ஜ்யோராம் = ரோசா = வன்முறையாளன் = ? = ? = ?

ரோசாவைப் பார் என்பார்
அவர் அடித்தார் என்பார்
அவர் குத்தினார் என்பார்
தெரியுதுபார் அவர் குத்தியது
மூக்கில் ஒழுகும் ரத்தத்திலென்பார்
அடித்தவர் நின்று அடித்தது
தானே என்றதால் ஆச்சி
இல்லையெனில்
அய்யகோ எப்படி நிரூபிப்பது?


மருமகன் டிவி வைத்திருந்தால்
அய்யோ கொல்றாங்க கொல்றாங்க
என்று படம் புடிச்சாவது நிரூபிக்கலாம்
போலி பிரச்சினையென்றால் கூட
அட்லீஸ்ட் ஸ்க்ரீன் ஷாட் சாட்சியாகும்
மூஞ்சியில் குத்தியவர் ஓடிப்போயிருந்தால்
மூஞ்சியில் குத்து வாங்கியதற்கு
உடைந்த மூக்கும்
மூக்கினில் ஒழுகும் ரத்தமுமே சாட்சியாம்

எத்தேச்சையானதா என்றால்
இது திட்டமிட்டதே என்பார்
அன்பாக பேசி அழைத்தார்
உணவில் விஷம் வைத்து கொல்லவே என்பார்
குடியில் அடித்துக்கொண்டதா என்றால்
நான் தான் நிறைய அவர் குடித்தது குறைவே என்பார்


ரோசாவின் பக்கமும் நியாயமிருக்குமே
குத்த தூண்டியதின் நியாமென்னவோ
என்றால்
அடுத்தவர் செயல்களை ஆராய
தன்னை மேல் நிலையில் நிறுத்தி
குத்தியதற்கு காரணம் வேண்டுமானால் இருக்கலாம்
ஆனால் நியாயங்கள் இருக்க முடியாது என
அவர்கள் என்னமோ கொலைக்கு
உடந்தை போல் என்று சிலர் அடையாளம்
சுட்டப் படுவர்

பின் நவீனச் சிந்தனையாளர்களாய் அறியப்படும்
சிலர் அடுத்தவன் பேங்க் கணக்கையும் பெட்ரூம் கணக்கையும்
சொல்வது வன்முறையில்லையா?

எழுத்தில் பெண்ணியம் பேசும் பலர்
தம் மனைவிகளையைக் கொலை செய்கின்றார்
மெதுவாக
எழுத்தில் அறம் குறித்துப் பேசுபவர் செயல்பாடுகளில்
அறமற்ற தன்மையே துறுத்தி நிற்கிறது பெரும்பாலும்

இதைப்பற்றி பேசினாலோ
எழுதினாலோ
சண்டைக்கு நிற்கிறான் பாரு
வேலையத்தவனுங்க என்கிறார்கள்

எல்லார்க்குள்ளும் கொஞ்சம் கொஞ்சம்
வன்முறையாளன் இருக்கிறான்

டைப்பர் போடாத என் பையன்
என் முதுகில் சூடாக மூச்சா போனதால்
போய் கழுவலாமா என நினைப்பதால்
பாதியில் நிற்கப் போகிறது
இந்த (இந்த வன்முறை) கவிதை

நண்பா ஜ்யோராம்,
காயங்கள் ஆறியிருக்குமென நம்புகிறேன், நலமடைந்திருப்பாய் சம்பவத்திற்கு பின் இரண்டு பதிவுகள் பார்த்தேன் உம் வலைப்பதிவில், இது ஒரு மொழிவிளையாட்டு, இது ஒரு கவிதை, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வன்முறையாளன் இருக்கிறான் அவன் வாய்ப்பை பொறுத்து கொஞ்சமாகவோ அதிகமாகவோ வன்முறை செய்கிறான், அதை மொழிவிளையாட்டாக இதில் கூறியுள்ளேன், மற்றபடி யாரையும் நக்கல் செய்தோ கிண்டல் அடித்தோ அல்லது எந்த வன்முறையையும் ஆதரித்தோ இல்லை.... என் வாக்குமூலத்தை நம்பி இதை வெறும் கவிதையாகவோ அல்லது வெறும் மொழிவிளையாட்டாக மட்டும் எடுத்துக்கொண்டு இதை ரசிக்க உங்களால் முடிந்தால் சூப்பர் ஜ்யோராம்.... மிக்க நன்றி, உங்களை கை எடுத்து கும்பிடுகிறேன்.... இதற்கு மேல் இந்த பதிவை நீங்கள் படிக்க தேவையில்லை....

ஆனால் இதை படிக்கும்போதோ அல்லது அதற்கு நான் மொழிவிளையாட்டு எல்லோருக்குள்ளும் வன்முறையாளன் இருக்கிறான் என ஒரு வியாக்கியானம் செய்யும் போதோ என் மூஞ்சி மேல ஒரு அறைவிடனுமென்று தோன்றியிருந்தாலோ, சில பல கெட்ட வார்த்தைகளை உதிர்த்திருந்தாலோ, மயிரான் என் வலி தெரியுமாடா உனக்கு என்று நினைத்திருந்தாலோ, ஏன்டா பாடு என் மூஞ்சியில் குத்தியதில் உனக்கு மொழிவிளைட்டாடா என்றோ, உன் மூஞ்சியில் எவனாவது குத்தியிருந்தா தெரியும்டா நாயே உனக்கு அதனோட வலி என்றோ அல்லது ஒரு எரிச்சலாவது ஏற்பட்டிருந்தால்... மன்னிக்கவும் நண்பா உன்னை எரிச்சல் படுத்துவதற்கோ அல்லது வேறு எதற்குமோ நான் இதை எழுதவில்லை...

மற்றவர்களுக்கு ஒரு நிகழ்ச்சி நடைபெறும்போது நமக்கு அவர்கள் வலி புரிவதில்லை, அட புரியவில்லை என்றால் மூடிக்கொண்டாவது இருக்கலாம், ஆனால் நாமோ மூடிக்கொண்டும் இருப்பதில்லை, நாம் நம் முற்போக்குத்தனத்தையும் மேன்மையையோ, நம் நவீனத்துவத்தையோ அல்லது ஹா இதெல்லாம் ஒரு மேட்டரா என்றோ பல தத்துவ இசங்களை பேசிக்கொண்டே போகிறோம் அவர்களின் உணர்வுகளை மதிக்காமல், ஆனால் ஒரு நிகழ்ச்சி நமக்கே நடக்கும்போது நாம் பிறருக்கு சொல்லும் முற்போக்கு தன்மையையும், நவீனத்துவத்தையும் மற்ற பல எழவுகளையும் கடைபிடிப்பதில்லை....

போலி = மூர்த்தி = ? = ? = ? பதிவை உம் மொழிவிளையாட்டை படித்து பார்க்கவும், ஞாபகம் இருக்கா நண்பா அன்றே நாம் தொலைபேசியில் பேசிக்கொண்டோம் இது யாரையும் ஆதரித்து அல்ல, ஒவ்வொருவனுக்குள்ளும் ஒரு போலியிருக்கிறான் என்று சொன்னீர்கள், அதே போன்றே இன்று இதற்கு நானும் ஒவ்வொருவனுக்குள்ளும் ஒரு வன்முறையாளன் இருக்கிறான் என்ற விளக்கம் சொல்லும்போது நீங்கள் என்ன நினைத்துக்கொண்டீர்கள் என்று என்னிடம் சொல்லவெல்லாம் வேண்டாம்... அன்றைக்கு போலி பிரச்சினையில் பாதிக்கப்பட்டவர்கள் உணர்வுகளை கொஞ்சம் கூட புரிந்து கொள்ளாமல் அதை ஒரு கவிதையாக அணுக சொல்லியிருப்பீர்கள், நீங்கள் அடிபட்டதை எழுதிய பதிவில் ஒரு அனானி நகைச்சுவையாக எழுதியிருந்ததை உங்களால் நகைச்சுவையாக எடுக்க முடியவில்லையே... இன்று உங்களால் இதை ஒரு கவிதையாக மட்டுமே அணுக முடிந்ததா என்று உங்கள் மனசாட்சியிடம் மட்டும் கேட்டுக்கொள்ளவும், முன்பும் இதே போன்றே ஒரு பதிவு சுகுணாவுக்கு எழுதியது அந்த பதிவில் சில வரிகள் மீண்டும் இங்கே

அறிவுரை முற்போக்கு புரட்சி புண்ணாக்கு எல்லாம் மற்றவர்களுக்கு பேசும்போது நல்லா தான் இருக்கும், தமக்கும் அதே சூழல் வரும் போது எப்படியாக இருக்கும் என்பதற்கான ஒரு நிகழ்வு தான்...காத்திருந்து மாட்டுனியாடா மகனே என்று நேரம் கிடைக்கும் போதும் வாய்ப்பு கிடைக்கும் போது குத்தி காட்டுகிறாயா என்று கேட்பீர்களானால் ஆமாம் காத்திருந்து சரியான வாய்ப்பு கிடைக்கும் போது சொன்னால் தான் உணர்வு பூர்வமாக புரியும் இல்லையென்றால் அப்போதும் முற்போக்கு மூளைக்கு சரியாக புரியாது...

இந்த பதிவு விடயத்தை சுகுணா திவாகருக்கு ஜ்யோராமுக்கு மட்டும் தெரிவிக்க வேண்டுமெனில் சுகுணாவுக்கு ஜ்யோராமுக்கு ஒரு மின் மடலோ அவரின் கைபேசியில் அழைத்தோ சொல்லியிருப்பேன், ஆனா இது சுகுணாவுக்கு ஜ்யோராமுக்கு மட்டுமல்ல, இதே போன்று எண்ணமிருக்கும் சில முற்போக்குவாதிகளுக்கும் இந்த செய்தி போக வேண்டுமென்பதால் இது பதிவாகவே ஆனது.

நண்பா ஜ்யோராம் மேலேயிருக்கும் கவிதை(?) மொழிவிளையாட்டு என் நிலைப்பாட்டினை சொல்வதற்கில்லை, உம்மை வெறுப்பேற்ற வேண்டுமென்ற ஒற்றை காரணத்திற்காக தேடி தேடி எழுதியது, நடந்த துன்ப நிகழ்வின் தொடர்பான என் நிலைப்பாட்டிற்கும் அதில் உள்ள வரிகளுக்கும் துளிகூட தொடர்பில்லை.... நான் அந்த துன்ப நிகழ்வில் ரோசாவை நிச்சயமாக அவருக்கு எத்தனை காரணங்கள் இருந்தாலும் எத்தனை நியாயங்கள் இருந்தாலும் அடித்தது மிகத்தவறு அதை நான் ஆதரிக்கவில்லை...

முன்பே இது தயாராகிவிட்டாலும் கொஞ்சம் நாளாவது ஆகட்டுமென காத்திருந்து இப்போது தான் பதிவிடுகிறேன்...

14 பின்னூட்டங்கள்:

said...

எதிர் கவுஜ
உள்ளூர் அரசியல்
பழிக்கு பழி
நண்பனுக்கு ஆறுதல்
கண்ணாடியை
பார்த்தால்
என் மூக்கிலும்
ரத்தம்!

said...

அன்பின் குழலி,

இதை ஒரு கவிதையாகவோ, சுந்தரின் அப்போதைய கவிதைக்கு எதிர் கவிதையாகவோ அல்லது மொழி விளையாட்டாகவோ பார்க்க முடியவில்லை. அது என் குறைபாடாக இருக்கலாம்.

முன்பு சுகுணா விஷயத்திலும் சரி, இப்போது சுந்தர் விஷயத்திலும் சரி, வாய்ப்பு கிடைக்கும்போது நீங்கள் குத்திக் காட்டுவதாக நான் நினைக்கவில்லை. ஆனால், அப்போதைய உங்கள் தரப்பு நியாயத்தை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வலியுறுத்தி வருகிறீர்களோ என்று தோன்றுகிறது.

குழலி... நகைச்சுவையிலும் அரசியல் இருக்கிறது; குரூரம் இருக்கிறது; வக்கிரம் இருக்கிறது. இது எனது புரிதல் சார்ந்த பின்னூட்டம் மட்டுமே. தயவுசெய்து தவறாக நினைக்காதீர்கள்.

தமிழ்த்திரைப்படங்களில் மட்டுமல்ல, பதிவுலகிலும் நகைச்சுவைக்குரியவைகளாக மன உருவ அமைப்புகள், நிறம், ஆடையின் மலிவு, உடல் குறைகள், வீட்டு வேலை செய்பவர்களின் நடவடிக்கைகள், ஆங்கிலம் தெரியாமை, வறுமை, கிராமியத்தனம், சாதி சிறுமை, பெண் இழிவு, அறிவுஜீவித்தனம்... என நீளும் பட்டியலானது ஒருவகையில் வலிமையற்றவர்களின் மீதான Synicism-மாகவே பெரும்பாலும் இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.

அவற்றுக்குள்ளாகவே அதிகாரத்தை, மேலாண்மையை, மத அழுத்தங்களை நோக்கிய தலைகீழாக்கம் சில சமயங்களில் நிகழ்ந்தாலும், பொதுக்களத்தின் நகைப்பானது அதிகமாக அழிப்பையே செயல்படுத்துகின்றன. அதனால்தான் இந்த Humour, laughter என்பவற்றை எல்லாவற்றுக்கும் பொதுவாகப் பார்க்க முடியாது. நகைச்சுவையிலேயே Fascist Laugher உண்டு, Laughter of torture உண்டு, Cruel laughter உண்டு.

ரோசா தாக்கியதும், சுந்தர் ரத்தம் சிந்தியதும், பதிவுலகை தாண்டி இரு குடும்பங்களிலும் மிகப்பெரிய பாதிப்பை, அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

சுந்தரின் பதிவில் அனானி பின்னூட்டமிட்டது நகைச்சுவை என்றா நினைக்கிறீர்கள்? நல்லது நண்பா. அப்படியே இருக்கட்டும்.

அப்போதைய உங்கள் தரப்பு நியாயத்தை -

அப்போது எதிர் கருத்து சொன்ன நண்பர்கள் அனைவரும் புரிந்து கொள்ள -

அவர்கள் ரத்தம் சிந்தித்தான் ஆக வேண்டும் இல்லையா?

தோழமையுடன்
பைத்தியக்காரன்

said...

//சுந்தரின் பதிவில் அனானி பின்னூட்டமிட்டது நகைச்சுவை என்றா நினைக்கிறீர்கள்? நல்லது நண்பா. அப்படியே இருக்கட்டும்.
//
நான் நகைச்சுவையென நினைக்கவில்லை நண்பா, ஆனால் அதை எழுதியவன் நகைச்சுவை என்று எழுதினான், அவனுக்கு நகைச்சுவையாக இருந்தது ஜ்யோராமுக்கோ உமக்கோ எனக்கோ நகைச்சுவையாக இல்லையே... இது போன்று தானே எல்லாமும்? மொழிவிளையாட்டு உட்பட...

said...

குழலி, உங்கள் கவிதையை ரசித்தேன் :)

அனானி பின்னூட்டம் அந்தப் பதிவிற்கானது அல்ல, அந்தப் பதிவோடு எந்த விதத்திலும் தொடர்பற்ற வேறு ஒரு கவிதைப் பதிவில் அப்படிச் சொல்லியிருந்தார். மறக்க விரும்பும் ஒரு விஷயத்தை (என் பதிவில்) திரும்பத் திரும்ப நினைவுபடுத்தப் படுவதை நான் விரும்பவில்லை - அவ்வளவே.

said...

ஓஹ்.. நீங்கள் எந்தப் பின்னூட்டத்தைச் சொல்கிறீர்கள் என்பது புரிந்து விட்டது.

நான் என்னுடைய சமீபத்திய பதிவிற்கான பின்னூட்டத்தைச் சொல்கிறீர்கள் என்று குழம்பிவிட்டேன்.

said...

Thalaiva Kuzhali,
Ethuku adichikiringa?
santhosama irunka!

said...

oruthan poonool, kumkuma pottu vechindu naathigam pesuvar, naathingan enbar adhai nambanum aanal rosavukku paarppana kozhuppu endru sonnaal mookai udaikkaamal muththam koduthaa konjuvaargal?

said...

//நகைச்சுவையிலும் அரசியல் இருக்கிறது; குரூரம் இருக்கிறது; வக்கிரம் இருக்கிறது. //

Pls. Dont watch Quenten Torantino's movies

said...

These kind of writings (writing about among ourselves (bloggers) do not help for Blog world's growth.

Lot of bloggers have written that blogs are to be taught to school/college children, but after reading these type of negative, individual based blogs, I am concerned that blogs should be read only by people whose age is 25+

said...

/oruthan poonool, kumkuma pottu vechindu naathigam pesuvar, naathingan enbar adhai nambanum /

இதற்கு மட்டும் என் பதில் : நான் எப்போது பூணூலோடும், குங்குமப் பொட்டோடும் இருந்தேன். இதெல்லாம் அவதூறு.

said...

//oruthan poonool, kumkuma pottu vechindu naathigam pesuvar, naathingan enbar adhai nambanum aanal rosavukku paarppana kozhuppu endru sonnaal mookai udaikkaamal muththam koduthaa konjuvaargal?//

சூப்பரப்பு. இந்த குங்குமபொட்டு மேட்டர் என்னவென்று தெரியமால் பதிவர்கள் அவரவர் பைத்தியம் பிடித்து அலையபோகிறார்கள்

said...

தல, பேருக்கு நடுவுல கோடு போடறது எப்படி தல?

( என்ன கொடுமைடா இது? ஒருத்தர் கூடவா அனானியா வந்து குழவியை திட்டல? மகஇகவை தொடர்பு கொள்ளலாமா தல? :)) )

said...

தல, பேருக்கு நடுவுல கோடு போடறது எப்படி தல?
&ltstrike&gtபெயர்&lt/strike&gt

//( என்ன கொடுமைடா இது? ஒருத்தர் கூடவா அனானியா வந்து குழவியை திட்டல? மகஇகவை தொடர்பு கொள்ளலாமா தல? :)) )
//
விடுங்க அடுத்த பதிவில் உடன்பிறப்புகள் வந்துருவாங்க அந்தளவுக்கு ஒரு மேட்டர் உண்டு...

said...

//தல, பேருக்கு நடுவுல கோடு போடறது எப்படி தல?
&ltstrike&gtபெயர்&lt/strike&gt//

நீங்க ரொம்ப நல்லவருங்க.. நான் எதுக்கு அந்த கமெண்ட் போட்டேன்னு நிஜமாவே உங்களுக்கு தெரியாதுன்னு நான் நம்பறேன். :))

//விடுங்க அடுத்த பதிவில் உடன்பிறப்புகள் வந்துருவாங்க அந்தளவுக்கு ஒரு மேட்டர் உண்டு...//

வெரி குட். எவ்ளோ நான் தான் என்கிட்டயே சண்டை போடுவீங்க.. ஒரு சேஞ் வேணும்ல.. ஆல் தி பெஸ்ட்.. :))