என் புத்தாண்டு ஆசைகள்

இந்த புத்தாண்டில் நிறைவேற வேண்டுமென்ற என் ஆசைகள்

1. தலித் - பிற்படுத்தப்பட்டோர் இணைப்பு சமூக, அரசியல் நிலைகளில் ஏற்படவேண்டும், இவர்களுக்கிடையேயான புரிந்துணர்வு மேலும் மேலும் மேம்பட வேண்டும்.

2. சாதிவாரியான முழுமையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற வேண்டும், இது பல விடயங்களை தெளிவு படுத்தும், சமூக, அரசியல், பொருளாதார மத உரிமைகளிலும் பங்களிப்பிலும் யார் யாருக்கு எவ்வளவு உள்ளது என்று தெளிவாக தெரிந்து கொள்ளலம், முக்கியமாக சமீபகாலமாக தேசிய மாதிரி கணக்கெடுப்பு ஆய்வின் அடிப்படையில் கிடைத்த புள்ளிவிபரங்களை ஆதாரமாகக் கொண்டு அடிக்கப்படும் ஜல்லிகளுக்கு முடிவுகட்டலாம். 1931 கணக்கெடுப்பின்படி 52% இருந்த பிற்படுத்தப்பட்டவர்கள் 1999ல் தே.மா.க.க ன் புள்ளிவிபரப்படி 38.5%மாக குறைந்து உடனே 5 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்டவர்கள் 41%மாக உயரும் அதிசய காட்சிகளை தவிர்க்கலாம்.(ஏனிந்த சாதிவாரியான கணக்கெடுப்பு வேண்டுமென்று பின்பு விளக்கமாக எழுதுகிறேன்)

3.ம.தி.மு.க வும் வைகோவும் அ.தி.மு.க. வில் இணைய வேண்டும் (ஏன் இதற்கு ஆசைப்படுகின்றேன் என்று விளக்கமாக பிறகு எழுதுகிறேன்)

4. எனக்கு நல்ல ஊதிய உயர்வு கிடைக்க வேண்டும்.

5. சென்ற ஆண்டின் இறுதியில் மருத்துவர் இராமதாசுவை சந்தித்தது போல இந்த ஆண்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் அண்ணன் தொல்.திருமாவை சந்தித்து உரையாட வேண்டும்.

6. தமிழகத்தில் சட்டமன்ற பாராளுமன்ற தேர்தல் எதுவும் இந்த ஆண்டு நடைபெற வேண்டாம்.

7. சபால்ட்டர்ன் கதைகள் என்ற என் மற்றொரு பதிவில் குறைந்தது இருபது கதைகளாவது எழுத வேண்டும்.

8. தமிழ்மணம் மேலும் மேலும் வளர்ந்து புதிய தளங்களை பதிவர்களுக்கு அமைத்து தரவேண்டும்.

9. இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு இந்த ஆண்டே முழுவதும் அமல் செய்யப்படவேண்டும்.

இதல்லாமல் மேலும் பல ஆசைகள் உள்ளன, நேரம் கிடைக்கும் போது உங்களிடம் சொல்கிறேன்

6 பின்னூட்டங்கள்:

said...

I wish all your dreams comes true!

- A silent reader of Kuzhali

said...

நல்ல ஆசைகள் அனைத்தும் இவ்வாண்டு நடக்க என் பிரார்த்தனைகள்.

said...

உங்கள் புத்தாண்டு ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள்.

திரு தொல்.திருமாவை சந்திக்கும் வாய்புக்கிடைத்தால் நானும் சந்திக்க ஆவலாக உள்ளேன்.

said...

குழலி,

குட் லக்! எல்லாம் கிட்ட ஆண்டவன் அருள்புரிவான்.

என் ஆசை, இந்த புத்தாண்டில், உங்கள் டெம்ப்ளேட்டின் கலர் மாறனும். பதிவின் கருத்துக்கும் கலருக்கும் சேர்க்கை சரியில்லை.
பின்க் பெண்/மென்மையை குறிக்கும் கலர்.

you need more of a black/brown/gray/green/orange flavour.

said...

இந்த ஆசையையும் சேர்த்துக்கொள்ளுங்கள்,
கருணாநிதியும் ஜெயலலிதாவும் கூட்டணி அமைத்து,தேசவியாதி கட்சிகளை தமிழகத்திலிருந்து விரட்டவேண்டும்.

said...

உங்கள் புத்தாண்டு ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள்!!!