சிங்கப்பூரில் முனைவர்.மு.இளங்கோவன், இரத்தின புகழேந்தி உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி


தமிழ் வலைப்பதிவரும் தொடர்ச்சியாக கல்லூரிகளிலும் மற்றும் பல இடங்களிலும் இணையப்பயிலரங்கு நடத்தி வருபவருமான முனைவர்.மு.இளங்கோவன் அவர்கள் சிங்கப்பூருக்கு மே15,16 களில் வருகை புரிகின்றார்... மேலும் கிராமத்து சூழல், பாடல்கள் மற்றும் தமிழ் சார்ந்த, மண் சார்ந்த விசயங்களில் ஆராய்ச்சிகள் செய்தும் எழுதியும் வரும் திரு இரத்தின புகழேந்தி அவர்களும் சிங்கப்பூர் வருகின்றார்.

இவர்களுடனான ஒரு கலந்துரையாடல் வரும் ஞாயிறு மாலை 6:30 மணியளவில் இலக்கம் 42,கேம்ப்பல் லேன் என்ற முகவரியில் உள்ள மருதப்பர் உணவகத்தில் நடைபெற உள்ளது... வலைப்பதிவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொள்ள அழைக்கிறோம்.

இது தொடர்பாக என்னை தொடர்புகொள்ள +65 81165721 என்ற எண்ணில் அழையுங்கள்

0 பின்னூட்டங்கள்: