மதிமுக எக்ஸ்ட்ரா லக்கேஜா?

தமிழக அரசியல் அரங்கின் தற்போதை தலையை பிய்க்கும் கேள்விகளில் ஒன்று மதிமுக திமுக கூட்டணியில் தொடருமா? அதிமுக கூட்டணிக்கு செல்லுமா?

தமிழகத்தில் அதிமுக,திமுக,காங்கிரஸ் கட்சிகளுக்கு அடுத்தபடியாக மாநிலமெங்கும் கிளைகள் பரப்பி வேரூன்றியுள்ள இயக்கம் மதிமுக, வட மாவட்டங்களை விட தெற்கேயும் மேற்கேயும் சற்று பலம் வாய்ந்த இயக்கம், தொடர் தோல்விகளால் தொண்டர்கள் மட்டுமல்லாமல் தலைவர்களும் சலிப்படைந்துள்ளனர்.கடைசி சொட்டு பலம் என்று ஒவ்வொரு கட்சிக்கும் உள்ளது, அதாவது உலகமே இடிந்து விழுந்தாலும் அந்த கட்சிக்கென விழும் வாக்குகளுக்கு நாங்கள் வைத்திருக்கும் பெயர்தான் இது, திமுகவின் கடைசி சொட்டு பலம் 1991 தேர்தலிலும் அதிமுக,மதிமுக,பாமக வின் கடைசி சொட்டு பலம் 1996 தேர்தலிலும் தெரிந்தது.

2001 சட்டமன்ற தேர்தல் அலையில்லாத தேர்தல், ஆளுங்கட்சியின் மீது வெறுப்புமில்லை, அந்த அசம்பாவிதமும் நிகழாமல் எந்த அலையுமில்லாத அந்த தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது முழுக்க முழுக்க கூட்டணி கூட்டல் கழித்தல்களே, 2006 தேர்தலும் இன்று வரை அலையில்லா தேர்தல் களமாக காட்சியளிக்கின்றது, அதனால் கூட்டணிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

மதிமுக கூட்டணியிலால் திமுகவிற்கு என்ன நன்மை, திமுக கூட்டணியால் மதிமுக விற்கு என்ன நன்மை? மதிமுக திமுக கூட்டணியிலிருந்தால் அதிமுக விற்கு என்ன நட்டம்?

2001 தேர்தலில் கடைசி நேரத்தில் மதிமுக திமுக கூட்டணியிலிருந்து விலகியது/விலக்கப்பட்டது. 23 தொகுதிகள் பேசி முடிக்கப்பட்டு மதிமுக கேட்ட 3 தொகுதிகள் திமுகவினால் தரப்படாததால் மதிமுக தனியாக போட்டியிட்டு ஒரு இடத்திலும் வெற்றி பெறாமல் போனது.

2001 தேர்தலில் மதிமுக திமுக கூட்டணியில் இல்லாமல் போனதால் திமுக கூட்டணி 26 இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்தது,இவற்றில் 20க்கும் மேற்பட்ட தொகுதிகள் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில்.

இதனால் அதிமுக தனிப்பெரும்பான்மை பெறாமல் போயிருக்கலாம் ஆனால் திமுகவிற்கு மேலும் சில தொகுதிகள் மட்டுமே கூடுதலாக கிடைத்திருக்கும்,
2001 தேர்தலில் மிகப்பெரும்பாலானா தொகுதிகளில் வெற்றி தோல்வி வாக்கு வித்தியாசம் சில ஆயிரங்கள் மட்டுமே மதிமுக வால் வெற்றி வாய்ப்பிழந்த 26 தொகுதிகளில் பல தொகுதிகள் மதிமுக திமுக வாக்குகளை கூட்டியபோது அவை அதிமுக கூட்டணியைவிட ஓராயிரம் இரண்டாயிரம் வாக்குகள் மட்டுமே கூடுதலாக இருந்தது,இத்தனைக்கும் அப்போது திமுக கூட்டணியில் இருந்தவைகள் வாக்கு வங்கி உள்ள கட்சிகள் அல்ல.

மதிமுகவிற்கு அணைத்து தொகுதிகளிலும் பரவலாக கிளைகள் இருந்தாலும் பெரும்பாலுமான தொகுதிகளில் 5,000 முதல் 10,000 வாக்குகள் தான் பெறுகின்றன, அதிலும் வட மாவட்டங்களில் சில தொகுதிகள் தவிர்த்து பிற தொகுதிகளில் வாக்குகள் 5,000ற்கும் குறைவு, தனிப்பட்ட முறையில் வைகோ என்ற மனிதருக்கும், தலைவருக்கும் அவரது இயக்கத்திற்கும் பெரும்பாலானவர்களிடம் இருக்கும் மதிப்பும் மரியாதையும் வாக்குகளாகும் காலம் இன்னும் கனியவில்லை.

இப்போது கூட்டல் கழித்தல் கணக்குகளை பார்ப்போம்

இந்த தேர்தலில் தற்போதைய சூழலின்படி,

திமுகவுடன் காங்கிரஸ்,பாமக இருந்து மதிமுக வெளியேறி தனித்து போட்டியிட்டால் அது கூட்டணியின் வெற்றியை 10க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே பாதிக்கும், அதுவும் சில ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில்,ஆனால் கூட்டணியில் மதிமுக இருந்தால் மதிமுகவிற்காக குறைந்த 15 தொகுதிகள் விட்டுக்கொடுக்கப்பட வேண்டும்.

திமுகவுடன் காங்கிரஸ்,பாமக இருந்து மதிமுக அதிமுகவுடன் சேர்ந்து போட்டியிட்டால் அது தனிப்பட்ட முறையில் அதிமுகவிற்கு வட,தென் மாவட்டங்களில் வெற்றி தோல்வி சில ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் இழுபறியில் இருக்கும் தொகுதிகளி வெற்றி பெற செய்யும் ஆனால் இதுவும் 15 தொகுதிகளுக்குள் தான் இருக்கும், ஆனால் கூட்டணியில் மதிமுக இருந்தால் மதிமுகவிற்காக குறைந்த 30 தொகுதிகள் விட்டுக்கொடுக்கப்பட வேண்டும், திமுக-பாமக-காங்கிரஸ் கூட்டணி இருப்பதால் வட மாவட்ட தொகுதிகளில் பெரும்பாலும் திமுக கூட்டணிக்கு தாரை வார்க்கப்படும் மதிமுக கூட்டணியால் அதிமுகவிற்கும் சரி திமுகவிற்கும் சரி வட மாவட்டங்களில் இலாபம் ஏதுமில்லை, பாமகவால் கூட்டணிக்கு தென் மாவட்டங்களில் பலன் ஏதுமில்லை ஆனால் காங்கிரஸ் கூட்டணி தென் மாவட்டங்களில் பலமாக உள்ள அதிமுகவுடன் மோதி பார்க்க பக்க பலமாக இருக்கும்.

திமுக,பாமக,காங்கிரஸ் கூட்டணியில் மதிமுக தொடர்ந்தால் 15 தொகுதிகளோடு திருப்தி பட்டுக் கொண்டு மதிமுகவின் தனிப்பட்ட செல்வாக்கினால் ஏறக்குறைய 10 தொகுதிகளை கூட்டணி கூடுதலாக வென்றெடுக்கும், ஆனால் தனிப்பட்ட முறையில் திமுக 15 தொகுதிகளை மதிமுகவிற்கு தருகின்றது.

தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் காங்கிரசும்,பாமகவும் தொடர்ந்து மதிமுக தனித்து நின்றால் திமுக கூட்டணிக்கு பாதிப்பு மிக குறைவு,அதிமுக கூட்டணிக்கு சென்றாலும் தனிப்பட்ட முறையில் திமுகவிற்கு நட்டம் ஏதுமில்லை மதிமுக பாதிப்பேற்படுத்தும் 10-15 தொகுதிகளுக்கு பதில் கூடுதலாக 15 தொகுதிகளில் திமுக போட்டியிட்டு பார்க்கலாம்

ஏதோ ஒரு கூட்டணியில் போட்டியிட்டால் 10வரையிலான தொகுதிகளை தனக்கும் 10தொகுதிகளை கூட்டணிக்கும் மதிமுக வென்று தரும்....

கூட்டணியால் மதிமுகவிற்கு தான் நிறைய இலாபம்....

2001 தமிழக சட்ட மன்ற தேர்தல் முடிவுகள்

26 பின்னூட்டங்கள்:

said...

//2001 தேர்தலில் மதிமுக திமுக கூட்டணியில் இல்லாமல் போனதால் திமுக கூட்டணி 26 இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்தது
//
26 என்று படித்ததாக நினைவு, சரியான புள்ளிவிபரம் http://www.tn.gov.in/elect2001/default.htm கிடைக்கும்

said...

//கூட்டணியால் மதிமுகவிற்கு தான் நிறைய இலாபம்....//

I think not like that. that will be win-win situation I think.

aanaalum thamiz makkaLai namba mudiyaathungga.

said...

"டாக்டர் ராமதாஸ் ஒரு தாழ்த்தப்பட்டவர் முதல்வராக வர வேண்டும் என்று கூறி வருகிறார். நான் ஒரு வன்னியர் முதலமைச்சராக வர வேண்டும் என்று கூறுகிறேன். இந்த நோக்கம் நிறைவேற, பா.ம.க.வோடு இருக்கும் சூழ்நிலை நீடிக்க வேண்டுமானால் பா.ம.க.வும் விடுதலை சிறுத்தைகளும் இணைந்து ஒரு மாற்று அணி உருவாக்க வென்டும். பா.ம.க.வுடன் உள்ள நட்புறவை ஒரு போதும் சிதைக்க உடன் பட மாட்டேன். அதற்காக பா.ம.க. இடம் பெற்றுள்ள கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டும் என்று வற்புறுத்த மாட்டேன்.

முதல்வர் ஜெயலலிதா கூட்டணிக்காக அ.தி.மு.க வின் கதவுகள் திறந்தே இருக்கிறது என்று கூறியது ஒரு பொதுவான அறிவிப்பு. அவர் எங்களை குறிப்பிட்டு அழைக்கவில்லை. எங்களை அழைத்தால் அப்போது பார்க்கலாம்."

-ஆ.வி யில் திருமா.


- முடிவா அண்ணன் என்னதான் சொல்றாரு?
மருத்துவர் தாங்குவார்ன்னு நெனைச்சு இப்படி நட்டாத்துல மாடிக்கிட்டேனே! என்ன கொள்கைன்னு சொல்றது? யாரோட சேர்றதுன்னு யோசிக்கறாரா?

said...

இதே போல திமுக-காங்கிரஸ்-மதிமுக ஒன்றாக இருந்து, அந்த
கூட்டணியிலிருந்து பா.ம.க வை கழட்டிவிட்டால் எத்தனை தொகுதிகள்
நஷ்டம் வரும், அதற்காக எத்தனை தொகுதிகள் தியாகம் செய்ய வேண்டி வரும்
என்று கணக்கு போடலான்னு பாத்தா, பா. ம.க. என்னிக்காவது தனியா நின்னாதானே
அதோட பலம் என்னன்னு சொல்ல முடியும்? இவங்க தான் தனியா நிக்கறதே
இல்லையே?

கூட்டணியோட நின்னே பாமக வாங்கியது 4 %னு சொல்றாங்க. தனியா நின்னு
மதிமுக 5% வாங்கினதா சொல்றாங்க.
பி.கு. ( %னா- ஓட்டு. )

said...

//கூட்டணியிலிருந்து பா.ம.க வை கழட்டிவிட்டால் எத்தனை தொகுதிகள்
நஷ்டம் வரும், அதற்காக எத்தனை தொகுதிகள் தியாகம் செய்ய வேண்டி வரும்
என்று கணக்கு போடலான்னு பாத்தா, பா. ம.க. என்னிக்காவது தனியா நின்னாதானே
அதோட பலம் என்னன்னு சொல்ல முடியும்? இவங்க தான் தனியா நிக்கறதே
இல்லையே?
//
தாராளமாக செய்யலாம் 1989 பாராளுமன்ற தேர்தல்,1991,1996 தேர்தல்களில் தனித்து தான் பாமக நின்றுள்ளது, புள்ளிவிபரங்கள் கிடைக்கும், எழுத முயற்சி செய்யலாம் மேலும் இந்த பதிவு புள்ளி விபரங்கள் அடிப்படையில் தற்போதைய அரசியல் சூழலை வைத்து எழுதப்பட்டது மட்டுமே...

said...

குழலி,
ம.தி.மு.க பற்றிய உங்கள் கணிப்பில் பெருமளவு நான் மாறுபடுகிறேன் .விளக்கமாக எழுத இப்போது நேரமில்லை .பிறகு..

said...

தி.மு.க + காங்கிரஸ் + பாமக = வெற்றி
தி.மு.க + காங்கிரஸ் + பாமக + மதிமுக = அபார வெற்றி.

இம்முறை காங்கிரஸ் கூட இருப்பதால் மதிமுக இருந்தாலும்., வெளியேறினாலும் வெற்றி பாதிக்கப் படாது.

said...

தமிழ்க்குடிதாங்கி அதிமுகவுக்குத் தாவ வாய்ப்பில்லை என்று தெரிந்தபின் (மூன்று எமெலேக்களை விலை பேசியபின்னால் முடிவானது) எப்படியாவது மதிமுகவை கழட்டிவிட்டு விட்டால் பாமகவுக்கு அதிக சீட் பெற்று விடலாமே என்று குழலி கனவு கண்டு கொண்டிருக்கிறார். அப்படியே திருமாவுக்கும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா சீட் வாங்கி உள்ளே இழுத்து வந்து விடலாம் என்று கணக்கு. இதுக்கு வைகோவா பலி? பார்த்துக் கொண்டே இருங்கள். இன்னும் கொஞ்ச நாள்தான். தமிழகத்தின் தனிப்பெரும் தலைவராக வைகோ விஸ்வரூபம் எடுக்கும்போது (கலைஞர் இல்லன்னா திமுக காலி, ஜெயலலிதா ஓடிபோனா அதிமுக காலி) உங்கள் கூட்டணிக் கணக்கெல்லாம் காணாமப் போய்விடும். அப்ப வடதமிழ்நாடு தென்தமிழ்நாடுன்னு திரும்ப ஏதாவது பிரச்னையக் கிளப்பிட்டு இருப்பீங்க.
அன்புடன் அரங்கநாதன்

said...

இப்போதைய ஜீவி- யில் வைக்கோ கலைஞருக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் ,அதில் மதிமுக-வின் முக்கியத்துவம் குறித்து விளக்கியிருப்பதாக கொடுக்கபட்டுள்ள அலசல் ஓரளவு சரியெனவே எனக்குப் படுகிறது

http://www.vikatan.com/jv/2006/feb/12022006/jv0601.asp

said...

//தமிழ்க்குடிதாங்கி அதிமுகவுக்குத் தாவ வாய்ப்பில்லை என்று தெரிந்தபின் (மூன்று எமெலேக்களை விலை பேசியபின்னால் முடிவானது) எப்படியாவது மதிமுகவை கழட்டிவிட்டு விட்டால் பாமகவுக்கு அதிக சீட் பெற்று விடலாமே என்று குழலி கனவு கண்டு கொண்டிருக்கிறார். //

அப்படியே ஒரு தொகுதியில் நானும் நிற்கலாம் என்று தான் வேறென்ன?

//இதுக்கு வைகோவா பலி?
//
தனிப்பட்ட முறையில் என் சார்பு நிலைகள் வேறு,அதிலும் வைகோ மீது மிகுந்த மரியாதையும் வைகோ வெற்றிபெற வேண்டுமென்பதில் ஆர்வமும் உடையவன்... இங்கே எழுதியிருப்பது புள்ளி விவரங்கள் அடிப்படையில் தற்போதைய அரசியல் சூழலை வைத்து எழுதப்பட்டது...

//பார்த்துக் கொண்டே இருங்கள். இன்னும் கொஞ்ச நாள்தான். //
நான் எழுதியிருப்பது இன்றைய நிலையை மட்டுமே....

ஜோ விகடன் படித்தேன்... 5.5% வாக்குகளை தமிழகம் முழுவதும் வாங்குவதற்கும் தமிழக அளவிலான 4.0% வாக்குகளை வட மாவட்டங்களில் அள்ளுவதற்கும் உள்ள வித்தியாசம் அதுவும் குறிப்பாக தற்போதிருக்கும் நமது தேர்தல் முறையில் பிந்தையதே இலாபம் என கருதுகின்றேன்...

said...

குழலி,
வடக்கில் பா.மா.க வுக்குள்ள ஓட்டுவங்கி,தெற்கில் செல்வாக்கின்மையோடு தெற்கில் ம.தி.மு.க வின் ஓட்டு வங்கி ,வடக்கில் செல்வாக்கின்மை இடையிரண்டிற்கும் ஒரு சமன் பாட்டை உங்களைப் போல் என்னால் காண முடியவில்லை .ம.தி.மு.க வுக்கு செல்வாக்கு இல்லாத வட மாவட்டங்களிலேயே ம.தி.மு.க தனியாக நின்று 3000 முதல் 8000 வரை ஓட்டு வாங்கியிருக்கிறது .அதே ரீதியில் பா.ம.க தெற்கில் இல்லை .கன்னியாகுமரி ,நெல்லை ,தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் பா.ம.க விற்கும் தொகுதிக்கு 500 ஓட்டுகள் கூட கிடையாது.

சில வட மாவட்டங்களில் பா.ம.க வுக்கு குறிப்பிடத் தக்க ஆதரவு இருப்பது உண்மை .ஆனால் அவற்றில் பெரும்பான்மையானவற்றில் பா.ம.க வே போட்டியிடும் பட்சத்தில் ,கூட்டணிக்கு என்ன லாபம் இருக்க முடியும்?5000 ஓட்டுக்கள் ஒரு தொகுதியின் வெற்றியை நிர்ணயிக்கும் என்று வைத்துக்கொண்டால் ,பா.ம.க 100 தொகுதிகளில் அந்த நிலையில் (பலவற்றில் கணிசமான அளவு அதிகமாக என்பது உண்மை) இருக்கிறது என்றால் ,ம.தி.மு.க கிட்டத்தட்ட 175 தொகுதிகளில் அந்த நிலையில் இருக்கிறது .சில இடங்களில் பா.ம.க வடக்கில் பெற்றிருக்கும் செல்வாக்கு அளவுக்கு இல்லையெனினும் ,தெற்கில் கணிசமான ஆதரவு ம.தி,மு.க வுக்கு இருக்கிறது .கன்னியாகுமரி மாவட்டதில் குளச்சல் தொகுதியில் சென்ற தேர்தலில் தி.மு.க வை மூன்றான் இடத்துக்கு தள்ளி ம.தி.மு.க இரண்டாம் இடத்தை பிடித்தது.

தமிழகம் முழுவதும் கூட்டணி என்று வரும் போது சிறிய கட்சியாக இருந்தாலும் மாநிலம் முழுக்க பரவலான ஆதரவு பெற்றிருக்கிற கட்சியே கூட்டணிக்கு அதிகமாக பங்களிக்க முடியும் .ப.ம.க மாநிலத்தில் பாதி பகுதியில் 1% ஓட்டு கூட பெற முடியாது.

இன்னொன்று .ம.தி.மு.க தனியாக நின்ற போது அது பெற்ற வாக்கு சதவீதத்தை வைத்து அதன் பலத்தை கணக்கிட முடியாது .அவை வெற்றி பெறாது என தெரிந்தே போடப்பட்ட ஓட்டுக்கள் .ம.தி.மு.க வுக்கு ஓட்டு போட மனமிருந்தும் ,வெற்றி பெற முடியாத ம.தி.மு.க வுக்கு போடுவதை விட ,ஜெயலலிதாவை தோற்கடிக்க தி.மி.க வுக்கு போடுவோம் என்று வாக்களித்த பலரை அனுபவ பூர்வமாக நான் பார்த்திருக்கிறேன் .

வைகோ மேல் மிகுந்த மதிப்பு இருந்தும் ,அவரை ஆதரிக்க மனம் இருந்தும் ,கலைஞர் என்ற ஒரே மனிதருக்காக இன்னும் தி.மு.க வுக்கு ஓட்டு போடுகிற ஒரு கூட்டம் இருக்கிறது .அவர்களெல்லாம் காலம் வரும் போது மாறும் வாய்ப்பிருக்கிறது .ஆனால் இத்தகையோர் வை,கோ ஜெயலலிதாவோடு மீண்டும் கூட்டு சேர்ந்தால் அவர் மீது அவநம்பிக்கை கொள்ள வாய்ப்பிருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை வைகோ தன் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ,திமுக அனுதாபிகளின் நல்லெண்ணத்தை குலைக்காமல் இருப்பது நல்லது .இல்லையேல் இவ்வளவு நாள் அவர் காட்டிய பொறுமைக்கு பலனின்றி போகலாம்.

said...

தனிப்பட்ட முறையில் என் சார்பு நிலைகள் வேறு,அதிலும் வைகோ மீது மிகுந்த மரியாதையும் வைகோ வெற்றிபெற வேண்டுமென்பதில் ஆர்வமும் உடையவன்.

மதிமுகவை எக்ஸ்ட்ரா லக்கேஜ் என்று சொல்லாமல் சொல்லிவிட்டு இதையும் நம்பச் சொல்றீங்களா? உங்க தில்லுமுல்லுகள் எல்லாம் தெரிந்ததுதான்.

said...

தற்போது வைகோ தான் கூட்டணியின் புரியாத புதிர்.

ஜோ பதிவில் நான் குறிப்பிடுவது தற்போதைய கூட்டணியிலிருந்து பாமகவும் காங்கிரசும் திமுக கூட்டணியில் தொடர்ந்து மதிமுக விலகினால் ஏற்படும் சாதக பாதகங்கள் மட்டுமே....

இதில் காங்கிரசு கூட்டணியிலிருந்து விலகும் பட்சத்தில் தென் தமிழ்நாட்டில் மதிமுகவினால் ஏற்படும் பாதிப்பு அதிகமாகும்

மற்றைய கூட்டணி சமன்பாடுகள் பற்றி அலசவில்லை....

மேலும் தற்போதைய தேர்தல் முறையில் வெற்றி பெறுவதற்கும் மாநிலம் முழுதும் பெறும் வாக்குகளுக்கும் தொடர்பில்லை என்பது கண்கூடு, மேலும் நீங்கள் பாமக தொடர்பாக கேட்டதற்கு 1989,1991,1996 தேர்தல் முடிவுகள் வாக்கு சதவீதத்தில் கிடைத்தால் தெளிவாகவே என்னால் நிரூபிக்க முடியும்.

//இன்னொன்று .ம.தி.மு.க தனியாக நின்ற போது அது பெற்ற வாக்கு சதவீதத்தை வைத்து அதன் பலத்தை கணக்கிட முடியாது .அவை வெற்றி பெறாது என தெரிந்தே போடப்பட்ட ஓட்டுக்கள் .ம.தி.மு.க வுக்கு ஓட்டு போட மனமிருந்தும் ,வெற்றி பெற முடியாத ம.தி.மு.க வுக்கு போடுவதை விட ,ஜெயலலிதாவை தோற்கடிக்க தி.மி.க வுக்கு போடுவோம் என்று வாக்களித்த பலரை அனுபவ பூர்வமாக நான் பார்த்திருக்கிறேன் .
//
இதே நிலை 1996ல் பாமகவிற்கும் ஏற்பட்டது இதையும் சில இடங்களில் குறிப்பிட்டிருந்தேன், மதிமுகவிற்கும் இது உண்மை தான்

2001 தேர்தலில் எந்த அலையும் இல்லாமல் எந்த கூட்டணியுமில்லாமல் மதிமுக பெற்றதை மதிமுகவின் தனிப்பட்ட பலமாக கருதுகின்றேன்.

1996 தேர்தல் ஜெயலலிதா எதிர்ப்பு அலையால் வாக்குகள் சிதறக்கூடாது என்பதால் அந்த தேர்தலில் மதிமுக,பாமக விற்கு கிடைத்த வாக்குகளை அக்கட்சிகளின் கடைசி சொட்டு பலமாக கருதுகின்றேன்.


//வைகோ மேல் மிகுந்த மதிப்பு இருந்தும் ,அவரை ஆதரிக்க மனம் இருந்தும் ,கலைஞர் என்ற ஒரே மனிதருக்காக இன்னும் தி.மு.க வுக்கு ஓட்டு போடுகிற ஒரு கூட்டம் இருக்கிறது .அவர்களெல்லாம் காலம் வரும் போது மாறும் வாய்ப்பிருக்கிறது
//
முழுக்க முழுக்க இன்றைய சூழலை வைத்து மட்டுமே எழுதப்பட்ட பதிவு,
நீங்கள் சொல்வது எதிர்காலத்தில் நடைபெறும்.

//மதிமுகவை எக்ஸ்ட்ரா லக்கேஜ் என்று சொல்லாமல் சொல்லிவிட்டு இதையும் நம்பச் சொல்றீங்களா? உங்க தில்லுமுல்லுகள் எல்லாம் தெரிந்ததுதான்.
//
மிக்க நன்றி அனானிமஸ்...

said...

//அப்படியே ஒரு தொகுதியில் நானும் நிற்கலாம் என்று தான் வேறென்ன?//-Kuzhali

:-) welcome!

-----

//"மதிமுக எக்ஸ்ட்ரா லக்கேஜா?" //

necessary (d)evil என்று சொல்ல முடியுமா?

;-)

said...

//இதே நிலை 1996ல் பாமகவிற்கும் ஏற்பட்டது இதையும் சில இடங்களில் குறிப்பிட்டிருந்தேன், மதிமுகவிற்கும் இது உண்மை தான்//
குழலி,
இந்த விடயத்தில் ம.தி.மு.க வுக்கும் பா.ம.க வுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது .பா.ம.க -வை ஆதரிப்பவர்களுக்கு மற்ற கட்சிகள் மேல் அனுதாபம் அதிகமாக கிடையாது .அவர்கள் பெரும்பாலும் தனித்து நின்றாலும் பா.ம.க வுக்கே வாக்களிப்பார்கள் என நான் நினைக்கிறேன்.

ஆனால் ம.தி.மு.க அனுதாபிகள் (கட்சி உறுப்பினர்கள் அல்ல) தி.மு.க வுக்கு வாக்களிப்பது அதிகம் என்பது என் கருத்து.ம.தி.மு.க வுக்கு கட்சியில் இல்லாத ,அதற்கு ஓட்டுப் போடாத நிறைய அனுதாபிகள் உண்டு .பா.ம.க வுக்கு அந்த அளவு இல்லை என நினைக்கிறேன்.

said...

//ஆனால் ம.தி.மு.க அனுதாபிகள் (கட்சி உறுப்பினர்கள் அல்ல) தி.மு.க வுக்கு வாக்களிப்பது அதிகம் என்பது என் கருத்து.ம.தி.மு.க வுக்கு கட்சியில் இல்லாத ,அதற்கு ஓட்டுப் போடாத நிறைய அனுதாபிகள் உண்டு //

இது உண்மை ஜோ., கலைஞருக்கு பின்னான அரசியலே வை.கோவின் (மதிமுகவின்) உண்மையான பலம் காட்டும். அதை இந்த தேர்தல் ஒன்றுக்காய் அவர் நிச்சயம் கெடுத்துக் கொள்ள மாட்டார் என நம்புகிறேன்.

said...

" '134 தொகுதிகளிலும் அ.தி.மு.க தான் ஜெயிக்கும். அதுல எந்த சந்தேகமும் இல்லை.எழுதி வைத்துக்கொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டார் ராமதாஸ். உடனே சுதாரித்துக்கொண்ட ராமதாஸ் அதை மாற்றி 'தி.மு.க ஜெயிக்கும்' என்று சொன்னார். என்றாலும் ஆரம்பத்தில் அவர் சொன்ன 'அ.தி.மு.க ஜெயிக்கும்' என்பதை மட்டும் க்ளிப்பிங்க்ஸுடன் ஜெயா டி.வி. ரிப்பீட் பண்ணிக்கொண்டே இருந்தது. "

-ஜூ.வி.

ச்சே... ஊடக வன்முறை ஏன்தான் இப்படி மருத்துவர் ஐயா மீதே பாய்கிறதோ. இனிமேல் ஐயா, தான் எந்த கூட்டணியில் இருக்கிறோம் என்பதை ஒரு துண்டு சீட்டில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது :-))

said...

96 இல் பாமக தனியாக நின்றதாக குழலி சொல்வதால்,

1996 இல் பா.மக பெற்ற மொத்த ஓட்டுக்கள் - 1042333

மொத்த ஓட்டுகள் 27154721

பாமக ஓட்டு சதவிகிதம் 3.8

30000க்கு மேல் வாங்கியவர்கள் 9 பேர் (இதில் எத்தனை பேர் இன்னும் பாமகவில்
இருக்கிறார்கள் என்று தெரியவில்லை )

இதில் 10000த்துக்கு மேல் அதிகமாக ஓட்டு வாங்கியவர்கள் - 35

ராமதாஸ் நாலு இலக்கம் கூட தாண்டவில்லை. இரண்டாயிரத்து சொச்சம் very poor
எப்படி கட்சி தலைவராக இருக்கிறார்?

குழலி அவர்களே,
நமது அரசியல் அமைப்பில் பரவலாக ஆதரவு இருப்பதை விட ஒரு சில இடங்களில்
அதிக ஆதரவு இருப்பது அதிக முக்கியம்தான். வைகோ பரவலாக பெறும் 2000,3000
ஓட்டுகள் பெரிய விஷயமில்லை. கருணாநிதிக்குப்பின் அவர் திமுகவை கவர்ந்தால்தான்
எதிர்காலம்.

said...

//இந்த விடயத்தில் ம.தி.மு.க வுக்கும் பா.ம.க வுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது .பா.ம.க -வை ஆதரிப்பவர்களுக்கு மற்ற கட்சிகள் மேல் அனுதாபம் அதிகமாக கிடையாது .அவர்கள் பெரும்பாலும் தனித்து நின்றாலும் பா.ம.க வுக்கே வாக்களிப்பார்கள் என நான் நினைக்கிறேன்.
//

//ஜெயலலிதா எதிர்ப்பு ஓட்டுகள் சிதறக்கூடாது என உதயசூரியனுக்கு ஓட்டே போடாதா வன்னிய இனப்பெண்கள் முதல் முறையாக உதயசூரியனுக்கு வாக்களித்தனர். இது பாமக வை கடும் பாதிப்புக்குள்ளாக்கியது மாநிலகட்சி என்கின்ற தகுதி இழப்பும் யானைசின்ன இழப்பும் நடந்தது.
//
என்று என் பதிவில் ஏற்கனவே எழுதியிருந்தேன், இது நேரடியாக நானே பல இடங்களில் பார்த்ததால் எழுதினேன்... இன்னுமொன்று அதிமுகவிற்கு 1996ல் கிடைத்த வாக்கு சதவீதம் மிகக்குறைவு தீவிர அதிமுகவினர் பலர் வாக்களிக்க கூட செல்லாததால் ஏற்பட்டது.
ஆனால் ம.தி.மு.க அனுதாபிகள் (கட்சி உறுப்பினர்கள் அல்ல) தி.மு.க வுக்கு வாக்களிப்பது அதிகம் என்பது என் கருத்து.ம.தி.மு.க வுக்கு கட்சியில் இல்லாத ,அதற்கு ஓட்டுப் போடாத நிறைய அனுதாபிகள் உண்டு .பா.ம.க வுக்கு அந்த அளவு இல்லை என நினைக்கிறேன்.

//வைகோ மீது இருக்கும் தனிப்பட்ட மதிப்பின் அளவிற்கு பாமக மீதிருக்கிறாதா என்றால் இல்லை தான், இன்றைய நிலையில் அந்த மதிப்புகள் வாக்குகளாவதில்லை என்பதும் மறுக்க முடியாது.
//

ஆதிரை 1996 தேர்தல் அதிமுக,பாமக,மதிமுகவின் கடைசி சொட்டு பலம் என்ன என்று காண்பித்த தேர்தல், 1996ல் ஜெயலலிதா எதிர்ப்பு அலையினால் வாக்குகள் சிதறக்கூடாதென தீவிர பாமகவினரே சூரியனில் குத்தினார்கள்... விளைவு 1989,1991 தேர்தல்களில் வாக்கு சதவீதத்தினால் கிடைத்த மாநில கட்சி என்ற அங்கீகாரம் இழந்தது, இத்தனைக்கும் 1991ல் ராஜீவ் மரண அலை அடித்த தேர்தல் அப்போதும் கூட மாநில கட்சி என்ற அங்கீகாரம் பெற முடிந்தது ஒரே ஒரு தொகுதியில் வென்ற போதும்.


ம்... மதிமுகவை பற்றி பேசுவதைவிட பாமக வை பற்றிதான் அதிகம் பேசுகின்றோம் :-) பாமக பற்றி அது தொடர்பான பதிவில் பேசலாமே...

என் பதிவில் மதிமுக வின் முந்தைய தேர்தல் புள்ளிவிவர தவறுகளோ அல்லது இன்றைய அரசியல் சூழ்நிலையில் நான் குறிப்பிட்டதில் ஏதேனும் குறைபாடுகளோ இருந்தால் எடுத்து கூறுங்கள் ஏற்றுக்கொள்கின்றேன்...

திமுக கூட்டணி அரசாங்கத்திற்கு தயாராக இருந்தால் மதிமுக வை கூட்டணியில் வைத்து கொள்வதால் மதிமுக வெற்றி பெறும் தொகுதிகளும் திமுக கூட்டணி மதிமுக வின் தனிப்பட்ட செல்வாக்கினால் கிடைக்கும் தொகுதிகளும் உபயோகமாக இருக்கும்...

திமுக கூட்டணி ஆட்சிக்கு தயாராக இல்லாமல் தனி ஆட்சிக்கு மட்டுமே தயாராக இருந்தால் தனிப்பட்ட முறையில் திமுக மதிமுகவினால் வெகு சில தொகுதிகளை மட்டுமே இழக்கும், இந்த நிலையில் மதிமுக திமுகவிற்கு எக்ஸ்ட்ரா லக்கேஜே!!! என்பது எனது கணிப்பு

said...

//ராமதாஸ் நாலு இலக்கம் கூட தாண்டவில்லை. இரண்டாயிரத்து சொச்சம் very poor
எப்படி கட்சி தலைவராக இருக்கிறார்?//

ஆதிரை, ராமதாசு எந்த ஆண்டு எந்த தொகுதியில் நின்றார் என்று கூற இயலுமா? எனக்கு கருத்து தெரிந்து அவர் தேர்தலில் நின்றதாகத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் பாமக ஆரம்பிக்கப்பட்ட பின் அவர் தேர்தல்களில் நின்றதில்லை!

//ம்... மதிமுகவை பற்றி பேசுவதைவிட பாமக வை பற்றிதான் அதிகம் பேசுகின்றோம் :-) பாமக பற்றி அது தொடர்பான பதிவில் பேசலாமே...//

அதே அதே...

குழலி சீக்கிரம் நம்ம கோட்டையை பற்றி எழுதுங்கள். மக்களின் ஆர்வத்தை பார்க்கும் பொழுது, பாமக பற்றி நிறைய அலசல்கள் வெளிவரும்...ஆனால் வட மாவட்டங்களில் இருப்பவர்கள் கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் பட்சத்தில் நிறைய "உண்மையான" , "நடுநிலையான", "நுனிப்புல்" மேயாத ஆழமான :-) கருத்துகள் வெளிவர வாய்ப்பிருக்கிறது.

மற்றபடி மதிமுகவினால் திமுகவின் வெற்றி வாய்ப்பைவிட வெற்றிபெற்ற ஓட்டுக்களில் வேண்டுமானால் வித்தியாசம் ஏற்படலாமேயொழிய முழுமையான பாதிப்பு ஏதும் கிடையாது. இது திமுகவினருக்கும், மதிமுகவினருக்கும் நன்றாகவே தெரியும். மேலும் வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் பானையை உடைத்த கதையாக ஆக்க வைகோ முட்டாளல்லவே. இம்முறை திமுக கூட்டணியில் இருக்கும் பட்சத்தில், வைகோ சட்டமன்றத்திற்கு செல்லும் பட்சத்தில்(பின்னாளில் ஏற்படவிருக்கும் மாற்றத்திற்காக) மதிமுகவிற்கு திமுகவினரோடு ஒட்டிக் கொள்வதே சிறந்த வழி. அதை விட்டு சுவரேறி குதிக்க முயன்றால் மதிமுக என்ற ஒரு கட்சி இல்லாமல் போய்விடும் என்பதே உண்மை.

said...

குழலி,
நீங்கள் கேட்ட url.
http://www.eci.gov.in/DataBase/DataBase_fs.htm

Election Commission of India website இல் அழகாக MSAccess database
வைத்திருக்கிறார்கள்.

said...

ஆதிரை, ராமதாசு எந்த ஆண்டு எந்த தொகுதியில் நின்றார் என்று கூற இயலுமா? எனக்கு கருத்து தெரிந்து அவர் தேர்தலில் நின்றதாகத் தெரியவில்லை.

மொட்டையாக ராமதாஸ் என்று போட்டிருந்தது. நான் மருத்துவர்
என்று நினைத்தேன். வேரு ஆளாகவும் இருக்கலாம்.
எந்த தொகுதி என்ற விபரம் இல்லை.
மீண்டும் பார்த்தேன் C.ராமதாஸ்

" மதிமுகவிற்கு திமுகவினரோடு ஒட்டிக் கொள்வதே சிறந்த வழி. அதை விட்டு சுவரேறி குதிக்க முயன்றால் மதிமுக என்ற ஒரு கட்சி இல்லாமல் போய்விடும் என்பதே உண்மை. "
i agree

said...

சுட்டிக்கு நன்றி ஆதிரை

said...

PMK extra luggaga? nu kooda oru pathivu podunga kuzhali. Avanga thanithu ninnapo enna achu antha details kudunga. DMK always try to belittle vaiko thru PMK apdingra kutrachatuku pathil ennango? DMK kudumbam epdi asia laye top ten rich families la onnachu? ramadoss evlo sethaeu? Anbumani and dayanidhi maran oda capabilities and qualifications which made them cabinet ministers nu ellam theliva eduthu sollunga. Intha kollaiyargal kootathuku amma evlavo mel.

said...

//அப்படியே ஒரு தொகுதியில் நானும் நிற்கலாம் என்று தான் வேறென்ன?//

உணர்ச்சிவசப்படாமல் இதை எழுதிய உங்கள் Sense of Humorஐ பாராட்டுகிறேன்.

said...

ஒவ்வொன்றுக்கும் ஒரு விலை உண்டு தான் கேட்ட விலையை தந்தவர்களுடன் தான் கொள்கை உறுதியுடன் கூட்டணி இது தெரியாமல் சரி, தவறு என்பது அர்த்தமில்லதது