். அதெல்லாம் எப்பவோ தாண்டிப்போயாச்சு.
சரி இருநூறாவது பதிவுக் கொண்டாட்டத்தைக் கொண்டாட வேண்டியதுதான்.
வாழ்த்துக்கள் குழலி!
கடந்த மூன்று நாட்களாக நான் சென்னையில் இல்லை. அலுவலக வேலை நிமித்தம் வெளியூர் சென்றிருந்தேன்.
இன்றுதான் சென்னை மழையில் மிதந்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.
நூறு பதிப்புகள்!
நினைத்தாலே மலைப்பாயிருக்கிறது!!
நூறாவது பதிவை ஆழமாய்த்தான் கொடுத்திருக்கிறீர்கள்.
தொடரட்டும் இத்தகைய அர்த்தமுள்ள பதிவுகள்.
Kuzhali,
Keep up the good work. I have felt that ur writings make ppl think on varied issues and the number of people wishing you success speaks for itself.
God Bless! Looking forward to reading more...
MeMyselfCitra
வாழ்த்துக்கள் குழலி...
ஒரு வாரமாக வேலைப்பளு காரணமாக எழுத இயலவில்லை....
late_ஆ வந்தாலும் latest... :-)
வாழ்த்துகள் குழலி. இன்னும் நிறைய பதிவுகள் தருக.
நாமெல்லாம் இங்கு நண்பர்கள். என்றைக்கும் விட்டுக் கொடுத்து மகிழ்ச்சியாக இருக்கலாம். கருத்துகளையும் முறையான நாகரீகமான முறையில் பகிர்ந்து கொள்வோம். நானும் கூட வந்ததிற்கு இப்பொழுது கொஞ்சம் முதிர்ச்சியுடன் பின்னூட்டங்கள் இடுகிறேன்.
//நூறாவது பதிவை ஆழமாய்த்தான் கொடுத்திருக்கிறீர்கள்.
//
என்னங்க இப்படி கிண்டல் செய்றிங்க... :-)
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி,
ஜோசப் அய்யா, மழையெல்லாம் அதிகமா ஊரில... தினமும் சன் செய்திகளில் பார்க்கின்றேன்...
enna kuzhali, asin pirandha naazhuku siraaaaapu pathivu edhuvum illaya ;-)
-
செந்தில் / Senthil
Remo,
Hey Great All the best....
//ஜோசப் அய்யா, மழையெல்லாம் அதிகமா ஊரில... தினமும் சன் செய்திகளில் பார்க்கின்றேன்... //
அதை ஏன் கேக்கறீங்க?
நேத்தைக்கி மாதிரி அவஸ்தைய நான் மும்பையிலும் கொச்சியிலும் இருந்த சமயத்திலும் (இந்தியாவில் பருவ மழை தவறாமல் பொழியும் இரு முக்கிய நகரங்கள்) கூட பட்டதில்லை.
முழங்கால் அளவு தண்ணீரில் மாருதி கார் நின்றுபோய் இறங்கி தள்ளவும் முடியாமல் (கார் கதவைத் திறந்ததுதான் தாமதம். அழுக்குப்பிடித்த மழைநீர்+சாக்கடை நீர் உள்ளே புகுந்து..)ஏன் கேட்கிறீர்கள்?
ஜெ.. அம்மா பெரிய மனசு பண்ணி சென்னை நகரம் முழுதும் மின்சாரத்தை நிறுத்தி புண்ணியம் கட்டிக்கொள்ள, நாள் முழுவதும் (இன்று காலை 9.00 மணிக்குத்தான் திரும்பி வந்தது) ஆதிவாசிபோல வீட்டில் குந்தி இருந்தது..(நல்ல வேளை செல்ஃபோன் இருந்தது).. சென்னை முழுவதும் ஃபோன் போட்டு.. போட்டு.. Post Paid ஆனதால் பிழைத்தேன்.. இந்த மாதம் பில் வரும்போதுதான் தெரியும்.
100??!! வாழ்த்துக்கள் குழலி! இன்னும் 1000 பதிவுகள் எழுத வாழ்த்துக்கள் மனசுல நினைக்கிறதை எல்லாம் எழுத்து வடிவில் கொண்டு வருவது சில பேருக்குத்தான் வரும் (என் நண்பர் ராம்கி மாதிரி). குழலி உங்களுக்கு நல்லா வருது.தொடரட்டும் உங்கள் பதிவுப்பணி
Post a Comment