உடன்பிறப்புகளுக்கு வெட்கமில்லை

ஒரு கருத்து திணிப்பு அதை தொடர்ந்து ஒரு கலவரம், சன் தொலைக்காட்சி மற்றும் தினகரன் அலுவலகம் மதுரையில் கொளுத்தப்படுகின்றது உள்ளே உயிரை விடுகின்றனர் மூவர்.... கருத்தை திணித்தது மச்சான் பொங்கியெழுந்தது மாமன், ஆனால் செத்ததோ மாச சம்பளம் வாங்கும் அப்பாவிகள்.... அதன் தொடர்ச்சியாக வலைப்பதிவுகளில் விவாதம், இதற்காகவே காத்திருந்தது மாதிரியான இட்லிவடைகளும் சட்னி சாம்பார்களும், முகமூடிகளும் கெட்ட ஆட்டம் போட்டன, இவர்கள் எதற்காக இந்த ஆட்டம் என்பது தெரிந்ததுவே, மூன்றுக்கு பதில் முப்பதாக இருந்திருந்தால் இன்னும் கூட சந்தோசம் பொங்கியிருந்தாலும் பொங்கியிருக்கும், இதையும் எதிர்பார்த்தே இருந்ததால் பெரிதாக பாதிக்கவில்லை, ஆனால் அதன் பிறகு வெளிவந்த சில பதிவுகள் புரட்டி போட்டன.


யோக்கியவான் எடுக்கட்டும் முதல் கல்லை என்றார் வரவனையன், அதிலே அழகிரியின் அணுக்கம் எளிமை இன்ன பிற விசயங்களை புளங்காகிதப்பட்டு கூறியிருக்கிறார், சரி இருக்கட்டுமே, அதற்காக மூன்று பேரை உயிரோடு கொளுத்த யார் கொடுத்தது அதிகாரம்?

"எந்த பதவியும் வேண்டாமென்று இருக்கும் ஒரு நபரை, களத்திலேயே இல்லாத ஒரு நபரை தோற்றுபோனதாய் அறிவிப்பது போக்கிலித்தனமின்றி வேறென்ன." சரி தான் போக்கிரித்தனம் தான், ஒரு கட்சி பதவியில் கூட இல்லாத, ஒரு கார்ப்பரேசன் கவுன்ஜிலராக கூட இல்லாத "அஞ்சா நெஞ்சன்" அழகிரியின் பெயர் கருத்து கணிப்பில் வந்துள்ளது இது நியாயமா? இது நீதியா? எல்லாம் சரிதான் பிறகேன் இந்த அஞ்சா நெஞ்சனின் வீட்டு முற்றத்தில் கிடக்கின்றது தென்மாவட்ட திமுக?

அழகிரியின் அல்லக்கை அட்டாக் பாண்டி சுமோவில் 18 பேரை ஏற்றிக்கொண்டு மதுரை தினகரன் அலுவலகம் போனதற்கு பதிலாக நேராக வண்டியை அறிவாலயத்துக்கு ஓட்டி தயாநிதி மாறனையோ கலாநிதிமாறனையோ ரெண்டு போடு போட்டிருந்தால் "அஞ்சா நெஞ்சன்" அழகிரி தாம்லே ஒத்துக்கறோம், அட அந்த கலாநிதி மாறன் மதுரை கோட்டைக்கே தான் ப்ளைட்டு புடிச்சி வந்தாரே அப்போ என்ன கிழித்தார்கள்? அதைவிட்டுவிட்டு அப்பாவிகள் 3 பேருக்கு மோட்சம் தந்தது எந்தவிதத்தில் நியாயம், ஊடகங்கள் தங்கள் பேனா முனையால் வன்முறை செய்யும்போது அதை உருட்டை கட்டையால் வேணுமானாலும் எதிர்கொள், பெட்ரோல் பாமினால் வேணுமானாலும் எதிர்கொள் ஆனால் கொளுத்தும் முன் அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு கொளுத்து....

பொதுவாக அழகிரி ஆதரவு பதிவுகள், சிலர் இட்ட பின்னூட்டங்கள் சொல்ல விழைந்தது இதன் பின்னால் பார்ப்பனியம் இருக்கிறது, மாறன்களின் பதவி ஆசை இருக்கிறது, குட்டையை குழப்புகிறார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டதே தவிர (இந்த காரணங்களையெல்லாம் நான் மறுக்கவில்லை என்ற போதும்) அழகிரியின் ரவுடித்தனம் மூன்று அப்பாவிகள் கொல்லப்பட்டது குறித்து மூச்சு விடவில்லை, ஏன் இதை எழுதினால் ஆட்டோ வந்துவிடுமா? அல்லது திமுக மாவட்டசெயலாளர் பதவி பறிபோய்விடுமா? இந்த 3 அப்பாவிகள் கொல்லப்பட்டதில் எந்த விதமான சலனமும் இல்லையா? அப்படி சலனம் இருந்தால் அதை காட்டாமல் எழுதுவது மனசாட்சிக்கு விரோதமானதாகாதா?

ஜெயலலிதாவிற்காக பஸ்ஸை கொளுத்தியதில் அடிமட்ட தொண்டனையோ அல்லது ஜெயலலிதாவிற்காக காதறுத்துக்கொண்டவனையோ கேட்டுப்பாருங்கள் சொல்வான், அந்த நாசமா போன கருணாநிதி அம்மா மேல வேணுமின்னே கேசை போட்டு ஜட்ஜ்ங்களை மெரட்டி தண்டனை வாங்கி கொடுத்துட்டான் என்று சாபம் விடுவார்கள், அந்த மாதிரியான தொண்டனுக்கும் இவர்களுக்கும் வித்தியாசமில்லையா?

ஒரு இயக்கத்தின் கோட்பாடுகளில் நம்பிக்கை இருக்கிறது, ஒரு இயக்கத்தின் தலைவனை பிடித்திருக்கிறது என்பதற்காக அந்த இயக்கத்தின் எல்லா இழி செயல்களுக்கும் முட்டு கொடுக்க வேண்டுமென்ற அவசியமெதுவுமில்லையே..... இந்த ஒரு காரணத்திற்காகவே அந்த இயக்கத்தின் மீதான பிடிப்பையோ, அதன் செயல்பாடுகளுக்கு எதிராகவோ செல்ல வேண்டுமென்றில்லைதான்.

விஜய் டிவியின் நீயா? நானா? என்றொரு நிகழ்ச்சியின் விளம்பரத்தில் சொல்லப்படுவது "உங்களின் கருத்துகள் உங்களுக்கு சரியானதாகவே இருக்கலாம், அது குடும்பத்திற்கெதிராக இருக்கலாம், சமுதாயத்திற்கு எதிராக கூட இருக்கலாம், ஏன் நாட்டிற்கே கூட எதிராக இருக்கலாம் ஆனால் மனித நேயத்திற்கு எதிராக இருக்கக்கூடாது" இதையே தான் நான் வலியுறுத்த விரும்புவதும்

38 பின்னூட்டங்கள்:

said...

குழலி

"உங்களின் கருத்துகள் உங்களுக்கு சரியானதாகவே இருக்கலாம், அது குடும்பத்திற்கெதிராக இருக்கலாம், சமுதாயத்திற்கு எதிராக கூட இருக்கலாம், ஏன் நாட்டிற்கே கூட எதிராக இருக்கலாம் ஆனால் மனித நேயத்திற்கு எதிராக இருக்கக்கூடாது"
இதையே தான் நான் வலியுறுத்த விரும்புவதும்

GOOD ONE

said...

//அதன் தொடர்ச்சியாக வலைப்பதிவுகளில் விவாதம், இதற்காகவே காத்திருந்தது மாதிரியான இட்லிவடைகளும் சட்னி சாம்பார்களும், முகமூடிகளும் கெட்ட ஆட்டம் போட்டன, //

நான் வாசித்த வரையில் இவர்களின் சந்தோஷக் கூச்சல் ஜெய டீவியை விட ஆபாசமானதாக அசிங்கமாநதாக இருந்தது. ஒருவேளை திமுக காரனுக்கு ஏதாவது ஒரு வகையில் கோபம் இருக்கக் கூடும். மூன்று உயிர்களை முன்வைத்து இவர்கள் எழுத்தில் காட்டிய ஆபாசம் நிறைந்த வன்முறை மூன்று உயிர்களை கொன்றதை விட மோசமானது.

said...

//ஒரு இயக்கத்தின் கோட்பாடுகளில் நம்பிக்கை இருக்கிறது, ஒரு இயக்கத்தின் தலைவனை பிடித்திருக்கிறது என்பதற்காக அந்த இயக்கத்தின் எல்லா இழி செயல்களுக்கும் முட்டு கொடுக்க வேண்டுமென்ற அவசியமெதுவுமில்லையே.....//
சபாஷ் குழலி என்னோட கருத்தும் இதுவே. இதுல என்ன காமெடின்னா நீங்க ஏண்டா இதை செய்திங்க அப்படின்னு கேட்டா அவங்க செய்யலையா? அவங்க செஞ்சதினால் தானேடா உங்களை பதவியை ஒக்கார வெச்சோம். கொஞ்சம் அசிங்கமா கேட்கணும் அப்படின்னா அவங்க எதை தின்னாலும் நீங்களும் திம்பிங்களாடா? சில பதிவர்கள் அடிச்ச ஜல்லியை தலைவரு படிச்சி இருந்தா கண்டிப்பா அவருக்கு வாரிசு இல்லாத ஏதாவது ஒரு மாவட்டத்துக்கு தலைவனாக மாற்றி இருப்பாரு.

said...

நீங்கள் சொல்லியிருக்கும் கருத்தோடு நானும் ஒத்துப் போகிறேன். இதை நானும் பதிவுகளில் சொன்னேன். சிபிஐ விசாரணை நடக்கப் போகிறதே என்றுதான் பதில் கிடைத்தது. அப்பாடி நீதி பிழைத்து விட்டதுன்னு என்னை நானே அமைதிபடுத்திக் கொள்ளவேண்டியதாயிற்று.

said...

வழக்கமாக உங்கள் இடுகைகளுக்கு வரவேண்டிய பின்னூட்டங்கள் (ஒட்டியும், வெட்டியும்) இங்கு இன்னமும் வராதது குறித்து ஆச்சரியமாக இருக்கிறது. அதனால் என்னுடைய இந்தப் பின்னூட்டக் கயமை.

பதிவுடன் ஒத்துப் போகிறேண். சரியாகக் கேட்டிருக்கிறீர்கள்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

said...

குழலி அய்யா,

மரம்வெட்டி கும்பல் தார்மீக கோபம் கொள்வது நல்ல வேடிக்கை.இதை விட கேவலமான வேடிக்கை ,நம்ம கம்யூனிஸ்ட் உடன் பிறப்புகளுக்கு ஜல்லி அடிப்பது.ஜெயா டீவி ஆபசமாம்.இருந்துட்டு போகட்டுமே.அதுவா பிரச்சனை.
இந்த கம்யூனிஸ்ட் கும்பல் ஜன்னி கண்டு ஜல்லி அடிக்குதே,அதைவிட ஆபாசம் உலகத்தில் உண்டா?தெரிந்தவர்கள் சொல்லலாம்.

said...

நண்பர் குழலி,

நன்றாக சாட்டையை சுழற்றி இருக்கிறீர்கள். கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்கக் கூடாது என ஜல்லி அடிப்பவர்கள் ... மூடி மறைப்பவர்கள் பிறர் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்க எந்த அறுகதையும் இல்லை என்பது எல்லா தரப்பினருமே புரிந்து கொள்ளவேண்டும்.

கருணாநிதி அனுதாபியாக இருந்தாலும் துணிச்சலாக எழுதியிருப்பதை பாராட்டுகிறேன். இதே போன்று பாமக விசயத்திலும் நடந்து கொள்ள வேண்டும் என்பது அனைவரின் சார்பாக என் எதிர்பார்ப்பு.

said...

குழலி,
இந்த பதிவின் உட்கருத்தோடு நான் உடன் படுகிறேன் .ஆனால் நீங்கள் சொல்வது போல அழகிரியின் அராஜகத்தை நியாயப்படுத்தியோ ,அநியாயமாக பறிக்கப்பட்ட மூன்று உயிர்களின் படுகொலைகளை எவ்வகையிலும் சப்பைகட்டு கட்டியோ எத்தனை பதிவுகள் ,பின்னூடங்கள் வந்தன என தெரியவில்லை .நான் கவனித்த வரையில் நடந்த அராஜகத்துக்காக உடன்பிறப்புகள் வெட்கப்பட்டதாகத் தான் தெரிகிறது . ஒரு வேளை என்னுடைய கணிப்பு தவறாக இருந்தால் அது மிகவும் வருந்தத்தக்கது.

அதே நேரத்தில் நேற்றுவரை சேறு பூசப்பட்ட தயாநிதி மாறன் ,ஒரே நாளில் புனிதப்பசு (நன்றி உங்களுக்கு) ஆனது ,அதற்கான காரணங்கள் இவை பற்றியெல்லாம் நீங்கள் கணக்கிலெடுத்துக் கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன்.

said...

அய்யா.

எவனும் நாலு பேரை கொளுத்து என்று சொல்லி அனுப்பியிருக்க மாட்டான்.ஜெயலலிதா கூட முணு புள்ளைகளை கொளுத்து என்று சொல்லியிருக்க மாட்டா.அட்டாக் பாண்டி போன்ற அல்லக்கைகளுக்கு எங்க போச்சு அறிவு?மாறன்கள் செய்தது மட்டமான காரியம் என்பதை ஒத்துகொள்கிறீரா?

said...

குழலி, \

உங்கள் இந்த பதிவின் கருத்தோடு நான் ஒத்துப்போகிறேன்..!!!!

///."உங்களின் கருத்துகள் உங்களுக்கு சரியானதாகவே இருக்கலாம், அது குடும்பத்திற்கெதிராக இருக்கலாம், சமுதாயத்திற்கு எதிராக கூட இருக்கலாம், ஏன் நாட்டிற்கே கூட எதிராக இருக்கலாம் ஆனால் மனித நேயத்திற்கு எதிராக இருக்கக்கூடாது" //

சரியான ஷாட் !!!!

said...

//ஒரு இயக்கத்தின் கோட்பாடுகளில் நம்பிக்கை இருக்கிறது, ஒரு இயக்கத்தின் தலைவனை பிடித்திருக்கிறது என்பதற்காக அந்த இயக்கத்தின் எல்லா இழி செயல்களுக்கும் முட்டு கொடுக்க வேண்டுமென்ற அவசியமெதுவுமில்லையே..... இந்த ஒரு காரணத்திற்காகவே அந்த இயக்கத்தின் மீதான பிடிப்பையோ, அதன் செயல்பாடுகளுக்கு எதிராகவோ செல்ல வேண்டுமென்றில்லைதான்.//

exactly....well said kuzhali...என் மனதில் உள்ளதை சரியான வார்த்தைகளில் பார்க்கிறேன்.

said...

எல்லோர் மனதிலும் இருக்கும் ஆதங்கமும் வருத்தமும் உங்கள் வார்த்தைகளில் வெளிப்பட்டு இருக்கிறது. அப்பாவி உயிர்களை காவு வாங்கும் கேவலமான வன்முறைக்கு ஒரு முடிவு நிச்சயம் வேண்டும். நன்றி குழலி!
-விபின்

said...

//ஒரு இயக்கத்தின் கோட்பாடுகளில் நம்பிக்கை இருக்கிறது, ஒரு இயக்கத்தின் தலைவனை பிடித்திருக்கிறது என்பதற்காக அந்த இயக்கத்தின் எல்லா இழி செயல்களுக்கும் முட்டு கொடுக்க வேண்டுமென்ற அவசியமெதுவுமில்லையே..... இந்த ஒரு காரணத்திற்காகவே அந்த இயக்கத்தின் மீதான பிடிப்பையோ, அதன் செயல்பாடுகளுக்கு எதிராகவோ செல்ல வேண்டுமென்றில்லைதான்.//

இதை மட்டும் நாம் அனைவரும் சரியாகப் புரிந்துக்கொள்வோமெனில் நம்நாட்டில் அரசியல் அறம் காப்பாற்றப்படும். மனித உயிர்களும்.

//உங்களின் கருத்துகள் உங்களுக்கு சரியானதாகவே இருக்கலாம், அது குடும்பத்திற்கெதிராக இருக்கலாம், சமுதாயத்திற்கு எதிராக கூட இருக்கலாம், ஏன் நாட்டிற்கே கூட எதிராக இருக்கலாம் ஆனால் மனித நேயத்திற்கு எதிராக இருக்கக்கூடாது"//

விருப்பு வெறுப்பின்றி எல்லோரும் செயற்படுத்தவேண்டிய கருத்து.

said...

//."உங்களின் கருத்துகள் உங்களுக்கு சரியானதாகவே இருக்கலாம், அது குடும்பத்திற்கெதிராக இருக்கலாம், சமுதாயத்திற்கு எதிராக கூட இருக்கலாம், ஏன் நாட்டிற்கே கூட எதிராக இருக்கலாம் ஆனால் மனித நேயத்திற்கு எதிராக இருக்கக்கூடாது" //

வழிமொழிகிறேன்!

பதிவின் கருத்துக்களுடன் நானும் ஒத்துப்போகிறேன்!

said...

சிறப்பான பதிவு, குழலி.

//."உங்களின் கருத்துகள் உங்களுக்கு சரியானதாகவே இருக்கலாம், அது குடும்பத்திற்கெதிராக இருக்கலாம், சமுதாயத்திற்கு எதிராக கூட இருக்கலாம், ஏன் நாட்டிற்கே கூட எதிராக இருக்கலாம் ஆனால் மனித நேயத்திற்கு எதிராக இருக்கக்கூடாது" //

இது தான் சாராம்சம், எதுக்கும் !!!

said...

மதுரை கலவரம் தொடர்பான் ஒரு நல்ல பதிவைப் படித்த திருப்தி மனதில்.

சாட்டையடியான பல கேள்விகளாஇக் கேட்டுள்ளீர்கள்.

//ஜெயலலிதாவிற்காக பஸ்ஸை கொளுத்தியதில் அடிமட்ட தொண்டனையோ அல்லது ஜெயலலிதாவிற்காக காதறுத்துக்கொண்டவனையோ கேட்டுப்பாருங்கள் சொல்வான், அந்த நாசமா போன கருணாநிதி அம்மா மேல வேணுமின்னே கேசை போட்டு ஜட்ஜ்ங்களை மெரட்டி தண்டனை வாங்கி கொடுத்துட்டான் என்று சாபம் விடுவார்கள், அந்த மாதிரியான தொண்டனுக்கும் இவர்களுக்கும் வித்தியாசமில்லையா//

சம்பவம் நடந்த அடுத்த நாளன்று எங்கள் ஊர் தி.மு.க காரர் ஒருவர் சொன்னது இது "இது எல்லாம் கம்மிங்க.அவனை (கலாநிதியை) மதுரையை தாண்டவே விட்டிருக்கவே கூடாதுங்க. திருட்டுப் பய எப்படியோ தப்பிச்சுட்டான்".

இது தொடர்பாக நக்கீரனில் வெளியிடப்பட்ட போட்டோவைப் பார்த்தீர்களா? இதற்கப்புறமும் எப்படித்தான் வெட்கமில்லாமல் பேசுகிறார்களோ....

முதுமையின் காரணமாகவோ, தமிழ் புலமையாலோ கலைஞர மீது ஒரு மரியாதை இருந்தது. எல்லாம் போச்சு.

தர்மபுரி, மதுரை அடுத்து.......?

"பேய்கள் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள்"

said...

குழலி,
'உடன்பிறப்புகளுக்கு வெட்கமில்லை' என்று நீங்கள் பொதுமைப் படுத்தி சொன்னது தவறு .யாரோ ஒருவர் சொல்லியிருந்தால் அதை மட்டும் குறிப்பிட்டு சொல்லியிருக்கலாம் . இங்கு வந்திருக்கும் பின்னூட்டங்கள் ஏதோ கலைஞர் அபிமான பதிவர்கள் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு அராஜகத்துக்கு ஆதரவு அளித்தது போலவும் ,நீங்கள் உட்பட மற்றவர்கள் அனைவரும் புனித பிம்பங்கள் (மீண்டும் நன்றி) போலவும் இருக்கிறது ..நல்ல தமாஷ்!

said...

எதையும் ஊதி பெரிதாக்கும் சன் டி.வி.யும், அந்த குழுமத்தின் ஏனைய ஊடகங்களும், மூவர் பலியானதை ஆரம்ப நாட்களில் திரும்ப, திரும்ப வெளியிட்டார்கள். ஆனால், தயாநிதிமாறனின் பதவிக்கு ஆப்பு விழுந்தவுடன் மூவரின் சாவை வசதியாக மறந்துவிட்டு, தயாநிதியின் திறமையான நிர்வாகத்திறன்பற்றி அடுக்கத் தொடங்கிவிட்டனர். அதேபோல அழகிரியை மதுரையின் ஆகப்பெரிய ரவுடி என வார்த்தைக்கு வார்த்தை வர்ணித்த சன் டி.வி., அடுத்த சில நாட்களில் அந்த வார்த்தைகளை மறந்துபோயின.

சன் குழுமம் மட்டுமின்றி அனைத்து ஊடகங்களுமே, கலைஞர்-மாறன் குடும்ப அரசியலின் பரபரப்புப் பக்கங்களை மட்டுமே பக்கம், பக்கமாக வெளியிடுகின்றவேயன்றி, மரித்துபோனவர்களின் சோகத்தை சீண்டுவதில்லை. கண்ணீரும், கதறுலுமாக இழவு வீட்டின் ஒப்பாரி சத்தத்தை ரொம்ப நாட்களுக்கு மக்கள் ரசிக்கமாட்டார்கள் என்று ஊடகங்கள் கணக்கிட்டிருக்கலாம். அழகியின் அட்டகாசங்களைப் பற்றி விரிவாக அலசி ஒரு கட்டுரைக் கூட நான் காணவில்லை.

ஒரு விவகாரம் தொடர்பாக மக்கள் எதை தெரிந்து கொள்ளவேண்டும், எதை தெரிந்துகொள்ளக் கூடாது என்பதை ஊடகங்கள் முன் முடிவு செய்துவிடுகின்றன. அந்த வகையில் அழகிரியின் ரவுடித்தனங்கள் ஊடகங்களால் ஒதுக்கப்படும் அதே அளவுக்கு மூவரின் மரணமும், அந்த குடும்பங்களின் துயர் மிகுந்த வேதனைக் குரல்களும் புறக்கணிக்கப்படுகிறது. இவற்றைப்பற்றி பேசாமல் கள்ள மௌனம் சாதிப்பதும், வெளிச்சம் படும் ஒரு பக்கத்தைப்பற்றி மட்டும் பேசுவதும் அநாகரீகமானது.

said...

இவ்விஷயத்தில் இட்லி வடைகள் குதூகலிப்பதும், வரவனையன்கள் சப்பைக்கட்டுகள் கட்டுவதற்கும் எந்த வித்தியாசமுமில்லை. வரவனையனின் குப்பையை 'பூங்கா'வில் தான் படித்தேன். 'பூங்கா' அதை எப்படி தேர்ந்தெடுத்தது என்று புரியவில்லை.

இதுவரை உடன்பிறப்புகள் தயாநிதி மாறனின் அதிகார கொட்டத்தை தலைவருக்கு பயந்து சகித்துக்கொண்டு, இப்போது தூக்கியெறிந்தால் குதுகலிக்கிறார்கள். அதே பயத்தால் அராஜாகத்தை நிகழ்த்திய அழகிரியின் மீது நடவடிக்கை எடுக்கக் கோருவதற்கு ஒரு திமுக காரனுக்குக் கூட துணிவில்லை. இந்த லட்சணத்தில் "திமுக ஒரு ஜனநாயகக் கட்சி" என்று கலைஞர் அறிக்கை விடுகிறார். அவருக்குப் பிறகு வாரிசு யார் என்றெல்லாம் கேட்கவேண்டியதில்லை. வாரிசுகள் கட்சியை கூறுபோட்டுக் கொள்வார்கள். அதுவும் ஒரு வகையில் நன்மைக்கே. அழிவிலிருந்து வேறொரு அற்புதம் பிறக்கும் வாய்ப்புண்டு.

said...

பதிவின் கருத்துக்களுடன் நானும் ஒத்துப்போகிறேன்!

nalla pathivu!!!

said...

//enRenRum-anbudan.BALA said...
சிறப்பான பதிவு, குழலி.
//
இதற்கு முன் 250க்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதியிருக்கின்றேன், என்றாலும் இந்த பதிவு உங்களால் சிறப்பான பதிவு என்று சொல்லப்பட்டது என்றால் புரிந்து கொள்ள முடிகிறது :-)

//இதே போன்று பாமக விசயத்திலும் நடந்து கொள்ள வேண்டும் என்பது அனைவரின் சார்பாக என் எதிர்பார்ப்பு.//
கண்டிப்பாக, பாமகவின் எல்லா செயல்களுக்கும் முட்டு கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, நேரம் மட்டுமே, நேரமும் வாய்ப்பும் கிடைத்தால் என்ன நினைக்கிறேனோ அதை எழுதுவேன்... அவ்வளவே....

said...

///ஊடகங்கள் தங்கள் பேனா முனையால் வன்முறை
செய்யும்போது அதை உருட்டை கட்டையால் வேணுமானாலும்
எதிர்கொள், பெட்ரோல் பாமினால் வேணுமானாலும் எதிர்கொள்
ஆனால் கொளுத்தும் முன் அப்பாவிகளை வெளியேற்றிவிட்டு கொளுத்து..//

இது என்ன உள்குத்து!
எதையாவது கொளுத்தாமல் எதிர்ப்பை காட்ட முடியாதா?
-aathirai

said...

'உடன்பிறப்புகள் வெட்கப்படுகிறார்கள், வேதனைப்படுகிறார்கள்' என்பதை ஒரு பேச்சுக்கு ஒத்துக்கொண்டாலும், அந்த வெட்கத்தையும், வேதனையையும் கொஞ்சமாவது பொதுக்குழுவில், மன்னிக்கவும், செயற்குழுவில் வெளிப்படுத்தியிருக்கலாமே என்று நான் ஆதங்கப்பட்டேன். என்னைப்போல் பலரிருக்கலாம்.
-வாசகன்
(Bளாக்கர் ஆப்சன் வேலை செய்யாததால் அதர் ஆப்ஷனில்)

said...

// அழகிரியின் ரவுடித்தனம் மூன்று அப்பாவிகள் கொல்லப்பட்டது குறித்து மூச்சு விடவில்லை

200% இந்த பதிவின் கருத்துகளோடு ஒத்துபோகிறேன். ஊடகங்கள் கூட இந்த விஷயத்தை அம்போவென விட்டுவிட்டது கலைஞரின் சாதூர்யத்துக்கு (!!!) கிடைத்த வெற்றிதான்

said...

//மு. சுந்தரமூர்த்தி சைட்...
இவ்விஷயத்தில் இட்லி வடைகள் குதூகலிப்பதும், வரவனையன்கள் சப்பைக்கட்டுகள் கட்டுவதற்கும் எந்த வித்தியாசமுமில்லை. வரவனையனின் குப்பையை 'பூங்கா'வில் தான் படித்தேன். 'பூங்கா' அதை எப்படி தேர்ந்தெடுத்தது என்று புரியவில்லை.

இதுவரை உடன்பிறப்புகள் தயாநிதி மாறனின் அதிகார கொட்டத்தை தலைவருக்கு பயந்து சகித்துக்கொண்டு, இப்போது தூக்கியெறிந்தால் குதுகலிக்கிறார்கள். அதே பயத்தால் அராஜாகத்தை நிகழ்த்திய அழகிரியின் மீது நடவடிக்கை எடுக்கக் கோருவதற்கு ஒரு திமுக காரனுக்குக் கூட துணிவில்லை. இந்த லட்சணத்தில் "திமுக ஒரு ஜனநாயகக் கட்சி" என்று கலைஞர் அறிக்கை விடுகிறார். அவருக்குப் பிறகு வாரிசு யார் என்றெல்லாம் கேட்கவேண்டியதில்லை. வாரிசுகள் கட்சியை கூறுபோட்டுக் கொள்வார்கள். அதுவும் ஒரு வகையில் நன்மைக்கே. அழிவிலிருந்து வேறொரு அற்புதம் பிறக்கும் வாய்ப்புண்டு.//


சுந்தரமூர்த்தி அண்ணாச்சி, எதோ த்யாநிதி மாறன் எங்கவீட்டுபிள்ளை நம்பியார் ரேஞ்சுக்கு காலையில் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் நாலு உடன்பிறப்புகளை கூப்பிட்டு சடார் சடார்ன்னு நாலு வெளு வெளுத்துகிட்டு இருந்தமாதிரியும் அதில உடன் பிறப்புகள் இந்த நரகத்திலிருந்து எப்போ விடுதலை கிடைக்கும்னு இருந்தது போலவும் அவரை நீக்கவும் அப்படியே தமிழ்நாடு முழுக்க பட்டாசு வெடிச்சு நரகாசுரன் ஒழிந்தான்னு கொண்டாடிகிட்டு இருக்கிறது போலவும் சொல்லுகிறீகள். அப்படியெல்லாம் இல்லை என்பதே உண்மை.

போதுவாக திமுகவில் ஏற்பட்ட பிரச்சினையும், தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் நடந்த வன்முறையில் முன்று அப்பாவிகள் கொல்லப்பட்டதையும் நான் நியாயப்படுத்தி பேசியது போல் திரிபுவாதிகளால் திரிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை.

அழகிரியை ஒரு "நடுநிலைவாதியின் " வேடமிட்டு பார்க்காமல் திமுக காரனாக பார்த்தின் விளைவே அப்பதிவில் உள்ள அழகிரி பற்றிய வரிகள். அதிலும் அந்த அநியாயக்கொலைகளுக்கு நான் வக்காலத்து வாங்கி பேசியது போல குறிப்பிடுவது ஒரு "மலின அரசியல்" உத்திகளின்றி வேறொன்றுமில்லை.

அக்கொலைகள் குறித்து மத்திய குற்ற புலனானய்வுத்துறை விசாரனையை அரசு அறிவித்திருக்கும் பட்சத்தில் வேறு என்னதான் செய்யவேண்டும் என்கிறார்கள் இந்த திடீர் " நடுநிலைவாதிகள்" . அழகிரியை அவர்களின் கண்களுக்கு முன் தூக்கில் போட வேண்டுமா? அப்படியாயின் மகிழ்ச்சியே அதற்கு முன் ஒரு பெரிய பட்டியல் உண்டு அதை முடித்து அழகிரியிடம் வருவோம்.


இந்துமதத்தை விமர்சிக்க வேண்டுமாயின் இந்துவாக இருப்பது அதிமுக்கியம், அது போலவே பிற மதங்களையும். அது போல் திமுகவில் ஜனநாயகம் இல்லை என்பது திமுக உறுப்பினன் மட்டுமே சொல்ல அதிகாரம் உண்டு. அந்த கட்சியில் ஜனநாயகமா இல்லை சர்வாதிகாரமா என்பது ஒரு திமுக காரனின் கவலை, வழக்கமாய் துக்ளக் தினமலர் வகையறாதான் இம்மாதிரி அசட்டு முனுமுணுப்புகளை செய்தியாய் வெளியிடும். அது போல் அழகிரி நடத்திய அராஜகத்தை ( ?? !!!! ) எதிர்க்க திமுக காரனுக்கு துணிவில்லை என்பது ஒரு அபத்தவாதம் அது பற்றி துணிவுள்ள திமுக காரன் அதன் பொதுக்குழுவில் பேசுவான் தேவையிருப்பின்.

எல்லாருக்கும் இப்போதைய தேவை ஒரு "உடனடி" நடுநிலை முகமூடி அவ்வளவே


அன்புடன் இந்த வார "கைப்புள்ள"
வரவனையான்

said...

//அக்கொலைகள் குறித்து மத்திய குற்ற புலனானய்வுத்துறை விசாரனையை அரசு அறிவித்திருக்கும் பட்சத்தில் வேறு என்னதான் செய்யவேண்டும் என்கிறார்கள் இந்த திடீர் " நடுநிலைவாதிகள்" . அழகிரியை அவர்களின் கண்களுக்கு முன் தூக்கில் போட வேண்டுமா? அப்படியாயின் மகிழ்ச்சியே அதற்கு முன் ஒரு பெரிய பட்டியல் உண்டு அதை முடித்து அழகிரியிடம் வருவோம். //

அட நீங்க வேற வரவனையான், சில உடன்பிறப்புகள் இந்த சிபிஐ விசாரனை விசயத்தை சொன்னதிலிருந்தே ஒரே ரோசனையா இருக்கேன், இதுவரை ஒரு கொலைக்குற்றம் கூட நீதிமன்றங்களில் நிரூபிக்கப்படாத "அப்பாவி" சந்தனகடத்தல் வீரப்பனை அநியாயமா சுட்டு கொண்ணுப்புட்டாங்களோ, இது வரை சங்கரராமன் கொலை குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் ரொம்பத்தான் ஓவரா சகத்குரு சங்கராச்சாரியை அநியாயத்துக்கு விமர்சனம் செய்துட்டோமோன்னு வருத்தத்தில் இருக்கிறேன்.... இதே மாதிரி யாரோ சில அதிமுக காரர்கள் செய்த தர்மபுரி பஸ் எரிப்புக்கு ஜெயலலிதாவை திட்டுவது தப்போன்னு வேற இப்போ குழப்பத்தில் இருக்கேன்....

said...

//இதுவரை ஒரு கொலைக்குற்றம் கூட நீதிமன்றங்களில் நிரூபிக்கப்படாத "அப்பாவி" சந்தனகடத்தல் வீரப்பனை அநியாயமா சுட்டு கொண்ணுப்புட்டாங்களோ, //

ஆமா அண்ணாத்தே. தேவையில்லாம பங்க் கொமார கூட போட்டுத் தள்ளிட்டானுங்கோ :-)

சே! ஏன்னே தெரியலை... எப்போ பாத்தாலும் "யோக்கியவான் எடுக்கட்டும் முதல் கல்லை" வாசகமே ஞாபகத்துக்கு சம்பந்தமில்லாம வந்து தொலைக்குது :-)

பி.கு. : ஆங்காங்கே ஸ்மைலி போட்டு தொலைத்திருக்கிறேன்.

said...

//ஆமா அண்ணாத்தே. தேவையில்லாம பங்க் கொமார கூட போட்டுத் தள்ளிட்டானுங்கோ :-)
//
அடடே வாங்க வாங்க....ஆமாங்க பாவம் பங்க் குமார் அவரும் ஒரு அப்பாவி தானாம், அவரை போட்டு தள்ளுனப்ப கூட கோர்ட்டால் தண்டிக்கப்படலையாமே, வெறும் சிபிசிஐடி கேஸ் மட்டும் தான் இருந்தாச்சாமே, ஒரு வேளை சிபிஐ என்கொயரி நிலுவையில் இருந்தா மட்டும் தான் தீர்ப்பு வரும் வரை அப்பாவின்னு சொல்லியிருக்கலாமோ?

அட 'வால்' மணல்மேடு சங்கரை போட்டுட்டாங்க ஆனா தல 'பூண்டி' கலைச்செல்வம் அம்சமா இருக்காரு... அட இத்தை நோண்டுனா லிஸ்ட் ரொம்ப பெருசா கீதே.....

//சே! ஏன்னே தெரியலை... எப்போ பாத்தாலும் "யோக்கியவான் எடுக்கட்டும் முதல் கல்லை" வாசகமே ஞாபகத்துக்கு சம்பந்தமில்லாம வந்து தொலைக்குது :-)
//
ஓ ஓ நீங்க அங்க வர்றீங்களா? நீங்களும் கலர் பூசாம விடமாட்டிங்க, ஓப்பனாவே சொல்றனே பாமகவில் இருந்த ரவுடிக்கும் இருக்கிற ரவுடிக்கும் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, என் அரசியல் பாமகவின் அரசியல் அல்ல, நான் பாமகவை அருகிலிருந்து பார்த்தவன், பார்ப்பவன், அதனடிப்படையில் சில விசயங்களை சொல்கிறேன், அந்த கட்சி மீது சாஃப்ட் கார்ணர் உண்டு அவ்வளவே, ஆனால் அதற்காக அந்த கட்சியில் இருந்த செத்துப்போன உயிரோடு இருக்கிற ரவுடிகளுக்கு முட்டு கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை, கூட்டணி தர்மம் என்பதற்காக பாமகவோடு கூட்டணி வைத்திருப்பவர்களை விமர்சிக்க கூடாது என்பது பாமகவிற்கு வேண்டுமானால் இருக்கலாம் ஆனால் எனக்கு கிடையாது, நாளைக்கு பாமக பாஜகவோடே கூட்டணி சேர்ந்தாலும் பாஜகவை விமர்ச்சிக்க கூடாது என்ற அவசியம் எனக்கு இல்லை.... கூட்டணி தர்மத்தை கட்சிகள் கடைபிடித்த இலட்சணத்தை தான் சட்டமன்ற, உள்ளாட்சி தேர்தலிலே பார்த்தோமே, அவர்களே கூட்டணி தர்மத்தை அவ்வளவு தான் மதிக்கிறார்கள், கட்சியிலேயே இல்லாத ஜஸ்ட் சாப்ட்கார்னர் மட்டுமே உள்ள நான் என்னத்துக்கு கூட்டணி பற்றியெல்லாம் யோசிக்க வேண்டும்.

இத்தனை நாள் அவர்கள் தான் கலர் பூசினார்கள், இப்போ நீங்களும் :-(

said...

பதிவுக்கு தொடர்பான பின்னூட்டங்கள் மட்டுமே வெளியிடப்ப்படும், வேறு பிரச்சினைகளை பேசும் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது.... மற்ற பிரச்சினைகளை அந்தந்த பதிவுகளில் வைத்துக்கொள்ளலாம்

said...

//ஓ ஓ நீங்க அங்க வர்றீங்களா? நீங்களும் கலர் பூசாம விடமாட்டிங்க//

தலைவரே! புதுசா பூச என்ன இருக்கு? கருப்போ, சிவப்போ, மஞ்சளோ, வெளிப்போ எல்லோரும் ஏதோ ஒரு கலரோட தானே இருக்கோம்?

கலரே இல்லன்னு நாம சொல்லிக்கிட்டாலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்துலே நம்மோட ஒரிஜினல் கலர் வெளிவந்தே தீரும்.


//ஓப்பனாவே சொல்றனே பாமகவில் இருந்த ரவுடிக்கும் இருக்கிற ரவுடிக்கும் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை//

நன்றி. காடுவெட்டி குருவுக்கு எம்.எல்.ஏ சீட்டு தந்த டாக்டர் அய்யாவை விமர்சித்து "பாட்டாளிகளுக்கு வெக்கமில்லையா?" என்று ஒரு கட்டுரை விரைவில் தீட்டுவீர்கள் என எதிர்பார்க்கிறேன் :-)

ஜோ சொன்னது போல உங்களுடைய தலைப்பு Generalise ஆக இருப்பது தான் எங்களுக்கு பிரச்சினை என்று நினைக்கிறேன்.

மற்றபடி திமுக மீதான விமர்சனங்கள் எனக்கும் தனிப்பட்ட முறையில் உண்டு. நானொன்றும் அட்டாக் பாண்டியனோ அல்லது காடுவெட்டி குருவோ அல்ல. கழகத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட சாதாரணத் தொண்டன்.

பி.கு. : உங்கள் பதிலில் ஸ்மைலிங் மிஸ்ஸிங் :(

said...

//ஜோ சொன்னது போல உங்களுடைய தலைப்பு Generalise ஆக இருப்பது தான் எங்களுக்கு பிரச்சினை என்று நினைக்கிறேன்.
//
ஓ அப்போ சில உடன்பிறப்புகளுக்கு வெட்கமில்லை என்றால் சரியாக இருந்திருக்குமோ உங்களுக்கு, லக்கி "சில" உடன்பிறப்புகளுக்கு என்று போட்டாலும் நீங்கள் வருவீர்களே :-) அட உங்க கலைஞர் கருணாநிதி பதிவில் உடன்பிறப்புகளுக்கு வெட்கமுண்டு என்ற பதிவை வைத்து தான் சொல்றேன்...

அப்புறம் நடுநிலைன்னு ஒண்ணு உலகில் எதுவுமே கிடையாது தான், நியாயத்தின் பக்கம் நிற்கும்போது ஒரு பக்கமாக சாய்ந்து இருப்பதாகத்தான் தோன்றும் உண்மைதான்....

////ஓப்பனாவே சொல்றனே பாமகவில் இருந்த ரவுடிக்கும் இருக்கிற ரவுடிக்கும் வக்காலத்து வாங்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை//

நன்றி. காடுவெட்டி குருவுக்கு எம்.எல்.ஏ சீட்டு தந்த டாக்டர் அய்யாவை விமர்சித்து "பாட்டாளிகளுக்கு வெக்கமில்லையா?" என்று ஒரு கட்டுரை விரைவில் தீட்டுவீர்கள் என எதிர்பார்க்கிறேன் :-)
//
தாராளமா அதனாலென்ன? பாமக 1989ல் ஆரம்பிச்ச கட்சி, 1888ல் ஆரம்பிச்ச காங்கிரஸ் இருக்கு, 1946ல் ஆரம்பிச்ச திமுக இருக்கு, அப்புறம் அதிமுக இருக்கு, கிரிமினல் பிண்ண்ணனி இருப்பவர்களுக்கு சீட்டு கொடுத்தற்காக 1989ல் ஆரம்பிச்ச பாமகவை திட்டுவதற்கு முன் இத்தனை பேரையும் திட்டிவிட்டு வரணும் இல்லையென்றால் "யோக்கியவான் எடுக்கட்டும்" முதல் கல்லை என்று யாராவது ஒரு "பாட்டாளி", நூற்றாண்டு கண்ட காங்கிரசில் ஆரம்பித்து நேற்று முளைத்த தேமுதிக வரை லிஸ்ட் போட்டு அவங்ககிட்ட நான் திட்டு வாங்கனுமா?... :-)

//நானொன்றும் அட்டாக் பாண்டியனோ அல்லது காடுவெட்டி குருவோ அல்ல. கழகத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட சாதாரணத் தொண்டன்.
//
ஸ்ப்ப்ப்பா வயிற்றில் பாலை வார்த்திங்க....

said...

குழலி,
************************

//enRenRum-anbudan.BALA said...
சிறப்பான பதிவு, குழலி.
//
இதற்கு முன் 250க்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதியிருக்கின்றேன், என்றாலும் இந்த பதிவு உங்களால் சிறப்பான பதிவு என்று சொல்லப்பட்டது என்றால் புரிந்து கொள்ள முடிகிறது :-)
*************************
மூன்று அப்பாவிகள் உயிரிழந்ததை (அதாவது, மனித நேயத்தை) நீங்கள் முன் வைத்து பதிவிட்டதாலேயே, பாராட்டி எழுதினேன். நீங்கள் அதை வேறு மாதிரியாக எடுத்துக் கொண்டதைப் பற்றி எதுவும் சொல்லப் போவதில்லை ! நன்றி !

said...

பஉபொகூகொ என்றால் தெரியுமா, ஒரு இனத்தவரிடையே இன்றளவிலும் கடைப்பிடிக்கப்படும் வழக்கம் இது. இதைப்பற்றி தெரிந்தவர்கள் விளக்கவும், இல்லை என்றால், இன்னும் சரியாக 10 நாளில் நானே சொல்கிறேன்.

பஉபொகூகொ முடிந்த உடன், தீக்குளித்தல் எனும் சடங்கும் நடக்கும்.

அவசரமாக தெரியவேன்டுமென்றால் போலியாரை கேளுங்கள்.

செல்லடியான்

said...

"விடுதலை"யில் தலையங்கம் எப்படி
எழுதுவது? என்று வினவப்பட்டபொழுது,
"ஹிந்து"வில் என்னவருகின்றதோ
அதற்கு எதிர்ப்பாக எழுது" என்று பதில் கிடைத்ததாம்.....

நீங்கள் எடுக்கவேண்டிய ஆயுதம் எதுவென்பதை உங்கள் எதிரிதான்
நிர்ணயிக்கின்றான்

நீங்கள் எடுத்த ஆயுதத்திற்குச் சிலருடைய பாராட்டுதல்கள்......

மற்றபடி உங்கள் பதிவின் மையக்கருத்துடன் நான் உடன் படுகின்றேன்

said...

தினகரன் பத்திரிக்கை தாக்கப்பட்ட விவகாரம் உங்களை எந்த அளவுக்குப் பாதித்தது என்று கேட்டபோது,

இதுபோல ஒரு பொது நிருபர்கள் கூட்டத்தில் நீங்கள் எல்லாம் கேள்வி கேட்கின்ற அளவிற்கு பாதித்தது என்றார் கருணாநிதி.

அவர் பாதிக்கப்பட்டது அவ்வளவுதான், நாம் தான் இங்கு வெட்டியாக....

said...

தமிழ் நாட்டில் திராவிட கட்சிகள் இருக்கும் வரை அவர்கள் அடிக்கும் கூத்துகளும் இருந்து கொண்டுதான் இருக்கும். அது வரை தமிழ் மக்களுக்கு வேறு வழி இல்லை.

said...

சிறந்த பதிவு குழலியாரே.. அன்மையில் என்னை மிகவும் பாதித்த சம்பவம். தர்மபுரிக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை .... வீ எம்

said...

குழலியை தற்சமயம் தான் வாசிக்க ஆரம்பித்துள்ளேன். தங்களின் கருத்தை நானும் வரவேற்கிறேன். அழகிரியின் மேல் கொண்ட விசுவாசத்தால் மூன்று உயிர்கள் எரிக்கப்பட்டதாக ஒரு தரப்பு கூறுகின்றனர். தர்மபுரி எரிப்பு சம்பவத்தில் எரிந்து கருகிய மாணவிகளுக்கு விசுவாசமாக எந்த ஒருவரும் வன்முறையை கையில் எடுக்கவில்லை (நான் சொல்ல வருவது மாணவ புரட்சியை) அதனால் தான் அதன் தொடர்சியாக தினகரன் பத்திரிக்கை ஊழியர்களின் உயிர் பரிப்பு . இச்சம்பவத்தையும் பத்திரிக்கைகள் பத்திபத்தியாக எழுதினர் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். அதன் பின்னே ? மீண்டும் துதிபாத தொடங்கிவிட்டனர். நான் எதிர்பார்பது ஒட்டுமொத்த எதிர்ப்பு ? அப்படி நடந்தால்தான் இத்தகு நிகழ்வுகள் நடக்காமல் இருக்கும். (நடந்து முடிந்த மதுரை சட்டமன்ற இடைத்தேர்தலில் பார்த்தீர்கள் அல்லவா- விழுந்த அத்தனை ஓட்டுகளும் கள்ள ஓட்டுகளா?). மனிதநேயம் மிக்கவர்கள் ஒரிருவர் இருக்கின்றனர். அப்படி இருப்பவர்களில் உங்களை போன்றும் இங்கு பின்னூட்டம் அளித்தவர்கள் என தைரியமாக எழுதும் போது எங்களால் உங்களையும் உணர்வுகளை உணர முடிகிறது. மனிதநேயத்தை யாருக்கும் தெரியபடுத்தாமல் மனதில் வைத்துகொண்டிருப்பதால் ?