தோழர் சீமான் கைதுக்கு கண்டனங்கள்

தோழர் சீமான் கைதுக்கு எமது கடும் கண்டனங்கள், அவர் பேசியது தொடர்பாக விவாதத்தை முன்னெடுக்க வேண்டும், அப்பாவி பொது மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பது சிங்களனுக்கு மட்டும் பொறுந்துவதில்லை தமிழனுக்கும் பொறுந்துமே... தமிழக மீனவர்களை சுட்டபோது இது நாள் வரை புலிகளுக்கு டீசல் கடத்துகிறார்கள் பெட்ரோல் கடத்துகிறார்கள் பேரிங் கடத்துகிறார்கள் பேரிக்காய் கடத்துகிறார்கள் என்றார்கள் இப்போது தான் புலிகள் என்ற இயக்கமே இல்லை என்கிறார்களே இப்போது ஏன் சுடுகிறார்களாம்.

வேட்டை சமூகம் வேளாண்மை சமூகம் ஆனபோது அரசு செய்த முதல் செயல் மக்களிடமிருந்த ஆயுதங்களை களைந்து அதை படைகளிடம் தந்தது, மக்களின் பாதுகாப்பை படைகள் ஏற்றுக்கொண்டதாக பொருள் ஆனால் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை இந்திய படைகள் ஏற்கவில்லை என்னும் போது தமிழக மீனவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதையெல்லாம் கவனிக்க வேண்டிய மானங்கெட்ட கருணாநிதி(முன்பு ஜெயலலிதா அரசும்) அரசு மீண்டும் கடிதம் எழுதும் வேலையில் இறங்கும்.

கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பதால் மிக சுருக்கமாக எழுதியுள்ளேன், குடிமக்கள் ஏந்தவேண்டிய ஆயுதம், அப்பாவி பொதுமக்கள் என்பவர்கள் யார், எம்மாதிரியான காலகட்டத்தில் சீமான் பேச்சுமுக்கியத்துவம் பெறுகிறது என விரிவாக எழுதுகிறேன்.

தற்போதைய தேவை கடிதம் எழுதும் கையாலாகாதவர்கள் அல்ல, தமிழ் பாசிஸ்ட்களின் தேவையை இந்திய, தமிழக, இலங்கை அரசுகள் ஏற்படுத்தியுள்ளன

7 பின்னூட்டங்கள்:

said...

யாரு சீமானை கைது செய்தது?
தமிழ்நாட்டில் யாரு முதல்வர்?
ஓ....கருணாநிதி என்ற நபரா..அப்ப நடக்கும்.அந்த ஆளுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிப்பவர் மட்டுமே தமிழ்நாட்டில் வாழமுடியும் போல?
கனிமொழிநாடார் அம்மையாருக்கு நண்பராக இருந்தால் தப்பிக்கலாம்.

said...

//தற்போதைய தேவை கடிதம் எழுதும் கையாலாகாதவர்கள் அல்ல//

:-)

என்ன சொன்னாலும் சொரனவராது.

ஒரு பய மூச்ச உட மாட்டேங்குறான். தின்ன குஸ்கா இன்னும் செரிக்கல எவனுக்கும்.

said...

both karuna&jeya are opportunists:they will go to any extend to occupy the CHAIR!

said...

சத்தமா சொல்லாதிர்கள் இதற்கும் விழா எடுப்பார்கள்

said...

அவனுகள காப்பாத்த இவரை புடிச்சு உள்ள வக்கிறாங்களாமா?
மீனவர்கள கொன்னவங்கள யாரு புடிச்சு உள்ள போடுறது!
இப்பல்லாம் தமிழக/இந்திய அரசு உப்பை ஏற்றுமதி செஞ்சுட்டு, சும்மா வெறுஞ்சோத்த திங்கிது போலருக்கு!

said...

இன்று அதிகாலை 2மணி அளிவில் நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் கைதை கண்டித்து சுவரொட்டி ஒட்டிய கடலூர் மாவட்ட நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சலதீபனை காவல்துறையினர் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர், அவர் மீது 'அரசுக்கு எதிராக பொதுமக்களை தூண்டிய' வழக்கை பதிவு செய்து பிணையில் வெளிவர முடியாதவாறு சிறையில் அடைத்துள்ளனர்.

http://www.naamtamilar.org/textnews_detail.php?id=2008

said...

இப்பல்லாம் மரம்வெட்டி புகழ் பாடுவதில்லையே குழலி.