தேர்தல் 2006 - மதிமுக எக்ஸ்ட்ரா லக்கேஜா?

தமிழக அரசியல் அரங்கின் தற்போதை தலையை பிய்க்கும் கேள்விகளில் ஒன்று மதிமுக திமுக கூட்டணியில் தொடருமா? அதிமுக கூட்டணிக்கு செல்லுமா?

தமிழகத்தில் அதிமுக,திமுக,காங்கிரஸ் கட்சிகளுக்கு அடுத்தபடியாக மாநிலமெங்கும் கிளைகள் பரப்பி வேரூன்றியுள்ள இயக்கம் மதிமுக, வட மாவட்டங்களை விட தெற்கேயும் மேற்கேயும் சற்று பலம் வாய்ந்த இயக்கம், தொடர் தோல்விகளால் தொண்டர்கள் மட்டுமல்லாமல் தலைவர்களும் சலிப்படைந்துள்ளனர்.கடைசி சொட்டு பலம் என்று ஒவ்வொரு கட்சிக்கும் உள்ளது, அதாவது உலகமே இடிந்து விழுந்தாலும் அந்த கட்சிக்கென விழும் வாக்குகளுக்கு நாங்கள் வைத்திருக்கும் பெயர்தான் இது, திமுகவின் கடைசி சொட்டு பலம் 1991 தேர்தலிலும் அதிமுக,மதிமுக,பாமக வின் கடைசி சொட்டு பலம் 1996 தேர்தலிலும் தெரிந்தது.

2001 சட்டமன்ற தேர்தல் அலையில்லாத தேர்தல், ஆளுங்கட்சியின் மீது வெறுப்புமில்லை, அந்த அசம்பாவிதமும் நிகழாமல் எந்த அலையுமில்லாத அந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது முழுக்க முழுக்க கூட்டணி கூட்டல் கழித்தல்களே, 2006 தேர்தலும் இன்று வரை அலையில்லா தேர்தல் களமாக காட்சியளிக்கின்றது, அதனால் கூட்டணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

மதிமுக கூட்டணியிலால் திமுகவிற்கு என்ன நன்மை, திமுக கூட்டணியால் மதிமுக விற்கு என்ன நன்மை? மதிமுக திமுக கூட்டணியிலிருந்தால் அதிமுக விற்கு என்ன நட்டம்?

2001 தேர்தலில் கடைசி நேரத்தில் மதிமுக திமுக கூட்டணியிலிருந்து விலகியது/விலக்கப்பட்டது. 23 தொகுதிகள் பேசி முடிக்கப்பட்டு மதிமுக கேட்ட 3 தொகுதிகள் திமுகவினால் தரப்படாததால் மதிமுக தனியாக போட்டியிட்டு ஒரு இடத்திலும் வெற்றி பெறாமல் போனது.

2001 தேர்தலில் மதிமுக திமுக கூட்டணியில் இல்லாமல் போனதால் திமுக கூட்டணி 26 இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்தது,இவற்றில் 20க்கும் மேற்பட்ட தொகுதிகள் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில்.

இதனால் அதிமுக தனிப்பெரும்பான்மை பெறாமல் போயிருக்கலாம் ஆனால் திமுகவிற்கு மேலும் சில தொகுதிகள் மட்டுமே கூடுதலாக கிடைத்திருக்கும்,
2001 தேர்தலில் மிகப்பெரும்பாலானா தொகுதிகளில் வெற்றி தோல்வி வாக்கு வித்தியாசம் சில ஆயிரங்கள் மட்டுமே மதிமுக வால் வெற்றி வாய்ப்பிழந்த 26 தொகுதிகளில் பல தொகுதிகள் மதிமுக திமுக வாக்குகளை கூட்டியபோது அவை அதிமுக கூட்டணியைவிட ஓராயிரம் இரண்டாயிரம் வாக்குகள் மட்டுமே கூடுதலாக இருந்தது,இத்தனைக்கும் அப்போது திமுக கூட்டணியில் இருந்தவைகள் வாக்கு வங்கி உள்ள கட்சிகள் அல்ல.

மதிமுகவிற்கு அணைத்து தொகுதிகளிலும் பரவலாக கிளைகள் இருந்தாலும் பெரும்பாலுமான தொகுதிகளில் 5,000 முதல் 10,000 வாக்குகள் தான் பெறுகின்றன, அதிலும் வட மாவட்டங்களில் சில தொகுதிகள் தவிர்த்து பிற தொகுதிகளில் வாக்குகள் 5,000ற்கும் குறைவு, தனிப்பட்ட முறையில் வைகோ என்ற மனிதருக்கும், தலைவருக்கும் அவரது இயக்கத்திற்கும் பெரும்பாலானவர்களிடம் இருக்கும் மதிப்பும் மரியாதையும் வாக்குகளாகும் காலம் இன்னும் கனியவில்லை.

இப்போது கூட்டல் கழித்தல் கணக்குகளை பார்ப்போம்

இந்த தேர்தலில் தற்போதைய சூழலின்படி,

திமுகவுடன் காங்கிரஸ்,பாமக இருந்து மதிமுக வெளியேறி தனித்து போட்டியிட்டால் அது கூட்டணியின் வெற்றியை 10க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே பாதிக்கும், அதுவும் சில ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில்,ஆனால் கூட்டணியில் மதிமுக இருந்தால் மதிமுகவிற்காக குறைந்த 15 தொகுதிகள் விட்டுக்கொடுக்கப்பட வேண்டும்.

திமுகவுடன் காங்கிரஸ்,பாமக இருந்து மதிமுக அதிமுகவுடன் சேர்ந்து போட்டியிட்டால் அது தனிப்பட்ட முறையில் அதிமுகவிற்கு வட,தென் மாவட்டங்களில் வெற்றி தோல்வி சில ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் இழுபறியில் இருக்கும் தொகுதிகளி வெற்றி பெற செய்யும் ஆனால் இதுவும் 15 தொகுதிகளுக்குள் தான் இருக்கும், ஆனால் கூட்டணியில் மதிமுக இருந்தால் மதிமுகவிற்காக குறைந்த 30 தொகுதிகள் விட்டுக்கொடுக்கப்பட வேண்டும், திமுக-பாமக-காங்கிரஸ் கூட்டணி இருப்பதால் வட மாவட்ட தொகுதிகளில் பெரும்பாலும் திமுக கூட்டணிக்கு தாரை வார்க்கப்படும் மதிமுக கூட்டணியால் அதிமுகவிற்கும் சரி திமுகவிற்கும் சரி வட மாவட்டங்களில் இலாபம் ஏதுமில்லை, பாமகவால் கூட்டணிக்கு தென் மாவட்டங்களில் பலன் ஏதுமில்லை ஆனால் காங்கிரஸ் கூட்டணி தென் மாவட்டங்களில் பலமாக உள்ள அதிமுகவுடன் மோதி பார்க்க பக்க பலமாக இருக்கும்.

திமுக,பாமக,காங்கிரஸ் கூட்டணியில் மதிமுக தொடர்ந்தால் 15 தொகுதிகளோடு திருப்தி பட்டுக் கொண்டு மதிமுகவின் தனிப்பட்ட செல்வாக்கினால் ஏறக்குறைய 10 தொகுதிகளை கூட்டணி கூடுதலாக வென்றெடுக்கும், ஆனால் தனிப்பட்ட முறையில் திமுக 15 தொகுதிகளை மதிமுகவிற்கு தருகின்றது.

தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் காங்கிரசும்,பாமகவும் தொடர்ந்து மதிமுக தனித்து நின்றால் திமுக கூட்டணிக்கு பாதிப்பு மிக குறைவு,அதிமுக கூட்டணிக்கு சென்றாலும் தனிப்பட்ட முறையில் திமுகவிற்கு நட்டம் ஏதுமில்லை மதிமுக பாதிப்பேற்படுத்தும் 10-15 தொகுதிகளுக்கு பதில் கூடுதலாக 15 தொகுதிகளில் திமுக போட்டியிட்டு பார்க்கலாம்

ஏதோ ஒரு கூட்டணியில் போட்டியிட்டால் 10வரையிலான தொகுதிகளை தனக்கும் 10தொகுதிகளை கூட்டணிக்கும் மதிமுக வென்று தரும்....

கூட்டணியால் மதிமுகவிற்கு தான் நிறைய இலாபம்....

2001 தமிழக சட்ட மன்ற தேர்தல் முடிவுகள்

0 பின்னூட்டங்கள்: