அட நாசமாபோனவனே!

இந்த பதிவிற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்தேன் ஒன்றுமே சிக்கவில்லை, சரி நம்ம முகமூடி அண்ணாத்தே சொன்ன மாதிரி அவருக்கு பகடி பதிவு போடுவது எளிதாக இருப்பது மாதிரி நமக்கு நாசமாபோன என்பது எளிதாக வாயில் வந்து விழுகிறதே என தான் இந்த தலைப்பு

Image hosted by Photobucket.com

தீபாவளிக்கு முந்தைய நாள், கடலூர் கிருஷ்னாலயா திரையரங்கில் இளைய தளபதி விஜய் நடித்த சிவகாசி திரைப்பட வெளியீட்டிற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தன, சுவரொட்டி என்ன டிஜிடல் பேனர் என்ன, ஒரே கலக்கல் தான் போங்க, எங்க காலத்திலெல்லாம்(?!) துணிக்கு போடும் நீலத்தூளில் தான் பேனரும், கட்-அவுட்டும் எழுதுவார்கள் இப்போ எங்கெங்கு நோக்கினும் டிஜிட்டல் பேனர் தான், அதில் ரசிகர் மன்ற பொறுப்பாளர்களின் படங்களோடு சிவகாசி படத்திற்காக பெரிய பெரிய விஜய் படங்களோடு நிறைந்திருந்தது, ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் படங்களைப் பார்த்தால் எல்லோரும் பதின்ம வயதினர் போல, சரியாக மீசைக்கூட வளர்ந்தில்லை, அது சரி இந்த டிஜிட்டல் பேனர் அடிக்க சொந்த காசா போட்டிருப்பார்கள்.... சரி விடுங்க அந்த எளவு இப்போ முக்கியமில்லை....

இந்த கூத்து நடந்து கொண்டிருந்த அதே வளாகத்தில் உள்ள தேநீர் கடைதான் நமக்கு போக்கிடம், தோழர்களுடன் உலகநடப்பிலிருந்து உள்ளூர் நடப்புவரையிலும் மேலும் பல வெட்டி விடயங்களை அலசுவோம் மணிக்கணக்கில் அங்குள்ள நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு, இந்த முறை அங்கு சென்றபோது மேசை நாற்காலிகள் ஏதுமில்லை, பக்கத்திலேயே ஒரு அறிவுப்பு பலகை, 'காவல் துறை அறிவிப்பு, டீ சாப்பிட்டவுடன் எழுந்து செல்லவும்' அப்படியும் கடைமுன் நமது தோழர்களுடன் அரட்டை அரங்கம் நடத்திக்கொண்டே இருக்கும் போது ஒரு காதை மட்டும் பிய்த்து அருகில் பேசிக்கொண்டிருந்த இன்னொரு கும்பலிடம் அனுப்பி வைத்தேன்.


அவர்கள் விஜய் ரசிகர்கள் போலும், விஜயின் அருமை பெருமைகளையும் நடிப்புத்(?!) திறனையும் புளங்காகித்தோடு பேசிக்கொண்டிருந்தனர், ரஜினிடாட்காம் யாஹீ குழும மடல்களை ரஜினி ரசிகன் அல்லாத ஒருவர் படித்தால் எத்தனை நகைச்சுவையாக இருக்குமோ அத்தனை நகைச்சுவையாக இருந்தது அவர்களின் புளங்காகித பேச்சு, இப்படியே சென்று கொண்டிருந்த பேச்சின் இடையில் திடீரென ஒரு குரல் "எனக்கு போர் அடித்தால் கில்லி படம் போட்டு பார்ப்பேன்" , "சோகமாக இருந்தால் ப்ரியமுடன் படம் பார்ப்பேன்" "ஃபீலிங்காக(?!) இருந்தால் காதலுக்கு மரியாதை பார்ப்பேன்" என அடுக்கிக்கொண்டே சென்றார்கள், என் காது ஓடி வந்து என்னிடம் சொன்னது அட நாசமாப்போனவனே வாழ்க்கையின் மொத்த உணர்ச்சிகளையும் விஜய் திரைப்படங்கள் என்ற பெரிய்ய்ய்ய்ய வட்டத்தினுள் வைத்திருக்கிறார்கள் எளவு நீயும் தான் இருக்கியே உணர்ச்சியில்லா ஜடம் ஜடம் என்று ஒரு பாட்டம் அழுது தீர்த்தது, எப்படி என் காதை சமாதானப் படுத்துவது என்று கொஞ்சம் சொல்லுங்களேன்....


'கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததடா' என்று ஒரு கும்மாங்குத்து பாடல் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது, நம்ம பக்கத்து வீட்டு தம்பி யும் அதை பார்த்துக்கொண்டிருந்தார், அந்த பாடலை காலையிலிருந்து பல தடவை பார்த்துவிட்டதால் சீனாதானா பாடல் எதிலாவது ஓடுகின்றதா என நான் மாற்றிய போது அந்த தம்பி அண்ணே விஜய் பாட்டே வைங்க என்றார், அம்மா சொன்னாங்க அந்த தம்பி விஜய் ரசிகர்னு, அடேடே தம்பி உனக்கு விஜய் புடிக்குமா என்றேன், ம்... ரொம்ப என்றார் அவர், அடுத்த கேள்வி ரஜினி புடிக்குமா என்றேன் (விஜய் புடிச்சா ரஜினியும் புடிக்கும் என்ற ஒரு நம்பிக்கை தான்... ஆனால் ரஜினி புடிச்சா விஜய் புடிக்குமா என்பது சந்தேகமே) ... ம்... புடிக்கும் என்றார் அந்த தம்பி, அடுத்த கேள்வியை போட்டேன் உனக்கு விஜய் ரொம்ப புடிக்குமா ரஜினி ரொம்ப புடிக்குமானு... அதற்கு அந்த தம்பி சொன்னார் விஜய் தான் ரொம்ப புடிக்கும் என்று ... ஏன் என்று கேட்டபோது நான் சின்ன வயசிலிருந்து விஜய் படம் பார்க்கின்றேன் ரஜினி படம் ஒன்னுதான் பார்த்தேன் என்றார் சின்ன வயசிலிருந்து விஜய் படம் பார்த்த அந்த தம்பி படிப்பது UKG.... ஆனாலும் சிறு பிள்ளைகளையும் ஒரே படத்தில் கவர்வது ரஜினியின் திறமை.... ஆனால் தொடர்ந்து படம் தந்தால் மட்டுமே விஜயுடன் போட்டி போட முடியும் இல்லையென்றால் வயசான ரசிகர்கள் மட்டுமே எஞ்சுவார்கள்... இது ரசிகர்களுக்கு புரிகிறதோ இல்லையோ ரஜினிக்கு நன்றாக புரிந்துள்ளது அதனால் தான் அரசியலை மூட்டை கட்டிவிட்டு சந்திரமுகிக்கு அடுத்து உடனே சிவாஜி படம் தர அறிவிப்பு செய்துள்ளார்.... இதை சொல்வதால் மரம்வெட்டி காடுவெட்டி என்றெல்லாம் பின்னூட்டங்களில் கூறினாலும் உண்மை இது தானே என்ன செய்வது.... என்னங்க நாஞ் சொல்றது சரிதானே....

படங்களுக்கு நன்றி
http://www.behindwoods.com/

25 பின்னூட்டங்கள்:

said...

//ரஜினிடாட்காம் யாஹீ குழும மடல்களை ரஜினி ரசிகன் அல்லாத ஒருவர் படித்தால் எத்தனை நகைச்சுவையாக இருக்குமோ//

இதானே வேணாங்கிறது..?! ரஜினிடாட்காம் குழு சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கானது. அதில ரசிகர் இல்லாத ஆளுக்கு என்னய்யா வேலை?! வேவு பார்க்குறீங்களோ?! :)

வேணும்னா இப்படி சொல்லலாம்... ராமதாஸ் கூட்டத்திலே பேசுறதை குழலி மாதிரி ஆளுங்களைத் தவிர பெரும்பான்மையோர் கேட்டா எப்படி நகைச்சுவையா இருக்குமோ அப்படி...

இது எப்படி இருக்கு?!

said...

//ரஜினிடாட்காம் குழு சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கானது. அதில ரசிகர் இல்லாத ஆளுக்கு என்னய்யா வேலை?! //

வேலி போட்டாய்யா வச்சுருக்கிக?., எப்பிடியெல்லாம் புளாங்கிதப் படுறிகன்னு தெரிஞ்சுக்கப் போலாமில்ல?!., குழலி., இந்தா... இப்ப நான் பாக்கிறேன். அதுசரி முடிவா என்ன சொல்றிங்க... ரஜினி மாசத்துக்கு 2 படம் நடிக்கணும்னா..?. இல்ல விஜய் வருடத்திற்கு 1 நடிக்கணும்னா.....?

said...

//இதானே வேணாங்கிறது..?! ரஜினிடாட்காம் குழு சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கானது. அதில ரசிகர் இல்லாத ஆளுக்கு என்னய்யா வேலை?! வேவு பார்க்குறீங்களோ?! :)
//
சே சே அங்கே வேவு பார்த்து நான் என்ன செய்ய போறேன் ஆனா படிக்க படிக்க ஒரே தமாசு தான் போங்க....

//ராமதாஸ் கூட்டத்திலே பேசுறதை குழலி மாதிரி ஆளுங்களைத் தவிர பெரும்பான்மையோர் கேட்டா எப்படி நகைச்சுவையா இருக்குமோ அப்படி...
//
மருத்துவர் இராமதாசுவை தேவையின்றி அளவுக்கதிகமாக புகழ்ந்தால் எனக்கே சிரிப்பு தான் வரும்.... ஆனாலும் ரஜினிடாட்காம் யாகூ குழுமத்தை அடிச்சிக்க ஆளே இல்லை என்பதென்னவோ உண்மைதான்

said...

//ரஜினி மாசத்துக்கு 2 படம் நடிக்கணும்னா..?. இல்ல விஜய் வருடத்திற்கு 1 நடிக்கணும்னா.....?
//

அது சரி.....

said...

அதுக்கு என்ன பண்றது குழலி.. எங்களுக்கு எல்லாம் ராமதாஸை பார்த்தாலே சிரிப்பு பொத்துகிட்டு வருதே. தயிர்வடை தேசினனெல்லாம் அப்புறமாத் தான். அதுக்கு என்ன பண்றது?! இப்போ வரவர தயிர் வடை தேசிகனை மூன்றாம் இடத்துக்கு தள்ளீட்டு இரண்டாமிடத்துக்கு அன்புமணி வர்றாரு. இருந்தாலும் ராமதாஸ் மாதிரி இல்லே. தானாவே ஷாருக்கானுக்கு ஆதரவு கேட்டு லெட்டரெல்லாம் போட்டாராமே. ஐயோ பாவம்!

said...

யோவ், என்னால எல்லாம் அவரோட போட்டி எல்லாம் போட முடியாது. என்னை ஆள விடுங்க சாமி.

said...

என்ன மாயவரத்தான் ரொம்பத்தான் ஜீடா... இருக்கீங்க போல....

said...

ஜூடா... அப்படீன்னா என்ன? நாங்கல்லாம் ஆல்வேஸ் கூல்...! உங்க பக்கம் ரொம்ப ஹாட்டோ?!

said...

என்ன குழலி சார் உங்களை நம்பி ரஜனிடாட்காம் சைடுக்குப் போனாக்க, rajani dot com fac 1 up என்று அசிங்கமா எழுதி வைச்சிருக்காங்க. இனியாச்சும் இந்தமாதிரி அசிங்க லிங்கு கொடுக்காதீங்க

said...

http://movies.groups.yahoo.com/group/Rajinidotcom/message/20141

http://movies.groups.yahoo.com/group/Rajinidotcom/message/20145

http://movies.groups.yahoo.com/group/Rajinidotcom/message/20156

said...

http://movies.groups.yahoo.com/group/Rajinidotcom/message/20150

http://movies.groups.yahoo.com/group/Rajinidotcom/message/20137

said...

அய்யோ அய்யய்யோ, ரஜினிடாட்காம் யாகூ குழுமத்துக்கு பூட்டு போட்டுட்டாங்களே இப்படி நான் இப்போ நகைச்சுவை இணைய தளத்திற்கு எங்கே போவேன்....


சரி அத்த வுடுங்கோ மேலே அனானிமசு ஒருவர் சில மடல்களின் சுட்டி தந்துள்ளாரே, அதில் என்ன இருக்கின்றது என்று யாரேனும் இங்கு தந்துதவினால் நன்றாக இருக்கும்...

said...

நீங்க சொன்னீங்களே,சரி, ஒருதடவை போய் பார்க்கலாம்னு நினச்சேன். அதுக்குள்ள -ரஜினிடாட்காம் யாகூ குழுமத்துக்கு பூட்டு போட்டுட்டாங்களே-அப்டீங்கிறீங்களே..

said...

\\என் காது ஓடி வந்து என்னிடம் சொன்னது\\:-)

said...

ரஜினியுடன் விஜயை கம்பேர் பண்ணினால், கமலுடன் யாராயிருக்கும்னு யோசிசுகிட்டிருக்கேன்!!

said...

//ரஜினியுடன் விஜயை கம்பேர் பண்ணினால், கமலுடன் யாராயிருக்கும்னு யோசிசுகிட்டிருக்கேன்!!
//
சூர்யா, விக்ரம், லைலா, அசின் என ஒரு படையே இருக்காங்க...

//விஜய் அமைச்சரவையில இவங்க எல்லாம் இடம்பெறத்தான் போறாங்க, நாம பாத்து பெருமூச்சு விடத்தான் போறோம் ;)
//
ம்.. நீங்க வேற ஏற்கனவே ஒரு நடிகரின் ரசிகர்கள் சிலர் அமைச்சரவை வரைக்கும் போயிட்டாங்களாம்.... கேள்விப்பட்டேன் சரி அந்த தமாசு நூஸ் சரிதானா என பார்க்கலாம் என்றால் உறுப்பினராக இருக்கவேண்டுமாம்... பூட்டு போட்டு விட்டார்களே என்ன செய்ய....

said...

குழலி, டிஜிடல் பேனர் என்ன விலை இருக்கும்? குத்துமதிப்பாய் சொல்லுங்க போதும், ஜி.கே இம்ப்ரூவ் பண்ணிக்கத்தான் :-)

said...

ஒரு சதுர அடி 10ரூபாயிலிருந்து 50ரூபாய் வரை அச்சின் தரத்திற்கேற்றார் போல், மேலும் அந்த பாலித்தீன் பேனர் தனி விலை, பிறகு அந்த டிஜிட்டல் பேனர் வடிவமைப்பதற்கு தனி விலை... அதன் பின் அந்த டிஜிட்டல் பேனரை அடிப்பதற்கு கட்டையின் விலையும் கூலியும் தனி....

said...

//10ரூபாயிலிருந்து 50ரூபாய் வரை அச்சின் தரத்திற்கேற்றார் போல்//

என்னது... அஸின் தரத்துக்கு ஏற்றார் போலவா?!

said...

பதிவ விட மாயவர்த்தானும் குழலியும் பின்னூட்டங்கள்ள பேசிக்கிறதுதான் டாப் :-)))))

அதுலயும் மாயவர்த்தாரே.. உங்க முந்துன கமெண்ட் ;-) Chancey இல்ல :-))))

-
செந்தில்/Senthil

said...

குழலி உங்கள் கருத்தோடு நான் முழுக்க ஒத்துப் போகிறேன்.

said...

ரஜினியைப் பின்பற்று: ராமதாசு
ரஜினியைப் போல மற்ற நடிகர்களும் திரைப்படங்களில் புகைப்பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் தலைவர் மருத்துவர் ராமதாசு கூறியுள்ளார். நவ.3ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசியபோது இதனை அவர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் அன்புமணி, திரைப்படங்களில் புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகளுக்குத் தடை விதிக்கவேண்டும் என்று கூறியது, தேசிய அளவில் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது தொலைக்காட்சிகளில் அத்தகைய காட்சிகள் வரும்போது, திரையில் புகை பிடிப்பது உடல் நலனுக்குத் தீங்கானது; மது அருந்துவது உடல்நலனுக்குத் தீங்கானது என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்நிலையில் நவ.3ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ராமதாசு, "சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விடுவேன் என்று இந்தி நடிகர் ஷாருக்கான் கூறியிருக்கிறார். இதே கருத்தை நாங்கள் தொடர்ந்து வýயுறுத்தி வருகிறோம். நடிகர் ரஜினிகாந்த்கூட திரைப்படங்களில் சிகரெட் பிடிப்பதைத் தவிர்த்துவிட்டார். அவரைப் பின்பற்றி மற்ற நடிகர்களும் திரைப்படங்களில் சிகரெட் பிடிப்பதைத் தவிர்க்க வேண்டும்" என்றார்.

புகை பிடிப்பவர்கள் காதில் இது விழுந்தால் சரி.

said...

மக்கள்லாம் FULL FORM -ல இருக்காங்க போல .ஒரு மசாலா படம் பார்த்த திருப்தி!

said...

//ஒரு மசாலா படம் பார்த்த திருப்தி!
//
ஜோ என்னது மசாலா படமா? விஜய் படம் பார்த்த திருப்தி என்று சொல்லுங்கள் மசாலானா விஜய், விஜய்னா மசாலா....

said...

குழலி, செம form-ல இருக்கீங்க போல!