பத்மவியூகம் - அபிமன்யு,அரவாணன்

அபிமன்யு,அரவாணன் இருவருமே மகாபாரத்ததின் முக்கிய பாத்திரங்கள், இரண்டும் சொல்லும் சேதிகள் பல பல...

அபிமன்யு அரண்மனையில் பிறந்து எல்லா அரண்மனை சுகத்தையும் அனுபவித்து, பிறப்பினால் சமூகத்தில் கிடைத்த அத்தனை மதிப்பையும் மரியாதையையும் அனுபவித்து வந்தவன் எல்லாவற்றிற்கும் மேலாக பிறப்பிலேயே திறமை உண்டு என்ற புழுத்து போன சமூக அவலத்தை கருத்தாக்க பத்மவியூகத்தை உடைப்பதை கர்ப்பத்திலே கற்றுக் கொண்டதாக உருவகப்படுத்தப்பட்டவன் இதை இன்று வரை அறிவுசீவி 'சோ'க்கள் புளகாங்கிதப்பட்டுக் கொண்டு திரிகின்றனர், அரைவேக்காட்டு தனமாக அரை குறை புரிதல்களோடு போர்களத்திலே பத்மவியூகத்தை உடைக்கிறேன் பேர்வழியென்று தவறான புரிதல்களோடும் மண்டை கணத்தோடும், தாம் மட்டுமே பெரிய வில்லாளி என்ற மம்மதையோடும் பத்ம வியூகத்தை உடைத்து உள்ளே சென்று மாட்டிய போது அவனுடைய புரிதல்கள் அரைவேக்காட்டு தனமானது அரை குறையானது என்று அபிமன்யூவிற்கு தெரிந்ததா அல்லது எப்போதும் போல தம்மை பீடத்தில் வைத்துக் கொண்டே பிறர்தான் தவறு,லூசு என்று நினைத்துக்கொண்டே செத்தானா என்பது விளக்கப்படவில்லை.


இந்த படத்திற்கு நன்றி முகமூடி

அரவாணன் மகாபாரதத்தின் வஞ்சிக்கப்பட்ட பாத்திரம், காட்டிலேயே பிறந்து வளர்ந்து காட்டானாக சுற்றி திரிந்தவன்,அர்ஜீனனின் மகனே ஆனபோதும் அரசாளும் வாரிசு அபிமன்யூதான், அபிமன்யூவைப்போல் அரண்மனை சுகங்களை கண்டானா? இல்லையே ஆனால் குருசேத்திர போருக்கு முன் கொண்டுவரப்பட்டான் எதற்காக களப்பலியிட, பாண்டவர்கள் போரில் வெற்றி பெற்றாலும் அரவாணன் நிச்சயம் செத்திருப்பான் அதற்காகத் தான், இந்த சூழ்ச்சி தந்திரம் தான் சங் பரிவார்களும், ஆர்.எஸ்.எஸ் கும்பலும் பல இடங்களில் இந்து மத்திலேயே சம உரிமை தராமல் வைத்திருக்கும் தாழ்த்தப்பட்ட மக்களையே இந்து மதம் இந்து மதம் என்று கூறி பயன்படுத்திக்கொண்டது, மகாபாரத அரவாணனுக்கு பாண்டவ குலத்தில் பிறந்தவன் என்ற தூண்டில் இந்த அரவாணர்களுக்கு இந்து மதம் என்ற தூண்டில் ஆனால் இரண்டிலுமே வஞ்சிக்கப்படவர்கள் அரவாணர்களே.

வீரனுக்கு அழகே போர்களம் சென்று போரிடுவது தான், அதில் தான் அவன் ஆத்ம திருப்தியும் இருக்கும், இங்கேயோ போர் செய்து அவன் திறமையை காட்ட கூட வாய்ப்பளிக்காமல் அபிமன்யூக்களுக்காக தியாகம் என்று கூறி அவன் கழுத்து கீழே மாற்றி மாற்றி கத்தியை சொருகிவிட்டனர், கடைசி ஆசையாக திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட போதும் அவன் திருமணம் செய்து கொண்டது உண்மையையல்ல மாயையைத்தான்.

ஒரே மதத்தில் குலத்தில் பிறந்தும் கல்வி, வித்தைகள்(அவைகள் அரை குறையாகவே இருந்தாலும்), சமூக மரியாதைகள், அரசு கட்டில் எல்லாம் அபிமன்யூவிற்கு அபிமன்யூ செத்ததற்கு பழிவாங்கவில்லையென்றால் தன் உயிரையே விடத் துணிந்த அர்ஜீனன், அபிமன்யூவின் மீது கை வைத்தால் என்ன நடக்கும் என எச்சரித்து கட்டமைப்பை காப்பாற்ற சூழ்ச்சி செய்து உதவும் கண்ணன் போன்ற பெரியவர்கள் என மிக அழகாக மிக நீண்ண்ண்ண்ண்ட கால தொலை நோக்கு திட்டங்கள் எல்லாமே அபிமன்யூக்கள் வாழ இது எதுவுமே இல்லாமல் அபிமன்யூக்கள் வாழ்வதற்கு தம்மை பலி கொடுக்க அரவாணன்கள், அரவாணனின் கழுத்து கீழே இறங்கிய ஒரு ஒரு குத்தும் அபிமன்யூக்கள் வாழ பெரியவர்களால் நடத்தப்பட்ட துரோக குத்துக்கள்.அபிமன்யுவை போல் அழகாக சித்திரம் தீட்டமுடியாத அளவிற்கு அரவாணனின் கழுத்திற்கு கீழே அத்தனை துரோக குத்துகள் என்பதால் தலைமட்டும் இருக்கும் அரவாண சாமியின் படம் இங்கே (அரவாணன் சாமிதான் அவனை நம்பியவர்களுக்கு மட்டுமாவது)

இது வெறும் அபிமன்யூவின் புரிதல்களின் தவறு மட்டுமே அல்ல, அவன் அப்படித்தான் அரண்மனையில் வளர்க்கப்படிருந்தான், பெரியவர்கள் அப்படித்தான் வளர்த்தார்கள் இப்போதும் நான் கருதுவது இவை எல்லாம் அபிமன்யூவின் தவறுகளல்ல, அவனின் புரிதல்களின் தவறே

பெரியவர்களின் கட்டமைப்புகள் பெரியாரினால் உடைக்கப்பட்டதால் அபிமன்யூக்கள் வாழ இங்கே அரவாணன்கள் கிடைப்பதில்லை, புழுத்துப்போன வீச்சங்களை எதிர்த்து அரவாணன்கள் உரக்க சமூகநீதிக் குரல் எழுப்புவதால் அரவாணன்கள் மீதே அபிமன்யூக்களின் தாக்குதல். பீடங்கள் உடைந்து அரவாணன்கள் எழுந்து கொண்டிருக்கும் காலம் இது, அபிமன்யூக்கள் புரிந்து கொள்ளவில்லையென்றால் அரவாணன்களின் பத்மவியூகத்தில் மாட்டி அடிபட நேரிடும்.

42 பின்னூட்டங்கள்:

said...

அரவாணன் மற்றவர்களில் இருந்து மாறுபட்டு இருந்தானல்லவா? அதாவாது எதிர் ரோமம் உள்ளவன் அவனது அங்கங்களில் இருந்து தான் சதைத்துண்டுகளை எடுத்து வைத்த களப்பலி கொடுக்க வேண்டும் .

said...

//அதாவாது எதிர் ரோமம் உள்ளவன் அவனது அங்கங்களில் இருந்து தான் சதைத்துண்டுகளை எடுத்து வைத்த களப்பலி கொடுக்க வேண்டும் .
//
இது எனக்கு தெரியவில்லை, புதுத் தகவல், நான் கேள்விப்பட்டது மாசு,மரு, மச்சம் இல்லாத உடம்பு காரங்களைத்தான் களபலி கொடுக்க வேண்டுமென்றும் அந்த மாதிரி களப்பலி கொடுக்க தகுதியானவர்கள் அரவாணனனும் அர்ஜீனனும் மட்டுமேயாம்... கதைகளில் இதுவும் உண்டு.

said...

அதாவது நமக்கு முகத்தில், கைகளில் கீழ் நோக்கித் தான் ரோமங்கள் இருக்கும் அர்ச்சுனனுக்கும் அவன் மகனுக்கும் எதிர் திசையில் இருக்குமாம் ஒரு மனிதனுக்கு உணவு தன் கையால் 32 கவளம் பொது வாக உண்பது பழக்கும் அந்த 32 சதைபிண்டங்களை (எதிர் ரோக்காரனிடம் இருந்து )எடுத்து வைத்து வணங்குவார்கள் அவரை கொண்று விடுவதில்லை என ஒரு பெரியவர் எனக்கு கதையைச் சொன்னார் நான் கேட்டேன், 'தான் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக தன்மகனையே பலி கொடுப்பதா' என்று அதற்கு அவர் சொன்ன பதில்.

said...

//பெரியவர்களின் கட்டமைப்புகள் பெரியாரினால் உடைக்கப்பட்டதால் அபிமன்யூக்கள் வாழ இங்கே அரவாணன்கள் கிடைப்பதில்லை//

பிறகு கோபம் வராதா?

குஜராத்தில் அரவாண்கள் இல்லாமல் முஸ்லீம்களை கொல்லமுடியுமா? எல்லா இடத்திலும் கொல்லப்படுவர்கள் ஆரவாண்கள் தானே.

said...
This comment has been removed by a blog administrator.
said...

//பெரியவர்களின் கட்டமைப்புகள் பெரியாரினால் உடைக்கப்பட்டதால் அபிமன்யூக்கள் வாழ இங்கே அரவாணன்கள் கிடைப்பதில்லை, புழுத்துப்போன வீச்சங்களை எதிர்த்து அரவாணன்கள் உரக்க சமூகநீதிக் குரல் எழுப்புவதால்//

ம்....!

said...

arjunanayum bali koduthirukalame!
ippadi ellam keka kudadho!

said...

குழலி,

அருமையான பதிவு.

இந்த மாதிரியான உள்நுட்ப வேலைகளையெல்லாம் - உங்களைப் போன்ற நண்பர்கள் எடுத்துச் சொல்லும் பொழுது தான் தெரிகிறது.

இல்லையென்றால், இதெல்லாம் ஏதோ பெரிய விஷயம் போல இருக்கிறது என்று ஒதுங்க வேண்டியதிருக்கிறது.

எடுத்துச் சொன்னதற்கு நன்றி....

said...

back in full form..??!! go ahead..

said...

//இது எனக்கு தெரியவில்லை, புதுத் தகவல், நான் கேள்விப்பட்டது மாசு,மரு, மச்சம் இல்லாத உடம்பு காரங்களைத்தான் களபலி கொடுக்க வேண்டுமென்றும் அந்த மாதிரி களப்பலி கொடுக்க தகுதியானவர்கள் அரவாணனனும் அர்ஜீனனும் மட்டுமேயாம்... கதைகளில் இதுவும் உண்டு.//

குழலி,

பாரதப் போருக்கு நாளும், சகுனமும் குறித்துத் தரும்படி துரியோதனன் பாண்டவர்களில் ஒருவரும், ஜோதிடக்கலையில் வல்லவருமான சகாதேவனிடம் கேட்பார். போர் துவங்குமுன் முப்பதிரண்டு லட்சணங்கள் பொருந்திய ஆண்மகனை பலியிட வேண்டும் என்பது சகாதேவனின் ஆலோசனை. கூடவே அப்படிப்பட்ட லட்சணங்கள் பொருந்தியவர்களின் யாவர் என்று சொல்லுவார். அதில் கிருஷ்ணனும் (அர்ச்சுனன்? சந்தேகமாக இருக்கிறது எனக்கு), அரவானும் அடக்கம். அதன்படியே அரவான் வசியப்படுத்தப்பட்டு பலியிடப்படுவான்.

வடமாவட்டங்களில் நடக்கும் மகாபாரதத் தெருக்கூத்து பத்து பாகங்களாக நடக்கும். அதில் ஒரு பாகம் (அதாவது ஒரு இரவு முழுதும் நடக்கும் episode) 'அரவான் களபலி'. நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் ஊர்ப்பக்கம் குடியாத்தம் கோபால் குழுவினரின் கூத்து நடக்கும். வாத்தியார் கோபால் சகாதேவன் வேடத்தில் முப்பதிரண்டு லட்சணங்களையும் விவரித்துப் பாடியது நினைவிருக்கிறது. அதில் ஒன்றே இந்த எதிர் ரோமமும். படியாமல் விறைத்து நிற்கிற தலைமுடியுடைய பையன்களுக்கு 'அரவான்' என்ற பட்டப்பெயரும் கொடுப்பதுண்டு.

சரி, இப்போது அபிமன்யு யாரென்று தெரிந்துவிட்டது. அபிமன்யுவை அரைகுறையாக பயிற்றுவித்து, களமிறக்கிய மாயக்கண்ணன் யாரோ?

said...

அப்போதிருந்தே மாற்றுப்பார்வை, மாற்றுக்கலாச்சாரத்தினைக் கொண்டவன் (எதிர் ரோமக்குறியீடு) களப்பலியாக்கப்படுதலுக்கு அரவாண் பலியையும் இன்னுமொரு காட்டாகக்கொள்ளலாம்!

said...

சரி..அதெல்லாம் கிடக்கட்டும்.
அரவான் பக்தர்கள் என்று சொல்லிக்கொள்ள எத்தனை பேர் தயார்?

ஐயோ அடிக்க வர்ராங்க

நான் அப்பீட்டு

said...

சுந்தரமூர்த்தி சொல்வதுபோலத்தான் அரவான் கதையென்பதாக ஞாபகம். பெருங்கதைப்படி போருக்கு முன்னாலேயே அவன் பலி கொடுக்கப்படுகின்றான்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் பாண்டிச்சேரியிலே இறப்பதற்கு முதலிரவு அரவான் தன்னைப் பலியிடுவது குறித்து அரற்றுவதினை மையமாக வைத்து ஒரு நாடகம் மேடையேற்றப்பட்டதாக சஞ்சிகையொன்றிலே வாசித்தேன்.

said...

குழலி முப்பத்து மூன்று பதிவுகளைக்கொண்ட பெரிய பதிவாளர் தாங்கள் தான்

said...

//குழலி முப்பத்து மூன்று பதிவுகளைக்கொண்ட பெரிய பதிவாளர் தாங்கள் தான்
//
என்னார் அய்யா, புரியலைங்களே என்னதுங்க இது?

said...

குழலி,

அரிவாளில் பூவைச்சுத்தி மேசையில் வைப்பது எல்லோருக்கும் சாத்தியம் என்பதை உணர்த்தியுள்ளீர்கள்.

புத்திசாலிதனத்தை நியாயத்திற்கு மாற்றாக வைப்பவர்கள் இதை உணருவது எக்காலம்?

said...

இந்த கீற்று.காம் கட்டுரையிலிருந்து

//மகாபாரதப் போர் தொடங்கும் முன் பாண்டவர்கள் போரில் வெற்றிபெற 32 லட்சணங்களும் முழுமையாகக் கொண்ட ஆண்மகன் ஒருவன் பலியிடப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. இதற்காகத் தெரிவு செய்யப்பட்டவன்தான் அரவான் என்கிற அர்ச்சுனனின் மகன். ஆனால் அவனுக்குத் திருமணமாகாத குறை இருந்தது. இதனைப் போக்கினால்தான் அவன் முழு ஆண் மகன் ஆவான். அடுத்த நாள் சாகப்போகிறவனுக்கு யார் பெண் தருவார்கள். எனவே வஞ்சகன் கண்ணனே பெண்ணாக உருமாறி அரவானைத் திருமணம் செய்துகொள்கிறான். அடுத்த நாள் அரவான் பலியிடப்பட்டவுடன் பூவிழந்து பொட்டிழந்து தாலி நீக்கி விதவையாகிறான்.//

said...

//சில ஆண்டுகளுக்கு முன்னால் பாண்டிச்சேரியிலே இறப்பதற்கு முதலிரவு அரவான் தன்னைப் பலியிடுவது குறித்து அரற்றுவதினை மையமாக வைத்து ஒரு நாடகம் மேடையேற்றப்பட்டதாக சஞ்சிகையொன்றிலே வாசித்தேன்.//
பெயரிலி, எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய, 'அரவான்' நாடகப் பிரதியைத்தான் நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன். கோணங்கியின் தம்பியொருவர்தான் (பெயர் நினைவுக்கு வரவில்லை) அந்த நாடகத்தை இயக்கியும் நடித்துமிருந்ததாய் வாசித்த நினைவு.

said...

குழலி,

2 அல்லது 3 ஆண்டுகட்கு முன்னர், சென்னை.......-ல் நடைபெற்ற அரவான் களப்பலி ஓரங்கநாடகம் (சென்னைக் கலைக்குழு?) பார்க்க நேர்ந்தது. கூத்துப்பட்டறையின் முத்துசாமி ஐயா அவர்கள் விமர்சகராகவும், கலைராணி அக்கா துணை ஒலியாளராகவும் பங்கேற்றனர்.

அந்த நாடகத்தைக் காணும் வரை அரவானின் கதையை நான் முழுமையாகத் தெரிந்திருக்கவில்லை.

களப்பலிக்கு முந்தைய நாள் அவன் மனதோடு நடக்கும் போராட்டத்தை அழகாகச் சித்தரித்து இருப்பார்கள். அவனது மனக்குழப்பத்தைப் பயன்படுத்தி "கண்ணன்" பெண் உருவில் வந்து அவனை வசியப்படுத்தி அரவானோடு கலவியில் ஈடுபட்டு அவனது "களப்பலி"யின் நினைவினை மறக்கச் செய்து விடுவான்.

புணர்ச்சியின் உச்சத்தில் கண்ணனது உடலை உணர முடியாமல், பின்னர் அவன் புணர்ச்சியில் ஈடுபட்டது ஒரு ஆணோடு தான் என்பதை நினைத்து வருந்திக் கொண்டிருக்கும் வேலையிலே அவனது களப்பலி நிறைவேற்றப்பட்டிருக்கும். அந்நாடகத்தின் மூலமாக நான் அறிந்த வகையில் அரவானுக்கு முழுமையான ஒப்புதல் இல்லாமலும், அவன் மனதை குழப்பப்படுத்தி(கண்ணனின் சூழ்ச்சியால்) அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவனை களப்பலி கொடுத்திருக்கிறார்கள்.

களப்பையின் போது கலைரானி அக்காவின் "ஒப்பாரி" மிக இயல்பாக மனதை தைப்பது போல் இருந்தது. மனதை பாதித்த நிக்ழ்ச்சி அது.

சுந்தரவடிவேல் அவர்களின் விளக்கம்
ஒரு புதிய பார்வை என்னை பொறுத்தவரையில்...

குழலி, அரவானின் படம் "கன்னியர்கோயில்"ல் எடுத்ததா...

said...

அரவாணனை பற்றிய நிறைய தகவல்கள் தந்துள்ளீர்கள், அனைவருக்கும் நன்றி.

வஞ்சிக்கப்பட்டவர்களை பார்க்கும் போதெல்லாம் அரவாணன் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை கூடவே அபிமன்யுவும்.

என் முதல்பதிவு அரவாணனின் அரற்றல்

//அரவானின் படம் "கன்னியர்கோயில்"ல் எடுத்ததா...
//
இது சிங்கப்பூர் மாரியம்மன் கோவிலில் உள்ள அரவாண் சாமி படம், இணையத்திலிருந்து எடுத்தேன்.

said...

டிஜே,
முருகபூபதி

said...

என்ன இருந்தாலும் பெரிய மனுஷர் பெரிய மனுஷர்தான்

said...

குழலி!

அருமையோ அருமை! இதைப் படிப்பதற்கு முன்னால் கலைஞரின் உடன்பிறப்புக்குக் கடிதம் படித்துவிட்டு அதைப் பதிவாகப் போட தயாராக இருந்தேன் - அதில் உங்களின் இந்தப் பதிவையும் குறிப்பிட்டிருக்கிறேன்!

நீங்கள் எழுதிய :

>> பெரியவர்களின் கட்டமைப்புகள் பெரியாரினால் உடைக்கப்பட்டதால் அபிமன்யூக்கள் வாழ இங்கே அரவாணன்கள் கிடைப்பதில்லை >>

தங்கமணி அவரிகள் எழுதியுள்ள :

>>
பிறகு கோபம் வராதா?

குஜராத்தில் அரவாண்கள் இல்லாமல் முஸ்லீம்களை கொல்லமுடியுமா? எல்லா இடத்திலும் கொல்லப்படுவர்கள் ஆரவாண்கள் தானே. >>

இரண்டும் வெறும் வாக்கியங்கள் அன்று. இந்தியத் துனைக்கண்டத்தின் ஈராயிரமாண்டுச் சமூக-வரலாற்று-அரசியல் பிழிவு! :)

said...

நல்லதொரு பதிவும் பின்னூட்டங்களும், நன்றி, குழலிக்கும் மற்றவர்களுக்கும்.
குழலி, சம்பந்தமில்லாமல் ஒன்று, உங்கள் ப்ளாகின் நிறத்தை, வெள்ளை போன்றதொரு கலருக்கு மாற்ற முடியுமா? கண்கள் வலிக்குது குழலி.

said...

அரவான் கதையில் ஆர்வமுள்ள நண்பர்களுக்கு,
நான் முதலில் எழுதியதற்கும் கீற்று.காம் கட்டுரையில் இருப்பதற்கும் நுட்பமான வேறுபாடு உண்டு. கீற்று கட்டுரையைப் படித்த பிறகு அரவானை பலிகொடுக்க நினைத்தது கௌரவர்களா பாண்டவர்களா என்று சந்தேகம் வந்தது. என் பால்யகால நண்பனிடம் பேசி உறுதி செய்தேன்.

தெருக்கூத்தில் நடிக்கப்படும் கதையின்படி சகாதேவன் பாண்டவரில் ஒருவராயினும் பகைபாராமல், பொய்கூறாது நேர்மையாக ஜோதிடம் சொல்லக்கூடியவன் என்பதாலேயே துரியோதனன் அணுகுவான்.
சகாதேவனின் ஜோதிட ஆலோசனையின் பேரில் துரியோதனன் தான் அரவானை சம்மதிக்க வைப்பான் (கௌரவர்களின் வெற்றிக்காக). ஆனால், மாவீரனான அரவானால் பிறகு தொல்லைகள் ஏதும் வரக்கூடாது என்பதற்காக அதை தடுக்க எதுவும் செய்யலாகாது என்பதே கிருஷ்ணனின் சதி. அரவானும் உவப்புடனேயே ஏற்றுக்கொள்வான். அழுவதில்லை. அரவானுக்காக அழுது அரற்றுவது அவனுடைய அன்னை சித்ராங்கி ஒருத்தி மட்டுமே.
போலித்தனமாக அழுது அரற்றும் பெண்ணைப் பார்த்து 'சித்ராங்கி வேஷம் போட்றா பாரு' என்று சொல்லப்படுவது உண்டு.

said...

அருமையான பதிவு குழலி. நீண்ட நாட்களுக்குப் பின் கலக்கி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

said...

Hi kuzhali, I am trying to understand the bottom line of your blog.I understand from your post you are trying to bring forth caste issues prevailed and prevailing in the society.Here I beg to differ from your opininon.Now days trend is completely different.People who are marginalised are no longer dalits but brahmins.I am giving an example from real life.Dalit guy whose father is tahsildar and mother is a government school teacher whose earnings are more than 30 - 40 k per month is getting the reservation for college seats and Govt jobs , where as Brahmin students of poor economical background are struggling.What say about this ? I will call this as now days ARAVANAN AND ABHIMANU have been changed.Do not post blogs of this nature in an era where the ground realities are different.

Natpudan

said...

Anonymous,

Still there are people in the market, who buy these kind of stuff. So, there are pseudo-intelligent guys to sell them by writing with jargons like, கட்டமைப்பு, சமூக நீதி, etc.,

The difference nowadays is, people do this (writing such things) as a part time job, after enjoying a wonderful day with all the luxuries of life, Whereas it is considered as a full-time profession by politicians.

Please dont misunderstand or misinterpret my statement. I too feel that there are lot of things to be done for the people, mentioned as 'Aravaan' by kuzhali. But not by keep on complaining about same old meaningless stupidities of the society.

ஆனால் (in his words) "நாங்கள் சீட்டாட்டத்தில் விட்டதை பிடிக்காமல் எழ மாட்டோம்" என்று உட்கார்ந்திருக்கும் குழலி போன்ற ஆட்களை என்ன செய்வது?

said...

அனானிமஸ்களா.. நீங்கள் சொல்வது ஒருவகையில் உண்மைதான், என் பிராமண நண்பர்களில் சிலரும் அத்தகைய சூழ்நிலையில் இருந்துள்ளனர்... ஆனால் அதுவே எங்கும் நிலமையல்ல.. , நகரங்களில் வேண்டுமானால் சிறிது இருக்கின்றது.. .., இன்னும் கிராமங்களில் இத்தகைய மக்களுக்கு இத்தகைய சலுகைகள் போய்ச்சேரவில்லை....

said...

அரவான்,அபிமன்யு என்று மகாபாரதக் கதா பாத்திரங்களை சமகாலத்திற்கு பொருத்திப் பார்ப்பது எந்த அளவிற்கு சரியாக வரும். பாண்டவர்கள போருக்கும் முன்னும்,போரின் போது சில தந்திரங்களைச் செய்துதான் வென்றார்கள்.பல பாத்திரங்கள், கண்ணன் உட்ப்ட தங்களுக்குத்
தேவை ஏற்படும் போதெல்லாம் தந்திரோபாயங்கள் செய்யவோ, தர்மத்தினை மீறவோ தயங்கவில்லை. இதெல்லாம் பிரதிகளிலேயே தெளிவாக இருக்கிறது. இன்றைய சூழ்நிலை அதை விட குழப்பமானது. எனவே கண்ணனையோ, அர்ஜுனனையோ விமர்சிப்பதன் மூலம் என்னதான் சொல்ல வருகிறீர்கள்.

அரசியல் தலைவர்கள் இன்று செய்யாததையா அன்று கண்ணனும், பாண்டவர்களும் செய்துவிட்டார்கள். குஜராத்தில் இனப்படுகொலை நடந்த போது பா.ம.க, மதிமுக, திமுக
கட்சிகள் பதவியை தியாகம் செய்தனவா இல்லை ஆதரவினை விலக்கிக் கொண்டனவா.
இல்லையே. இங்கு அபிமன்யு யார், அரவான் யார் -குழலி இதையும் கொஞ்சம் யோசித்துப்
பாருங்கள்.

said...

If someone is trying to read caste politics in this it will be a joke
because a section of dalits now think that their real enemies are the OBCs and not upper castes.Mayawati is trying to woo the upper castes to beat the OBCs
(read mulayam singh yadava) in
U.P. Chandra Bahan Prasad a dalit intellectual has even advocated dalit-brahmin alliance against OBCs.

said...

பிராமணர்களோடு சேர்ந்து தலித்துகளின் விடுதலை . எவ்வளவு பெரிய மோசடி.

தலித்துகளின் இன்றைய பின் தங்கிய சூழலுக்கு வர்ண அடுக்குமுறைதான் அடிப்படை காரணம் என்பது ரவி போன்ற இந்துதுவ எதிர்ப்பு போராளிகள் அறியாதிருப்பது ஆச்சர்யமாக இருக்க்கிறது. மாயாவதி ஒட்டு மொத்த தலித்துகளின் பிரதிநிதி அல்ல. அரசியல் கணக்குகளுக்காகவும், பதவி அரிப்புகளுக்காகவும் தன் சமூகத்தினை பலிகடாவாக்கவும் இவரைப் போன்ற அரசியல் வியாபரிகளை வைத்துப் பேசுவது அர்த்தமற்றது.

OBC என்ன வானத்தில்இருந்து குதிச்சு வந்திருக்கா ரவி. பார்ப்பணியத்தின் யுக்தியே, தான் போர்க்களத்தில் இறங்காமல் சகோதர்களை களத்தில் மோதவிடுவதுதானே?
அப்புறம் நானா செஞ்சேன்னு வியாக்ணம் பேசுவது?.. நோயின் மூலக்கூறுகளை அறிந்துஅறுத்து எறியாமல் புண்ணுக்கு மட்டும் மருந்து தடவச் சொல்லும் நவீன மருத்துவர்கள் அல்லவா அவர்கள்

அபிமன்யு, அரவாணன் போன்ற பாத்திரங்களை இன்று பொறுத்தி பார்க்கும் விழிப்புணர்வுதான் உங்களைப் போன்ற இந்துதுவ எதிர்ப்பு போராளிகளுக்கு எரிச்சலாய் இருக்கிறது...

அதைத் தவிர்க்க முடியாது. காலம் மாறிப் போச்சு நண்பரே

said...

ரவி அவர்களே!

நீங்கள் முன்வைக்கிற 'கருத்தாக்கத்தை' புதிய விஷயம் போல கருதுதற்கில்லை.

ஏற்கெனவே வட இந்திய தலித்துகளிடம் இத்தகைய கருத்துப்புரட்டுகள் முன்வைக்கப்பட்டு - Kancha Ilaiah போன்ற தலித்திய அறிஞர்களால் கடுமையாக நிராகரிக்கப்பட்டவைதான்.

இம்மாதிரியான 'சிண்டுமுடிதல்கள்' இந்துத்துவவாதிகளுக்கு பயன்படுவதற்கு மட்டுமே 'பிறப்பிக்கப்படுபவை'!

இவைகளை ஒரு அறிவுபூர்வ கருத்தாக்கங்களாக முன்வைக்க நினைப்பவர்கள் தங்களின் நம்பகத்தன்மையை இழந்துவிடுவது தவிர்க்க இயலாமற் போகும் - வைகோ ஜெயலலிதாவிடம் கூட்டு வைப்பது மாதிரி!

பிறகு அதன் மீது கட்டப்படுகிற விவாதங்கள் 'கேலிக்கூத்தாகத்தான்' முடியும்.

said...

Muthukumaran,

Lets agree for discussion that 'Paarpaneeyam' is the base that built 'varnaasramam' and they were behind e'thing. Please clarify the following doubts.

1. Do you believe still brahminism is the reason for todays problems?
(please dont start the same they-who-started-it story). I am talking about todays issues.
2. If 'yes' for 1, do you think the fools who are behind these problems still listen to brahmins? or becoming 'baliyaadu' for brahmin's 'yukthi'?
3. If given a chance to you to solve dalit's modern day issues, What'll be your first priority and who is the reason for that problem, TODAY?

said...

நான் சொன்னது தலித்கள் சிலர் கூறிவருவதையே.இவர்கள் ஏன் பிற்பட்ட ஜாதிகளை தங்களின் முதல் எதிரிகளாகப் பார்க்கிறார்கள் என்பதை யோசியுங்கள். கீரிப்பட்டியில் தலித்களுக்கு எதிராக இருப்பது யார், இங்கு கழகங்கள் எடுத்திருக்கும் நிலைப்பாடு என்ன, கண்டதேவியில் தலித்களுக்கு யாருடன் முரண்பாடு. பிராமணர்களை விமர்சியுங்கள், அதனால் இவை இல்லை என்று ஆகிவிடாது. இடதுசாரிகளையும்,பிரமாணர்களையும் விமர்சிக்கும் தலித்கள் சிலர் தங்களின் பிரதான எதிரிகளாக இந்த ஜாதியினரைப் பார்க்க காரணம் என்ன. உயர் ஜாதி-ஒபிசி-தலித் என்று பார்க்கும்
போது பல இடங்களில் நேரடி மோதல் ஒபிசிக்களுக்கும் தலித்களுக்கும் இடையே இருக்கும் போது இப்படி யோசிப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை.தலித்-பகுஜன் ஒற்றுமை என்பதைக் கூட சந்திர பகன் விமர்சிக்கிறார். இதன் பொருள் ஜாதிய,வர்ண அமைப்பை ஏற்பது என்பதல்ல.மாறாக நடைமுறையில் உள்ள முரண்பாடுகளைப் புரிந்து கொள்வதுதான், அதற்கேற்றபடி செயல்படுவதுதான்.
கண்டதேவியிலும்,கீரிப்பட்டியிலும் பிரச்சினை செய்வது யார்.பிராமணர்களா தலித்களுக்கு எதிராக
பிறரை தூண்டி விடுகிறார்கள்.

said...

இன்னமும் (வலைப்பதிவுகள் உட்பட), தீர்வுகளை பற்றி சிந்திப்பதை விட, பிரச்சினைகளை கிளறுவது மற்றும், 'அர்ஜுனன் - அரவாணன் ஒப்பீடு' போன்ற புரட்சிகர நவீன யுக சிந்தனைகளை பற்றி பேசுவதில் ஏன் அதிக சந்தோஷமடைகிறோம்?

1. முதலில் பழி வாங்குவோம், பிறகு தீர்வுகளை பற்றி சிந்திப்போம்?
2. தீர்வுகளை பற்றி ஆக்கப்பூர்வமாக சிந்திக்க ஆரம்பிதுவிட்டால், திண்ணையில் உட்கார்ந்து வெட்டி நியாயம் பேசும் சுகம் போய்விடும்?
3. தீர்வுகளை பற்றி மட்டுமே பேசிக்கொன்டிருந்தால், 'பார்ப்பனீய எதிர்ப்பு மற்றும் சிந்தனையாளன் ' (அல்லது) 'அறிவுஜீவி' என்ற பட்டம், அபிமன்யு, அரவாணன் போன்ற பாத்திரங்களை இன்று பொருத்தி பார்க்கும் விழிப்புணர்வுள்ள வேறு ஒரு வலைப்பதிவருக்கு போய்விடும்?

said...

ok let us talk about solutions,

அன்புள்ள அனானி,

நல்ல கேள்விகள்...என் சிறு மூளைக்கு தோன்றிய சில கேள்விகள்....

பிராமணீயத்தின் அடிப்படை வர்ணாஸ்ரமம்.அதை பிராமண சமூகம் தூக்கி எறிய தயாரா?

பிராமணீயம் இன்று இல்லை என்றால் காஞ்சி சங்கராச்சாரியாராக ஒரு தலித்தாக பிறந்த ஒருவரை வைக்க பிராமணர்கள் தயாரா?

பிற்படுத்தப்பட்டவர்களின் தீண்டாமை எந்த கோட்பாட்டின்படியும் கிடையாது.அவர்களுக்கு எந்த வேதமும் கிடையாது.ஆகவே அது நடைமுறை பிரச்சினை.மாற்றிவிடலாம்.

ஆனால் மக்கள் பேசும் மொழியை நீச்ச பாஷை என்பதும் கோவிலுக்குள் யார் யாரை விடவேண்டும் என்பதும் யாருடைய வேதத்தில் உள்ளது? பிற்படுத்தப்பட்டோரின் வேதத்திலா?

said...

vyasa Bharathathil intha kathai irupathaga theriya villai. Cho vin Mahabharatham pesugirathu vysarai mattum atipadaiyaga kondu ezhutha pattathu. Agaiyal ithu bharthathin original story enbathaga eduthu kolla mudiyathu. Thir. Cho avargal periya scholar, avarai en sambantham illamal inge thootra vendum? Avar arasiyal nilaipadugalil ungaluku matru karuthu irukalam, avar mahabharathathai mozhi peyarthu ezhuthi irukirar, athil avarudaiya idai serugal ethuvum illai endre ninaikiren.

said...

Thoroughly stupid analysis out of context and sync... My condolences to this group

said...

நன்றி குழலி !.

அரவாண் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள முடிந்தது

அரவாண் மிகசிறந்தவனே !. அபிமன்யுவும் சிறந்தவன் தான்.

கருவிலே பத்மவியூகம்கேட்டு அறிந்தவன். அன்றைய போரில்

அர்ஜுணன் சம்சப்தர்களுடன் போர்புரிய சென்றுவிட்டான் என்று

அறிந்த துரோணர் அர்ஜுனனால் மட்டுமே பத்மவியூகம் உடைக்கமுடியும்

என்பதாலே இந்த வியூகம் வகுத்தார். பாண்டவர்களில் அர்ஜுனன் தவிர

பத்மவியூகம் தெரிந்தவன் அபிமன்யு மட்டுமே. அவனுக்கு திரும்பி வர

தெரியாது தான். அனால் அவன் மரணம் வஞ்சிக்கப்பட்ட மரணமே.

ஒரு வீரனுடன் ஒருவன் மட்டுமே போர் புரியவேண்டும் என்பது விதி.

விதி மீறி நடந்த சதியால் நடந்த மரணமே அபிமன்யுவிற்கு நடந்தது. இதை

மறுக்கவும் முடியாது

said...

Most people misunderstand Mahabharatam without reading the Original version. CHO's Mahabharatam pesukirathu is 99% taken from Original text after consultation with many Learned Scholars .Kuzhali seems to a political writer and had read something not written in the Original.for that why Accuse CHO?

said...

The story posted here are nowhere concerned with brahmins, if you observer, Chitrangi is Pandya princess who marries Arjunan,since he is banished for 10 years while draupathi is in private with Dharma as a agreement. Krishna is a yadava king so all are not of brahmin caste, but are of warriors and kings and queens. Both Pandavaas and Gauravas are royal caste kings and not brahmins, change your stanza of blindly pouncing on the brahmins please!