கோப்ராக்களும் அடிக்கப்படுமா?

சில தினங்களுக்கு முன் நடந்த பீகார் சிறை உடைப்பு சம்பவம் பற்றி கேள்விப்பட்டவுடன் நம்பவே முடியவில்லை, நடந்தது இந்தியாவிலா அல்லது நேபாளம்,லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்க நாடுகளில் ஏதாவதொன்றா என்று எண்ணுமளவிற்கு நடந்தேறியது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட நக்சல்கள் நகரில் ஆயுதங்களுடன் ஊடுறுவி நகர் முழுவதையும் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்து அதன் பின் பொதுமக்களுக்கு வீட்டை விட்டு வெளிவரவேண்டாமென்றும் பொதுமக்கள் எங்கள் குறியல்ல என எச்சரிக்கை கொடுத்து பின் சிறையை தாக்கி சில நக்சல்களை விடுவித்து சில ரன்வீர் சேனா படையை சேர்ந்தவர்களை கடத்தி கொன்றுள்ளனர்

ரன்வீர் சேனா பீகாரில் நக்சல்களை எதிர்கொள்ள நிலப்பிரபுக்களினால் உருவாக்கப்பட்ட கூலிப்படை, அதன் நடுமண்டையில் அடித்துள்ளனர் நக்சல்கள், இனி நக்சல்கள் தேடுதல் வேட்டை என்ற பெயரில் சில நக்சல்கள் உண்மையிலேயே கொல்லப்படலாம், சிலர் கொல்லப்பட்ட பிறகு நக்சல்களாக மாற்றப்படலாம்.

மக்கள் யுத்தக் குழு என்ற நக்சல் இயக்கம் ஆந்திராவில் மிக பிரபலமானது, பீகாருக்கு சற்றும் குறைந்ததல்ல ஆந்திர மாநிலம்... இன்றும் ஒரு ஊரில் உள்ள நிலங்கள் முழுதும் ஒரே ஆளுக்கு சொந்தமாக பல இடங்களில் உள்ளது, நக்சல்களை எதிர்கொள்ள ரன்வீர் சேனாவைப் போலவே ஆந்திர நிலபிரபுக்களும், காவல்துறையும் சேர்ந்து உருவாக்கிய இயக்கங்கள் தான் கோப்ரா இயக்கங்கள் என சில வாரங்களுக்கு முன் வெளியான ஜீனியர் விகடனில் வெளிவந்த கட்டுரையில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ப்ளாக் கோப்ரா, கிங் கோப்ரா என்ற பெயர்களில் இந்த இயக்கங்கள் நக்சல் ஆதரவு பிரமுகர்களுக்கு (இவர்களில் பலர் ஆயுதம் ஏந்தி போராடுபவர்கள் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது ஜீவி) பத்திரிக்கை வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் நேரிலும் எச்சரிக்கை கொடுத்து ஒரே வாரத்தில் சிலர் கொல்லப்பட்டனர், இதற்கும் காவல்துறைக்கும் தொடர்பில்லை என்று கூறினாலும் பலர் கோப்ரா இயக்க செயல்பாடுகளில் காவல்துறையின் பங்கை சந்தேகிக்கின்றனர், பீகாரில் உயர் சாதி நிலப்பிரபுக்களின் கூலிப்படையான ரன்வீர் சேனாவின் நடு மண்டையில் நக்சல்கள் அடித்தது போல ஆந்திராவிலும் கோப்ராக்களின் பற்கள் பிடுங்கப்படுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ரன்வீர் சேனா, கோப்ரா போன்ற இயக்கங்களை உருவாக்காமல், நில உச்ச வரம்பு சட்டத்தை முறையாக அமல் படுத்துதலும், இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பை உருவாக்குதலும் உயர் சாதி ஆதிக்க வெறி பிடித்த நில பிரபுக்களை அரசாங்கம் கட்டுப்படுத்தினாலும் மட்டுமே இனி வரும் காலங்களில் நக்சல்கள் உருவாகாமல் தடுக்க முடியும் இல்லையென்றால் நக்சல்களும், ரன்வீர் சேனாக்களும், கோப்ராக்களும் சிறை உடைப்புகளும் தவிர்க்க முடியாதவையாகிவிடும்.

4 பின்னூட்டங்கள்:

said...

சரியான கருத்து, என்னைக்கு இந்த அரசியல்வாதிகளுக்கு ஒரு தொலைநோக்கு பார்வை வரும் ?

என்னைக்கு தான் ....

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செய்வாங்க ?!

ஒருவேளை அதுக்கு இளைஞர்கள் வரணுமோ ?!

-
செந்தில்/Senthil

said...

நன்றி செந்தில்...
நக்சல்கள் பிரச்சினை வெறும் சட்ட ஒழுங்கு பிரச்சினை அல்ல. அது சமூக பிரச்சினை, வட கிழக்கு மாநிலங்களில் இந்த பிரச்சினையை மட்டு படுத்த இளைஞர்களிடையே போதை மருந்து பழக்கத்தை அரசாங்கமே மறைமுகமாக ஊக்குவித்துக் கொண்டுள்ளதாம், இது என்ன கொடுமை.... உல்பா இயக்கம் அந்த மாநிலங்களில் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் மாவட்டங்களில் திரைப்படங்களை அனுமதிப்பதில்லை, ஆனால் அரசாங்கமே மறைமுகமாக நீலப்படங்கள் எளிதாக கிடைக்க செய்கின்றது இதெல்லாம் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர முயலாமல் நோயுற்ற சமுதாயத்தை உருவாக்குகின்றது, நக்சல்கள் உருவாவதில்லை, உருவாக்கப்படுகின்றார்கள்.... இப்படி பேசிய சிலரை அறிவுஜீவி 'சோ'ராமசாமி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

said...

Hi Kuzali,
Constructive article/discussion.
Thanks for those remarkable info.

As i herad,in/during liberation srtrugglings (Freedom War) also,the rulling Governments/supporting/Invationg forces had created these type (Copras?)of "anti-groups" from the people who fight for Liberation.
It seems to be "piriththalum suulchi".
In 1960s America launched "Operation Bay of Pigs" against Cuban Revolutionary people by its "some people",but was successfully succeded by Cuban patriotics.
Likewise,in Nickaraguva Strugglings same "super power" had craeted "Contras"(spelling may incorrect,sorry for it..) against "Sandinistra",who fight for freedom.....
In present also,so many "notorious" examples these type of activities are being carried out against "Liberstaion strugglings".....

Shanthan

said...

நன்றி குழலி. பிரான்சில் நடந்த கலவரங்கள் கூட வலைப்பதிவில் பதியப்பட்டிருக்க, இந்த சிறைஉடைப்பு நிகழ்ச்சி பேசப்படவில்லையே என நினைத்திருந்தேன். பூலான்தேவியின் வாழ்க்கை வரலாறு படிக்கும் எவரும் சில வடமாநிலங்களில் நிலவும் சமூகக் கொடுமைகளை அறிந்துகொள்ளலாம். அரசும் மேல்சாதி அமைப்புகளும் எவ்வாறு கைகோர்த்து செயல்படுகின்றன என்பது வெட்டவெளிச்சமாக தெரியும். சாதி இல்லை அதெல்லாம் ஒழிந்துவிட்டதென படம் காட்டுகிறவர்கள் ஒன்று கனவு காண்கிறார்கள்; அல்லது ஏமாற்றுகிறார்கள்.