மகஇக சில கேள்விகள்?

பார்ப்பனீயத்திற்கு எதிராகவும், மக்களுக்கான அரசியல் என்றும் செயல்பட்டு வரும் மகஇக (மக்கள் கலை இலக்கிய கழகம்) அமைப்பின் தலைமையின் மேலும் அந்த அமைப்பின் சில செயல்பாடுகளின் மீதும் சில கேள்விகள் உள்ளன.

இடஒதுக்கீட்டிற்கு எதிரான மகஇகவின் நிலைப்பாடு
இடஒதுக்கீட்டிற்கு வேட்டு வைக்கும் மகஇகவின் நிலைப்பாடு இடஒதுக்கீடு விடயத்தில் மகஇகவும் அதன் இணை துணை அமைப்புகளும் சி.பி.எம். (கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் மனுதர்மா)மின் குரலிலேயே பேசினால் கூட பரவாயில்லை அதையும் விட மோசமான பார்ப்பனீய ஆதரவு குரலில் பேசுகின்றன(பார்ப்பனீயத்திற்கு எதிராக பேசுவது போன்ற தோற்றமளிக்கும் ஆனால் செயல்முறையில் பார்ப்பனீயத்துக்கு ஆதரவான குரல் தான் அது) இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய லெனினிய பார்வை என்ற புத்தகத்தை படிக்கும் வரை இடஒதுக்கீடு பற்றிய இவர்களின் கருத்துகளை இந்திய சமூக சூழலில் மண்டியுள்ள சாதிய சமூக தாக்கங்களை பார்க்காமல் வெறுமனே எதையும் வர்க்க வேறுபாட்டோடு மட்டுமே பார்க்கும் கம்யூனிஸ்ட்களின் பார்வையே என்று நினைத்திருந்தேன், ஆனால் இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய லெனினிய பார்வை என்ற புத்தகத்தை படித்த போது தான் இவர்கள் கம்யூனிஸ் பார்ட்டி ஆஃப் மனுதர்மாவை விட ஆபத்தான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது, அதையும் விட ஆபத்தானது இவர்களின் நிலைப்பாட்டை எதிர்க்க போகும் போது அதை எதிர்ப்பவர்களை மிக எளிதாக தீண்டாமையை ஆதரிப்பவர்களாக காண்பிக்க இயலும் என்பதே இதில் மிகவும் ஆபத்தானது.


இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய லெனினிய பார்வை என்ற புத்தகத்தின் ஒவ்வொரு வரிக்கும் என்னால் மறுப்பு எழுத இயலும் (இடஒதுக்கீடு பற்றி சில புத்தகங்கள், சில நேரடி அனுபவங்கள், சில கட்டுரைகள் எழுதிய என்னாலேயே முடியும் போது) இடஒதுக்கீட்டு ஆதரவு அறிவு ஜீவிகள் அவர்களின் வாதங்களை நொடிப்பொழுதில் தூளாக்க முடியும்.இடஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீட்டின் நியாயங்களை Reverse Descrimination, Revenge என்பதுவே என்பது போன்ற கருத்தியலை முன் வைத்துக்கொண்டிருக்கும் பார்ப்பன அறிவு ஜீவிகள், ஊடகங்கள் வாதத்தை வலுப்படுத்தும் விதமாகவே இவர்களின் தர்க்கம் அமைகின்றது.

முதலாளி தொழிலாளி என்று இரட்டை வர்க்கங்களை மட்டுமே உலகில் உள்ளன என்பவர்கள் போலும் இவர்கள், இந்திய சமூகத்தில் முதலாளி, தொழிலாளி வர்க்கப்பிரிவு முதல்நிலை வர்க்கப்பிரிவு அல்ல, சாதிய வர்ணப்பிரிவு தான் முதல் நிலை பிரிவு, அதுவும் கூட முதலாளி தொழிலாளி என்ற சரியான கோடு இழுத்து பிரிக்கப்பட்டதல்ல இந்த சாதிய வர்ணப்பிரிவுகள், சாதிய வர்ணப்பிரிவு என்பது படிநிலை , அடுக்குமுறை சமூகநிலை, எனக்கு கீழே நீ, உனக்கு கீழே இவன், இவனுக்கு கீழே அவன் இப்படியாக பிரிக்கப்பட்டுள்ள இந்த படிநிலை சமூகத்தில் நமக்கு கீழ் இருப்பவனை மேலே வராமல் பார்த்துக்கொண்டிருப்பதிலே மோதிக்கொண்டிருப்பதிலே எல்லாவற்றிற்கும் மேலே இருப்பவர்கள் பார்த்து ரசித்துக்கொண்டே மற்றவர்களின் பங்கையும் சேர்த்து சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். இந்த படிநிலை அடுக்குமுறை சமூகத்தில் மூன்றாம் இடத்தில் இருப்பவனும் முதலிடத்தில் இருப்பவனும் ஒன்றா? ஒன்று தான் என்கிறது மார்க்சிய லெனினிய பார்வை, மிக மிக மோசமான ஒன்றையும், மோசமான ஒன்றையும் சமம் என்று கூறுவது மிக மிக மோசமானதற்கு சாதகமாகவே அமையும், படிநிலை அடுக்கின் மேலே இருப்பவனும் மூன்றாம் நிலையில் இருப்பவனும் ஒன்றா? மேலே இருப்பவன் செய்யும் செயலின் பிண்ணனியும் மூன்றாம் இருப்பவனின் செயலில் பிண்ணனியும் ஒன்றா? எதற்காக இத்தனை தூரம் தலையை சுற்றி மூக்கை தொடுகிறேன் என்றால் நேரடியாக அவர்கள் கூறும் விடயத்தை எதிர்த்தால் மிக எளிதாக என்னை தீண்டாமையின் சாதிக்கொடுமையின் ஆதரவாளனாகவும் முத்திரை குத்த இயலும், நேரடியாக இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களை மிக எளிதாக சமாளிக்க இயலும், ஆனால் இடஒதுக்கீட்டு ஆதரவாளர்கள் என்ற போர்வையில் அதே இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களை சமாளிப்பது

மிக கடினமான ஒன்று அவர்களின் வேடத்தை களைப்பதற்கு கொஞ்சம் சிரமப்படத்தான் வேண்டும், அப்படி என்ன சொல்கிறார்கள் என்றால் தீண்டாமையை சாதி மேலாதிக்கம் செய்யும் சாதிக்கு இடஒதுக்கீடு கொடுக்க கூடாது, அட நியாயமாத்தானே சொல்லியிருக்காங்க என்று உடனே தோன்றினாலும் இந்திய அடுக்கு முறை படிநிலை சமூகத்தில் இப்படியான ஒரு காரணியின் மூலம் இடஒதுக்கீடு நிறுத்தப்பட வேண்டுமெனில் தலித்களுக்கு கூட இடஒதுக்கீடு அளிக்கப்படாது, பள்ளர்கள், பறையர்கள் வேறு பாடு உயர்வு தாழ்வு, அருந்ததியர்களின் மீதான உயர்சாதி தலித்களின் தீண்டாமை அதே அருந்ததிய சாதியினர் அவர்களுக்கு துணி துவைத்து போடும் மற்றொரு சாதியினர் மீது நடத்தும் வன்கொடுமை என தலித்களுக்கே கூட இடஒதுக்கீடு கிடைக்காது. யாருக்குமே இடஒதுக்கீடு தர தகுதியில்லாத நிலைவந்தால் யாருக்கு இலாபம், யோசித்து பாருங்கள் யாருக்கு இலாபம்? உயர்த்தப்பட்ட சாதியினருக்குதானே? பார்ப்பனர்களுக்கு தானே? மகஇக சொல்வது போல செய்தால் யாருக்குமே இடஒதுக்கீடு கிடைக்காது.

தமிழ்தேசியம், இந்திய தேசியம் நிலைப்பாடுகள்
மகஇகவும் அதன் இணை துணை அமைப்புகளும் தேசியத்தை ஆதரிக்கின்றன, அதாவது இந்திய தேசியத்தை ஆதரிக்கின்றன, தமிழ் தேசியம் என்பதோ, மொழி வாரியான தேசியங்களோ, இனவாரியான தேசியங்களோ அவர்களை பொறுத்தவரை கெட்ட வார்த்தைகள் ரொம்ப கெட்ட வார்த்தைகள். புலவர் கலியபெருமாள் போன்றவர்கள் கம்யூனிச பாதையிலிருந்து பிரிந்து தமிழ் தேசியத்திற்காக போராட ஆரம்பித்ததே அவர்கள் சார்ந்திருந்த கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி மொழி இன வாரியான தேசியத்தை ஆதரிக்காதது, தேசியம் என்பது அந்தந்த இனக்குழுக்கள் உரிமைகள் கிடைக்கவில்லை என்றோ அல்லது எதற்காகவோ பிரிந்து செல்ல விரும்பினால் பிரிந்து செல்வது அவர்களின் உரிமை, பிரிந்து செல்லக்கூடாது என்பது சர்வாதிகார அடக்குமுறை என்றார் அவர், அடக்குமுறைக்கு எதிரானதாகவும் அடக்குமுறைக்கு எதிராக போராடுபவர்கள் என்பவர்களும் தேசியம் என்ற அடக்குமுறைக்கு ஆதரவாக இருக்கிறார்கள். மேலும் இந்திய தேசியம் யாருக்கு ஆதரவான தேசியம்? பெரியார்தாசன் மகஇக கூட்டத்திலே பேசியதை அவர்களே கவனித்திருக்கின்றார்களா? வெவ்வேறு இனம் மொழி கலாச்சாரத்தில் இருக்கும் இந்திய தேசியத்தை ஒன்றாக இணைப்பது பார்ப்பனர்களின் பூணுல் என்றார். மேலும் தமிழ் தேசியத்தை கருத்தளவில் ஆதரிக்காதவர்களை தமிழ் தேசியத்தை கருத்தளவில் கூட எதிர்ப்பவர்களை நாங்கள் ஆதரிக்க தயாராக இல்லை.

தமிழீழ நிலைப்பாடு
இது பற்றிய மிகப்பெரிய கள்ள மௌனமே சாதிக்கின்றது மகஇக, இவர்கள் தமிழீழத்தை ஆதரிக்கிறார்களா? தமிழீழம் இலங்கையிலிருந்து பிரிந்து செல்வதை ஆதரிக்கிறார்களா?(அவர்களுடைய தேசிய அரசியல்படி பார்த்தால் தமிழீழம் பிரிவதை எதிர்ப்பார்கள் என்றே கணிக்க தோன்றுகின்றது) அப்படி எதிர்க்கிறார்கள் என்றால் தமிழர்கள் மீதான இன அழிப்பை மேற்கொள்ளும் சிங்கள இனவாதம் பற்றிய நிலைப்பாடு என்ன? அப்படி சிங்கள இனவாதத்தை எதிர்க்கிறார்கள் என்றால் தமிழீழம் தனியாக பிரிவதை தவிர வேறு என்ன தீர்வை தமிழர்களுக்காக வைத்திருக்கிறார்கள்? (சிங்கள பாட்டாளிகளும் தமிழ் பாட்டாளிகளும் இணைந்து தமிழ்-சிங்கள் முதலாளிகளுக்கு எதிராக போராட வேண்டுமென்று கோரிக்கை எதுவும் வைத்து காமெடி கீமெடி செய்துவிடப்போகிறார்கள் - இதை சொன்ன வலைப்பதிவாளருக்கு நன்றி) தமிழீழ விடயத்தில் கள்ள மௌனம் சாதிப்பவர்களை எப்படி நம்புவது?

தமிழ் மொழி, தமிழ் இனம்
மகஇக தமிழ்மொழி, தமிழினம், மொழியரசியல், மொழி உணர்வு, மொழி உரிமை, வேற்று மொழியாதிக்கம் பற்றியெல்லாம் பேசியதாக தெரியவில்லை, அல்லது ஈனக்குரலில் பேசியிருக்கும், ஆனால் தமிழிசை விழா மட்டும் ஆண்டு தோறும் எடுக்கப்படும், தமிழ்மொழி , தமிழினம் இல்லாமல் எங்கிருந்து தமிழிசை மட்டும் வந்தது? மொழி வேண்டாம், இனம் வேண்டாம் அந்த மொழியின் இசை மட்டும் வேண்டும், இதன் பிண்னனி மிக ஆபத்தானது மொழியரசியல், மொழி உணர்வு, மொழி உரிமைகள், தமிழின உணர்வு (தமிழ் மொழியையும் தமிழினத்தையும் பிரித்து பார்க்க முடியாது)கள் தமிழிசையை விட பார்ப்பனியத்துக்கு மிக ஆபத்தானது. தமிழ்மொழி இன உணர்வோடு தமிழிசையையும் செயல்படுத்துவதே சரியானதாக இருக்கும், அதை விடுத்து தமிழ்மொழி இனத்தை புறக்கணித்து விட்டு தமிழிசையை மட்டும் முன்னெடுப்பது பெரும் சந்தேகத்துக்குறியதே.

கனிமொழி இசை விழா நடத்தியதை இவர்கள் கடுமையாக விமர்சித்தார்கள். இவர்கள் நடத்தினால் அது பெருமை.அடுத்தவர் நடத்த கூடாதா?(அந்த விமர்சனத்தை பற்றி அவர்கள் கூறியது என்னவென்றால் அந்த இசைவிழா பழமையை போற்றி நிகழ்காலத்தை மறக்க வைக்கிறது என்பதாக இருந்தது)திராவிட ஆரிய கருத்தாக்கம்
திராவிடம் ஆரியம் என்ற பேச்சையே ஆரம்பிக்க கூடாது தோழர்களிடம், உடனே சொல்வார்கள் அதெல்லாம் இப்போ எங்கே? அப்படியாகவே இருந்திருந்தா கூட பல ஆயிரம் ஆண்டுகால இனக்கலப்பில் அதெல்லாம் இல்லையே போயிந்தே, இட்ஸ் கான் என்பார்கள், அப்புறம் ஏனய்யா உயர்த்தப்பட்ட சாதிக்கும் இடையில் உள்ள சாதிகளுக்கும் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கும் இடையே தோல் நிறத்திலேயே வேறு பாடு இருக்கிறதே, ஒரே மாதிரியான காற்று, நீர், வெப்பநிலை ஆனால் வர்ணம் மட்டும் மாறுபட்டு இருக்கிறதே என்றால் மொத்தமாக வாயை பூட்டு போட்டு மூடிக்கொள்வார்கள் இவர்கள் திராவிடம் என்ற வார்த்தையை கேட்டாலே அலறுவதற்கு கண்டிப்பாக திராவிட கட்சிகளே காரணம், திராவிடம் என்ற வார்த்தையை புறக்கணிப்பதன் மூலம் திராவிட கட்சிகளை திராவிட அரசியலை ஏற்காதது, திராவிட கட்சிகளை அட கட்சிகள் கூட வேண்டாம் திராவிட அரசியலை மக்கள் ஏற்காமல் இருக்க செய்வதன் மூலம் மறைமுகமாக பார்ப்பனீயத்திற்கு ஆதரவாக இருக்குமோ என்று சந்தேகம் எழுகிறது. ஏனெனில் மற்றெதையும் விட திராவிடம் என்ற வார்த்தையே பார்ப்பனீயத்துக்கு எதிரான பெரும் கலகச்சொல், திராவிடம் பார்ப்பனியத்திற்கு ஏற்படுத்தும் கிலியை வேறெதுவும் ஏற்படுத்தாது, ஏற்படுத்தியதில்லை.

பார்ப்பனியத்தை எதிர்க்கும் கட்சிகளின் மீதான கடும் விமர்சனங்கள்

மிக மிக மோசமான ஒன்றையும் மோசமான ஒன்றையும் சமமென்று ஒப்புமைபடுத்துவது மிக மிக மோசமானதற்கு ஆதரவாகவே அமையும், பார்ப்பனியத்தை எதிர்க்கும் மற்ற கட்சிகள் இயக்கங்களின் சில முரண்பாடுகளை வைத்து அக்கட்சிகளின் மீதும் தலைவர்களின் சில தவறுகளை வைத்து அவர்களின் எல்லா நோக்கங்களையும் முயற்சிகளையும் வரைமுறையற்று ஆதாரமற்று தாக்குவதும் விமர்சிப்பதும் அவர்கள் எதிர்க்கும் பார்ப்பனியத்துக்கு ஆதரவாகவே அமையும் என்பது தெரியாதா மகஇக வின் தலைமைக்கு? ஏற்கனவே கொஞ்சம் கொஞ்சமாக கொள்கையில் நீர்த்துக்கொண்டிருக்கும் கட்சிகளுக்கு கொள்கை பிடிப்பானவர்கள் மேலும் அதில் உள்ளே செல்லாமல் தடுப்பதன் மூலம் அந்த கட்சிகளை முழுமையாக நீர்க்க செய்தால் அது பார்ப்பனியத்துக்கு ஆதரவாகவே அமையும் அதனால் கொள்கைபிடிப்பானவர்கள், தீவிரமாக இயங்கக்கூடியவர்களை அந்த கட்சிகளினுள் செல்வதை தடுத்து நிறுத்தும் முயற்சியாகவே இதை சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது, ஏனென் இப்படியான சந்தேகமெனில் வீரியம் மிக்கவர்கள் கொள்கை பிடிப்புள்ளவர்கள் இருந்தும் 1990லிருந்து இப்போதுவரை 17 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த இயக்கம் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையே ஏன்? தீவிரமான செயல்திறன் மிக்கவர்களை வெகுசன இயக்கங்களில் இணைந்து பங்களிப்பு செய்யாமல் இருப்பதை தடுத்து இந்த இயக்கத்தில் அமுக்கி இந்த இயக்கமும் ஒன்றும் செய்யாமல் இருப்பதற்காகவே
பார்ப்பனியத்தை எதிர்க்கும் மாற்று கட்சிகளின் மீதான இந்த வரைமுறையற்ற கடும் தாக்குதல் என்று சந்தேகபடலாமே? கொள்கை விமர்சனங்கள் என்பதை தாண்டி மேலே சேறடிக்கும் சவுக்கடிகளை விமர்சனங்கள் என்ற வரையறையிலா எடுக்க முடியும்?

மிடில் கிளாஸ் அறிவுஜீவி தலைமை
இந்த மிடில் கிளாஸ் அறிவுஜீவி தலைமைகளை கண்டாலே எமக்கு ஒவ்வாது, புலவர் கலியபெருமாள் மற்றும் பல போராளிகள் களத்திலே இறங்கி போராடிக்கொண்டிருந்தபோது கம்யூனிஸ்ட்(மா.லெ.) மற்றும் இணை துணை கம்யூனிச குழுக்களில் கோலோச்சிய இந்த மாதிரியான மிடில் கிளாஸ் அறிவு ஜீவி குழுக்கள் தான் இவர்களை தாறுமாறாக விமர்சித்துக்கொண்டும், யார் இயக்கத்தில் இருக்க வேண்டும் இருக்கக்கூடாது என்று கட்டளையிட்டு அதிகாரம் செய்து கொண்டுமிருந்தார்கள், இவர்களை பற்றி எஸ்.வி.இராஜதுரை தெளிவாக பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார், அப்படியான ஒரு மிடில் கிளாஸ் அறிவு ஜீவி தலைமை தான் இன்று மகஇக வில் அமர்ந்து கொண்டுள்ளார்கள்.மக்கள் போர் படை (PWG) கணபதி போன்றவர்கள் மகஇக தலைமையை இந்திய ஏஜென்சிகளின் கையாட்கள் என்றே விமர்சித்துள்ளதாகவும் அதற்கான காரணங்களையும் சொல்லியிருப்பதாகவும் படித்திருக்கிறேன், அது தொடர்பான கட்டுரைகள் எங்கேயாவது கிடைக்கிறதா என்று நண்பர்களிடம் கேட்டுள்ளேன்.

பார்ப்பனீயத்தை எதிர்க்கும் இயக்கத்தின் தலைமை பார்ப்பனரல்லாதோராக இருந்தால் அவர்கள் 100 % சந்தேகத்திற்கிடமின்றி இருந்தாலே போதுமானது, ஆனால் பார்ப்பனீயத்தை எதிர்க்கும் இயக்கத்தின் தலைமையே பிறப்பால் பார்ப்பனராக இருந்தால் அந்த தலைமை 200 % சந்தேகத்திற்கிடமின்றி இருக்க வேண்டும், ஆனால் மேற் குறிப்பிட்ட சந்தேகங்களினால் மகஇக தலைமை 50% கூட சந்தேகத்திற்கு இடமின்றி இருக்கவில்லை என்பது சர்வ நிச்சயம். மேலும் ம க இ கவின் செயல்பாடுகள், செயல்திட்டங்கள், எதை நோக்கி செல்கிறார்கள் என்பதெல்லாம் வெளிப்படையாக இல்லை. இதுவே இன்னமும் அதிகமாக சந்தேகப்பட வைக்கின்றது.

மகஇக தோழர்களுக்கு
தோழர்கள் கோபப்பட்டு எனக்கு ஐ.எஸ்.டி போனெல்லாம் போட்டு காசு செலவு செய்ய வேண்டாம், அப்படியும் போன் செய்யவேண்டுமென்று ஆசைப்பட்டால் வரவனை செந்திலிடம் என் கை பேசி எண் இருக்கின்றது வாங்கிக்கொள்ளுங்கள்.

18 பின்னூட்டங்கள்:

said...

அனானி பின்னூட்டங்கள் கடுமையான மட்டுறுத்தலுக்குள்ளாகும்....

said...

மிக நல்ல பதிவு!

said...

வணக்கம் குழலி!

மிக ஆழமாக அலசியிருக்கிறீர்கள்! சிலவற்றை நான் படிக்க வேண்டியிருக்கிறது. ஆகவே பிறகு வருகிறேன். ம.க.இ.க வின் தமிழீழ நிலைப்பாடு என்பது என்ன என்று தெரியவில்லை! ஆனால் இவர்கள் எதற்கு ஷேபா சக்திக்கு கூஜா தூக்குகிறார்கள் என்றும் புரியவில்லை.

said...

//பார்ப்பனீயத்தை எதிர்க்கும் இயக்கத்தின் தலைமையே பிறப்பால் பார்ப்பனராக இருந்தால் அந்த தலைமை 200 % சந்தேகத்திற்கிடமின்றி இருக்க வேண்டும்,//

இதுதான் ஹைலைட் குழலி. நியாயமான இந்த கருத்தை நாம் வலியுறுத்தினால் தோழர்களுக்கு ஏன் தான் கோபம் பொத்துக்கொண்டு வருகிறதோ தெரியவில்லை!

said...

கொட்டையைப் பிடித்து நசுக்கியிருக்கிறீர்கள்!

said...

"தமிழ்தேசியம், இந்திய தேசியம் நிலைப்பாடுகள்" பற்றிச் சொல்லியிருந்தீர்கள். இதை வரலாற்று மாணவர்கள் "பல்தேசச் சிக்கல் (multinational question)" என்று சொல்லுவார்கள்.

இந்தியா விடுதலையான நாள் முதல் பொதுவுடைமை இயக்கங்கள் பல்தேசச் சிக்கலைச் சரியாகப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.

தெலிங்கானாப் புரட்சியில் தோல்வியடையாமல் இருந்திருந்தால், ஒருவேளை "பலதேசம் - ஒரு நாடு (many nations - one country)" என்ற கேள்வியை அவர்கள் புரிந்திருப்பார்களோ, என்னவோ? என்ன செய்வது, ரணதிவே வழி தடுமாறிப் போயிற்று. பின்னால் வந்த வலது, இடது, மற்றும் மா-லெ இயக்கத்தினரில் பலரும் இந்தக் கேள்விக்குச் சரியான விடை தெரியாமல் தான் இன்றுவரை தவிக்கின்றனர்.

பேராயக் கட்சி (congress) கூட, நடைமுறையில் இந்தக் கேள்வியில் இருக்கும் ஆழத்தை ஓரளவு பட்டறிந்திருக்கிறது (இல்லாவிட்டால், கட்சி அதிகாரம் நடுவ இடத்தில் இருந்து மாநிலங்களுக்கும், பின் நடுவிற்குமாக மாறி மாறி ஊசலாடிக் கொண்டு இருக்காது.).

பா.ச.க.வோ, பலதேசம் என்பதை தெளிவாக மறுக்கும் வலதுசாரிக் கட்சி.

திராவிடக் கட்சிகளுக்கும் பல்தேசச் சிக்கல் பற்றிச் சரியான புரிதல் இருப்பதாகத் தெரியவில்லை.

"இந்தச் சிக்கலைத் தீர்க்காமல் இந்தியத் துணைக்கணடத்தின் அடிப்படை சரியாகும்" என்று எனக்குத் தோன்றவில்லை.

அன்புடன்,
இராம.கி.

said...

//திராவிடக் கட்சிகளுக்கும் பல்தேசச் சிக்கல் பற்றிச் சரியான புரிதல் இருப்பதாகத் தெரியவில்லை.

"இந்தச் சிக்கலைத் தீர்க்காமல் இந்தியத் துணைக்கணடத்தின் அடிப்படை சரியாகும்" என்று எனக்குத் தோன்றவில்லை. //

அய்யா!

இதுகுறித்து விரிவாக அறிய விரும்புகிறேன். தனிப்பதிவு இடமுடியுமா?

அன்புடன்
லக்கிலுக்

said...

தோழர்களிடம் கருப்பு / வெள்ளையாக ஆம் / இல்லையாக நேரடி பதிலை எதிர்பார்த்தால் தோழர்கள் கிரே கலரில் பதில் சொல்லியிருக்கிறார்கள் அவர்கள் பதிவில் சுட்டி இதோ

http://poar-parai.blogspot.com/2007/07/blog-post_11.html

said...

தோழர் (paavel) நீங்கள் இட்ட இரண்டும் கட்டுரைகள் தானே, அத்துனை பெரிய கட்டுரையை பின்னூட்டமாக பிரசுரிப்பதற்கு பதில் அதன் சுட்டிகளை தந்தால் பிறரும் படிக்க ஏதுவாக இருக்கும், மற்றவர்களும் பெரிய பின்னூட்டங்களை படித்து அயர்ச்சி அடையாமல் பிற பின்னூட்டங்களையும் படிக்க எளிதாக இருக்கும்...

said...

//அதாவது, பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்ற பட்டியலில் தற்போது இடம் பெற்றுள்ள சாதிகளில் பலவும் முற்பட்ட சாதிகளாக உள்ளன. கல்வி ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பிற சாதிகளை ஒடுக்கும் பல ஆதிக்க சாதிகள் பொய்யான அடிப்படையில் தாமும் பிற்படுத்தப்பட்டவை என்று உரிமை பாராட்டி இட ஒதுக்கீடு வாய்ப்பைக் கேடாகப் பயன்படுத்திக் கொள்கின்றன.

இந்த உண்மை விவரங்களைப் பரிசீலிக்காமலேயே, மறுத்துரைக்காமலேயே, தங்கள் நிலையை ஆதரிக்க வேண்டும்; இல்லையென்றால் நாம் இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர்கள், பார்ப்பனர்களுக்கு மறைமுக ஆதரவு தெரிவிப்பவர்கள் என்றும் முத்திரை குத்துகிறார்கள், தமிழினவாதிகள். அவர்களுடைய நிலையோ எந்த ஆய்வுபரிசீலனையும் இல்லாது, நீதிக் கட்சியின் சிற்றரசர்கள், மிட்டாமிராசுகள், ஜமீன்தாரர்கள், (அக்கட்சி அப்படிப்பட்டதுதான் என்பதற்கு ஆதாரம் 1945 சேலம் திராவிடர் கழக மாநாட்டில் அண்ணாதுரை ஆற்றிய உரையேயாகும்) ஆகிய சாதி இந்துக்களின் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதோர் என்ற பொதுவரையறையின் அடிப்படையிலான நிலையைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுவதாகும்.
""கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா'' என்று புத்திசாலித்தனமாக சிலர் கேட்பதுண்டு. இரண்டில் ஒன்று சொல்லமுடியாது, பரிணாம வளர்ச்சிப்படி தான் வந்தது என்று சொல்லப் புகுந்தால், பதிலைப் புரிந்து கொள்ள மறுத்து, ""அதெல்லாம் வேண்டாம் இரண்டில் ஒன்று சொல்லுங்கள்'' என்று முட்டாள்தனமாக அவர்கள் அடம்பிடிப்பதும் உண்டு. அப்படித்தான் அடம் பிடிக்கிறார்கள், தமிழினவாதிகள். தமது மூதாதையர்களின் சாதி இந்துக்களின் இடஒதுக்கீட்டுக் கொள்கையை அப்படியே ஆதரிக்க வேண்டும். அதை எவ்விதப் பரிசீலனைக்கும் மாற்றத்துக்கும் உட்படுத்தக் கூடாது. இல்லையென்றால் எதிர்க்கிறீர்கள் என்றுதான் பொருள் என்கிறார்கள். மொத்தத்தில் ""இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா? இரண்டில் ஒன்று சொல்லுங்கள். இரண்டில் ஒன்றுதான் இருக்க முடியும். மூன்றாவது ஒன்று இருக்க முடியாது. இரண்டும் இல்லாத வேறொன்று இருக்க முடியாது, நடுநிலையும் இருக்க முடியாது'' என்றெல்லாம் குதர்க்கம் பேசுகிறார்கள். பகுத்தறிவுக்கும் தர்க்கவியலுக்கும் விரோதமான இந்த அணுகுமுறையை அறிவியல்பூர்வமானது என்றும் கற்பித்துக் கொள்கிறார்கள்.

கேள்வியை அமைக்கும் முறை, மாற்றுக் கருத்துக்களைக் காமாலைக் கண் கொண்டு பார்க்கும் பார்வை, மாற்றாரும் எண்ணிப் பார்க்காத வகையில் அவர்களுடைய நிலைக்கு இவர்களே தரும் வியாக்கியானம் எல்லாவற்றிலும் பாசிசத்தனமான கருத்துத் திணிப்புத்தான் இருக்கிறது. காசுமீர் பிரச்சினையில் இந்தியாவின் நிலையை ஆதரிக்கிறீர்களா, இல்லையா என்ற கேள்விக்கு இல்லை எதிர்க்கிறோம் என்று பதில் சொன்னால், அப்படியென்றால் பாகிஸ்தான் நிலையை ஆதரிக்கிறார்கள் என்று முடிவு செய்தால் அது என்ன தர்க்கமாகும் தெரிகிறதா? அதேபோல இந்தியாவின் நிலையையும் ஏற்கவில்லை, பாகிஸ்தானின் நிலையையும் ஏற்கவில்லை; இரண்டையும் எதிர்க்கிறோம் என்று சொன்னால் அது நடுநிலையும் ஆகிவிடாது. காசுமீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்பதுதான் சரியானது என்ற மூன்றாவது, மாற்று, வேறொரு நிலையை எடுக்கவும் முடியும். இப்படி நிலை எடுப்பதாலேயே இந்திய வெறியர்கள் நம்மைப் பார்த்து, தேசத்துரோகிகள், பாக் ஆதரவாளர்கள் என்று அவதூறும் செய்யக் கூடும்.//

மேற்க்குறிப்பிட்ட பகுதிகளை கொண்டிருக்கும் பதிவின் சுட்டி இதோ

http://tamilarangam.blogspot.com/

இரண்டில் ஒன்று கேட்கும் குழலி தமிழரங்கம் தளத்தில் தோழரகளால் போடப்பட்டிருக்கும் இந்த கட்டுரையை முழுமையாக வாசிக்கவும்.

said...

//தோழர்களிடம் கருப்பு / வெள்ளையாக ஆம் / இல்லையாக நேரடி பதிலை எதிர்பார்த்தால் தோழர்கள் கிரே கலரில் பதில் சொல்லியிருக்கிறார்கள் அவர்கள் பதிவில் சுட்டி இதோ

http://poar-parai.blogspot.com/2007/07/blog-post_11.html//

தோழர்களிடம் ஒரு கெட்டப் பழக்கம். விவாதத்தை நாம் தொடங்கினால் பதிலை அவர்கள் தளத்தில் தான் அளிப்பார்கள். நாம் அங்கே போய் தான் விவாதத்தை தொடரணுமாம் :-)

said...

//""இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறீர்களா, எதிர்க்கிறீர்களா? இரண்டில் ஒன்று சொல்லுங்கள். இரண்டில் ஒன்றுதான் இருக்க முடியும். மூன்றாவது ஒன்று இருக்க முடியாது. இரண்டும் இல்லாத வேறொன்று இருக்க முடியாது, நடுநிலையும் இருக்க முடியாது'' என்றெல்லாம் குதர்க்கம் பேசுகிறார்கள்//

ha ha

said...

///தோழர் (paavel) நீங்கள் இட்ட இரண்டும் கட்டுரைகள் தானே, அத்துனை பெரிய கட்டுரையை பின்னூட்டமாக பிரசுரிப்பதற்கு பதில் அதன் சுட்டிகளை தந்தால் பிறரும் படிக்க ஏதுவாக இருக்கும், மற்றவர்களும் பெரிய பின்னூட்டங்களை படித்து அயர்ச்சி அடையாமல் பிற பின்னூட்டங்களையும் படிக்க எளிதாக இருக்கும்...///

குழலி...

அந்த தோழருக்கு ப்லாகு இல்லை போலிருக்கு...பின்னூட்டங்களை வெளியிடுங்களேன்...

said...

//தோழர்களிடம் ஒரு கெட்டப் பழக்கம். விவாதத்தை நாம் தொடங்கினால் பதிலை அவர்கள் தளத்தில் தான் அளிப்பார்கள். நாம் அங்கே போய் தான் விவாதத்தை தொடரணுமாம் :-)

July 12, 2007 4:25 PM

//
கேள்வி பதில் கிடைச்சா சரிதானே

இதிலென்னப்பா கெட்டபழக்கம்

said...

நன்பா,

'நீ' சாதி பார்க்க மாட்டாய் என்பது எனக்கு ' நன்றாகவே'
தெரியும்.

என்றாலும் கேட்கிறேன் உன் சாதிக்காரன் என் வாயில்
அடித்த மூத்திரத்தை " நீ " குடித்திருக்கிறாயா ?

ஆடு,மாடு, நாய்,பன்றி எல்லாமே "பீ" பேலும்
நன்பா நீயும் கூட பீ தான் பேலுவாயா....

நானும் கூட "பீ" தான் பேலுவேன்
ஆனால் பன்றிகளோடு சேர்ந்து
நீ அதை சுவைத்திருக்கிறாயா ?

'வாய்' ப்பிருக்காது உனக்கு அதை
"விருந்தளிக்க யார்" இருக்கிறார் !
ஆனால் நன்பா உன்னுடைய 'உறவுகள்' எனக்களித்த விருந்தில்
உண்மையிலேயே நான் மூச்சுமுட்டி தினறித்தான் போனேன்.

உன் வீட்டு மாட்டுக்கொட்டாய் தான்
என் வீட்டுக்கு மாளிகை
அதுவும் பொறுக்கவில்லை
தமிழ்குடியை தாங்க வந்த புடுங்கிக்கு
கொழுத்திவிட்டார்கள்,
பச்சைப்பிள்ளைகளோடு சேர்த்து!

குழந்தை வெந்த நாற்றம் அடித்ததா நன்பா,
சாதி பார்க்காத உன் தமிழ்தேச ரத்தம் கொதித்ததா?


என் சகோதரியின் யோனியை ரத்தம் உறைய
சாதி வெறி கொண்டு குதறிய குறிகளின்
பொட்டைத்தனத்தை
கேள்வி கேட்க்காத நன்பனே வா
போராடுவோம்....


நான் தின்ற "பீ" யும்,
மூத்திரமும் சீரனமாகி
பீயும்,மூத்திரமுமாக வெளியேறவில்லை,
வெண்மணி கங்கும் தனியவில்லை,
மேலவலவு ரத்தம் இன்னும் காயவில்லை....

வா போராடுவோம்

உனக்கு இடஒதுக்கீடு
மோடிக்கு ஜனநாயகம்.

பாவெல்

said...

தோழர் பாவெல் அற்புதமான கவிதை, பதிவிலேயே சில வரிகளை எழுதியிருந்தேனே....

//இடஒதுக்கீடு - ஒரு மார்க்சிய லெனினிய பார்வை என்ற புத்தகத்தை படித்த போது தான் இவர்கள் கம்யூனிஸ் பார்ட்டி ஆஃப் மனுதர்மாவை விட ஆபத்தான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது, அதையும் விட ஆபத்தானது இவர்களின் நிலைப்பாட்டை எதிர்க்க போகும் போது அதை எதிர்ப்பவர்களை மிக எளிதாக தீண்டாமையை ஆதரிப்பவர்களாக காண்பிக்க இயலும் என்பதே இதில் மிகவும் ஆபத்தானது.
//

அடுக்குமுறை வர்ணாசிரம சமூகத்தில் நான்காம் அடுக்கும் மூன்றாம் அடுக்கும் சண்டை போட்டுக்கொள்ள, மூன்றாம் அடுக்கு இரண்டாம் அடுக்கோடு சண்டை போட்டுக்கொள்ள எல்லாவற்றிற்கும் மேலுள்ள முதல் நிலையில் இருக்கும் அடுக்கு இந்த சண்டைகளை ரசித்துக்கொண்டே எல்லோருடைய பங்கையும் சேர்த்து தின்று கொழுத்து வரும், அது மட்டுமல்ல மூன்றாம், நான்காம், இரண்டாம் அடுக்குகளுக்கிடையே யான சண்டை எப்போதும் நின்றுவிடாமல் அந்த அடுக்குகள் ஒன்று சேராமல் பார்த்துக்கொள்ளுவதில் தான் அதன் சர்வைவல்லே இருக்கின்றது, அதற்காக அந்த சர்வைவலுக்காக அது பார்ப்பனிய ஆதரவு நிலைப்பாடு மட்டுமல்ல பார்ப்பனிய எதிர்ப்பு நிலைப்பாடும்(சும்மா லூலுவாயி, வெளியில் மட்டும்) எடுத்து சண்டை மூட்டிவிடும்...

said...

அன்பிற்குரிய லக்கிலுக்,

பின்னொரு நாளில் நீங்கள் கேட்ட பதிவைப் போட முயல்கிறேன். இப்பொழுது வேறு ஒரு கட்டுரையில் ஆழ்ந்துள்ளேன்.

அன்புடன்,
இராம.கி.

said...

தியாகு, ராஜ்வனஜ் அவர்களே,

ஒரு வரி சிரிப்பான்கள் எமக்கு புரிவதில்லை. தெளிவாக தைரியமாக பதில் தரலாமே.