குவார்ட்டர் கோவிந்தனுக்கு கவிஞன் காந்துவாயன் பதில்

குவார்ட்டர் கோவிந்தன், குழலி மீது வழக்கு போடப்போவதாக சொல்லியிருந்தார், அது தொடர்பாக ஆயா செஞ்ச பாயா புகழ் கவிஞன் கோந்துவாயனின் அறிக்கை.

குவார்ட்டர் கோவிந்தன், குழலி அவர்கள் மீது வழக்கு போடப்போவதாக சொல்லியிருந்தார், அதற்கு குவார்ட்டர் கோவிந்தனென்ன அவன் அப்பன் ஆறு ஆஃப் ஆறுமுகம் வந்தாலும் சரி தாத்தன் புல் புண்ணியகோடி வந்தாலும் சரி தயாராகவே இருக்கிறார், "குவார்ட்டர்" என்ற அடை மொழி எப்படி வந்தது தெரியுமா? நீங்களெல்லாம் கோவிந்தன் குவார்ட்டர் குடிப்பார் அதனால் குவார்ட்டர் கோவிந்தன் என்று பட்டம் வந்தது என நினைக்கிறீர்களா அது தவறு.

கோவிந்தனின் நண்பர்கள் சரக்கு அடித்து கொண்டிருக்கும் போது கோவிந்தனிடம் குவார்ட்டர் வாங்கிவர சொல்லி அனுப்பினார்கள், இந்த கோவிந்தன டாஸ்மாக் கடையில் போய் பெரிய புத்திசாலியாக 250மி.லி. பிராந்தி கொடுங்கனு கேட்டார் டாஸ்மார்க்கில் அம்மையாரின் புண்ணியத்தில் சரக்கு ஊத்திகொடுத்துக்கொண்டிருந்த புள்ளியியலில் முதுகலை படித்த பட்டதாரி

மண்டை காய்ந்து போய் 250மி.லி. சரக்கெல்லாம் இங்கே கிடையாது என திருப்பி அனுப்பிவிட்டார், நண்பர்களிடம் திரும்பிய கோவிந்தன் குவார்ட்டர் இல்லையாம் என்று சொல்ல, டாஸ்மாக்கில் குவார்ட்டர் இல்லையா? மிடாஸ்மிடாஸ்(MIDAS - M ஃபார் மன்னார்குடி, I ஃபார் இளவரசி, D ஃபார் தினகரன், A ஃபார் ஆல் அதான் எல்லோருக்கும் பின்னால யாரு S - S
ஃபார் சசிகலா) போலி சரக்காவது இருக்குமே எப்பவும்னு கொதித்து போய் கேட்க அங்கே உம்ம 250 மிலி கதையை சொல்ல அன்றிலிருந்து 'குவார்ட்டர்' கோவிந்தன் ஆனவன் தானே நீ

சரி அம்மையார் ஆட்சியில் தான் கேட்டால் கஞ்சா கேஸ் போட்டு உள்ளே போடுவாங்கனு பயந்த, இப்பவும் புள்ளியியல் முதுகலை பட்டதாரிகள் ஊத்திகொடுக்கிறார்களே இப்போது எந்த வழக்கிற்கு பயந்து கொண்டு வாயைத்திறக்காமல் இருக்கிறாய்?

உன் அப்பன் ஆஃப் ஆறுமுகம் கதை தெரியாத எங்களுக்கு, ஆஃப் பாயில் சாப்பிட ஆறுகிலோமீட்டர் நடந்து வந்ததால் தானே ஆஃப் ஆறுமுகம்னு பேரு, உன் தாத்தன் புல் புண்ணியகோடி கதை தெரியாதா, முதல்ல அது full புண்ணியகோடி யில்ல, pull புண்ணியகோடி, ஒரு நாள் கதவில் எழுதியிருந்த PULL என்பதை பார்த்து அண்ணே புல்லுனு இங்கே போட்டிருக்கு ஆனா புல்லே இல்லையே மாடு தின்னுருக்குமோனு கேட்டதாலேயே உன் தாத்தன் பெயர் புல் புண்ணியகோடி, இதெல்லாம் எமக்கு தெரியாததா? புரியாததா?

குவார்ட்டர் அடிக்கும் குடிமகன்களுக்காக என்ன செய்தாய் நீ, முன்னாடி எல்லாம் ஒயின்ஷாப் ஓனருங்க போலிசரக்கு விப்பாங்க, நடு நடுவுல நாலு கேசு நல்ல சரக்கும் கிடைக்கும், மிடாஸ் வந்ததிலிருந்து முழுக்க முழுக்க போலிசரக்கு தானாம், அதற்காக நீ என்ன செய்தாய்? போலிசரக்கை குடித்துவிட்டு சீன் செய்து கொண்டிருந்தாய், சரி அதைவிட என்ன சமூக அக்கறை உண்ணிடம் இருந்தது, ஏதோ தமிழ்நாட்டில் இருந்த பல ரவுடிகள் தம் ரவுடிப்பட்டாளத்தோடு ஒயின்ஷாப் நடத்தி தமக்கென ஒரு தொழில் செய்து நல்ல படியாக வாழ்ந்து கொண்டிருந்தனர், ஆனால் கவர்மெண்ட்டே சரக்கு விக்க ஆரம்பித்தவுடன் இந்த ரவுடிகள் நேர்மையாக தொழில் செய்ய வழியில்லாமல் ஆள்கடத்தல், வழிப்பறி கொள்ளையடிக்கின்றார்களாமே அதைப்பற்றி ஏதேனும் யோசித்தாயா?

ஆ... ஊ... என்றால் கலகக்காரனாம் கலகக்காரன், கலகக்காரனுக்கு அர்த்தம் தெரியுமா? உன் கலகத்தால் குடிகாரர்களுக்கு என்ன நன்மை, ஊரெல்லாம் குடிக்காதே குடிக்காதேனு சொல்லிக்கொண்டிருக்கும் டாக்டர் ராமதாஸ் தோட்டத்தில் வைத்து தண்ணியடிக்கிறார் என பொய் சொல்லி அவர் பெயரை கெடுக்க முயற்சி செய்தாயா? நீ... சரி விஜய்மல்லையா சரக்கு கிடைக்காமல் சீ... சீ.... இந்த சரக்கு புளிக்கும் என நீயே பேட்டரி செல் போட்டு ஊறவைத்து இந்த வார சரக்கார், இந்த வார சல்பேட்டா என்று என்றாவது சொல்லியிருக்கியா? உன்னோட இந்த வார சரக்காரையும் இந்த வார சல்பேட்டாவையும் யாரு கவனிக்கிறாங்கன்றது முக்கியமில்லை, கேட்டா ஏய்.... ஏய்... அந்த ஆஸ்கார் விருதை எப்படி செலக்ட் செய்றாங்கனு அறிவுப்பூர்வமா(அப்படினு நீயே நெனச்சிக்கிறது) கேள்வி கேட்டு கலகம் செய்தாயா? இப்படி ஒரு எழவுமில்லை பிறகென்ன நீ கலகக்காரன்? சரி அதுவும் இல்லை பேசாப்பொருளை பேசத்துணிந்தவர்கள் பார்ப்பனீயத்திற்கும் பாப்பாத்திக்கும் வித்தியாசம் தெரியாமலே "கல்லூரியில் பாப்பாத்தியை டாவடித்தான். இன்டர்நெட்டில் பார்ப்பனியத்தை எதிர்க்கிறான்.", என்று எழுதியதைப்போல என்றாவது ஏதாவது எழுதினியா?

பாவம் பேசாப்பொருளை பேசத்துணிந்தவருக்கு கோவில்களில் நூறு சதவீத இடஒதுக்கீட்டை உறுதிபடுத்த உச்ச நீதிமன்றம் போனதை போல, இரண்டாயிரமாண்டு இடஒதுக்கீட்டை போலவே "தேன்கூடு போட்டியிலும் இடஒதுக்கீடு தேவை என்றார் பேராசிரியர்." என்று தேன்கூடு போட்டியிலெல்லாம் இடஒதுக்கீட்டை எதிர்பார்க்கிறார் அது போல ஏதாவது எழுதியிருக்கிறாயா? பிறகெப்படி நீ கலகக்கரன்?


குவாட்டர் அடித்தா
குப்புற விழுந்தாய்
குவாட்டர் கோவிந்தா
நீ
குவாட்டர் அடித்தா
குப்புற விழுந்தாய்
குவாட்டர் கோவிந்தா

குவாட்டர் சரக்கு
எத்தனை மில்லி
தெரியுமா கோவிந்தா
உனக்கு
குவாட்டர் சரக்கு
எத்தனை மில்லி
தெரியுமா கோவிந்தா

கட்டிங் அடிச்சா
கதறுவியே கோவிந்தா
டாஸ்மாக் கட்டிங்குக்கே
நீ
கோவிந்தாஆஆஆ
கோவிந்தாஆஆஆஆ...

டாஸ்மாக் கட்டிங்குக்கே
நீ
கோவிந்தாஆஆஆ
கோவிந்தாஆஆஆஆ...

எந்த சரக்கு அடிச்சா
கோவிந்தா உனக்கு
பாப்பாத்திக்கும்
பார்ப்பனீயத்துக்கும்
வித்தியாசம் தெரியும்
கோவிந்தா

எந்த சரக்கு அடிச்சா
கோவிந்தா உனக்கு
பாப்பாத்திக்கும்
பார்ப்பனீயத்துக்கும்
வித்தியாசம் தெரியும்
கோவிந்தா

யாரும்
பாத்துட்டு போனாலும்
பாக்காம போனாலும்
இந்த வார சரக்கர்
நீதான்

யாரும்
குடிச்சிட்டு போனாலும்
குடிக்காம போனாலும்
இந்த வார சல்பேட்டா
நீதான் கோவிந்தா

ஏன்னா நீ தான்
என் சப்போட்டு
கோவிந்தா

ஏன்னா நீ தான்
என் சப்போட்டு
கோவிந்தா

சல்பேட்டா உனக்கு
சப்போட்டா கோவிந்தா

சொல்றேன் கேட்டுக்கோ அன்றும் சரி இன்றும் சரி நீ குவார்ட்டர் அடித்ததே இல்லை, குவார்ட்டர் அடிக்காமலே சீன் செய்து கொண்டிருக்கிறாய், அதை சொன்ன குழலியின் மீது வழக்கா போடப்போகிறாய், போடு போடு, எத்தனை வழக்கு வந்தாலும் சந்திக்க தயார் என குழலியின் சார்பில் கவிஞன் கோந்துவாயன் தெரிவிக்கின்றான்.

8 பின்னூட்டங்கள்:

said...

ஓகோ கதை"அப்படி போகுதா?' உங்க போதை இன்னிக்கு ஏறிப்போய் அதுக்கு கோவிந்தன் ஊறுகாயா? நடத்துங்க நடத்துங்க

//ஏன்னா நீ தான்
என் சப்போட்டு
கோவிந்தா

ஏன்னா நீ தான்
என் சப்போட்டு
கோவிந்தா//
நல்ல வேளை நீங்க இங்க டிஸ்கி போட்டு வச்சிருக்கீங்க அதனால நான் தப்பிச்சேன்

நிஜமாகவே மப்புடன்
1/4 கோவிந்தன்
அதே சிறுதாவூர் பங்களா வாசலில் இருந்து

said...

என்னங்கய்யா நடக்குது இங்கே?

என்னவா இருந்தாலும் சரி, கூத்து நல்லாருக்கு. தொடருங்க. ;-)

said...

டேங்க்ஸ் மகேந்திரா!!! பின்ன நம்ம சப்போர்ட்டு கோவிந்தனை இந்தவார "ஸ்டார் சரக்கர்" ஆக்கிடுவோமா? என்ன எளவு நம்ம ப்ளாக்குக்கு ஒரு 30 குத்துதான் தெனம் வரும் அதுலயும் நான் ஒரு ஓரமா பக்கவாட்டுல நம்ம ஸ்டார் சரக்கர் பேர் போட்டுவச்சா எத்தினி பேரு அதை கவனிக்க போறாங்க, யாருனா பாத்து சொன்னாதான் உண்டு, என்ன எளவுனா யாரு "ஸ்டார் சரக்கர்" னு தேர்ந்தெடுத்தவங்களுக்கே சொன்னாதான் தெரியும் அவிங்க "ஸ்டார் சரக்கர்"னு, "ஸ்டார் சரக்கர்"க்கு நம்ம கோவிந்தன் ஓ.கே. "ஸ்டார் சல்பேட்டா"க்கு எங்க போவ?

said...

//தேன்கூடு போட்டியிலும் இடஒதுக்கீடு தேவை//

அப்டியா? தேன்கூட்டில் "அதிகம் பார்வையிடப்பட்டவை" பகுதியில் சில பேருக்கு பதிவு போட்ட ஒரு மணி நேரத்தில ஸ்பெஷல் கோட்டாவுல இடம் கிடைச்சிடுதே!

said...

என்னது கு.கோவிந்தனுக்கு சல்பேட்டா சப்போட்டா? என்னது நீங்க நம்ம பலம் தெரியாம பேசாதீங்க அன்பு அனானிகளுக்கு ஒரு அறிக்கை விட்டா கொத்தி கும்மாளம் போடமாட்டாங்க?

said...

ச்சூ...ச்சூ...என்னா இது சிறுபுள்ளத்தனமா? சத்தம் ஓவரால்ல இருக்கு...
அப்புறம் கருத்து "கந்தசாமி" போயி கட்டிங் "கந்தசாமி" களத்துல எறங்க வேண்டியிருக்கும்....ஆமாம்...சொல்லிபுட்டேன்!

:))

said...

குழலி,
கரெக்டா சொல்லுங்க, கவிஞர் பேரு காந்து வாயனா? கோந்து வாயனா?..
ஒரே குழப்பமா இருக்கு.

பதிவைப் படிச்ச பிறகு குழப்பம் வராம இருக்காது.. இருந்தாலும் படிக்கத் தொடங்குபோதே குழப்பம்னா பார்த்துக்குங்க :)

said...

// கவிஞர் பேரு காந்து வாயனா? கோந்து வாயனா?..
ஒரே குழப்பமா இருக்கு.
//
கோந்துவாயன் தான், அப்புறம் அவர் கவிஞர் இல்லை கவிஞன்.... குவார்ட்டர் கோவிந்தன் பற்றி எழுதினாரா கொஞ்சம் தடுமாறிட்டார் கவிஞன்