தமிழ் விக்கிபீடியா - வருந்துகிறேன்

ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ள விக்கிபீடியாவை ஏன் நான் ஆதரிப்பதில்லை என்று ஒரு பதிவிட்டிருந்தேன், விக்கிபீடியாவில் எமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தையும் செய்தியையும் சொல்லியிருந்தேன், ஆனால் தமிழ்விக்கிபீடியாவா ஆங்கில விக்கிபீடியாவா என்ற குழப்பத்தில் அது தமிழ்விக்கிபீடியாவில் ஏற்பட்டது போன்ற பொருள் தொனித்துவிட்டது... நான் குறிப்பிட்ட இரண்டும் தமிழ்விக்கிபீடியாவில் ஏற்பட்ட அனுபவம் இல்லை என்பதால் அம்மாதிரி பொருள் தரும் வகையில் எழுதியதற்கு வருந்துகிறேன்...

ஆனால் விக்கிபீடியாவின்(இதில் தமிழும் உண்டு) விதிகள், நடைமுறை பிரச்சினைகள், நிர்வாகியின் கூடுதல் அதிகாரங்கள், எளிதில் குழுக்களால் ஆக்கிரமிக்க படும் அளவிற்கு பலவீனமாக உள்ள விதிகள், குழு பிரச்சினைகள் குறித்தான விமர்சனங்கள் அப்படியே இருக்கின்றன... வேறென்ன விக்கிபீடியா மாதிரி இருக்கிறது காண்பியுங்கள் என்று தான்சொல்ல இயலுகிறதே தவிர இதற்கான களைதலை சொல்ல இயலவில்லை..

ஒரு குழுமம் நடத்துவதோ, ஒரு நிறுவனம் நடத்துவதற்கும் விக்கிபீடியா என்பதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு, ஒரு செய்தி முரசொலியில் வருவதற்கும் நமது எம்ஜியாரில் வருவதற்கும் தினமலரில், தினகரனில் வருவதற்கும் தினமணியில் வருவதற்கும் அதன் உண்மை தன்மைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு, முரசொலி, நமது எம்ஜிஆர், தினமலர் இன்ன பிற தாள்களை படிக்கும் போது செய்திகளோடு சேர்ந்து அந்த நிறுவனத்தின் நிலைப்பாடும் அது எப்படி அதன் செய்தி சேவையில் எதிரொலிக்கும் என்பதை அறிந்தே பகுத்துணர்ந்தே படிப்பார்கள், அது போல ஒரு கலைகளஞ்சியம் ஒரு குழுமத்தாலோ ஒரு நிறுவனத்தாலோ நடத்தப்பட்டால் அதன் சார்புகள் நடைமுறைகள் எல்லாம் கணக்கில் கொள்ளப்பட்டே அது படிக்கப்படும் அதன் தாக்கமும் இருக்கும், ஆனால் பொதுப்படையான பெயரில் இயங்கும் (ஆங்கில)விக்கிபீடியா குழுமத்தின் கட்டுப்பாட்டில் பக்க சார்புடையதாக இருந்தாலும் reference என்றால் அதிலிருந்தே காட்டுகின்றனர்.

எளிதாக பெறப்படாத நடுநிலைபெயர். எளிதில் கிடைக்காத பொதுவானவை என்ற அங்கீகாரம் விக்கிபீடியாவிற்கு எளிதில் கிடைக்கும் போது அதன் நடைமுறைகள் விதிகள் நிர்வாகி அதிகாரங்கள் எல்லாம் இத்தனை குழப்பமாகவும், எளிதில் குழு ஆக்கிரமிப்புக்குள்ளாகும் வகையிலும் நிர்வாகிகள் நினைத்தால் எளிதில் எதையும் தூக்கலாம்(அப்புறம் போராடி பெற வழி உண்டு என்றாலும்) என்னும் போது நிச்சயம் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். இன்று நான் நாளை வேறு யாரேனும் விமர்சனம் செய்வார்கள்.

எனக்கு மின்மடலிலும் பின்னூட்டங்களிலும் மறுமொழிந்த அனைவருக்கும் நன்றி...

6 பின்னூட்டங்கள்:

said...

மழை போனாலும் தூவானம் நிக்காது போல :)-

said...

உண்மைதான்!

said...

போகிற போக்கில் என்னைப் பற்றி சிறிதும் ஆதாரம் இன்றி அவதூறாகவும் எழுதியிருந்தீர்கள். இப்படித்தான் உங்கள் வழமையான கட்டுரைகளை எழுதுவீர்கள் என்றால் விக்கிபீடியா ஐயோ பாவமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//போகிற போக்கில் என்னைப் பற்றி சிறிதும் ஆதாரம் இன்றி அவதூறாகவும் எழுதியிருந்தீர்கள்.//
டோண்டு சார் ஓகே ஓகே... எல்லாம் கேட்டுக்குங்க பா, டோண்டு சாருக்கு வர்ற கேள்விபதில்கள் எதுவும் தானே கேள்வி தானே பதில் டைப்பில் வருவதில்லை... எல்லாம் அவருக்கு அவரோட சிரேஷ்ட வாசகர்கள் அனுப்புகிற கேள்விகள் தான்.... ஆனா பாருங்க டோண்டு சார்கிட்ட மட்டும் தான் பிரபகாரன் மனைவி மதிவதினியை கடத்திக்கொண்டு வந்து திருமணம் செய்தாரா என்பது போன்ற கேள்விகள் வரும், ஆனால் வே.மதிமாறன் இன்ன பிற கேள்வி பதில் பகுதி எழுதுபவர்களுக்கு இந்த கேள்விகள் வராது...

said...

குழலி,

அப்ப தமிழ் விக்கிப்பீடியாவுக்கு முழு மதிப்பெண்ணா?

அப்புறம் ஏன் திருமாவின் உறுமல் பதிவினை நீக்கினீர்கள்?

said...

//மழை போனாலும் தூவானம் நிக்காது போல :)-//

குழலியின் முந்தைய பதிவில் நான் கேட்ட ஒரு கேள்விக்கு கூட பதில் வரவில்லை :( :(