தமிழகத்தை ஆண்ட சாதிகளின் கதை(யல்ல நிஜம்)

தமிழகத்திலே ஆண்ட சாதிகளின் கணக்கையெடுப்பதை விட ஆளாத சாதிகளின் கணக்கை எடுப்பதுவே சுலபம், ஒவ்வொரு சாதிக்காரர்களிடமும் கேளுங்கள் அவர்களின் குலப்பெருமைகளையும் ஆண்ட கதைகளையும் சொல்வார்கள், மீனவர்களை செம்படவர்கள் என்று அழைப்பது உண்டு, அவர்களை போய் செம்படவன் என்று அழைத்து பாருங்கள் செருப்பால் அடிப்பார்கள், தாங்கள் பரதவ குலமென்றும் பரதவ குல ராசாக்கள் ஆண்ட கதைகள் உங்களுக்கு சென்னையிலிருந்து குமரிவரை நீண்டிருக்கும் கிழக்கு கடற்கரை ஊர்கள் முழுவதிலும் கிடைக்கும், மதுரைக்கு சென்றால் அறிவாணந்த "பாண்டிய" நாடார் சுவர்களில் சிரித்துக்கொண்டிருப்பார்.

சமீபத்தில் விகடனில் விடுதலை சிறுத்தைகள் சட்டமன்ற உறுப்பினர் எழுத்தாளர் ரவிக்குமார் நாடார்கள் பற்றி எழுதியதற்கு நாடார் சங்கதலைவர் ஒருவர் நாடார்கள் எப்படி சங்க காலங்களிலும் மற்றைய காலங்களிலும் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருந்தார்கள் என்று மறுப்பு எழுதினார்.

ஊரெல்லாம் கொச சாதி (குயவர்கள்) என்று கூறினாலும் தம்மை "மண் உடையார்கள்" என்றும் சோழ மன்னரின் உயிரை காப்பாற்றியதற்காக சோழர்கள் பல ஊர்களை கொடுத்ததாகவும் அதை ஆண்டு வந்ததாகவும் சொல்லிக்கொள்வார்கள் நாங்கள் வசிக்கும் பகுதியின் மண்ணின் மைந்தர்கள், ஊரை பிரிக்கும் சாலைக்கு தெற்கு பக்கம் ஒரு குடிமக்களும் வடக்கு பக்கம் மற்றொரு குடி மக்களும் வாழ்ந்தார்கள்.

"ஊரின் பவிசு கோவிலில் தெரியும்
குலத்தின் பவிசு குல சாமியிடம் தெரியும்" என்பார்கள்,

ஊர் எத்தனை வளமாக இருக்கிறது என்பதை ஊரில் உள்ள கோவிலின் வளமையிலும் ஒரு குலம் எத்தனை வளமாக உள்ளது என்பதை அவர்களின் குல தெய்வ கோவிலும் அந்த சாமிக்கு எடுக்கும் விழா கொண்டாட்டங்களிலும் தெரியும் என்பார்கள், எனக்கு தெரிந்த இருபது ஆண்டுகளில் இரண்டே முறை குலசாமிக்கு அவர்கள் படையல் எடுத்தனர், அவர்களின் குல தெய்வத்திற்கு கோவில் என்று எதுவுமில்லை, சாமி சிலை கும்பத்தோடு அந்த பரம்பரை வழி ஒருவரின் வீட்டு சாமிமாடத்தில் இருக்கும், பூசையின் போது மட்டும் வெளிக்கொண்டுவந்து வேப்பமரத்தடியில் வைப்பார்கள். இவர்களும் ஆண்ட சாதி தான்.
அதே பகுதியில் ஒதுக்கு புறமாக (ஊர் விரிவடைந்ததில் இப்போது அந்த இடம் மையமாகிவிட்டது) பன்றி மேய்த்து பிழைப்பவர்கள் பல குடும்பங்கள் இருந்தனர், ஊரே அவர்களை பன்னி குறவன் என்றாலும் அவர்கள் "காட்டு நாயக்கர்கள்" என்றே குறிப்பிடுவார்கள், எஸ்.டி. சான்றிதழுக்காக பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வரும் இவர்களுக்கு அது இது வரை கிடைக்கவில்லை, அவர்களை எஸ்.சி. என்றே மாவட்ட நிர்வாகம் குறிப்பிடுகிறது, நாங்கள் என்ன "பறையர்களா" எஸ்.சி. என்று சொல்ல என்று எதிர்க்கிறார்கள், "காட்டு நாயக்கர்களான" நாங்கள் காட்டு ராஜாக்கள் என்கின்றனர், இவர்களும் ஆண்ட சாதி தான்.

வன்னியர்கள் படையாட்சிகள் என்று எங்கள் பகுதிகளில் அழைக்கப்படுவார்கள், படைகளை ஆட்சி செய்தவர்கள் என்று பெருமை பேசும் படையாட்சிகளை வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டுவேன் நான்.

"படையாட்சியின் குடிசையில்
பன்றிகளின் ஆட்சி
போங்கடா போங்க"

பல்லவ பரம்பரை நாங்க என்பவர்களிடம்

" பல்லவ குல தோன்றல்கள்
பன்றி குடிசைகளில்"


தேவர் என்பது அரசர்களின் பட்டப்பெயர்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் சொல்லியுள்ளனர், முக்குலத்தோர் , தேவர், கள்ளர், மறவர் என்றும் இன்னும் பல பல பெயர்களில் சேர, சோழ, பாண்டிய பரம்பரை ஆண்ட பரம்பரை என்பார்கள், பல்லவன் எங்கள் சாதி, சோழன் எங்கள் சாதி நாங்கள் ஆண்ட சாதிகள் என்பவர்களிடம் உங்க சாதிக்காரங்க எல்லோரும் நரசிம்ம வர்ம பல்லவன், ராஜ ராஜ சோழனின் மனைவிக்கும் ஆசை நாயகிகளுக்கும் பிறந்தவர்களா? அந்த ராஜாக்களுக்கு அத்தனை மனைவிமார்களும் ஆசை நாயகிகளுமா? இல்லையே பின் ஏனிந்த வெட்டிபெருமை....

தென் தமிழகத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி "பள்ளர்கள்", ஆனால் பள்ளர் சாதியினர் "பெரியோர் பள்ளர்", "சான்றோர் பள்ளர்" என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதையும், பல இடங்களில் பள்ளர் இன தலைவர்களும் தலைவிகளும் பெரும் செல்வந்தர்களாக ஊர் ஆண்டவர்களாக புலவர்களுக்கு வாரி வழங்கியிருப்பதை சங்க இலக்கிய சான்றுகளுடன் சொல்கின்றார்கள் தாங்கள் ஆண்ட கதையை.

தமிழகத்திலே ஆளாத சாதிகளைவிட ஆண்ட சாதிகள் அதிகம், ஆளாத சாதியென்றால் அதில் முதலிடம் பிடிப்பவர்கள் பார்ப்பனர்கள் தான் (பல்லவர்கள் பார்ப்பனர்கள் என்று சொல்லப்படுவதை தவிர்த்து) ஆனால் சமூகநிலையில் ஆளாதா சாதி பார்ப்பனர்களும் ஆண்ட சாதி குயவர்கள், வன்னியர்கள் , தேவர்கள், பள்ளர்களும் ஒன்றா? அந்த சாதிகாரன் ஒருவன் ஆண்டதாலேயே அந்த சாதிகாரர்கள் அனைவரும் ஆண்ட சாதியாகிவிடுவார்களா? அந்த சாதிகாரன் ஒருவன் ஆண்டதாலேயே அந்த சாதிகாரர்கள் அனைவரும் கல்வி, செல்வம், அதிகாரம் என எல்லாம் பெற்றவர்கள் ஆகிவிடுவார்களா?

கலைஞர் கருணாநிதி தான் இன்று தமிழகத்தை ஆள்கிறார், கலைஞர் கருணாநிதி பிறந்த சாதி இசை வேளாளர்(முடிதிருத்தும் அல்லது நாதஸ்வரம் வாசிக்கும் சாதி என்று சொல்லப்படுவது) அவரை மேடைக்கு மேடை வாழ்த்து வாலியோ பார்ப்பனர், அதனால் இசை வேளாளர் சாதியை வாழ்த்தி பிழைக்குது பார்ப்பனர் சாதி என்று சொல்லமுடியுமா? கலைஞர் கருணாநிதி தான் இன்று தமிழகத்தை ஆள்கிறார் கலைஞர் கருணாநிதி பிறந்த இசை வேளாளர் சாதி உயர்ந்த நிலையில் இருக்கிறது என்றா சொல்ல முடியும்?

ஒரு சாதியில் பிறந்த ஒருவன் ஆண்டதாலேயே அந்த சாதி சமூகத்தில் உயர்நிலையில் இருந்ததா? ஆண்ட சாதிகள் சமூகத்தில் எந்த நிலையில் இருக்கின்றன? ஆண்டவர்கள் எல்லோரும் பார்ப்பன சமூகத்தின் பிடியிலேயே ஆண்டிருக்கிறார்கள், ராஜ குருக்களாகவும், ஆச்சாரிகளாகவும், மந்திரிகளாகவும், அதிகாரிகளாகவும் இந்த நாட்டை ஆண்டுகொண்டிருந்தது பார்ப்பன சாதி ஆட்களா? அல்லது ஆண்ட சாதி என்று சொல்லிக்கொள்ளும் இந்த சாதிகளா?

பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டு ஆண்ட சாதிகள் என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லும் ம க இ க தோழர்கள், சற்று யோசித்து பார்க்க வேண்டும், இடஒதுக்கீடு புள்ளிவிபரங்கள் சொல்வது இந்த ஆண்ட சாதிகள் எத்தனை சதவீத இடங்களை பிடித்துள்ளனர், பார்ப்பனர்களோடு சேர்ந்து இவர்களும் சுரண்டுபவர்கள் என்றால் பார்ப்பனர்களும் இவர்களும் இணையாகவோ அல்லது ஓரளவிற்காவது நிரம்பியிருக்க வேண்டுமே, ஆனால் இடஒதுக்கீட்டிற்கு முன் இவர்கள் நிரம்ப வில்லையே ஏன்?

ஏனென்றால் இவர்கள் வர்ணாசிரமத்தை காக்கும் காவல் நாய்கள் மட்டுமே, அதற்காக கிடைக்கும் எலும்புத்துண்டு ஆண்ட சாதி என்கிற பெயர் எதற்கும் உதவாத சாதிப்பெருமை, காவல் நாய்களுக்கு அரியாசனம் மட்டுமல்ல சரியாசனம் கூட கிடைப்பதில்லை, ஆனால் இந்த ஆண்ட சாதிகள், தலித்கள் என அத்தனை ஆட்களின் பங்கையும் சேர்த்து உயர்த்தப்பட்ட சாதிக்காரர்கள் தின்று கொண்டிருக்கின்றார்கள். உண்மை என்னவென்றால் தலித்களுக்கும் இந்த ஆண்ட சாதிகளும் சமூக பொருளாதார வாழ்க்கை முறைகளில் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை, அதனாலேயே இடஒதுக்கீடு பல ஆய்வுகளின் முடிவில் வழங்கப்படுகிறது. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்றாலும் பல ஆய்வு மற்றும் புள்ளிவிபரங்களுக்கு பிறகே இவைகள் வழங்கப்படுகின்றன.

எழுத்தாளர் சமூக நீதி ஆர்வலர் ஆதவன் தீட்சண்யா பூனைக்கு மணி கட்டும் காலம் என்ற கட்டுரையில் சொல்லியுள்ள சில பகுதிகள் இங்கே இவர் தலித்கள் மீதான சாதிய ஒடுக்குமுறையையும் கடைபிடிக்கும் மனவியாதியிலிருந்து பிற்பட்ட சாதியினர் விடுபடவேண்டும். என்றும் மிக கடுமையாகவும் பிற்படுத்தப்பட்டவர்களின் ஒடுக்குமுறைகளை சாடியிருந்தாலும் அவர்களுக்கான இடஒதுக்கீட்டை அவர் நிராகரிக்கவில்லை, எதிர்க்கவில்லை. ஆனால் ம க இ க நிராகரிக்கின்றது.

-----------
இந்திய சமூகத்தில் நடைபெற்ற ஒரேயொரு இடஒதுக்கீடு வர்ணாசிரமக் கோட்பாடு தான். தொழில் அடிப்படையில் பிரிந்திருந்தாலும் உயர்வு தாழ்வு, தீட்டு புனிதம் என்ற பாகுபாடு அற்றிருந்த இந்திய சமூகத்தை இந்த வர்ணாசிரமக் கோட்பாடுதான் இணக்கம் காண முடியாத வர்ணங்களாக பிரித்தது. வர்ணங்களை கிடைமட்டமாக சமதளத்தில் வைக்காமல் ஒன்றின் கீழ் ஒன்றான படிவரிசையில் தாழ்த்தியது. ஆகச்சிறந்த அனைத்தையும் பார்ப்பனர்களுக்கே - அதாவது பார்ப்பன ஆண்களுக்கே - என்று ஒதுக்கீடு செய்தது. எடுத்தயெடுப்பில் அது இங்கேயே எல்லா வர்ணத்துப் பெண்களையும் புனிதமற்றவர்கள் என்று கீழ்மைப்படுத்தி எல்லாவற்றிலிருந்தும் ஒதுக்கி வைத்ததன் மூலம் போட்டியாளர்களில் ஒரு பெரும்பகுதியை ஒழித்துக் கட்டியது. பிறகு அது ஆண் போட்டியாளர் பக்கம் திரும்பியது. பார்ப்பனர்களைத் தவிர்த்த அனைவரையும் பார்ப்பனர்களுக்கு அடிமைச் சேவகம் செய்யுமாறு பணித்தது. இந்த நியதி மீறப்படாமல் இருப்பதற்கான சட்டங்களை இயற்றியது. எதிர்ப்புகளையும் மீறல்களையும் ஒடுக்கும் கடும் தண்டனைகள் நடைமுறைக்கு வந்தன.

தமக்கான பிரதிநிதித்துவம் அரசியல் சட்டத்திலேயே உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற மிதப்பில் பிற்பட்டோருக்கான இடஒதுக்கீடு குறித்து அக்கறை கொள்ளாத சில தலித் அறிவுஜீவிகளையும் அமைப்புகளையும்கூட இப்போது தெருவுக்கு இழுத்துவிட்டுள்ளது உச்சநீதி மன்றம். சமூகநீதியை தக்கவைக்கவும் பரந்த தளத்திற்கு முன்னெடுக்கவும் தலித்களும் பழங்குடியினரும் பிற்பட்டோரும் ஒன்றிணைந்து போராடும் நெருக்கடியை ஆதிக்கசாதியினர் உருவாக்கிவிட்டனர். நாம் எப்படி யாருடன் இணைந்து போராடவேண்டும் என்பதை நமது எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்.


இடஒதுக்கீட்டிலுள்ள சமூகநீதியை ஒப்புக்கொள்ளும் நெருக்கடியை- புத்தித் தெளிவை அவர்களுக்கு உருவாக்காமலே நடைபெறும் எந்த விரிவாக்கமும் பயனற்றவையே என்பதை உணர்த்தும் இயக்கமாக, உழைக்கும் மக்களில் பெரும்பான்மையினராகிய பார்ப்பனரல்லாத தலித், பழங்குடி மற்றும் பிற்பட்டோரும், சாதி மறுப்பாளர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு தடையாக உள்ள சிறு கருத்தும் செயலும் இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்களுக்கே சாதகமாக அமையும். பார்ப்பனரல்லாதவர்களின் ஒற்றுமையில் நீடிக்கும் ஊனங்களால்தான் பார்ப்பனீயம் இன்னும் நீடிக்கிறது என்பதை யாவரும் உணரவேண்டியுள்ளது.
-------------

பிற்படுத்தப்பட்டவர்களில் குறிப்பிட்ட சாதியினரே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்கின்றனர் என்பவர்களுக்கு தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு தொடர்பாக சட்டநாதன் கமிஷன் வைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் 1987 வன்னியர் சங்க போராட்டத்திற்கு பின் அமல் செய்யப்பட்டு மிகபிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவு பிற்படுத்தப்பட்டோரிலேயே மற்றோரு பிரிவு உருவாக்கப்பட்டு அதில் இடஒதுக்கீட்டால் பலன் கிட்டாத சாதிகள் இணைக்கப்பட்டன, தற்போது தலித் ஒதுக்கீட்டிலேயே அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீடு தொடர்பாக பேசப்பட்டு வருகின்றது, இது போல அவ்வப்போது இடஒதுக்கீடு அதன் பாதையில் சரியாக சென்று பலன் தருகின்றதா என கவனிக்கப்பட்டு வருகின்றன, ஆனால் திமுகவில் உடன்பிறப்புகளே என்றும், அதிமுகவில் ரத்தத்தின் ரத்தங்களே என்று அழைப்பதை போல "அன்பார்ந்த உழைக்கும் மக்களே" என்று ஆரம்பிக்கும் ம க இ க விற்கு ஆண்ட சாதிகளின் உழைக்கும் மக்கள் கண்ணுக்கு தெரியவில்லையா?

நேர்மையாக சொல்ல சொல்லுங்கள் ம க இ க வினரை BC/MBC/DNC பட்டியல் இதில் உள்ளது, ஆண்ட சாதி, மோண்ட சாதி என்று சொல்லாமல் இந்த 285 சாதிகளில் எந்தெந்த சாதிகளை இடஒதுக்கீடு பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமென குறிப்பிட்டு சொல்லுங்கள் முதலில் அடுத்ததாக நீங்கள் சொல்லும் அந்த சாதிகள் இடஒதுக்கீடு பட்டியலிலிருந்து நீக்கப்படும் வரை இப்போதிருக்கும் இடஒதுக்கீட்டை தொடரலாமா? கூடாதா? இவவ இரண்டுக்கும் பத்தி பத்தியாக பக்கம் பக்கமாக எழுதாமல் ஈழப்பிரச்சினைக்கு சொன்னீர்கள் பாருங்கள் அது மாதிரி 'நச்' சென்று பதில் சொல்லுங்கள் தோழர்களே....

பிற்படுத்தப்பட்டோரும் தலித்களும் தண்டவாளம் போன்றவர்கள் இவர்களின் மீது தான் பார்ப்பன உயர்சாதி ரயில் ஓடிக்கொண்டிருக்கும், இந்த தண்டவாளங்கள் இணையும் போது பார்பன உயர்சாதி ரயில் கவிழ்ந்துவிடும், இந்த தண்டவாளங்கள் இணையாமல் இருக்க வேண்டியதை பார்ப்பன உயர்சாதியினர் செய்துகொண்டே உள்ளார்கள், உண்மையில் சமுதாய விடுதலைக்காக பாடுபடவேண்டியவர்கள் செய்ய வேண்டிய

முதல் விசயம், எல்லா தளங்களிலும் தலித்-பிற்படுத்தப்பட்டோர் ஒருங்கிணைப்பை உருவாக்குவதே, பெரும்பாண்மயான இவ்விரு மக்களும் அடித்துக்கொள்ள ரத்தம் குடிக்கும் சிறுபான்மை பார்ப்பன உயர்சாதியினர் அதற்கு விடமாட்டார்கள், அதற்காக பகையாளி குடியை உறவாடி கெடு என்று கூட வருகிறார்கள், மீண்டும் ஆதவன் தீட்சண்யாவின் வரிகளை மேற்கோள் காட்டுகிறேன் "உழைக்கும் மக்களில் பெரும்பான்மையினராகிய பார்ப்பனரல்லாத தலித், பழங்குடி மற்றும் பிற்பட்டோரும், சாதி மறுப்பாளர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு தடையாக உள்ள சிறு கருத்தும் செயலும் இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்களுக்கே சாதகமாக அமையும். பார்ப்பனரல்லாதவர்களின் ஒற்றுமையில் நீடிக்கும் ஊனங்களால்தான் பார்ப்பனீயம் இன்னும் நீடிக்கிறது என்பதை யாவரும் உணரவேண்டியுள்ளது."

பார்ப்பன தலைமையின் கீழ் இயங்கும் ம க இ க பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோருக்கிடையே ஒற்றுமையை உருவாக்குகிறதா? அடித்துக்கொள்ள தூண்டுகிறதா?, இவர்கள் அடித்துக்கொள்வதால் ம க இ க வின் தலைமை பொறுப்பிலுள்ள பார்ப்பனர் சார்ந்திருக்கும் சாதி அமோகமாக வாழும்....

"நாமக்கட்டி வருது பாரு உஷாரு" ன்னு ம க இ க மேடைகளில் பாடும் நேரத்தில்

"காவிக்கொடி வருது பாரு உஷாரு
அது சிவப்பு வர்ணம் பூசி வருது உஷாரு
"
ன்னு பாட வேண்டிய நிலையும் உள்ளது என்பது வேதனைக்குறிய விடயம்...

16 பின்னூட்டங்கள்:

said...

கீழ்க்கண்ட சாதியினரை BC பட்டியலில் இருந்து எடுத்து விட்டோ அல்லது உள் ஒதுக்கீடு ஒன்றை BCக்குள் வகுத்து அவ்வுள் ஒதுக்கீட்டில் கீழ்க்கண்ட சாதியினரை வராமல் தடுத்தால்தான் BCக்கு உண்மையான சமூகநீதி கிடைக்கும்.. இதனை நான் சொல்வதால் என்னை ம.க.இ.க. என்று முத்திரை குத்தமாட்டார் குழலி என நம்புகிறேன்.

கணேசு..

said...

BC இல் இருந்து நீக்கப்பட வேண்டிய சாதிகளின் பட்டியல்:
1) Gavara, Gavarai and Vadugar(Vaduvar)(other than Kamma, Kapu,Balija and Reddi)
2) Gounder
3) Kongu Vellalars
4) Nadar
5) Nagaram
6) Reddy

--கணேசு..

said...

குழலி,

இது சட்டநாதன் அவர்கள் எழுதிய புத்தகத்தில் இருக்கும் ஒரு பத்தி(Page-188),

[http://books.rediff.com/bookshop/bkproductdisplay.jsp?PLAIN-SPEAKING-by-A-N-SATTANATHAN&prrfnbr=60109970&multiple=true&frompg=_]

"There are two tendencies which have become noticeable.Reservationhas helped the backward classes for nearly six decades from the 1920's to the 1980s-practically three generations.The benefit of reservation has gone mostly to the top few castes amongst the backward,and to an increasing layer of upper crust in each caste.The filtration process has not been through or uniform.This is not surprising,and is to some extent unavoidable.It would be a step in the larger interest of society and of the backward classes themselves,if a check is applied to both tendencies.There has been thinking on these lines among administrators;but the opposition of vested interest has been too strong to carry out the necessary pruning.But sooner or later,the removal of the two kinds of upper crust will become un-avoidable;otherwise we will be encouraging the caste to form a class system within caste system-not an altogether desirable trend in a democratic and sicialitic society"

said...

//உழைக்கும் மக்களில் பெரும்பான்மையினராகிய பார்ப்பனரல்லாத தலித், பழங்குடி மற்றும் பிற்பட்டடீரும், சாதி மறுப்பாளர்களும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு தடையாக உள்ள சிறு கருத்தும் செயலும் இடஒதுக்கீட்டின் எதிர்ப்பாளர்களுக்கே சாதகமாக அமையும். பார்ப்பனரல்லாதவர்களின் ஒற்றுமையில் நீடிக்கும் ஊனங்களால்தான் பார்ப்பனீயம் இன்னும் நீடிக்கிறது என்பதை யாவரும் உணரவேண்டியுள்ளது.//

குழலி, இது தான் மோசடியென்பது. பார்ப்பனரல்லாத "தலித், பழங்குடி மற்றும் பிற்பட்டோ ரும்" என்று சொல்வதன் மூலம் தலித், பழங்குடி, பிற்பட்டோ ர் எனப்படுவோர் அனைவரையும் ஒரே தட்டில் நிற்க வைக்க முடியாது. இங்கே பிற்பட்டோ ர் என்று வகைப் படுத்தப்பட்டுள்ள எல்லோரையும் ம.க.இ.க ஆண்ட பரம்பரையென்று சொல்லி நிராகரிக்கவில்லை. அவர்களுக்குள்ளும் சேவைச் சாதிகளாய் இருக்கும் குயவர், தச்சர், குரும்பர், வெள்ளாளர்களில் ஒரு சில வகையினரை இடஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள் என்றே சொல்கிறார்கள். அதாவது இடஒதுக்கீடு அதன் முழுமையான பலன் யாருக்குச் செல்ல வேண்டுமோ அவர்களுக்கே செல்ல வேண்டும் என்பதே ம.க.இ.க நிலை.

இதில் உங்கள் மோசடி எங்கே வருகிறது? "பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்டோ ர்" என்கிற வகையின் கீழ் ஆதிக்க சாதிகளான தேவர், மறவர், செட்டியார், வெள்ளாலக் கவுண்டர்கள், முதலியார்கள், நாயுடுக்கள், நாயக்கர்கள்.. இப்படி பண்ணெடுங்காலமாக பார்ப்பனியத்தின் செயல் வீரர்களாய் இருந்தவர்களையெல்லாம் ஒரே பட்டியலில் அடைப்பது என்பது எப்படி சரியானதாகும்? 1987 - 88 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விபரங்களின் படியே நாட்டில் உள்ள 77 சதவீத முற்பட்ட பிற்பட்ட சாதியினர் 83% நிலத்துக்கு உடைமையாளர்களாய் இருப்பது வெளிப்பட்டுள்ளது ( இதில் பார்ப்பனர்கள் உள்ளடங்கவில்லை )

இதற்கு நீங்கள் முன்னே வைத்த வாதம் என்ன?

//பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டு ஆண்ட சாதிகள் என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லும் ம க இ க தோழர்கள், சற்று யோசித்து பார்க்க வேண்டும், இடஒதுக்கீடு புள்ளிவிபரங்கள் சொல்வது இந்த ஆண்ட சாதிகள் எத்தனை சதவீத இடங்களை பிடித்துள்ளனர், பார்ப்பனர்களோடு சேர்ந்து இவர்களும் சுரண்டுபவர்கள் என்றால் பார்ப்பனர்களும் இவர்களும் இணையாகவோ அல்லது ஓரளவிற்காவது நிரம்பியிருக்க வேண்டுமே, ஆனால் இடஒதுக்கீட்டிற்கு முன் இவர்கள் நிரம்ப வில்லையே ஏன்?//

அரசுப் பணிகளில் அமரவோ, டாக்டர் போன்ற சேவைத் தொழிலில் இறங்க வேண்டிய கட்டாயமோ இந்தச் சாதிகளுக்கு 1800களின் பிற்பகுதி வரையில் எழவில்லை என்பது தான் உண்மை. கவுண்டர் தேவர் போன்ற சாதிகளெல்லாம் வரலாற்று ரீதியில் நிலவுடைமையாளர்களாவே இருந்து வந்துள்ளனர் ( பெருமளவிலோ, குறைந்தளவிலோ ).. இவர்களுக்கு கல்வி மறுக்கப்படவில்லை. அப்படி இவர்களை ஒடுக்கியிருந்தால் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த இந்த சாதியினர் பார்ப்பனர்களை எப்போதோ ஒழித்துக் கட்டியிருப்பார்கள். சமூகத்தில் பார்ப்பனர்கள் மேலே ஏறினார்கள் என்றால் அப்படி அவர்கள் மேலேயே உட்கார்ந்திருப்பதற்கான தேவை இவர்களுக்கும் இருந்தது. இவர்களுக்கும் கீழே அடக்கி ஒடுக்கப்பட்டு கடுமையாக சுரண்டப்பட்டு, நிலத்தின் மேல் ஆதிக்கம் இல்லாதிருந்த சாதிகளிடம் "பார் எனக்கு மேலே அவன் உனக்கு மேலே நான்" என்று நியாயப்படுத்துவதற்கு தேவையாய் இருந்தது.

அரசு வடிவம் மாறி ஆங்கிலக் கல்வியுள்ளவர்களுக்கு ( மாண்டேகு- சிம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் மற்றும் இரட்டை ஆட்சிமுறை ) அரசுப் பணி என்றும் அவர்களுக்கு சமூக அந்தஸ்தும் கிடைக்க ஆரம்பித்த புள்ளியில் தான் இவர்களுக்கும் அரசுப்பணியின் அவசியம் ஏற்பட்டது. அது நிராகரிக்கப்பட்டவனின் உரிமைக் குரல் அல்ல - மாறாக இது வரையில் இருந்த ஆதிக்கத்தை நிலை நிறுத்தியாக வேண்டியதன் கட்டாயத்தில் எழுந்ததே. உங்கள் மூலமான நீதிக் கட்சியின் நிறுவனர்கள் பழைய ஜமீந்தாரிகள், மன்னர்கள் என்பது நினைவிருக்கட்டும் ( பொப்பிலி மகாராஜா போல ).. இவர்கள் ஆரம்பத்திலேயே பெரியார் போல பகுத்தறிவு இயக்கம் நடத்தவோ பார்ப்பனிய எதிர்ப்பிலோ ஈடுபட்டிருக்கவில்லை.. மாறாக பார்ப்பனியத்தின் அத்துனை கூறுகளையும் உட்செறித்து மேலே வந்து விட முடியுமா என்கிற முயற்சியில் தான் ஈடுபட ஆரம்பித்தனர். ..

மேலும் நீங்கள் கேட்பது போல இடஒதுக்கீட்டுக்கு முன் இவர்கள் நிறம்பவில்லையே ஏன்? என்கிற கேள்வியே அப்போது எழவில்லை. இடஒதுக்கீடு அமுலான ஆரம்ப காலத்திலேயே அதன் பலன்களை அதிகம் சுருட்டிக் கொண்டதும் ( தமிழக அளவில் உதாரணம் தர முடியும் ) இந்த "பிற்படுத்தப் பட்டோ ர்" என்னும் போர்வைக்குள் புகுந்து கொண்ட ஆண்டைகள் தான்.

இவர்கள் அதிகாரத்திற்கு வந்த பின் 1927ம் ஆண்டே வகுப்புவாரி உரிமை என்னும் அரசானையின் படி தமக்கான உரிமையை நிலை நாட்டிக் கொண்டனர்.. இடஒதுக்கீடு அமுலான முதல் (20 ஆண்டுகளில் ஆண்டைகளும் நிலவுடைமையாளர்களும் தமது ஆதிக்கத்தை அரசு மட்டத்திலும் உறுதிப்படுத்திக் கொண்டனர். அதற்கு முன் - குறிப்பாக மாண்டேகு - சிம்ஸ்போர்ட் சீர்த்திருத்தங்களுக்கு முன் - இட ஒதுக்கீட்டுக்கான தேவை சாதி இந்துக்களுக்கு எழவே இல்லை.. ஏனெனில் அவர்கள் நிதர்சனத்தில் ஆதிக்க சாதிகளாகத் தான் இருந்தனர்.


இப்போது மீண்டும் உங்கள் பதிவுக்கு வந்தால், நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் - தமிழகத்தில் எல்லோருமே தங்களை ஆண்ட சாதிகள் என்று தான் பெருமையடித்துக் கொள்கிறார்கள் என்கிறீர்கள். இது பார்ப்பனியம் தோற்றுவித்த காரணிகளில் ஒன்று தான். எல்லோரும் தங்களை ஆண்ட சாதி என்று சொல்லிக் கொண்டாலும் - நடைமுறையில் யார் நிலவுடைமையாளர்கள், ஆதிக்க சாதிகள் என்பதைக் கொண்டு தான் முடிவெடுக்க முடியும். இந்த வாதத்தை நீங்கள் விரிவாக்கிச் சென்றால் - தெற்கே திராவிடர்கள் வருவதற்கு முன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பு ஆண்ட
சாதி என்பது இப்போது மலைவாழ் மக்கள் என்று அறியப்படுபவர்கள் தான் எனவே ம.க.இ.க மலைவாழ் மக்களுக்கும் இடஒதுக்கீடு கூடாது என்று சொல்லுமா என்று கேணத்தனமாகக் கேள்வி கேட்கும் அளவிற்கும் போகலாம்... ஆனால் துரதிர்ஷ்டவசமாக ம.க.இ.கவின் நிலை அதுவல்ல.. நாம் அறிந்த வரலாற்றிலும், நிதர்சனத்திலும் எவர் ஆதிக்க சாதியாய் இருக்கிறார்கள் என்பதைத் தான் கணக்கில் எடுக்கச் சொல்கிறார்கள். எனவே நீங்கள் கேட்கும் கேள்வி அர்த்தமற்றது மட்டுமல்ல முட்டாள்தனமானதும் கூட.

பல்லவன் குடிசையில் பன்றி மேயுது என்கிற பம்மாத்து இல்லாமல் நேரடியாகச் சொல்லுங்கள் - வன்னியர்கள் அடிமைச் சாதி தானா? அடிமைச்சாதியென்றால் "வன்னிய குல சத்திரியர்" என்கிற வெட்டிப் பெருமை மட்டும் எதற்கு? அப்படி வெட்டிப் பெருமையடிப்பதற்காக ராமதாஸ் போன்றவர்களை நீங்கள் கண்டிக்க தயாரா?

இல்லை வன்னியர்கள் குடிசையில் பன்றி மேய்வது உண்மையானால் அதற்கும் சக்கிளியன் சேரியில் பன்னி மேய்வதற்கும் ஒரே காரணம் தானா? அதாவது பார்ப்பனியம் தானா? தீண்டாமையால் கொடுமைப் படுத்தப்பட்ட சாதி தான் வன்னிய சாதியா?

வன்னியர்களையும் காட்டு நாயக்கர்களையும் ( அவர்கள் தங்களை ஆண்ட சாதி என்று கருதிக் கொள்வதால் ) ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது என்பது முழு முட்டாள் தனம்.

said...

ஸ்ஸ்ஸப்பா கண்ணை கட்டுதே? பாப்ஸ் இல்லைங்கற்துக்காக நீங்களே இப்புடி அடிச்சுகறதா?

அச்K\ச்\சோ

said...

ஆண்ட சாதிகளின் புள்ளிவிவரங்களைக்கொடுத்தது சிறப்பாக இருந்தது. ஆனால் போகிற போக்கில் 'சிவப்பை' இழுத்ததுதான்
சரியில்லை.
அத்தனை பேரும் பதவிக்கு ஆலாய்
பறக்கையில்,'கட்சி வேலை எனக்கு நிறைய இருக்கு' என்று, வெற்றி நிச்சயம் என்ற நிலையிலும், துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட மறுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலர்
தோழர் ஏ.பி பரதனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?..

said...

Again, Excellent Post!

said...

இன்பர்மேட்டிவ்வாக எழுதி இருக்கீங்க...

பார்முக்கு வந்துட்ட மாதிரி தெரியுது...

எங்க தோழர்களுக்கு வேலை கொடுத்து எழுதவெக்கறீங்க போலிருக்கு...கருத்து மோதல்களில் என்ன சளைத்தவர்களா தோழர்கள்...

வி.வாதம்னு வந்துட்டா ரெண்டுல ஒன்னு பார்க்காம விடறதில்லை போல...

ஆரோக்கியமான முடிவை எட்டும் என்ற நம்பிக்கையில்...

said...

தற்பெருமை அடித்துக் கொண்டு,படிக்கட்டிலே தனக்குக் கீழே உள்ளவர்களாகக் கருதப் படுவோரை இளக்காரமும் துன்புறுத்தலும் செய்வதைப் பெருமையாகக் கருதி வாழ்பவர்கள் புரிந்து கொள்வார்களா?தாங்கள் சொல்லியுள்ளக் கருத்துக்களைப் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?
அட மடையர்களே எல்லார்க்கும் சேர்த்துத்தானே சூத்திரப் பட்டம்.இதிலென்ன உயர்ந்த சூத்திரன்,குறைந்த சூத்திரன்?
பிற்படுத்தப் பட்டவரும்,தாழ்த்தப் பட்டவரும் முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது இட ஒதுக்கீட்டிற்காகவும் மற்ற பல முன்னேற்றங்களுக்கும் பாடு பட்டவர்கள் பிற்படுத்தத்,தாழ்த்தப் பட்டத் தலைவர்களைவிட முற்போக்காகக் கருதப் பட்டச் சூத்திரர்கள்தான்.அவர்களுடைய குழந்தைகளுக்கு வாய்ப்புக்கள் குறைந்தாலும் பரவாயில்லை என்று போராடினார்கள்.ஆனால் அதை எதிர்த்ததோ படிப்பிலும் வேலையிலும் அனைத்தையும் வளைத்துப் போட்டிருந்தப் பார்ப்பனர்கள் தான்.
ஏன் பார்ப்பனரல்லாதார் மற்றவர் படிக்க வேண்டும் என்று உண்டாக்கிய அறக்கட்டளைகள்(பச்சையப்பா,திருச்சி நேசனல் கல்லூரி போன்றவை) கூடப் பார்ப்பனர்கள் ஆதிக்கக் கோட்டையாகியிருந்தன்.
சாதிப் பெருமை பேசுபவர்கள் தங்களைச் சூத்திரனாகத்தான் அறிவித்துக் கொள்கிறார்கள் என்று உணர வேண்டாமா?
சூத்திரர்கள் சண்டை போட்டுக் கொண்டால் எல்லாவித நரிகள் காட்டிலும் அவர்கள் காவியாக இருந்தாலும்,சிவப்பாக இருந்தாலும் மழைதான்!

said...

பார்பனர்கள் உழைப்பை நம்பாதவர்கள், குரங்கு அப்பம் பங்கு வைத்து தானே உண்ட கதை போல்தான் தோஷம், பரிகாரம் என்று அரசர்களை ஏமாற்றி வாழ்ந்து வந்தனர். பார்பனர்கள் ஏன் ஆட்சி செய்யவில்லை என்றால் அவர்களுக்கு பொறுப்புணர்வு கிடையாது, சண்டை இடும் வீரம் கிடையாது. அரசனுக்கு சாமரம் வீசி வயற்றைக் கழுவி வந்தனர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக எல்லோரும் போராடிக் கொண்டிருக்கையில் அவர்களால் கைது செய்யப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எதிராக ஆங்கிலேயனுக்கு ஆதரவாக பஞ்சகட்சத்தின் மேல் கோட்டை மாட்டிக் கொண்டு வாதடி பணக்காரணாகவும் பவிசாகவும் வாழ்ந்தார்கள்.

உழைக்காமல் வாழ்வது எப்படி ? என்று உலகோருக்கு காட்டவேண்டுமென்றால் இந்தியாவில் பார்பனர் வாழ்ந்த முறையை காட்டலாம்

said...

அசுரன் மற்றும் குழலி ஆகியோருக்கு

இவ்வகைக் குழப்பங்களுக்குத் தீர்வாகத் தான் பெரியார் அன்றே சாதிவாரி இடஒதுக்கீடு கோரிப் போராடினார். ஓவ்வொரு சாதிக்கும் அவரவர் எண்ணிக்கைக்குத் தகுந்தவாறு உரிய சதவீதத்தில் இடஒதுக்கீடு அனைத்து சாதிகளுக்கும் தனித்தனியாக வழங்க வேண்டும் என்பது தான் பெரியாரின் கோரிக்கை. ஆனைமுத்து அவர்கள் கூட இடஒதுக்குடு குறித்த பயிற்சி வகுப்புக்களில் அதைத்தான் சொல்லி வருகிறார்.
ஆதை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் முதலில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். விடுதலை பெற்ற இந்தியாவில் இதுவரை அப்படிக் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அதுதான் சிக்கல்.

பெரியார் தி.க சார்பில் நடந்த இரட்டைக்குவளை ஒழிப்புப் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு விரட்டியடிக்கப்பட்ட தோழர்களில் நானும் ஒருவன். அதே ஒட்டன்சத்திரம் பகுதியில் கப்பல்பட்டி எனற் ஊரில் பறையர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நடத்தும் டீக்கடையில் கவுண்டர்களுக்கு சாதா டம்ளரும், தாழ்த்தப்பட்டோருக்கு சில்வர் டம்ளரும் கொடுக்கப்பட்டது. இதனால் அண்மையில் அங்கு சாதிக்கலவரம் நடந்தது.

பழனி நெய்க்காரபட்டி அருகே ஐந்துமருகால் காலனியில் பறையர் சமூகத்தைத் சேர்ந்த ஒருவர் 60 பறையர் குடும்பங்களின் பட்டாக்களை ஏமாற்றி அபகரித்துக்கொண்டு 20 ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த 60 பறையர் குடும்பங்களையும் விரட்டிவிட்டார். பட்டா கேட்கச் சென்றவர்கள் மீது கொலைமுயற்சி வழக்குப் போட்டு காவல்துறை மூலம் அடித்து ஜட்டியுடன் ஊர்வலமாக இழுத்துச் சென்றார். பெ.தி.க இதையும் கண்டித்து களமிறங்கியுள்ளது.

பழனி நகரிலும் சுற்றியுள்ள கிராமங்களிலும் பள்ளர்கள் சாதி வெறியுடன் பறையர்களைத் தாக்குவதும், பறையர்களின் சொத்துக்களை சேதப்படுத்துவதும், பறையர் அதிகமாக உள்ள பகுதிகளில் பள்ளர்களின் சொத்துக்கள் சூறையாடப்படுவதும் அடிக்கடி நடக்கிறது.

பள்ளர்களுக்குள்ளேயே உட்சாதிப்பிரிவுகளுக்குள் பெண் கொடுப்பது- எடுப்பது மிகப்பெரிய குற்றமாக இன்றும் நடைமுறையில் உள்ளது. உட்சாதி மறுப்புத்திறுமணங்களை பள்ளர்கள் அனுமதிப்பதில்லை. அதேபோல பறையர்கள் நடத்தும் டீக்கடைகளிலேயே சக்கிலியர்களுக்கு தனி டம்ளர் தரும் இழிநிலையும் உள்ளது.

மேலவளவு பகுதிகளிலேயே, டே கள்ளா வாடா, நீ செத்தா பொணம், நான செத்தா பணம் என்று சொல்லி மிரட்டும் தாழ்த்தப்பட்டோரும் உண்டு.

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் அருகே செட்டியபட்டி கிராமத்தில் டீக்கடையில் சக்கிலியர்கள் சிகரெட்டைப் பற்றவைத்து ஊர்க் கவுண்டர் முகத்திலேயே ஊதிவிடுவதை இன்றும் பார்க்கலாம்.

இவர்களுக்கெல்லாம் இடஒதுக்கீட்டை எடுத்திடலாமா?

சாதிவெறி சக்கிலியர் உட்பட அனைத்து சாதிகளிடமும் உள்ளது. சாதிவெறி உள்ளவனுக்கெல்லாம் இடஒதுக்கீடு கூடாது என்றால் யாருக்கும் இடஒதுக்கீடு தரக்கூடாது என்பதுதான் நியாயம். அந்த நியாயம் பார்ப்பள ஆதிக்கத்துக்குத் தானே வழிகோலும்?

ஆங்கிலேயே அரசாங்கம் அகில இந்திய அளவில் கொடுத்திருந்த இடஒதுக்கீட்டை விடுதலை பெற்ற இந்தியாவில் பார்ப்பனர்கள் ஒழித்துவிட்டார்கள். இன்றும் மத்திய அரசுப் பணிகள் மற்றும் வடமாநில மாநில அரசுப்பணிகளில் தாழ்த்தப்பட்டோரைவிட மிகக் குறைவான அளவிலேயே பிற்படுத்தப்பட்டோரின் பங்கெடுத்துள்ளனர். உங்களது பார்வையில் ஆதிக்கச் சாதிகளான வடமாநில பிற்படுத்தப்பட்டோருக்கு இன்னும் அங்கு இடஒதுக்கீடு 1 சதம் கூட வழங்கப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். சமூகத்தில் படிப்பதற்கு உரிய வாய்ப்பு தாழ்த்தப்பட்டவர்களை விட பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கொஞ்சம் அதிகம். ஆனால் அப்படி படிக்கும் பிற்படுத்தப்பட்டவர்கள் இடஒதுக்கீடு இல்லாததால் பெரும் பதவிகளுக்கு வரமுடிவதில்லை. இயல்பாகவே தாழ்த்தப்பட்டோரும் வரமுடியவில்லை. எனவே காலிப்பணியிடங்கள் உருவாகிறது. அதை அப்படியே பார்ப்பான் அனுபவிக்கிறான்.

பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லாமல் நடக்கிறது. உயர்கல்விநிறுவனங்களில் 27 சத பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீடு வேண்டாம் என பார்ப்பனர்கள் அலறுவது இதற்காகத் தான். தம்மோடு போட்டியிட வாய்ப்புள்ள பிற்படுத்தப்பட்டவனுக்கு இடஒதுக்கீடு வந்தால் தமக்கு ஆபத்து என அலறுகிறான். ம.க.இ.க புரிந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. தோழர் அசுரன் அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

சாதிவாரி இடஒதுக்கீடு பெறப் போராடுவோம். அதே சமயம் அனைத்து சாதியினரின் சாதிவெறிக்கும் எதிராகப் போராடுவோம். தாழ்த்தப்பட்டோர் இயக்கங்களே சாதி ஒழிப்புக்குப் பாடுபடாமல் சாதியை நிலைநிறுத்தும் சாதிச்சண்டைகளை உருவாக்கி வரும் வேளையில் நம் போன்ற முற்போக்கு சக்திகளாவது சாதி ஒழிப்பு நோக்கில் சிந்திப்போம், கணினியில் சண்டை போடுவது விட்டுவிட்டு, கடலூரிலும், மயிலாடுதுறையிலும் அவரவர் பகுதியில் சாதிவெறியர்களை எதிர்த்துக் களமிறங்குவோம். கொஞ்சமாவது செயல்படுவோம். தமிழ்நாடு முழுதும் ஆகஸ்ட் 15 அன்று பெ.தி.க சார்பில் இரட்டைக்குவளை, இரட்டை இருக்கை உடைப்புப் போராட்டம் நடக்க உள்ளது. உங்களுக்குத் தெரிந்த ஊர்களில் இக்கொடுமை நடந்துகொண்டிருந்தால் தகவல் கொடுங்கள். இயக்கங்கடந்து கொடுமைகளை உடைக்க இணைவோம். நன்றி.
-அதி அசுரன்

said...

test

said...

,குலாலர் என்னும் மண் உடையார்கள் வேறு ஜாதி குயவர்கள் குலாளர்கள் அவர்கள் ஒரு போதும் ஆண்ட பரம்பரையாக சொல்லிக்கொள்ளவில்லை.பார்கவ குல உடையார்கள் மட்டுமே வன்னியர் போன்ற ஒரு சாதி(தஞ்சை கள்ளர்கள் என்போரும் உண்டு).உடையார் பட்டம் உள்ள அனைத்து ஜாதிகளையும் கண் மூடிக்கொண்டு குயவர்கள் என்று சொல்லாதீர்கள்.அரசனுக்கே உரித்தான பட்டங்களில் உடையார் என்பதும் ஒன்று.

said...

வரலாறு என்றால் எதனை கிலோ என்பவர் எல்லாம் வரலாற்றை சொல்லும் காலம் இதுவாகும். உங்களுடைய உள்நோக்கம் என்ன என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. உங்களுக்கு "காடவராயர்களை" (பல்லவர்கள்) பற்றி தெரியுமா ? "சம்புவராயர்களை" பற்றி தெரியுமா ? பிற்கால சோழர்கள் காலத்தில் தகடூர் ஆண்ட "அதியமான்களை" பற்றி தெரியுமா ? திருகோவலூர் ஆண்ட "மலையமான்களை" பற்றி தெரியுமா ? ஓய்மான் நாட்டை (திண்டிவனம்) ஆண்ட "நல்லியக்கோடன்" பற்றி தெரியுமா ? பல்லவர்கள் மற்றும் சோழர்கள் காலத்தில் ஆண்ட "பங்கள நாட்டு கங்கரையர்" பற்றி தெரியுமா ? சோழர்கள் காலத்தில் தொண்டைமண்டலப் பகுதியை ஆண்ட "நீலகங்கரையர்களை" பற்றி தெரியுமா ? அரியலூர் மழவராய அரசர்களை பற்றி தெரியுமா ? உடையார்பாளைய அரசர்களை பற்றி தெரியுமா ? சைவத்திற்கே தலைமை கோவிலான "தில்லை ஆடவல்லான்" கோயிலில் சோழ வேந்தர் வழி வந்த பிச்சாவரம் அரசர்களை பற்றி தெரியுமா ? அக் கோயிலில் மூலஸ்தானத்தில் உள்ள "பஞ்சக்ஷர படியில்" முடிசூட்டபடுபவர்கள் "சக்கரவர்த்திகள் மட்டுமே" என்ற வரலாறு தெரியுமா ? சம்புவராயர்களும், காடவராயர்களும் தங்களை கல்வெட்டுகளில் "சகல புவன சக்ரவர்த்திகள்" என்று குறிக்கப்பட்டுள்ளதை பற்றி தெரியுமா ? அவர்கள் எல்லாம் "படையாட்சிகள்" என்பது பற்றி தெரியுமா ? வன்னியர்கள் தொன்று தொட்டு வாழ்ந்து வரும் "மழவர் குடிகள்" என்பது பற்றி தெரியுமா ? அவர்கள் சோழர்கள் காலத்தில் வில்லை வைத்து போர் புரிந்த வரலாறு தெரியுமா ?

உங்களுக்கு "செக்கு" தெரியுமா "சிவலிங்கம்" தெரியுமா ? இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் தெரியுமா ? தெரிந்தால் இப்படி பேசமாட்டீர்கள். உங்களை ஒரு மாத காலம் ஏழ்மையில் வாழ சொன்னால் உங்களுடைய நிலைமை எப்படி இருக்கும் என்று தெரியுமா ? ஆட்சி அதிகாரம் இழந்த எங்களுடைய 400 ஆண்டு கால நிலைமை தெரியுமா ? எதுவும் தெரியாமல் பேசுபவன் இருப்பிடம் "கிழ்பாக்கம்" என்பது பற்றி தெரியுமா ? பொருளாதாரத்தில் முன்னேறினால் எங்களுடைய நிலைமை எவ்வாறு இருக்கும் என்று உங்களால் கணிக்கமுடியுமா ? பல்லவர் வம்சமா என்று கேட்டாயே, சிதம்பரம் நடராஜர் கோயில் தெரியுமா ?

கிழக்கு மற்றும் தெற்கு ராஜ கோபுரம் காட்டிய "பல்லவ குல பாரிஜாதம்" (இப் பட்டங்களை நான் சொல்லவில்லை, கல்வெட்டு சொல்கிறது) "கச்சிய வேந்தன்", "கச்சிய ராயன்" (கச்சி என்றால் காஞ்சிபுரம் என்று அர்த்தம், அதாவது காஞ்சியின் வேந்தன்), "மல்லை காவலன்", "மல்லாபுரி வல்லபன்", "காஞ்சி நாயகன்", "பேணு செந்தமிழ்வாழ பிறந்த காடவன்", "தமிழ்நாடு காத பெருமான்", "அழகிய பல்லவன்" "சொக்க சியன் பல்லவன்", "ஏழிசை மோகனன்", "பரதம் வல்ல பெருமான்", "நிசங்க மல்லன்", என்றெல்லாம் போற்ற பட்ட, தில்லை காளி கோயில் கட்டிய, சோழ மன்னர்களுக்கு உறவினர்களாக (மைத்துனர்) விளங்கிய "காடவன் கோபெருஞ்சிங்க பல்லவன்" தான் அவன். அப் பல்லவனின் வழி வந்த அரசர்கள் தான் இப்போது இருக்கிற "பரூர் கச்சிராய அரசர்கள்" (முகசா பரூர், விருத்தாசலம்). படையாட்சிகளின் போர் வலிமை என்ன என்பது பற்றி தெரியுமா ? அது :-

(Cont'd......)

said...


"The record refers to a meeting of the 'Palli Nattar' in Ugalur. It mentions about the heroic activities of the soldiers of 'Palli caste'during the invasion of one Periya vadugan (Hoysala King) who carried away the idols of the local siva temple to Dwarasamudram which were brought back by the soldiers and in appreciation of their service Kulothunga Chola conferred certain special previleges and honours on the 'Palli Nattar', to be performed for them on festival occasion in the temple. The honours were tying a silk cloth turben (pattu pari vattam) on the Pannattar and showing of an insignia called 'Pannattan Tambiran Parichinnam and Vandan Devargal Devan'. The record also indicates the area in which the palli caste people settled as 'Palligal Nadu' which was bordered by Pachchaimalai in the east, Viranarayana Pereri in the west, the Pennai river on the north and the Kaveri river in the south. The record also mentions the contributions made by the Palligal of this area to celebrate the festival in the temple. The record also mentions about the names of the soldiers who took part in the above war and had kani in Aykudi, Tongapuram, Olaippadi and Kurukkai"

"Aykkudiyil Kani Udaiya Palligalil Ponnan (alias) Mudikonda Chola Muttaraiyan"

"Olaippadiyil Kani Udaiya Palligalil Kari tirichchan Vikrama Chola Muttaraiyan"

"Tongapurattil Kani Udaiya Palligalil Alagan Ambalavan Kulotunga Chola Muttaraiyan"

"Kurukkaiyil Kani Udaiya Palligalil Pandiyan Sokkan Maragada Chola Muttaraiyan"


Inscription : A.R.E No.35 of 1913
King : Maravarman Parakrama Pandiya - I
Year : 1339 A.D
Place : Aduturai, Kumbakkonam

(Pandiya honoured the descendants of the war heroes after 250 years is
significant in history)

said...


If you are a genuine person you must publish my comments and reply for the same without speaking any sort of rubbishes which not at all required for the history purpose. Don't try to deviate the history with the help of the poverty related issues, which we majority people are presently facing, since we totally deprived by the Dravidian Government. Poverty is like a disease, obviously it will be curable one. For instance, I would like to tell you that, do you know Mr.Dalit Ezhilmalai, what was his condition before 40 years. He was just a ordinary man with less wealth. Now please go and see his bungalow near "Bharat Engineering College" Selaiyur, Tambaram. He worked hard and had become rich. With this conditions, can we tell all dalits are riches. If you say so, it is understood that, you people all are in the mindset of economic reservations. History to be viewed as a history. Henceforth, don't try to insert unwanted issues which not at all required for history. If you people are in the intention to spoil the vanniyar's reputation, that is upto you. In history you people will be blacklisted as culture spoilers especially towards "vanniyas". Most of the comments are funny one, which has no value at all.


With regards to the "Jathi" related issues, you people knowledge are very poor and it never supported with any reliable evidence. You people just coming with theory based conclusion (own conclusion) without any valid grounds. It is like, spinning false propaganda and trying to fool other in the name of history. History is fact based on evidence only. Your "Sudra" theroy applicable only to "Vellalas and their groups only". Not to our "Kshatriyas". We the "Velir Kings" (Kshatriyas) came from "Dwaraka" (Gujarat) with our "Tamil Language" , "Culture" etc. and shined the "Tamil Land" like any thing. Don't try to tie the flower in our ears that, in "Tamil Nadu" there were only two sects (i.e) "Bramins" and "Sudras". It is against ethics. From "Sangam Age" to 18th Century A.D, there were "Four Varnas" system existed in "Tamil Nadu". The "Chatur Varnam" (Fourth Class,(i.e) Sudras) Vellalas, in order to escape from the clutches of "Fourth Section" changed the "Varnasirama Order" in the time of Britishers. We have the reliable evidence for the same. The "Vellalas", who were so called as "Upper Caste" were called as "Chatur Varnam" (Fourth Class, (i.e) Sudras) during the period of "Imperial Cholas". Several inscriptions speaks about the same. At that same time, we the people (Vanniyas) were rulers and ruled according to the "Kshatriya Dharmam".