ஓட்டு என்னும் செருப்பால் திமுக-காங்கிரசை அடிக்க நான் தயார்...

இம்முறை வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தோற்க வேண்டுமென்பதற்காக அதற்கு எதிராக என் வாக்கு என்னும் செருப்பால் அந்த கட்சிகளை அடிக்க தயாராகிறேன்.

காங்கிரஸ் புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் ஏன் திமுக? திமுகவை மட்டும் செருப்பால் அடிப்பதேன்? திமுக மட்டும் தான் குற்றவாளியா? கடைசி நாள் வரை காங்கிரசோடு இழைந்துவிட்டு ஓடிப்போன பாமக, ஈழத்தமிழர்களுக்கு எதிராக கருத்து கூறிய அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள மதிமுக இவர்களையெல்லாம் எதால் அடிப்பது?

இயல்பாக எழும் கேள்விகள் தான்! ஏன் திமுக என்றால் தமிழ் பெயரை சொல்லி ஓட்டு வாங்கி தின்றது திமுக தான்

பாமக என்ற கட்சி ஒரு சாதிகட்சியாக வன்னியர் கட்சியாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது, அல்லது
அப்படியாக நடந்துகொள்கிறது! அதற்கான விளைவாக வன்னியர் அல்லாத பிற சாதியினர் பெரும்பாலும் பாமகவுக்கு வாக்களிப்பதில்லை, அதன் நிலைப்பாட்டுக்கான பின் விளைவை அது பெறுகின்றது... அதே போன்றே விடுதலை சிறுத்தைகள் கட்சியும்.

அதிமுக தலைமையின் தமிழர் விரோத நடவடிக்கைகளுக்காக தமிழர் ஆதரவு நிலைப்பாட்டுடன் இருப்பவர்கள் அதிமுகவுக்கு வாக்களிப்பதில்லை. முற்போக்காளர்கள் பெரும்பாலும் அதிமுகவிற்கு எதிராகவே உள்ளனர். அதிமுக தலைமையின் நிலைப்பாட்டிற்க்கு அது அதன் பின் விளைவை எதிர்கொள்கிறது.

பாமக, விடுதலை சிறுத்தைகள், அதிமுக என அத்தனை கட்சிகளும் அதன் நிலைப்பாட்டிற்கான பின் விளைவுகளை எதிர்கொள்ளும் போது தமிழ், தமிழர், முற்போக்கு மற்றும் தமிழர் பாதுகாப்பு என்ற காரணத்திற்காக தமிழ் இன ஆதரவு நிலைப்பாடு மற்றும் முற்போக்காளர்கள் திமுக ஆதரவு எடுத்திருந்தனர்கள் (கலைஞரின் ரசிக கண்மணிகள், கழக பிரியாணி குஞ்சுகள், கழகத்தின் சார்பில் காண்ட்ராக்ட் பெற்று வாழும் உடன்பிறப்புகளையெல்லாம் இந்த கணக்கில் சேர்க்கவில்லை) இவர்களின் வாக்குகளையும் எவ்வித பலனும் எதிர்பாராமல் இவர்கள் செய்கின்ற திமுக ஆதரவு பிரச்சாரங்களை(சென்ற முறை நானே பல கட்டுரைகள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் திமுக ஆதரவு பேச்சுகளை செய்தேன்) இது நாள் வரை பெற்று வந்த திமுக ஈழத்தமிழர்களை அழித்துக்கொண்டிருக்கும் பாசிச காங்கிரஸ் இயக்கத்துடன் கூட்டணி சேர்ந்து அக்கூட்டணியை தாங்கி பிடித்து ஈழத்தமிழ் போராட்டத்தை கொச்சை படுத்திக்கொண்டிருக்கும் திமுகவுக்கு என்ன செய்ய போகிறோம்.

வேறு வழியில்லை இருப்பதில் இவர் பரவாயில்லை என்று மீண்டும் சூரியனுக்கும் கைக்கும் ஓட்டு குத்தி கலைஞர் செய்தவைகளுக்கு அங்கீகாரம் வழங்க போகிறோமா? அல்லது தமிழர்கள் பெயரை சொல்லி வாக்கு வாங்கி தமிழர்களுக்கு எதுவும் செய்யாமல் தமிழர்களின் உரிமை பறிபோனபோது அதிகாரத்தை மட்டும் சுவைத்து கொண்டிருந்த மலேசிய இந்தியன் காங்கிரசுக்கு தமிழ் மக்கள் அடையாள தோல்வி தந்ததை போல கலைஞருக்கும் திமுக-காங்கிரசுக்கு தோல்வியை தரப்போகிறோமா?

தமிழ் பெயரை சொல்லி ஓட்டுவாங்கி தின்ற திமுக அதே தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது எனில் மோகன் கந்தசாமி பாணியில் சொல்வதென்றால் விபச்சாரியிடம் படுத்துவிட்டு காசு கொடுக்காமல் ஓடுவதற்கு சமம்.

பின்குறிப்பு
--------------
வழக்கம்போல இதற்கும் என் சாதி முத்திரையும் பாமக ஆதரவு முத்திரையும் குத்தப்படும், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பல சந்தர்ப்பங்களில் இம்மாதிரியான முத்திரைகள் வாங்கித்தான் இணையத்தில் வளையவருகிறேன். என்ன ஒவ்வொரு முறையும் யாருக்கு ஒவ்வாத கருத்தை சொல்கிறேனோ அவர்கள் குத்துவார்கள்.

எனக்கு ஓகேப்பா சாதி முத்திரை கட்சி முத்திரை குத்துவிங்க, கலைஞரை கிழி கிழியென்று கிழித்த தியாகி முத்துகுமாருக்கு என்ன முத்திரை குத்தப்போறிங்க?

பாரி.அரசு அவரின் ஒரு பதிவில் சொல்லியுள்ளார் கலைஞரை தாக்கும் அளவிற்கு இராமதாசை தாக்காததற்கு இணைய புரட்சியாளர்கள் பலரும் வன்னியர் என்பதனால் என்று, கிட்டத்தட்ட மக்கள் தொகையில் 20% வன்னியர் சாதி(உள்ளதாக சொல்லப்படும்) என்பதால் கொலைகாரன்களில் 20% மொள்ளமாறிகளில் 20% குடிகாரன்களில் 20%(குடிகாரன்களில் இதற்கும் மேலாக இருக்கும்) இருப்பதை போல இணைய புரட்சியாளர்களில் 20% இராமதாஸ் வாங்கி கொடுத்த இடஒதுக்கீட்டில் படித்து இணையத்தை நோண்டுபவர்களாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

மருத்துவர் இராமதாசை தாக்கி இந்த விசயத்தில் நான் எழுதிய கட்டுரைகள்

கலைஞர், மக்கள் தொலைகாட்சி உரிமையாளர்கள்

ஈழத்தமிழர் பிரச்சினை தொடரும் பாமகவின் இரட்டை வேடம்

கலைஞரின் ரசிக குஞ்சாக, கழக பிரியாணி குஞ்சாக, காண்ட்ராக்ட் பெற்று வயிறு வளர்க்கும் உடன்பிறப்பாக இல்லாமல் கலைஞரையும் திமுகவையும் தமிழுக்காக, தமிழ் இனத்திற்க்காக ஆதரிப்பவர்களே ஒரு நிமிடம் யோசியுங்கள் தமிழினத்தை கை கழுவிய திமுகவை என்ன செய்ய போகிறீர்கள் இந்த தேர்தலில்?

50 பின்னூட்டங்கள்:

said...

//முற்போக்காளர்கள் பெரும்பாலும் அதிமுகவிற்கு எதிராகவே உள்ளனர்.//

Good Joke!

said...

திமுகவை இப்போது விமர்சிப்பவர்களுக்கு அப்போதே அது
அப்படித்தான் என்பதை ஏன் பகுத்தறிய முடியவில்லை.

1999ல் பாஜகவுடன் கூட்டு,2004ல் காங்கிரசுடன் கூட்டு - இதெல்லாம்
யாருக்காக? கொள்கைக்காகவா இல்லை பதவிக்காகவா?.காலத்தின்
கட்டாயம் என்று நாளைக்கே திமுக
பாஜகவை ஆதரிக்கலாம்.

said...

உங்களை நெனைச்சா பாவமாவும் இருக்கு. பரிதாபமாவும் இருக்கு கொழலி. சொந்த சாதியையும், அந்த கட்சியையும் விட்டு தரமுடியல. அதனால திமுக தோக்கணும்.

மாம்பழம் கூட்டணியில் இருக்குன்னு சொல்லிட்டு அதிமுகவுக்கு ஓட்டு கேட்கமுடியலை. அப்படி கேட்குறதா இருந்தா நாலு வருஷமா எழுதுன பதிவுகளை அழிக்கணும்.

Piss of you Kuzhali

said...

//உங்களை நெனைச்சா பாவமாவும் இருக்கு. பரிதாபமாவும் இருக்கு கொழலி. சொந்த சாதியையும், அந்த கட்சியையும் விட்டு தரமுடியல. அதனால திமுக தோக்கணும்.

மாம்பழம் கூட்டணியில் இருக்குன்னு சொல்லிட்டு அதிமுகவுக்கு ஓட்டு கேட்கமுடியலை. அப்படி கேட்குறதா இருந்தா நாலு வருஷமா எழுதுன பதிவுகளை அழிக்கணும்.

Piss of you Kuzhali

//
சரி சரி பிரியாணி கிடைச்சுதா கட்டிங் கிடைச்சதா போ போய் ஓட்டு கேட்க ஆரம்பி, மதுரையில் அஞ்சாநெஞ்சனாமே, அங்கே போனா இன்னும் ஒரு பாக்கெட் எக்ஸ்ட்ரா கோழி பிரியாணியும் குவார்ட்டரும் கிடைக்கும் கெளம்பு கெளம்பு ஓட்டு கேட்க....

said...

நடுநிலைவாதி குழலி வாழ்க. :)

நான் எப்போதும் காங்கிரஸ் விசுவாசி தான் - திருமா
http://thinkcongress.blogspot.com/2009/04/blog-post_13.html

said...

then tell who gave helping hand to eelams..
does eelam alone the problem that is to be considered when voting for indian parliment?

no need to think of who did what to india, tamilnadu ???

said...

சரி சரி பிரியாணி கிடைச்சுதா கட்டிங் கிடைச்சதா போ போய் ஓட்டு கேட்க ஆரம்பி, மதுரையில் அஞ்சாநெஞ்சனாமே, அங்கே போனா இன்னும் ஒரு பாக்கெட் எக்ஸ்ட்ரா கோழி பிரியாணியும் குவார்ட்டரும் கிடைக்கும் கெளம்பு கெளம்பு ஓட்டு கேட்க....

funny kuzhali.. ! i am just thinking how u might have wrote during 2004 elections since PMK was there in DMK alliance

said...

Kuzhali,

The one thing I like about your blog is you accept your mistakes and wish to move forward. As I said previously you have guts. Whatever right or wrong, you are supporting for the right cause and it doesn't matter if everyone calls you a friend of PMK or not. Vazthukkal. This time around, we have a complex groups fighting against each other and we are in the process of choosing the best of the worst and for now ADMK, MDMK and PMK are the best of the worst, at least they might help the Eazham makkal.

Continue your crusade Kuzhali!

said...

//விபச்சாரியிடம் படுத்துவிட்டு காசு கொடுக்காமல் ஓடுவதற்கு சமம்.//
இவர்கள் வார்த்தை விபச்சாரிகள்.

said...

Reflections சொல்வதுடன் நான் முழுதும் உடன்படுகிறேன்.

குழலியிடம் உள்ள, தன் தவறை ஒப்புக் கொள்ளும் தைரியமும், முன்னோக்கும் இயல்பும் பாராட்டுக்குரியவை.

said...

குழலி,
உங்களுக்குள்ள கோபம் எனக்கும் இருக்கிறது .இருந்தாலும் சில கேள்விகள்.

1. திமுக ,காங்கிரஸ் மட்டும் தானா ? எப்போதும் காங்கிரஸ் விசுவாசியென பிரகடனப்படுத்தியிருக்கும் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் சேர்த்தி இல்லையா?

2.பாமக-வும் விடுதலை சிறுத்தைகளும் மோதும் தொகுதியில் யாருக்கு ஓட்டு போட வேண்டும்?

3. காங்கிரசோடு இருப்பதால் திமுக-வுக்கு ஓட்டு இல்லை .சரி . பாமக காங்கிரசோடு ஈழப்பிரச்சனையில் கோபித்துக்கொண்டு எதிர் அணிக்கு போனதா ? அல்லது எதிர் அணியில் தொகுதி அதிகமாக கிடைத்தது என்பதற்காக போனதா ? காங்கிரஸ் அணியில் அதிக தொகுதிகள் கிடைத்திருந்தாலும் அல்லது திமுகவோடு மோதல் இல்லாதிருந்திருந்தாலும் பாமக ஈழ பிரச்சனைக்காக காங்கிரசின் எதிர் அணிக்கு போயிருக்குமா ? இல்லையென்றால் திமுகவை விட ,விடுதலை சிறுத்தைகளை விட பாமக எந்த வகையில் உசத்தி ?

4.சுபவீரபாண்டியன் ,சீமான் போன்ற தமிழுணர்வாளர்கள் திமுக -வும் அதிமுக -வும் மோதும் தொகுதியில் அதிமுக-வுக்கு ஓட்டுப்போடுவார்கள் என நம்புகிறீர்களா?

said...

ஜோ உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்கும் முன் உங்களிடம் ஒரு கேள்வி ஈழப்பிரச்சினை வராமல் தனித்தனியாக திமுக, பாமக எந்த கூட்டணியும் இல்லாமல் மோதினால் உங்கள் ஓட்டு யாருக்கு? நீங்கள் திமுகவுக்கு என்றால் ஏன் பாமகவுக்கு இல்லை? பாமக என்றால் ஏன் திமுக இல்லை.. இதில் உள்ளது உங்கள் அத்தனை கேள்விக்குமான விடை

said...

//ஜோ உங்கள் கேள்விகளுக்கு விடையளிக்கும் முன் உங்களிடம் ஒரு கேள்வி ஈழப்பிரச்சினை வராமல் தனித்தனியாக திமுக, பாமக எந்த கூட்டணியும் இல்லாமல் மோதினால் உங்கள் ஓட்டு யாருக்கு?//

திமுக-வுக்கு !

பாமகவும் ,அதிமுக -வும் மோதினால் பாமக-வுக்கு.

//நீங்கள் திமுகவுக்கு என்றால் ஏன் பாமகவுக்கு இல்லை? //

நான் பிறந்து வளர்ந்த இடம் ,சூழலில் பாமகவின் அரசியல் எந்த தாக்கத்தையும் ,தேவையையும் ஏற்படுத்தவில்லை. அது போல பாரம்பரியமாக நான் திமுக உணர்வுள்ளவன்(தனிபட்ட பலன் சாராத பல காரணங்களுக்காக) என்பதை மறைக்க தேவையில்லை.

அதிமுக-வுடம் மோதினால் பாமகவுக்கு ஓட்டு ஏனென்றால் ,அதிமுக-வை விட பாமக என்னுடைய கொள்கைகளுக்கு சற்றேனும் அதிகமாக ஒத்து வரும் கட்சி என்பதால்.

said...

நானும் தயார், சீக்கியனை பார்த்தும் நமக்கு சுரணை வருவது கடினம் தான் சாமி.

said...

ஓட்டு என்னும் செருப்பால் திமுக-காங்கிரசை அடிக்க நான் தயார்...//


ஆமாம் , ஆமாம் - அப்பதான் பாமக செயிக்கும்.

சந்தடி சாக்குல தமிழ்நாட்டுல 20% வன்னியராம். மீதி எல்லாம் தலைவா?

அப்புறம் இராமதாஸ் வாங்கிக் கொடுத்த இட ஒதுக்கீடா ? இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லை?

அதிமுக கிட்ட அடிமையா கிடப்பாங்க. அவுங்களுக்கு ஓட்டுப் போடுங்க. நாடு சுபிட்சம் பெறும். அதுக்காகவாது "ஓட்டு என்னும் செருப்பால் திமுக-காங்கிரசை அடிக்க நான் தயார்..." என்று சொல்லி வைப்போம். கூட்டணி தர்மம் அல்லவா?

said...

திமுக-பாமக என்னும் போது பாமகவின் கொள்கைகள் உங்களுக்கு ஒத்து வந்தாலும் கூட திமுக பக்கம் நிற்க உங்களுக்கு பாமகவின் அரசியல்(உடைச்சி சொன்னால் பாமகவின் சாதி அரசியல்) எந்த தாக்கமும் ஏற்படுத்தாதல் பாமக உங்களின் முதல் preference இல் இல்லை... பாமக எவ்வளவு தான் உங்கள் கொள்கைக்கு ஒத்து வந்தாலும்திமுகவுக்கு தான் முதலிடம்... அப்போ தமிழ் உணர்வாளர்களின் ஓட்டு வாங்கி தின்பது யார்? திமுக வா? பாமகவா?

ஒரு உதாரணத்துக்கு திமுக என்பது காசநோய்க்கான மருந்து பாமக என்பது இதயநோய்க்கான மருந்து... காசநோய் குணமாகவில்லையென்றால் காசநோய்க்கான மருந்தான திமுகவை திட்டுவீர்களா? இதயநோய்க்கான மருந்தான பாமகவை திட்டுவீர்களா?

இரண்டாவதாக பாமக அதன் சாதி அரசியலால் உங்களை போன்றவர்களின் ஓட்டை இழக்கிறது... ஆனால் திமுக தமிழ் என்பதற்காக உம் போன்றவர்கள் ஓட்டை வாங்குகிறது.

திமுக இப்போது உங்கள் கொள்கைக்கு எதிராக செயல்படும்போது என்ன செய்ய வேண்டும்...இல்லை இப்போதும் நான் திமுகவை தான் ஆதரிப்பேன் என்றால் இதுவரை திமுகவை ஆதரித்தது கொள்கைக்காக என்பது பொய்யா? இங்கு நீங்கள் என்று நான் குறிப்பிடுவது நீங்கள் என்றல்ல பொறுந்தும் அத்தனை பேருக்கும்.

இனி சொல்கிறேன் அனைத்துக்கும்
//1. திமுக ,காங்கிரஸ் மட்டும் தானா ? எப்போதும் காங்கிரஸ் விசுவாசியென பிரகடனப்படுத்தியிருக்கும் திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் சேர்த்தி இல்லையா?
//
விடுதலை சிறுத்தை சேர்த்தி இல்லை, ஏனெனில் பாமகவின் அரசியலை ஆதரிக்க நான் எத்தனை காரணங்கள் சொல்கிறேனோ அதைவிட 10 மடங்கு காரணம் திருமாவிற்கு இருக்கின்றது... திருமாவின் அரசியலை தமிழ் என்பதைவிட தலித் அரசியலுக்காகவே ஆதரிக்கிறேன்... திருமா வெற்றிபெருவது தலித் அரசியலுக்கான அங்கீகாரம்...

2.பாமக-வும் விடுதலை சிறுத்தைகளும் மோதும் தொகுதியில் யாருக்கு ஓட்டு போட வேண்டும்?
திருமா வெற்றிபெருவது தலித் அரசியலுக்கான அங்கீகாரம்... பாமக வை விட விசிகளுக்கே இதில் முன்னுரிமை...

3. காங்கிரசோடு இருப்பதால் திமுக-வுக்கு ஓட்டு இல்லை .சரி . பாமக காங்கிரசோடு ஈழப்பிரச்சனையில் கோபித்துக்கொண்டு எதிர் அணிக்கு போனதா ? அல்லது எதிர் அணியில் தொகுதி அதிகமாக கிடைத்தது என்பதற்காக போனதா ? காங்கிரஸ் அணியில் அதிக தொகுதிகள் கிடைத்திருந்தாலும் அல்லது திமுகவோடு மோதல் இல்லாதிருந்திருந்தாலும் பாமக ஈழ பிரச்சனைக்காக காங்கிரசின் எதிர் அணிக்கு போயிருக்குமா ? இல்லையென்றால் திமுகவை விட ,விடுதலை சிறுத்தைகளை விட பாமக எந்த வகையில் உசத்தி ?
முதல்பத்தியிலேயே விடை இருக்கிறது, ஆனால் இந்த முறை பாமக காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்தால் தோற்கவேண்டுமென்றே விரும்பினேன், அதை மாற்றம் வலைப்பதிவிலும்பதிவு செய்துள்ளேன்...

4.சுபவீரபாண்டியன் ,சீமான் போன்ற தமிழுணர்வாளர்கள் திமுக -வும் அதிமுக -வும் மோதும் தொகுதியில் அதிமுக-வுக்கு ஓட்டுப்போடுவார்கள் என நம்புகிறீர்களா?
திமுகவை ரசிக கண்ணோட்டத்தில் ஆதரித்தார்களா? வேறு வழியில்லாமல் ஆதரித்தார்களா? அல்லது உண்மையிலேயே கொள்கைக்காக ஆதரித்தார்களா என்பதை பொறுத்து... நான் நிச்சயம் இந்த முறை திமுகவுக்கு ஓட்டு போடமாட்டேன்... திமுக செய்ய தவறியதற்காக செருப்பால் அடிக்க வேண்டுமென்பதற்காக...

said...

உடன்பிறப்பு பெயரில் பின்னூட்டம் போட்ட பிரியாணி குஞ்சே இன்னும் பிரியாணி கிடைக்கலயா?

said...

உடன்பிறப்பு பெயரில் பின்னூட்டம் போட்ட பிரியாணி குஞ்சே இன்னும் பிரியாணி கிடைக்கலயா?
/

இன்னும் இல்லை . ஆனா உங்களுக்கு போயஸ் தோட்டத்துலேர்ந்து கெடச்சுடுச்சி போல இருக்கு? அதான் சத்தம் அதிகம் போல.

ஆனா நாங்க எல்லாம் பிரியாணிக்கு முந்தி விரிக்கிற விபச்சாரிகள் கெடயாது.

said...

//திமுக-பாமக என்னும் போது பாமகவின் கொள்கைகள் உங்களுக்கு ஒத்து வந்தாலும் கூட திமுக பக்கம் நிற்க உங்களுக்கு பாமகவின் அரசியல்(உடைச்சி சொன்னால் பாமகவின் சாதி அரசியல்) எந்த தாக்கமும் ஏற்படுத்தாதல் பாமக உங்களின் முதல் preference இல் இல்லை//

அதிமுகவைக் காட்டிலும் பாமக கொள்கையளவில் ஒத்து வருகிறது என்று சொன்னேனே தவிர திமுகவை விட அல்ல. வெறும் ஈழப்பிரச்சனையை எடுத்துக்கொண்டால் கூட தொடக்கத்தில் திமுக-வை விட பாமக-வுக்கு கூடுதல் அக்கறை இருக்குமோ என நினைத்து பின்னர் அப்படி ஒன்றும் இல்லை என தெளிவானது .திமுக அளவுக்கு அதிகாரம் பாமக-வுக்கு இருந்திருந்தால் இப்போதைய திமுக-வை விட பரவாயில்லாமல் நடந்து கொண்டிருக்கும் என்று நினைப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை ..இன்னும் சொல்லப்போனால் ஈழப்பிரச்சனையைப் பயன்படுத்தி திமுக-வை அன்னியப்படுத்த பாமக முயற்சி செய்தது என்ற திமுக-வின் குற்றச்சாட்டில் ஒரு வேளை ஓரளவாவது உண்மை இருக்கலாம் என்று தான் தோன்றுகிறது.

//அப்போ தமிழ் உணர்வாளர்களின் ஓட்டு வாங்கி தின்பது யார்? திமுக வா? பாமகவா?//
வாங்கி வந்தது திமுக ..வாங்க முயற்சிப்பது பாமக.

//இரண்டாவதாக பாமக அதன் சாதி அரசியலால் உங்களை போன்றவர்களின் ஓட்டை இழக்கிறது... ஆனால் திமுக தமிழ் என்பதற்காக உம் போன்றவர்கள் ஓட்டை வாங்குகிறது.//

இல்லை.. பாமக சாதி அரசியலால் என் ஓட்டை இழக்கவும் இல்லை .திமுக தமிழ் என்ற ஒரே காரணத்திறாக மட்டும் என் ஓட்டை வாங்கியதும் இல்லை .

//திமுக இப்போது உங்கள் கொள்கைக்கு எதிராக செயல்படும்போது என்ன செய்ய வேண்டும்...இல்லை இப்போதும் நான் திமுகவை தான் ஆதரிப்பேன் என்றால் இதுவரை திமுகவை ஆதரித்தது கொள்கைக்காக என்பது பொய்யா? //

திமுக-வை ஆதரிப்பேன் என நான் பிடிவாதம் பிடிக்கவில்லை ..பதிலுக்கு யாரை ஆதரிக்க வேண்டும் என்பதில் தான் பிரச்சனை .திமுக-வை எதிர்த்து பாமக-வுக்கோ ,கம்யூனிஸ்டுக்கோ நான் ஓட்டுப்போட தயார் ,அதிமுக -வுக்கு அல்ல . ஈழப்பிரச்சனையில் கூட திமுக கேவலமாக நடந்து கொண்டிருந்தாலும் ,அதற்காக நான் ராஜபக்சே-வுக்கு ஓட்டு போட முடியுமா ? ராஜபக்சே-வுக்கும் ஜெயலலிதாவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

//திருமாவின் அரசியலை தமிழ் என்பதைவிட தலித் அரசியலுக்காகவே ஆதரிக்கிறேன்... திருமா வெற்றிபெருவது தலித் அரசியலுக்கான அங்கீகாரம்//

திருமா வெற்றி பெற வேண்டும் என்பதே எனது விருப்பமும் . ஈழ விடயத்திற்காக அதிமுகவையே ஆதரிப்பேன் என இந்த தேர்தலில் ஈழ விவகாரம் தான் முதன்மை பிரச்சனை ,மற்றதெல்லாம் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என சொல்லும் நீங்கள் ,இங்கு மட்டும் மாறுவதேன்?

//சுபவீரபாண்டியன் ,சீமான் போன்ற தமிழுணர்வாளர்கள் திமுக -வும் அதிமுக -வும் மோதும் தொகுதியில் அதிமுக-வுக்கு ஓட்டுப்போடுவார்கள் என நம்புகிறீர்களா?
திமுகவை ரசிக கண்ணோட்டத்தில் ஆதரித்தார்களா? வேறு வழியில்லாமல் ஆதரித்தார்களா? அல்லது உண்மையிலேயே கொள்கைக்காக ஆதரித்தார்களா என்பதை பொறுத்து.//

ஆக சீமானை கம்பி எண்ண வைத்த திமுக-வுக்கு அவரே ஓட்டுப்போட மாட்டார் என அடித்து சொல்ல முடியவில்லை .

said...

//திமுக-வை எதிர்த்து பாமக-வுக்கோ ,கம்யூனிஸ்டுக்கோ நான் ஓட்டுப்போட தயார் //

மதிமுக -வையும் சேர்த்துக் கொள்ளவும்.

said...

//திருமா வெற்றி பெற வேண்டும் என்பதே எனது விருப்பமும் . ஈழ விடயத்திற்காக அதிமுகவையே ஆதரிப்பேன் என இந்த தேர்தலில் ஈழ விவகாரம் தான் முதன்மை பிரச்சனை ,மற்றதெல்லாம் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என சொல்லும் நீங்கள் ,இங்கு மட்டும் மாறுவதேன்?
//
Simple Priority Politics....
Priority Politics... திருமா முதன் முறையாக வெற்றிக்கு அருகாமையில் இருக்கிறார்... திருமாவின் வெற்றி அவரின் வெற்றி மட்டுமல்ல... மற்ற கட்சிகள் அல்லாமல் தனித்துவமான ஒரு தலித் அரசியலுக்கான அங்கீகாரம்... இல்லையென்றால் பெரம்பலூர் பொது தொகுதியானதால் நீலகிரி க்கு ஓட்டப்பட்டாரே ராஜா அவ்வளவு தான் மற்ற கட்சிகளின் தலித் அரசியல்... எனவே விசி வெற்றிபெற வேண்டும்.அதனாலே தான் திருமா ஜெயிக்க வேண்டுமென விரும்புகிறேன்...

ஏற்கனவே அதிகாரத்தை பாமக சுவைத்திருப்பதால் காங்கிரஸோடு பாமக சேர்ந்தால் பாமகவும் தோற்கவேண்டுமென கூறினேன்...

//பதிலுக்கு யாரை ஆதரிக்க வேண்டும் என்பதில் தான் பிரச்சனை//
"இன்றைய"நிலையில் திமுக-அதிமுக வுக்கான ஆறு வித்தியாசங்களை சொல்லவும்..... குறைந்த பட்சம் கடந்த 3 ஆண்டுகாலத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு திமுக-அதிமுகவுக்கான ஆறு வித்தியாசங்களை சொல்லுங்கள்... (இதை பேச ஆரம்பித்தால் இது ஒரு தனி டாப்பிக் இதை தனி விவாதமாகவே செய்யலாம்...)

said...

//ஆனா நாங்க எல்லாம் பிரியாணிக்கு முந்தி விரிக்கிற விபச்சாரிகள் கெடயாது.//
உடன்பிறப்பு பெயரில் பின்னூட்டம் போட்ட பிரியாணி குஞ்சே உங்களை விபச்சாரின்னு சொன்னது? விபச்சாரிக்கிட்ட போயிட்டு காசு கொடுக்காம போறிங்களேன்னு தானே சொல்றோம்... ஐ மீன் தமிழ் தமிழர் இன உணர்வு பேசிட்டு ஏமாத்துறீங்களேன்னு சொல்றோம்

said...

////Simple Priority Politics....//

அதே தான்!

உங்களுடைய priority-யிலும் என்னுடைய Priority-யுலும் பெரிய வித்தியாசம் இல்லை.

இன்னொன்று சொல்ல மறந்து விட்டேன் ..காங்கிரசை வேரோடு ஒழிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. காங்கிரஸ் அதிமுக போட்டி தொகுதியில் அதிமுக-வுக்கு தான் ஓட்டளிப்பேன் ..ஏனென்றால் இன்றைய தேதியில் ராகபக்சே -யை விட காங்கிரஸ் தான் எனக்கு எதிரி. எங்கள் தொகுதி (கன்னியாகுமரி)-யை பொறுத்தவரை காங்கிரஸ் நின்றிருந்தால் நான் பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பேன்.//

said...

////Simple Priority Politics....//

அதே தான்!

உங்களுடைய priority-யிலும் என்னுடைய Priority-யுலும் பெரிய வித்தியாசம் இல்லை.

இன்னொன்று சொல்ல மறந்து விட்டேன் ..காங்கிரசை வேரோடு ஒழிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. காங்கிரஸ் அதிமுக போட்டி தொகுதியில் அதிமுக-வுக்கு தான் ஓட்டளிப்பேன் ..ஏனென்றால் இன்றைய தேதியில் ராகபக்சே -யை விட காங்கிரஸ் தான் எனக்கு எதிரி. எங்கள் தொகுதி (கன்னியாகுமரி)-யை பொறுத்தவரை காங்கிரஸ் நின்றிருந்தால் நான் பா.ஜ.க-வுக்கு வாக்களிப்பேன்.

said...

//இன்றைய"நிலையில் திமுக-அதிமுக வுக்கான ஆறு வித்தியாசங்களை சொல்லவும்..... குறைந்த பட்சம் கடந்த 3 ஆண்டுகாலத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு திமுக-அதிமுகவுக்கான ஆறு வித்தியாசங்களை சொல்லுங்கள்... //

இதுக்கு ரெண்டு விதமா பதில் சொல்லலாம் .

1.வித்தியாசமே இல்லையின்ணு நீங்க சொல்லுறது உண்மை -யிண்ணே வச்சுக்குவோம் .ரெண்டும் ஒண்ணு தானென்றால் இப்போ மெனெக்கெட்டு நான் அதிமுக-வுக்கு மாறி ஓட்டுப் போட வேண்டிய அவசியமென்ன?

2.சீமானை கலைஞர் (சரி..கருணாநிதி) புடிச்சு உள்ள போட்டார் .ஆனால் இன்று வரை ஜெயலலிதாவை தரக்குறைவாக கூட பேசி வரும் அவர் கருணாநிதியை அப்படி பேசவில்லையே? என்ன காரணம் ? ஆக ..அங்கே ஒரு காரணம் இருக்குண்ணு தான் நான் நினைக்குறேன் . நீங்களும் நானும் இன்னும் மதிக்கும் திருமாவளவன் அதிமுக-வை விட திமுக எதோ ஒரு வகையில் இன்னும் மேல் என நினைக்க ஏதோ காரணம் இருக்கே.

said...

//அங்கே ஒரு காரணம் இருக்குண்ணு தான் நான் நினைக்குறேன் . நீங்களும் நானும் இன்னும் மதிக்கும் திருமாவளவன் அதிமுக-வை விட திமுக எதோ ஒரு வகையில் இன்னும் மேல் என நினைக்க ஏதோ காரணம் இருக்கே.
//
ஜோ அவிங்க காரணம் அவங்களுக்கு... நீங்க சொல்லுங்க ஜோ ஒரு ஆறு வித்தியாசம் இன்னைக்க்கு இருக்குற நிலையில்...

said...

//1.வித்தியாசமே இல்லையின்ணு நீங்க சொல்லுறது உண்மை -யிண்ணே வச்சுக்குவோம் .ரெண்டும் ஒண்ணு தானென்றால் இப்போ மெனெக்கெட்டு நான் அதிமுக-வுக்கு மாறி ஓட்டுப் போட வேண்டிய அவசியமென்ன?
//
ஒகே இரண்டும் வித்தியாசமில்லை என்னும் போது... இப்போ தான் நீங்க எந்த சார்பும் இல்லை, திமுக-அதிமுக இரண்டும் ஒன்று தான் உங்களுக்கு... ஓகே...

இப்போ நீங்க மேலே போட்ட பின்னூட்டமென்ன...
//இன்னொன்று சொல்ல மறந்து விட்டேன் ..காங்கிரசை வேரோடு ஒழிக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. காங்கிரஸ் அதிமுக போட்டி தொகுதியில் அதிமுக-வுக்கு தான் ஓட்டளிப்பேன் ..//

இப்போ காங்கிரசை முதுகில் சுமப்பது யார்? திமுக தானே?

திமுக-அதிமுக இரண்டும் ஒன்றேதான் வித்தியாசம் ஏதுமில்லை. ஆனால் இதில் முதல் எதிரியான காங்கிரசை முட்டு கொடுப்பது திமுக.... இப்போ சொல்லுங்க நான் என் எதிரியை சுமக்கும் திமுகவுக்கு போடனுமா? என் எதிரியை சுமக்காத அதிமுகவுக்கு போடனுமா?

இதான் இந்த இடம் தான் நான் என்ன செய்யவேண்டும் என முடிவு செய்ய வைத்தது.

said...

//திமுக-அதிமுக இரண்டும் ஒன்றேதான் வித்தியாசம் ஏதுமில்லை. ஆனால் இதில் முதல் எதிரியான காங்கிரசை முட்டு கொடுப்பது திமுக.... இப்போ சொல்லுங்க நான் என் எதிரியை சுமக்கும் திமுகவுக்கு போடனுமா? என் எதிரியை சுமக்காத அதிமுகவுக்கு போடனுமா?
//
காங்கிரஸ்-அதிமுக கூட்டணி ஏற்பட்டிருந்தால் அதன் எதிரியாக இருக்கும் திமுகவே என் சாய்ஸ்... ஏனெனில் என்னை பொறுத்தவரை திமுக-அதிமுக இரண்டும் ஒன்று... ஆனாலும் திமுக மேலான அதிக கடுப்புக்கு காரணம் அது தமிழ் பெயரால் ஓட்டு வாங்கி எதுவும் செய்யாமல் இருப்பது

said...

//இப்போ காங்கிரசை முதுகில் சுமப்பது யார்? திமுக தானே? //

காங்கிரசை திமுக சுமக்கிற தொகுதியில் அதிமுக-வுக்கு போடக் கூட நான் தயார் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

//ஆனால் இதில் முதல் எதிரியான காங்கிரசை முட்டு கொடுப்பது திமுக.... இப்போ சொல்லுங்க நான் என் எதிரியை சுமக்கும் திமுகவுக்கு போடனுமா? என் எதிரியை சுமக்காத அதிமுகவுக்கு போடனுமா?//

என்னுடைய எதிரி இரண்டு பேர் தான் ..முதலில் காங்கிரஸ் ,இரண்டாவது அதிமுக ..திமுக-வின் மேல் இப்போது பெரிய பற்று இல்லையென்றாலும் அதை இன்னும் எதிரியாக நான் நினைக்கவில்லை.

இரண்டு எதிரிகளும் (காங்கிரஸ் ,அதிமுக) எதிர்த்து நின்றால் குறைந்த அளவு நான் வெறுக்கும் அதிமுக-வுக்கு ஓட்டு . அது கூட காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக.

said...

//என்னுடைய எதிரி இரண்டு பேர் தான் ..முதலில் காங்கிரஸ் ,இரண்டாவது அதிமுக ..திமுக-வின் மேல் இப்போது பெரிய பற்று இல்லையென்றாலும் அதை இன்னும் எதிரியாக நான் நினைக்கவில்லை.//

ஜோ நீங்கள் அதிமுகவை எதிரியாக நினைக்க வைக்கும் காரணங்களை பட்டியலிடுங்கள், அந்த பட்டியலை அப்படியே "இன்றைய"திமுகவுக்கு பொறுத்தி பாருங்கள் வித்தியாசம் எதுவும் தெரிந்தால் அந்த வித்தியாசங்களை மட்டும் இங்கே சொல்லுங்கள்...

நான் பொறுத்தி பார்த்தால் எனக்கு ஒரு வித்தியாசமும் தெரியவில்லை... அதிமுகவுக்கு 2001 உள்ளாட்சி தேர்தல் என்றால் திமுகவுக்கு 2006 உள்ளாட்சி தேர்தல், அதிமுகவுக்கு ஒரு தர்மபுரிவாலாபாக் எரிப்பு என்றால் திமுகவுக்கு ஒரு மதுரைவாலாபாக் எரிப்பு, அதிமுகவுக்கு ஒரு பொடா வைகோ என்றால் திமுகவுக்கு தேசியபாதுகாப்பு சீமான், மணி... சரி திமுக முற்போக்காக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் தருகிறதா என்றால் அதுக்கும் ஒரு பட்டியல் அதுவும் அதிமுகவை போலவே இருக்கிறது... என்னோட லிஸ்ட்டில் கடந்த 3 ஆண்டுகால திமுக அதிமுகவை விட எந்த விதத்திலும் மாறுபடவில்லை...

said...

அழைப்பிற்கு நன்றி நண்பர் ஜோ.

முதலில் இந்த விடயத்தில் இன்னமும் மகா குழப்பகரமான சூழலில்தான் முடிவெடுக்க முடியாமல் இருக்கிறேன் என்பதைத் தெளிவுபடுத்துகிறேன்.

இரண்டாவது நான் வெளிநாட்டில் இருப்பதால் இந்தத் தேர்தலில் ஓட்டுப் போட முடியாது. வேணுமென்றால் நமது கருத்தைச் சொல்லி பதிவு வேண்டுமானால் போடலாம் என்பதையும் தெளிவு படுத்துகிறேன்.

சரி இனி சப்ஜெக்டுக்கு வருகிறேன்.!

காங்கிரஸ் - அதிமுக இவை இரண்டையும் ஒரே தட்டில் வைக்க முடியுமா ?

சர்வாதிகாரத்திற்கும் கோஷ்டி அரசியலுக்கும் முடிச்சே போட முடியாது. தொடர்பும் கிடையாது. சரி ஓக்கே.

ஈழ விடயத்தில் ?

காங்கிரசுக்கும் , அதிமுகவுக்கும் அனேக ஒற்றுமைகள் உண்டு. இன்னுஞ்சொல்லப் போனால் நேற்றுவரைக்கும் காங்கிரஸை விட வெளிப்படையான ஈழ எதிரியாக காட்சி தந்து கொண்டிருந்தவர் அம்மா...

அவரை விட பிரபாகரனையோ , புலிகளையோ தமிழகத்தில் / இந்தியாவில் வேறு யாருமே எதிர்க்கவில்லை என்ற அளவிற்கு. உண்மைதானே?

இன்று ப.சிதம்பரம் போர் நிறுத்தம் வேண்டுமென்று கதைப்பது எப்படி தேர்தல் கால அரசியலோ அதே தேர்தல் கால அரசியல்தான் ஜெயலலிதாவின் உண்ணாவிரதமும் , புலி ஆதரவும். உண்மையா இல்லையா ?

எப்படி திருமாவளவன் பிழைப்புக்காக காங்கிரஸுடன் சேர்ந்தாரோ அதே போலத்தான் பாமகவும் , வைகோவும் , கம்யூனிஸ்டுகளும் பிழைப்புக்காக சேர்ந்திருக்கிறார்கள்.

கம்யூனிஸ்டுகளுக்கோ , வைகோவுக்கோ , பாமகவுக்கோ அம்மாவின் தேர்தல் கால அரசியல் நம்பகத்துக்கு உரியதாக இருக்கலாம். அதற்கான காரணங்கள் வேறு.

ஆனால் நடுநிலையான ( சொல்லப்போனால் இந்த நடுநிலை வட்டத்திற்குள் நான் வரமுடியாது ) நம்மைப் போன்ற ஈழ ஆதரவாளர்களுக்கு அதிமுக கூட்டணியாகட்டும் , திமுக கூட்டணியாகட்டும் சம தூரத்தில் தான் இருக்கிறது அல்லது இருக்க வேண்டும்.

இல்லாவிட்டால் ஜெயலலிதாவின் உண்ணாவிரதத்தை ஆதரிக்கும் ஈழ உணர்வாளர்கள் , ப,சிதம்பரத்தின் போர் நிறுத்தம் தேவை என்ற கூக்குரலையும் ஆதரிக்கத்தான் வேண்டும்.

நிற்க.

எதற்கு காங்கிரஸ் புறக்கணிப்பு ?

நமது எதிர்ப்பைக் காட்ட.........

நமது எதிர்ப்பைக் காட்ட காங்கிரஸுக்கு ஓட்டுப் போடாமல் இருப்பதுதான் வழியா ?

சரி , ஜகதீஷ் டைட்லர் விடயத்திற்கு வருவோம். காங்கிரஸ் பின் வாங்கியது சீக்கியர்கள் தங்களுக்கு ஓட்டுப் போடாமல் விட்டுவிடுவார்கள் என்பதால் தானே ?

ஏன் சீக்கியர்களின் மேல் இருக்கும் பயம் தமிழர்களின் மேல் காங்கிரசுக்கு இல்லை ?

காரணம் சீக்கியர்களின் கட்சியான அகாலிதளமும் , பாஜகவும் கூட்டுச் சேர்ந்து கொண்டு சீக்கியர்களிடையே இனவுணர்வைத் தூண்டி விட்டு போராட்டங்களை நடத்தினார்கள். பற்றியெறியும் தீயை அணைக்க ஜெகதீஷ் டைட்லர் தேர்தலிருந்து விடுவிக்கப்பட்டார்.

நாற்பது தொகுதிகளைக் கொண்ட தமிழர்கள் ஒரு கண்டனத்தைக் கூட காங்கிரஸிடம் இருந்து வாங்கமுடியவில்லை.

காரணம் -ஆளும் திமுக காங்கிரஸுக்கு பல்லக்கு தூக்குவதும் , எதிர்க்கட்சியான அதிமுக நேற்றுவரை இந்தப் பிரச்சினையில் அமைதி காத்ததும் தான்.

இதே அதிமுக ஈழப்பிரச்சினையில் இப்போது நினைத்தாலும் கூட தமிழகத்தைச் ஸ்தம்பிக்கச் செய்ய முடியும். செய்ததா ? இல்லையே ?

தமிழகத்தில் இலங்கைத் தூதரகம் செயல்படாமல் செய்து விட முடியும்.

செய்ததா ? இல்லையே ?

இன்று வோட்டுக்காக எல்லோரும் ஆடும் நாடகத்தில் புது வேடக்காரியான அதிமுகவை எல்லோரும் ரசிக்கிறார்கள் அவ்வளவுதான்.

பழைய ஆட்டக்காரியான திமுகவின் / காங்கிரசின் குட்டு வெளிப்பட்டு விட்டது. இன்னும் அதிமுகவின் குட்டு வெளிப்படவில்லை. அவ்வளவுதான்.

இக்கரைக்கு அக்கரை பச்சை என்பார்களே அது போலத்தான் இது.

காங்கிரஸ் / திமுக கூட்டணி புறக்கணிப்பு என்ற விடயத்தினால் நடக்கப் போவது ஒன்றுமில்லை.ஆதரவினாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை.

அதே போல

அதிமுக ஆதரவினாலும் நடக்கப் போவது ஒன்றுமில்லை. என்ன , தமிழனை வைத்து தன் தமிழினத் தலைவர் பட்டத்தை மீட்டுக் கொள்ள கருணாநிதிக்கு இன்னுமொரு வாய்ப்புக் கிடைக்கும்.!!!

இந்திய அரசால் ஈழத்திற்கு ஏதேனும் நடக்க வேண்டுமென்றால் அலையலையாக இளைஞர்கள் தெருவிற்கு வரவேண்டும்.

ஒரு முடிவு காணும் வரை ஒரு பேருந்து , ஒரு ரயில் கூட தமிழகத்தில் ஓடக் கூடாது. அத்துனை மத்திய அரசு நிறுவனங்களும் ஸ்தம்பிக்க வேண்டும்.

நமது உணர்வு டெல்லிக்கு எட்ட வேண்டும்.

அதற்கு தேர்தல் நடக்கவிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை விட்டால் வேறொரு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கவே கிடைக்காது.

நேற்று சும்மா தனித்தமிழநாடு பூச்சாண்டிக்கே வைகோவைத் தூக்கி உள்ளே போட்ட தமிழக அரசு இன்று ரத்த ஆறு பேச்சுக்கு இன்னும் ஒன்றுமே செய்யாமலிருப்பதும் கூட தேர்தல் சமயத்தால்தான்.

அதைச் செய்வார்களா அரசியல் கட்சிகள்?

அதைச் செய்வார்களா இளைஞர் அமைப்பினர்?

அதைச் செய்வார்களா அரசியற் கட்சித் தொண்டர்கள்??

மிக நீண்ட பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்.

நன்றிகள்

said...

//ஜோ நீங்கள் அதிமுகவை எதிரியாக நினைக்க வைக்கும் காரணங்களை பட்டியலிடுங்கள், அந்த பட்டியலை அப்படியே "இன்றைய"திமுகவுக்கு பொறுத்தி பாருங்கள் வித்தியாசம் எதுவும் தெரிந்தால் அந்த வித்தியாசங்களை மட்டும் இங்கே சொல்லுங்கள்...//

அதிமுக-வைப் பொறுத்தவரை அதிமுக தலைமை தான் அதிமுக-வின் குணத்தை நிர்ணயிப்பது .அதனடிப்படையில்.

1.பெரியார் ,அண்ணா கொள்கைகளுக்கு எதிராக வெளிப்படையாக இயங்க கிஞ்சித்தும் தயக்கம் காட்டாத கட்சி
2.மத சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் சக்திகளுக்கு துணை போவது மட்டுமல்ல , சில நேரம் அவர்களை விட அதில் ஆர்வம் காட்டும் கட்சி.
3. அரசு ஊழியர்கள் ,தொழிலார்கள் மீது கண்டிப்பு என்ற பெயரில் அராஜகத்தை கட்டவிழ்த்து விடும் கட்சி.
4. தொண்டர்களை அடிமைகளின் கூடாரமாக வைத்திருக்கும் கட்சி.


இவையெல்லாவற்றையும் விட தமிழ் ,தமிழருக்கு எதிரான தமிழகத்தில் இயங்கி வரும் சக்திகள் இன்றும் அதிமுக ,திமுக இரண்டிலும் திமுகவை எதிரியாகவும் ,அதிமுகவோடு பரிவோடும் இருப்பது ஒன்று போதும் ,இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்க.

மேலே சொன்னவற்றில் திமுக யோக்கியமா என நீங்கள் கேட்கலாம் .ஆம் ..யோக்கியம் அல்ல .ஆனால் அதிமுக-வை விட யோக்கியம் தான் .

said...

நன்றி மதிபாலா...

//இன்று ப.சிதம்பரம் போர் நிறுத்தம் வேண்டுமென்று கதைப்பது எப்படி தேர்தல் கால அரசியலோ அதே தேர்தல் கால அரசியல்தான் ஜெயலலிதாவின் உண்ணாவிரதமும் , புலி ஆதரவும். உண்மையா இல்லையா ? //
யாரும் ஜெவின் நாடகத்தை நம்ப தயாராக இல்லை, யாரும் ஜெவை "ஈழ நாயகியே வருக, ஈழத்தமிழர் ஆட்சி தருக" என்று சொல்லவில்லை, ஜெவை நம்ப தயாராக இல்லை... ஆனால் ஈழத்தமிழர் இன அழிப்பில் மும்மரமாக இருக்கும் சோனியாவா அல்லது ஜெவா என்றால் சோனியாவை ஆதரிக்க இயலேவ் இயலாது....

//நம்மைப் போன்ற ஈழ ஆதரவாளர்களுக்கு அதிமுக கூட்டணியாகட்டும் , திமுக கூட்டணியாகட்டும் சம தூரத்தில் தான் இருக்கிறது அல்லது இருக்க வேண்டும்.//
அதே தான்... இரண்டும் சம தூரத்தில்... ஆனால் ஈழத்தமிழர் அழிப்பில் முண்ணனில் நிற்கும் சோனியா காங்கிரசை முதுகில் சுமக்கும் திமுகவை இன்னும் தூரத்தில் வைக்கிறேன்...

said...

//ஆனால் ஈழத்தமிழர் இன அழிப்பில் மும்மரமாக இருக்கும் சோனியாவா அல்லது ஜெவா என்றால் சோனியாவை ஆதரிக்க இயலேவ் இயலாது.//

இதிலென்ன சந்தேகம் .மாற்றுகருத்தே இல்லை.

//ஆனால் ஈழத்தமிழர் அழிப்பில் முண்ணனில் நிற்கும் சோனியா காங்கிரசை முதுகில் சுமக்கும் திமுகவை இன்னும் தூரத்தில் வைக்கிறேன்...//

சோனியா காங்கிரசை முதுகில் சுமக்கும் விடுதலை சிறுத்தைகளை அந்த தூரத்தில் வைக்கவில்லை .அதற்கு நீங்கள் சொன்ன காரணத்தில் எனக்கும் உடன்பாடு தான்.

ஆனால் சோனியா காங்கிரசை முதுகில் சுமக்க புரட்சித்தலைவி தயாராக இல்லை போல சொல்லுகிறீர்கள் .அவரும் நூல் விட்டுப் பார்த்தார் .தமிழக காங்கிரசிலேயே பெரும்பான்மை தங்கள் கொள்கைகளோடு (ஈழ விவகாரத்திலும்) ஒத்து வருகிறவர் புரட்சித்தலைவி தான் என தலைமையிடம் கதறிப்பார்த்தார்கள் .சோனியாவிற்கு புரட்சித்தலைவி மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பினால் அது நடக்கவில்லை .மற்றபடி காங்கிரசை சுமக்க புரட்சித்தலைவி தயாராக இல்லை என சொல்ல முடியுமா? இல்லை இப்போதும் அதிமுக அமோக வெற்றி பெற்றால் காங்கிரசுக்கு ஆட்சியமைக்க ஆதரவளிக்க மாட்டார் என சொல்ல முடியுமா? ஏதோ கொள்கை வேறுபாட்டினால் தான் அதிமுக காங்கிரசை எதிர்ப்பது போல சொல்லுவது நல்ல நகைச்சுவை ..இது ராமதாசுக்கும் பொருந்தும் . இப்போது கூட தேர்தலுக்கு பின் அன்புமணி அமைச்சராகலாம் என சிதம்பரம் சொல்லியிருக்கிறார்,

said...

20% இராமதாஸ் வாங்கி கொடுத்த//

கலைஞர் கொடுத்தன்னும் சொல்லலாம்.
தன் சாதிக்கு 20% இட ஒதுக்கீடு கேட்பது சரியா? அப்போ எஸ்.வி.சேகர் கேட்பதில் என்ன தவறு, மற்ற சாதிகள் கேட்டால் என்ன தவறு.

பிற்படுத்தவர் எழுச்சி, தாழ்த்தப்பட்டவர் எழுச்சி சாதி வெறியாக மாறிப்போனதுதான் மிகப்பெரிய அவலம்
ஆனால் எதுவோ உங்களை தடுக்கிறது.

said...

20% இராமதாஸ் வாங்கி கொடுத்த இடஒதுக்கீட்டில் படித்து இணையத்தை நோண்டுபவர்களாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.//

நான் பிற்படுத்தப்பட்டவன் நான் எம்பிசி கோட்டாவினால் வாய்ப்பை இழந்தவன் அப்போ திட்டலாமா?

said...

குழலி, ஜோ , மதுபாலா
இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் ஒரே தீர்வு தே மு தி க வுக்கு ஓட்டு போடுவதுதான். அதுக்கு வசதியா அவங்களும் 40 தொகுதியிலும் நிக்குறாங்க

said...

யாரும் ஜெவின் நாடகத்தை நம்ப தயாராக இல்லை, யாரும் ஜெவை "ஈழ நாயகியே வருக, ஈழத்தமிழர் ஆட்சி தருக" என்று சொல்லவில்லை, ஜெவை நம்ப தயாராக இல்லை... ஆனால் ஈழத்தமிழர் இன அழிப்பில் மும்மரமாக இருக்கும் சோனியாவா அல்லது ஜெவா என்றால் சோனியாவை ஆதரிக்க இயலேவ் இயலாது....///

சோனியாவா , ஜெவா என்றால் கண்டிப்பாக நானும் என் மனசு வலிக்க ஜெவுக்கு ஜே போடுவேன்.

ஆனால் ஜெவா , திமுக வா என்றால்????

அதுதானே மிஞ்சி நிற்கும் கேள்வி நண்பரே?

*****

அதே தான்... இரண்டும் சம தூரத்தில்... ஆனால் ஈழத்தமிழர் அழிப்பில் முண்ணனில் நிற்கும் சோனியா காங்கிரசை முதுகில் சுமக்கும் திமுகவை இன்னும் தூரத்தில் வைக்கிறேன்.../


சரியான வாதமே.

ஆனால் திமுக காங்கிரஸை தூர வைப்பதற்கும் , ஈழத்தின் இன அழிப்பிற்கும் சம்பந்தமில்லை என்பதே என் கருத்து.

தமிழர்கள் களத்தில் , ரோட்டில் இறங்கினால் ஒழிய பார்ப்பனீயத்தில் கட்டுண்டு கிடக்கும் இந்திய நடுவண் அரசு ஒன்றும் கிழித்துவிடப் போவதில்லை.

இன்னொரு சந்திரசேகர் , இன்னொரு ஆட்சிக்கலைப்பு , இன்னொரு இடைத்தேர்தல் இவைகளுக்கு மட்டுமே வாய்ப்புண்டு.

said...

//ஒத்து வருகிறவர் புரட்சித்தலைவி தான் என தலைமையிடம் கதறிப்பார்த்தார்கள் //

அட அப்டியா? காங்கிரஸ் மாணவரணியின் மாவட்ட அளவில் பொறுப்பில் இருக்கும் எனக்கே இது தெரியாது.

சொல்லிட்டாரு.. பக்கத்துல இருந்து பார்த்தவரு.

ஈழ விவகாரத்தில் காங்கிரசை எதிர்க்க ஒரு காரணம் கூட இல்லை. எல்லாம் கற்பனைக் கதைகளே. இந்தியா இலங்கைக்கு ஆயுதம் குடுக்கிறது என்பது தானே உங்கள் எல்லோரின் குற்றசாட்டும். தயவு செய்து யாராவது எப்போ ,என்னவகையான ஆயுதம் ,எவ்வளவு கொடுத்தார்கள் என சொல்லுங்களேன்.

நீங்கள் கங்கிரசை ஈழ எதிரிகளாக சித்தரிப்பதற்கு ஒரே ஒரு ஆதாரமாவது காட்ட முடியுமா?

said...

//குழலி, ஜோ , மதுபாலா
இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் ஒரே தீர்வு தே மு தி க வுக்கு ஓட்டு போடுவதுதான். அதுக்கு வசதியா அவங்களும் 40 தொகுதியிலும் நிக்குறாங்க//

ரத்த பூமியில வந்து காமெடி பன்ணிட்டிருக்கீங்க :)

said...

///இயல்பாக எழும் கேள்விகள் தான்! ஏன் திமுக என்றால் தமிழ் பெயரை சொல்லி ஓட்டு வாங்கி தின்றது திமுக தான்

பாமக என்ற கட்சி ஒரு சாதிகட்சியாக வன்னியர் கட்சியாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது, அல்லது
அப்படியாக நடந்துகொள்கிறது! //

//பாமக தம்மை வெறும் சாதிக்கட்சியாக மட்டுமே அடையாளம் காட்டிக்கொண்டிருந்தால் யாரும் கேள்விகேட்க போவதில்லை, ஆனால் தமிழ்பாதுகாப்பு இயக்கம் ஆரம்பித்து அதன் முக்கிய கூட்டாளியாகவும் செந்தமிழில் தொலைகாட்சியும், பத்திரிக்கையும் நடத்தி தமிழை பாதுகாப்பதாக கூறும் பாமக ஈழத்தமிழர்களை அழிக்கும் மத்திய அரசிற்கு பங்காளியாக முட்டுக்கொடுத்துக் கொண்டே இங்கே ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் பங்கெடுப்பது மிக கடுமையான முரணாக உள்ளது.//

என்னா கொழலி. ரொம்ப கன்ஃப்யூஸனா கீதா?

said...

//அப்போ தமிழ் உணர்வாளர்களின் ஓட்டு வாங்கி தின்பது யார்? திமுக வா? பாமகவா? //

//ஆனால் தமிழ்பாதுகாப்பு இயக்கம் ஆரம்பித்து அதன் முக்கிய கூட்டாளியாகவும் செந்தமிழில் தொலைகாட்சியும், பத்திரிக்கையும் நடத்தி தமிழை பாதுகாப்பதாக கூறும் பாமக //

காமெடி. காமெடி. சிப்பு சிப்பா வருது கொழலி.

said...

//என்னா கொழலி. ரொம்ப கன்ஃப்யூஸனா கீதா?//
அனானி எனக்கு எந்த கொழப்பமும் இல்லை... ஒன்று மருத்துவர் இராமதாசை நோக்கி எழுதப்பட்டது, இன்னொன்று பொதுமக்களை நோக்கி எழுதப்பட்டது...

தமிழ் தமிழ்னு சொல்ற ஆனா அப்படி நடந்துக்கலை என்று பாமகவுக்கும்... பாமக தமிழ்னு சொல்றதால நீங்க யாரும் ஓட்டு போடலை ஆனால் நீங்க தமிழ்னு சொல்லி யாருக்கு ஓட்டு போடுறிங்களோ அங்கே கேள் என்று வாக்காளர்களுக்கும் சொல்றோமுங்க... புரிஞ்சதா? உங்களுக்கு புரியலைன்னா மதுரையில் மட்டன் பிரியாணி துன்ன மப்பா இருக்கும்... இல்லைனா மத்திய சென்னையில் அடிச்ச குவார்ட்டரா இருக்கும்...

said...

//காங்கிரஸ் மாணவரணியின் மாவட்ட அளவில் பொறுப்பில் இருக்கும் எனக்கே இது தெரியாது. //

ஒமக்கு தெரிஞ்சா தான் ஆச்சரியம் .. வந்துட்டாரு மாவட்ட பொறுப்பை தூக்கிகிட்டு ..நல்லா வருது வாயில..

said...

// ஜோ/Joe said...

//காங்கிரஸ் மாணவரணியின் மாவட்ட அளவில் பொறுப்பில் இருக்கும் எனக்கே இது தெரியாது. //

ஒமக்கு தெரிஞ்சா தான் ஆச்சரியம் .. வந்துட்டாரு மாவட்ட பொறுப்பை தூக்கிகிட்டு ..நல்லா வருது வாயில..//

முடிஞ்சா பதில் சொல்லு. இல்லைனா மூடு. அத விட்டு வாயில வருது வேற எதுலையோ வருதுனு சீன் போடாத. வந்துட்டாரு சொம்ப தூக்கிட்டு.

said...

Well said kulali!

I agree with you on this.

Every sensible person must hate congress for its ugly stand on srilanka and poor givernance, and weakness on national security.

As you said, we should boycott these parties and stand united under a capable strong national party like BJP which is known for its pro-stand on srilankan tamils.

Moreover, with a strong leader like Advani and influential second rung BJP leadership, BJP government is the best alternative to rotten congress

let us spread this message to all we know. thanks for this post!

PARAMS

said...

நீங்கள் கங்கிரசை ஈழ எதிரிகளாக சித்தரிப்பதற்கு ஒரே ஒரு ஆதாரமாவது காட்ட முடியுமா?//

என்ன தலைவரே. சும்மா இஃஹி இஃஹி பண்ணிட்டு.

ஊரே தெரிஞ்ச அழகிக்கு வெளம்பரம் எதுக்குண்ணேன்?

said...

//மதிபாலா said...
நீங்கள் கங்கிரசை ஈழ எதிரிகளாக சித்தரிப்பதற்கு ஒரே ஒரு ஆதாரமாவது காட்ட முடியுமா?//

என்ன தலைவரே. சும்மா இஃஹி இஃஹி பண்ணிட்டு.

ஊரே தெரிஞ்ச அழகிக்கு வெளம்பரம் எதுக்குண்ணேன்?
//
இந்திய அரசாங்கத்தின் நேரடி உதவிகளுக்கு இலங்கை மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும்: இராணுவத் தளபதி சரத் பொன்சேகா
http://www.tamilwin.com/view.php?2a26QVZ4b3499E824dbSWnPeb0217GQc4d3iYpD4e0dBZLu0ce03g2hF2ccdHj0o0e

இன்னும் சஞ்சய்க்கு வேறு எதுவும் ஆதாரம் வேண்டுமோ?

said...

அட.. எப்போ இருந்து இந்தாளு சொன்னதெல்லம் வேத வாக்காச்சி? புலிகள் மக்களை துப்பாக்கி முனையில் மிரட்டி மனித கேடயமாக பயன்படுத்தறாங்கன்னு இவன் திருவாயாலயே சொல்லி இருக்கானே. அப்போ அதுவும் நெசம் தானே. அனைத்து உதவியும்னு சொல்லி இருக்கான்ல.. அது என்ன என்ன உதவின்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க தல. எப்போ என்ன ஆயுதம் குடுத்தாங்கன்னு கேளுங்களேன். ரேடார் என்ற கன்கானிப்பு கருவி தவிர வேற எதுவும் இந்தியா தரலை.


மதிபாலா, உங்கள மாதிரியே தான் எல்லாரும் பதில் சொல்றாங்க. ஆனால் ஒருத்தருக்கும் தெரியலை. ஏன்னா எவனோ ஒரு போக்கத்தவன் சொன்னதை ‘தங்களுக்கு பிடிக்காதவங்களுக்கு எதிரா” இருக்கே என்ற சந்தோஷத்தில் நெறைய பேர் அதை புடிச்சி தொங்கறாங்க.

இந்தியாவின் உள்துறை, வெளியுறவுத் துறை, பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் , கப்பல்படைத் தளபதி உள்ளிட்ட எல்லாரும் சொல்லிட்டாங்க.. ஆயுதம் எதுவும் தரலைனு.

சரத் பொன்சேகா சொல்றது உங்க எல்லாருக்கும் வேத வாக்கா இருக்கலாம். எனக்கு இந்திய அமைச்சர்கள் சொல்றது தான் நம்பிக்கை. நான் எதுக்கு அடுத்த நாட்டுக்காரன் பிளவை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் சொல்வதை நம்ப வேண்டும்.

இந்திய அமைச்சர்கள் ஆயுதம் குடுக்கலைன்னு சொன்னதுக்கு எப்போவாச்சும் இவன் பதில் சொல்லி இருக்கானா? அல்லது இது வரை என்ன ஆயுதம் குடுத்திருக்காங்கன்னு சொல்லி இருக்கானா?

ஒரு நாட்டுக்கு இன்னொரு நாடு ஆயுதம் விற்பது வெளிப்படையான விஷயம். அதை யாரும் மறைக்க முடியாது.

இலங்கைக்கு யார் ஆயுதம் குடுத்தாங்க? இந்தியா குடுத்ததா இல்லையான்னு இங்க இருக்கு. போய் பாருங்க.
http://1.bp.blogspot.com/_DzsFu_6-6g0/Sc0LxuFHV8I/AAAAAAAAB3g/bDcxbQBbwmI/s1600-h/sundayindian.bmp

மிக சமீபத்திய சண்டே இந்தியன் இதழ்.

said...

அதே கட்டுரையில்,

பிராந்திய வல்லரசான இந்தியா ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றமை பிராந்தியத்தை மேலும் பலப்படுத்தும் விடயமாகும்.

//ஆயுதம் குடுக்கிறது அடுத்த நாட்டு விவகாரத்துல தலையிடும் வகையில் வராதா?//

விரைவில் பசில் ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். மேலும் சில தினங்களில் புலிகளிடமிருந்து அனைத்து சிவிலியன்களையும் பாதுகாப்பு படையினர் மீட்டுவிடுவர்.

உலகில் பிரதேசங்களை கைப்பற்றியுள்ள பயங்கரவாத இயக்கங்களை எவ்வாறு தோற்கடிப்பது என்பதற்கு இலங்கை இராணுவத்தினர் சிறந்த முன்னுதாரணத்தை வழங்கியுள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதையும் அதே நாறவாய் தானே சொல்லி இருக்கு. இது எல்லாமே உண்மை தானா?