பிழைக்கத்தெரியாதவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

இனத்தை அடகு வைத்து பிழைத்திருக்கலாம்
உன் பேரன்கள் உலகின் பெரிய பணக்காரர்
வரிசையில் வந்து சேர

தமிழை அடகு வைத்து பிழைத்திருக்கலாம்
உன் பையன்களுக்கு மத்திய மாகாண
மந்திரிகளாக வந்து சேர

மொழியை அடகு வைத்து பிழைத்திருக்கலாம்
உன் குடும்பங்கள் ஊருக்கு ஒரு சேனல் கொண்டு
தொழிலதிபர்களாக வந்து சேர

உன் மீதான நம்பிக்கையை வைத்து பிழைத்திருக்கலாம்
உன் பதவி பறிபோகாமல் சாகும்வரை
பதவிகள் வந்து சேர

எம் இனத்துக்கான போராட்டத்தை அடக்கி பிழைத்திருக்கலாம்
பல்லாயிரம் கோடி ஊழல்கள் மூலம்
பணம் வந்து சேர


இதெல்லாம் செய்தால் பழி வந்துசேருமா?

அடப்போய்யா அண்டி பிழைக்கும் நாய்களை
விட்டு சொல்ல சொல்வோம்
ராஜதந்திரமென குரைக்க சொல்லலாம்

இதெல்லாம் இனத்துரோகி என்ற பெயர் வருமா?

அடப்போய்யா பாராட்டி பிழைக்கும்
ஓணாண்டிபுலவர்களை விட்டு நடத்துவோம்
ஒரு மொழி மாநாடு

இதெல்லாம் செய்தால் கோழையா?

அடப்போய்யா பொழைக்க தெரியாதவனே
எவன் காலை நக்கியும் பிழைக்க தெரியனும்

துரோகிகளும், பிழைப்புவாதிகளும், கோழைகளும்
நிறைந்த இந்த கேடு கெட்ட இனம்
இன்னமுமா இந்த மண்ணில் இருக்கு
என்றே வியந்திருக்கேன்
இவ்வினம் இம்மண்ணில்
பிழைத்திருப்பதே உன் போன்ற
வீரர்களாலும்
அவர்களின் ஈடற்ற தியாகங்களாலுமே


உன் போன்ற ஒரு தலைவன்
ஆயிரமாண்டுகளாய் கண்டதில்லை
எம் இனம்

உன் போன்ற ஒரு வீரன்
ஆயிரமாண்டுகளாய் கண்டதில்லை
எம் இனம்

உன் போன்ற ஒரு மனிதன்
ஆயிரமாண்டுகளாய் கண்டதில்லை
எம் இனம்

வீரர்களை பார்த்ததில்லை
மாவீரர்களையும் பார்த்ததில்லை
கேட்டிருக்கேன், கதைகள் பல கேட்டிருக்கேன்
எம் இன வீரர்களின் கதைகள் பல படித்திருக்கேன்
இதோ உன் காலத்திலேயே நாங்களும் வாழ்ந்திருக்கோம்


'ஈன'த்தலைவர்களை
எல்லாம் 'இன'த்தலைவர்களாக
நெஞ்சில் சுமந்து திரிந்திருக்கேன்

ஏ பிழைக்கத்தெரியாதவனே
நீ தான் எம் இனத்தலைவன்
தமிழனத்தலைவன்

நீ இருந்தாலும் இல்லையென்றாலும்
எப்போதும் நீ வாழ்கிறாய்
எங்கள் நெஞ்சிலும்
எம் இன சரித்திரத்திலும்

17 பின்னூட்டங்கள்:

said...

wht a powerful words !!!
marvellous !!!
wonderfull !!!
i had no words to share !!!

maaveeranuku pirantha naal vaalthukkal

said...

தமிழினத்தலைவருக்கு வாழ்த்துகள்!

said...

தமிழின பூசாரிக்கு...!

இந்தப் பிழைப்பு எதுக்கு!?

said...

ஹும் ! பெருமூச்சு மட்டுமே விட முடிகிறது

அன்புடன்
சிங்கை நாதன்

said...

arputhamana vaarthaikal
tamil mannarkalai neril paarthathillai,vaalum mannan prabakaranai paarkirom

said...

சத்திய வார்த்தைகள்..

இந்த லட்சணத்தில் சில காக்கை வன்னியர்கள் காக்கை வன்னியனைப் பற்றி....

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=160125&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=

said...

வாழ்த்துக்கள்....!!!!!!!

said...

தேசிய தலைவருக்கு எமது வாழ்த்துக்கள்.

உங்களுக்கு எமது நன்றி.

said...

அவரிடம் மனித மனம் இருந்தா ல் செய்திருப்பார் அவர் இனத்தை காக்க வந்த மீட்பன் அல்லவா.......இவை எதற்கும் விலை போகவில்லை. இன்று தான் வந்திருக்கிறேன் உங்கள் தளத்துக்கு. சொல்லவேயில்லை.. தளம் இருக்குதென்று. பாராடுக்கள். வாழ்த்துக்கள். நட்புடன் நிலாமதி ..mathinilaa.blogspot.com

said...

நச்! நச்! நச் !!!

உணர்வோடும் இருக்கிறது.

said...

தேசிய தலைவருக்கு எமது வாழ்த்துக்கள்.

உங்களுக்கு எமது நன்றி.

said...

புற நானுற்று தமிழா எதிரியை
புற முதுகிட்டு ஓட வைத்த தலைவா வாழ்த்த தகுதி இல்லை வணங்குகிறேன் உன் பொர் பாதம்

said...

புற நானுற்று தமிழா எதிரியை
புற முதுகிட்டு ஓட வைத்த தலைவா வாழ்த்த தகுதி இல்லை வணங்குகிறேன் உன் பொர் பாதம்

said...

தேசிய தலைவருக்கு வாழ்த்துக்கள்.

வரிக்கு வரி நெஞ்சு நிமிர்த்தி வீர வணக்கம் செய்கிறேன்...
மிக மிக உணர்வுப் பூர்வமாக இருந்தது.

said...

வணங்குகிறேன்

விஜய்

said...

உன் போன்ற ஒரு தலைவன்

ஆயிரமாண்டுகளாய் கண்டதில்லை

எம் இனம்

இனி காண போவதும் இல்லை எம் இனம்..

அருமையான கவிதை

said...

நெஞ்சகத்து கடுந்தீயயை
விதைத்தவனுக்கு
நன்றி .
விதைத்தவர்கள் தானே
அறுக்கவேண்டும் .
எனக்கான தலைவனை
எவனால் அழிக்கமுடியும்
என்னுள் வாழ்பவனை
எப்படி வாழ்த்துவேன்

என்னை போல்
வாழ்வோரும் வாழ்க
தீராப் பகை வெல்க