ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ள விக்கிபீடியாவை ஏன் நான் ஆதரிப்பதில்லை

விக்கிப்பீடியா என்பது ஒரு ரெஃபரன்ஸ் தளமாக பயன்படுத்தப்படும் அளவிற்கு எதைப்பற்றியும் அதை மேற்கோள் காட்டி சொன்னால் அது சரியானதாக இருக்கும் என்று நம்ப தகுந்த அளவிற்கு செல்வாக்கு செலுத்த கூடிய ஒரு தளம், அப்படியென்றால் அந்த தளம் எத்தனை தூரம் நடுநிலையாக இருக்க வேண்டும்? எத்தனை தூரம் எந்த குழுவின் ஆதிக்கமும், தனி நபர்களின் ஆதிக்கம் இல்லாமல் இருக்க வேண்டும்? ஆனால் அப்படி இருக்கின்றதா தமிழ் விக்கி பீடியா தளம்?

இது பற்றியெல்லாம் எதுவுமே இல்லாமல் விக்கிபீடியா என்பது ஏற்கனவே அதில் உள்ளே புகுந்த ஒரு குழுவின் ஆதிக்கத்தில் இருப்பது மிக மோசமானது...

சில ஆண்டுகளுக்கு முன் விக்கிபீடியாவில் தகவல்களை தேடியபோது அதிர்ச்சியே மிஞ்சியது... உதாரணத்திற்கு பாமக அன்புமணி அவர்களை பற்றி எழுதியிருந்த தகவல் உண்மைக்கு புறம்பானது, அது என்ன தகவல் என்றால் அன்புமணி அவர்கள் ஒரு பிராமண பெண்ணை அந்த பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக கடத்திக்கொண்டு திருமணம் செய்து கொண்டார் என இருந்தது, அன்புமணி ராமதாஸ் அவர்கள் திருமணம் செய்து கொண்டவர் கிருஷ்ணசாமி என்கிற காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரின் மகள், அவர் சிவப்பு நிறமாக இருப்பார் என்பதாலோ என்னவோ அவரை பிராமண பெண், கடத்திக்கொண்டு திருமணம் செய்துவிட்டார் என்றெல்லாம் இருந்தது, இதை நான் திருத்தி விட்டு வந்தால் மறுநாளே என் திருத்தம் அங்கே இல்லை, மீண்டும் பழைய கதையே அங்கே இருந்தது, பிரபலமான அரசியல் வாதி காங்கிரஸ் தலைவர், எம்.பி என்றெல்லாம் இருக்கும் ஒரு அரசியல்வாதியின் மகளை திருமணம் செய்திருந்த போதே இம்மாதிரி செய்திகளை விக்கிபீடியா தளத்தில், அதை மாற்றம் செய்தாலும் மீண்டும் மீண்டும் அங்கே வருகிறது.

பெரியார் பற்றியும் விக்கிபீடியாவில் எழுதப்பட்டிருந்த அவதூறுகளை திரு அவர்களும் அருள் போன்றோரும் மாற்றி மாற்றி எழுதி சலித்தே போய்விட்டார்கள், முதல்நாள் இவர்கள் மாற்றுவார்கள் மறுநாளே இவர்கள் மாற்றியது இருக்காது... காரணம் ஏற்கனவே அதில் உள்ளே புகுந்தவர்களின் ஆதிக்கத்தில் இருப்பதுவே, இன்றைக்கு விக்கிபீடியாவில் சேருபவருக்கு இருப்பதை விட முன்பே அதில் இணைந்தவர்களுக்கு பிரிவிலேஜ் அதிகம் என நினைக்கிறேன்.

டோண்டு போன்றவர்கள் வலைப்பதிவில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மதிவதினையை கடத்தி திருமணம் செய்துகொண்டாரா என்று தானே கேள்வி தானே பதில் போன்ற தம் வலைப்பதிவில் எழுதினால் யாருக்கும் பிரசிச்னையில்லை ஏனெனில் டோண்டு போன்றோரின் பக்க சார்புகளும் விருப்பு வெறுப்புகளும் நன்றாகவே வாசகர்களுக்கு தெரியும், ஆனால் விக்கிபீடியா ஒரு நடுநிலை தளமாக அதை மேற்கோள் காட்டும் தளமாக நம்(இணையத்தில் உள்ளவர்கள்) உழைப்பில் உருவாக்கி அதன் பின் அதில் இம்மாதிரி உண்மைக்கு புறம்பான தகவல்களை திருத்தி எழுதிணாலும் ஏற்கனவே அதில் நடுநிலைதளமாக பெயர் எடுத்துக்கொண்டு ஒரு சிலருக்கு ஒத்த மாதிரியான கருத்துகள் மட்டுமே அதில் வெளியாகும். நாம் எவ்வளவு மாற்றினாலும் மறுநாளே நம் மாற்றம் திருத்தப்படும்.

இது மாதிரியான ஒரு தளத்துக்கு நம் உழைப்பை தர வேண்டுமெனில் அதன் குறைகள், முன்பு சேர்ந்தவன் பின்பு சேர்ந்தவன் என்ற பிரிவிலேஜ், நடுநிலை கட்டுரை என முத்திரை குத்துவதும் பக்க சார்பு கட்டுரை என லேபில் ஒட்டுவதுமான குறைகள் எல்லாம் திருத்தப்படாமல் விக்கிபீடியாவுக்கு ஆதரவு அளிப்பது என்பது மிக தவறான ஒரு தகவலை பரப்புவதற்கு நாமும் காரணமாகிவிடும்.

எனவே தான் ஒரு சிலரின் ஆதிக்கத்தில் இருக்கும் விக்கிபீடியாவிற்கு நடுநிலை பெயர் கொடுத்து, உழைப்பை கொடுத்து அந்த சிலருக்கு சாதகமான கருத்துகளே நடுநிலை கருத்துகள், ரெஃபரன்ஸ் க்கு தகுந்தவை என்று கொண்டு போகப்படும் நிலைக்கு நானும் ஒரு காரணமாக இருக்க விரும்பவில்லை... அதனால் நான் விக்கி பீடியாவை ஆதரிப்பதில்லை...
தொடர்புள்ள பதிவுகள்
கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்: தமிழ் விக்கிபீடியா

வலைப்பதிவர்கள் விக்கிப்பீடியாவுக்கு ஆற்றக்கூடிய பங்களிப்புகள்

விடுபட்டவை » இன்று பதிவர்களுக்கான ...

93 பின்னூட்டங்கள்:

said...

புதிய தகவல்கள்; நன்றி

said...

வணக்கம் தருமி அய்யா, இவ்வளவு நாள் விக்கிபீடியா கூட்டம் போடுறதை நான் கவனிக்கலை இன்று பாலபாரதி பதிவை பார்த்தபின் தான் தெரியும், குறைகளை களையாமல், ஒரு சிலரின் ஆதிக்கத்தை ஒழிக்காமல் விக்கிபீடியாவை அதுவும் தமிழ்விக்கிப்பீடியாவை ஆதரிப்பதும் அதற்கு ஒரு முக்கிய ரெஃபரன்ஸ் இடம் தருவதும் மிக ஆபத்தானது...

said...

சில அல்லக்கைகளால் பதிவர் சந்திப்புகள் காந்தி சிலையிலிருந்து கிழக்கு பதிப்பக மொட்டைமாடிக்கு இடம் பெயர்ந்துள்ளது, விக்கிபீடியா கூட்டமும் கிழக்கு பதிப்பக மொட்டைமாடியில் :-(

said...

கொழலி ஐயா நீங்க நடத்தும் டேமிள்வெளி மாதிரி நடுநிலையா விக்கிக்கிறபீடியா இல்லைங்கறீங்க. நீங்க சொன்னா சரியா தானிருக்கும். ஏண்ணா மரம்வெட்டி ஐயாவை பத்தியே தப்பா போட்டிருக்கானுங்கன்னு சொல்றீங்களே.

said...

அனானி பின்னூட்டம் போட்ட மைடியர் நண்பரே என்கிட்ட பேசுறது, என் கட்சி சார்பு மண்ணாங்கட்டி, நடத்துற புடுங்கிகள் பற்றியெல்லாம் இருக்கட்டும், நீர் போய் அங்கே புடுங்குங்கள், நான் சொன்னதை பற்றி விவாதியுங்கள், இல்லையென்றால் அல்லக்கையாக இருந்து போ... நீயும் பொழக்கனுமே அட்லீஸ்ட் அல்லக்கையாகவாது இருந்து...

said...

கொழவி ஐயா நீரும் புடுங்க மாட்டீர். புடுங்கறவனையும் புடுங்க உட மாட்டீர். இப்படியே தமிழையும், தமிழனையும் உருப்படாம செய்யுங்கோ. நன்னா இருங்கோ.

said...
This comment has been removed by a blog administrator.
said...

அனானி அல்லக்கை புடுங்கறவங்கோ ஒழுங்கா புடுங்கினா நாங்க ஏன் ஓய் கேட்கறோம்... பேரை சொல்லி பேசினால் உமக்கு ஏதாவது கிடைக்கும் அனானியா பேசினா என்ன கிடைக்கும் அங்கே?

said...

//கொழவி ஐயா நீரும் புடுங்க மாட்டீர்//

கொழலிக்கும் கொழவிக்கும் வித்தியாசம் தெரியாதா அனானி. ஒருவேளை குளவி போல கொட்டுபவர் என்று இலக்கியநயத்தோடு சொல்ல வந்தீரா.

said...

//புடுங்கறவங்கோ ஒழுங்கா புடுங்கினா நாங்க ஏன் ஓய் கேட்கறோம்... //

அதையே தான் ஓய் நாமும் கேட்குறோம். உம்மால புடுங்க முடியாது. ஆனா எவனாவது புடுங்கனான்னா அவனுக்கு புடுங்க தெரியலைன்னு நொட்டை மட்டும் சொல்லமுடியும். இப்படியே நொட்டிகிட்டு இருங்கோ. தமிளு நல்லா வளந்துடும்.

said...

ஆளாளுக்கு புடுங்குறதை பத்தியே பேசுறீங்க. எல்லாரும் பெரிய புடுங்கிகளோ.

said...

தேவையில்லாமல் பாதை மாறுகிறது, விக்கிபீடியா முயற்சியை நான் எதிர்க்கவில்லை, அதில் உள்ள குறைகளை நீக்காமல் ஒரு சிலரின் ஆதிக்கத்தில் இருப்பது களையப்படாமல் விக்கிபீடியாவை ஆதரிப்பது மிக மோசமான விளைவையே ஏற்படுத்தும்...

பிரச்சினையை சொல்லிவிட்டேன் இது தொடர்பாக ஆக்கப்பூர்வமாக ஏதேனும் ஒரு முடிவுக்கு தமிழ் விக்கிபீடியா ஆக்கிரமிப்பு குழு, ஸாரி ஸாரி தமிழ்விக்கிபீடியா ஆதரவு குழு வந்தால் சரி

said...

குழலி இன்னிக்கு இங்கென தான் கும்மின்னு சொல்லி அனுப்பினாங்க. ஸ்டார்ட் மீஜிக்.

கெழக்கு செவக்கையிலே
கீரை வெதைக்கையிலே

said...

ம்ம்ம் அப்படியா??

said...

கொழலி சார் உங்க பிரச்சினை இன்னானு தெளிவா சொல்லுங்கோ. விக்கிபீடியா கூட்டம் மேற்கு பதிப்பகம் கொட்டை மாடியில் நடப்பதா. இல்லைன்னா சுவிசங்கர் பேசுவதா.

said...

// தமிளு நல்லா வளந்துடும்.
//
தமிழ் ஒரு குழு சார்பாக வாழ்ந்து வாழ்ந்து தான் 60 வருசம் முன்னால வரைக்கும் நாசமா போச்சி, தமிழ் ஒரு தனி நபர் சார்பாக வாழ்ந்து தான் இதோ இன்னைக்கு நாசமாக போய்கொண்டிருக்கிறதூ, இப்படியெல்லாம் இல்லாமல் தமிழ் எல்லாருக்கும் பொதூவானதாக வாழட்டும், ஒரு குழுவுக்கோ ஒரு தனி நபருக்கோ சார்பாக வாழ்வதை விட வாழாமலே இருக்கட்டும்

said...

ஆட்டையில் அவுஸ்திரேலிய சங்கமும் பங்கு கொண்டிருக்கிறதா. நாம் சுவிஸ் சங்கத்தில் இருந்து பேசுகிறோம்.

said...

//கொழலி சார் உங்க பிரச்சினை இன்னானு தெளிவா சொல்லுங்கோ. விக்கிபீடியா கூட்டம் மேற்கு பதிப்பகம் கொட்டை மாடியில் நடப்பதா. இல்லைன்னா சுவிசங்கர் பேசுவதா.
//
அனானி நீங்கள் சொன்ன இரண்டை பற்றியும் என் பதிவில் ஒரு வரியாவது எழுதியிருக்கேனா? என் பிரச்சினை என்னவென்று தெளிவாக எழுதியிருக்கேன், ஒரு பக்க சார்பாக ஏற்கனவே விக்கிபீடியாவில் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு ஆதரவாக அமையும் ஒரு தளத்திற்கு அந்த குறைகள் களையப்படும் வரை நம் உழைப்பையும், ஆதரவையும் தர வேண்டிய அவசியமில்லை என்பதோடு அதை செய்தால் என்ன அபாயம் விளையும் என்பதையும் சொல்லியுள்ளேன்

said...

//அனானி நீங்கள் சொன்ன இரண்டை பற்றியும் என் பதிவில் ஒரு வரியாவது எழுதியிருக்கேனா? என் பிரச்சினை என்னவென்று தெளிவாக எழுதியிருக்கேன், ஒரு பக்க சார்பாக ஏற்கனவே விக்கிபீடியாவில் ஆக்கிரமித்துள்ளவர்களுக்கு ஆதரவாக அமையும் ஒரு தளத்திற்கு அந்த குறைகள் களையப்படும் வரை நம் உழைப்பையும், ஆதரவையும் தர வேண்டிய அவசியமில்லை என்பதோடு அதை செய்தால் என்ன அபாயம் விளையும் என்பதையும் சொல்லியுள்ளேன்//

கொழலி அண்ணே. அதுபோல இருக்கும் குறைகளை வெளிப்படையா பேசவும், தமிழுணர்வாளர்கள் பங்கெடுக்கவும் இந்த கூட்டத்தை ஒரு வாய்ப்பா பயன்படுத்திக்க ஏன் உமக்கு தோணலை. எப்பவும் எதையும் நொட்டு சொல்லிக்கிட்டே சில காலமாக புலம்பிக்கிட்டு திரியறீங்க. ஆக்கபூர்வமா யாராவது எதையாவது செஞ்சா நம்ம பங்களிப்பை கொடுக்கணும். இல்லேன்னா மூடிக்கிட்டு கிடக்கணும்.

இதுவரை தமிழுக்கு நீங்க என்னென்ன புடுங்கனீங்க. ஒரு குழுவிடம் மாட்டிக்கிட்ட தமிழ் விக்கீபீடியாவை எப்படி மீட்கப்போறீங்க. அதுக்கு என்னவெல்லாம் திட்டம் வெச்சுருக்கீங்க. இதையெல்லாம் ஒவ்வொண்ணா பட்டியல் போட்டு சொல்லுங்க பாப்போம்.

said...

//ஆக்கபூர்வமா யாராவது எதையாவது செஞ்சா நம்ம பங்களிப்பை கொடுக்கணும். இல்லேன்னா மூடிக்கிட்டு கிடக்கணும்.

இதுவரை தமிழுக்கு நீங்க என்னென்ன புடுங்கனீங்க. ஒரு குழுவிடம் மாட்டிக்கிட்ட தமிழ் விக்கீபீடியாவை எப்படி மீட்கப்போறீங்க. அதுக்கு என்னவெல்லாம் திட்டம் வெச்சுருக்கீங்க. //
ஓ எதுங்க ஆக்க பூர்வம்?? பெரியாரை ஈ.வெ.ராமசாமி என்றேழுதினால் பரவாயில்லை ஈ.வெ.ராமசாமி நாயக்கர் நாயக்கர் என்று எழுதுவாங்க அதை திருத்திவிட்டு வந்தால் உடனே மீண்டும் அதுவே வந்து நிற்கும், நாம் ஏதாவது எழுதினால் அந்த கட்டுரையை ஒரு பக்க சார்பு, விளம்பரம், நடுநிலையற்றது, திருத்தம் வேண்டுமென முத்திரை குத்தி விக்கி மேல பெரிய லேபிளா வரும்? இதெல்லாம் ஆக்கப்பூர்வமா?

இது தான் ஆக்கப்பூர்வமென்றால் சத்தியமாக நான் குரல் எழுப்ப தான் செய்வேன்.. இன்றைக்கு கூட்டத்தை நடத்துறாங்க இல்லையா அங்கே இது பற்றி பேசட்டும்... எவனுமே சொல்லலைனா எவன் தான் பேசுவது?

said...

//இது தான் ஆக்கப்பூர்வமென்றால் சத்தியமாக நான் குரல் எழுப்ப தான் செய்வேன்.. இன்றைக்கு கூட்டத்தை நடத்துறாங்க இல்லையா அங்கே இது பற்றி பேசட்டும்... எவனுமே சொல்லலைனா எவன் தான் பேசுவது?//

இதையெல்லாம் பேசுங்க. இதையெல்லாம் கேளுங்கன்னா பதிவு எழுதியிருக்கீங்க. பதிவை நீங்களே ஒருமுறை படிச்சி பாருங்க குழலி. எவன் எவன் மேலேயோ உமக்கு இருக்கும் வயித்தெரிச்சலில் வாந்தி எடுக்கறீங்க.

விக்கிபீடியாவுக்கு பங்களிப்பார்கள் தேவைன்னு ரவிசங்கர் எவ்வளவு நாளா கதறுராரு. ஒருத்தனுக்கு ஒருத்தன் இங்கே அரசியல் சண்டை போடுறதை விட்டு எத்தனை பேரு போனீங்க. பார்ப்பானுங்க ஒத்துமையா போனானுங்க. அவனுங்களுக்கு தேவையானதை சாதிச்சிக்கிட்டானுங்க. கடைசிவரைக்கும் பாப்பானுங்களை பாத்து பாத்து செவத்துலே தலையை முட்டிக்கிட்டு சாகணும்னு தமிழன் தலையிலே எழுதி வெச்சிருக்கு.

said...

எச்சூஸ் மீ. என்ன பிரச்னை இங்க?
தமில்வெளிலாம் நடத்துறீங்க...இப்படி சலிச்சுக்கலாமா?

ஒன்னு பண்ணுங்க? விக்கி தமிழ்ல விக்கி-தமிழ் பத்தி ஒரு குறிப்பு போடுங்க. பாப்பானுங்க இப்படி சலிக்காம எழுதி எழுதி தான் வரலாறுகளையே மாத்தி எழுதி என்னிக்கோ வால்மீகி டாபர்மேன் நடந்தே லங்காவுக்கு போயிட்டு வந்துட்டு சிறீமான் ராமன் கட்டின பாலம்னு டயலாக் உட்டுட்டு போயிட்டான்.

ஒன்னு பண்ணுங்க என்னன்ன மாற்றங்கள் செய்றீங்களோ அதையெல்லாம் காபி பேஸ்ட் பண்ணி வெச்சுக்கோங்க. எப்பப்போ நீங்க பண்ணதை மாத்தியிருக்கோ அப்பப்போ நீங்களும் திருத்தி எழுதிட்டு வாங்க. சலிச்சா வரலாறுகள் மாற்றி எழுதப்படும் தான்.
கிழக்கு பதிப்பகத்தார் புத்தகங்களே விக்கிய பாத்து தான் எழுதறாங்களாம்

அஹா அஹா அஹா

said...

இராம.கி அய்யா போன்றவர்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழர் தொடர்பான உண்மையான விவரங்கள் விக்கிபீடியாவில் திருத்தபடாதவாறான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

said...

//ஈ.வெ.ராமசாமி என்றேழுதினால் பரவாயில்லை ஈ.வெ.ராமசாமி நாயக்கர் நாயக்கர் என்று எழுதுவாங்க//

என்னவோ ம.வெ.ராமதாஸ் நாயக்கர்னு எழுதிட்டாப்புலே குதிக்கறீங்க.

said...

//ஒருத்தனுக்கு ஒருத்தன் இங்கே அரசியல் சண்டை போடுறதை விட்டு எத்தனை பேரு போனீங்க. //
அனானி அண்ணே அங்கே போகாமயா அண்ணே பதிவில் எழுதிய விசயம் தெரிய வந்தது எனக்கு? வெறுத்து போய் தானே அண்ணே விலகி வந்தேன்...

said...

//டோண்டு போன்றவர்கள் வலைப்பதிவில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மதிவதினையை கடத்தி திருமணம் செய்துகொண்டாரா என்று தானே கேள்வி தானே பதில் போன்ற தம் வலைப்பதிவில் எழுதினால் யாருக்கும் பிரசிச்னையில்லை ஏனெனில் டோண்டு போன்றோரின் பக்க சார்புகளும் விருப்பு வெறுப்புகளும் நன்றாகவே வாசகர்களுக்கு தெரியும்.//
மிகமிகத் தவறான, அவதூறான புரிதல். முதற்கண் நீங்கள் நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி எனக்கு வரும் கேள்விகள் மற்றவர்களிடமிருந்து வருபவையே. ஒரு குறிப்பிட்ட வாரம் கேள்விகள் எதுவும் வராததால் அப்பதிவே வரவில்லை.

நீங்கள் குறிப்பிடும் கேள்வியை நான் தேடி எனது 28.10.2008 தேதியிட்ட பதிவிலிருந்து கண்டெடுத்தேன், http://dondu.blogspot.com/2008/10/blog-post_28.html

இரணியன் என்னும் பெயரில் கேட்ட அந்த ஐந்தாவது கேள்வியையும் பதிலையும் இங்கு மீண்டும் பிரசுரிக்கிறேன்:

5. புலிகள் தலைவர் பிரபாகரன் தன் மனைவியை கடத்தி வந்து கட்டாய திருமணம் செய்தாரா?
பதில்: அவர் திருமணம் நடந்து பல ஆண்டுகள் கடந்து, அவருக்கு வளர்ந்த பிள்ளைகளும் இருக்கும்போது இக்கேள்வியே தேவையற்றது.

ஆக, நான் ஒருவரது பெர்சனல் வாழ்க்கை சம்பந்தமாக எதுவும் எழுதுவதில்லை. சோ அவர்கள்தான் எனக்கு இதில் ரோல் மாடல்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//இன்று பாலபாரதி பதிவை பார்த்தபின் தான் தெரியும், குறைகளை களையாமல், ஒரு சிலரின் ஆதிக்கத்தை ஒழிக்காமல் விக்கிபீடியாவை அதுவும் தமிழ்விக்கிப்பீடியாவை ஆதரிப்பதும் அதற்கு ஒரு முக்கிய ரெஃபரன்ஸ் இடம் தருவதும் மிக ஆபத்தானது...//

பாலபாரதி தான் பெரியாரின் பேரனாச்சே. அவ்ர்ட்ட சொல்லுங்களேன். பெரிய மனசு பண்ணி அவாக்களிடம் பேசுவார்

said...

இனம் இனத்தோடு தான் சேரும்னு சும்மாவா சொன்னாங்க?
ஏ...யாரப் பத்தி பேசற் நீயி?

said...

//அனானி அண்ணே அங்கே போகாமயா அண்ணே பதிவில் எழுதிய விசயம் தெரிய வந்தது எனக்கு? வெறுத்து போய் தானே அண்ணே விலகி வந்தேன்...//

ஆமா ரெண்டு முறை திருத்தியிருப்பீங்க. பாப்பானும் மூணு முறை நீங்க திருத்துனதை திருத்தியிருப்பான். உடனே வந்து விக்கிபீடியாவில் பாப்பான் அட்டகாசம்னு பதிவு போட்டுருப்பீங்க.

ஏனய்யா. பாப்பானால மூணு முறை திருத்தி பொய்யை ஏத்தமுடியுதுன்னா. உம்மால ஏனய்யா நாலாவது முறையா உண்மைக்காக திருத்த முடியல.

said...

//கொழலி அண்ணே. அதுபோல இருக்கும் குறைகளை வெளிப்படையா பேசவும், தமிழுணர்வாளர்கள் பங்கெடுக்கவும் இந்த கூட்டத்தை ஒரு வாய்ப்பா பயன்படுத்திக்க ஏன் உமக்கு தோணலை//

அனானி சொல்வதை ஏற்கிறேன். நாம் மரம்வெட்டி வீணாக்கிய நேரத்தை தமிழ் விக்கிபீடியாவுக்காக செலவழித்திருக்கலாம்.

இன்னொரு மரம்வெட்டி

said...
This comment has been removed by a blog administrator.
said...

ஒலகப்படம் கூட கெழக்குலே விடியுதாமே. நம்ம ஆட்களுக்கு நெஜமாவே பைத்தியம் கிய்த்தியம் பிடிச்சிகிச்சா.

said...

நண்பர்களே கறுப்பு சிவப்பு இயகத்தில் ஊடுறுவிய பூணுல் பற்றியெல்லாம் வேறெங்க்காவது பேசிக்கொள்ளுங்கள், அவர்களின் டவுசரை வேறு இடத்தில் கழற்றுங்கள் தாராளமாக, இங்கே சொல்லப்பட்ட பிரச்சினைக்கு வேறு சாயம் ஏறாமல் போக வேண்டுமென்பதே மிக முக்கியம்

நன்றி

said...

நண்பர்களே ஒரே ஒரு வேண்டுகோள், இன்று விக்கிபீடியா கூட்டத்திற்கு செல்பவர்கள் தயவு செய்து இதைப்பற்றி விவாதிக்க வேண்டுகிறேன்...

ஏற்கனவே விக்கிபீடியாவில் உள்ளே புகுந்துள்ள கும்பலின் பிரிவிலேஜ் குறைக்கப்படாமல் அங்கே சென்று எழுதுவதில் எந்த பயனும் இல்லை.... அது நடுநிலையாகவும் ரெஃபரன்ஸ் செய்ய தகுந்த தாகவும் இருக்காது, நம்(இணைய பங்களிப்பாளர்கள்) உழைப்பை திருடி ஒரு சிலரின் கருத்துகளை நடுநிலை என்று சொல்ல மட்டுமே முடியும்...

5 வருடமாக பலரும் முயன்றும் ஈ.வே.ராமசாமி நாயக்கரை , ஈ.வே.ராமசாமி ஆக்க இயலவில்லை விக்கிபீடியாவில் என்பதிலிருந்தே புரிய்யவில்லையா?

said...

ஏகப்பட்ட அனானிகள் கிழக்குதிசையிலிருந்து குழலி டவுசர் கயட்டவே படையெடுத்து வந்திருக்கிறார்கள் போலிருக்கு. அனானிகளே முதல்லே ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கங்க. இப்போவேணா குழலி இம்சை அரசன் இருவத்தி மூணாவது புலிகேசியா இருக்கலாம். முன்னாடியெல்லாம் குழலியும் ரவுடிதான். குழலியும் ரவுடிதான். ழலியும் ரவுடிதான். லியும் ரவுடிதான். யும் ரவுடிதான். ம் ரவுடிதான். ரவுடிதான்.

said...

இங்கு சில அனானி தர்மகத்தாக்களுக்கு சலிக்காமல் பதில் தரும் நீர் தமிழ் விக்கியில் சலிக்காமல் திருத்தத்தை திருத்த மறந்தது ஏன் ஏன் ஏன்???

said...

கொஞ்சம் தலை சுத்துது. குழலி சில தவறுகளைக் காண்பிக்கிறார். அந்தத் தவறுகளைக் களையெடுக்க ஒரு கூட்டம்.

இதுக்கு மேல என்னன்னு தெரியலைங்க........

said...

//உதாரணத்திற்கு பாமக அன்புமணி அவர்களை பற்றி எழுதியிருந்த தகவல் உண்மைக்கு புறம்பானது, அது என்ன தகவல் என்றால் அன்புமணி அவர்கள் ஒரு பிராமண பெண்ணை அந்த பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக கடத்திக்கொண்டு திருமணம் செய்து கொண்டார் என இருந்தது,//

குழலி, மேலுள்ள தகவலை எங்கிருந்து எடுத்தீர்கள்? விக்கிப்பீடியாவில் கீழே குறிப்பிட்ட இணைப்பில் அன்புமணி ராமதாஸ் கட்டுரையின் வரலாறு பதிந்துள்ளது. யார் யார் எதனையெல்லாம் மாற்றினார்கள், யார் பதிந்தார்கள் என்ற முழு வரலாறும் பதிந்துள்ளது. நீங்கள் குறிப்பிட்ட மாதிரி எதுவும் காணப்படவில்லையே?
அன்புமணி ராமதாஸ் கட்டுரையின் வரலாறு

said...

1. விக்கிப்பீடியாவில் ஈ.வெ.ராமசாமி என்ற தலைப்பில் தான் கட்டுரை உள்ளது.

2. அன்புமணி ராமதாஸ் கட்டுரையின் முந்தய மாற்றங்களில் எதிலும் அவரின் திருமணத்தை பற்றியோ அல்லது அவரது மனைவி பற்றியோ குறிப்புகள் இல்லை (காண்க: பக்க வரலாறு)

இது ஏதோ தமிழ் விக்கிப்பீடியா பற்றிய வீண் வதந்து போல் தெரிகிறது.

said...

அன்பின் குழலி,

உங்கள் இந்த வலைப்பதிவுக்கான இணைப்பை இன்னொரு வலைப்பதிவில் பார்த்தேன். உங்களுடைய பதிவைப் பார்த்தபோது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. விக்கிப்பீடியாவில் "புகுந்துள்ள குழுக்கள்" பற்றியெல்லாம் எழுதியிருக்கிறீர்கள். இதனால், உங்கள் பதிவில் உள்ள கருத்துக்கள் சிலவற்றைத் தெளிவாக்க எண்ணுகிறேன்.

நான் தமிழ் விக்கிப்பீடியாவில் அதன் தொடக்க காலத்திலிருந்தே பணியாற்றி வருபவன். 2003 இல் பணியாற்றத் தொடங்கி இன்றுவரை ஐந்தரை ஆண்டுகளுக்கும் மேலாக இங்கே தொடர்ச்சியாகச் செயலாற்றி வருகிறேன். எனவே உங்களுடைய கருத்துக்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய கடமை எனக்கு உண்டு.

நான் 2003இல் விக்கிப்பீடியாவில் இணந்த போது தனியாகவே இணைந்தேன். இப்போதும் தனியாகவே பணியாற்றி வருகிறேன். இது போலவே இங்கே பணியாற்றும் மற்றவர்களும் தனித்தனியாகவே பணியாற்றி வருகின்றனர். இங்கே எவரும் குழுக்களாக இயங்குவதில்லை, அதற்கான வசதிகளும் கிடையாது.

//இன்றைக்கு விக்கிபீடியாவில் சேருபவருக்கு இருப்பதை விட முன்பே அதில் இணைந்தவர்களுக்கு பிரிவிலேஜ் அதிகம் என நினைக்கிறேன்//

என எழுதியுள்ளீர்கள். அது போல் எதுவும் விக்கிப்பீடியாவில் கிடையாது. தமிழ் விக்கிப்பீடியா தொடங்கியபோது இணைந்த எனக்கு என்ன உரிமைகள் உள்ளனவோ அதே உரிமைகளே நேற்று இணைந்த ஒருவருக்கும் உண்டு.

இது பலர் சேர்ந்து உருவாக்கும் ஒரு கலைக்களஞ்சியத் திட்டம். எல்லாத் திட்டங்களையும் போலவே இதற்கும் சில அடிப்படைக் கொள்கைகள் உண்டு. முக்கியமாக இது ஒரு கலைக்களஞ்சியம் என்பதால் இதில் இடம்பெறும் கட்டுரைகள் கலைக்களஞ்சியத்துக்குரிய வடிவத்தில் இடம்பெற வேண்டும். பத்திரிகைகளில் வருவது போலவோ, வலைப்பதிவுகளில் எழுதுவது போலவோ, துண்டுப் பிரசுரம் போலவோ இங்கு கட்டுரைகள் இடம்பெறக்கூடாது. எந்த விடயத்திலும் நடுநிலை கடைப் பிடிக்கப்பட வேண்டும் என்பது இன்னொரு அடிப்படைக் கொள்கை. இதனால் கட்டுரைகள் ஒரு பக்கச் சார்பாக இருத்தல் ஆகாது.

ஆனால் இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்துவதற்கு உரிமை பெற்ற ஆசிரியர் குழு போன்ற எதுவும் இங்கே இல்லை. இந்தக் கொள்கைகளை ஓரளவுக்குப் புரிந்து கொண்டவர்கள் இவ் விதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதைக் கவனித்துக் கொள்கிறார்கள். இவர்களும் கூட ஒருவர் எழுதிய கட்டுரையில் உடனடியாக மாற்றங்கள் எதையும் செய்துவிட முடியாது. ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு உரையாடல் பக்கம் உள்ளது. கட்டுரைகள் தொடர்பான பிரச்சினைகள் எதுவும் இருப்பின் எவரும் இந்த உரையாடல் பக்கத்தில் குறிப்பு விட முடியும். இக்குறிப்புக்கள் எழுதியவருக்கு ஏற்புடையதாக இருந்தால் அவரே கட்டுரையில் தேவையான மாற்றங்களைச் செய்வார். இல்லாவிட்டால் இது பயனர்களால் விவாதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கட்டுரைகளை எழுதுபவர்கள் விக்கிப்பீடியாவின் (தமிழ் மட்டும் அல்ல) பொதுவான கொள்கைகளுக்கு அமைவாக எழுதினால் எப் பிரச்சினையும் எழுவதற்கு நியாயம் இல்லை. வெளிப்படையாகத் தனிப்படவர்களுக்கோ அல்லது இயக்கங்களுக்கோ பாதிப்பை விளைவிக்கக்கூடிய விடயங்களைச் சான்றுகள் இல்லாமல் விக்கிப்பீடியாவில் எழுத முடியாது. நீங்கள் குறிப்பிட்டது போல்,

//...ஒரு பிராமண பெண்ணை அந்த பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக கடத்திக்கொண்டு திருமணம் செய்து கொண்டார்//

என்று நம்பகமான சான்றுகள் எதுவும் இல்லாமல் எழுதியிருந்தால் எவரும் அதனை நீக்கிவிடலாம். அதே போலவே

"அவர் இந்தியாவிலுள்ள எல்லா அமைச்சர்களிலும் சிறந்தவர்"

என்று யாராவது எழுதினாலும் அது நிச்சயமாக விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்குப் பொருந்தாது. தமிழ் விக்கிப்பீடியாவில் "அன்புமணி ராமதாஸ்" பற்றிய கட்டுரையில் நீங்கள் குறிப்பிட்ட கருத்து எதுவும் கிடையாது. நீங்கள் எங்கே பார்த்தீர்கள் என எனக்குத் தெரியவில்லை.

ஈ. வே. ரா தொடர்பான கட்டுரை பற்றிய உங்களுடைய கருத்தும் ஆச்சரியத்துக்கு உரியதாகவே உள்ளது. பல ஆண்டு காலமாகவே இது பற்றிய கட்டுரைத் தலைப்பிலும் உள்ளடக்கத்திலும் அவரது பெயர் ஈ. வெ. ராமசாமி என்றே உள்ளது. ஆரம்பத்தில் ஈ. வெ. ராமசாமி நாயக்கர் என்று இருந்ததை இன்னொரு பயனரின் வேண்டுகோளை அடுத்துச் சில நாட்களுக்குள்ளாகவே எழுதியவர் மாற்றிவிட்டார்.

எனது பதிலின் எஞ்சிய பகுதியை அடுத்த குறிப்பில் பார்க்கவும்.

said...

அன்பின் குழலி,

உங்கள் பதிவின் இறுதியில்

//அதன் குறைகள், முன்பு சேர்ந்தவன் பின்பு சேர்ந்தவன் என்ற பிரிவிலேஜ், நடுநிலை கட்டுரை என முத்திரை குத்துவதும் பக்க சார்பு கட்டுரை என லேபில் ஒட்டுவதுமான குறைகள் எல்லாம் திருத்தப்படாமல் விக்கிபீடியாவுக்கு ஆதரவு அளிப்பது என்பது மிக தவறான ஒரு தகவலை பரப்புவதற்கு நாமும் காரணமாகிவிடும்.//

என்று ஒரு முடிவுரையும் கொடுத்திருக்கிறீர்கள். இது பற்றி நீங்களும், இதை வாசிக்கும் பிறரும் தெளிவாகச் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். முதலாவதாக தமிழ் விக்கிப்பீடியா இங்கே பங்களிக்கும் எவருக்கும் சொந்தமானது அல்ல. இதில் எனக்கும், உங்களுக்கும், பிற பயனருக்கும் ஒரே மாதிரியான உரிமைகளே உண்டு. எனக்குச் சரி என்று படுவதை நான் செய்கிறேன். அதுபோலவே மற்றவர்களும் செய்கிறார்கள். கருத்து வேறுபாடுகள் இருப்பின் கலந்து உரையாடித் தீர்வு எட்டப்படுகிறது. எனவே ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தமிழ் விக்கிப்பீடியா எப்படி இருக்கிறது என்பது அது எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்துப் பங்களிக்கும் பயனர்களின் புரிந்து கொள்ளலைப் பிரதிபலிக்கின்றது எனலாம். எனவே வெளியில் இருக்கும் ஒருவருக்கு இது குறித்த கருத்து வேறுபாடு எதுவும் இருப்பின் அவர் உள்ளே வந்து இது குறித்துக் கலந்து உரையாடித் தனது கருத்துக்களை மற்றவர்களும் ஏற்றுக்கொள்ளும்படி செய்யலாம்.

2003 ஆம் ஆண்டில் நான் பணியாற்றத்தொடங்கிய பின்னர் பல மாதங்கள் நான் மட்டுமே எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது தமிழ் விக்கிப்பீடியா என்னுடைய கருதை மட்டுமே பிரதிபலித்தது. பின்னர் படிப்படியாகப் புதியவர்கள் இணைந்தார்கள். புதிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. என்னுடைய கருத்துக்கள் பலவற்றையும் கூட நான் மாற்றிக்கொன்டேன். தமிழ் விக்கிப்பீடியா மேலும் முன்னேறியது. இப்போது 20-25 பேர்வரை முனைப்பாகச் செயல்படுகின்றனர். இவர்களில் பலரும் கூடத் தமது தொடக்ககாலக் கருத்துக்களைப் பொது நோக்குக்கு ஏற்ற வகையில் மாற்றிக் கொண்டதைக் கவைனித்துள்ளேன். எல்லோரும் ஒரே நோக்கத்துடன் ஒருமித்தே செயல்படுகிறோம். இன்னும் புதிதாக வருகிறவர்களும் எமது ஒருமித்த கருத்துக்களுக்கு வளம் சேர்க்க முடியும்.

இதனால் இங்கே கருத்து வேறுபாடுகள் எதுவுமே இல்லை என்று எண்ணிவிடாதீர்கள். இங்கே பங்களிக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான கருத்துக்கள் உண்டு. பொது நன்மைக்காக ஒவ்வொருவரும் கூடிய அளவு விட்டுக்கொடுத்து நடந்து கொள்கிறோம். கட்சி அரசியல், பிரதேச வேறுபாடுகள், மத வேறுபாடுகள் என்பவை தமிழ் விக்கிப்பீடியாவுக்குள் நுழைவதை நாங்கள் விரும்புவதில்லை.

ஆகவே தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழ்ச் சமூகத்தின் கருத்துக்களை கூடிய துல்லியத்துடன் பிரதிபலிப்பது என்பது எவ்வளவு பயனர்கள் இங்கே முனைப்பாகப் பங்களிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே உள்ளது. யாராவது திருத்தட்டும் அதன்பிறகு நானும் வருகிறேன் என்பது சரியான நிலைப்பாடாக இருக்காது. உங்களுடைய கருத்துக்கள் உங்களுடையவை, மற்றவர்கள் அதைத் தாங்களாகவே புரிந்து கொண்டு செயற்படவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது நியாயமில்லை.

நன்றி.

said...
This comment has been removed by the author.
said...

//ஆனால் அப்படி இருக்கின்றதா தமிழ் விக்கி பீடியா தளம்?//

எனவே நீங்கள் தமிழ் விக்கிபீடியா குறித்தே உங்கள் கருத்துக்களை முன்வைக்கிறீர்கள் என எடுத்துக்கொள்கிறேன்.


//சில ஆண்டுகளுக்கு முன் விக்கிபீடியாவில் தகவல்களை தேடியபோது அதிர்ச்சியே மிஞ்சியது... உதாரணத்திற்கு பாமக அன்புமணி அவர்களை பற்றி எழுதியிருந்த தகவல் உண்மைக்கு புறம்பானது, அது என்ன தகவல் என்றால் அன்புமணி அவர்கள் ஒரு பிராமண பெண்ணை அந்த பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக கடத்திக்கொண்டு திருமணம் செய்து கொண்டார் என இருந்தது,//

//விக்கிபீடியா தளத்தில், அதை மாற்றம் செய்தாலும் மீண்டும் மீண்டும் அங்கே வருகிறது.//


இக்கட்டுரை தமிழ் விக்கிபீடியாவில் இருந்ததா? ஆங்கிலத்திலா?

குறித்த கட்டுரையின் வரலாற்றை தற்போது முழுமையாகப் பார்வையிட்டேன். அவ்வாறான தகவல்கள் காணப்பட்டதற்கான தடயங்கள் இல்லை. நான் ஏதும் கவனிக்கத்தவறிவிட்டேனாக இருந்தால் திருத்தவும்.



//பெரியார் பற்றியும் விக்கிபீடியாவில் எழுதப்பட்டிருந்த அவதூறுகளை திரு அவர்களும் அருள் போன்றோரும் மாற்றி மாற்றி எழுதி சலித்தே போய்விட்டார்கள்//,

இக்கட்டுரையின் வரலாற்றையும் பரிசீலித்தேன்.
இக்கட்டுரையில் நானும் பங்களித்துள்ளேன். இக்கட்டுரையின் மாற்றங்களைப் பின்தொடர்ந்தும் வருகிறேன். நீங்கள் குறிப்பிட்ட திரு மற்றும் அருள் ஆகிய பெயர்கள் தொகுத்தவர் விபரத்தில் அங்கே இல்லை
அவதூறுப்பிரசாரங்கள் தீவிரமாக நடந்ததாகவும் நினைவில்லை.

//இன்றைக்கு விக்கிபீடியாவில் சேருபவருக்கு இருப்பதை விட முன்பே அதில் இணைந்தவர்களுக்கு பிரிவிலேஜ் அதிகம் என நினைக்கிறேன்.//

ஆம். திருத்தமாகச்சொன்னால், பல்வேறு தொகுப்புக்கள் மூலம் விக்கிபீடியர் சமூகத்தில் நன்மதிப்பை உருவாக்கிக்கொண்டவர்களுக்கு அணுக்கம் தொடக்கம் முடிவெடுக்கும்போதான அங்கீகாரமும் அதிகம்.


//ஆனால் விக்கிபீடியா ஒரு நடுநிலை தளமாக அதை மேற்கோள் காட்டும் தளமாக நம்(இணையத்தில் உள்ளவர்கள்) உழைப்பில் உருவாக்கி அதன் பின் அதில் இம்மாதிரி உண்மைக்கு புறம்பான தகவல்களை திருத்தி எழுதிணாலும் ஏற்கனவே அதில் நடுநிலைதளமாக பெயர் எடுத்துக்கொண்டு ஒரு சிலருக்கு ஒத்த மாதிரியான கருத்துகள் மட்டுமே அதில் வெளியாகும். நாம் எவ்வளவு மாற்றினாலும் மறுநாளே நம் மாற்றம் திருத்தப்படும்.//

ஆங்கில விக்கிபிடியாவில் ஈழத்தமிழர் நிலையில் இந்தக்குற்றச்சாட்டும், இயலாமை உணர்வும் எனக்கு அதிகமுண்டு. ஆனால் கட்டுரை நடுநிலைத்தன்மை தவறியிருக்கலாம் என்கிற அறிவித்தல் போடப்பட்டுள்ளது. உரையாடற்பக்கத்தில் பல மறுப்புக்களும் எதிர்வாதங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. நாம் அங்கே பெரும்பான்மையாக இல்லாத பிரச்சினை. தமிழ் விக்கிபீடியாவில் இவ்வாறான பிரச்சினைகள் இருப்பதாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

//முன்பு சேர்ந்தவன் பின்பு சேர்ந்தவன் என்ற பிரிவிலேஜ், //

ஏற்கனவே சொன்னபடி விக்கிபீடியாவுடனான உறவாடல், தொகுப்புக்கள் மூலம் நன்மதிப்பை உருவாக்கிக்கொண்டவர்களுக்கு அங்கே மதிப்பு அதிகம்.

//நடுநிலை கட்டுரை என முத்திரை குத்துவதும் பக்க சார்பு கட்டுரை என லேபில் ஒட்டுவதுமான //

ஓரிருவர் கட்டுரைக்கு எதிர்க்கருத்து தெரிவித்தாலேகூட கட்டுரை நடுநிலை தவறியிருக்கலாம் என்கிற அறிவித்தல் போடப்படுகிறது. அது முக்கியமானது. ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த எனது முந்தைய பதிலை இதில் பொருத்திப்பார்க்கவும்.

//குறைகள் எல்லாம் திருத்தப்படாமல் விக்கிபீடியாவுக்கு ஆதரவு அளிப்பது என்பது மிக தவறான ஒரு தகவலை பரப்புவதற்கு நாமும் காரணமாகிவிடும்.//

தவறான தகவல் பரப்பப்பட்டுவிடாதிருக்க பல படிநிலைகளில் மாற்று ஏற்பாடுகள் விக்கிபீடியாவில் உண்டு. இது தொடர்பாக விரிவாக எழுதுகிறேன்.


//எனவே தான் ஒரு சிலரின் ஆதிக்கத்தில் //

நீங்கள் அடிக்கடி இந்தக்குற்றச்சாட்டினைச் சொல்லுகிறீர்கள்.
நீங்கள் உங்கள் பெயரில் பயனர் கணக்கொன்றை வைத்திருந்து உங்களுக்கு வேண்டிய திருத்தங்களை, தொகுப்புக்களைச் செய்துள்ளீர்களா?
தொகுப்புக்கள் மாற்றப்பட்ட நிலையில் ஏனைய விக்கிபீஇட்யர்களுடனோ அல்லது குறித்த கட்டுரையின் உரையாடற் பக்கத்திலோ உங்கள் பெயரில் நீங்கள் முறையிட்டுள்ளீர்களா?

நீங்கள் உங்கள் பெயரில் மேற்கொண்ட உரையாடல்கள் அநீதியாய் புறக்கணிக்கப்பட்டமையை காட்டும் தொடுப்புக்கள் தந்தால் வசதியாயிருக்கும்.

said...

ore oru solution dhaan keedhu.

ariya tamil wikipedia

dravida tamil wikipedia nu rendaa pirichida vendiyadhudhan

:)

said...

//டோண்டு போன்றவர்கள் வலைப்பதிவில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மதிவதினையை கடத்தி திருமணம் செய்துகொண்டாரா என்று தானே கேள்வி தானே பதில் போன்ற தம் வலைப்பதிவில் எழுதினால் யாருக்கும் பிரசிச்னையில்லை ஏனெனில் டோண்டு போன்றோரின் பக்க சார்புகளும் விருப்பு வெறுப்புகளும் நன்றாகவே வாசகர்களுக்கு தெரியும், //

:)

இந்தவாரா டோண்டு பதில்களில் இது தொடர்பாக 2 - 3 கேள்விகள் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

said...

டோண்டு இங்க வந்து எல்லோரையும் பார்க்கச் சொல்லி விளம்பரம் கொடுத்திருக்காரு!
அதான் வந்தேன். நானும் நிறைய உண்மைக்குப் புறம்பான செய்திகளை படிக்க நேர்ந்தது என்பதை இங்கு பதிவு செய்கிறேன்.

said...

//ஆங்கில விக்கிபிடியாவில் ஈழத்தமிழர் நிலையில் இந்தக்குற்றச்சாட்டும், இயலாமை உணர்வும் எனக்கு அதிகமுண்டு. ஆனால் கட்டுரை நடுநிலைத்தன்மை தவறியிருக்கலாம் என்கிற அறிவித்தல் போடப்பட்டுள்ளது. உரையாடற்பக்கத்தில் பல மறுப்புக்களும் எதிர்வாதங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. நாம் அங்கே பெரும்பான்மையாக இல்லாத பிரச்சினை. தமிழ் விக்கிபீடியாவில் இவ்வாறான பிரச்சினைகள் இருப்பதாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
//
மயூரன் பெரும்பாண்மை என்று சொல்லவருகிறீர்களே, அதே பெரும்பாண்மையை தமிழில் குழுக்கள் பெறும்போதூ என்ன செய்ய இயலும், ஆங்கில விக்கிபீடியாவில் நேர்ந்த அதே அனுபவம் இங்கே நேராதா? விக்கிபீடியா பெரும்பாண்மைக்கு சாதகமான ஒன்று? குழு இயக்கம், குழுவாக அட்மினை கைப்பற்றுதல் போன்றவற்றுக்கு சாதகமான நடைமுறைகளை கொண்ட ஒன்று...

மயூரன், ஆங்கிலவிக்கிபீடியாவில் நடந்த ஒன்று, மேலும்
தமிழ் விக்கி பீடியாவிலும் கூட ஒன்றும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தோன்றவில்லை, மேலும் இப்படி காண்பிப்பதால் எனக்கொன்றும் எவ்வித தனிப்பட்ட காரணமோ லாப நட்டங்களோ இல்லை,

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார்.

கடைசிவரை அவர் எந்த சாதியை எதிர்த்து போராடினாரோ அதையே பின்னால் போட்டு அந்த பெயராலும் அழைக்கப்படுகிறார் என்றால் அப்படி எத்தனை சதவீதம் ஆட்கள் அழைக்கிறார்கள்? ராஜாஜியை கூட குல்லுக பட்டர் என்று அழைத்தார்கள் சிலர், கருணாநிதியை கூட சொட்டை தலையன் என்று அழைக்கிறார்கள், ஆங்கில விக்கிபீடியா அனுபவம் தமிழுக்கு வராது என்பது என்ன நிச்சயம்? ஆங்கில விக்கிபீடியாவில் குழுக்கள் கைப்பற்றியது போல கைப்பற்றும் அத்தனை வாய்ப்புகளும் உள்ளது ஏனெனில் விக்கிபீடியா என்ற சிஸ்டத்தின் நடைமுறையில் உள்ள வாய்ப்புகளும் தவறுகளும் அப்படியானவை, அவைகளை தமிழ் விக்கிபீடியா என்ற துணைக்குழுவால் விக்கிபீடியா விதிகளை மாற்ற இயலுமா? இயலாது எனில் ஏன் நாம் விக்கிபீடியாவை பிடித்து தொங்க வேண்டும்?

மயூரநாதன் உங்கள் //இதில் எனக்கும், உங்களுக்கும், பிற பயனருக்கும் ஒரே மாதிரியான உரிமைகளே உண்டு.
// வரிகளுக்கு மயூரேசனின் விளக்கம் சரியாக இருக்கும்...


//இன்றைக்கு விக்கிபீடியாவில் சேருபவருக்கு இருப்பதை விட முன்பே அதில் இணைந்தவர்களுக்கு பிரிவிலேஜ் அதிகம் என நினைக்கிறேன்.//

ஆம். திருத்தமாகச்சொன்னால், பல்வேறு தொகுப்புக்கள் மூலம் விக்கிபீடியர் சமூகத்தில் நன்மதிப்பை உருவாக்கிக்கொண்டவர்களுக்கு அணுக்கம் தொடக்கம் முடிவெடுக்கும்போதான அங்கீகாரமும் அதிகம்.

said...

டோண்டு நேற்று இது தொடர்பாக கலந்துரையாடலில் கேள்வி எழுப்பியுள்ளார்... http://dondu.blogspot.com/2009/06/13062009.html அதற்கு அவர் பெற்ற பதில்

//பதிவர் குழலி அவர்கள் இது சம்பந்தமாக எழுதிய பதிவைக் குறிப்பிட்டேன். அதற்கு ஒரே மாற்று எல்லோரும் விக்கிபீடியாவில் பயனராக நுழைவதே. வெளியிலேயே நின்று புறக்கணிப்பவர்களுத்தான் இழப்புகள் என கூறப்பட்டது.
//
நல்லா கூட்டம் சேர்க்குறாங்கய்யா, இவங்க என்னவேணா எழுதுவாங்க கேட்டா வா வந்து சேர்ந்துக்கோ என்பார்கள், என் வலைப்பதிவில் நான் அட்மினாக இருந்து கொண்டு அத்தனை பேரையும் கேவலமாக எழுதுகிறேன் என்று வைத்துக்கொள்வோம் அதில் உள்ள தவறுகளை சுட்டி காட்டினால் நடைமுறை பிரச்சினைகளை சரி செய்ய எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் வா நீங்களும் என் வலைப்பதிவில் வந்து சேர்ந்து கொள்ளுங்கள் என்பது எந்த விதத்தில் நியாயம்?

said...

டோண்டு பதிவில் சொல்லப்பட்ட ஒன்று
//வெளியிலேயே நின்று புறக்கணிப்பவர்களுத்தான் இழப்புகள் என கூறப்பட்டது.//
என்ன மாதிரியான இழப்புகள்? இதைத்தான் பச்சையாக சொல்லப்போனால் ரவுடித்தனம் என்பது, அரசாங்கத்தின் சிஸ்டத்தின் குறைகளை சுட்டி காட்டினால் உள்ள வந்துக்கோ இல்லைன்னா உனக்கு தான் இழப்பு என்பது போலவே... விக்கிபீடியா என்பது பலரின் உழைப்பால் உருவாகுவது யாருக்கும் பிச்சை போடுவது அல்ல

said...

இவர் கூறும் பல குற்றச்சாட்டுக்கள் நியாமானவை. குறிப்பாக ஈழப் பிரச்சினை தொடர்பாக "பெரும்பான்மையானோர்" ஆங்கில விக்கியில் பல ஒரு சார்பு கருத்துப் பின்புலத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அதே பிரச்சினை தமிழிலும் இருக்கலாம்.

நீங்கள் விக்கிப்பீடியாவை சற்றுக் குறிகிய வட்டத்துக்குள் பாக்கிறீர்களோ என்று தோன்றுகிறது.

அரசியல் தவிர்த்தும் பாக்க வேண்டுகிறேன். குறிப்பாக அறிவியல் தொழில்நுட்ப கட்டுரைகளைப் பற்றி. அந்த கட்டுரைகளில் நாம் கவனத்தை தரலாம் அல்லவா.

சரி....இது சரிப்பட்டு வராது என்றால் உங்கள் கருத்து உடையவர்கள் சேர்ந்து ஏன் ஒரு மாற்று கலைக்களஞ்சியத்தை உருவாக்கக்கூடாது.

விமர்சிப்பது போதாது போதாது, மாற்றுக்களை சொல்லி செயற்படுத்திக் காண்பியுங்கள். விமர்சிப்பதை தாண்டு தீர்வுகளைச் சொல்லுங்கோ. இன்று இணையத்தில பல்துறைத் தகவல்களை தமிழில் புறவய நோக்கில் பகிரக்கூடிய தளம் எது?

அப்போ அங்கு வந்து எத்தனை பேர் குறை சொல்லுகிறார்கள் என்று பாக்காலாம்.

said...

பிராபகரன் /பதிவதனி கடத்தல் கலாயாணம் பாதி கரெக்ட், பாதி தப்பு. மதிவதனி புலிகளால் கடத்தப்பட்டு இலங்கையிலிருந்து இந்தியா கொண்டு வரப் பட்டார். ஆனால் கல்யாணம் நேரடியான விளைவு இல்லை.

http://dbsjeyaraj.com/dbsj/archives/650

Cupid or “Manmathan” struck Prabhakaran with his arrows in 1983-84.

Some displaced undergraduates were on a death fast at the Jaffna university premises in 1983 september. When the condition of some girls deteriorated the LTTE broke the fast and abducted those fasting. They were brought to Tamil Nadu.

At one stage four of the abducted girls stayed at the residence of Anton and Adele Balasingham and used to accompany them to the LTTE office in Indranagar. The fairest and prettiest of them all was Madhivadhani Erambu. Her father Erambu was a schoolmaster from Pungudutheevu in Jaffna.

During the Indian “Holi” festival people spray coloured powder and coloured water on each other. Madhivadhani held a bet with her friends and boldly drenched Prabhakaran with turmeric dissolved water. Praba was furious and berated her. Madhi started sobbing.

Hours later when the tiger supremo was leaving the office , he found her in a corner weeping.He went up to her and spoke softly asking her not to cry. Madhivathani looked up at him with tear-filled eyes. Praba’s heart was pierced
Thereafter Prabhakaran began visiting the Balasingham’s frequently. He brought flowers and sweets for Madhi. Prabhakaran had been a shy, introverted person and had never mingled with girls outside his family. This was a new experience. Anton Balasingham encouraged the romance. They married in 1984.

Children

There was a hitch. The LTTE code of conduct tabooed marriage. So the top commanders were summoned to Tamil Nadu and a Central committee meeting convened.

There a new regulation was introduced enabling those with five years experience to marry. The Madhi-Praba marriage took place in a temple with senior tiger commanders including KP in attendance.

They had three children. The eldest was named Charles Anthony born in 1985. He was named after Praba’s best friend and military commander Charles Anthony alias Seelan who died in Meesalai, Chavakachcheri.

The next was Duvaraga the daughter born in 1986. She was named after a favourite bodyguard Mayooran whose real name was Duvaaragan. The third was a son born in 1997. He was named Balachandran after Madhivathani’s own brother who also joined the LTTE and died in combat.

said...

அன்பின் குழலி,


//மயூரநாதன் உங்கள் //இதில் எனக்கும், உங்களுக்கும், பிற பயனருக்கும் ஒரே மாதிரியான உரிமைகளே உண்டு.
// வரிகளுக்கு மயூரேசனின் விளக்கம் சரியாக இருக்கும்...//

இங்கே நான் எழுதியதையும், மயூரேசன் எழுதியதையும் கவனமாக வாசித்துப் பாருங்கள்.

என்னுடைய கூற்று:

"இதில் எனக்கும், உங்களுக்கும், பிற பயனருக்கும் ஒரே மாதிரியான உரிமைகளே உண்டு."

மயூரேசனின் கூற்று:

"....பல்வேறு தொகுப்புக்கள் மூலம் விக்கிபீடியர் சமூகத்தில் நன்மதிப்பை உருவாக்கிக்கொண்டவர்களுக்கு அணுக்கம் தொடக்கம் முடிவெடுக்கும்போதான அங்கீகாரமும் அதிகம்."

நான் கூறியது உரிமைகளைப் பற்றி, மயூரேசன் கூறியிருப்பது அங்கீகாரத்தைப்பற்றி. இரண்டையும் ஒன்றாக்கிக் குழம்ப வேண்டியது இல்லை. உரிமை என்பது நியாயத்தின் அல்லது சட்டத்தின் அடிப்படையில் ஒருவருக்குக் கிடைப்பது, ஒரு நாட்டின் அல்லது ஒரு அமைப்பின் ஆலது சமூகத்தின் சட்டங்களினால் ஒருவருக்கு வழங்கப்படுவது. இந்த உரிமைக்காக ஒருவர் போராட முடியும். ஆனால் அங்கீகாரம் என்பது அதுவல்ல. ஒருவருடைய நடவடிக்கை, பணி போன்றவற்றைப் பொறுத்து ஒருவருக்கு அங்கீகாரம் கிடைக்கிறது. இந்த அங்கீகாரத்தை மற்றவர்கள் கொடுக்கலாம் அல்லது கொடுக்காமல் விடலாம். இதற்கு ஒருவரும் உரிமை கோர முடியாது. விக்கிப்பீடியாவில் ஒருவர் நீண்டகாலம் நல்லவகையில் பணியாற்றினால் ஒருவருக்கு பற்றப் பயனர்கள் மதிப்பளிப்பார்கள். நல்லமுறையில் பணியாற்றவில்லையானால் அவர் 50 ஆண்டுகள் செயலாற்றினாலும் அவருக்கு அங்கீகாரம் கிடைக்காது. எனவே அங்கீகாரம் என்பது மற்றவர்கள் விரும்பிக் கொடுப்பது. சட்டத்தினால் கிடைக்கும் கேள்விக்கு அப்பாற்பட்ட உரிமை அல்ல.

நிர்வாகி, அதிகாரி அணுக்கங்களும் ஒருவருக்கு வழங்கப்படும் பதவிகள் அல்ல. இது, விக்கிப்பீடியா ஒழுங்காக இயங்க உதவுவதற்காகப் பயனர்களுக்கு வழங்கப்படும் தொழில் நுட்பம் சார்ந்த அணுக்கங்கள் ஆகும். இவற்றைப் பயன்படுத்தி ஒருவர் ஏனைய பயனர்கள் மீது அதிகாரம் செலுத்த முடியாது.

//குறைகள் எல்லாம் திருத்தப்படாமல் விக்கிபீடியாவுக்கு ஆதரவு அளிப்பது என்பது மிக தவறான ஒரு தகவலை பரப்புவதற்கு நாமும் காரணமாகிவிடும்//

தவறான தகவல்களைப் பரப்புவதற்குக் காரணமாகிவிடுவோமோ என்று கவலைப்படும் உங்களுடைய இந்த ஒரு வலைப்பதிவில் உள்ள,

//உதாரணத்திற்கு பாமக அன்புமணி அவர்களை பற்றி எழுதியிருந்த தகவல் உண்மைக்கு புறம்பானது, அது என்ன தகவல் என்றால் அன்புமணி அவர்கள் ஒரு பிராமண பெண்ணை அந்த பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக கடத்திக்கொண்டு திருமணம் செய்து கொண்டார் என இருந்தது//

//பெரியார் பற்றியும் விக்கிபீடியாவில் எழுதப்பட்டிருந்த அவதூறுகளை திரு அவர்களும் அருள் போன்றோரும் மாற்றி மாற்றி எழுதி சலித்தே போய்விட்டார்கள், முதல்நாள் இவர்கள் மாற்றுவார்கள் மறுநாளே இவர்கள் மாற்றியது இருக்காது...//

//5 வருடமாக பலரும் முயன்றும் ஈ.வே.ராமசாமி நாயக்கரை , ஈ.வே.ராமசாமி ஆக்க இயலவில்லை விக்கிபீடியாவில் என்பதிலிருந்தே புரிய்யவில்லையா?//

ஆகிய கூற்றுக்களின் நம்பகத் தன்மையை நீங்கள் நிரூபித்திருக்கவேண்டும். இவ்வளவு கடுமையான குற்றச்சாட்டுகளை எதுவித சான்றுகளும் இன்றி முன்வைத்து தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஆதரவு தரக்கூடாது எனக் கூறிய நீங்கள் இப்போது அவற்றைப்பற்றி எதுவும் சொல்லாமல்

//அதே பெரும்பாண்மையை தமிழில் குழுக்கள் பெறும்போதூ என்ன செய்ய இயலும், ஆங்கில விக்கிபீடியாவில் நேர்ந்த அதே அனுபவம் இங்கே நேராதா?//

என்று வானம் இடிந்து தலையில் விழுந்தால் என்ன செய்வது என்ற பாணியில் கேள்வி கேட்கிறீர்கள்.

said...

குழலி கொடுத்துள்ள உதாரணங்கள் ஆதாரபூர்வமானவை. அதை வைத்து விவாதிப்பதை விட்டுவிட்டு திசை திருப்புவது போல் பேசுவது முறையல்ல.


இந்த கூட்டம் முடிந்துவிட்டதா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இதுபோன்ற மோசடித்தனங்களை பாலபாரதி, லக்கிலுக் போன்ற சென்னை பதிவர்கள் கடுமையாகவே சாடி தட்டி கேட்க வேண்டும்.

said...

குழலி,

காமெண்டுகளில் சிலர் சொல்லியிருப்பது போன்று அன்புமணி பற்றிய தகவல் சமாச்சாரத்தைப்பற்றி சிறிது தெளிவுபடுத்துங்கள். அப்படி இருந்ததா இல்லையா?

அப்படி இருந்திருந்தால் அந்த ஹிஸ்டரியை நீக்க முடியுமா?

ஈ.வே.ராமசாமி நாயக்கர் சமாச்சாரத்தையும் விளக்கமாக போடவும்.

said...

அழிக்கப்பட்ட பக்கங்களை விக்கிபீடியாவில் எப்படி பார்ப்பது, தமிழ்விக்கிபீடியாவில் அன்புமணி பற்றிய கட்டுரை 2008 லிருந்து தான் தொடங்கப்பட்டுள்ளது, அதற்கு முன்பே படித்துள்ளதாக ஞாபகம், தமிழ் மற்றும் ஆங்கிலவிக்கிப்பீடியாவில் எனக்கு எதுவென்ற குழப்பமேற்பட்டது உண்மை, மேற்சொன்ன இருதகவல்களுக்காகவும் நான் இரண்டு விக்கிபீடியாவிலும் பார்க்கிறேன்... இப்படி ஒரு கட்டுரை எழுத வேண்டியிருக்குமென்று நான் அப்போது எதிர்பார்க்கவில்லை, எதிர்பார்த்திருந்தால் ஸ்கீரின் ஷாட் எடுத்து வைத்திருப்பேன், இப்போது விக்கியில் தேடுவது கடினமாக உள்ளது...

எதுவாக இருந்தாலும் நான் வைத்துள்ள குற்றசாட்டுக்கு பதில் எதுவுமில்லை, விக்கிபீடியா கலந்துரையாடல் கூட்டத்திலும் விக்கிபீடியாவில் பிரச்சினைகள் இருக்கிறது அதை போக்க எல்லோரும் கலந்து கொள்ளவேண்டுமென்ற இல்லையென்றால் இழப்பு கலந்து கொள்ளாதவர்களுக்கு தானென்ற மிரட்டல் தான் ஒலித்துள்ளதே தவிர்த்து குறைபாட்டை போக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை...

விக்கிபீடியாவின் ஒட்டுக்குழுவாகவும், துணைக்குழுவாகவும் இருக்கும் தமிழ்விக்கிபீடியாவினால் அதன் நடைமுறைகளை மாற்ற இயலாது, எனவே இதற்கான மாற்று தேவை...

said...

மயூரேசனின் தலையை உருட்டாதீர்கள்.. இங்கே பின்னூட்டமிட்டது நான், மு. மயூரன்.

:-)

மற்றது தமிழ் விக்கிபீடியாவின் பெரியார் கட்டுரை தொடர்பாக,

அக்கட்டுரை என்னுடைய கவனிப்புப் பட்டியலில் இருக்கிறது. தற்போது தமிழ் ஓவியா போன்றோரை அக்கட்டுரைய வளர்த்தெடுக்க அழைத்துள்ளேன்.

பெரியாரை இராமசாமி நாயக்கர் என்று அழைத்துள்ளார்கள் என்பதை நாம் ஏன் கலைக்களஞ்சியம் ஒன்றில் தவிர்க்க வேண்டும் என்று புரியவில்லை.

வேண்டுமானால் அவ்வசனத்தை "இவர் இராமசாமி நயாக்கர் என்ற பெயராலும் அறியப்பட்டுள்ளார்" என்று மாற்ற பரிந்துரைக்க முடியும். அவ்வாறு பெரியார் அறியப்பட்டது பொய் இல்லையே?

இங்கே பெரியாரின் வாழ்வுக்கும் பணிக்கும் இழுக்கு எங்கேயிருந்து வரும் என்று தெரியவில்லை. அறியத்தொடங்கிய வயதுகளில் பெரியாரிஸ்டாகவே தொடங்கியவன் நான். பெரியார் மீதான சிறு அடிப்படையற்ற விமர்சனமும் என்னைத் தனிப்படப் பாதிக்கும். அவர் நாயக்கராக வாழ்க்கையைத்தொடங்கியவர் என்பது ஒன்றும் இரகசியமல்ல, அவர் பால்வினைத்தொழிலாளர்களிடம் வாடிக்கையாளராக இருந்தார் என்பது இரகசியம் அல்ல, இவற்றை மறைப்பதே பெரியாரின் கொள்கைகளுக்கு விரோதமானதாக நான் பார்க்கிறேன்.

இராமசாமிநாயக்கர் என்று சிலர் அவரை அழைத்ததற்காக அவரென்ன நாயக்கர் சாதிக்கா சேவகம் செய்தார், அந்த பெயரொட்டின் பின்னாலுள்ள வரலாற்று அடிப்படையையே அடித்துப்புரட்ட அல்லவா போர்தொடுத்தார்?

பால்வினைத்தொழிலாளரிடம் சென்றிருக்கக்கூடிய அவர், பெண்களை போகப்பொருளாய், பட்டி மாடுகளாய் பட்டி கட்டிவைக்கும் ஆணாதிக்க அரசியலையா முன்னெடுத்தார்? மாறாக பெண்ணுக்குச் சுயமரியாதை என்ற அடிப்படையின் மேல் இன்றைய முற்போக்காளர்பலரும் நினைத்தே பார்க்க முடியாத புரட்சிகரமான பெண்விடுதலைச்சிந்தனைகளையல்லவா விதைத்துவிட்டுப்போனார்?

நாயக்கரிலிருந்து அடித்துப்புரட்டும் அரசியலுக்கும், திராவிடத்தேசமும், தமிழ் மீதான காட்டமான விமர்சனங்களுமாக பல்பரிமாண அரசியற்பார்வையும், பல்பரிமாணங்களை ஏற்றுக்கொள்ளச்செய்யும் அரசியற்கண்ணோட்டமும் அல்லவா பெரியார் எமக்குத் தந்தது?

பெரியாரைப்புனிதப்படுத்துவதாய் நினைத்து அன்னாரின் கொள்கைகளை குழிதோண்டிப்புதைத்து கோயில் கட்டித்தொழுகின்ற நிலைக்கு தள்ளும் போக்காகவே இதைப் பார்க்கமுடிகிறது.

பெரியார்பற்றி அண்மையில் தி மு க ஆதரவுடன் வெளியான படத்தில் "பார்ப்பான்" என்ற வார்த்தையையே காணவில்லை. இதுதான் துரோகம். தமிழ் விக்கிபீடியாவின் பெரியார் என்ற கட்டுரையில் பார்ப்பன ஆதிக்கம் என்ற வார்த்தையை எவராவது அகற்ற முடியுமா?

விக்கிபீடியா விவாதத்துக்கு சற்றே வெளியில் இந்தப்பின்னூட்டம் நிற்கிறது. ஆனால் இந்த விசயத்தை இங்கே பதிவு செய்ய விரும்பினேன்.

said...

அன்பிற்குரிய குழலி,

நீங்கள் இங்கே கேட்ட கேள்விகளை முன்வரித்து, தமிழ்மன்றம் என்ற மடற்குழுவிற்கு அனுப்பியிருந்தேன். தமிழ் விக்கிப்பீடியாவில் ஈடுபட்டுள்ள சில நண்பர்கள் தமிழ்மன்றம் மடற்குழுவில் உறுப்பினராய் இருக்கிறார்கள்.

நான் அங்கு முன்வரித்ததைப் பார்த்தே, திரு.மயூரநாதன் இங்கு பின்னூட்டியிருந்தார். கீழே கனடாவில் இருக்கும் பேரா.செல்வா அவர்களின் மடலையும் முன்வரித்திருக்கிறேன்.

அன்புமணி, பெரியார் ஆகியோர் பற்றிய உங்கள் செய்திகளை அங்கு எப்படித் தெரிவித்தீர்கள், ஏன் அது மாற்றப்படாது இருக்கின்றது, அல்லது மாற்றப்பட்டது, என்ற நிகழ்வுகள் அங்கு வரலாற்றுப் பகுதியைப் பார்த்தால் தெரியும். தேடிப் பாருங்கள்.

பிழைகளைத் திருத்த முடியும். விக்கிப்பீடியா என்பது ஓர் ஒருங்கமைவான பணி.
நல்லது விளையும். கொஞ்சம் பொறுமை காட்டுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

(இந்தப் பின்னூட்டை 2 நாட்களுக்கு முன்னால் அனுப்பியிருந்தேன். அது இதுவரை வெளிவராது இருக்கிறது. ஏனென்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை எங்கேனும் தொலைந்து போனதோ என்று எண்ணி மீண்டும் உங்களுக்கு அனுப்புகிறேன்.

கீழே பேரா.செல்வா.வின் மடல்.
-----------------------
அன்புள்ள இராம.கி,

குழலி என்பவர் விக்கிப்பீடியாவைப் பற்றியோ தமிழ் விக்கிப்பீடியாவைப்
பற்றியோ ஏதும் சரிவர தெரியாதவர் என்பது தெளிவாகத் தெரிகின்றது.
விக்கிப்பீடியாவில் யாரொருவரும்
ஒரே ஓர் எழுத்தை மாற்றினாலும், யார் எந்த மணித்துளியில் என்ன மாற்றம்
செய்தார் என்பது தெளிவாகப் பதிவாகி இருக்கும். இது ஓர் அற்புதத்
தொழில்நுட்பம்.
பல ஆண்டுகாளுக்கு முன் யாரொவர் செய்த வடிவத்தில் இருந்த கட்டுரையையும்
அப்படியே காணவும், படியெடுக்கவும் இயலும்.

குழலி என்பாரின் கூற்றில் உள்ள உண்மைகள் அற்ற
தன்மையைக் காண கீழ்க்காணும் வரலாற்றுப் பக்கங்களைப்
பார்க்கவும் (பல்வேறு காலங்களில் இருந்த பதிப்புகளை எளிதாக
சொடுக்கிக் காணலாம். இன்றைய பதிப்பைக் காண "கட்டுரை" என்னும்
tab ஐ சொடுக்கவும்)..

அன்புமணி பற்றிய கட்டுரையின் வரலாறு:
http://tinyurl.com/anbumani-history

ஈ.வெ.ராப் பெரியார் பற்றிய கட்டுரையின் வரலாறு:
http://tinyurl.com/EVR-history

குழலி என்பார் முழுப்பொய்யைக் கூறுவதால் தன்னைத் தானே
தாழ்த்திக்கொண்டுள்ளார். அவர் கூறுவது உண்மை எனில்
அதனைச் சுட்டிக்காட்டச் சொல்லுங்கள். ஒருவர் தன் வலைப்பதிவில்
என்ன வேண்டுமானாலும் எழுதலாம், ஆனால் அதெல்லாம் உண்மையாகாது.
ஒருவர் கூறும் பொய்மைகளை, திரிபுகளை, அவதூறுகளைச் சுட்டிக்காட்டலாம்.

நானறிய விக்கிப்பீடியா போன்ற அருமையான கூட்டுழைப்பு அறிவாக்கக்
களம் எதனையும் கண்டதில்லை. குழலி போன்றவர்கள் பொய்மைகளைப் பரப்புவதால்
சிலர் குழப்பம் அடையலாம், அதற்கு நாம் ஏதும் செய்ய இயலாது. நிலாவுக்கு
மனிதன்
போகவில்லை, எல்லாம் ஆலிவுட் செட்டப் என்போர்களும் உள்ளார்கள்.
நிலம் தட்டை என்போர்களும் உள்ளார்கள். இதற்கெல்லாம் நாம் கவலைப்பட
முடியாது.

அவருடைய தளத்தில் போய் பின்னூட்டம் இடுவதால் பயன் இருக்காது.
அவர் மகிழ்ச்சியை ஏன் கெடுக்கவேண்டும்.

இராம.கி அவர்களே உங்களுக்குக் கேள்விகள் இருப்பின் கட்டாயம் கேளுங்கள்
நானும் பிறரும் விடைகள் தருகின்றோம்.

மயூரநாதன் அவர்களின் மறுமொழியைப் பாருங்கள் பல விளங்கும்.

அன்புடன்
செல்வா

On Jun 13, 1:44 am, iraamaki p...@giasmd01.vsnl.net.in> wrote:
அன்பிற்குரிய செல்வா,

தமிழ் விக்கிப்பீடியா பற்றி நண்பர் குழலி ஒரு கருத்துரைத்திருக்கிறார். அவருடைய வலைப்பதிவில் அண்மைய இடுகை இது:

http://kuzhali.blogspot.com/2009/06/tami-wikipedia.html

அங்கு பின்னூட்டி, அவரைத் தெளிவியுங்கள். அவர் கேட்டிருக்கும் கேள்வி எனக்கும் இருக்கிறது.

அன்புடன்,
இராம.கி.
--~--~---------~--~----~-----------

said...

இராமகி அய்யா, மிக்க நன்றி, தமிழ் விக்கிபீடியா மற்றும் ஆங்கிலவிக்கிபீடியா என்று குழப்பிக்கொண்டது உண்மை ஆனாலும் விக்கிபீடியாவில் அன்புமணி பற்றிய கட்டுரை படித்தேன் அதில் திருத்தமும் செய்தேன், இன்று தமிழ் ஆங்கிலம் இரண்டிலுமே அன்புமணி கட்டுரை 2008ல் இருந்து தான் உருவாக்கப்பட்டுள்ளது, ஆனால் இது 2008க்கு முன்பே நடந்த ஒன்று, விக்கிபீடியாவில் தமிழென்றாலும் ஆங்கிலமென்றாலும் அழிக்கப்பட்ட பக்கங்களை எப்படி பார்ப்பது என முயற்சிக்கிறேன், விக்கிபீடியாவில் தேடியபோது டெலிட்டட் கிளாஸ் என்றெல்லாம் வருகிறது...

//குழலி போன்றவர்கள் பொய்மைகளைப் பரப்புவதால்
சிலர் குழப்பம் அடையலாம், அதற்கு நாம் ஏதும் செய்ய இயலாது
//
மற்றபடி செல்வா போன்ற இணைய தாசில்தார்கள் சொல்வது போல போல விக்கிபீடியா பற்றிய பொய்மைகளை பரப்பி நான் மிகப்பெரும் செல்வமும், அதிகாரமும் பெறப்போகிறேன் என்பதில் மிக்க மகிழ்ச்சியே... மற்றபடி என் நேர்மையை ஆறு ஆண்டுகாலமாக இணையத்தில் வளைய வரும் என்னை அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

நான் எடுத்துகாட்டிய இரண்டு விசயங்களுக்கும் விக்கிபீடியா தேடும் அறிவு குறைவாக இருப்பதால் என்னால் உடனடியாக எடுக்க இயலவில்லை, (கண்டிப்பாக அதை எடுத்து காண்பிப்பேன்) ஆனால் மீண்டும் அதே கேள்வியை தான் எழுப்புகிறேன், விக்கிப்பீடியாவின் நடைமுறை தவறுகளை(விக்கிபிடியாவின் அணுக்கம், நன்மதிப்பு, அட்மின் வாக்களிப்பு, எட்செட்ரா மண்ணாங்கட்டி எல்லாவற்றிற்கும் என்னை பொறுத்தவரை ஒரே பெயர் தான் மற்றவர்களை விட இவர்களுக்கு பிரிவிலேஜ் அதிகம், இவர்களே கடைசிகட்ட அத்தாரிட்டி) சரி செய்யாமல் (அது இயலாது ஏனெனில் விக்கிபீடியாவின் துணைகுழுவாக இருக்கும் தமிழ் விக்கிபீடியா குழுமத்தால் என்ன செய்ய இயலும்?) இந்த தளத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது பெரும் பாதகத்தில் சென்று முடியும்...

இங்கு விக்கிபீடியாவுக்கு ஆதரவாக பதில் சொன்னவர்களே ஆங்கில விக்கிபீடியாவில் இப்படியாக உள்ளது, நம்மிடம் பெரும்பாண்மை இல்லை அதனால் இப்படி என்னும் போது தமிழ் விக்கிபீடியாவில் பெரும்பாண்மை வந்து அள்ளிக்கொண்டு போக எவ்வளவு நேரம் ஆகும்?

said...

விக்கிபீடியாவுக்கு மாற்றாக தமிழில் ஒரு குழுமம் கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்குமெனில் அங்கே அதிகாரம் வராதா? அப்படி தனிப்பட்ட குழுமம் ஒன்றின் கலைக்களஞ்சியத்தை விட விக்கிபீடியா அதிகாரக் குழுக்கள் ஆபத்தானதா?

தமிழ்சசி விக்கிபீடியாவுக்கு மாற்றாக தமிழ்மணம் தனக்கென கலைக்களஞ்சியம் உருவாக்க வேண்டும் என்கிறார்

said...

http://en.wikipedia.org/w/index.php?title=Special%3ALog&type=delete&user=&page=Anbumani&year=&month=-1&tagfilter=

(latest | earliest) View (newer 50) (older 50) (20 | 50 | 100 | 250 | 500)
18:59, 21 July 2006 OwenX (talk | contribs) deleted "Anbumani" ‎ (CSD:R1. content was: '#REDIRECT Anbumani Ramadoss{{deletebecause|Redirect to deleted article}}')
(latest | earliest) View (newer 50) (older 50) (20 | 50 | 100 | 250 | 500)

said...

விக்கிபீடியா தொடர்பான விமர்சனங்களை தொகுக்கும் நோக்குடன் தமிழ் விக்கிபீடியாவின் "விக்கிபீடியா" கட்டுரையில் புதிய தலைப்பினைத் தொடக்கியுள்ளேன்.

விமர்சன ரீதியான கருத்துக்களை அங்கே தொகுக்க விரும்புபவர்கள்

இத்தலைப்பின் கீழ் தகவல்களை உள்ளிடலாம்

கூடவே,

விக்கிபிடீயாவை விமர்சிக்கும் தொடுப்புக்களைத் தொகுக்கவென கீழா தனியான பகுதி வெளி இணைப்புக்களின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது அங்கே முதலாவதாக இவ்வலைப்பதிவினைச் சேர்த்துள்ளேன். ஏனைய விமர்சன ரீதியான தமிழ் வலைப்பதிவு இடுகைகளையும் அங்கே சேர்த்து உதவவும்.

said...

தமிழ் விக்கியில் பலர் பங்களிக்கிறார்கள். அதில் மயூரன், பேராசிரியர் செல்வகுமார், நற்கீரன் போன்றவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் தங்களை விளம்பரம் செய்துக்கொள்வதில்லை. ஆனால் விளம்பரப்பிரியரான ரவிசங்கரும், வியாபார நிறுவனமான கிழக்கு பதிப்பகமும் தங்கள் விளம்பரத்துக்கு பயன்படுத்திக்கொள்வதாகத் தெரிகிறது. விடுமுறையில் போயிருக்கும் ரவிசங்க்கருக்கு பிரபலங்களை சந்தித்த மாதிரி ஆயிற்று. ஒரு டீ வடை செலவோடு கிழக்குக்கு விளம்பரமும் கிடைத்துவிடும். அவ்வளவு தான். வியாபார நோக்கமில்லாத , பல்வேறு தன்னார்வலர்களின் உழைப்பை ரவிசங்கர் என்ற தனி நபரும், கிழக்கு போன்ற வியாபார நிறுவனங்களும் பயபடுத்திக்கொள்வதைத் தான் விமர்சிக்க வேண்டுமே தவிர எல்லோரையும் குறை கூறக்கூடாது.

said...

http://en.wikipedia.org/w/index.php?title=Special:Log&page=Anbumani+Ramadoss

21:35, March 18, 2009 Jimfbleak (talk | contribs) deleted "Anbumani Ramadoss" ‎ (G11: Blatant advertising)
06:22, July 17, 2006 Deltabeignet (talk | contribs) deleted "Anbumani Ramadoss" ‎ (CSD A7 (non-notable person))

மே 2006ல் (இடப்பங்கீடு குறித்த பிரச்சனை வந்த பின்) அன்புமணி அவர்களின் கட்டுரை "non notable" என்று காரணம் காட்டி அழிக்கப்படுகிறது

முற்பட்ட வகுப்பில் பிறக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக இந்தியாவின் கேபினட் அமைச்சரே "non notable" ஆக்கும் அளவிற்கு தான் ஆங்கில விக்கிபிடியாவின் நடுநிலை என்பதை புரிந்து கொள்ள கஷ்டமாக இருக்கிறதா

அதன் பிறகு மார்ச் மாதம் மீண்டும் அந்த கட்டுரை அழிக்கப்படுகிறது

இது எதை காட்டுகிறது

அதே நேரம் அகமதாபாத்தின் காவல் துறை அதிகாரிக்கு கூட தனிப்பக்கம்
http://en.wikipedia.org/wiki/I._P._Gautam

அவரை non notable என்றவுடன் வரிந்து கட்டிக்கொண்டு வந்து விடுவார்கள்

http://en.wikipedia.org/wiki/Wikipedia:Articles_for_deletion/I._P._Gautam

bureaucrat/manager of a city of 5 million people

அதாவது 50 லட்சம் நபர்கள் இருக்கும் ஒரு ஊரின் காவல் துறை அதிகாரி notableஆம்

100 கோடி பேர்களின் நாட்டின் சுகாதார துறை கேபினட் அமைச்சர் non notableஆ

என்ன கொடுமை குழலி இது

said...

//விக்கிப்பீடியாவில் யாரொருவரும்
ஒரே ஓர் எழுத்தை மாற்றினாலும், யார் எந்த மணித்துளியில் என்ன மாற்றம்
செய்தார் என்பது தெளிவாகப் பதிவாகி இருக்கும். //

அமைச்சர் அன்புமனி குறித்த கட்டுரையில் 2009 வரை உள்ள மாற்றங்களை நான் (அதாவது ஒரு பயனர்) பார்க்க முடியுமா ???

எப்படி

அல்லது நீண்ட கால பயணராக இருந்து நிர்வாகி ஆனால் தான் பார்க்க முடியுமா

அப்படி என்றால்

அனைவருக்கும் ஒரே உரிமை என்பது கிடையாதா

யாராவது விளக்கவும்

said...

மயூரன், இராமகி மற்றும் பிற நண்பர்களுக்கு

குழலி கூறியவை ஆங்கில விக்கிபீடியாவில் நடப்பவை. அதற்கு வேண்டுமென்றால் பக்கம் பக்கமாக ஆதாரம் தர முடியும்

தமிழ் விக்கிபிடியாவில் இது போன்ற பிரச்சனைகள் இது வரை எழவில்லை என்று நினைக்கிறேன்

said...

//அமைச்சர் அன்புமனி குறித்த கட்டுரையில் 2009 வரை உள்ள மாற்றங்களை நான் (அதாவது ஒரு பயனர்) பார்க்க முடியுமா ???//

பார்க்க:

http://en.wikipedia.org/wiki/Help:Page_history#Moved_and_deleted_pages


//அப்படி என்றால்

அனைவருக்கும் ஒரே உரிமை என்பது கிடையாதா//

அக்கறையின் அடிப்படையில் தொழிநுட்பரீதியான சில அணுக்கங்கள் வழங்கப்படுகிறது. அதுவும் விக்கிபீடியா சமூகத்தின் கலந்தாலோசனையின் பெயரில் வழங்கப்படுகிறது.

இதுவே விக்கிக்குற்றங்களிலிருந்து அறிவுச்சொத்தைப் பாதுகாக்கிறது.

உங்களுக்கு சில தேவைகளுக்காக சிறப்பு அணுக்கங்கள் தேவைப்பட்டால் (உடனடியாக) நீங்களறிந்த நிர்வாகி அல்லது அதிகாரி ஒருவரைத் தொடர்புகொள்ள முடியும்.


அல்லது உங்கள் பயனர் பேச்சுப்பக்கத்தில் குறித்த உதவி உங்களுக்குத் தேவைப்படுகிறது என்ற வேண்டுகோளை முன்வைக்க முடியும். நிச்சயம் எவரேனும் உதவுவர்.

said...

//http://en.wikipedia.org/wiki/Help:Page_history#Moved_and_deleted_pages//

இந்த பக்கத்தில் அன்புமணி பற்றி எங்கு இருக்கிறது

:( :(

புரியவில்லை

அமைச்சர் அன்புமனி குறித்த கட்டுரையில் 2009 வரை உள்ள மாற்றங்களை நான் (அதாவது ஒரு பயனர்) பார்க்க முடியுமா ???

நீங்கள் அளித்த சுட்டியில் அந்த மாற்றங்கள் எதுவுமே இல்லையே

ஏன் அன்புமனி என்ற வார்த்தை கூட இல்லையே

said...

//அல்லது உங்கள் பயனர் பேச்சுப்பக்கத்தில் குறித்த உதவி உங்களுக்குத் தேவைப்படுகிறது என்ற வேண்டுகோளை முன்வைக்க முடியும். நிச்சயம் எவரேனும் உதவுவர்.

J//

சரி சார்

அமைச்சர் அன்புமனி குறித்த கட்டுரையில் 2009 வரை உள்ள மாற்றங்களை நான் (அதாவது ஒரு பயனர்) எப்படி பார்க்க முடியும் என்று உதவுங்கள்

நீங்கள் முதலில் கூறிய பதில் தெளிவை தரவில்லை என்பதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்

said...

//அக்கறையின் அடிப்படையில் தொழிநுட்பரீதியான சில அணுக்கங்கள் வழங்கப்படுகிறது. அதுவும் விக்கிபீடியா சமூகத்தின் கலந்தாலோசனையின் பெயரில் வழங்கப்படுகிறது.

இதுவே விக்கிக்குற்றங்களிலிருந்து அறிவுச்சொத்தைப் பாதுகாக்கிறது. //

நன்றி

இப்படித்தான் கேபினெட் அமைச்சரை முக்கியத்துவம் இல்லாதவர் என்றும் ஒரு ஊரின் காவல்துறை அதிகாரியை முக்கியத்துவம் உள்ளவர் என்றும் கூறும் ஆங்கில விக்கிபிடியாவின் “நடுநிலை”யை பாதுக்காக்கப்படுகிறதா

இதைத்தான் குழலி ஒரு குழுவின் ஆதிக்கத்தில் இருப்பதாக கூறியதாக நினைக்க வேண்டி உள்ளதே :( :(

குழலி கூறுவதும் நீங்கள் கூறுவதும் ஒரே பொருள் தானே தருகிறது.

said...

//உங்களுக்கு சில தேவைகளுக்காக சிறப்பு அணுக்கங்கள் தேவைப்பட்டால் (உடனடியாக) நீங்களறிந்த நிர்வாகி அல்லது அதிகாரி ஒருவரைத் தொடர்புகொள்ள முடியும். //

அதாவது ஏற்கனவே அங்கு இருப்பவரால் முடியக்கூடிய காரியம் புதிதாக சேரும் என்னால் முடியாதா

ஏற்கனவே இருப்பவர் அன்புமணிக்கு எதிரான நிலையில் இருந்தால் என்ன செய்ய முடியும்

என்பது தான் குழலியின் கேள்வி என்று நினைக்கிறேன்

said...

//ஆகிய கூற்றுக்களின் நம்பகத் தன்மையை நீங்கள் நிரூபித்திருக்கவேண்டும். இவ்வளவு கடுமையான குற்றச்சாட்டுகளை எதுவித சான்றுகளும் இன்றி முன்வைத்து தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஆதரவு தரக்கூடாது எனக் கூறிய நீங்கள் இப்போது அவற்றைப்பற்றி எதுவும் சொல்லாமல்//

அன்புமணியை பற்றிய பக்கங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன

ஆதாரம் நான் தந்துவிட்டேன்

பெரியார் பற்றிய பக்கங்கள் 9 முறை அழிக்கப்பட்டிருக்கின்றன

ஆதாரம் http://en.wikipedia.org/w/index.php?title=Special:Log&page=Periyar

--

அழிக்கப்பட்ட பக்கங்கள் குறித்த விபரங்களை எப்படி பார்ப்பது என்ற என் கேள்விக்கு நீங்கள் அளித்த பதில் சரிதானா என்று தெரியவில்லை

--

ஆக புதிதாக சேர்ந்த ஒருவரால் இப்பக்கங்களை இன்று பார்க்க முடியாத வண்ணம் ஏற்கனவே இருப்பவர்களால் மாற்றப்பட்டுள்ளது

--

இப்படி இருக்க ”ஆகிய கூற்றுக்களின் நம்பகத் தன்மையை நீங்கள் நிரூபித்திருக்கவேண்டும்” என்ற உங்களின் குற்றச்சாட்டு ஆச்சரியமாக இருக்கிறது

உங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன் :) :)

said...

//அப்படி இருந்திருந்தால் அந்த ஹிஸ்டரியை நீக்க முடியுமா?//

இருமுறை நீக்கப்பட்டுள்ளது

ஆதாரம் http://en.wikipedia.org/w/index.php?title=Special:Log&page=Anbumani+Ramadoss


//ஈ.வே.ராமசாமி நாயக்கர் சமாச்சாரத்தையும் விளக்கமாக போடவும்.//

பல முறை மாற்றப்பட்டுள்ளது

ஆதாரம்

http://en.wikipedia.org/w/index.php?title=Special:Log&page=Periyar

தூங்குவதை போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்று எனக்கு நன்றாக தெரியும் :) :) :)

said...

//விக்கிப்பீடியாவில் யாரொருவரும்
ஒரே ஓர் எழுத்தை மாற்றினாலும், யார் எந்த மணித்துளியில் என்ன மாற்றம்
செய்தார் என்பது தெளிவாகப் பதிவாகி இருக்கும்.//

ஆங்கில விக்கியில் பெரியார், அன்புமணி ஆகியோர் குறித்த பக்கங்களின் பழைய மாற்றங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றனவே

அதை எப்படி பார்ப்பது

//பல ஆண்டுகாளுக்கு முன் யாரொவர் செய்த வடிவத்தில் இருந்த கட்டுரையையும்
அப்படியே காணவும், படியெடுக்கவும் இயலும்.//

ஆங்கில விக்கியில் பெரியார், அன்புமணி ஆகியோர் குறித்த பக்கங்களின் பழைய மாற்றங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றனவே

அதை எப்படி பார்ப்பது என்ற கேள்விக்கு விடை இல்லையே

said...

//அவர் கூறுவது உண்மை எனில்
அதனைச் சுட்டிக்காட்டச் சொல்லுங்கள்//

நான் அளித்த சுட்டிகளை பாருங்கள் சார்

--

இராமகி சார்

என் கேள்விகளுக்கு விடை வந்தால் மகிழ்ச்சி அடைவேன் :) :)

பின் குறிப்பு : ஒரு இடத்தில் பிரச்சனை இருப்பதாக சந்தேகம் வந்தால் அதை பூசி மொழுகுவதை விட ஆராய்ந்து பார்ப்பது சிறந்தது

said...

புருனோ,

நான் உங்களுக்கு அளித்த தொடுப்பு, அன்புமணி தொடர்பானதல்ல, அழிக்கப்பட்ட பக்கங்களின் வரலாற்றினைப் பார்ப்பது தொடர்பான விக்கி தொழிநுட்பத்தினை விளக்கும் கட்டுரை.

உங்களுடைய அன்புமணி அனுபவத்தை விட மிகவும் கசப்பான விரக்தியூடும் அனுபவங்கள் ஈழப்பிரச்சினை தொடர்பான கட்டுரைகளில் எமக்கு உண்டு.

இங்கே நடைமுறை சார்ந்த சிக்கல் ஒன்று எழுந்திருக்கிறதே அன்றி, விக்கிபீடியாவினதும் அங்குள்ள அத்தனை ஆயிரம் பங்களிப்பாளர்களதும் நோக்கம் ஈழத்தமிழருக்கும் அன்புமணிக்கும் எதிராய் நிற்பதல்ல.
எதுவுமே 100 வீதம் முழுமையாக, தவறத்ததாக, சிக்கலற்றதாக இருக்கப்போவதில்லை.

எந்தவொரு மூடிய கலைக்களஞ்சியத்திலும் நீங்கள் பக்கசார்பற்ற நேர்மையை, ஜனநாயகத்தை விக்கிபீடியா அளவுக்கு எதிர்பார்க்க முடியாது.

ஏனென்றால் அவை குறித்த நிறுவனத்தால் அல்லது ஒருசிலரால் எழுதப்படுவது.

அந்த நிலையிலிருந்து சற்றே மேம்பாடான நிலைக்கு விக்கிபீடியா இணையக் கலைக்களஞ்சியப்போக்கினை வளர்த்தெடுத்துவந்துள்ளது.

அதுவும் பல குறைபாடுகளை தன்னகத்தே கொண்டிருக்கும்.

இணைய இயங்கியல் இன்னும் பல வளர்ச்சிக்கட்டங்களுக்கு எம்மைக் கொண்டுபோகும்.

முரண்பாடுகள் மோதிக்கொண்டு, போதாமைகள் நிரப்பப்பட்டுக்கொண்டு வளர்ச்சித்திசைவழியே வரலாறு நகரும் என்ன?

விக்கிபீடியாவே கூட ஆரம்பகாலங்களில் இருந நிலையில் இன்றில்லை. ஒவ்வொரு போதாமையையும் நிரப்பிக்கொண்டு வளர்ந்துகொண்டே வருகிறது. "citation" எல்லாம் பின்பு வந்த விஷயங்கள் தான்.

மயூரநாதன் போன்றவர்கள் கோபப்படுவதற்குக் காரணம் தமிழ் விக்கிபீடியாவை குறை சொல்லிக்கொண்டு தொடங்கும் குழலியின் இந்தப்பதிவு ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து , அது ஆங்கிலமா தமிழா என்று தெளிவாகச்சொல்லாமல் ஆதாரம் காட்டி குற்றம் சுமத்துவதுதான்.

நீங்களும் அதை கவனிக்காமல் மறுபடி மறுபடி ஆங்கில விக்கி கட்டுரைய ஆதாரம் காட்டியவண்ணமிருக்கிறீர்கள்.

said...

//ஏகப்பட்ட அனானிகள் கிழக்குதிசையிலிருந்து குழலி டவுசர் கயட்டவே படையெடுத்து வந்திருக்கிறார்கள் போலிருக்கு. அனானிகளே முதல்லே ஒரு விஷயத்தை தெரிஞ்சுக்கங்க. இப்போவேணா குழலி இம்சை அரசன் இருவத்தி மூணாவது புலிகேசியா இருக்கலாம். முன்னாடியெல்லாம் குழலியும் ரவுடிதான். குழலியும் ரவுடிதான். ழலியும் ரவுடிதான். லியும் ரவுடிதான். யும் ரவுடிதான். ம் ரவுடிதான். ரவுடிதான்.//

Respected Kuzhali Aiyya

Don't waste your Valuable time with
this Kind of Boneless / honest less
Viruses .

If we could not with stand this cheating or attack, shall we finish it

Dont Worry because we are behalf of
social justice and Truth

said...

//நான் உங்களுக்கு அளித்த தொடுப்பு, அன்புமணி தொடர்பானதல்ல, அழிக்கப்பட்ட பக்கங்களின் வரலாற்றினைப் பார்ப்பது தொடர்பான விக்கி தொழிநுட்பத்தினை விளக்கும் கட்டுரை.//

அன்பின் மயூரன்

நான் கேட்ட கேள்வி அன்புமணி தொடர்பானது :) :) அழிக்கப்பட்ட பக்கங்களின் வரலாற்றினைப் பார்ப்பது தொடர்பான விக்கி தொழிநுட்பம் பற்றி அல்ல :) :)

பதிவர் குழலி மீது பல வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தியவர்கள் இதுவரை என் கேள்விக்கு விடையளிக்க வில்லையே.

//எந்தவொரு மூடிய கலைக்களஞ்சியத்திலும் நீங்கள் பக்கசார்பற்ற நேர்மையை, ஜனநாயகத்தை விக்கிபீடியா அளவுக்கு எதிர்பார்க்க முடியாது.

ஏனென்றால் அவை குறித்த நிறுவனத்தால் அல்லது ஒருசிலரால் எழுதப்படுவது.//

உண்மைதான். குழலியின் குற்றச்சாட்டு, ஆங்கில விக்கியில் ஒரு சிலரால் எழுதப்படுகிறது என்பதே

அதற்கு ஆதாரம் தான் அழிக்கப்படும், பல முறை திருத்தப்படும் அன்புமணி, பெரியார் குறித்த பக்கங்கள்

அதுவும் இடப்பங்கீடு குறித்த பிரச்சனை வந்தபின்னரே அன்புமணி குறித்த தவறான தகவல்கள் அந்த பக்கத்தில் வந்தது என்பதையும் நினைவில் வைக்க வேண்டுகிறேன் :) :)

//அதுவும் பல குறைபாடுகளை தன்னகத்தே கொண்டிருக்கும்.//

தற்சமயம் உள்ள முக்கிய குறைபாடு குழலி சுட்டிக்காட்டிய குழுக்கள் !!

//மயூரநாதன் போன்றவர்கள் கோபப்படுவதற்குக் காரணம் தமிழ் விக்கிபீடியாவை குறை சொல்லிக்கொண்டு தொடங்கும் குழலியின் இந்தப்பதிவு ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து , அது ஆங்கிலமா தமிழா என்று தெளிவாகச்சொல்லாமல் ஆதாரம் காட்டி குற்றம் சுமத்துவதுதான்.//

சரி, நான் அளித்த ஆதாரங்களுக்கு பதில் கூறுங்களேன். இது வரை பதில் வரவில்லையே :( :( நான் கூறியது ஆங்கில விக்கிபிடியா குறித்து தான்

//நீங்களும் அதை கவனிக்காமல் மறுபடி மறுபடி ஆங்கில விக்கி கட்டுரைய ஆதாரம் காட்டியவண்ணமிருக்கிறீர்கள்.//

மென்பொருள் வடிவமைப்பு மட்டும் சட்டத்திட்டங்கள் ஆங்கில விக்கிபிடியாவிற்கும் தமிழ் விக்கிபிடியாவிற்கும் ஒன்று தானே

அப்படி என்றால் அங்கு இன்று வரும் பிரச்சனை நாளை இங்கு வராதா என்று என்ன் நிச்சயம்

--

“ஆங்கில விக்கிபிடியாவில் பிரச்சனை எதுவும் இல்லை, நீங்கள் கூறியது தவறு,உங்கள் ஆதாரங்களுக்கு பதில் ஆதாரம் இது. எனவே நீங்கள் கவலைப்பட வேண்டியது இல்லை” என்ற பதிலை உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன்..

அதை நீங்களும் கூறவில்லை :( :(

பதிவர் குழலி மீது பல adjectives பயன்படுத்திய மூத்த விக்கிபிடியர்களும் இது வரை கூறவில்லை :( :(

கவலையாக இருக்கிறது நண்பரே

said...

//மென்பொருள் வடிவமைப்பு மட்டும் சட்டத்திட்டங்கள் ஆங்கில விக்கிபிடியாவிற்கும் தமிழ் விக்கிபிடியாவிற்கும் ஒன்று தானே

அப்படி என்றால் அங்கு இன்று வரும் பிரச்சனை நாளை இங்கு வராதா என்று என்ன் நிச்சயம்
//
புருனோ அவர்கள் ஆங்கில விக்கிபீடியா மீது சொல்லப்படும் குற்றசாட்டுகளை ஒத்துக்கொள்கிறார்கள், ஆனால் இந்த கேள்விக்கு சுத்தமாக மழுப்புகிறார்கள், தமிழ்விக்கிபீடியாவில் நான் சுட்டிக்காட்டிய இரண்டும்(அன்புமணி, பெரியார் பிரச்சினை) இல்லை என்று சொல்வதை தவிர விக்கிபீடியா சிஸ்டத்தின் நடைமுறை பிரச்சினையை பேசுவதை விட மழுப்புவதிலேயே இருக்கிறார்கள்

said...

மௌனம் சம்மதம் :( :( :(

!!!

:) :) :)

said...

கீழுள்ள இணைப்பில் பார்க்கவும்.

http://mail.google.com/mail/?ui=1&ov=0

said...

புருனோ, குழலி கூறுவது முழுவதும் உண்மை. விக்கியில் குரூப் பாலிட்டிக்ஸ். தாசில்தார்ருக்கு ஜால்ரா போடுபவரே நிர்வாகி. இவர்கள் உரையாடலே அது உண்மை எனக் கூறுகின்றது. ஒரு குற்றச்சாட்டிற்கும் பதில் கூறமுடியவில்லை. இது விக்கிப்பீடியா அல்ல சர்ச்சைபீடியா.

said...

குழலி ஆங்கில விக்கிபிடியா / தமிழ் விக்கிபிடியா குழப்பத்திற்கு மன்னிப்பு கேட்டு விட்டார்

பிற விஷயங்கள் அப்படியே உள்ளனவே

என் கேள்விகளுக்கு விடை வரவில்லையே ???

ஒரு வேளை மௌனம் சம்மதம் என்று விக்கிபிடியாவின் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மை என்று ஏற்றுக்கொள்கிறார்களா

said...

கீழுள்ள இணைப்பில் பார்க்கவும்.

http://groups.google.com/group/tamilmanram/msg/3f043fb4abbef810?&q=Iraamaki

இரண்டு கிழமைகளுக்கு முன்னரே இந்த இணைப்பைக் கொடுத்து பின்னூட்டம் இட்டிருந்தேன். ஏனோ அது இங்கே பார்வைக்கு வரவில்லை.

said...

//இரண்டு கிழமைகளுக்கு முன்னரே இந்த இணைப்பைக் கொடுத்து பின்னூட்டம் இட்டிருந்தேன். ஏனோ அது இங்கே பார்வைக்கு வரவில்லை.
//
மயூரன்நாதன் நீங்கள் கொடுத்த சுட்டி ஜிமெயிலுக்கு சென்றதால் அதை வெளியிடவில்லை, தற்போது மேலே வெளியிட்டுள்ளேன்...

மற்றபடி அந்த மடலில் நான் சேறு பூசுகிறேன் என் மீது சேறு பூசியுள்ளார்கள்...

யாரும் நமது எம்ஜியார் பத்திரிக்கையும் முரசொலியும் நடுநிலை செய்தி தரவேண்டுமென எதிர்பார்ப்பதில்லை ஆனால் நடுநிலை நாளிதழ் என்று போட்டுக்கொண்டு செயல்படும்போது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நடுநிலையாக இருக்க வேண்டும், தமிழ் விக்கிபீடியா குழுவில் இருக்கும் எவரையும் நேரடியாக தெரியாது, ஒரே சிலர் பெயர்களை கேள்விப்பட்டிருக்கேன்...

கிழக்கு பதிப்பகத்தில் கூட்டம் வைத்தது பற்றி வந்திருந்த பின்னூட்டத்தை அனுமதித்தேன், நாங்கள் வியாபார நோக்கில் செயல்படவில்லை, நாங்கள் நடுநிலையாளர்கள் என்று கூறிக்கொண்டு ஒரு வியாபார நிறுவனத்தில் போய் நீங்கள் கூட்டம் வைத்தால் அது தொடர்பான விமர்சனங்கள் எழத்தான் செய்யும்... அந்த வியாபார நிறுவனத்தை நீங்கள் "தமிழ்விக்கிபீடியாவுக்கு ஆதரவளிப்பவர்கள்" என்று கூறும்போது அது தொடர்பான விமர்சனங்கள் எழத்தான் செய்யும்...

என்னுடைய விமர்சனங்களை தெரிவித்துவிட்டேன் எடுத்துக்கொள்வதும் எடுத்துக்கொள்ளாததும் உங்களுடைய விருப்பம், பங்களிப்பதும் பங்களிக்காததும் மற்றவர்கள் விருப்பம்...

said...

யார் மீதும் சேற்றை வாரி பூசவில்லை அவர்களே சேற்றை வாரி பூசிக்கொண்டனர்.

ஊரறிந்த பூசாரிக்கு குடுமி எதர்க்கு.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

நிர்வாகிகள் தேர்வு முறையில் யார் வாக்களிக்கின்றார்ரகள் பயனர்கள் அனைவருமா?

ஒருவர் முன்மொழிகின்றார் அவர்கள் குழுவில் இன்னொருவா வழிமொழிகின்றார் அதுவும் நிர்வாகிகளே.

அவர்கள் அடக்குமுறை, அடாவடி சட்டதிட்டத்துக்கு யார் ஒத்து வருகின்றார்களோ அவர்கள் பின்னாளில் முன்மொழியப்படுகின்றனர் அதன்பிறகு அவர்களில் ஒருவர் வழிமொழிகின்றனர்.

இதுவா ஜனநாயகம். இது புதுமுறைத் தேர்தல். வலைப்பதிவேலேயே ஏன் குடும்பத்தில் உள்ளவர்களே வேறுபடுகின்றனர் இது எப்படி சாத்தியம். இதிலேயே வெளிப்படைத்தன்மை இல்லை.

புதுப்பயனர்களே வரவேற்கும்பொழுதே அவர்களை மிரட்டும் தொனியில், முதலாளித்துவ தொனியில் வரவேற்பு கொடுக்கின்றனர், "ஒரு 6 மாதம் வரை புதுப்பயனர்களை விட்டு பிடிக்கலாம்" என்று விக்கி பட்டறையை தலைமையேற்றவரே கூறுகின்றார். இந்த வாசகத்துக்கு எதிர்ப்பே இல்லை. வரும்பொழுதே உருட்டுகட்டை, வேல்கம்பு அருவாவுடன் வரவேற்றால் என்ன செய்வார்கள். இது என்ன காலம்....

ஒரு சிலர்... ஆக்கிரமித்துள்ள....விக்கிப்பீடியாவை குழலி மட்டுமல்ல பலரும் ஆதிரிப்பதில்லை....

இதில் பங்கு பெறாததினால் நஷ்டம் ஒன்றும் தமிழ்நாட்டு தமிழர்களுக்கு இல்லை கூடுதல் இலாபம் தான். உடனே உலகம் இருண்டு விடாது வேறு யாருக்காவாது வேண்டுமானால் நஷ்டம் இருக்கலாம். அதை அவர்களே ஈடு செய்து கொள்வார்கள்.

said...

//கீழுள்ள இணைப்பில் பார்க்கவும்.//

நண்பரே

இங்கு விவாதம் நடக்கும் போது நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலை நீங்கள் இங்கு தந்திருக்க வேண்டும்

:) :)

said...

// எதிர்க் கருத்துக்களும் அவர் பற்றிய விமர்சனங்களும் இருக்கவே
செய்யும். அத்தகைய நியாயமான கருத்துக்களுக்கு மதிப்பளிக்கத்தான்
வேண்டும்.//

அதற்கு விக்கி நிர்வாகிகள் மதிப்பளிப்பதில்லை என்பது தான் குற்றச்சாட்டு

// கட்டுரையின் வரலாற்றையும்,
உரையாடல் பக்கப் பதிவுகளையும் பார்க்கும் போது நிர்வாகிகள் பெருமளவுக்கு
நியாயமாகவே நடந்துள்ளது தெளிவாகவே தெரிகிறது.
இதை நீங்களே பார்த்துப் புரிந்து கொள்ளலாம். //

புரிந்து கொண்டுள்ளோம் !!!

said...

//ஆனால் இது இரண்டு
தடவைகள் முற்றாகவே நீக்கப்பட்டுள்ளது. இதை நீக்கியது இந்தியர்கள் அல்ல. //

யார் என்று தெரிந்து கொள்ள முடியுமா

said...

//குழலி என்பவர் விக்கிப்பீடியாவைப் பற்றியோ தமிழ் விக்கிப்பீடியாவைப்
பற்றியோ ஏதும் சரிவர தெரியாதவர் என்பது தெளிவாகத் தெரிகின்றது.
விக்கிப்பீடியாவில் யாரொருவரும்
ஒரே ஓர் எழுத்தை மாற்றினாலும், யார் எந்த மணித்துளியில் என்ன மாற்றம்
செய்தார் என்பது தெளிவாகப் பதிவாகி இருக்கும். இது ஓர் அற்புதத்
தொழில்நுட்பம்.
பல ஆண்டுகாளுக்கு முன் யாரொவர் செய்த வடிவத்தில் இருந்த கட்டுரையையும்
அப்படியே காணவும், படியெடுக்கவும் இயலும்.//

இது செல்வா சொன்னது !!

// நீக்கப்பட்ட கட்டுரைகளும் சேமிப்பில்
இருக்கும் ஆனால் சாதாரண பயனர்கள் அவற்றைப் பார்க்க முடியாது. //

இது நீங்கள் சொல்வது

--

எது உண்மை நண்பரே ???? :) :) :)

said...

//. பொதுவாக ஆங்கில
விக்கிப்பீடியாவில் எதிர்பார்க்கப்படும் கலைக்களஞ்சிய வடிவில் அவை இருந்ததாகச்
சொல்ல முடியவில்லை. பல இடங்களில் கட்சி ஆதரவுப் பத்திரிகைகளில் காணும்
கட்டுரைகளின் தொனி இருந்தது. "his immense contribution has begun to bear
fruits", "His idea ............ is a milestone in setting quality health
care for the rural poor". போன்ற கூற்றுக்கள் பொதுவாகச் சர்ச்சைக்கு உரியவை. //

அப்படி ஒரிரு வரிகள் இருந்தால்

1. அந்த வரிகளை நீக்குவது விக்கி நடைமுறையா

அல்லது

2. அந்த கட்டுரையை நீக்குவது நடைமுறையா

--

எது கடைப்பிடிக்கப்படுகிறது

--

அன்புமனி விஷயத்திலும் அது தான் கடைபிடிக்கப்பட்டுள்ளதா

said...

தமிழ் விக்கிப்பீடியா மீதான விமர்சனங்களும் பதில்களும்

said...

தமிழ் விக்கிப்பீடியா எந்த வகையிலும் நம்பகமான தளம் இல்லை. தமிழ் விக்கிப்பீடியாவிற்கு என கொள்கைகள் உள்ளன. ஆனால் அவை புதிதாக அல்லது அவை தொடர்பான கேள்விகளை எழுப்புவோர் மீது பொடா சட்டம் போல் பாயும்.

தன்னைப் பற்றிய கட்டுரையை தானே தொகுக்கூடாது என்று ஒரு கொளகை உள்ளது. ஆனால் புன்னியாமீன் போன்றோர் தொகுத்தால் அங்கு எந்த சிக்கலும் இல்லை. ஒரே மாதிரியான கட்டுரைகளை தொகுக்கக் கூடாது என்றொரு கொள்கை வைத்துள்ளனர். ஆனால் ஒரே நபர் (மூன்று அல்லது நான்கு வரி கட்டுரைகளாக ஆயிரக்கணக்கில் எழுதிக் குவித்துக்கொண்டிருக்கிறார். அவ்வாறான மூன்று வரியில் கட்டுரை எழுதுவது என்பது விக்கிப்பீடியாவிற்கு வெளியில் எவரும் எழுத மாட்டார்கள். எவரும் பார்க்கவும் மாட்டார்கள். விக்கியில் அவ்வாறு எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகளை பார்வையாளர் எண்ணிக்கை விபரத்தைப் பாருங்கள். அக்கட்டுரையை எழுதியவரைத் தவிர எவரும் பார்த்ததாக இருக்காது. அவ்வாறு எவருக்கும் பயன்பெறாத கட்டுரைகள், எண்ணிக்கையை மட்டும் கூட்டி அகமகிழ விரும்பும் ஒரு சிலரின் நோக்கங்களின் கீழ் தான் தமிழ் விக்கிப்பீடியா உள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு எந்த வகையில் பகிரக்கூடிய தளம் அல்ல அது. அங்கே உள்ள கட்டுரைகளின் தகவல்கள் தம் விருப்பத்திற்கு எழுதப்படுபவைகள் மட்டுமே ஆகும். அன்மையில் சோடாபாட்டில் என்று ஒருவர் எவர் எந்த மாற்றம் செய்தாலும் உடனே அதனை அழித்துவருகிறார். தமிழ் விக்கிப்பீடியாவில் இப்போது அவரது ஆட்சி தான் நடக்கிறது. எவரது கருத்தையும் கண்மூடித்தனமாக எதிர்த்து தான் சொல்வது மட்டுமே வேதவாக்கு என எல்லோரும் ஏற்க வேண்டும் எனும் இருமாப்புடன் நடந்து வருகிறார்.

said...

தமிழ் குழந்தைகளில் எதிர்கால கல்வியில் அக்கரை கொண்ட எவராயினும், முதலில் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளின் தகவல்கள் எந்தளவு பக்கசார்பானது என்பதை அறிந்து அவற்றை எந்த குழந்தைக்கும் பகிரகூடியவை அல்ல என்பதை உணரல் வேண்டும்.