பிற்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு தந்தால் என்ன தவறு?: உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வி

பிற்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு தந்தால் என்ன தவறு?: உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வி

டெல்லி: நாட்டில் 52 சதவீதம் வசிக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உயர் கல்வி நிலையங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தால் என்ன, அதில் என்ன தவறு இருக்கிறது என அதிரடியாய் கேள்வி எழுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.

இட ஒதுக்கீட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் அரிஜித் பசாயத், தாக்கர், ரவீந்திரன், தல்வீர் பண்டாரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணை நேற்றும் நடந்தது. அப்போது பிற்படுத்தப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை குறித்த சென்சஸ் விவரங்கள் கூட அரசிடம் இல்லை என இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் ஒருவரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே வாதாடினார்.

அப்போது இடைமறித்த நீதிபதி ரவீந்திரன், அப்படிப்பட்ட சென்சஸ் எதற்கு. பிரச்சனை கணக்கில் இல்லை. உங்களிடம் தான் உள்ளது. இப்படிப்பட்ட கணக்கெடுப்பு நடந்து முடியும் வரை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்கிறீர்களா. இதற்காக வருடக்கணக்கில் அரசு காத்திருக்க வேண்டுமா. இடைக்கால நிவாரணமாக 27 சதவீத இட ஒதுக்கீட்டை தருவதில் என்ன தவறு என்றார்.

மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், நீங்கள் அமெரிக்காவை உதாரணம் காட்டுகிறீர்கள். அங்கே 80 சதவீதத்தினர் வெள்ளையர்கள். 20 சதவீதத்தினர் தான் கருப்பர்களும் பிற இனத்தினரும். இந்தியாவில் நிலைமை அப்படியே தலைகீழ். இங்கே பரம்பரை பரம்பரையாக ஒரு குறிப்பிட்ட 20 சதவீதத்தினர் தான் நாட்டின் எல்லா பலன்களையும் அனுபவித்து வருகின்றனர்.

இப்போது மற்ற 80 சதவீதத்தினரும் பலன்களை அனுபவிக்கட்டுமே.. அதை அனுமதிப்பதில் என்ன தவறு. நாட்டில் பல மாநிலங்களில் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு அமலில் இருக்கத்தானே செய்கிறது. இதை மத்திய அரசும் அமலாக்கினால் என்ன தவறு என்றார்.

அப்போது பேசிய வழக்கறிஞர் சால்வே, யார் யாருக்கு இந்த இட ஒதுக்கீடு என்ற அறிவியல்பூர்வமான விவரம் கூட இல்லை என்றார்.

அப்போது இடைமறித்த தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் கமிஷன் தந்த சாதிகளின் பட்டியலின் அடிப்படையில் தான் இந்த இட ஒதுக்கீடு அமலாக்கப்படவுள்ளது என்றார்.

மாநில அரசுகள் உருவாக்கிய பட்டியலை வைத்து இட ஒதுக்கீடு தருவது அர்த்தமில்லாதது என வழக்கறிஞர் சால்வே கூற, அவருக்கு பதிலளித்த நீதிபதி ரவீந்திரன், நாளை இந்த அரசு ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்தால் அனைத்து ஏழைகள் குறித்த கணக்கெடுப்பும் முடியும் வரை இட ஒதுக்கீடே கூடாது என்பீர்களா, எத்தனை சதவீத ஏழை மக்கள் உள்ளனர் என்ற விவரம் இருக்கும்போது அது தொடர்பான அறிவியல்பூர்வமான பட்டியலுக்கு அவசியம் என்ன வந்தது என்றார்.

நன்றி தட்ஸ்டமில்.காம்

14 பின்னூட்டங்கள்:

said...

அப்பாடி.. இப்பதான் ஒரு ஒளிக்கீற்றே தெரியுது... நல்லது நடக்கட்டும்..

said...

எல்லா இரவுகளும் விடியும்!
எல்லா தடைகளும் உடையும்!

இது உற்சாகத்தை தரும்... ஆனால், நாம் நம் போராட்டத்தைத் தொடர்ந்தால்தான் வெற்றிகிட்டும்.
பதிவு செய்த அண்ணன் குழலிக்கு நன்றி!

said...

வக்கீலின் கேள்விகள் அப்பட்டமான அநீதிக் கேள்விகள்.1950 லேயிருந்து கொடுத்திருக்கப் பட வேண்டிய இட ஒதுக்கீடு கொடுக்கப் படவேயில்லை.இட ஒதுக்கீடு கொடுக்கப் பட்ட போதே இவர் கேட்கும் பல கேள்விகள் கேட்கப் பட்டு,கல்வியிலும் சமுதாயத்திலும் பின் தங்கியவர்கள் என்று ஒப்புக் கொள்ளப் பட்டுப்,பொருளாதாரத்தில் பின்தங்கிய என்பது ஏற்றுக் கொள்ளப் படாமல் சட்டம் நிறை வேற்றப் பட்டது.

சட்டம் இயற்ற வேண்டியது பாராளுமன்றத்தின் வேலை.அந்தப் பாராளுமன்றம் எதிர்ப்பே இல்லாமல் இயற்றிய,மறுக்கப் பட்டு வந்த உரிமையை நிலை நாட்ட இய்ற்றப் பட்டச் சட்டத்திலே குறுக்கு சால் ஓட்டி,உச்ச நீதி மன்றத்திலே உள்ள சில் உயர் சாதி வெறியர்கள் மூலம் சட்டத்தை மாற்றப் பார்க்கிறார்கள்.

said...

நீங்க முந்திக்கிட்டீங்க... இந்த தடவை... பாருங்க நீதிபதிகதான் வாதாடுராங்க... நம்ம வக்கீல்க என்ன பன்னுராங்கன்னு தெரியல. ஆனா இந்த தடவை பராசரன், ராம் ஜெத்மலானி ந்னு நம்ம பக்கம் கொஞம் ஸ்ட்ராங்காத்தான் தெரியுது. நான் இவ்வளவு நாளா சொல்லுற விசயம் தான் அவங்களுக்கு தெரியமாட்டீங்குது. அது என்னன்னா.. ரிசர்வேசன் குடுத்த சில பத்தாண்டுகளில் மெரிட் கண்ணாபின்னான்னு உயருமே ஒழிய குறையாது. தமிழ்நாட்டு மெடிகல் கட் ஆஃப் ஒரு நல்ல உதாரணம்!

said...

Hope they act fast and lift the interim order soon that stops reservation from going forward.

said...

கொளவி சார்,

பாட்டாளி மக்கள் கட்சியும் அதில் உள்ள வன்னியர்களும் இந்த பிற்பட்டோரில் அடக்கமா சார்?

ஏன் கேட்கிறேன் என்றால், மற்ற பிற்பட்டோருக்கு சரியா மரம் வெட்டத் தெரியலை. அதான் உங்களிடம் சொன்னால் மத்த ஜாதிகளுக்கும் நீங்களும் உங்க பாமகவும் டிரெய்னிங் கொடுப்பீங்களேன்னு!

said...

ஹேய்ய்ய்ய்ய் பின்னூட்ட பால வந்துட்டாரோய்ய்ய்ய்

said...

குழலி,

வாதம் செய்யும்போது பார்க்க சந்தோஷமாத்தான் இருக்கும், ஆனால் தீர்ப்பு வரும்போது அதிர்ச்சியாக இருக்கும். ஜெயலலிதா வழக்குகளில் அன்றாடம் நீதிமன்றம் கேட்ட கேள்விகளால் புளகாங்கிதமடைந்ததும், பிறகு தீர்ப்பைப் பார்த்து நொந்துகொண்டதும் நினைவுக்கு வருகிறது.

said...

குழலி,
இடஒதுக்கீட்டின் அளவு 50 சவீதத்திற்கு மேல் போகக்கூடாது என்று ஒரு சட்டம் இருக்கிறது.அப்படியென்றால் மீதி 50 சதவீதத்தில் உயர்சாதி என்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள்,கிட்டத்தட்ட 20 சவீதம் பேர்,தாரளமாக இடம்பிடிக்கலாமே?

பின் ஏன் எதிர்க்கிறார்கள்?

said...

//Kasi Arumugam - காசி said...
குழலி,

வாதம் செய்யும்போது பார்க்க சந்தோஷமாத்தான் இருக்கும், ஆனால் தீர்ப்பு வரும்போது அதிர்ச்சியாக இருக்கும். ஜெயலலிதா வழக்குகளில் அன்றாடம் நீதிமன்றம் கேட்ட கேள்விகளால் புளகாங்கிதமடைந்ததும், பிறகு தீர்ப்பைப் பார்த்து நொந்துகொண்டதும் நினைவுக்கு வருகிறது.
//

ரிப்பீட்டே!!! இந்த வழக்கின் தொடக்க கட்ட வாதங்களின் போது குறிக்கிட்ட நீதிபதிகள் இட ஒதுக்கீட்டீன் கால அளவு குறித்து தெரிவித்த கருத்துகளைப் பார்த்தால் உங்கள் அச்சம் நியாமனாதகவே இருக்கிறது காசி.

ஒரு சிறுதுளி நம்பிக்கையை நீதிபதிகளின் இந்த கேள்விகள் தந்திருக்கிறது என்பது மட்டுமே உண்மை

said...

ஒரு பள்ளிச் சிறுவனை கேட்டால் கூட இந்த பிரச்சினைகளுக்கு இதே போன்ற எதிர் கேள்வியைத்தான் கேட்டிருப்பான்.

இதற்கு இவ்வளவு போராட்டங்கள், இழுப்படிப்பு, காலம் தாழ்த்துதல் என ...

ஆதிக்க கூட்டங்களின் கொட்டத்தை அடக்கி எளியவர்களுக்கு உரிய பங்கை நீதிபதிகள் வழங்குவார்கள்.

பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி குழலி ஐயா.

said...

//வாதம் செய்யும்போது பார்க்க சந்தோஷமாத்தான் இருக்கும், ஆனால் தீர்ப்பு வரும்போது அதிர்ச்சியாக இருக்கும். //

ரிப்பீட்டே .. :(

said...

குழலி,

காசி ஆறுமுகம், முத்துகுமரன் சொன்ன கருத்துடன் உடன்படுகிறேன். சாதிமேலாதிக்க எண்ணம் கொண்ட ஊடகங்களின் கருத்துக்களில் மூழ்கிப்போகாமல் நீதியை நிலைநாட்ட நீதிபதிகள் முன்வருவார்களா? இல்லை சாதிதீட்டிற்கு ஆதரவாக இடப்பங்கீடு கொள்கைக்கு தடை விதிப்பார்களா என்பதை வழக்கின் தீர்ப்பு சொல்லும்.

நீதிபதிகளின் கேள்விகளில் எழும் நியாயம் தீர்ப்பிலும் எதிரொலிக்கட்டும்!

said...

குழலி,

தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் ஒரு தலித். அதனால் அவரால் இந்தப் பிரச்சனையை சரியாக அணுக முடிகிறது. ஆனால் சில மேல்தட்டு நீதிபதிகள் "50 ஆண்டு காத்திருந்தீர்கள், இன்னும் சில ஆண்டுகள் காத்திருந்தால் என்ன ?" என்று சென்ற முறை கேட்ட கேள்வி ஞாபகத்தில் வருகிறது.

நீதித்துறையில் இடஒதுக்கீட்டின் தேவை அவசியம் என்பதை இந்த இரண்டு விடயங்களும் தெளிவுபடுத்துகின்றன