இயற்கை இனிமையானது
சிங்கப்பூர் புலாவுபினில் நண்பனால் எடுக்கப்பட்ட படம்.
இயற்கை இனிமையானது
உன்னைப் போலவே
இயற்கை பசுமையானது
உன்னைப் போலவே
இயற்கை புதுமையானது
உன்னைப் போலவே
இயற்கை புதிரானது
உன்னைப் போலவே
இயற்கை புரியாதது
உன்னைப் போலவே
இயற்கை அழகானது
உன்னைப் போலவே
இயற்கை ஆச்சரியமானது
உன்னைப் போலவே
இயற்கை ரகசியமானது
உன்னைப் போலவே
இயற்கை அன்பானது
உன்னைப் போலவே
இயற்கை வேகமானது
உன்னைப் போலவே
இயற்கை இதமானது
உன்னைப் போலவே
இயற்கை பலமானது
உன்னைப் போலவே
இயற்கை பலவீனமானது
உன்னைப் போலவே
10 பின்னூட்டங்கள்:
சிங்கப்பூர் ல இந்த எடம் எங்கங்க இருக்கு?
இயற்கையிலேயே அதிசயமா இருக்கு!
காட்சி கண்டேன்!
கண் குளிர்ந்தேன்!!
comment by: ஞானபீடம் + NJ
வாவ்! நான் புலவுபின் போயிருக்கேன்! ஆனா இந்த இடம் பார்த்ததில்லை.
இயற்கை அழகு
ஆனால் பாவம் .. அதற்கு
அரசியல் தெரியாது ..
(மடித்து எழுதியதால் இதை கவிதையாக எடுத்துக்கொள்ளவும்)
Woow ! Super !
அந்த 'உன்னைப் போலவே' யை ஒரே ஒருமுறை., கடைசி வரியாக எழுதியிருந்தால்., இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
ஜெயக்குமார் இது சிங்கையில் புலாவுபின் என்ற தீவில் உள்ளது,
ஞானம் என்ன ஆளைக்காணாம் நீண்ட நாட்களாய்?
//வாவ்! நான் புலவுபின் போயிருக்கேன்! ஆனா இந்த இடம் பார்த்ததில்லை.
//
சற்று உள்ளடங்கிய இடம், கம்பி வேலி போட்டு இயற்கையை சிறை படுத்தியுள்ளனர், சாதாரணமாக தெரியும் இந்த இடம், காமிராவின் வழியே மிக அருமையாக தெரியும்
//அந்த 'உன்னைப் போலவே' யை ஒரே ஒருமுறை., கடைசி வரியாக எழுதியிருந்தால்., இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
//
ம்... இது நன்றாக இருக்கின்றதே, அடுத்தமுறை முயற்சிக்கின்றேன்.
//ஆனால் பாவம் .. அதற்கு
அரசியல் தெரியாது ..
//
தாசுவின் குசும்பு
//(மடித்து எழுதியதால் இதை கவிதையாக எடுத்துக்கொள்ளவும்) //
அடப்பாவி தாசு, அப்போ நான் எழுதியது கவிதையில்லையா?!
//இயற்கை அழகு //
ஆமாங்க சந்திரா ஆனால் ஆபத்தானதும் கூட
நன்றி வீ.எம். நீங்க ஆரம்பிச்சிட்டிங்க போல.
குழலி,
கவிதை அருமை.
கவிதையின் மையக்கருத்தாக - இயற்கையே நீ என்ற கருத்து மிக அழகாக வடிவமைக்கப்பட்டு
வாசகனைப் பார்த்து சொல்கிறது. கூடவே கவனத்தை ஒரு தளத்தில் குவிய வைக்கும் படியான
அருமையான புகைப்படமொன்று.
இயற்கையே நீ (நான்) என்ற கருத்தை இன்னும் கொஞ்சம் நீட்டித்துப் பார்த்தால், இயற்கையின்
நியதிகளை வடிவமைத்து, ஒரு ஒழுங்கமைவுடன் இயக்கி வரும் இறைவனும் உன்னுள்ளே என்ற
பொருள் கூட வரும்.
வெறுமனே வார்த்தைகளைக் கோர்ப்பது மட்டுமல்ல, கவிதை.
வார்த்தைகளின் மௌனத்தின் பின் -
மறைத்து வைக்கப்பட்ட பொருளைக் கண்டுணர்ந்து நுகர்வது தான் கவிதை.
ஒரு நல்ல கவிதையைப் படைத்த நீங்கள் தொடர்ந்து கவிதை தளத்திலும் இயங்குங்கள்.
ஒரு கவிஞராக உங்களைப் பார்ப்பது மிக்க மகிழ்வைத் தருகிறது.
நன்றி - அன்புடன்...
Post a Comment