ஒரு சமுதாயம் தனக்கான தலைவர்களை தானே உருவாக்கி கொள்ளும்

ஒரு சமுதாயம் அந்த காலகட்டத்திற்கான தலைவர்களை தானே உருவாக்கி கொள்ளும்

ஏற்கனவே இதை ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தேன், தற்போது இங்கேயும்

சமூகம் காலத்துக்கேற்றவாறு தன்னை தானே சரிசெய்து கொள்ளும் வலிமை உடையது, அதற்கு தேவை ஏற்படும் போது அந்த பிரச்சினையின் தீர்வுக்கும் மாற்றத்துக்குமான‌ தலைவர்களை தானே உருவாக்கும், அரசியலில் தூய்மை, நேர்மை, ஊழல் இல்லாத அரசியல் என்ற ஒரு அரசியல் சுதந்திரத்துக்கு முன்பும் சுதந்திரத்துக்கு பின்பும் சில காலங்கள் இருந்து வந்தது. ஆனால் அது சமூக பிரச்சினைகளை சுத்தமாக ஒதுக்கிவைத்திருந்தது, சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அதிகார பரவலாக்கத்துக்கு தேவையான தலைவர்கள் அப்போது தேவைப்பட்டதால் சமூகம் பெரியார், அம்பேத்கார் போன்ற தலைவர்களை உருவாக்கியது, பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கான அரசியல் அதிகார பரவலாக்கத்திற்காக அது சோஷலிஸ்ட் கட்சி ஆட்கள், லல்லு பிரசாத் யாதவ், முலாயம் சிங், அண்ணாதுரை, கருணாநிதி, ராமதாஸ், திருமா போன்றவர்களை சமூகம் தனது தேவைகளுக்காக உருவாக்கியது.

அரை நூற்றாண்டுகாலத்தில் தற்போது மீண்டும் அரசியலில் தூய்மை, ஊழலற்ற நிர்வாகம், அரசியலில் வெளிப்படை தன்மை இவற்றுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் சமூகம் தனக்காக அர்விந்த் கேஜ்ரிவால் போன்றவர்களை உருவாக்குகிறது. தேவை ஏற்படின் மீண்டு இந்த சமுதாயமே பெரியார், அம்பேத்கார், லல்லு, முலாயம், கருணாநிதி, ராமதாஸ், திருமா போன்ற தலைவர்களையும் உருவாக்கும்.

பிரச்சினைகளுக்கு ஏற்றவாறு சமுதாயம் தனக்கான தலைவர்களை தானே உருவாக்கி கொள்ளும்...

ஆம் ஆத்மி அர்விந்த் கேஜ்ரிவால் கட்சி அதன் சமூக பார்வை குறித்து டிப்பிக்கல் தமிழ்நாட்டு முற்போக்கு ஸ்டைல் விமர்சனங்கள் வர ஆரம்பித்துள்ளன, அர்விந்த் ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற் பட்டவர் அல்ல விமர்சனங்கள் வரட்டும் நல்லது தான்.

இந்திய தேசியத்துடன் அரசியலில் நேர்மை தூய்மை என முழங்கும் கெஜ்ரிவால் போல தமிழ்தேசியத்துடன் அரசியலில் நேர்மை தூய்மை என்று தமிழகத்தில் வந்தால் ஒரு மாற்றத்துக்கான ஆரம்பம் ஏற்படலாம். கவிஞர் தாமரை சில நாட்களுக்கு முன் அவரது ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டது போல பொதுவாழ்விலும் தனி வாழ்விலும் தூய்மையில்லாதவர்களால் நல்ல‌ அரசியலை முன்னெடுக்க முடியாது.

மாற்று கொண்டு வருவோம் என முழங்குபவர்கள் புதியவர்களை, பொது வாழ்வில் தூய்மையானவர்களாக இருக்க வேண்டியதேவை உள்ளது, விஜயகாந்த் மாற்று கொண்டு வருகிறேன் என மற்ற கட்சியில் சீட்டு கிடைக்காதவர்கள், பணக்காரர்கள், உள்ளூர் தாதாக்களை எல்லாம் களம் இறக்கினால் சீன் தான்.

அப்படி வரும் புதியவர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா என்றால் இந்த டெக்னிக்கெல்லாம் தெரிய வர கொஞ்ச நாளாவது ஆகும், அது வரை சமூகத்துக்கு லாபம் தானே!

1 பின்னூட்டங்கள்:

said...

மீண்டும் 2005, 2006 ம் ஆண்டுகளைப் போல் நிறைய பதிவுகளை எதிர் பார்க்கிறேன்.