மாயக்கண்ணாடி - சேரனின் சாதிய கூறு

மாயக்கண்ணாடி படம் பற்றி ஏற்கனவே தல பாலபாரதியின் விமர்சனத்தின் தலைப்பு மட்டுமே படித்தேன், எப்படியும் படம் பார்க்கப்போறோம் எதிர்பார்ப்பு இல்லாமல் போகலாமென.... பட விமர்சனம் எழுதலாமென நினைத்திருந்தேன் படம் பார்க்க பார்க்க அந்த ஆர்வமே போய்விட்டது..... முதலில் சுருக்கமா பட விமர்சனம்

இடைவேளைக்கு முன் - போடாங்க.....
இடைவேளைக்கு பின் - ம்....

சேரனுக்கு சொல்ல நினைப்பது - நாலு நல்ல வசனங்கள் மட்டும் படத்தை தூக்கி நிறுத்தாது....

இப்படியாக மட்டுமே நினைத்துக்கொண்டிருந்தேன் படத்தின் கடைசி கட்டத்தில் ராதாரவி வழங்கும் அந்த பெரிய லெக்சர் வரை, ஏற்கனவே சேரன் மீது பாரதி கண்ணம்மா போன்ற படங்களின் வசனங்களில் சாதிய கூறு வசனங்கள் கொட்டி கிடந்ததும் சேரன் மீது புரட்சி புடுங்கி முற்போக்கு பிம்பங்கள் எதுவும் எனக்கு இல்லை.

முகவரி என்றொரு படம் அஜீத் நடித்திருந்தது, கிட்டத்தட்ட இதே கதைதான் எந்த உறுத்தலும் இல்லாமல் படம் முடிக்கப்பட்டிருக்கும், ஆனால் சேரன் இங்கே குலக்கல்வி திட்டத்திற்கு ஆதரவு தருவது மாதிரி உன் தொழிலில் நீ தான் மாஸ்ட்டர், புது தொழிலுக்கு போகனும்னா அங்கே நீ முதலிலிருந்து ஆரம்பிக்கனும், இதைத்தானேய்யா சாதிய சனாதான தர்மம் சொல்லிக்கொண்டு வருகின்றது, பாட்டன் பூட்டன் அப்பன் தொழில் உனக்கு எளிதாக வரும் அதையே செய் என்று அதற்கு சப்பைகட்டும் கட்டுகிறது, முடிவெட்டுபவன் காலம் பூரா முடி வெட்டதான் வேண்டும் என்ன முதலில் தரையில் ரோட்டில் உக்கார்ந்து வெட்டலாம், பிறகு வேண்டுமானால் குளிர்சாதனம் பூட்டப்பட்ட கடையில் வைத்து வெட்டலாம், ஆனால் முடிதான் வெட்ட வேண்டும் கடைசிவரை என்பதைத்தான் வலியுறுத்துகிறாரா சேரன்.

ஏற்கனவே "செய்யும் தொழில் தெய்வம்" என்று சொல்லி அடித்தட்டு மக்களின் கையிலலேறிய பீ வாளியும், தொடப்பைகட்டையும், சவரகத்திகளும், இன்ன பிற கருவிகளும் கையிலிருந்து இறங்காமல் பார்த்துக்கொண்டது சமூகம், இப்போது புது உத்தியாக தொழில் திறமை, செய்யும் தொழிலிலேயே முன்னேறு என்று ஆரம்பித்துவிட்டது சாதிய கூறுகளை தொடர்ந்து வைத்திருக்க.....

பிற்சேர்க்கை
இதுல ஏங்க சாதிப் பிரச்சன வந்தது.? இதிலே சாதிய கூறுகள் நுட்பமாக திணிக்கப்பட்டுள்ளது, புது தொழிலுக்கு போனால் அங்கே நீ முதலிலிருந்து ஆரம்பிக்கனும்... என்பதில் ஆரம்பிக்கிறது, அப்படியென்றால் அப்போ அவனுடைய பழைய தொழில் பிறக்கும்போதே ரத்தத்தில் ஊறியிருந்ததா என்ன? அது கற்றுக்கொள்ளும்போது அதுவும் புதுத்தொழில் தானே? அப்போ மட்டும் அதில் எல்.கே.ஜி இல்லையா?

இங்கே பழைய தொழில் என குறிப்பிடப்படுவது என்ன? ஒரு தொழிலை புதிதாக கற்றுக்கொண்டாலும் அது எப்போது பழைய தொழிலாகுமென்றால் அவங்க அப்பன், குடும்பம் செய்யுற தொழில்தான் அவன் பிள்ளை புதிதாக கற்றுக்கொண்டாலும் அவன் பிள்ளைக்கு அது பழைய தொழில் தான்....

இன்னமும் சாதியை அடிப்படையாக வைத்து அடிமட்ட தொழில் செய்யும் முறை மாறவில்லை, இப்படியான நேரத்தில் அம்மாதிரியான ஒரு தொழிலை காண்பித்து இப்படியாக பேசியிருப்பது சாதிய கூறு அல்லாமல் வேறென்ன?

43 பின்னூட்டங்கள்:

said...

//ஏற்கனவே "செய்யும் தொழில் தெய்வம்" என்று சொல்லி அடித்தட்டு மக்களின் கையிலலேறிய பீ வாளியும், தொடப்பைகட்டையும், சவரகத்திகளும், இன்ன பிற கருவிகளும் கையிலிருந்து இறங்காமல் பார்த்துக்கொண்டது சமூகம், இப்போது புது உத்தியாக தொழில் திறமை, செய்யும் தொழிலிலேயே முன்னேறு என்று ஆரம்பித்துவிட்டது சாதிய கூறுகளை தொடர்ந்து வைத்திருக்க//


கல்வியின் முக்கியத்துவம் இங்குதான் தெளிவாக தெரிகின்றது. கல்வி சமத்துவதுக்கான ஒரு கருவி. கல்வி கட்டற்ற வழியில் கிடைக்க செய்தல் சமத்துவ பாதையில் ஒரு முக்கிய படிக்கல்.

said...

He is indirectly attacking Reservation policy in that file.In Jail, one guy told that person with lesser mark got the job(as in Desiya geetham movie?)

said...

அன்பின் குழலி,

உண்மையாவே.. மனசு விட்டு .. வாய் விட்டு கேக்கறேன்..

உங்களுக்கு சாதியைத் தவிர வேற எதையும் பார்க்கத் தெரியாதா?

நீங்க தான் சிங்கப்பூரில டாலர்-ல சம்பாதிக்கிறீங்களே...

நம்ம ஊரில் பீயள்ளறவங்க வீட்டுப் பிள்ளங்க படிக்கறதுக்காக கேவலம் ஒரு ரூபாக் காசாவது மனித நேயத்தோட செலவு பண்ணியிருக்கீங்களா?

எப்பத்தான் நீங்க இந்த வாய்ப்பந்தல் போடறதை நிறுத்தி உண்மையாகவே பிற்படுத்தப்பட்ட சமூகம் முன்னேறறதுக்கு உங்க பங்களிப்பைச் செய்யப் போறீங்க...

"நான் இந்த மாதிரி பதிவு போடறதுதான் பங்களிப்பு" என்று வசனம் பேசிவிடாதீர்கள்..

அன்புடன்,
சீமாச்சு

said...

அண்ணே சீமாச்சு அண்ணே வந்துட்டிங்களா? பார்த்து ரொம்ப நாளாச்சி, அண்ணே நான் இந்த பதிவில் சொல்லியிருப்பதில் உங்களுக்கு எந்த பதில் கருத்தும் இல்லையோ ஒற்றை வரியில் உங்களுக்கு சாதியைத் தவிர வேற எதையும் பார்க்கத் தெரியாதா? என்று முடித்துவிட்டீர்கள், சாதி அங்கு இருப்பதால் தானே பார்க்க வேண்டியிருக்கிறது, ஒரு சூப்பர் சாப்பாடு போட்டு இலையின் மூலையில் கொஞ்சம் பீ வைத்தால் பீ யை பார்க்காமல் சாப்பிடு, பாயாசத்தை பார்த்து சாப்பிடு என்பீர்களோ?


//நம்ம ஊரில் பீயள்ளறவங்க வீட்டுப் பிள்ளங்க படிக்கறதுக்காக கேவலம் ஒரு ரூபாக் காசாவது மனித நேயத்தோட செலவு பண்ணியிருக்கீங்களா?

எப்பத்தான் நீங்க இந்த வாய்ப்பந்தல் போடறதை நிறுத்தி உண்மையாகவே பிற்படுத்தப்பட்ட சமூகம் முன்னேறறதுக்கு உங்க பங்களிப்பைச் செய்யப் போறீங்க...//
சீமாச்சு ஆமாம் ஒண்ணு தொடர்ந்து கவனிச்சிக்கிட்டு வரேன், எப்போதெல்லாம் இப்படி எழுதவதை விட செயலில் இறங்கு என்று சொல்கிறார்கள் என்று கவனித்தீர்களென்றால் ஒன்று நன்றாக புரியும், இப்போ திருநங்கைகளை பற்றிய கேவலமான ஒரு உருவகத்திற்கு எதிராக லிவிங்ஸ்மைல் போன்றவர்கள் எழுதும்போது இப்படியாக எழுதிக்கொண்டிருப்பதைவிட செயலில் உருப்படியாக செய்யலாமே, தலித்கள் பற்றிய விசயங்களை எழுதும்போது உடனே சொல்வார்கள் அவர்களுக்கு சாதி சர்ட்டிபிகேட் வாங்குவதற்கு செயலில் உதவி செய்யேன், வேறு ஏதாவது விளிம்புநிலை மனிதர்கள் பற்றி பேசும்போது என்று, அதாவது இதற்கு வலுவான எதிர்கருத்து இல்லை, எழுதுபவர்களின் சொல்லில் உள்ள நியாயம் தெரிந்த பின் அதை எதிர்கொள்ள இப்படியாக இழுப்பது....

//நம்ம ஊரில் பீயள்ளறவங்க வீட்டுப் பிள்ளங்க படிக்கறதுக்காக கேவலம் ஒரு ரூபாக் காசாவது மனித நேயத்தோட செலவு பண்ணியிருக்கீங்களா?

எப்பத்தான் நீங்க இந்த வாய்ப்பந்தல் போடறதை நிறுத்தி உண்மையாகவே பிற்படுத்தப்பட்ட சமூகம் முன்னேறறதுக்கு உங்க பங்களிப்பைச் செய்யப் போறீங்க...

"நான் இந்த மாதிரி பதிவு போடறதுதான் பங்களிப்பு" என்று வசனம் பேசிவிடாதீர்கள்..
//
அண்ணே சீமாச்சு நீங்க எனக்கு இப்படி அறிவுரை சொல்லும் நீங்களும் ஏதாவது செய்யலாமே...
நீங்கள் கேட்ட கேள்விக்கு என்பதில் தமிழ்மணம் பாணியில்

எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விருப்பத்திற்கமைய நான் நினைக்கும் பதிவர்களுக்குத் தரமுடியும். அதற்குமேல், எமது செயற்பாடுகள் பற்றி, முறையான வேண்டுகோளுடன் வரும் சிங்கப்பூர்/இந்திய நீதித்துறைகளின் வினாக்களுக்கு அப்பால் எவருக்கும் நாம் விபரித்துக்கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை

said...

அடடா. என்னங்க இப்படி சொல்லிட்டீங்க?.

எவ்ளவோ பேரு, சினிமா ஆசைல வாழ்க்கைய தொலைக்கறான்.

சேரன் சொல்ல வரது இன்னான்னா, ஓவர் நைட்ல பணக்காரனாகணும்னு நெனைக்காத. ஆழக் கால் வைங்கறாரு.

ரொம்ப முக்கியமான கருத்துங்க. அசிங்காட்டம் ஆடி சுத்தமா உபயோகப் படாத படமா எடுத்து ஒரு பக்கம் தள்ளும் போது, இந்த மாதிரி ஊருக்கு உபதேசமா ஒண்ணு ரெண்டு பேராவது எடுக்கட்டும்.

அத ஏன் குத்தம் சொல்றீங்க?

இதுல ஏங்க சாதிப் பிரச்சன வந்தது.

என்னமோ போங்க. உங்க விமர்ஜனம் ஜுத்தமா எனக்கு புடிக்கல.

(கலர மாத்துங்க).

-சர்வே-சன்

said...

//எவ்ளவோ பேரு, சினிமா ஆசைல வாழ்க்கைய தொலைக்கறான்.
//
உண்மைதான் இல்லையென்று சொல்லவில்லை, மருத்துவம் படிக்க ஆசைப்பட்டு அதனால் எஞ்சினியரிங் கிடைக்காம ஓரிரு ஆண்டுகள் வீணாக்கி பின் பிஎஸ்சி, பிஏ என்று சென்று கடைசியில் அதிலும் கணவுகள் நொறுங்கிவிட்டதே என்று சரியாக படிக்காமல் வீணாய்போனவர்களின் வாழ்க்கையை காண்பித்து அய்யா இனி மருத்துவம் படிக்க முயற்சிப்பதை விட உன்னால முடிந்த பிஏவோ, பிஎஸ்சியோ அதுவும் இல்லைனா +2வோ அதை மட்டும் நல்லா படி என்று சொன்னால் எத்தனை அபத்தமோ அது தான் இது.

//இதுல ஏங்க சாதிப் பிரச்சன வந்தது.//
புது தொழிலுக்கு போகனும்னா அங்கே நீ முதலிலிருந்து ஆரம்பிக்கனும்... அப்போ அவனுடைய பழைய தொழில் பிறக்கும்போதே ரத்தத்தில் ஊறியிருந்ததா என்ன? அது கற்றுக்கொள்ளும்போது அதுவும் புதுத்தொழில் தானே? அப்போ மட்டும் அதில் எல்.கே.ஜி இல்லையா?

இதுல விசயம் என்னன்னா அது புதுசா கத்துக்கும்போதும் அது எப்போ பழைய தொழில்னா அது அவங்க அப்பன், குடும்பம் செய்யுற தொழில்தான் புள்ளை புதுசா கத்துக்கிட்டாலும் அவன் புள்ளைக்கு அது பழைய தொழில் தான்....

இன்னமும் சாதியை அடிப்படையாக வைத்து அடிமட்ட தொழில் செய்யும் முறை மாறவில்லை, இப்படியான நேரத்தில் அம்மாதிரியான ஒரு தொழிலை காண்பித்து இப்படியாக பேசியிருப்பது சாதிய கூறு இல்லாமல் வேறென்ன?

said...

பதிவில் பிற்சேர்க்கை என்ற பகுதி இணைக்கப்பட்டுள்ளது...

said...

//எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விருப்பத்திற்கமைய நான் நினைக்கும் பதிவர்களுக்குத் தரமுடியும். அதற்குமேல், எமது செயற்பாடுகள் பற்றி, முறையான வேண்டுகோளுடன் வரும் சிங்கப்பூர்/இந்திய நீதித்துறைகளின் வினாக்களுக்கு அப்பால் எவருக்கும் நாம் விபரித்துக்கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை//

தமிழ்மண'க்குது !
:)

said...

//எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விருப்பத்திற்கமைய நான் நினைக்கும் பதிவர்களுக்குத் தரமுடியும். அதற்குமேல், எமது செயற்பாடுகள் பற்றி, முறையான வேண்டுகோளுடன் வரும் சிங்கப்பூர்/இந்திய நீதித்துறைகளின் வினாக்களுக்கு அப்பால் எவருக்கும் நாம் விபரித்துக்கொண்டிருக்கவேண்டிய அவசியமில்லை//

ஏம்பா மூனு நாலு வார்த்தைய சேத்து ஒரு வார்த்தையா போடறீங்க...விட்டால் ஒரு வரியையே ஒரு வார்த்தையா சுருக்கிடுவீங்க போல...

திரைவிமர்சனம்;
சொல்றதுக்கு ஒன்னுமில்ல...

said...

//எஞ்சினியரிங் கிடைக்காம ஓரிரு ஆண்டுகள் வீணாக்கி பின் பிஎஸ்சி, பிஏ என்று சென்று கடைசியில் அதிலும் கணவுகள் நொறுங்கிவிட்டதே என்று சரியாக படிக்காமல் வீணாய்போனவர்களின் வாழ்க்கையை காண்பித்து அய்யா இனி மருத்துவம் படிக்க முயற்சிப்பதை விட உன்னால முடிந்த பிஏவோ, பிஎஸ்சியோ அதுவும் இல்லைனா +2வோ அதை மட்டும் நல்லா படி என்று சொன்னால் எத்தனை அபத்தமோ அது தான் இது//


ஆஹா, இதுல ஒரு அபத்தமும் இல்லீங்க.
மூணு வருஷம் MBBS சேர முயற்ச்சி பண்ணி கெடைக்கலன்னா, வயச தொலைக்காம, வேறு வகையில் உழைப்பை செலுத்துவதில் என்னங்க தப்பு?
practicalஆ திங்க் பண்ணி சொல்லுங்க.


//புது தொழிலுக்கு போகனும்னா அங்கே நீ முதலிலிருந்து ஆரம்பிக்கனும்... அப்போ அவனுடைய பழைய தொழில் பிறக்கும்போதே ரத்தத்தில் ஊறியிருந்ததா என்ன? அது கற்றுக்கொள்ளும்போது அதுவும் புதுத்தொழில் தானே?//

வில்லங்கமா திங்க் பண்றீங்க குழலி. பழைய தொழில்ல அஞ்சோ ஆறோ வருஷம் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திருக்கான் ஹீரோ. (ராதாரவியும் அப்படி கஷ்டப்பட்டு வந்ததாதான் சொல்லுவாரு). ராதாரவி உயர்ந்து பல பேருக்கு வேலை தராரு.

ஹீரோ, சீக்கிரம் பணம் சம்பாதிக்கணும்னு, மற்ற வழீல முயற்ச்சிக்கராரு.
தாய்க்கு கஷ்டம் வந்தவுடன், குறுக்கு வழியும் ட்ரை பண்றாரு.

கடைசில, தனக்கு எது நல்லா வரூதோ, அதுல பெரிய ஆளா வரணுங்கற மாதிரி முடிக்கறாங்க. நீங்க சொல்ற மாதிரி குலத் தொழில் தான் செய்யணும்னு சொன்ன மாதிரி என் கண்ணுக்கு தெரியல.

படத்துல ஒரு எடத்துல கூட பஸ் ட்ரைவரோ, ராதாரவியோ, சேரனோ, ஹீரோயினோ, கடத்தல் கார பாஸோ எந்த சாதின்னு சொல்லக் கூட இல்ல.

I am 100% sure, சேரன் had no intentions to create சாதீயம் in his movies.

நமக்குள்ள இருக்கர 'உயர் சாதி' கசப்பு, எதப் பாத்தாலும், இப்படி காட்டுதோ?

இந்த பதிவ இணைத்து ஒரு சர்வே போடறேன் நாளைக்கு :)

மாயக்கண்ணாடியில் சாதீயமா? என்ற தலைப்பில் :)

said...

//ஆஹா, இதுல ஒரு அபத்தமும் இல்லீங்க.
மூணு வருஷம் MBBS சேர முயற்ச்சி பண்ணி கெடைக்கலன்னா, வயச தொலைக்காம, வேறு வகையில் உழைப்பை செலுத்துவதில் என்னங்க தப்பு?
practicalஆ திங்க் பண்ணி சொல்லுங்க.
//
சர்வேசா நான் சொல்லியிருப்பது மருத்துவம் படிக்க முயற்சித்து வீணாப்போனவங்க வாழ்க்கையை காண்பித்து இனி மற்றவர்கள் மருத்துவம் படிக்க முயற்சிப்பதை விட உங்களால முடிந்த பி.ஏ.வோ பி.எஸ்.சியோ அல்லது +2வோ அதை நல்லா படிங்க என்று சொல்ல வந்தேன், மொத்த படமுமே நமக்கு விதிச்சது இது, அதுலயே முன்னேறு இப்படித்தான் இருக்கு....

//படத்துல ஒரு எடத்துல கூட பஸ் ட்ரைவரோ, ராதாரவியோ, சேரனோ, ஹீரோயினோ, கடத்தல் கார பாஸோ எந்த சாதின்னு சொல்லக் கூட இல்ல.
//
உண்மைதான், உங்களிடம் ஒண்ணே ஒண்ணு கேட்கிறேன், நம் சமூகத்தில் சாதி என்ன என்று சொல்லாமல் நம்மால் ஓரளவுக்காவது சாதி கணிக்க முடியாது என்று நினைக்கீறீர்களா?

ஊரில் முடிவிட்டுகிறவர்கள் எந்த சாதியென்று சொல்லாமல் தெரியவில்லையா?, கோவிலில் பூசைசெய்பவர் நான் பிராமணன் என்று போர்டா மாட்டிக்கொண்டுள்ளார்(ஹி ஹி அவர் கழுத்தில் போர்டு மாட்டலைன்னாலும் தோளில் மாட்டியிருப்பதே ஒரு வகையில் போர்டுதான்).... Let's call Spade as Spade

//நமக்குள்ள இருக்கர 'உயர் சாதி' கசப்பு, எதப் பாத்தாலும், இப்படி காட்டுதோ?
//
சேரன் உயர்சாதியா??

//புது தொழிலுக்கு போகனும்னா அங்கே நீ முதலிலிருந்து ஆரம்பிக்கனும்... அப்போ அவனுடைய பழைய தொழில் பிறக்கும்போதே ரத்தத்தில் ஊறியிருந்ததா என்ன? அது கற்றுக்கொள்ளும்போது அதுவும் புதுத்தொழில் தானே?//
//வில்லங்கமா திங்க் பண்றீங்க குழலி. பழைய தொழில்ல அஞ்சோ ஆறோ வருஷம் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்திருக்கான் ஹீரோ.//
நீங்க சொல்றமாதிரி படத்தில் வந்ததாக தெரியவில்லை, இந்த தொழிலை புதிதாக கற்றுக்கொண்டு வந்த மாதிரி பேசவில்லை, இது உனக்கு தெரிந்த தொழில் பழக்கமான தொழில் இப்படித்தான் வசனங்கள் வந்ததே தவிர கற்றுக்கொண்ட தொழில் என்று வரவில்லை என்றே நினைக்கின்றேன்...
////(ராதாரவியும் அப்படி கஷ்டப்பட்டு வந்ததாதான் சொல்லுவாரு). //
ராதாரவி உயர்ந்து பல பேருக்கு வேலை தராரு.
//
இல்லையென சொல்லவில்லையே.... முன்னேறு உன் தொழிலேலேயே முன்னேறு அப்படித்தானே... என் தொழில் எப்படி எனக்கு பழக்கமான தொழில், எது எனக்கு முதலில் அறிமுகமாகிறதோ அது தானே, அது எப்படி அறிமுகமாகிறது?


//I am 100% sure, சேரன் had no intentions to create சாதீயம் in his movies.
//
பாரதி கண்ணம்மா படம் பார்த்தீர்களா? மாயக்கண்ணாடியிலும் கூட நேரடியாக சாதி சொல்லவில்லையே தவிர அது குலத்தொழிலை தூக்கி பிடிக்கிறது....

said...

//இல்லையென சொல்லவில்லையே.... முன்னேறு உன் தொழிலேலேயே முன்னேறு அப்படித்தானே... என் தொழில் எப்படி எனக்கு பழக்கமான தொழில், எது எனக்கு முதலில் அறிமுகமாகிறதோ அது தானே, அது எப்படி அறிமுகமாகிறது?
//

:) எனக்கு ரெண்டு முடிதிருத்துபவர்களை நல்லா தெரியும். அவங்க அப்பாரு அந்த தொழில் செஞ்சவங்க இல்ல. அவங்க பசங்களும் அந்த தொழில் செய்யப் போவதில்லை.
survival of the fittestங்க. யாருக்கு எது நல்லா வரூதோ, அத செஞ்சுட்டு போயிக்கிட்டே இருப்பாங்க.

படிக்காதவன் கொஞ்ச (நெற்றைய) பேரு சண்டியனுங்க கிட்ட மாட்டிக்கிட்டு, அடிமை மாதிரி முன்னேறாம இருப்பாங்க. அத மாத்த ஆட்சில இருக்கரவங்க யோசிக்கணும். சேரன் அதுக்கென்ன பண்ண முடியும்?

முடிவெட்டரவன, LIC agentஆவோ, கடத்தல் காரனாவோ, மாத்தி, அவன்ன் லட்சாதிபதி ஆகிற மாதிரி காட்டினா அத பாக்கரவன் உருப்படுவானா? :)

சர்வே போட்டாச்சு. இனி மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு :)

said...

குழலி,

அண்ணை சீமாச்சு கிட்ட ஒரே ஒரு கேள்வி...


// நீங்க தான் சிங்கப்பூரில டாலர்-ல சம்பாதிக்கிறீங்களே...

//

பீயள்ளுவது பற்றியும், சாதி ஏய்ப்புகளையும் பற்றி யாராவது எழுதினால் உடனே உங்க மாதிரி ஆளுங்க ஓடி வந்து "அப்ப நீ ஏம்ப்பா வெளிநாட்டுல இருக்க?! நீ போய் பீயள்ளுவது தானே?" ன்னு பயங்கர லாஜீக்கோட கேள்வி கேக்கறீங்களே? அதேபோல இந்த "ஜெய்கிந்த்..ஜெய்கிந்த்" னு கூவற ஆளுங்க கிட்ட போய் "ஏம்பா, அமேரிக்கால டாலர்ல சம்பாதிச்சுக்கிட்டு நாட்டுப்பற்றுன்னு கூவிக்கினு இருக்கறதுக்கு கார்கில் ல போய் துப்பாக்கி பிடிக்கலாம்ல?" ன்னு கேக்கறதில்லை!

ஓ.. அவிங்க எல்லாம் "தேசியம் காக்கும் கிரீன்கார்டு தமிழர்கள்" கேட்டகிரியோ?

said...

சாதியக்கூறு என்பதை விட பார்ப்பனியக் கூறு என்பது சரியாக இருக்கும்!. பார்ப்பனியம் தானே குலத்தொழில் செய்யச் சொல்கிறது. இடஒதுக்கீட்டை எதிர்கிறது.

said...

//சாதியக்கூறு என்பதை விட பார்ப்பனியக் கூறு என்பது சரியாக இருக்கும்!. பார்ப்பனியம் தானே குலத்தொழில் செய்யச் சொல்கிறது. இடஒதுக்கீட்டை எதிர்கிறது.
//

படத்துல, குலத்தொழில்னு காட்டலீங்க 'நமதடா இந்நாடு' சாரே.
சேரனுக்கு 'நல்லா வரும்' தொழில்னு காட்டறாங்க.
ப்யூட்டி பார்லர்ல நல்லா திறமைய காட்டரவரு, தனக்கு வராத விஷயத்தில் மூக்கை நொழச்சு, நொந்து நூலாகி வாழ்க்கைய தொலைக்கக் கூடாதுண்ணு சொல்லறாங்கா.

உ.ம்: இப்ப பாத்தீங்கன்னா, எனக்கும் சினிமால படம் புடிக்கணும்னு ஆசதான். ஆனா, அத்த நம்பி, நமக்கு நல்லா வர ஆணி புடுங்கரத விட்டு கஷ்டப்பட்டு ட்ரை பண்ணா சரியா வருமா? நம்மள நம்பி இருக்கரவங்களுக்கு அது என்ன பாதிப்பு தரும் - இதெல்லாம் ரோசிங்க.

said...

ஹூம்....ஆரம்பிச்சுட்டீங்ளா?

சினிமேவே வாழ்க்கை, சினிமாக்காரனே தலைவன், சினிமாவில் வரும் விசயங்களே உலக நீதின்னு நினைக்கறது என்னைக்கு மக்களிடமிருந்து போகுதோ அன்றைக்கு தான் நாடு உருப்படும்!

ஏங்க இப்படி!!??
என்னமோ போங்க... ஒன்னும் சொல்லறதுக்கு இல்லை :(((((

said...

ஒரு வக்கிலோ, இஞ்சினியரோ சினிமாவில் நடிக்கும் அல்லது சினிமா எடுக்கும் ஆசையில் தான் செய்த தொழிலின் மீது கவனம் செலுத்த முடியாமல் படும் பாட்டை காண்பித்திருந்தால் இந்த விமர்சனம் வந்திருக்காது என்பது என் கருத்து

said...

தமிழ்மண'க்கு(Thh)து !
:)

said...

சேரன் நடைமுறையில் உள்ள சிரம்ங்களைக் கூறியிருக்கலாம். அனைவரும் நடிகர் ரஜனி போல் ஒரு பாடலில் கோடிஸ்வரனாக காட்ட முடியுமா?

said...

//சேரன் உயர்சாதியா??//

கேட்டான் பாருய்யா ஒரு கேள்வி!.

சாதியை வைத்து திறமையைப்பார்க்கும் உன்னைபோன்ற கூட்டம் இருக்கும் வரைக்கும் நம் கூட்டம் உசுப்பேற்றிவிடப்படும் கூட்டமாக(ஆட்டு மந்தைகளாகத்தான் இருக்கும்).

இதில் சேரன் முடி திருத்தும் தொழில் செய்வது தான் உங்களை இது போன்று பேச வத்துள்ளது. இதே சேரன் வேறு தொழில் செய்திருந்தால் இது போன்று பேசியிருக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

சிவாஜிக்கு நடிப்பு நன்றாக வந்தது, ஆனால் அதை விட அதிகமாக புகழ்வேண்டும், அதிகார வர்க்கமாக வேண்டும் என்று ஆசைப்பட்டு அரசியலுக்கு போய் அடிவாங்கினாரே!, அதுவும் இதே போலத்தான். இதில் அவர் பரம்பரைத்தொழிலைப்பற்றி சொல்லவில்லை. நீ ஒரு வேலையை இஷ்டப்பட்டு சில காலம் அதில் பயிற்சி பெற்று நல்ல நிலைக்கு வரும் போது , சீக்கிரம் பணம் சேர்க்க ஆசைப்பட்டு வேறு தொழிலுக்கு போனால் அங்கு முன்னேற சில காலம் கடும் முயற்சியும், நம்பிக்கையும் இருக்கவேண்டும் என்று தான் படத்தைஇ முடித்திருப்பார்.

சும்மா எல்லாவற்றையும் சாதிக்கோணத்தில் பார்த்து இப்படி கோணப்புத்தியுடன் இருக்கும் உனக்கு சிங்கபூரில் எப்படிய்யா வேலைகொடுத்தார்கள்.

said...

// Seemachu said...
அன்பின் குழலி,

உண்மையாவே.. மனசு விட்டு .. வாய் விட்டு கேக்கறேன்..

உங்களுக்கு சாதியைத் தவிர வேற எதையும் பார்க்கத் தெரியாதா?

நீங்க தான் சிங்கப்பூரில டாலர்-ல சம்பாதிக்கிறீங்களே...//
Enga velai partha ennanga seemachu..jathi patri pesadavan yarum unda,2007 il kooda. Kutty revadhiyin pettiyai ketpeergalaga..link idho
http://www.kumudam.com/interviews.php?id=2&strid=1366&stream=3
Onnum payapada vendam..summa kettupottu ungal murpokku karuthai sollalam..okayva seemachu..ennavo ma..rachu..
Nanri

said...

//பீயள்ளுவது பற்றியும், சாதி ஏய்ப்புகளையும் பற்றி யாராவது எழுதினால் உடனே உங்க மாதிரி ஆளுங்க ஓடி வந்து "அப்ப நீ ஏம்ப்பா வெளிநாட்டுல இருக்க?! நீ போய் பீயள்ளுவது தானே?" ன்னு பயங்கர லாஜீக்கோட கேள்வி கேக்கறீங்களே? அதேபோல இந்த "ஜெய்கிந்த்..ஜெய்கிந்த்" னு கூவற ஆளுங்க கிட்ட போய் "ஏம்பா, அமேரிக்கால டாலர்ல சம்பாதிச்சுக்கிட்டு நாட்டுப்பற்றுன்னு கூவிக்கினு இருக்கறதுக்கு கார்கில் ல போய் துப்பாக்கி பிடிக்கலாம்ல?" ன்னு கேக்கறதில்லை!

ஓ.. அவிங்க எல்லாம் "தேசியம் காக்கும் கிரீன்கார்டு தமிழர்கள்" கேட்டகிரியோ? //
Idhu thaan anony nethiadiyo???Enakku therinju menmai thaangiya pasukkalai logikka madakiya orae anony ivar(?) thaan. Idhai neenga blogger idyodave therivicirukalam..sema nethiyadi:)))

said...

அட... விடுங்க தல...

படம் பார்த்த அன்னிக்கே பத்திகிட்டு வந்துச்சு. ஆனாலும் விமர்சனம்னு சொல்லும் போது இதைப் பத்தி சொல்லாம கவனமா இருந்தேன். ஏன்னா... சாதி பெருமையை பேசி, ஆடாதீங்கன்னு சொல்லுற நான் சாதி வெறியன்னு எங்கேயோ.. எவனோ எழுதி இருந்தானாம்.

அதனாலயே இப்படியான திரிபுகளுக்கு ஆட்பட வேண்டாமேன்னு சும்மா இருந்துட்டேன்.

அண்ணன் சீமாச்சு...க்கு ஏன் இப்படி எரியுதுன்னு தெரியலை. மொதல்ல.. விமர்சனத்தை விமர்சனமா.. கருத்தை கருத்தா மட்டும் பாக்க பழகுங்கன்னு சொல்லத்தோனுது. அதை விட்டு தனிமனித தாக்குதல்/குடும்ப தாக்குதல்ன்னு போக வேண்டாம்.

பாரதி கண்ணம்மா மாதிரியான படங்களில் தொடங்கி.. ஆதிக்க சக்திகளுக்கு காவடி தூக்கித்தான் வருகிறார் சேரன் என்று சொன்னால.. என்னையும் திட்டுறதுக்கு கிளம்பி வருவாங்க.. என்னமோ போங்க!

ஆசிப் அண்ணாச்சி மாதிரி 'நல்லா இருங்கடே'ன்னு ஒத்த வார்த்தையில சொல்லீட்டுப் போக முடியலை. :(

said...

//சாதி பெருமையை பேசி, ஆடாதீங்கன்னு சொல்லுற நான் சாதி வெறியன்னு எங்கேயோ.. எவனோ எழுதி இருந்தானாம்.

அதனாலயே இப்படியான திரிபுகளுக்கு ஆட்பட வேண்டாமேன்னு சும்மா இருந்துட்டேன்.
//
என்ன தல இப்படி எழுதறானுங்க, திரிக்கிறாங்க அப்படிங்கறதுக்காக சாதீயத்துக்கு எதிரான குரலை ஒலிக்காமல் இருக்கலாமா? குரல்கள் ஒலிக்க கூடாது என்பதில் அவர்களில் வெற்றி பெறுகிறார்களே நீங்கள் கவனமாக தவிர்ப்பதனால் :-(

said...

//அண்ணன் சீமாச்சு...க்கு ஏன் இப்படி எரியுதுன்னு தெரியலை. மொதல்ல.. விமர்சனத்தை விமர்சனமா.. கருத்தை கருத்தா மட்டும் பாக்க பழகுங்கன்னு சொல்லத்தோனுது. அதை விட்டு தனிமனித தாக்குதல்/குடும்ப தாக்குதல்ன்னு போக வேண்டாம்.//

அதே மாதிரி படத்த படமா மட்டும் பாருங்கடே..அதவிட்டிட்டு அவன் மலம் என்ன கலரு, என்ன மாதிரின் மணக்குதுனு ஆராயதீங்கடே..

said...

//அதே மாதிரி படத்த படமா மட்டும் பாருங்கடே..அதவிட்டிட்டு அவன் மலம் என்ன கலரு, என்ன மாதிரின் மணக்குதுனு ஆராயதீங்கடே..//

அது கொடக்கட்டும் டே மூதி.. மொதல்ல மொகத்த காட்டுடே..!

said...

//அது கொடக்கட்டும் டே மூதி.. மொதல்ல மொகத்த காட்டுடே..!//

தல டென்ஷன் ஆகதீங்க. பா.க.ச சங்கம் போயி இன்னொரு பா.க.ச (க - கடுப்பேத்துபவர் சங்கம் ஆராம்பிக்கலாம் போல இருக்கே :)) ).

மேலேயுள்ள பின்னூட்டம் உங்களுக்கு இல்ல. பதிவ எழுதி சாதியா ஆதாயம் தேடுபவருக்கு.

//சினிமேவே வாழ்க்கை, சினிமாக்காரனே தலைவன், சினிமாவில் வரும் விசயங்களே உலக நீதின்னு நினைக்கறது என்னைக்கு மக்களிடமிருந்து போகுதோ அன்றைக்கு தான் நாடு உருப்படும்!//
இதுதான் என் நிலைபாடும். சினிமா, சாதின்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளியே வாங்க. உலகத்தில் கத்துக்கொள்ள எவ்வளவோ விசயங்கள் இருக்கு. வாழ்க்கை என்பது சாதிய குழாய்யடி சண்டைகளில் தொலைப்பதற்கு அல்ல.

நான் இங்க அட்வைஸ் குடுக்கல அவ்வளவுதான். இந்த குழாய்யடி சண்டைகள் அரசியல் அடிபொடிகளுக்கும், தலைவர்களுக்கும் வாழ்வாதார பிரச்சனைகள். இவர்கள் என்றும் இதை முடிவுக்கு கொண்டுவரமாட்டார்கள். இதில் நீங்கள் உங்கள் வாழ்கையை தொலைக்காதீர்கள். ஆசிப் மாதிரி புதிய விடியலை தேடும் கதிரவனாக இருக்க பாருங்கள். இல்லை எனக்கு குப்பைய கிளரும் கோழியாகதான் இருக்க விருப்பம் எனில் "Live your Life in your dirty Way"


//அது கொடக்கட்டும் டே மூதி.. மொதல்ல மொகத்த காட்டுடே..!//

இது என்னங்க இப்படி மெரட்டுரீக?..

;))))
பாருங்க ஸ்மைலி போட்டுட்டேன்.( இது சூப்பர் உள்குத்தால இருக்கு).

said...

அன்பு விவன்னியன்,
நீங்க சொன்ன குட்டிரேவதியின் முழு நேர்முகத்தையும் பார்த்தேன். அதைத் தெரிந்தெடுத்து என்னைப் பார்க்கச் சொன்னதற்கு நன்றி!!

தன்னுடைய சமூகத்துக்கு அவங்க என்ன பங்கு ஆற்றிருக்கிறாங்க என்பது எனக்குத் தெரியாது. அவங்க ஒரு கவிஞர் என்பது மட்டும் தான் எனக்குத் தெரியும்.

அவங்களுடைய வயதுக்கும், அனுபவத்துக்கும், கல்விக்கும் இன்றைய கருத்து அதுவாகும் பொருட்டு அதை நானொன்றும் விமர்சிப்பதற்கில்லை... இது போன்ற கருத்துக்கள் அவங்க அனுபவங்களைப் பொறுத்து மாறுபடும் தன்மையுள்ளது. மற்றபடி.. குட்டிரேவதியே சொல்லிட்டாங்கன்னா அதுதான் உண்மையென்று ஏற்றுக்கொள்ளும் மனோபாவமும் எனக்கில்லை..

அவங்க கருத்து அவங்களுக்கு...

அது சரி இதை எதுக்கு என்னைப் பார்க்கச் சொன்னீங்க?

அன்புடன்,
சீமாச்சு

said...

அன்பின் குழலி,

//நீங்க தான் சிங்கப்பூரில டாலர்-ல சம்பாதிக்கிறீங்களே...//
எனது முந்தையப் பின்னூட்டத்தின், இந்த வரிகளின் பின்னால் நான் சுட்ட நினைத்தது நிறைய.. அவற்றில் ஒன்றுகூட இங்குள்ள் உங்கள் நட்பு அனானிகளால் எடுத்துக் காட்டப்படவில்லை...

1. நமது தமிழ்நாடு இந்தியா விட்டு வெளிநாடு சென்றுள்ளீர்களே.. அதனால் உங்கள் பார்வை பரந்து பட்டு இருக்கும் என்று நினைத்தேன்.. இப்பொழுது இல்லாவிட்டாலும் எப்பொழுதாவது அந்த பரந்த பார்வை உங்களுக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

2. சிங்கப்பூரில் டாலரில் சம்பாதிப்பதால்.. உங்கள் செல்வமும் வளர்ந்திருக்கக் கூடும் என்ற எண்ண்மும் தான்.. தனது தன் குடும்பத்தினது தேவைகள் தாண்டி உங்கள் செல்வம் வளர்ந்திருக்குமேயானால்.. அதில் சிறிதாவது.. நீங்கள் கருதும் மிகப் பிற்படுத்த்ப்பட்ட மக்களுக்காக செலவழித்துள்ளீர்களா என்பதுதான் என் கேள்வி..

அதற்கான பதில் (எனக்கு) உங்களிடம் இல்லை என்பதும் இப்பொழுது தெரிகிறது..

மற்றபடி உங்கள் திறமைகளின் பாலோ அல்லது உங்கள் பிறப்பின் பாலோ .. உங்களுக்குச் சிங்கப்பூரில் இருக்க தகுதியிருக்கிற்தா என் ஆராய்வது என் சிந்தனைக்கப்பாற்பட்ட விருப்பம்.

அன்புடன்,
சீமாச்சு

said...

//1. நமது தமிழ்நாடு இந்தியா விட்டு வெளிநாடு சென்றுள்ளீர்களே.. அதனால் உங்கள் பார்வை பரந்து பட்டு இருக்கும் என்று நினைத்தேன்.. இப்பொழுது இல்லாவிட்டாலும் எப்பொழுதாவது அந்த பரந்த பார்வை உங்களுக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
//
ஹி ஹி பரந்து பட்ட பார்வை என்பது பார்ப்பனியத்தை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பது அல்ல.... அந்த வகையில் உங்களை போன்றவர்களின் பரந்துபட்ட பார்வை எனக்கு தேவையில்லை....
2. சிங்கப்பூரில் டாலரில் சம்பாதிப்பதால்.. உங்கள் செல்வமும் வளர்ந்திருக்கக் கூடும் என்ற எண்ண்மும் தான்.. தனது தன் குடும்பத்தினது தேவைகள் தாண்டி உங்கள் செல்வம் வளர்ந்திருக்குமேயானால்.. அதில் சிறிதாவது.. நீங்கள் கருதும் மிகப் பிற்படுத்த்ப்பட்ட மக்களுக்காக செலவழித்துள்ளீர்களா என்பதுதான் என் கேள்வி..

//அதற்கான பதில் (எனக்கு) உங்களிடம் இல்லை என்பதும் இப்பொழுது தெரிகிறது
//
உங்களிடம் சொல்ல வேண்டிய எந்த அவசியமும் இல்லை தேவையும் எனக்கு இல்லை... நானும் நண்பர்களும் இணைந்து செய்யும் கல்வி, மருத்துவ உதவிகள் பல எங்கள் குடும்பத்திற்கே தெரியாது, என் குடும்பத்தினர் வழியாக உதவி கேட்பவர்கள் பற்றி மட்டுமே அவர்களுக்கு தெரியும்.... இதையும் கூட சொல்ல வேண்டிய தேவை எனக்கில்லை.... பதிவுகள் போட்டு அதை விளம்பரம் செய்ய வேண்டிய அவசியமும் எனக்கில்லை. அதே சமயம் உதவிகள் செய்வது எந்தளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு அவர்களின் பிரச்சினைகளை பொதுத்தளத்திற்கு எடுத்து செல்வது. அதையும் நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம்.

said...

இது மாதிரி எந்த வித உள்நோக்கும் கற்பித்துவிடக் கூடாதே என எண்ணித்தான், சேரன் படத்தில் சென்னையில் ஒரு பியூடி பார்லரில்ல் வேலை செய்யும் ஒரு தொழிலாளியாகப் படத்தை ஆரம்பித்திருக்கிறார்.

ஒரு நாவிதனாக அல்ல.

படத்திலும் தன் சாதியைக் காட்டவில்லை.

அன்னைக்கு உடல் சரில்லாது பெற்றோர்களைக் காடும் போது கூட அவர் தந்த ஒரு நாவிதர் எனச் சொல்லி விட முடியாதபடிதான் படத்தை வடிவமைத்திருக்கிறார்.

தொலைபேசியில் பேசும் போது கூட, உனக்கு மட்டும் ஏன்யா இந்த வேலை? எனத் தந்தை அங்கலாய்ப்பதாகக் கூட ஒரு காட்சி வரும்.

இதிலும் சாதியை உட்புகுந்து கண்டுபிடித்து, இல்லாத ஒன்றை இருப்பதாக நிலைநாட்ட எப்படி முடிகிறது உங்களால்?

படம் சொல்ல வந்த கருத்தை மட்டுமே பார்ப்பதுதான் நலம்.

இதற்கு மேல் இதில் சொல்லிக்கொள்ள ஒன்றுமே இல்லை!

said...

விஎஸ்கே அய்யா, ரொம்ப சிரமப்பட்டு சேரனுக்கு பஞ்சர் ஒட்டுறிங்க.... மேலே பின்னூட்டத்திலே போட்டிருப்பேனே பார்க்கலையா?

உங்களிடம் ஒண்ணே ஒண்ணு கேட்கிறேன், நம் சமூகத்தில் சாதி என்ன என்று சொல்லாமல் நம்மால் ஓரளவுக்காவது சாதி கணிக்க முடியாது என்று நினைக்கீறீர்களா?

ஊரில் முடிவிட்டுகிறவர்கள் எந்த சாதியென்று சொல்லாமல் தெரியவில்லையா?, கோவிலில் பூசைசெய்பவர் நான் பிராமணன் என்று போர்டா மாட்டிக்கொண்டுள்ளார்(ஹி ஹி அவர் கழுத்தில் போர்டு மாட்டலைன்னாலும் தோளில் மாட்டியிருப்பதே ஒரு வகையில் போர்டுதான்).... Let's call Spade as Spade

இப்போ இதே படத்தை உங்களை மாதிரி ஒரு மருத்துவரோ(ஏனெனில் இப்போது மருத்துவர் தொழில் மருத்துவர் சாதியை தாண்டி வந்துவிட்டது இன்றைக்கு பிராமணர்கள் முதற்கொண்டு எல்லா சாதியினரும் மருத்துவ சாதியினரின் வைத்திய தொழிலை கையில் எடுத்துவிட்டனர், நாதசுவர தொழிலையும் கையில் எடுத்துவிட்டனர், ஆனால் அதே மருத்துவ சாதியினரின் இன்னொரு தொழிலான சவரம் செய்வதையோ கையில் முடிவெட்டுவதையோ எடுக்கமாட்டார்கள் எத்தனை வறுமை வந்தாலும்) என்னை மாதிரி பொட்டி தட்டுபவனையோ காண்பித்திருந்தால் பேசியிருக்கப்போவதில்லை, ஏனைனில் இந்த தொழில்கள் சாதி தாண்டி வந்துவிட்டது, ஆனால் கூட்டும் தொழிலும், அள்ளும் தொழிலும், வெளுக்கும் தொழிலும், முடி வெட்டுற தொழிலும் சாதி தாண்டி வரவில்லை.

வீட்டிற்கு வந்து பலகை கட்டை போட்டு முடிவெட்டினார் தாத்தா, இரண்டு கண்ணாடிகள் வைத்து சுழல்நாற்காலிபோட்டு தினத்தந்தி செய்தித்தாள் போட்டு கடை நடத்தினார் மகன், இன்று குளிரூட்டப்பட்ட கடை வைத்து நடத்துகிறார் கடைசி தம்பி, இப்படியாகத்தான் தொழிலில் முன்னேற்றம் இருக்கிறதேயொழிய ஒரு பிராமணனோ, வன்னியனோ, தேவனோ முடிவெட்ட போவதில்லை வெகு வெகு சில விதி விலக்குகள் தவிர.... (எழவு விதிவிலக்குகளையே பொதுவாக பேசும் மொள்ளமாறித்தனம் (அ) அறியாமை என்று தான் நீங்கப்போகிறதோ தெரியவில்லை)

said...

//வீட்டிற்கு வந்து பலகை கட்டை போட்டு முடிவெட்டினார் தாத்தா, இரண்டு கண்ணாடிகள் வைத்து சுழல்நாற்காலிபோட்டு தினத்தந்தி செய்தித்தாள் போட்டு கடை நடத்தினார் மகன், இன்று குளிரூட்டப்பட்ட கடை வைத்து நடத்துகிறார் கடைசி தம்பி, இப்படியாகத்தான் தொழிலில் முன்னேற்றம் இருக்கிறதேயொழிய ஒரு பிராமணனோ, வன்னியனோ, தேவனோ முடிவெட்ட போவதில்லை வெகு வெகு சில விதி விலக்குகள் தவிர//

இது செம காமடி :)
"நீ முடி வெட்டித்தான் ஆகணும், வேற தொழில் செய்யக்கூடாதுன்னு யாராவது சொல்லறாங்களா என்ன"?

ஊர்ல, கேடு கெட்ட, சாதிப் பிரச்சன இல்லன்னு சொல்லல. ஆனா, அது இந்த படத்துல இருக்குன்னு சொல்றது ரொம்ப டூ மச்.

வி.எஸ்.கே சொல்ற மாதிரி, சேரன், ரொம்ப மெனக்கெட்டு, அந்த மாதிரி சாதீயச் சாயல் வந்துடக்கூடாதுன்னு சிரமப்பட்டு எடுத்திருக்கர மாதிரி தான் தெரியுது.

முடிவெட்டரதுக்கு பதிலா, ஒரு பஸ் கண்டக்டரா காட்டியிருக்கலாமோ?

சொல்ல வந்த நல்ல விஷயத்த பாக்கணுமே (சினிமா ஆசை கெடுதல். ஈஸீயா பணம் பண்ண முடியாது) தவிர, இந்த மாதிரி திரிச்சு, சாதீயத்த படத்துல கண்ணுக்கு தெரியாதவங்களுக்கும், பாருங்கடே, இப்படியும் இந்த படத்த பாக்கலாம்னு சொல்லி கொடுக்கரது, ரொம்ப கெட்டது.

said...

/////*/ Anonymous said...
//அது கொடக்கட்டும் டே மூதி.. மொதல்ல மொகத்த காட்டுடே..!//

தல டென்ஷன் ஆகதீங்க. பா.க.ச சங்கம் போயி இன்னொரு பா.க.ச (க - கடுப்பேத்துபவர் சங்கம் ஆராம்பிக்கலாம் போல இருக்கே :)) ). ////*/


பா.கா.ச.வுக்கு போட்டி சங்கமா? கடுப்பேத்துறதெல்லாம் எங்க சங்கமே பாத்துக்கும்பு. நீங்க அடங்குங்க...

கண்டவனும் கண்டதும் தல எதிரா ஆரம்பிச்ச பா.க.ச ஒன்னும் பாத்துட்டு சும்மா இருக்காது. ஆங்கமா ஆப்ப சொருகிறும் ஜாக்ரத!!

இது பாலவுக்கு, குழலி சொன்னதேதான் /// இப்படி எழுதறானுங்க, திரிக்கிறாங்க அப்படிங்கறதுக்காக சாதீயத்துக்கு எதிரான குரலை ஒலிக்காமல் இருக்கலாமா? குரல்கள் ஒலிக்க கூடாது என்பதில் அவர்களில் வெற்றி பெறுகிறார்களே நீங்கள் கவனமாக தவிர்ப்பதனால் :-( ////

ரிப்பீட்டு!!


வாழ்க தல! வாழ்க பாகச!!


பாகச,
மதுரை கிளை-2,

said...

//அதற்கான பதில் (எனக்கு) உங்களிடம் இல்லை என்பதும் இப்பொழுது தெரிகிறது..//
சீமாச்சு எப்ப இந்த தாசில்தார் வேலையை விடப்போறீங்க.... எதையும் நீங்கள்தான் (நீங்கள்னா யாரைச்சொல்றேன்னு புரியும்னு நம்புறேன்.) தீர்மானிக்கனும்ங்கிற இந்த சின்ன புத்தியை. தர்மம் பற்றி ஒன்று சொல்வார்கள். வலது கை கொடுப்பதை இடது கை அறியக்கூடாது என்று. நாங்கள் படித்திருக்கிறோம்.... நீங்கள்...

// இப்பொழுது இல்லாவிட்டாலும் எப்பொழுதாவது அந்த பரந்த பார்வை உங்களுக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.//
கண்ணாடி முன் நின்று கேட்க வேண்டிய கேள்வி இது சீமாச்சு. உங்கள் பரந்த பார்வையின் வீச்சு என்னவென்பது பற்றி எனக்கு கொஞ்சம் அனுபவமிருக்கிறது :-)

said...

எதையுமே சாதிக்கண்ணோடு பார்க்கும் உங்களுக்கு, பிராமணர்களைப் பற்றி பேச தகுதியில்லை. சேரனுக்கும் சன் குழுமத்தினருக்கும் ஏற்கனவே பிரச்சனை, அதனால் சேரன் பற்றி யார் விமர்சித்தாலும் அதை எடுத்து தன் பத்திரிகையில் போட்டு பிரபலப்படுத்துவது அவர்களின் வாடிக்கை.
உங்களின் இந்த பதிவும் தினகரனில் வரவேண்டும் என்ற ஆவல் எழுதியுள்ளீர்களா?

said...

எதையுமே சாதிக்கண்ணோடு பார்க்கும் உங்களுக்கு, பிராமணர்களைப் பற்றி பேச தகுதியில்லை. சேரனுக்கும் சன் குழுமத்தினருக்கும் ஏற்கனவே பிரச்சனை, அதனால் சேரன் பற்றி யார் விமர்சித்தாலும் அதை எடுத்து தன் பத்திரிகையில் போட்டு பிரபலப்படுத்துவது அவர்களின் வாடிக்கை.
உங்களின் இந்த பதிவும் தினகரனில் வரவேண்டும் என்ற ஆவல் எழுதியுள்ளீர்களா?

said...

நானும் படத்தை பார்த்தேன்,வசனம் மிகவும் இயல்பானது.எதார்த்தமானது.
எப்படித்தான் இப்படி உங்களால் பார்ப்பதை,கேட்பதை எல்லாம் சாதீய கோணத்தில் பார்க்க முடிக்கிறதோ?.

-கிச்சா.

said...

//அன்பு விவன்னியன்,
நீங்க சொன்ன குட்டிரேவதியின் முழு நேர்முகத்தையும் பார்த்தேன். அதைத் தெரிந்தெடுத்து என்னைப் பார்க்கச் சொன்னதற்கு நன்றி!!//
sss...Seemachu indha anbu ellam venadamae..Atahi Kuzhalikitta vena kaanbinga..naan neenga ellam commnentators thaan athanal avvalavu anbu ellam vendam..erkanavae oruthur ennaikum anbudan..Kuzhali Ayya..appadinu oruthar..ivangal ellam eppadi ellam comment pottu thamizhmanathil evvalavu vasanai peraseiyadargal enru ellorukum tehriyum..Atheppadi muzhu pettiyum parthuvitu naan en parka sonnenga enru kelvi?? neenga nallavara kettavara?? Sadhiyam patri Kutty Revathy pesa villaya..alladhu ungal dinamalar alladhu Somari paarvai filter seidhuvittadha?? Appadiyum velanga villaina Kuzhaliyin adutha thalaippa padeenga..Appadiyum puriyalaina Dondu potteridam German translation panni kettu parunga. Kutty Revathi patri ingaeyum pons pakkathilam link koduthadharku karanam..Kuzhali indha topicum,ponsin sameepathiya thakudalakum similarity therivadanal thaan. Ella prachaniku pinnal ethu olindhu irukiradhu enru paarthaal puriyum..purindhu kolvargalukku mattum..sariyonno??

said...

(வீ)எஸ்.கே. அய்யா ஒரு காட்சி மாயக்கண்ணாடியில் வருவதாக சொல்லியுள்ளார், நான் பார்த்தவரை அது அந்த படத்தில் இல்லை, சிங்கையில் சில நேரம் ஆப்பரேட்டர்களே எடிட்டர்களாகிவிடுவார்கள் , அதனால் அந்த காட்சி பற்றிய சந்தேகம் உள்ளது, அந்த காட்சி சேரனுடையதா? அல்லது (வீ)எஸ்.கே. அய்யாவினுடையதா என்று தெளிவுபடுத்திவிட்டு பின் அந்த பின்னூட்டத்தை வெளியிடுகிறேன்.

நன்றி

said...

குழலி,

உங்க பதிவுக் கண்ணாடி போட்டா .. அட ஆமா எனக்கு கூட எல்லாமே மஞ்சளா தான் தெரியுது .. உங்களுக்கு ரொம்ப நாளாவே இப்படியாமே ? எதைப் பாத்தாலும் மஞ்சள் தானாமே ?

said...

Phew! Cheran is not from forward community, if not you would have painted this movie as an aggression towards low caste.

For once look at things with out your "caste" painted glasses. It seems you are so obsessed with caste system and love looking at every thing in that perspective.

said...

In my opinion the movie is okay when compared to all other recently released movies. There is no violence or double meaning dialogues, sex or any masala. There is no caste or politics in the movie. Also he has given a good advice. What is wrong in it.