பாசிச தமிழ்மணம், ராயர் காபி கிளப்பை பார்த்தாவது திருந்துமா?

ஏ பாசிச தமிழ்மணமே, வலைப்பதிவருக்கு 24 மணி நேரம் கெடு அளிக்கின்றீர் உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்க, ஏ பாசிச தமிழ்மணமே உமக்கு என்ன கலைஞர் கருணாநிதி என்று நினைப்போ விளக்கம் விளக்கத்திற்கு விளக்கம் அதற்கு தமிழில் அருஞ்சொற்பொருள் தருதல் அதற்கு இன்னொரு விளக்கமென்று ஸ்ப்பா தாங்கலை, ஏ பாசிச தமிழ்மணமே பதிவு வைத்திருப்பதால் அரவிந்தனை நீக்குகின்றாய் அன்பிற்கினிய ச.திருமலையை என்ன சொல்லி நீக்குவாய் அவர்கிட்டதான் வலைப்பதிவே இல்லியே இருந்தாலும் அது தமிழ்மணத்தில் இல்லியே, அட்லாண்டிக்கிற்கு அப்பால் இருந்து எழுதும் மாபெரும் எழுத்தாளர் சிந்தனையாளர் மா மேதை அன்பிற்கினிய பி.கே.சிவக்குமார் ஏற்கனவே மானத்துடன் பதிவை பாசிச தமிழ்மணத்திலிருந்து விலகியிருக்கும் போது அவரை எப்படி நீக்குவாய் பாசிச தமிழ்மணமே...

ஒரு வலைப்பதிவை நீக்க அதுவும் உம் மீது சந்தனம் பூசும் வலைப்பதிவை நீக்க பாசிசத்தனமாக மின் மடல் அனுப்புகிறாய், பாசிசத்தனமாக பதிவர் பக்கங்களில் அறிவைப்பை வெளியிடுகிறாய், வெளிப்படையாக கெடுவைக்கிறாய்.... ராயர் காப்பி கிளப்பு தெரியுமா? அதை பார்த்து திருந்துமா பாசிச தமிழ்மணம்?

எல்லே ராம் என்ற ராயர் காப்பி கிளப்பு யாகு குழு மாடரேட்டர் எத்தனை அழகாக சொன்னார் ஒரு கடிதத்தில் "பொது மேடை தந்து உபசரிக்கிறோம் என்பதற்காக அங்கே அசிங்கம் பண்ணித் தலையில் பூசிக்கொண்டு ஆடுவேன் என்பதா?

இனிமேலாவது இந்த மாதிரி வி்ஷயங்களில் பெரும்பான்மையினரை இங்கே
புண்படுத்தும்படி எழுதி எங்களைத் தர்ம சங்கடத்துக்கும், வெறுப்புக்கும்,
வேதனைக்கும் உள்ளாக்காதீர்கள். வெளிப்படையாகவே சொல்லுகிறேன். யாருக்காவது இங்கே வருவதோ, நாங்கள் ஏதாவது எழுதுவதோ, பேசுவதோ பிடிக்கவில்லை என்றால், தயவு செய்து தாராளமாக விலகி விடுங்கள். ராகாகிக்கு ஆரம்ப காலத்திலிருந்தே யாரையும் நாங்கள் கையைப் பிடித்து அழைத்து வரவில்லை.

இன்னும் மூன்று வருடங்களில் விண்வெளிக்கு இந்தியா போகப் போகிறது. தரையிலாவது கொஞ்சம் நாகரிகமாக நடந்து கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.

நான் சொல்லுவதை நல்லவிதமாகப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

எல்லே ராமராயன்
"
எல்லே ராமராயன் எத்தனை அழகாக 'ர்' விட்டு போனதற்கு எவ்வளவு ஜனநாயகத்தன்மையோடு பதில் சொல்லியுள்ளார், என்னது என்ன 'ர்' விட்டு போச்சா? ஜெயேந்திரர் எவ்வளவு புனிதமானவர், அவரைப்போய் ஜெயேந்திரன் என்று சொன்னால் என்னாவது.... அது மட்டுமா சொன்னார் எவ்வளவு சனநாயகத்தன்மையோடு சொல்லியிருக்கிறார் "மட்டுறுத்துனர்/ஓனரான என்னால் உங்களை இங்கிருந்து விலக்கியிருக்க முடியும்.
கடிதத்தை வெளியிடாமல் இருந்திருக்கவும் முடியும். ஆனால் நான் செய்யவில்லை.
உங்கள் மடலை மட்டுறுத்தி, எதையும் மாற்றாமல் வெளியிட்டவனும் நான் தான்.
"புரியலையா மேலும் படியுங்கள்

--- In RaayarKaapiKlub@yahoogroups.com, "Nambi" wrote:
தீய சக்திகள் எல்லா இடத்திலும் உண்டு. ஆனால் அதை ஒரு பிரிவினர் மேல் மட்டும் தீவிரவாதம் என்றால் என்ன என்று சற்று சிந்திக்க வேண்டி உள்ளது. ஒஸாமாக்கள், புஷ் கள், ஜெயேந்திரன்கள் மட்டும்தான் தீவிரவாதிகளா?

அன்புடன்
நம்பி.

http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/2800

http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/message/2798

-0-

Re: Fwd: Condemnation


நம்பி,

ஒசாமா, தெரியும்; புஷ், கேள்விப்பட்டிருக்கிறேன்; ஜெயேந்திரன் யார்?

எல்லே ராமராயன்

------------------------------------------
எல்லே ராமராயன் இப்படின்னா இன்னொரு மாடரேட்டர் இரா.முருகனோ ஜெயேந்திரனில் "ர்" விட்டுபோனதற்கு துடித்து போனாராம், எல்லேராமின் மின் மடலிலிருந்து

"நேற்று முருகன் எந்த அளவுக்குத் துடித்துப் போயிருந்தார் என்பது எனக்குத் தெரியும். நானும் முருகனும் இந்தக் குழுவின் இரு கண்கள். ஒரு கண் வலியில் துடிக்கையில் இன்னரு கண் தூங்குமா? நான் நேற்று பட்ட வேதனைக்கு அளவே இல்லை. இத்னால் கேவலம் அவருக்கோ எனக்கோ இல்லை."

(பாவம் இரா.முருகன் ஜெயேந்திரனில் "ர்" விட்டுப்போனதற்கே துடித்துப்போனவர் சொர்ணமால்யா, சங்கரராமன் கொலை இத்தியாதி இத்தியாதிக்கெல்லாம் என்ன ஆயிருப்பார் என்றே தெரியவில்லை)

ஜெயேந்திரனில் "ர்" விட்டுப்போன மாபெரும் ஆபாச செயலுக்கு, மாபெரும் குற்றச்சாட்டிற்கு ஒரு நீண்ட விளக்க மடல் அப்புறமாதான் நீக்கம், அதும் கூட "After this Nambi was banned from the group. i.e. he existed in the
group. but his priviledge to send mails were taken away." இப்படி சனநாயகத்தன்மையோடு இருக்கும் ராயர் காபி கிளப்பை பார்த்து கற்றுக்கொள்ளட்டும் பாசிச தமிழ்மணம்.

அண்ணார் எல்லே ராமராயனின்(பதிவர் முகமூடி அல்ல, அவரே இதை ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறார்) முழுகடிதம் மிகுந்த சனநாயகத்தன்மையோடு இருக்கும் படித்து பாருங்கள்.... பாசிசத் தமிழ்மணம் இனியாவது இதை படித்து திருந்தி நடக்கட்டும்.....


Re: Fwd: Condemnation


நம்பி,

இந்துக்களின் மனதை மிகவும் புண்படுத்தி விட்டீர்கள். தனிப்பட்ட முறையில் எனது நேற்றைய தூக்கம் பலியானதற்கு இந்துமதப் பெரியவர் ஜெயேந்திரர் பற்றிய உங்கள் இழி சொல்லே காரணம். மிகவும் வருத்தப்பட்டேன். 'அவன். இவன்' என்றெல்லாம் சபை நாகரிகம் கூட இல்லாமல் எழுதி விட்டீர்களே? ;-(((

மட்டுறுத்துனர்/ஓனரான என்னால் உங்களை இங்கிருந்து விலக்கியிருக்க முடியும். கடிதத்தை வெளியிடாமல் இருந்திருக்கவும் முடியும். ஆனால் நான் செய்யவில்லை. உங்கள் மடலை மட்டுறுத்தி, எதையும் மாற்றாமல் வெளியிட்டவனும் நான் தான். இந்துவான நீங்கள் ஒரு முஸ்லிம் பெரியவரைப் பற்றியோ, கிறிஸ்தவப் பாதிரியாரைப் பற்றி
யோ கேவலமாக இப்படித் துணிந்து எழுதியிருப்பீர்களோ?

இந்த வருட ஆரம்பத்தில் சென்னை சென்றிருந்தபோது எதிர்பாராத விதமாக, ஜெயேந்திரரின் தரிசனம் எனக்கு மூன்று முறை கிட்டியது. அதில் இரண்டு முறை தனியே வெகு நேரம் பேசவும் முடிந்தது. இதற்கு முன் நான் அவருடன் பேசியதில்லை. அவரோடு பேசுவதற்கு டாட்டாக்களும், பிர்லாக்களும் காத்திருக்கையில் அவர் என்னோடு 45 நிமி
டங்கள் பேசியது மட்டுமல்ல, தனியறையில் பல வி்ஷயங்களைப் பற்றி இரு முறை பேசி ய்து என் அதிர்ஷ்டம், நான் எதிர்பார்க்காத மிகப்பெரிய ஆச்சரியம். பிறகு அவரது பலவித நடவடிக்கைகளை, மிக அருகில், பல பிராமணர் அல்லாத நண்பர்களோடு சேர்ந்து அருகே அமர்ந்து கவனிக்கவும் முடிந்தது. எந்த விதமான ஜாதிப் பிரஷ் டங்களையுமோ, ஏற்றத் தாழ்வுகளையுமோ நான் சத்தியமாக அங்கே காணவில்லை.
சொல்லப்போனால் கூட்டம் கூட்டமாகத் தமிழக அமைச்சர்கள் தான் அங்கே வந்து அவர் காலில் விழுந்து விழுந்து அவரைப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.

நான் பிறந்த ஊரில் அரிஜனக் காலனியில், அங்கே இருப்பவர்கள் அடிக்கடி
கேட்டுக்கொண்டதனால், என்னால் இயன்ற அளவில், ஒரு காளி கோவில் கட்டித் தர ஏற்பாடுகள் செய்து வருகிறேன். (இதையெல்லாம் நான் வெளியில் சொல்லிக் கொள்ளுபவன் இல்லை. இப்போது வருத்த மிகுதியால் சொல்லும்படி ஆக்யிருக்கிறது. மற்ற நண்பர்கள் மன்னிப்பார்களாக.) மிகுந்த சந்தோ்ஷத்துடன் அதைக்கேட்ட ஜெயேந்தி ரர் மடத்திலிருந்தே கொஞ்சம் பண உதவி கொடுக்கவும் ஏற்பாடு செய்கிறேன், அரசிடம் சொல்லி ஏதாவது செய்யச் சொல்கிறேன் என்றார். அரிஜனக் காலனியில் கோவில்
கும்பாபி்ஷேகத்துக்கும் அவரே வருகை தருகிறேன் என்றிருக்கிறார். இத்தனைக்கும் என்னாலோ எங்கள் ஊர் மக்களாலோ அவருக்கு எந்த விதப் பிரதிபலனும் இல்லை. நான் எங்கள் ஊர் அரிஜனக் காலனிக்குள் நுழைந்து எல்லோருடனும் உட்கார்ந்து ஜாலி யாகப் பேசிக் கொண்டிருந்தது ஒரு இனிமையான, சகஜமான நிகழ்வு. மனித நேயம் பழகத் தெரிந்தவர்களிடம் மத மாச்சரியங்கள் அண்டுவது இல்லை.

நேற்று முருகன் எந்த அளவுக்குத் துடித்துப் போயிருந்தார் என்பது எனக்குத் தெரியும். நானும் முருகனும் இந்தக் குழுவின் இரு கண்கள். ஒரு கண் வலியில் துடிக்கையில் இன்னொரு கண் தூங்குமா? நான் நேற்று பட்ட வேதனைக்கு அளவே இல்லை. இத்னால் கேவலம் அவருக்கோ எனக்கோ இல்லை.

பொது மேடை தந்து உபசரிக்கிறோம் என்பதற்காக அங்கே அசிங்கம் பண்ணித் தலையில் பூசிக்கொண்டு ஆடுவேன் என்பதா?

இனிமேலாவது இந்த மாதிரி வி்ஷயங்களில் பெரும்பான்மையினரை இங்கே
புண்படுத்தும்படி எழுதி எங்களைத் தர்ம சங்கடத்துக்கும், வெறுப்புக்கும்,
வேதனைக்கும் உள்ளாக்காதீர்கள். வெளிப்படையாகவே சொல்லுகிறேன். யாருக்காவது இங்கே வருவதோ, நாங்கள் ஏதாவது எழுதுவதோ, பேசுவதோ பிடிக்கவில்லை என்றால், தயவு செய்து தாராளமாக விலகி விடுங்கள். ராகாகிக்கு ஆரம்ப காலத்திலிருந்தே யாரையும்
நாங்கள் கையைப் பிடித்து அழைத்து வரவில்லை
. எங்களுக்குப் பிடித்ததை எங்கள் வீட்டுக்குள் தான் நாங்கள் பேசிக் கொள்கிறோம். எங்களுக்கு வெற்றுக் கூட்டம், வெறுப்பு கோ்ஷங்கள் தேவையில்லை. கற்றுத் தெளிந்த பல அறிஞர்கள் இங்கே எங்களுக்குப் பக்கபலமாக இருந்து எங்களை நல்ல வழியில் நடத்திச் செல்லுகிறார்கள்.

இன்னும் மூன்று வருடங்களில் விண்வெளிக்கு இந்தியா போகப் போகிறது. தரையிலாவது கொஞ்சம் நாகரிகமாக நடந்து கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.

நான் சொல்லுவதை நல்லவிதமாகப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

எல்லே ராமராயன்

பின்குறிப்பு

"மாம்ஸ்களா ஆட முடியலையா?"

ஸாரி மாம்ஸ்களா

எங்க அப்பன் தாத்தன் இளிச்ச வாய்காலம் மலையேறிடுச்சி,
தட்டு தடுமாறின எங்க அண்ணனுங்க காலமும் முடிஞ்சி போச்சி
இப்போ ஃபுல் ஸ்பீடு தான், குறுக்கால நீ பூந்தா பேஜார் ஆயிடுவ

24 பின்னூட்டங்கள்:

said...

சோற்றில் உப்பு போட்டு சுர்ரென்று உறைக்கும் வகையில் காபி கிளப்பில் பில்டர் காஃபி ஆத்திய அண்ணன் ராம ராயனை பார்த்தாவது பாசிச தமிழ்மணத்தில் வாசகர் பிச்சையெடுக்கும் முகமூடி திருந்துவாரா?

said...

ராயர் காபி கிளப்பில் இரட்டை டம்ளர் இருந்ததையும், அதில் ஒரு டம்ளரை உடைத்து எரிந்துவிட்டு பிராண்டட் கடையாக மாத்தி இருக்காங்க என்று உங்க பதிவைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன். அங்கே எல்லோரும் 'பில்டர்' காபிதான் இப்ப சாப்பிடுறாங்களா ?
:))))

said...

//இன்னும் மூன்று வருடங்களில் விண்வெளிக்கு இந்தியா போகப் போகிறது. தரையிலாவது கொஞ்சம் நாகரிகமாக நடந்து கொள்ளப் பழகிக் கொள்ளுங்கள்.//

அண்ணே ரெம்ப பெரிய தீக்கதரிசியா அண்ணே?

சும்மா ஒரு 3 வருசத்துக்கு முன்னாடி எழுதியிருப்பீங்களா இந்த பதிவ...

ஆனாலும் அப்துல்கலாம விட ஒங்களுக்கு ரெம்ப தன்னம்பிக்கையண்ணே...

said...

ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

என்னங்க ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர வுட்டுட்டியே...

ஓ...அந்த கேட்டகிரில வராரா முருகன் அய்யா அவர்கள்.

said...

//அங்கே எல்லோரும் 'பில்டர்' காபிதான் இப்ப சாப்பிடுறாங்களா ?
:))))
//
விவேக் ஒரு படத்துல சொல்லுவாரு, யாருமே இல்லாத கடையில யாருக்குடா டீ ஆத்துறன்னு.....

said...

//தனியறையில் பல வி்ஷயங்களைப் பற்றி இரு முறை பேசி ய்து என் அதிர்ஷ்டம், //

ரவிசுப்ரமணிக்கு கிடைத்த அளவுக்கும், நெல்லிக் குப்பம் கிருஷ்ண மூர்த்தி வாலை இலை போட்டு எடுப்பதற்கும் கிடைத்த அதிர்ஷ்டத்தை கேட்கையில் மேற்கண்டது துரதிஷ்டமே.
:)

said...

// எனது நேற்றைய தூக்கம் பலியானதற்கு இந்துமதப் பெரியவர் ஜெயேந்திரர் பற்றிய உங்கள் இழி சொல்லே காரணம். மிகவும் வருத்தப்பட்டேன். 'அவன். இவன்' என்றெல்லாம் சபை நாகரிகம் கூட இல்லாமல் எழுதி விட்டீர்களே? ;-((( //

//இந்துவான நீங்கள் ஒரு முஸ்லிம் பெரியவரைப் பற்றியோ, கிறிஸ்தவப் பாதிரியாரைப் பற்றி
யோ கேவலமாக இப்படித் துணிந்து எழுதியிருப்பீர்களோ?//

:) :) :)

ரா கா கியை சமையல் அறையாகவும், தமிழ்மணத்தை கழிவறையாகவும் பயன்படுத்தலாம் என்று நினைச்சிட்டாங்க போலிருக்கு.

Hypocrites அர்த்தம் தெரிஞ்சுக்கணும்னா, இவங்களோட செயல்களைப் பார்த்தாத் தெரிஞ்சுக்கலாம்!!!!

said...

http://mugamoodi.blogspot.com/2006/07/blog-post_26.html

said...

பேஜார் ஆயிடுவ பேஜார் ஆயிடுவ பேஜார் ஆயிடுவ!

kalakkal pathivu... okkaanthu yosippingkalo? illa room pottu theduveengalo?

said...

"மகா"(திருப்பிப்படிங்க) பாப்புக்களின்(பாப்பார பன்னாடைகள் என்ற வாக்கியம் ரொம்ப அநாகரீகமாக இருக்கிறதாம்) நாறிய கழிசடை முகங்கள் மொத்தமாக வெளிப்படும் வாரமோ இது?

அசத்துங்க, அப்படியே நம்ம தமிழ்மணம் அப்பாவிகளுக்கும் நாகரீகமா செயல்படுவது எப்படின்னு கொஞ்சம் சொல்லி அனுப்புங்க.

பாவம் "சுயம் கரசேவை அறிவுஜீவிகள்"(நன்றி: மிதக்கும்வெளி).

அன்புடன்
இறை நேசன்

said...

சம்மந்தமில்லாத மொக்கை விசயத்துக்கெல்லாம் நீட்டி முழக்கும் முகமூடியார் இந்த விதயத்தில் மௌனம் காப்பது எனக்கு சரியாகப் படவில்லை.

ஆகையால் அவருடைய 30,000 வார்த்தைகளைக் கொண்ட விளக்கக் கட்டுரையை விரைவில் எதிர்ப்பார்க்கும்...கும்...கும்...ம்...

டிம்டிமா

said...

ஆதிசேஷனை தூக்கியபோது பிராமணீயம் எங்கே சென்றது?
நானும் எழுத வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் எழுதும் நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள். பிராமணீயம் எழுத வேண்டாம் என்று தடுக்க யாரும் இல்லை. இது நமது சொந்த வலைப்பதிவு. நமக்குப் பிடித்ததை எல்லாம் எழுதுகிறோம். முஸ்லிமைக் கண்டபடி வாய்க்கு வந்தபடி திட்ட பார்ப்பனர்கள் எல்லாம் நமது வலைப்பதிவைப் பயன்படுத்துகிறோம்.

சொந்த பெயரில் ஒரு பதிவும் போலியாக ஒரு பெயரிலும் நமது கருத்துக்களை மக்கள் முன் வைக்கிறோம். அதனைக் கேள்வி கேட்க தமிழ்மணத்துக்கு உரிமை இல்லை. நமதுபதிவோ அல்லது பின்னூட்டமோ ஆபாசமாக இருக்கும்போது அல்லது வரையறைகளை மீறும்போது மட்டுமே தமிழ்மணம் நம் பதிவுகளை தூக்குகிறது. எனவே அவர்கள் ஆரிய திராவிட பேதம் பார்ப்பது இல்லை.

நான் எனது பதிவினில் முஸ்லிமை எதிர்ப்பேன், அல்லது தாக்குவேன். அது எனது தனிப்பட்ட உரிமை. அதேபோல தமிழ்மணம் நிர்வாகிகள் தங்களுக்குப் பிடித்த பதிவுகளை சேமிக்க பூங்கா என்ற இதழை நடத்துகின்றனர். அங்கே சென்று பார்ப்பனீயம் மட்டுமே போட வேண்டும் அல்லது சமகிருதம்தான் போட வேண்டும் என்று சொல்வது சரியாக எனக்கு படவில்லை. அதேபோல நமது ஒவ்வொருத்தரின் பதிவுக்கும் தமிழ்மணமும் அதன் நிர்வாகிகளும் வந்து திராவிடர்களை ஆதரித்துதான் பதிவுகள் போட வேண்டும் என்று சொன்னால் நாம் கேட்போமா? கண்டிப்பாக கேட்க மாட்டோம்.

எனவே இந்த விஷயத்தில் தமிழ்மணம் சொல்வது சரியாகப் படுகிறது எனக்கு. எனவே எனது தார்மீக ஆதரவை தமிழ்மணத்துக்கு நான் அளிக்கிறேன். இதனால் என்மேல் கோபம் கொண்டு நேசகுமார், திருமலைராஜன், ஜயராமன், டோண்டு, முகமூடி, எல்லேராம், கால்கரி சிவா, வஜ்ரா சங்கர். ம்யூஸ், அரவிந்தன், ஜடாயு, இட்லிவடை, அன்புடன் பாலா போன்றவர்கள் என்னை ஆபாசமாக சித்தரித்தாலும் கவலைப்பட போவதில்லை. எனது ஆதரவு என்றும் தமிழ்மணத்துக்கு உண்டு.

ஜெய்ஹிந்த்!!!

said...

ரா.கா.கி. அவ்ளோ நன்னா நடந்ததா?

said...

உங்க பிங்க் கலர மாத்த சொல்லி ஒரு பட்டை போடணும் போல இருக்கே.

தாங்கமுடியலய்யா இந்த பிங்கு.

இன்னும் ஒரு வாரம் கெடு. மாத்தலன்னா, சர்வே போட்டு, மக்கள கலர சூஸ் பண்ண சொல்வேன்.

-சர்வேசன்

said...

//
மாம்ஸ்களா ஆட முடியலையா?"

ஸாரி மாம்ஸ்களா

எங்க அப்பன் தாத்தன் இளிச்ச வாய்காலம் மலையேறிடுச்சி,
தட்டு தடுமாறின எங்க அண்ணனுங்க காலமும் முடிஞ்சி போச்சி
இப்போ ஃபுல் ஸ்பீடு தான், குறுக்கால நீ பூந்தா பேஜார் ஆயிடுவ
//

செம ஸ்பீடு தான்

said...

:))))))))))))))

said...

'ஃபில்ட்டர் 'காப்பி' பெருமகன்களின் நியாயத்தைப் பார்த்தால் குமட்டிக் கொண்டு வருகிறது. உவ்வே!

said...

குழலி....

காந்தி செத்துட்டார். நீங்க என்னடான்னா இங்க வந்து பதிவு போட்டுக்கிட்டிருக்கீங்க ? சீக்கிறம் வீடுபோய் சேருற வழியப்பாருங்க...கலவரம் ட்ராபிக் ஜாம் ஏதாவது ஆகப்போவுது !!!

said...

குழலி

ஏன் இப்படி மிதி மிதின்னு மிதிக்கிறீங்க ?

பெங்களூர் அ.மு.க

said...

இட்ஸ் ஓக்கே. அந்தாளை நாங்க தான் போட்டு தள்ளினோம்.

ஆர்.எஸ்.எஸ் ஊதாங்குழல் பிரிவு.
வதோதரா,
குசராத்.

said...

இந்த பதிவு போட்டதின் காரணமே எப்படியெல்லாம் இணையத்தில் கருத்து சுதந்திரம் இருந்திருந்தது, மாற்றுக்கருத்தாளர்கள் எப்படியெல்லாம் நசுக்கப்பட்டார்கள், கோடிங் எழுதத்தேவையில்லாத, போர்ட்டல் ஹோஸ்ட் செய்து அதை பராமரிக்க தேவையில்லாத ஓய்வு நேரங்களை பெரிய அளவில் கணிணியில் தலையை விட்டு நோண்டிக்கொண்டிருக்க தேவையில்லாத நிலை யாகூ குரூப்ஸ்ல், ஆனால் தமிழ்மணம் பணம், நேரம், டெக்ணாலஜி, அட்மின் என அத்தனையும் செய்துக்கொண்டு மேலும் மேலும் அழுத்தத்தையும் வாங்க்கிக்கொண்டு.... தமிழ்மணத்தின் கருத்து சுதந்திர நிலை என்ன? எப்படியான ஒரு ஆதிக்க சூழலை தமிழ்மணம் உடைத்தெறிந்திருக்கின்றது, அப்படி உடைத்தெறிந்ததை குழப்பம் விளைவிக்க எத்தனை முயற்சிகள் நடைபெறும் என்பதையெல்லாம் புரிந்து கொண்டிருக்கலாம்....

இன்று வெகுசன ஊடகங்களில் வெளிப்படுத்த முடியாத அமுக்கப்படும் எண்ணங்கள் வலையுலகில் இத்தனை சத்தமாக ஒலிக்க படுவது ஏதோ நெய்யில் வழுக்கும் அல்வா போல எளிதாக வந்ததல்ல, மாபெரும் ஆதிக்க தடைகளை முறியடித்து வந்துள்ளதே..... விளையாடும் போது தோல்வி வரும் நேரத்தில் ஆட்டத்தை கலைத்துவிட்டு ஓடுவது ஒரு உத்தி, பெரும்பாலும் எதிர்த்து விளையாடுபவனை கோபப்படுத்தி ஆட்டத்தை கலைப்பது தான் தம்மையும் காப்பாற்றி ஆட்டத்தையும் கலைப்பது, அதற்கு பலியாகாக்கூடாது என்பதே என் விருப்பம்....

said...

என்னை பொருத்தவரை, சரியோ தவறோ... ஒரு சாராரை நீக்கியது/அவர்களாகவே நீங்கியது, தமிழ்மணத்திற்கு பின்னடைவே...

இருவரும் தமிழ்மணத்தில் இருந்ததால் தான் என் போன்றோர் இருசாராரின் கருத்துக்களையும் அறிய முடிந்தது....சில விரும்பத்தகாத விஷயங்கள் நடந்திருந்தாலும் அதை தமிழ்மணம் சரியாக Handle செய்யவில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது...

இதுவரை பலவிஷயங்கள் விவாதிக்கப்பட்டு வந்தன.. பல அரிய கருத்துக்கள் அறிய வந்தன..அவசரபடாமல்...உணர்ச்சிவசப்படாமல் யோசித்தால் ஏற்பட்டு இருக்கும் இழப்பு புரியும்.. இனி ஒரு பக்க வாதங்களே தமிழ்மணத்தில் இருக்கும், அதற்கு எதிர்கருத்தோ விவாதங்களோ இருக்கப்பொவதில்லை..
விவாதங்கள்/எதிர்கருத்துக்கள் இல்லாமல் எந்தக் கருத்தும்/வாதமும் முழுமை அடைய போவதில்லை...

இப்பொழுதே. கடந்த சில நாட்களாக வாசகர் பரிந்துரை பக்கம் சென்று பார்த்தால்.. திராவிட பதிவுகளும், இஸ்லாமிய பதிவுகளும் தான் பெரும்பான்மையாக உள்ளன.. ஒரு பக்க கருத்துக்களே முதன்மை பெறுவது ஆரோக்கியமற்ற சூழல்.


உங்களுடைய வாதங்களை சோதனைக்குட்படுத்தி எதிர் தரப்பினர் பலருடன் விவாதித்து முடிவில் நீங்கள் உங்கள் கருத்தில் வெற்றி பெறும் போது கிடைக்கும் சந்தோஷம், பெருமை, கவுரவம் இனி உமக்கு வாய்க்கப்போவதரிது...

இதை சரியாக புரிந்து கொள்ளாமல் ஒரு பக்க ஆட்டமே வெற்றி என நினைத்தால் சொல்வதுற்கு ஏதுமில்லை...நன்றி

said...

to pot"piss"kadai ::

If mugamoodi begs or not in thamizmanam, whats ur f**king business has anything to do with it. So according to ur dickhead logic, if someone makes "I don't like" kinda comments about india, should they get out - in ur words, stop begginng - from india. Grow up and stop represent others when not warranted, that too when they have their own voice. evano sonna madhiri adivarudi kaithu pona kaigalukku konjamavathu oivu kodu.

- mugamoodi

(kuzhali, no doubt its me, mugamoodi. I'm in a public browsing place where I don't want to use my password)

said...

//மாம்ஸ்களா ஆட முடியலையா?"

ஸாரி மாம்ஸ்களா

எங்க அப்பன் தாத்தன் இளிச்ச வாய்காலம் மலையேறிடுச்சி,
தட்டு தடுமாறின எங்க அண்ணனுங்க காலமும் முடிஞ்சி போச்சி
இப்போ ஃபுல் ஸ்பீடு தான், குறுக்கால நீ பூந்தா பேஜார் ஆயிடுவ
//
அருமையான பதிவு. தமிழ்மணத்திற்கு எங்கள் ஆதரவு.