அழகிய தமிழ் பெயர் பெண் குழந்தைக்கு சூட்ட பரிந்துரையுங்கள்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தூய தமிழ் பெயரை குழந்தைகளுக்கு வைப்பது என் வட்டாரங்களில் எனக்கு அறிமுகமான இடங்களில் மிக குறைவாக (கிட்டத்தட்ட இல்லையென்றே சொல்லலாம்) முதலில் என் கல்லூரி நண்பர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு தூய தமிழ்பெயர்கள் வைக்க ஆரம்பித்தனர், அதன் பின் நானும் என்னை தொடர்ந்து என் சகோதரியும் என இப்படியாக தூய தமிழ்பெயர் வைப்பது என் வட்டத்தில் தற்போது அதிகரித்துள்ளது, தொடர்ச்சியாக பலரிடமும் தூய தமிழ்பெயர் வைப்பதின் அவசியத்தை எடுத்து கூறிக்கொண்டுள்ளோம்...

ஆனால் சிறந்த தூய புதுமையான தமிழ்பெயர்கள் கிடைப்பது அரிதாகவே உள்ளது, தமிழ்பெயர் புத்தகங்கள் எல்லாம் பெரும்பாலும் வடமொழி பெயர்களையே கொண்டுள்ளன...

என் மகனிற்கு தூய தமிழ்பெயர் சூட்ட பெயர்களை தேடினோம், இலக்கிய பாடல்களிலிருந்தெல்லாம் தேடினோம், என் நண்பனின் மகனுக்கும் இப்படியே தேடி பதிவில் இட்டோம், பல நல்ல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.

என் நண்பரின் பெண் குழந்தைக்கு சூட்ட ஒரு தூய தமிழ்பெயர் தேவைப்படுகிறது, தூய தமிழ்பெயர்களை தெரிவித்து உதவுங்கள்...

25 பின்னூட்டங்கள்:

said...

SENTHALIR
MANJARI
NITHILA
POOMPOZHIL
KANMANI

said...

மாதுமை
குழலி
நிறைமதி
உமை
உமையாள்

said...

தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இனிய தமிழில் பெயர் வைப்பது நமது கடமை. எங்கள் ஊரிலும் புதுச்சேரி சுற்றுப்புறப் பகுதிகளிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைந்தது 1000 குழந்தைகளுக்கு இனிய தமிழ் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை இதைவிட அதிகமாகவே இருக்கும்.

என்னுடைய பரிந்துரை...

பனிமலர், கயல்விழி, அன்பரசி, அகிலா, தேன்மொழி, தமிழினி, தமிழரசி.

நன்றி,
சீ.பிரபாகரன்
அரியாங்குப்பம்

said...

தமிழ்

said...

இலக்கியா,யாழினி,இளமதி,முகில்,ஓவியா

said...

வெண்மதி
வெண்ணிலா
தமிழரசி
ஓவியா
தென்றல்
அன்பரசி

நாங்கள் சொல்லும் பெயர் செலக்ட் செய்யப்பட்டால் அதற்கு பரிசாக அந்த குழந்தையிடம் இருந்து ஒரு இச் கிடைக்குமா ?

said...

நிலா,,இளமதி, வெண்ணிலா ,எழிலி பூங்குழலி ,கனிமொழி !!,தேன்மொழி ,செல்வி ,கலைச்செல்வி ,கலைமகள் ,மங்கைஇனியா,மலர்விழி ,மலர்மகள் ,மது ,பூங்கோதை ,குந்தவி

--வானதி ,இதுவும் தமிழ்ப்பெயர் என்றுதான் நினைக்கிறேன்

said...

வான்முகில்
ஓவியா
சாலினி[சாலன், சாலினி]
யாழினி
பூங்கோதை
சித்திரா
தை
அங்கவை
சங்கவை
நீலா
வெண்மதி
அழகி

said...

வான்முகில்
ஓவியா
சாலினி[சாலன், சாலினி]
யாழினி
பூங்கோதை
சித்திரா
தை
அங்கவை
சங்கவை
நீலா
வெண்மதி
அழகி

said...

அறிவொளி

said...

பெயரில் ழகரம் தவிர்க்க வேண்டும். புரட்சி கலைஞர் போன்றவர்களுக்கு கூப்பிட சிரமமாய் இருக்கும். பெண் குழந்தைங்குறதால நிறைய வல்லின எழுத்து வராமல் பார்க்கணும்

-- வேல் --

said...

sudar
ooviya

said...

இப்படி மொட்டையாக குறிப்பிட்டு பெயர் கேட்டால் எப்படி எந்த நாள், திகதி, கிழமை என்று எதுவும் இல்லாமல்.
இலக்கிய பெயராக வேண்டுமானால் சங்கமித்திரை,மணிமேகலை, சந்திரவதி. பூங்கோதை.
குணம் சார்ந்த பெயர் ஆனால் தேன்மொழி, பெண்மணி,
இயற்கை சார்ந்த பெயர் என்றால் கனிமொழி, நிலா, சந்திரவதனா, அறிவுமதி போன்றவை சூட்டலாம்.

said...

thamizhini,
iniyaal,
madhavi,
anjalai(anjali),
arivazhagi,
alarmelmangai,
banumathi,
semmalar,
vasantha, vasanthi,vasanthasenai,
ezhilarasi,
ezhilmozhi,
elavazhagi,
elavarasi,
gnanaoli,
gnanamani,
ilamathi,
ilanthalir,
ilavenil,
..............

said...

எனக்கு பெண் குழந்தைப் பேறு கிடைத்தால் 'வெண்பா' என்று பெயர் வைக்கலாம் என்று யோசித்திருந்தேன்.

said...

இங்க கொஞ்சம் இருக்கு.

http://kurumban.blogspot.com/2006/10/blog-post.html

உங்களுக்கு கிடைச்சத இந்த இடுகையில் போடுங்க தேடும் மற்றவர்களுக்கு உதவியா இருக்கும்.

said...

கனிமொழி,எழிலரசி,இளமதி,வளர்மதி,சுடர்மதி,அன்னக்கிளி,தமயந்தி,பூங்குழலி,தமிழ் ஓவியா,மான்விழி,கலையரசி,வெண்ணிலா,இளநகை

said...

பூங்கொடி, பொற்கொடி, தேன்மொழி, கயல்விழி, பூங்கோதை, மலர்விழி, இளமதி, பூந்தளிர், பொற்செல்வி, அஞ்சனை, இளம்பிறை, எழிலரசி, பொற்பாவை.

கூப்பிடுவதற்கு வசதியான பெயராக வைக்கவும். உதாரணம் கயல்விழி. செல்லமாகக் கயல் எனவும் அழைக்கலாம்.

உங்களைப் பாராட்டுகிறேன்.

said...

குழலி, எந்தத் தமிழ்ப்பெயரைச் சூட்டினாலும் பிற மொழிக்காரர்களும் கொஞ்சம் எளிதாக உச்சரிக்கும் அளவில் உள்ள பெயர்களாக தேர்ந்தெடுங்கள். இல்லையெனில் பெயர் பெரும்பாடுபடும். நான் என் மகளுக்கு வைத்த பெயர் “நிலா” - ஓரளவுக்கு பாடுபடாமல் இருக்கிறது.

said...

Neyaa(Sneha), Makizhmalar, iniyaa,
kunthavai, sangkavai, ponnaa, mukilaa, amuthaa, ainthavi.

said...

kayalvizhi, maanvizhi, thenmozhi, Anichamalar, andril, ezhilarasi, Aadhirai, Nappinnai,poongodi, porkodi, Ezhilvizhi, Anbuchelvi, ...

said...

Yaazhini.

said...

ழகரம் வேணுமா?

யாழிசை, எழிலினி, பூவிழி, மைவிழி, தேன்மொழி

இல்லைன்னா

பனிமலர், தென்றல், இளம்பிறை, இளம்பரிதி, இளந்தளிர்

//குழலி, எந்தத் தமிழ்ப்பெயரைச் சூட்டினாலும் பிற மொழிக்காரர்களும் கொஞ்சம் எளிதாக உச்சரிக்கும் அளவில் உள்ள பெயர்களாக தேர்ந்தெடுங்கள். இல்லையெனில் பெயர் பெரும்பாடுபடும்.//

வழி மொழிகிறேன். பின்னாளில் அப் பெண் வளர்ந்து தனக்கு வைக்கப்பட்ட பெயருக்காக பெற்றோரிடம் சண்டை போடாதவாறு நல்ல பெயராகவும் எளிய பெயராகவும் வைப்பது நல்லது.

said...

கார்முகில்
வெண்முகில்

said...

இந்த இணைய பக்கத்தில் பார்க்க.

http://www.infoog.com/weblogs/tamil-names-for-babies.html