ஒரு முயற்சி! ஒரு வேண்டுகோள்!!

இணைந்த கைகள் என்ற என் பதிவில் மருத்துவர் இராமதாசு மற்றும் தொல்.திருமாவின் தற்போதைய இணைப்பு பற்றி எழுதியிருந்தேன், அதில் உஷா அவர்கள்
//குழலி, அரசியலில் கைக்குலுக்கலும், கட்டியணைத்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதும், பின் பிரிந்துவிட்டு கன்னாபின்னாவென்று திட்டிக் கொள்வதும் , சமயம் வாய்த்தல் மீண்டும் இணைவதும், கேட்டாலும் அரசியலில் நிரந்தர நண்பர்களும்
இல்லை, எதிரிகளும் இல்லை என்று ராஜதந்திரமாய் பேசுவதும் காலக்காலமாய் நடப்பதுதானே? இன்று இதில் என்ன புதுமை
என்று நீங்கள் மெய்சிலிர்த்துப் போகிறீர்கள்?
//

என்று பின்னூட்டமிட்டிருந்தார், மேலும் இளவஞ்சி முகமூடியின் ஒரு பதிவில் சீட்டு பேரத்திற்கான கூட்டணி என்று குறிப்பிட்டிருந்தார், மருத்துவர் இராமதாசு மற்றும் திருமாவின் இணைப்பு இவர்களுக்கு (பின்னூட்டமிடாத இன்னும் பலருக்கும் கூட) சாதாரண ஒரு அரசியல் நிகழ்வு, ஓட்டுக்காக வைத்துக்கொண்ட கூட்டணி என்ற அளவிலேயே இது தோன்றியது, நான் (மற்றும் சிலர்) இந்த இருவரின் இணைப்பிற்கும் மகிழ்ந்த அளவு பிறர் மகிழவில்லை, அவர்களைப் பொறுத்தவரை ஒரு சாதாரண ஒரு அரசியல் நிகழ்வு அவ்வளவே.... ஏன் என்று யோசித்தேன்... இது வெறும் அரசியல் கூட்டணியையும் தாண்டி இந்த இணைப்பு காலம் காலமாக விரோதிகளாக அடித்துக்கொண்டிருந்த இரு சமூகங்களுக்கிடையேயான புரிதலுக்கான முயற்சி என்பது எனக்கும் மற்ற சிலருக்கும் புரிந்த அளவிற்கு பிறருக்கு புரியவில்லை, காரணம் அவர்களுக்கு அந்த சூழல், வடமாவட்டங்களில் குறிப்பாக வன்னிய தலித் மக்களின் சமுதாய,அரசியல் நிகழ்வுகள் பற்றிய சரியான புரிதல் இல்லாதது காரணமாக இருக்கலாம், இதற்கு நிச்சயம் அவர்கள் பொறுப்பாக மாட்டார்கள், ஊடகங்களும் சரியானபடி இதை எடுத்து சொல்லவில்லை என்பதையும் விட இரு சமூகங்களின் மீதும் தலைவர்களின் மீதும் வன்முறையை பிரயோகித்தது, பிரயோகித்துக்கொண்டிருக்கின்றது.

மேலும் மாயவரத்தான் என்னமோ இந்த தலைவர்கள் வந்த பிறகுதான் இரு சமூகங்களும் அடித்துக்கொண்டிருக்கின்றன என்று அர்த்தம் தொனிக்கும் பதிவொன்றை எழுதியுள்ளார், மருத்துவர் இராமதாசு பொது வாழ்வுக்கு வந்தது 1984, தொல்.திருமா அரசியலுக்கு வந்தது தொன்னூறுகளின் மத்தியில், ஆனால் இரு சமூகங்களுக்கிடையேயான புரிதல் இல்லா பகை நீண்ட கால வரலாறு கொண்டது, வெள்ளையர் காலத்திலும் அதற்கு முந்தைய அரசர்கள் காலத்திலும் கூட பகை இருந்து வந்தது, இத்தனை நீண்ட கால பகை வெறுமனே இந்த சமூக மக்களால் மட்டுமல்ல, வெளியிலிருந்து பலராலும் தூண்டிவிடப்பட்டு இந்த கனல் குறையாமல் பார்த்துக்கொண்டனர்.

இந்த இரு சமூகங்களும் இணைந்து பணியாற்றுவது நிச்சயம் சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகம் தூண்டிவிட்டுக்கொண்டிருப்பவர்களின் தலையில் விழுந்த அணுகுண்டு, இது வேண்டுமானால் பிற இடங்களில் இருப்பவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம், வடமாவட்டத்தை சேர்ந்த மாயவரத்தானுக்கு எப்படி தெரியவில்லை என்பது புரியவில்லை, ஒரு வேளை ரஜினி மாயை உண்மைகளை மறைத்து எழுத சொல்கிறதா அவருக்கு?

இதே பின்னூட்டங்களை இளவஞ்சி,உஷா அல்லாமல் எப்போதும் காழ்ப்புணர்ச்சியோடு அலைந்து கொண்டிருக்கும் குறிப்பிட்ட சிலர் எழுதியிருந்தால் புறந்தள்ளிவிட்டு சென்றிருப்பேன், ஆனால் இந்த இருவரின் முந்தைய பதிவுகள் பின்னூட்டங்களை வைத்து பார்க்கும் போது இவர்களுக்கு இராமதாசும், திருமாவும் என்ன செய்தாலும் அதை காழ்ப்புணர்ச்சியோடு அணுகவேண்டுமென்ற நிலைப்பாடு கொண்டவர்கள் அல்ல என்பதே இது தொடர்பாக சிந்திக்கத் தோன்றியது.

எனவே காழ்ப்புணர்ச்சியோடு எழுதும் ப்ராக்சிகளுக்கும், அனானிகளுக்கும், சில பதிவர்களுக்கும் அவர்களின் வறட்டு வாதத்திற்கும் பதிலளிக்கின்றேன் பேர்வழி யென சண்டை போட்டுக்கொண்டிருப்பதை விட வட மாவட்டத்தின், முக்கியமாக இந்த இரு சமூகங்களின் சமூக,வாழ்க்கை,அரசியல், வரலாற்று நிகழ்வுகள் பற்றி ஒரு எழுத்து பதியப்பட வேண்டுமென ஆசைப்படுகின்றேன், அது கடந்த 30 ஆண்டுகால வட மாவட்ட நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்தும், அதற்கு முந்தைய 30 ஆண்டுகளைப் பற்றிய நிகழ்வுகளை பதிந்தும் அதற்கும் முந்தைய காலகட்டதை லேசாக தொட்டும் இருக்கலாம், சரி தவறு என தீர்ப்பளிக்காமல் , வடுக்களை கீறாமல் தடவி கொடுத்தும், நேரடி அனுபவங்கள், பிறரின் அனுபவங்கள், சில வடமாவட்ட அரசியல் பிரமுகர்களின் பேட்டிகளையும் இணைக்கலாம், ஆனால் இது அத்தனையும் ஒரு தனிமனிதனால் செய்வது மிகக் கடினமான ஒன்று மேலும் தனி மனிதனால் செய்யப்படும் போது நிச்சயம் முழுமை பெறாது மேலும் தனி மனிதன் பார்வையிலேயே இருக்கும், இது நிறைய உழைப்பை சாப்பிடும் வேலை, மேலும் தனி மனிதனால் இத்தனையும் சிறப்பாக செய்ய முடியாது, எனவே இதற்கு நண்பர்களின் கூட்டு முயற்சியையும் பங்களிப்பையும் வேண்டுகின்றேன், நிச்சயம் இது சில நாட்களிலோ சில மாதங்களிளோ முடிவுறுவதாக இருக்காது, சில வருடங்கள் கூட ஆகலாம் (நாமெல்லாம் முழு நேரமாக இதை செய்வதில்லை, ஓய்வு நேரங்களில் மட்டுமே செய்கின்றோம்) தகவல் திரட்டுவது இதில் மிகப்பெரிய வேலையாக அமையும், உங்களுடைய ஆலோசனைகள், கருத்துகள்,அறிவுரைகள், விமர்சனங்கள், கேள்விகள் முக்கியமாக வடமாவட்ட சூழலை அதிகம் அறியாதவர்கள் கேட்கும் கேள்விகள் இந்த பதிவுகள் எதை நோக்கி செல்ல வேண்டும் என்பதற்கு உதவியாக இருக்கும் இதற்காக தனியாக வலைப்பதிவு கூட தொடங்கலாம், இவை அனைத்தும் இன்னமும் எண்ண வடிவிலேயே இருக்கின்றது, பங்களிப்பு செய்ய விரும்பும் உள்ளங்களுடன் ஆலோசித்து பின் எப்படி செல்ல வேண்டும் எப்படி செய்ய வேண்டுமென முடிவெடுக்கலாம்.

ஊடகங்களின் தொடர் வன்முறையினால் மருத்துவர் இராமதாசு மீது காட்டப்பட்டிருந்த கோணத்தை எனது இந்த பதிவுமருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் வேறொரு கோணத்தை காண்பித்ததாக பின்னூட்டத்திலும், தனி மடலிலும் நேரிலும் சிலர் தெரிவித்தனர், இவர்கள் கொடுத்த ஊக்கமும், வீரவன்னியனின் சில பதிவுகள் மக்களின் வாழ்க்கையை பற்றி பேசியதும் இது மாதிரி ஒரு முயற்சியை சிந்திக்க தூண்டியது.

இது தொடர்பான உங்கள் ஆலோசனைகள், கருத்துகளை பின்னூட்டங்களாகவும், kuzhali140277(at)yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மடலாகவும் அனுப்பலாம், தற்போது வீட்டில் இணையத்தொடர்பு இல்லாததால் உடனடியாக பதில்கள் அளிப்பதில் கால தாமதம் ஏற்படும், அதற்கு மன்னிக்கவும்.

33 பின்னூட்டங்கள்:

said...

குழலி எந்தப் பிரச்சனையையும் தீர்ப்பதற்கு வன்முறை இல்லாத வழி உண்டு. போர்க்களத்தில் மட்டுமே வன்முறை செல்லும். மற்றபடி நாகரீகமாக நியாயமாக விஷயங்களை மற்றவருக்கு எடுத்துச் சொல்வதே சாலச் சிறந்தது. நீங்களும் இந்த வழிக்கு வந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

பொதுவாக் எந்தக் குறிப்பிட்ட அரசியல்வாதியின் மீதும் தேவையில்லாமல் காழ்ப்புணர்ச்சி இருப்பதில்லை. (சாதீய மத அடையாளங்களை வைத்துக் காழ்ப்புணர்ச்சி செய்கின்றவர்களைச் சொல்லவில்லை). அவரவர்களுக்குத் தெரிந்த அளவு செய்திகளை வைத்துத்தான் யாரும் எந்த முடிவிற்கும் வரமுடியும்.

உங்களுக்கு இன்று வந்திருக்கும் இந்தப் பக்குவம் எல்லா அரசியல்வாதிகளுக்கும் வரவேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன். என்றைக்குமே நேர்மையான முயற்சிகள் நல்ல பலனையே தரும்.

said...

//வட மாவட்டத்தின், முக்கியமாக இந்த இரு சமூகங்களின் சமூக,வாழ்க்கை,அரசியல், வரலாற்று நிகழ்வுகள் பற்றி ஒரு எழுத்து பதியப்பட வேண்டுமென ஆசைப்படுகின்றேன், அது கடந்த 30 ஆண்டுகால வட மாவட்ட நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்தும், அதற்கு முந்தைய 30 ஆண்டுகளைப் பற்றிய நிகழ்வுகளை பதிந்தும் அதற்கும் முந்தைய காலகட்டதை லேசாக தொட்டும் இருக்கலாம், சரி தவறு என தீர்ப்பளிக்காமல் , வடுக்களை கீறாமல் தடவி கொடுத்தும், நேரடி அனுபவங்கள், பிறரின் அனுபவங்கள், சில வடமாவட்ட அரசியல் பிரமுகர்களின் பேட்டிகளையும் இணைக்கலாம், ஆனால் இது அத்தனையும் ஒரு தனிமனிதனால் செய்வது மிகக் கடினமான ஒன்று மேலும் தனி மனிதனால் செய்யப்படும் போது நிச்சயம் முழுமை பெறாது மேலும் தனி மனிதன் பார்வையிலேயே இருக்கும், இது நிறைய உழைப்பை சாப்பிடும் வேலை, மேலும் தனி மனிதனால் இத்தனையும் சிறப்பாக செய்ய முடியாது, எனவே இதற்கு நண்பர்களின் கூட்டு முயற்சியையும் பங்களிப்பையும் வேண்டுகின்றேன்//

மிக மிக நல்ல விதயம் குழலி!

தனியாக ஒரு பதிவில் எழுதத் தொடங்குங்கள். எவ்வளவு நாட்கள் எடுத்தாலும் பரவாயில்லை. ஆராய்ந்தறிந்து விதய ரீதியாக ஏதும் பிழைகள் இல்லாமல் எழுதுங்கள்.

படிக்க ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்.

நல்லதொரு முயற்சிக்கு வித்திட்டிருக்கிறீர்கள்.

-மதி

said...

திரு.குழலி

மருத்துவர் ராமதாஸின் அரசியல்கொள்கைகளில் எனக்கு ஒப்புதல் இல்லை.
என்றாலும் நீங்கள் சொன்ன மாதிரி அடித்துக்கொண்டிருந்த இரு சமுதாயங்கள் ஒன்று சேர்ந்தது உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

நாளை அவர்கள் அரசியல்ரீதயாக பிரியலாம். ஆனால் முன்பு நடந்ததுபோல வன்முறை நடக்காது என்றே நம்புகிறேன். இதை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்துக்கொள்ளாதது போல் நடிக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும்.

இரண்டு திராவிட கட்சிகளும் திசைமாறி விட்டன. விமர்சனத்திற்கு நேர்மையான பதில் கூறும் தகுதியை இழந்துவிட்டன். இதுதான் சாக்கு என்று சிலர் நிலைமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள் என்பதே உண்மை.

said...

குழலி, முதலில் உங்கள் நம்பிக்கை நனவாகட்டும். அது நிறைவேறினால் என்னைவிட சந்தோஷப்படுவர்கள் வேறு யாரும் இருக்க
முடியாது. சாதி, மதம் என்று காலக்காலமாய் அடித்துக் கொண்டு, அதிலும் பாதிக்கப்படுவர்களில் பெரும்பாலும் ஏழை எளிய மக்களைப் பார்க்கும்பொழுது, இன்னும் எவ்வளவு நாட்கள் என்று வேதனையாய் இருக்கிறது.

மார்கோ போலோவின் பயண குறிப்பு புத்தகம் படித்தேன். பன்னிரண்டாவது நூற்றாண்டு என்று நினைக்கிறேன். அதில் இந்தியாவில் மனிதர்களை சாதிவாரியாய் பிரித்ததை அவர் குறிப்பிட்டுள்ளார். உலகில் எங்கும் காணாத அதிசயம் என்று! இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலும் தனி டம்ளர், சாதி குறித்த பெருமை என்று தொடர்ந்துக் கொண்டுதானே இருக்கிறது?

நாங்கள் இருப்பது சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி. இங்கு வீட்டு வேலை செய்யும் பெண்கள் பெரும்பாலும் வன்னியர்கள். அவர்களிடம் பேசும் பொழுது சினிமா மோகம், கழக அரசியல், சேட்டிடம் வட்டிக்கு கடன், கல்வி அறிவு இல்லாமை என்று முன்னேறாமல் இருக்கிறார்கள். என்னால் முடிந்தது பிளஸ் டூ படிக்கும் ஒரு பெண்ணுக்கு உதவிக் கொண்டு இருக்கிறேன்.அந்த பெண் மிக நன்றாய் படிக்கிறாள். கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும் என்பது என் விருப்பம். பார்க்கலாம்!

உணர்ச்சி வசப்படாமல், காழ்ப்புணர்ச்சி காட்டாமல் நடுநிலைமையுடன் செயல் படுங்கள். என்னால் முடிந்த உதவி செய்ய தயாராய் இருக்கிறேன். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

said...

குழலி, உங்கள் கருத்துக்கள் பலவற்றோடு எனக்கு எதிர்மறையான கருத்துக்கள் உண்டெனினும், நீங்கள் குறிப்பிட்ட மாதிரி திருமாவளவன் - இராமதாசு இணைப்பு என்னைப்பொறுத்தவரை மகிழ்ச்சியான விடயமே. பெரியாருக்கு எதிராக (ஜெயமோகன் போன்றவர்கள்) நிலைநிறுத்திய நாராயணகுரு போன்றவர்கள்கூட ஒரு குறிப்பிட்ட சாதியினரின் மறுமலர்ச்சிக்காய மட்டுமே பாடுபட்டிருக்கின்றார்கள் என்றறிந்தபோது சற்று வியப்பாய்த்தானிருந்தது. மேலும், நீங்கள் தலித்-வன்னிய பிரச்சினைகளும் இணைவும் குறித்து விபரமாக எழுதபோவது என்பது வரவேற்கத்தக்க விடயமே. அதை வாசித்து கேள்விகள் கேட்க திறந்த வெளியை நீங்கள் வாசிப்பவருக்கு உருவாக்கித் தருவீர்கள் என்று நம்புகின்றேன்.

said...

பா.ம.க.துவங்கப்பட்டபோதே இரு சமூகங்களையும் இணைத்து எடுத்துச் செல்கிற நோக்கம் இருந்தது. அந்தக் கட்சிக் கொடியில் காணப்படும் நீல நிறம் அதைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டதுதான். தலித் எழில்மலை, பொன்னுசாமி ஆகியோருக்கும் தலைவர் பொதுச்செயலாளர் பொறுப்புக்கள் கொடுக்கப்பட்டன. எங்கே, ஏன் பிரிவு நேர்ந்தது என்பதையும் பதிவு செய்யுங்கள்.
எட்கர் தர்ஸ்டன் என்பவர் தென்னிந்தியாவில் உள்ள ஜாதிகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார் (Ethnographic Notes in Southern India. Edgar Thurston)இந்த நூல் தஞ்சைத் தமிழ்ப்பல்கலை. பதிப்பாகவும் தமிழில் கிடைக்கும். அதில் பல தகவல்கள் கிடைக்கும்.

முயற்சியைத் துவங்குங்கள். என்னால் இயன்றதைப் பகிர்ந்து கொள்கிறேன்.

said...

//மேலும் மாயவரத்தான் என்னமோ இந்த தலைவர்கள் வந்த பிறகுதான் இரு சமூகங்களும் அடித்துக்கொண்டிருக்கின்றன என்று அர்த்தம் தொனிக்கும் பதிவொன்றை எழுதியுள்ளார்,//

மன்னிக்கவும் குழலி. நான் என்னுடைய பதிவில் எந்த ஒரு இடத்திலும் இப்படி ஒரு கருத்தை தெரிவித்ததாக தெரியவில்லை. நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்களா அல்லது நான் அப்படி பொருள் படும்படி எழுதிவிட்டேனா தெரியவில்லை. ரஜினி மாயை கண்ணை மறைக்கிறது என்பதெல்லாம் நீங்கள் அடுத்தவர் மீது சொல்லும் காழ்ப்புணர்ச்சி உங்களிடம் இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இரு தரப்பினருக்கும் உள்ள பிரச்னைகள் நான் சிறு வயது முதல் நேரடியாக பார்த்து அறிந்த ஒன்று. பிரபல பத்திரிகையில் பணி புரிந்த போது (ஒன்றிணைந்த) தஞ்சை மாவட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் நடந்த மோதலை ரிப்போர்ட் செய்த அனுபவமும் உண்டு. பா.ம.க. உட்கட்சி தகராறுகளையும் எழுதிய அனுபவமும் உண்டு.

நான் எனது பதிவில் கேட்டதெல்லாம் ஒரே கேள்வி தான்... இவ்வளவு ஆண்டு காலம் இருந்த பிரச்னை, இரு தலைவர்களும் பொது வாழ்வில் நுழைந்த போதே, "நாங்கள் சமாதானத்தை உருவாக்க விரும்புகிறோம்" என்ற கோட்பாடுடன் வந்து செய்திருந்தால் கேள்வியே எழாது. இவ்வளவு காலம் இல்லாமல் இப்போது திடீரென ஒற்றுமை உருவாகியிருப்பது போல இருப்பது, விடுதலை சிறுத்தைகளின் எழுச்சியின் காரணமாக தான் என்பது என்னுடைய கருத்து. ஒரு வேளை விடுதலை சிறுத்தைகள் என்ற அமைப்பே தோன்றாமல் போயிருந்தால், அடுத்த தரப்பினருக்கு இப்படி ஒற்றுமை எண்ணம் உருவாகியிருக்குமா என்பது சந்தேகமே. அதை தான் எனது பதிவில் கோடிட்டு காட்டியிருந்தேன்.

பிரச்னையின் வேர் வரை சென்று பதிய முன் வந்திருப்பது பாராட்டுகள். என் பக்கமிருந்து கிடைக்கும் விபரங்களை தர தயாராக இருக்கிறேன்.

ஆனால், வழக்கமான குழலி பார்வையில் அந்த பதிவை எழுதாதீர்கள் - வன்னியர் & ராமதாஸ் மாயையில் பல விபரங்கள் வெளிவராமல் போய் விடும்.

said...

//பா.ம.க.துவங்கப்பட்டபோதே இரு சமூகங்களையும் இணைத்து எடுத்துச் செல்கிற நோக்கம் இருந்தது//

மாலன் சார், தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இந்த எண்ணம் பா.ம.க. என்ற அரசியல் கட்சி ஆரம்பனவுடன் தோன்றியதா, அல்லது வன்னியர் சங்கம் என்று இருந்த போதே அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டனவா என்பதை கொஞ்சம் விளக்குங்களேன். பா.ம.க.வில் பொன்னுசாமி, தலில் எழில்மலை போன்றோர் இடம் பெற்றதெல்லாம், பா.ஜ.க.வில் நக்வி போன்றோர் இடம் பெற்றதை போல 'நாம் கே வாஸ்தே' தான் என்பது என்னுடைய கருத்து.

said...

குழலி! நாங்கள் ஏன் அப்படி நினைக்கிறோம் என்று பக்கம்பக்கமாய் எழுத ஆசையாகத்தான் இருக்கிறது! ஆனால் நல்லதொரு முயற்சிக்கான ஆரம்பப்புள்ளியில் அதே விவாதங்கள் வேண்டாமே! கண்டிப்பாக இன்னொருநாள் பேசுவோம்...

உங்களது நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்! நடுநிலையான பதிவுகளோடு அவ்வப்போது எழும் கேள்விகளுக்கு திறந்த மனதுடனான விளக்கங்களையும் எதிர்பார்க்கிறோம்! அரசியல்பதிவுகளாக இல்லாமல் ஒரு சிறந்த வரலாற்றுப்பதிவாக அவைகள் அமையவேண்டுமென்பதும் எங்களது அவா!

எடுத்துச்சொல்லுங்கள்! காதுகொடுத்துக்கேட்டு பலவிடயங்களை அறிந்துகொள்ள ஆவலாயிருக்கிறோம்!

said...
This comment has been removed by a blog administrator.
said...

குழலி,

இது ஒரு நல்ல முயற்சி

நான் நெய்வேலியைச் சேர்ந்தவன் என்ற முறையில் நெய்வேலியைச் சுற்றி உள்ள கிராமங்களின் நிலையை ஓரளவிற்கு அறிந்தவன். உங்களின் முயற்சிக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்ய முடியும்.

ராமதாசின் கொள்கைகளை 90% நான் எதிர்ப்பவன். எஞ்சியுள்ள 10% ராமதாஸ் மற்றும் பாமக அதனை நம்பி இருக்கும் மக்களுக்கு செய்த சில நன்மைகளை நேரடியாக கண்டு இருக்கிறேன்

குறிப்பாக நெய்வேலியில் NLC நிர்வாகத்திடம் தங்கள் நிலங்களை இழந்த மக்களுக்காக பாமக நடத்திய போராட்டங்கள். NLC நிர்வாகம் 1950ல் உருவாக்கப்பட்டது. 1980களின் பிற்பகுதி வரை நிலம் கொடுத்த பலருக்கு உரிய நஷ்ட ஈடோ, NLC நிர்வாகத்தில் வேலையோ வழங்கப்படவில்லை

பாமக அதற்காக நடத்திய பலப் போராட்டங்கள் (வழக்கமான பாமக போராட்டம் தான்:-)) காரணமாக நிலம் இழந்தவர்களுக்கு NLC யில் வேலை வழங்கப்பட்டது.

இதனால் பலக் குடும்பங்களின் பொருளாதார நிலை உயர்ந்ததும் உண்மை.

said...

குழலி., நம்மிருவர் இடையே பல விதயங்களில் ஒத்த கருத்து இருந்திருக்கிறது. ஆனால் நீங்கள் போட்ட 'இணைந்த கைகள்' பதிவு மட்டும். சன் டி.வி பிரச்சாரம் போல் இருந்தது. வருத்ததுடனே இதைப் பதிகின்றேன். நடந்த கலவரங்கள் பா.மா.க மற்றும் தலித் அல்லாத வெளியில் இருப்பவர்கள் என்கிறீர்கள். 100% இந்த இரு கட்சிகளும் தூண்டுதல் பேரினாலேயே அடித்துக் கொண்டார்கள் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இராமதாஸ் தற்போது செய்து வரும் பல விதயங்களுக்கு நான் ஆதரவே தெரிவித்து வருகின்றேன். ஆனால் அவரை ஒரு தியாகி போல் சித்தரிப்பதை ஏற்க முடியவில்லை. (எனக்கும் வன்னிய நண்பர்கள் ஏராளமான பேர் உண்டு). தமிழ்நாடு முழுவதும் தலித் மக்களுக்குப் பிரச்சனைகள் உள்ளது. வட மாநிலங்களில் தற்போது அது முடிவுக்கு வந்திருப்பதைப் போன்ற தோற்றம் தருகிறது. ஆனால் தென் மாவட்டங்களிலோ திருமாவளவனே ஒளிந்து, மறைந்து வேலை செய்யும் அளவுக்கு எரிந்து கொண்டிருக்கின்றது. தலித்களுக்கென ஒரு வார்டு கூட ஒதுக்க முடியாத நிலை. திருமாவளவனை வைத்து 'காய்' அடிக்கப் பார்க்காதீர்கள். வடமாநிலங்களில் நடக்கும் கலவரங்களை தக்க முறையில் ஊடகங்கள் பதிவிடவில்லை என்கிறீர்கள். தமிழ்நாடு முழுவதும் தலித்துகளுக்கு இழைக்கப்படும் அத்தனை அநீதிகளும் 'கள' ஆய்வு செய்து., கட்டுரை எழுதுவதுடன் முடிந்து விடுகிறது. மற்றபடி முடிந்த விதயங்களை கீரி ஆயாமல் நடுநிலைமையோடு பதிவிடுங்கள் என நானும் கேட்டுக் கொள்கிறேன்.

said...

பின்னூட்டமிட்ட ஊக்கமளித்த அனைவருக்கும் எனது நன்றி, எட்கர் தர்ஸ்டன் நூல் பற்றிய விபரமளித்த மாலனுக்கு நன்றி, நிறைய விடயங்கள் பேசலாம், ஒரு சிலவன மட்டும் இப்போது சொல்ல ஆசைப்படுகின்றேன்.

1.இளவஞ்சி கூறியது மாதிரி கடந்த கால தேர்தல் வரலாறும் கூட்டணியும் பக்கம் பக்கமாக எழுதத் தோணலாம், ஆனால் இது பாமக திமுகவுடனோ,அதிமுகவுடனோ கூட்டணி வைத்தது போல ஒரு சாதாரண அரசியல் நிகழ்வு அல்ல இந்த இணைப்பு, இரு சமூகங்களில் புரிதலுக்கான முயற்சி.

2.திமுக கூட்டணியில் பாமக வோடு விசி களுக்கும் இடம் இல்லையென்றால் பாமகவும் திருமாவும் அதிமுக கூட்டணிக்கு செல்வதை அப்பட்டமாக வரவேற்கின்றேன், நமக்குனு நாலு எம்எல்ஏ இருந்தா இப்படியெல்லாம் நடக்குமா என்று 1987ல் கேட்ட புலம்பல்களும் ஆதங்கமும் இப்போதும் என் காதில் ஒலிக்கின்றது, தற்போது 20க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதால் தமிழகத்தையும் தாண்டி ஈழத்தமிழர்களுக்காக கருப்பு சட்டையணிந்து சட்டமன்றத்திலே குரல் கொடுக்க முடிந்தது.

2.இங்கு பதிய ஆசைப்படுவது பாமக, விசிகளின் கட்சி வரலாறை அல்ல பாமகவுக்கு 16 ஆண்டு காலமும் விசி களுக்கு 10 ஆண்டுகாலமுமான வரலாறு மட்டுமே, அதையும் தாண்டி இரு சமூகங்களின் வாழ்க்கை,அரசியல் நிகழ்வுகள் இந்த இரு சமூகங்களும் சமூகத்தின் உள்ளிருந்தும் வெளியிருந்தும் எப்படி சுரண்டப்பட்டார்கள் எப்படி உள்ளேயும் வெளியேயும் எக்ஸ்ப்ளாயிட் செய்யப்பட்டார்கள் என்பதை தருவதுதான் முக்கிய நோக்கம் ஆனால் பாமக விசி களை பற்றி பேசாமல் இது முழுமையடையாது, இந்த இரு கட்சிகளை பற்றிய எழுத்துகள் குறைந்த அளவிலேயே இருக்கும்.

3.தவறு யார் செய்தாலும் தவறுதான் அதை வன்னியர் செய்தாலும்(இப்படி வன்னியர் செய்தாலும் என்று எழுதுவதற்கே அசிங்கமாக உள்ளது, ஆனால் வன்னியர் செய்தாலும் என்று எழுதுவதற்கு காரணம் சில பின்னூட்டங்கள் காரணம் என்பது படிப்பவர்களுக்கு புரியும்)

4.சாதிப்பெருமை பேசுபவர்களையும் (பேச என்ன எழவு இருக்கு அதில்)அய்யோ இப்படி இருக்கிறார்களே என்று ஆதங்கப்பட்டு பேசு பவர்களையும் ஒரே கண்ணோட்டத்தில் ஒரே தட்டில் நிறுத்துவது எந்த விதத்தில் நியாயம் என புரியவில்லை, சாதிப்பற்றியே பேசக்கூடாது அது கேவலம் என நினைக்கும் சமத்துவபுர ஜென்டில் மேன்களுக்கு(நன்றி தங்கமணி) சீட்டு கட்டு ஆட்டத்தில் முதல் பல சுற்றுகள் ஜெயித்து பணத்தை அள்ளிவிட்டு எதிராளி கை ஓங்கும் போது சீட்டாடுவது தவறு அது சூதாட்டம் என்று கூறிவிட்டு எழுந்து ஓடுவதற்கு இணையானது என்பது புரியவில்லையா?

5.இது அப்படிபோடுவிற்கு, திருமாவும் இராமதாசும் மட்டுமே தலைவர்கள் இவர்களை தவிர வேறு யாருமே தலைவர்கள் இல்லை என்று கூறினால் அது என்னை நானே ஏமாற்றிக்கொள்வதற்கு சமம், மேலும் தலித் வன்னிய மோதல்களுக்கு வெறுமனே வெளியில் இருந்து மட்டும் தூண்டுதல்கள் அல்ல , உள்ளுக்குள்ளேயும் தூண்டி குளிர் காய்ந்தவர்கள் உண்டு, அவர்களுக்கும் இப்போதைய இந்த இணைப்பு கசப்பாகத்தான் இருக்கின்றது, மிக முக்கியமாக அவர்கள் தான் தற்போது இன்னமும் அடிமட்டத்தில் முழுபுரிதல் வராததற்கு காரணம்.

6.இவர்கள் மேல்மட்டத்தில் இணைந்ததாலேயே இரு சமூகமும் கூடி குலாவுகின்றர் என கூற முடியாது, ஆனாலும் இது ஒரு மாற்றத்தை உருவாக்கியுள்ளது, முழு மாற்றம் ஏற்பட இன்னும் காலம் பிடிக்கும், அதற்குள் யாரேனும் தூண்டி இந்த புரிதல் குலைந்துவிடுமோ என்ற பயம்

7.ஏற்கனவே ஒரு முறை தலித் வன்னியர்கள் இணைந்து பணியாற்றியுள்ளனர், அவர்கள் தமிழ்,தமிழர்,தனி தமிழ்நாடு என்ற தளத்தில் இணைந்தனர், ஆனால் அவர்கள் ஆயுத போராட்ட குழு என்பதாலும் அவர்கள் வலுவிழந்ததாலும் அது பெரும் சமூக புரிதலை உருவாக்கவில்லை, ஆனால் திருமாவும் இராமதாசுவின் இணைப்பு தற்போது மீண்டும் தமிழ் தளத்தில் ஆனால் அதன் தாக்கம் அடிமட்டம் வரை உள்ளது.

மற்றபடி இன்னும் பல விடயங்களை பேசலாம், இந்த முறை வறட்டு வாதங்களுக்கும் வெற்று வார்த்தை ஜாலங்களுக்கும் வேறு வேறு விடயங்களுக்கு தாவி தாவி போக்கை மாற்றும் போக்கிற்கும் நிச்சயம் பதிலளிப்பதாக இல்லை, மற்றபடி திறந்த மனதுடனே உள்ளேன்.

மீண்டும் அனைவருக்கும் நன்றி

நன்றி

said...

//பாமகவுக்கு 16 ஆண்டு காலமும் விசி களுக்கு 10 ஆண்டுகாலமுமான வரலாறு மட்டுமே, அதையும் தாண்டி இரு சமூகங்களின் வாழ்க்கை,அரசியல் நிகழ்வுகள் இந்த இரு சமூகங்களும் சமூகத்தின் உள்ளிருந்தும் வெளியிருந்தும் எப்படி சுரண்டப்பட்டார்கள் எப்படி உள்ளேயும் வெளியேயும் எக்ஸ்ப்ளாயிட் செய்யப்பட்டார்கள் என்பதை தருவதுதான் முக்கிய நோக்கம் //

எழுதுங்கள். எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். இப்படிப் பட்ட முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

said...
This comment has been removed by a blog administrator.
said...
This comment has been removed by a blog administrator.
said...

குழலி, மிக நல்ல முடிவு. இப்போதுதான் நீங்கள் மிகவும் அபாயகரமான வேலையைச் செய்யப்போகிறீர்கள். எதையுமே நக்கல் அடிப்பதும், மலினப்படுத்துவதும் எளிது. ஒரு தாய் குழந்தை பெறுவதைக் கூட நக்கல் அடிக்கமுடியும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பயமிருக்கும், அடையமுடியாத உயரமிருக்கும், சொல்லமுடியாத வெறுப்பு இருக்கும் இதையெல்லாவற்றையும் தற்காலிகமாக தீர்த்துக்கொள்ள எளிய வழி எதையுமே நக்கல் அடிப்பதுதான். இதன் மூலம் உண்மையான, கவனிப்பைக்கோரும் விசயங்கள் அடியில் அமிழ்ந்துவிடுகின்றன. எதைப்பற்றியும் நக்கல் அடிப்பவன் அதைப்பற்றி அறிந்தவனாக தோற்றம் வேறு பெறுகிறான். அதனால அவ்விசயத்தில் மூழ்காமலேயே அதைக் கடந்துவிடுகிறான். இப்படி மேற்புரத்தில் நடக்கும் சலம்பல்களில், கூச்சல்களில் அடியில் உறங்கும் உண்மைகள், கேட்கப்படுவதற்காகக் காத்திருக்கும் கதைகள் புதைந்து காலபோக்கில் அழிந்தும் போகின்றன. இன்னும் சிலர் இப்படி யாரும் உண்மையான காரணங்களைக் கண்டுகொள்ளக்கூடாதென்பதற்காகவே விசயங்களை மலினப்படுத்தி, கூச்சலைலையும் நக்கலையும் ஆரவாராமாய் கடைபரப்பி கவனத்தை சிதறடிக்கவும் செய்யக்கூடும். நீங்கள் நல்லவேளையாக எதைச் செய்யவேண்டுமோ அதைச் செய்யமுடிவெடுத்திருக்கிறீர்கள். எதை செய்வது சமூக, அரசியல் தளங்களில் ஒரு பகுதிமக்களின் வாழ்க்கையை பதிவாக ஆக்குமோ, எது வெற்று ஆரவாரங்களை கடந்து உண்மையைப் பற்றி, மக்களைப் பற்றி கவலை கொண்டவர்களுக்கு பயன் தருமோ அதைச் செய்யவந்திருக்கிறீர்கள். இது நீங்கள் சொன்னது போன்று உண்மையில் மிக அதிகமான உழைப்பை வேண்டுவது. எனக்கு வடமாநில மக்களைப்பற்றிய நேரடியான அனுபவமில்லை. சில நண்பர்கள் இருக்கிறார்கள், அவர்களிடம் எதையும் கேட்டுச்சொல்லமுடியும். மற்றபடி அம்மக்கள் (இரண்டு சாதியினரும்) மிகவும் சுரண்டப்பட்டவர்கள் என்பதை நான் அந்தப்பகுதிகளுக்குச் சென்றபோதும், நண்பர்களோடு பழகியமுறையிலும் அறிவேன்.

நீங்கள் எழுதப்போவதில் அரசியல் கட்சிகளின் வரலாற்றை வேண்டுமானால் குறைவாக குறிப்பிடலாம். ஆனால் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அரசியல் எப்போதும் உண்டு. அதுவே சமூகத்தின் இயங்கு சக்தியாக இருக்கிறது, இருந்தது. அதைவிடுத்து வரலாற்றை எழுதுவது என்பது புராணக்கதையாகப் போய்விடும் அபாயத்தில் கொண்டுவிடும். இன்னொன்றையும் இங்கு சொல்லவிரும்புகிறேன். அதாவது அப்பகுதி மக்களின் நடைமுறைப்பழக்கவழக்கங்கள், சொல்லாடல்கள் இவற்றையும் சரியான வெளிஉச்சத்தில் கொண்டுவருவது அப்பகுதி மக்களைப் பற்றிய சரியன புரிதலை கொடுக்கும். காட்டாக வெளிப்படையாக அம்மக்களின் பேச்சுமொழி பொதுவாக மரியாதைக் குறைவானதாக ஒரு தோற்றம் தரும்; அப்படியே புரிந்துகொள்ளவும் படுகிறது. அதனாலேயே அப்பகுதி மக்களைப்பற்றி முரடர்கள் என்ற கருத்து எளிதில் ஏற்படும் வகையில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால் இது உண்மைக்கு மாறானது என்பது எனது அனுபவம். எனவே அவர்களது சமுகப் பழக்கவழக்கங்கள், மொழி இவைகுறித்த தேவையான அறிமுகமும் அவசியம் என நினைக்கிறேன்.

இன்னொன்றும் சொல்லவிரும்புகிறேன். மரங்களை வெட்டி நடந்த போராட்டத்தை பற்றியானது. இதைப்பற்றி ஒரு பொதுவாக ஒரு குற்ற உணர்வை ஊடகங்கள் வேண்டுமென்றே தோற்றுவித்திருக்கின்றன என்பது என் கருத்து. காலங்காலாமாக சாதியை வலியுறுத்தி, இன்றும் சாதி அடையாளங்களைப் பேணுவதை குற்றமாகக் கருதாத, பெண்களை இன்றும் அடிமைப்பொருளாக கருத உபதேசிப்பதைக் குற்றமாகக் கருதாத ஒரு சமூக அமைப்பு, சான்றோனாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் அமைப்பு மக்களின் போராட்டங்களைக் கொச்சைப்படுத்த, மலினப்படுத்த, அவமானப்படுத்த எப்போதும் தயங்குவதில்லை. அப்படியே மரங்களை வெட்டியதையும் ஒரு குற்றமாகக் கருதும் படி செய்கிறது. வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு வீடு வீடாகப் போய் தலைகளை வெட்டிய கட்சி தலைவெட்டிக் கட்சியாக அறியப்படுவதில்லை. டர்பன் அணிந்தவர்களை டெல்லி தெருக்களில் தேடித் தேடி வெட்டியும் கொளுத்தியும் கொன்ற கட்சியின் விசுவாசிகள் டர்பன் தலை வெட்டிய கட்சிக்காரர்களாய் அறியப்படுவதில்லை. ஆனால் தாங்களே வைத்து உருவாகிய மரங்களை, (ஒருவிதத்தில் அவைகள் அவர்களின் சொத்துக்களும் கூட, அதை இழப்பதால் வரும் பொருளாததார, சூழலிய பாதிப்புகளுக்கு முகம் கொடுப்பவர்களும் அவர்கள் தான்) தங்களுடைய மக்களை இழந்து நடத்திய போராட்டத்தின் போது வெட்டியதால் அந்தப்போராட்டமும், போராட்டமுறையும் கொச்சைப்படுத்தப்படுவது ஆச்சர்யத்தை வேண்டுமானால் ஏற்படுத்தலாமே ஒழிய நிச்சயம் அவமானத்தையல்ல. எனவே அப்படியான போராட்டங்களை பற்றி எழுதும் போது அஞ்சாமல், நேர்மையாக அணுகவும் கேட்டுக்கொள்கிறேன்.
என்னால் முடிந்ததைச் செய்ய எனக்கும் விருப்பம். உங்கள் பதிவு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

said...

இச்சமூகங்களுக்கிடையிலான மோதல் குறித்த செய்திகளைப் பத்திரிக்கைகள் அல்லாது மேலும் கொஞ்சம் தெரிந்து கொண்டது 'பறை' என்னும் குறும்படத்தின் மூலம். கடினமான முயற்சியாக இருந்தாலும் அவசியமானது தொடருங்கள், வாசிக்கிறோம். தனிப்பதிவாக இடலாமே!

said...

நல்லதொரு முயற்சிக்கு வித்திட்டிருக்கிறீர்கள்சாரா

said...

உங்களது முயற்சியேனும் பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தபட்ட சாதிகள் ஒன்றிணைவதை விரும்பாத சில உயர்(த்தப்பட்ட!) சாதியினரின் மனப்போக்கை மாற்றட்டும்!

முயற்சி வெல்ல வாழ்த்துக்கள்!!

said...

மிக நல்ல முயற்சி. இது சீராக நடை பெறுமானால் இணைய வரலாற்றில் ஒரு புதிய புரட்சிக்கு வித்திட்டவராவீர்கள்.

ராமதாசுக்கும் திருமாவளவனுக்கும் முன்பிருந்தே இருந்து வரும் வரலாற்று ரீதியான இனப்பகை தீர இவ்விரு (சாதி) கட்சிகளின் கூட்டமைப்பு பாடுபடுமேயானால் அது மிகச்சிறந்த முன்னுதாரணமாக அமையும். வெளியிலிருந்து பார்ப்பவர்கள் இதை சந்தேகப்பட ராமதாசின் அரசியல் நிலைத்தன்மை குறித்த வெளிப்பாடுகளே முக்கிய காரணம். அவர் தனது கொள்கை உறுதிப்பாட்டை இந்தப் பணியிலாவது தொடர்ந்தால் அது அவருக்கும் வரலாற்றில் மிகச்சிறந்த இடத்தைப் பெற்றுத்தரும்.

said...

பின்னூட்டமிட்டும் ஊக்கமும் அளித்த அனைவருக்கும் நன்றி, உதவி செய்ய முன்வந்த அனைவருக்கும் நன்றி.

வட்டாரமொழி வழக்கு பற்றி ஒரு குழப்பத்திலேயே இருந்தேன், அதை அப்படியே எழுதுவதா அல்லது எழுத்து மொழியில் எழுதுவதா என்று தங்கமணியின் பின்னூட்டம் அந்த சந்தேகத்தை போக்கியுள்ளது, தனி மடலில் தொடர்பு கொண்ட நண்பர்களுக்கும் நன்றி.

said...

அன்பு நண்பர் குழலிக்கு.,

இதை தனி மடலில் அனுப்பி இருக்கலாம். ஆனால் அதற்கு என் மனம் இடம் கொடுக்கவில்லை. திடீரென இணைந்த கைகள் பதிவை ஏன் எழுதியிருக்கிறீர்கள்?, உங்களுடைய அந்த முயற்சி ஏன்? என அப்போது தெளிவில்லாததால் அப்படி பின்னூட்டம் கொடுக்க நேரிட்டது. ஆனால் இன்றுதான் 17ந்தேதி வெளி வந்திருந்த முகமூடியின் பதிவைப் படித்தேன். உங்களை தவறாக புரிந்து கொண்டதற்கு மன்னிக்கவும்.

உங்களுடைய பதிவிலேயே நண்பர் செந்தில் //ஹீம்... முகமூடிக்கு சூடான பதில் பதிவா.. இல்லை.. இதுக்குத்தான் முகமூடியோடது சூடான பதிவா ?// என்று கேட்டிருக்கிறார். இதையும் இப்போதுதான் பார்த்தேன். பதிவைப் படித்துவிட்டு என் கருத்தை பதிந்துவிட்டு சென்றுவிட்டேன்., ஏன் இப்பதிவு என யோசிக்காமலேயே. எப்படியோ யாரோ எறியும் கல்லடிகள்.... மாங்கனிகள் கைகளில் விழவேதான் போல.... (வேறு எதையும் சொல்லவில்லை... அது ஆக்கப்பூர்வமான முயற்சிக்கு வித்திட்டிருப்பதைச் சொன்னேன்). தங்கமணி அவர்களின் பின்னூட்டத்தை படித்தும் எனக்கு புரியவில்லையே(அவர் இந்தப் பதிவிற்கு வந்த பின்னூட்டங்களை மனதில் கொண்டு எழுதியிருக்கிறார் என எண்ணி விட்டேன்). தவறுக்கு வருந்துகிறேன்.

said...

அன்பு குழலி
தங்களின் முயற்சி பாராட்டுக்குரியது. வாழ்த்துகள்.
என் பகுதி பற்றிய வரலாற்றை என் சகோதரன் எழுத வாசிப்பது மகிழ்வாக இருக்கும்.
என்னால் விரிவாக இணையத்தில் எழுத இயலாது. முடிந்தால் அவ்வப்போது எழுதுகிறேன்.

இம்முயற்சிக்கு
என் பேராசான் பழமலய் அவர்களின் 'சனங்களின் கதை'
'இவர்கள் வாழ்ந்தது' போன்ற கவிதை நூல்கள் துணை நிற்கலாம்.
அதை வாசித்திருந்தால் மீண்டும் வாசியுங்கள்

தங்கள் முயற்சி சிறக்கட்டும்

said...

எல்லோருமே ஒரு இணக்கமான சூழலில் பின்னூட்டம் எழுதுவது மகிழ்ச்சியாகத் தானிருக்கிறது.

பலப்பல வகையிலும் ராமதாஸ் மற்றும் திருமாவளவனைத் தரம் தாழ்ந்த வகையில் திட்டி எழுதிவிட்டு, இன்று பரிணாம வளர்ச்சிப் பெற்று, பல நண்பர்கள் திருந்தி இருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

வரலாறு எழுத முனைந்திருக்கிறீர்கள். கண்டிப்பாக ஆதார நூல்களைத் துணை கொண்டு எழுதுங்கள். நீங்கள் இதற்காக மிகவும் முனைந்து உழைக்க வேண்டும்.

வாழ்த்துகள்

உங்கள் முயற்ச்சி வெற்றி பெறட்டும்...

said...

இணையத்தில் இப்படித்தான் எழுத வேண்டும், இன்னாரைத்தான் ஆதரிக்க வேண்டும், இன்னாரைத்தான் எதிர்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வந்த ஆசாமிகள் ஏராளம். அவர்கள் குழுக்களாக இயங்குகிறார்கள். ஆனால் யார் ஆதரவும் இன்றி உங்கள் மனதில் பட்டவைகளைத் தைரியமாக தனியொரு ஆளாக நின்று எழுதி விளக்கமும் அளித்திருக்கிறீர்கள்.

வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்..

said...

நண்பர் 'குழலி' அவர்களுக்கு,
உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்!
உங்கள் ஆக்கமும், தாக்கமும் புரிகிறது.
இந்த இரு சமுதாயத்து மக்களும், ஏன்... எல்லா சமுதாய மக்களும் ஒருங்கிணைந்து வாழ்ந்தால், தமிழகம் எங்கோ சென்றுவிடும் என்பதில் ஐயமில்லை.
அவ்வாறு நடக்க இது ஒரு முன்னோடியாக இருந்தால் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
ஆனால், வரலாறும், கடந்த கால நிகழ்வுகளும் அவ்வாறு சொல்ல வில்லை என்பதினை வருத்தத்தோடு நினைவு கூர வேண்டிய நிலையில்தான் நாம் உள்ளோம் என்பதுதான் உண்மை.
இந்த இரு சமுதாயங்களின் உயர்வு, ஒரு உடனடி தேவை, தமிழகத்திற்கு என்பதில் எனக்கு கருத்து மாறுபாடு இல்லை.
ஆனால், வன்முறைக் கலாச்சாரத்திற்கு வித்திடாமல், அன்பு நெறி கொண்டு உயர்வரேல், அதுதான் வெல்லும் வழி, அல்லவேல், இதுவும் ஒரு ஏமாற்று வேலைதான் என்று சொல்ல விழையும்,
அன்புடன்,
எஸ்கே

said...

///இந்த இரு சமூகங்களின் சமூக,வாழ்க்கை,அரசியல், வரலாற்று நிகழ்வுகள் பற்றி ஒரு எழுத்து பதியப்பட வேண்டுமென ஆசைப்படுகின்றேன்///

குழலி இது அவசியமான தருணத்தில் தேவையான விஷயம் கூட.

தொடங்கிய பணி சிறந்து விளைவு தர மனமார்ந்த வாழ்த்துகள்.

பதிவென்ற வகையில் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை.
ஜனங்களின் வாழ்க்கை முறையில் மாற்றம் இருக்குமா?
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்

said...

திரு குழலி அவர்களே,

வணக்கம். தங்களது கமெண்டுகளை இங்கே படித்தேன். என்னுடைய முழு ஆதரவும் உஙளுக்குதான். ஒன்று கூரிக்கொள்ள ஆசைப்படுகிறேன். இன்று தமிழ் நாடே பிராமணர்கள் கையில் சிக்கிக்கொண்டுள்ளது. தாங்கள் மிகவும் பொறுமையாக பல கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிற்கள். எனினும் அங்கு இருப்பவர்களுக்கு ஏதேனும் ஏறியிருக்கும் என்று நினைகிறீர்களா? சுத்தமாக ஏறாது. அவர்கள் சொன்னதையே தான் சொல்வார்கள்.

னான் கோற வேண்டும் என்று எண்ணிய அனைத்தையும் தாங்கள் மிகவும் அருமையாக கூறியிருக்கிறீர்கள். தமிழ் நாட்டின் பரிதாபகரமான நிலமை என்னவென்றால் பிராமணர் அல்லாதவ்ர்கள் கூட பிராமணர்க்ளுக்கு ஜால்ரா தட்டுகிறார்கள். இது தான் உண்மை.

அங்கே ஒரு ரஜினி நண்பர் பெசினார் குஷ்புவுக்கு சார்பாக, அவருக்கு நான் கூறுவது ஒன்றே ஒன்றுதான். திருவாளர் ரஜினிகாந்த் அவர்கள் இங்கு தமிழ்னாட்டில் சம்பாதிக்கும் பண்த்தை கர்னாடகா வங்கி (பெங்களூர்) ல் பொடுகிறார். முடிந்தால் அதை தடுக்கமுடியுமா சொல்லுங்கள்.

மொதத்தில் குழலிக்கு என்னுடைய முழு ஆதரவு. ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் சார்பாக உங்கள் கருதுக்களுக்கு எந்து அதரவை தெரிவிது கொள்கிறேன்.

இதனை இங்கேயும், இங்கேயும் படிகலாம்.

said...

"இது வெறும் அரசியல் கூட்டணியையும் தாண்டி இந்த இணைப்பு காலம் காலமாக விரோதிகளாக அடித்துக்கொண்டிருந்த இரு சமூகங்களுக்கிடையேயான புரிதலுக்கான முயற்சி என்பது எனக்கும் மற்ற சிலருக்கும் புரிந்த அளவிற்கு பிறருக்கு புரியவில்லை, காரணம் அவர்களுக்கு அந்த சூழல், வடமாவட்டங்களில் குறிப்பாக வன்னிய தலித் மக்களின் சமுதாய,அரசியல் நிகழ்வுகள் பற்றிய சரியான புரிதல் இல்லாதது காரணமாக இருக்கலாம்"

மிக சரியாக சொன்னீர்கள் குழலி!

"வட மாவட்டத்தின், முக்கியமாக இந்த இரு சமூகங்களின் சமூக,வாழ்க்கை,அரசியல், வரலாற்று நிகழ்வுகள் பற்றி ஒரு எழுத்து பதியப்பட வேண்டுமென ஆசைப்படுகின்றேன்..."

உங்கள் முயற்சி பாராட்டதக்கது. சிறப்பாக எழத என் மனபூர்வமான வாழ்த்துகள். மதி சொன்னதை போல பொறுமையாக எழுதுங்கள்.

ஐய்யா இராமதாசு மற்றும் அண்ணன் தொல் திருமாவின் கூட்டணி, அல்லது நட்பு தொடர உங்கள் பலமான ஆதரவு என்னை
மிக்க மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. நிச்சயம் நல்ல தமிழ் ஆர்வம், உண்மையான பிற்படத்தபட்ட மற்றும் தாழ்த்தபட்ட மக்களின் மேம்பாட்டில் ஆர்வம் உள்ளர்வர்கள் உங்களை ஆதரிப்பார்கள்.

உங்கள் பல பதிவுகளை விருப்பி படித்து வருகிறேன். உங்களுடைய மிக தெளிவான பல பதிவுகளுக்கு என் நன்றிகள் பல.
மயிலாடுதுறை சிவா...

said...

Deepa madam, neengaluma. is not over to u

said...

நல்ல பதிவு குழலி ..

இப்படிக்கு
பெருமையுடன் ..
விசிலடிச்சான் குஞ்சு

said...

குழலி,
வடமாவட்டத்துக்காரனாகையால் இதைப் பற்றி பிறர் சொல்லித்தான் தெரியவேண்டுமென்ற அவசியம் எனக்கில்லை. ஆகவே இந்த பதிவு எழுதப்பட்டபோது மெனக்கெட்டு கருத்துசொல்லத் தோன்றவில்லை. ரோசாவசந்தின் பதிவைப் படித்த பிறகு உங்கள் முயற்சியை வரவேற்கவேண்டுமெனத் தோன்றியது (அது விசில் சத்தமாக ஒலித்தாலும்).