கருணாநிதியின் நண்பரா பிரபாகரன்? என் பதிவும் ஜூவி கட்டுரையும்

கட்டுரைகளுக்காக தொடர்ச்சியாக ஈழ‌ம் குறித்து சில விசயங்களை ஆராய்ந்த போது கிடைத்த ஒரு விசயம் கருணாநிதி எப்போதுமே புலிகள் இயக்கத்திற்கு கருணாநிதி எந்த காலத்திலும் ராஜீவ்காந்தி கொலைக்கு முன்பு பின்பு என எக்காலத்திலும் விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக இருந்ததில்லை என்பதை குறித்து ஜனவரி மாதத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதே கருத்துகளோடு ஜூவியில் வந்திருக்கும் கட்டுரை இங்கே....'பிரபாகரன் எனக்கு உற்ற நண்பர். அவர் தீவிர வாதி இல்லை' என்று கருணாநிதி தனியார் சேனலுக்குப் பேட்டி கொடுத்ததாகவும் பின்னர் மறுத்ததாகவும் தமிழக அரசியல் களம் அதிர்ந்து கிடக்கிறது!

இந்நிலையில், பிரபாகரனின் பழைய நண்பர்கள் பற்றி அறியும் முயற்சியாக ஈழ ஆதரவாளர்கள் சிலரி டம் பேசினோம். ''பிரபாகரன் தமிழகத்தில் காலடி வைத்தபோது, அவருடைய பெயர் கரிகாலன்.

'தமிழ் நியூ டைகர்ஸ்' என்ற அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகத் தமிழகம் வந்த பிரபாகரன், எழுபதுகளின் இறுதியில் நெடுமாறனோடு தங்கினார். தமிழகத்தில் பிரபாகரனுக்கு முதல் நண்பர் நெடுமாறன்.

பின்னர் ம.தி.மு.க-வின் ராதாகிருஷ்ணனோடு தொடர்பு ஏற்பட்டது. இருவரும் ரூம் மேட்டாக இருந்தார்கள். அந்த சமயத்தில் தமிழ் நியூ டைகர்ஸ் அமைப்பைச் சேர்ந்த முகுந்தனுக்கும் பிரபாகரனுக்கும் பிரச்னை வர, பாண்டிபஜாரில் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

துப்பாக்கி சூடு சம்பவம் பிரபாகரனுக்குப் பின்ன டைவைக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரிடம் பேசினார் நெடுமாறன். மற்ற தமிழகத் தலைவர்களிடம் அந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்கச் சொன்னார் எம்.ஜி.ஆர்.! பிரபாகரன் சார்பாக பேபி சுப்பிரமணியமும், ராதாகிருஷ்ணனும் கருணாநிதியை சந்தித்தார்கள். 'இதெல்லாம் இப்போ முக்கியமில்லை. இதுக்காக என் நேரத்தைச் செலவிட முடியாது!' என்று பிரபாகரன் தூதர்களைத் திருப்பி அனுப்பினார் கருணாநிதி.

அப்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த நெடுமாறன், ஈழப் பிரச்னையை இந்திரா காந்தி யின் கவனத்துக்குக் கொண்டுசென்றார். இந்திரா காந்தியும் பயிற்சிக் களம் அமைத்துக் கொடுத்து உதவி னார். கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளில் பயிற்சித் தளங்களை உருவாக்கினார்கள்.

தி.அழகிரிசாமி என்பவர் சிறுமலையில் இருக்கும் தன்னுடைய தோட்டத்தில் புலிகளுக்காக பயிற்சித் தளத்தை அமைத்துக் கொடுத் தார். இதற்கெல்லாம் எம்.ஜி.ஆர். ரொம்பவே உதவியாக இருந்தார். அந்த சமயத்தில் ஒருநாள் எம்.ஜி.ஆரின் ராமாபுரம் தோட்டத்துக்குவரும்படி பிரபாகரனை அழைத்திருந்தார் எம்.ஜி.ஆர். காலை நேரத்தில் நடந்த அந்த சந்திப்பின்போது பிரபாகரன் இடியாப்பம் பாயா சாப்பிட்டார். அப்போது, 'உங்களுக்காக மட்டன் செய்து வைத்திருக்கிறேன். எலும்புகளைக் கடியுங்கள். அதிலிருக்கும் மஜ்ஜைகளில் போராட்டத்துக்குத் தேவையான உணர்வு கிடைக்கும்' என்று பிரபாகரனுக்கு அசைவ அயிட்டங்களை சாப்பிடக் கொடுத்தார்.

கிட்டத்தட்ட இதே சமயத்தில் பிரபாகரனை சந்திக்க விரும்பினார் கருணாநிதி. ஆனால், அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. 86-ம் வருடம் தன்னுடைய பிறந்தநாளில் வசூலான தொகையை ஈழப் போராளிக் குழுக்களுக்கு தலா ஐம்பதாயிரமாகப் பிரித்துக் கொடுத்தார் கருணாநிதி. அதைப் புலிகள் வாங்க மறுத்துவிட்டனர். அதன்பிறகு ஈழப் போராளி களுக்குள் சண்டை மூள, சபாரத்தினத்தைக்கொன்று விட வேண்டாம் என்று புலிகளிடம் கருணாநிதி வேண்டுகோள் வைத்தார். ஆனால், சபாரத்தினம் கொல்லப்பட்டார்.

தி.மு.க. புலிகளைக் கொஞ்சம் தள்ளி வைத்துப் பார்த்த சமயத்தில்தான், தி.மு.க-வில் இருந்த வைகோவுக்கு புலிகளுடன் நெருக்கம் ஏற்பட்டது. ராஜீவ் தயார்செய்த இலங்கை ஒப்பந்தத்தில் புலிகளைக் கையெழுத்திடச் சொல்லி இந்தியா நெருக்கடிகள் கொடுத்தபோது, பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய புலித் தலைவர்கள் தமிழகத்திலிருந்து ஈழத்துக்குப் போய்விட்டார்கள்.

அப்போது பிரபாகரனை சந்திக்க வைகோ வன்னிக்காட்டுக்குப் போனார். அதனைத் தொடர்ந்து, 'புலிகளால் கலைஞர் உயிருக்கு ஆபத்து. இதில் வைகோவுக்கும் தொடர்பு' என்று தமிழக அரசின் உளவுத்துறை எச்சரிக்கை செய்ததாக பேராசிரியர் அன்பழகன் அறிக்கைவிட, வைகோ கட்சியிலிருந்து பிரிந்து வந்தார். அதன்பிறகு, புலிகளின் நட்பு வட்டாரத்தில் தி.மு.க. என்றுமே இருந்ததில்லை!'' என்றார்கள் அவர்கள்.


- எஸ்.சரவணகுமார்
- Junior Vikatan

2 பின்னூட்டங்கள்:

said...

தமிழ் உணர்வாளர்களின் கூட்டங்களில் மட்டும் காங்கிரஸையும், கருணாநிதியையும் ஒரு பிடிபிடிக்கும் தமிழருவி மணியனுக்கு ஓர் அதிர்ச்சி. அவர் குடியிருந்த அரசாங்க வீட்டைக் காலி செய்யச் சொல்லி நோட்டீஸ் அனுப்பி விட்டது அரசு. பப்ளிக் கோட்டாவில் வீடு ஒதுக்கப்பட்டால் வாழ்நாள் முழுக்க இருக்கலாம் என்பதுதான் விதியாம். ''அதற்காக கருணாநிதிக்கு நான் லாலி பாட மாட்டேன்'' என்ற மணியன், அரசு உத்தரவுக்கு எதிராக வழக்குப் போடப் போகிறார்!

நன்றி :தினமலர்

ஏன் இப்படி மணியனார் கொலைங்கரால் பந்தாடப்படுகிறார்
http://www.alaikal.com/news/?p=14394

said...

Kuzhali:

Do you support the assassination of Rajiv Gandhi by LTTE? What should India do? Do you even believe that Rajiv was assasinated by LTTE?

Hope you answer.