இணைந்த கைகள்
இந்த கைகள் இணையாதா
சிங்கமும் சிறுத்தையும் சேராதா
பாடுபடும் பாட்டாளிகள்
பாராளுதல் கூடாதா
காலம் காலமாய்
ஏய்க்கும் கூட்டம்
இந்த கைகள் இணைந்தால்
தம் கும்பி காயுமென
மூட்டிய கலவர தீயிலே
குடிசையும் குச்சியும்
எரிந்தபோதும்
அறிவு கெட்ட
சிங்கமும் சிறுத்தையும்
அடித்துக்கொண்டு
செத்தபோதும்
கண்கள் கலங்கி
கதறினேன்
இந்த கைகள் இணையாதா
உழைப்பாளிகள் உலகாள
கனவு இன்று நிசமாச்சி
இந்த கைகள் இணைந்தாச்சி
சிங்கமும் சிறுத்தையும் சேர்ந்தாச்சி
சிறு நரி கூட்டம் கலங்கிடுச்சி
பயந்து அலறிய
சிறு நரி இப்போ
ஊரெல்லாம் ஊளையிட்டது
கருத்து சுதந்திரம்
என்றே சொல்லி
சேறு எறிந்து
சிரிக்கின்றது.
சிறு நரிகளின்
சேட்டை தெரிந்ததால்
ஊளை சத்தம்
வீணாச்சி
ஊளை உளறல்
இப்போது அதன்
மரணஓலம் மட்டுமே
பின் குறிப்பு
விகடனில் இந்த படத்தை பார்த்து நேற்றே எழுதியது இப்போது பதிவில்
நன்றி
படங்கள் உதவி விகடன்.காம்
15 பின்னூட்டங்கள்:
ஹீம்... முகமூடிக்கு சூடான பதில் பதிவா.. இல்லை.. இதுக்குத்தான் முகமூடியோடது சூடான பதிவா ? :-)
அப்புறம் நாங்க கொஞ்ச நாளுக்கப்புறம் முகமூடியும், குழலியும் பத்தி இப்படி கவித கவித எழுத வேண்டி இருக்கும் :-)))
சரி குழலி, ஒரு சின்ன சந்தேகம், அவுங்க யாரையும் குறை சொல்றேனு படக்குனு நியாயப்படுத்த ஆரம்பிச்சுராதீங்க..
நிஜமாவே தெரிஞ்சுக்க ஆசப்படுறேன்..
மேல படத்துள இருக்குறவுங்க ரெண்டு பேரும், இப்போ தங்களை நம்பி உள்ள மக்களுக்கு என்ன Constructive-ஆன விஷயங்கள் பண்ணிகிட்டு இருக்காங்க ?
அட்லீஸ்ட் என் கோணத்தில், சமூக நிலையில் கீழே இருக்கும் மக்களுக்கு அடிப்படை கல்வியறிவை நல்லபடியா அளித்தாலே அவுங்க முன்னேற்றதுக்கு நல்ல முதல் முயற்சியா இருக்கும்ல ? இந்த வகைல இவுங்க எதாவது பண்ணிக்கிட்டு இருக்காங்களா ?
-
செந்தில்/Senthil
சூடான பஜ்ஜி....!
பஜ்ஜி
தேவையான பொருட்கள்:-
கடலைமாவு - 2 கப்
மிளகாய்தூள் - 1 மேஜைகரண்டி
சோடாஉப்பு - சிறிது
பெருங்காயத்தூள் - சிறிது
கலர்பொடி - சிறிது
உப்பு - தேவையான அளவு
கத்திரிக்காய் - 1
பெரிய வெங்காயம் -1
வாழைக்காய் - 1
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :-
1. கடலைமாவு, மிளகாய்தூள், சோடாஉப்பு, பெருங்காயத்தூள்,கலர்பொடி,உப்பு ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து தோசைமாவுக்கு கரைப்பது போல் கரைத்துக் கொள்ளவும்.
2. பிறகு உங்களுக்கு பிடித்தமான காய்கறிகளை மிகவும் மெலிதாக வெட்டி, பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்தவுடன் நறுக்கிய காயை மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும்.
3. பஜ்ஜி உப்பி வந்தவுடன் எடுத்து விருப்பமான சட்னியுடன் பரிமாற வேண்டியதுதான். கரகர மொறு மொறு பஜ்ஜி தயார்...!
//உழைப்பாளிகள் உலகாள
கனவு இன்று நிசமாச்சி//
உழைப்பாளர் சிலை பக்கத்தில நின்னு இணஞ்சதாலா?
//பாடுபடும் பாட்டாளிகள்
பாராளுதல் கூடாதா//
நிச்சயமாக!
ஆனால் பாசிஸ்டுகள் ஆளக்கூடாது.
யாரு ராசா அது ப்ராக்சி வைத்து ஓட்டு போடுவது போடுங்க போடுங்க.... நம்மிடம் மோப்ப நாய் இருந்தாலும் அதையெல்லாம் மோப்பம் பிடிக்க சொல்வதில்லை....
சிறுத்தை - ஒப்புக் கொள்ளலாம். ஆனால் அசிங்கத்தை சிங்கம் என்று சொல்வதை படித்த உடன் ஒரு முழு நீள காமெடி படம் பார்த்த உணர்வு.
குழலி, அரசியலில் கைக்குலுக்கலும், கட்டியணைத்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதும், பின் பிரிந்துவிட்டு கன்னாபின்னாவென்று திட்டிக் கொள்வதும் , சமயம் வாய்த்தல் மீண்டும் இணைவதும், கேட்டாலும் அரசியலில் நிரந்தர நண்பர்களும்
இல்லை, எதிரிகளும் இல்லை என்று ராஜதந்திரமாய் பேசுவதும் காலக்காலமாய் நடப்பதுதானே? இன்று இதில் என்ன புதுமை
என்று நீங்கள் மெய்சிலிர்த்துப் போகிறீர்கள்?
உஷா அவர்களுக்கு, முகமூடியின் பதிவில் நான் இட்ட பின்னூட்டம் இங்கே...
---------------------------
வாழ்க்கைமுறையில் பெரிய மாற்றமில்லாமல், எந்த வித விழிப்புணர்ச்சியும் இல்லாமல், எந்த வித முன்னேற்றமுமில்லாமல் இரண்டு சமூகங்களும் அடித்துக்கொண்டு செத்தபோதெல்லாம் இவர்கள் இணைய மாட்டார்களா என சிறுவயதிலிருந்தே ஆதங்கப்பட்டவன் நான், அந்த சூழலில் அந்த இடத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் இந்த இணைப்பு எத்தனை முக்கியமென...எத்தனை தேவையென
இளவஞ்சி அவர்கள் சீட்டுக்காகவோ, சுயநலத்திற்காகவோ அல்லது என்ன எழவுக்காக இணைந்தாலும் இந்த இணைப்பு இரு சமூக மக்களிடம் பெரும் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டுள்ளது என்பது உண்மை...
இது மற்றவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ எம் போன்றவர்களுக்கு புரியும்
---------------------
இவர்கள் இருவரும் நிரந்தரமாக இணைந்தே இருக்க வேண்டுமென்று விரும்புகின்றேன்....
சாதாரண சிறு வாய்பேச்சு சண்டை கூட பெரும் சாதிக்கலவரமாக மாறி வட மாவட்டங்களை கதி கலக்கிக்கொண்டிருந்த அந்த நேரத்தையும்(இது ஏதோ இராமதாசுவும் திருமாவும் வந்த பிறகு நடப்பது இல்லை காலம் காலமாக வெள்ளையர் ஆட்சிகாலத்திலும் அதற்கு முன் அரசர்கள் காலத்திலிருந்து நடந்து வந்தது) இன்றைய இணக்கமான சூழலும் பார்த்தால் இந்த இரு தலைவர்களின் கை கோர்ப்பு எத்தனை தூரம் இரு சமூகங்களுக்கிடையேயான் புரிந்துணர்வை மேம்படுத்தியுள்ளது என்பது கண்கூடு....
கடலூர் மாவட்டம் இரத்த பூமியாக கலவர பூமியாக இருந்த போதும் பல கிராமங்களில் குடிசைகள் எரிந்து கிடந்ததை பார்த்தபோதும் முக்கியமாக ஆலப்பாக்கம் கலவரத்தின் போது சேரிகளும் ஊர்களும் எரிக்கப்பட்டு அந்த மக்கள் கடலூர் சிதம்பரம் சாலையில் வழி நெடுக அமர்ந்திருந்ததை பார்த்த போது நான் பதின்ம வயதுக்காரன்... கண் கலங்கினேன்... அப்போது எனக்கு தெரியாது அது தலித் மக்களா வன்னிய மக்களா என்று இவனுக்கும் சோத்துக்கு வழியில்லை, அவனுக்கும் சோத்துக்கு வழியில்லை ஆனாலும் ஏன் இப்படி அடித்துக்கொள்கின்றார்கள் என எண்ணி வருந்தியதுண்டு.... அதற்கு முழு முதல் காரணம் அறியாமை, விழிப்புணர்வின்மை மற்றும் தூண்டுதல்கள்.... இன்றைய இத் தலைவர்களின் இணைப்பினால் நிலமை முழுதும் சீரடைந்துவிட்டது என்று சொல்லவில்லை ஆனாலும் மேல் மட்டத்தில் நடந்த இணைப்பு இன்று கீழ் மட்டத்தில் மாற்றங்களை உருவாக்கிக்கொண்டுள்ளது.... மிதி வண்டி மோதிக்கொண்டால் கூட கலவரம் வெடித்த நிலை மாறி இன்று ஒரே வாகனத்தில் ஒரு புறம் பாமக கொடியும் ஒரு பக்கம் விடுதலை சிறுத்தை கொடியையும் கட்டிக்கொண்டு ஒன்றாக கூட்டங்களுக்கு செல்வதையும் ஒன்றாக பணியாற்றுவதும் வார்த்தைகளால் சொன்னால் அந்த சூழலை பார்க்காதவர்களுக்கு சத்தியமாக இந்த இணைப்பின் மாற்றம் புரியாது....
//அப்புறம் நாங்க கொஞ்ச நாளுக்கப்புறம் முகமூடியும், குழலியும் பத்தி இப்படி கவித கவித எழுத வேண்டி இருக்கும் :-)))//
அத்து!!!
//கடலூர் மாவட்டம் இரத்த பூமியாக கலவர பூமியாக இருந்த போதும் பல கிராமங்களில் குடிசைகள் எரிந்து கிடந்ததை //
இங்கு கலவரத்தில் பாதிக்கப் பட்டவர்களை., தாண்டிச் செல்வதற்காய் சொல்லவில்லை... தெக்க வந்து பாருங்கய்யா....!., வடக்காயவது சொன்ன கொஞ்சம் புரிஞ்சுக்கிற கூட்டம். இங்க சும்மா பார்த்தாலே., என்னா தைரியமிருந்தாடா பாப்பன்னு வெட்டுதான். கலவரம் என்ற பெயரில் அல்ல... தினம் தினம் செத்து பிழைக்கும் பிழைப்பு. திருமா வளவனுக்கு தமிழ்நாடு முழுவதும் வேலையிருக்கிறது. ம்... இந்த இணைந்த கைகள் ஒன்றும் செய்யாமல் சும்மா இணைந்திருந்தாலே வட மாநிலத்தில் உள்ள பெரும்பான்மையோருக்கு நல்லது என்பதை மறுப்பதற்கில்லை.
//பாடுபடும் பாட்டாளிகள்
பாராளுதல் கூடாதா//
பாடுபடும் பாட்டாளிகள் பாட்டன்., உழைத்துக் காய்த்து., உழைக்கும் வர்க்கத்தின் உண்மைப் பிரதிநிதியாய்... தமிழ்நாட்டில் வேறு சிலரும் இருக்கிறார்கள்.
உங்கள் உணர்வுகள் புரிகின்றன; ஆனால், நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைகள் ...இந்த
அரசியல்வாதிகளும், அவர்களின் கொள்கையற்ற நிலைப்பாடுகளும்...இதனாலேயே இப்படி (கடைசி பாய்ண்ட்) எழுதினேன்.
ராமதாசும் திருமாவளவனும் இணைந்திருப்பது உண்மையிலே வட மாவட்டங்களில் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்து இருக்கிறது. பழைய நிகழ்வுகளை கிளறி காயப்பட்டுக் கொள்வதைவிட நிகழ்கால சூழல்களை அமைதியானதாக ஆக்கிக்கொள்வதில் உள்ள எதார்த்தத்தை இருவரும் புரிந்து கொண்டார்கள்....
ஆனால் களத்தில் இறங்காமல் சாதிச் சண்டைகளுக்கு நெய்யூற்றிய கோமகன்களுக்குத்தான் இப்போது வயித்தெரிச்சல்... எதிரிகள் பிரிந்திருத்தலே தங்களுக்கு பலம் என்று நினைக்கிற கூட்டத்தினால் என்னாளும் இதை ஜீரணிக்க முடியாது. மறுபடியும் மறுபடியும் பழைய புண்களை கீறி அதனால் வலி ஏற்படுத்த துடிக்கும் சாடிஸ்டுகள் முயற்சிகள் இனி வெற்றி பெறப்போவதில்லை.....
போராளிகள் அநாமதேயங்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க தேவையில்லை. அது கால விரயமே
குழலி, உங்கள் நம்பிக்கையும், எண்ணமும் ஈடேர மனமார விரும்புகிறேன். ஆனால் நம் அரசியல்வாதிகளின் "எண்ணங்களில்" என் நம்பிக்கை அதிகம் :-(
Post a Comment