பாடிலாங்க்வேஜூம் வடிவேலுவும் - உடல்மொழி - 2

உடல்மொழியின்(பாடிலாங்க்வேஜ் ) முக்கியத்துவம், இரண்டாண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் இருக்கும் வடிவேலுவின் இடம்

பாடில்ங்க்வேஜ் பற்றி சும்மா ஒரு போஸ்ட் போட்டேன், நிறைய நண்பர்கள் உள்பெட்டியில் வந்து (சரி சரி இரண்டு நண்பர்கள் தான்) இதைப்பற்றி அடிக்கடி எழுதலாமே என்றார்கள், சரி நேரம் கிடைக்கும் போது எழுதலாம் என்று ஆரம்பித்துள்ளேன்,


நம்ம வடிவேலு என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர் படங்களில் வந்ததற்கும் இம்சை அரசன் இரண்டாம் புலிகேசியில் வந்ததற்கும் எவ்வளவு வித்தியாசங்கள்? அவருடைய வாய்ஸ் மாடுலேஷன், பாடிலாங்குவேஜ்களில் அவர் ஏற்படுத்திக்கொண்ட மாற்றங்கள் தான் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வடிவேலு ஃபீல்டில் இல்லாத போதும் இன்னும் வடிவேலுவின் இடம் நிரப்பப்படாமல் இருப்பதற்கான காரணம்.


நாம் பேசும் வார்த்தைகள் மூலமே பெரும்பாலும் பிறருடன் கம்யூனிகேஷன் செய்துவிடுகிறோம், நம்முடைய வார்த்தைகளே பிறருக்கு நாம் சொல்ல வருவதை புரிந்து கொள்வார்களா? அது மட்டும் போதுமா? என்றால் நிச்சயம் இல்லை.

"ராஸ்கல் என்ன இது சின்ன புள்ளதனமா இருக்கு"

இது வடிவேலுவின் பிரபலமான ஒரு டயலாக், இந்த டயலாக்கை ரகுவரன் சொல்வது போல நினைத்து பாருங்கள், வடிவேலு சொல்வதை போல நினைத்து பாருங்கள். ரகுவரன் சொல்வது வில்லத்தனமாகவும் வடிவேலு சொல்வது காமெடியாகவும் இருக்கும்.

ஆராய்ச்சி முடிவுகள் நிரூபிப்பது என்னவென்றால் நாம் தொடர்புகொள்ள பயன்படுத்தும் மொழி, சொற்கள் மூலம் பிறர் புரிந்து கொள்வது வெறும் 7% மட்டுமே... ஆனால் 93% நாம் சொல்வதை பிறர் புரிந்து கொள்வது நம் வார்த்தைகள் மூலம் அல்ல.

நம்ப முடியவில்லையா? நம் வார்த்தைகள் நாம் சொல்ல வருவதை பிறருக்கு புரிய வைப்பதில் வெறும் 7% மட்டுமே துணைபுரிகிறது மீதி 93% என்பது நம் குரல், மாடுலேஷன், நம் உடல்மொழிகள் மூலம் தான் பிறருக்கு புரியவைக்கிறோம்.

நம் வார்த்தைகள் பிறருக்கு வெறும் 7% மட்டுமே புரியவைக்கும் என்றால் மிச்சம் 93%த்தை ஏன் நாம் கவனிக்காமல் இருக்கிறோம்? இந்த 93% ஐயும் திறமையாக பயன்படுத்தியதால் தான் சிவாஜி கணேசன், வடிவேலு போன்றவர்கள் காலத்தை தாண்டியும் நிற்பதும் எல்லா டயலாக்கையும் ஒரே மாடுலேஷனில் பேசும் நடிகர்கள் டொக்காவதும் காரணமாகும்.

நாம் பிறரிடம் தொடர்புகொள்வது

1) நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் - 7%
2) நம் குரல் (வாய்ஸ் டோன், மாடுலேஷன்) - 38%
3) நம் உடல்மொழி(பாடிலாங்க்வேஜ்) - 55%

நம் குரல் மூலம் நம்மை பிறர் புரிந்து கொள்வதும், குரல் மூலம் நாம் பிறருக்கு உணர்த்துவதும் நாம் நன்றாக அறிந்ததே.

ஆனால் 55% உடல்மொழிகள் மூலம் நாம் தொடர்புகளை மேற்கொண்டாலும் நாம் அதில் பெரும்பாலும் கவனம் செலுத்துவதே இல்லை.

ஒருவர் பேசும் வார்த்தைகளை அவர் உண்மையாக பேசுகிறாரா, அல்லது மறைத்துக்கொண்டு பேசுகிறாரா என்பதை நம்மால் கண்டுபிடித்து விட முடிந்தால் எவ்வளவு சூப்பராக இருக்கும்?

பிசினஸ் டீலிங்குகளில் கலக்கலாம், மேனேஜர் அப்ரைசலில் பட்டைய கிளப்பலாம், யாரேனும் டிவியில் பேட்டி கொடுத்தால் ஏய் பார்ரா டுபாக்கூர் உடறான் என்று கண்டுபிடித்து கலாய்க்கலாம். ஆனால் சில கில்லாடிகள் இருக்கிறார்கள் உடல்மொழியை வைத்து எங்கே நாம் டுபாக்கூர் விடுகிறோமா என்பதை கண்டுபிடித்துவிடுவார்களோ என்று பொய் உடல்மொழிகளை வெளிப்படுத்துவது, டிவி விவாதங்களில் பேசும்போது மண்டையை மண்டையை ஆட்டி முடியை சிலுப்பி விடுவதும், உடல் மொழியில் ஆக்ரோசமாக வெளிப்படுத்துவதையும் உற்று நோக்கினால் அது உண்மையான உடல் மொழிகளை மறைக்கும் உத்தியாக இருப்பதாக‌ கருத வேண்டியுள்ளது.

ஒருவரின் வார்த்தைகள் பொய் சொல்லலாம் ஆனால் எவ்வளவு தான் மறைத்தாலும் நம் உடல்மொழி மட்டும் பொய் சொல்லாது.

ஐந்தறிவு நாய் ஒன்று கூட்டல் கழித்தல் கணக்கிற்கெல்லாம் கூட சரியான விடையை சொன்ன அதிசயம் நடந்தது எப்படி? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

3 பின்னூட்டங்கள்:

said...

after so many times Kuzhali...
Felt so good.. How are you doing.

Balachandar Ganesan.

said...

ஆம் வடிவேலுவின் உடல்மொழிதான் அவரது வெற்றிக்கு முக்கிய காரணம். அந்த காலத்தில் சந்திரபாபு, நாகேஷ் போன்றவர்களும் மிக சிறப்பான உடல் மொழி மூலம் நடிப்பை வெளிப்படுத்தியவர்கள்.

said...

very useful