பிணங்கள் புரட்சி செய்யாது - தமிழீழம் - மகஇக நிலைப்பாடு

எச்சரிக்கை இந்த படம் மிக கோரமானது, படத்தை பெரிதாக பார்க்க அதன் மேல் சுட்டவும்


பிணங்கள் புரட்சி செய்யாது
பாட்டாளி முதலாளி கள்
முதலில் உயிருடன்
வேண்டும்
புரட்சி புண்ணாக்குகள்
நடைபெற

சிங்கள் பேரினவாதத்தால்
தமிழினமே கருவறுக்கப்பட்ட பின்
பாட்டாளி புரட்சி
புண்ணாக்கை எதன் மேல்
நடத்துவாய்?
தமிழ் பாட்டாளி
தமிழ் முதலாளி பிணங்களின் மீதா?

தனி தமிழீழம் உருவாவதை ஆதரிக்கின்றீர்களா? எதிர்க்கின்றீர்களா? தனி தமிழீழம் உருவாவதை ஆதரிக்காவிட்டால் ஈழப்பிரச்சினைக்கு உங்கள் தீர்வு தான் என்ன? ஈழப்பிரச்சினையில் ம க இ க வின் நிலைப்பாடு என்ன? இவ்ளோதானேப்பா கேட்டோம் இதையும் கேட்டுவிட்டு தமிழ்பாட்டாளிகளும் சிங்கள பாட்டாளிகளும் சேர்ந்து தமிழ் சிங்கள முதலாளிகளுக்கு எதிராக வர்க்க புரட்சி நடத்த வேண்டும் என்று சொல்லி காமெடி கீமெடி செய்து விடாதீர்கள் என்று வேறு சொன்னோம்.....

தோழர்கள் இங்கே இது தொடர்பாக எந்த பதிலையும் தராமல் புலிகள், சிங்கள அரசு இரண்டும் மக்களை பிரித்து ஏகாதிபத்திய சேவை செய்வதில் மட்டும் ஒன்றிணைந்துள்ளனர் என்றும் பன்னாட்டு, தரகு முதலாளிகள் இலங்கையின் வளங்களை சுரண்டுவதற்க்கும் புலிகளும் சரி, இலங்கை தேசிய வெறி கும்பலும் சரி எந்தவொரு இடைஞ்சலும் செய்வதில்லை. என்றும் சொல்லியுள்ளார் ஆனால் கடைசி வரை இலங்கை பிரச்சினையில் தனி தமிழீழம் உருவாக வேண்டுமா? இல்லையா? என்பதற்கு பதிலில்லை என்பது மட்டுமல்ல புலிகளுக்கு சி.ஐ.ஏ. உதவுகிறது என்று வேறு காமெடியில் இறங்கிவிட்டார்கள் தோழர்கள்.....

ஆமாம் புலிகள் பகுதியில் மின்சாரம் முதல் எதுவுமே இல்லாமல் வளங்கள் எதுவுமில்லாமல் மீன் பிடிப்பு மற்றும் சிறு விவசாயம் மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள், அங்கிருந்து இப்போதைக்கு என்ன வளத்தை சுரண்ட பண்ணாட்டு நிறுவனங்கள் அங்கே இருக்கிறதாம்? திரிகோணமலை இராணுவ முக்கியத்துவம் வாய்ந்தது என்று சொன்னால் கூட பரவாயில்லை புலிகளின் ஆட்சி பரப்பிலிருந்து என்ன வளத்தை சுரண்ட முடியும் இப்போது என்பது புரியவே இல்லை. இந்த சி.ஐ.ஏ, புலிகளின் ஆட்சி பகுதியில் ஏகாதிபத்திய சுரண்டல் இதற்கெல்லாம் என்ன ஆதாரமென்றால் அய்யோ ஆதாரம் என்பது தோழர்களை பொறுத்தவரை கெட்டவார்த்தை, தோழர்களுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை "ஆதாரம்"

இலங்கையில் தமிழர்களின் உயிர் போகும் முதல் பிரச்சினை இனப்பிரச்சினையா? வர்க்க பிரச்சினையா? முதலில் தமிழ் பாட்டாளிகளும் தமிழ் முதலாளிகளும் சிங்கள பேரினவாத தமிழினவொழிப்பிலிருந்து உயிருடன் பிழைக்கட்டும் அதன் பின் தமிழ் பாட்டாளிகள் புரட்சி நடக்கட்டும் ஏனென்றால் பாட்டாளி புரட்சி நடக்க தமிழ் பாட்டாளிகளும் முதலாளிகளும் உயிருடன் வேண்டும், தமிழ் பாட்டாளி - முதலாளி பிணங்கள் புரட்சியை நடத்தாது.

இராசீவ்காந்தி கொலையின் போது ம க இ க தோழர்கள் சிலர் கைது செய்யப்பட்டார்களாம். ம க இ க மட்டுமல்ல திமுக, திக என பல்வேறு கட்சியிலிருந்தும் கைது செய்யப்பட்டிருந்தார்கள், தற்போது கூட பெரியகுளம் பகுதியில் பிடிபட்ட நக்சல் தீவிரவாதிகள் என கூறி சிலர் கைது செய்யப்பட்டனர் அதில் ம க இ க மாவட்ட அளவில் உள்ள ஒரு பொறுப்பாளரும் உள்ளார் அப்படியென்றால் அந்த நக்சல் இயக்கத்தின் கொள்கைகளை ஏற்கிறார்கள் என்றோ அதற்கு ம க இ க முழுவதும் அதற்கு பொறுப்பு என்றோ கூறலாமா? அட வைகோவை தூக்கி உள்ளே வைத்தார்களே அது மாதிரி ஏதோ தோழர் மருதையன் (எ) ருக்மாங்கத் அய்யர் (ஏம்பா பெயர் சரியா சொல்லியிருக்கேனா?) விடுதலை புலிகளுக்கு ஆதரவு தருகிறார் என கைது செய்யப்பட்டிருந்தால் ஏதாவது இவர்கள் சொல்வதில் கொஞ்சமாவது பொருள் இருக்கும்

தோழர்களே மிக எளிமைப்படுத்தி கேள்வி கேட்கிறேன், சுற்றி வளைத்து முதலாளி - பாட்டாளி ஏகாதிபத்தியம், இலங்கை - புலிகள் பாசிசம் லொட்டு லொசுக்கு என்றெல்லாம் பதில் வேண்டாம்.... அது எங்களை போன்ற அறிவிலிகளுக்கு புரியாது எளிமையாக சும்மா 'நச்' சுன்னு ஒத்தை வரியில் சொல்லுங்க கேள்வி இது தான்

1. தனி தமிழீழம் உருவாதை ஆதரிக்கின்றீர்களா? - ஆம் / இல்லை என்று ஏதாவது ஒரு பதில், ஆம் என்றால் அடுத்த கேள்விக்கு போகவே வேண்டாம், இல்லை என்றால் அடுத்த கேள்விக்கு போங்கள்

2.இலங்கையின் தமிழர்கள் இனப்பிரச்சினைக்கு உங்கள் தீர்வென்ன? தமிழர்கள் கொல்லப்படுவதை எப்படி தடுப்பது? தமிழ் பாட்டாளிகளும் தமிழ் முதலாளிகளும் எப்படி சிங்கள பேரினவாத அடக்கு முறையிலிருந்து உயிர் பிழைப்பது?

தோழர்களில் வாதங்களில் வலுவானவர்கள் என்று தெரியும், மொத்தமாக எல்லாவற்றையும் பேசினால் டிங்கிரி டிய்யாலோ டிங்காரே டிங்கிரி டிய்யாலோ தான், அதனால் தான் நேற்று மொத்தமாக கேட்டதை இப்போது ஒவ்வொன்றாக கேட்கிறோம் முதலில் இதற்கு சொல்லுங்கள் பிறகு ஒவ்வொன்றாக வாதிப்போம், அட 'நச்'சுன்னு புரியற மாதிரி பதில் சொன்னிங்கன்னா சரியான முறையில் நாங்கள் 'கன்வின்ஸ்' செய்யப்பட்டால் நாங்களே கூட உம்மை ஆதரிப்போம், அப்படி இல்லையென்றால் ராஜ்வனஜ் ஆர்.எஸ்.எஸ்.லிருந்து வெளியேறியது போல நீங்கள் கூட உங்கள் ம க இ க ஆதரவு நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டாலும் கொள்ளலாம்....

ஆதலால் மொத்தமா போட்டு கூட்டு பொறியல் செய்யாம ஒவ்வொரு பதார்த்தமா எதார்த்தமா பேசுவோம் சரியா தோழர்களே......

34 பின்னூட்டங்கள்:

said...

குழலி,

மீன்டும் நல்லதொரு பதிவு!

Step by step போகும் விசயம் சரியானதே!

said...

நன்றி சிவபாலன்,
//Step by step போகும் விசயம் சரியானதே!
//
இல்லையென்றால் தோழர்கள் மொத்தமாக கூட்டு பொறியல் செய்துவிடுவார்கள், நான் சில பிரச்சினைகளில் அவர்களின் நிலைப்பாட்டை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளேன், அவர்கள் சுற்றி வளைத்து ஏகாதிபத்திய - சிஐஏ லொட்டு லொசுக்கு என்று பேசாமல் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பதில் சொல்லட்டும் ஒவ்வொன்றிற்கும்...

said...

இந்த தோழர்கள் யோசிக்க வேண்டிய விசயம் நான் முன்பே அசுரனிடம் கேள்வியெழுப்பியது போல "உலகெங்கும் மனிதர்கள் இன்று வர்க்க ரீதியாக அல்ல இன ரீதியாகவே" ஒன்றூ பட்டும் வேறு பட்டும் இருக்கிறார்கள்" என்றால் இவர்கள் மௌனமே சாதிக்கிறார்கள் என்பது வருந்தத்தக்க விசயம். பாமரனின் CPI FM கட்டுரைதான் ஞாபகத்துக்கு வருகிறது! ஆனால் குழலி தோழர்களின் நிலையில் ஈழப்பிரச்சினை விசயத்தில் சமீபகாலமாக ஒரு சில மாற்றங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பிருக்கிறது!

said...

செல்லாவின் யூகம் சரிதான்.தோழர்கள் கூட சேர்ந்திருப்பது கொளத்தூர் மணிஆச்சே! அவர்களின் ஈழம் பற்றிய புரிதல் மாறும் என்று நம்புவோமாக.

said...
This comment has been removed by a blog administrator.
said...

முதலில் நீங்கள் தமிழீழத்தையும், புலிகளையும் ஆதரிக்கிறீர்களா என்பதை தெளிவாக..தெளிவாக சொல்லிவிட்டு, அவர்களை கேட்டிருந்தீர்கள் என்றால் இதை படிக்கும் எங்களை மாதிரி ஆட்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.

டேனியல் கிருபாகரன்.

said...

இந்த பதில்களிற்காக நானும் காத்திருக்கிறேன்.

said...

Kuzali good post. Pictures paka kastama iruku :(..

said...

என்ன குழலி என்ர மறுமொழியை நீக்கிட்டீங்க? நான் ம.க.இ.க. ஆளுமில்லை ஒண்டுமில்லை. உங்கட வலைப்பூவைப் படிக்கிற ஒரு ஆள். இப்பிடி மறுமொழியை நீக்குவீங்களெண்டு நினைக்கவேயில்லை!

மறுமொழியை சேகரித்து வைக்கவில்லை. மின்னஞ்சலில் உங்களுக்குக் கிடைத்திருக்குமென்று நம்புகிறேன்.

தயவு செய்து இடவும்.

-பெயர் சொல்லாத வலைப்பதிவர்

said...

//என்ன குழலி என்ர மறுமொழியை நீக்கிட்டீங்க?
//
உன்ர மறுமொழி குட்டையை குழப்பி மீன் பிடிக்கும் யுத்தி, விவாதத்தை திருப்பும் என்று நண்பர்கள் எச்சரித்ததுவே.... விவாதம் முடியட்டும் பொறவு உன்ர விஜயத்துக்கு வருவோம்

said...

குழலி!

பதிவுக்கு கருத்து சொல்ல இயலவில்லை. கண்ணீர் தான் வருகிறது!

said...

குழலி,

ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட போது திமுக திக என்று பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டதற்கும், ம க இ க தோழர்கள் கைது செய்யப்பட்டதற்கும் இடையில் வித்தியாசமிருக்கிறது, மற்ற அமைப்புகளை சார்ந்தவர்கள் கொலையில் தொடர்பு அதாவது கொலைக்கு முந்திய நடவடிக்கை என்ற நோக்கத்தில் கைது செய்யப்பட்டார்கள், கைது செய்யப்பட்டவர்கள் அதனை மறுத்தார்கள், ராஜீவ்காந்தி சம்பவத்திற்கு பிறகு மெளனம் சாதித்ததோடு ஒருபடி மேலே போய் இரங்கலும் தெரிவித்தார்கள் ஆனால் ம.க.இகவினரோ ராஜீவ்காந்தி எனும் போர்க்குற்றவாளிக்கு மரணதண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கொலைக்கு பின்பு ஆதரவு தெரிவித்து கூட்டம் போட்டார்கள், பத்திரிக்கையில் எழுதினார்கள் அதன் காரணமாகவே கைது செய்யப்பட்டார்கள் ஒடுக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளானார்கள் இரண்டும் எப்படி ஒன்றாகும். புலிகளே அந்த செயலுக்கு இன்றுவரை பொறுப்பேற்க தயங்கும் போது, அதனை சரிதான் என்று நெஞ்சை நிமிர்தி பேசிய நக்சல்பாரிகளின் வீரத்தை, வாய்சவடால் கோழைகள் மழுப்பல்களோடு சேர்த்துவைத்து பார்க்க முடியுமா? அத விடுங்க, இந்த ருக்மாங்கத ஐயர்னு போட்டிருக்கீங்களே அவரு யாருங்க. தோழர்.மருதையனுடைய இயற்பெயர் வல்லபேசன் இத தெரிஞ்சுக்க நீங்க ஒன்னும் பெரிசா புலனாய்வெல்லாம் நடத்தவேணாம் புதியகலாச்சாரத்தில் உள்ள படிவத்திலேயே இது குறிப்பிடப்பட்டிருக்கும், தமிழக்கத்தில் தமிழ்தேசிய இயக்கங்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகி, தமிழின தலைவர்களெல்லாம் ‘நான் நாட்டால் இந்தியன்’ என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துக்கொண்டிருந்த காலத்திலிருந்தே அந்த படிவத்திலே அவருடைய பெயருக்கு கீழே தேசிய இனம் என்று இடம் தமிழர் என்ற சொல்லால் பூர்த்தி செய்யப்பட்டிருந்தது என்பதும் ஒரு கூடுதல் செய்தி, சரி, பெரியகுளத்துல ம.க.இ.க பொறுப்பாளர் கைதாகியிருக்கிறார்னு ‘கிசுகிசு’ பாணியில ஒரு புரளியை அள்ளிதெளித்திருக்கிறீர்களே அதற்கு ஒரு ஆதாரம் காட்ட முடியுமா உங்களால்…சென்ற பதிவில் pwg என்றால் மக்கள் போர்படை என்று போட்டிருந்தீர்களே அப்போதே நினைத்தேன் மக்கள் யுத்தக் குழுவை மக்கள் போர் படை என்று குழலி தவறாக குறிப்பிட்டிருந்தாலும் கூட அவருக்கு செய்திதாள்களில் வரும் செய்திகளையாவது முழுமையாக படிக்கும் பண்பிருக்கும் போலிருக்கிறது அதனால் சமீபத்தில் பெரியகுளம் பிரச்சணையில் செய்திதாள்களில் சொல்லப்பட்டிருக்கும் பெயரையே பயண்படுத்தியிருக்கிறார் என்று ஆனால் அந்த நம்பிக்கையையும் பொய்யாக்கிவிட்டீர்கள் குழலி அந்த செய்தியையும் நீங்கள் முழுமையாக படிக்கவில்லையா? அதில் எங்கிருந்து வருகிறார் ம.க.இ.க பொறுப்பாளார். எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் ஒரு பொதுதளத்தில் இப்படி எழுதுவதற்கு உண்மையிலேயே கொஞ்சம் நெஞ்சுரம் வேண்டும்தான், தினமலர்காரனுக்கும், இராமர் பாலத்திற்கடியில் எரிமைலையை கண்டுபிடிக்கும் இராம.கோபலனுக்கு இருக்கும் அதே நெஞ்சுரம், எவனும் நம்மை கேள்வி கேட்கமுடியது என்ற நெஞ்சுரம், ஆனால் உண்மையின் ஒளியில் இவை நெருஞ்சிமுற்களாய் பொசுங்கி போகும் என்பதையும் கொஞ்சம் நினைவில் வையுங்கள் குழலி.

ஸ்டாலின்

said...

அனானி முண்டமே,

மற்றவர்களின் குருதியை நீங்கள் குடித்து வாழ நினைக்கிறீர்களே! நீயெல்லாம் மனிதனா! நீ ரொம்ப முயற்சி செய்து எழுதியிருக்கிறியே ஈழத்தமிழ் அதை வைத்து உன் முகத்தின் கோரத்தை எங்களால் அடையாளம் காண முடியும். என் ஈழத்து சகோதரன் எப்படி மறுமொழி தருவான் என்பதும் எங்களுக்கு தெரியும்.

குழலி! புரிந்துக்கொண்டு பின்னூட்டத்தை நீக்கியதற்க்கு மிக்க நன்றி!

said...

குழலி !

நான் கேள்விதான் கேப்பேன் எனும் திருவிளையாடல் நாகேஸ் பாணிக்கு சென்றுவிட்டீர்கள் .

அங்கே அசுரன் தனது வாதத்தின் தொடர்ச்சியாக பல கேள்விகளை வைத்துள்ளாரே அதை பற்று ஒரு நீண்ட மெளனம் ஏன் சாதிக்கிரீங்கன்னு தெரியல .

சரி உங்களுக்கு விவாதமெல்லாம் ஒத்துவராது !

புலிகள் மற்றும் இலங்கை பிரச்சனையில் தனக்கு தெரிந்ததை சொல்லிவிட்டு இவ்ளோதான் தெரியும் என விவாத்தின் நேர்மையை கடைபிடிக்கிறார் அசுரன் .

ஆனால் நீங்கள் இதான் சாக்குன்னு அதையே நோண்டு நோண்டுன்னு நோண்டி உங்கள நீங்களே பாராட்டிகோங்க ;)

said...

தோழர்களின் மனநிலை மாறும் என்று நினைக்கவில்லை. மாறாக இப்போது இலங்கை இனவாத தோழர்களை தமது மாநாடுகளுக்கு உத்தியோக பூர்வமாக அழைக்க ஆரம்பித்துவிட்டனர். அதுமட்டுமல்ல ஈழப்பிரச்சினைக்கு (உலகப்பிரச்சினை எல்லாவற்றுக்குமே!) இவர்களின் மருந்தான 'வர்க்கப் போராட்டம்' இலங்கையில் என்ன பாடுபடுகிறதென்று பாருங்கள் கீழ்வரும் பேட்டியில். இவர்க்ளுக்கு போராடமுடியாமல் போவதற்கும் புலிகள் தான் காரணம் என்கிறார்கள்.

"..பயங்கரவாதப் பிரச்சினையானது சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையேயான ஒற்றுமைக்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்திற்கும் இடைஞ்சலாக இருந்து வருகிறது.."

--- ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவருமான அநுரகுமார திசாநாயக்க

said...

என் நண்பர்கள் என்னை இப்போது விடுதலைப்புலி என்று சொல்கிறார்கள். அந்த அளவுக்கு நான் விடுதலை புலிகளை ஆதரிப்பதற்கு இந்த புகைப்படம்தான் முதல் காரணம். வலைப்பதிவுகள் எனக்கு அறிமுகமாவதற்கு முன் அந்த சம்பவம் நடந்து சில நாட்களில் தமிழ்.நெட்டில் இந்த செய்தியையும் புகைப்படத்தையும் போட்டிருந்தார்கள்.

said...

//அதில் எங்கிருந்து வருகிறார் ம.க.இ.க பொறுப்பாளார். எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் ஒரு பொதுதளத்தில் இப்படி எழுதுவதற்கு உண்மையிலேயே கொஞ்சம் நெஞ்சுரம் வேண்டும்தான்
//
செய்தித்தாளில் தான் படித்தேன், மகஇக பற்றி பதிவுகள் எழுதப்போகிறேன் என்று முன்பே முடிவு செய்திருந்ததால் இன்னொருமுறை மீண்டும் படித்தேன், மகஇக பொறுப்பாளர் அதில் தொடர்பு இருக்கிறதா என்று... கொஞ்சம் பொறுங்கள் அந்த செய்திக்கான சுட்டியே தருகிறேன், எழவெடுத்த தினமலர் இணையதளத்தில் யுனிகோட் இல்லாததால் சட்டென்று தேடி எடுக்க முடியவில்லை....

//இந்த ருக்மாங்கத ஐயர்னு போட்டிருக்கீங்களே அவரு யாருங்க. தோழர்.மருதையனுடைய இயற்பெயர் வல்லபேசன்
//
சுட்டியதற்கு நன்றிங்க, வல்லபேசன் அய்யர்னே மாற்றி விடுகிறேன்...


தோழரே வீரமணிக்கு தரகு மாமா பட்டம், ராமதாஸ்க்கு அம்பாணி அடிவருடி பட்டம் கலைஞருக்கு ஏகாதிபத்திய தரகு அரசியல்வாதி என பல பட்டங்களை கொடுத்துள்ளார்கள் மகஇக "யோக்கியவான்கள்" அதனால முதலில் இந்த மகஇக "யோக்கியவான்களின் யோக்கியத்தை" அலசி ஆராய்வோம் பிறகு பேசலாம் நீங்கள் பட்டமளித்த மாமா, அடிவருடி, தரகு அரசியல்வாதிகள் பற்றி.

தான் மட்டுமே யோக்கியம் என்று சொல்பவனின் யோக்கியதையை உறுதி செய்து கொள்வோம்.... என்ன ஸ்டாலின் சரிதானே

said...

யெப்பா தோழர்கள் தமிழீழ நிலைப்பாட்டில் ஆட்டத்தை முடித்துவிட்டார்கள்......அசுரனின் பின்னூட்டம் அவர் பதிவிலிருந்து இங்கே

************
தனித் தமிழீழம் தீர்வு கிடையாது. ஈழத்தை பொறுத்தவரை பிரச்சனை இலங்கை ஒரு காலனி நாடாக இருப்பதுதான். அதுதான் அங்கு இனப் பிரச்சனையாக மோத விடுகிறது.

அங்கு வளங்களை சுரண்டுவதிலும், மக்களை ஒடுக்குவதிலும் முன்னணியில் உள்ள ஏகாதிபத்தியத்தையும் அதற்க்கு துணை நிற்க்கும் நிலபிரபுத்துவம் சிங்கிள் பேரின வாதத்தையும் விரட்ட் ஜன்நாயக கூட்டணி ஏற்படாத வரை தீர்வு இல்லை. சிங்கள் பாசிசத்திற்க்கு பதில் புலி பாசிசமே வரும். அதன் அடிப்படைகள் இப்பொழுதே அங்கு தெரியத் துவங்கி விட்டன.

பிரபாகரனின் மகனுக்கு சிங்கள் அரசே விசா எடுத்துக் கொடுத்து அனுப்பிய மர்மம் குறித்தும், தராளமயமே எமது கொள்கை என்று தனி தமிழிழத்தை இப்பொழுதே அடிமை தேசமாக காட்டிக்கொடுத்த பால சிங்கத்தின் பொருளாதார திட்டத்திற்க்கும் என்ன கருத்து சொல்வார்கள் போலி தேசியவாதிகள்?

இப்படி தேசத்தை ஏகாதிபத்தியத்திற்க்கு அடிமைப் படுத்துவதைத்தான் தனி தேசியம் என்று சொல்வார்களோ?
************

தோழருக்கு மீண்டும் ஒரு முறை நினைவு படுத்த விரும்புகிறேன், வர்க்க புரட்சி செய்ய தொழிலாளிகளும் முதலாளிகளும் முதலில் உயிருடன் இருக்க வேண்டும்....

தமிழீழ விடயத்தில் கருத்தளவில் எங்களுக்கு எதிராக இருக்கிறது ம க இ க, இது மகஇகவை நாங்கள் நிராகரிப்பதற்கான காரணங்களில் ஒன்று....

'சோ' ராமசாமி, ஹிந்து ராம், பெரும்பாலான பார்ப்பனவாதிகள் என்ற தமிழீழம் உருவாவதை எதிர்ப்பவர்களின் வரிசையில் ம க இ க வும் உள்ளது மிக வருத்தத்திற்கும் உரியதாக உள்ளதாக மட்டுமின்றி ம க இ க வின் பார்ப்பன தலைமையை நாங்கள் சந்தேகப்பட்டதற்கு ஒரு வலுவான காரணியாகவும் உள்ளது...

தோழர்கள் விமர்சனங்களை வாதங்களை எதிர்கொள்வார்கள் என்று பார்த்தால் புரளி பேசுகிறோம், சாதி வெறி பட்டமளிப்பு தான் செய்கிறார்கள்.... இந்த சாதி வெறி பட்டமளிப்பு கடைசியில் தான் நடைபெறுமென நினைத்தேன், நான் எதிர்பார்த்த அளவுக்கு கூட தோழர்களுக்கு பொறுமையில்லை போலும்....

said...

குழலி,

//தான் மட்டுமே யோக்கியம் என்று சொல்பவனின் யோக்கியதையை உறுதி செய்து கொள்வோம்.... என்ன ஸ்டாலின் சரிதானே//
நிச்சயமாக பேச வேண்டும் குழலி ஆனால் அது அறிவு நேர்மையோடும், ஆதாரத்தோடும் இருக்க வேண்டும்., எல்லாவற்றுக்கும் மேலாக எதிரிலிருப்பவர் மீது வைக்கும் ஒவ்வொரு விமர்சனமும் சுயவிமர்சனத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் நாங்கள் அப்படியிருக்கிறோம். எங்கள் வார்த்தைகளுக்கு உண்மையாக இருக்கிறோம், விமர்சித்த எந்தவொரு விசயத்துக்கும் எதிராக நாங்கள் நடந்திருப்பின் குறிப்பிட்டு சொல்லுங்களேன், திருத்தி கொள்கிறோம். நீங்கள் எப்படி பேசுகிறீர்கள் குழலி “நாங்கள் எப்படி வேண்டுமானாலும் இருப்போம் எங்களை கேள்வி கேட்கும் நீங்கள் யோக்கியமா” என்று நீங்கள் கேட்கும் தொனி விமர்சனமாகவோ, சுயவிமர்சனத்தை உள்ளடக்கியதாகவோ இல்லை மாறாக அது குழாயடி சண்டை போடும் குமரிகளின் தொனியில் இருக்கிறது..

ஸ்டாலின்

said...

தேவரே,

எம் தோழர்களின் வர்க்கப்போராட்டதிற்காகவாவது அமெரிக்காவையும், சி.ஐ.ஏ. வையும் உயிர்ப்புடன் வைத்திடும்.

பாசிசப்புலிகளே, கேளுங்கள்...

ம.க.இ.க. உலகலாவிய ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்பு உங்களை ஆதரிக்க வேன்டுமென்றாள், உள்ளூர் கிளை அமைப்பான ஜெ.வி.பி. யுடன் இணைந்துகொள்ளுங்கள்.

சுதாகரன்

said...

நல்லப்பதிவு..

சிவப்பு சாயம் வெளுத்து காவியாகதான் காட்சி தரும். தொடருங்கள் குழலி.

சுதாகரன்

said...

அசுரன் என்ன சொல்ல வருகிறார்?
இலங்கை எவ்வளவு காலமாக காலனி நாடாக இருக்கிறது?

தொலைத் தொடர்புக் கருவிகள் கண்டுபிடிக்க முன்பு, மனிதன் கடல்வழியாகப் பிறநாடுகளை ஆக்கிரமிக்க முன்பிருந்தே இலங்கை காலனி நாடுதானா? அப்படியாயின் அந்தக்காலத்திலே இலங்கையை காலனியாக்கி வைத்திருந்த நாடு எது?

இலைங்கைத் தீவில் ஐரோப்பிய வருகையின்பின்தான் சிங்கள் - தமிழ் இனப்பிரச்சினை தோன்றியது என்று சொல்ல வருகிறாரா? (அப்படித்தான் பொருளென்றால் நீங்கள் ஒப்பீட்டளவில் மேல். ஏனென்றால் 1948 க்குப்பிறகுதான் இனப்பிரச்சினை வந்தது என்று சொல்லவில்லை)

அல்லது ஈராயிரம் ஆண்டுகளாக இலங்கை காலனி நாடாக இருக்கிறதென்று சொல்கிறாரா?

"தோழர்கள்" வாசிப்பிலும் பரந்துபட்ட அறிவிலும் ஒப்பீட்டளவில் உயர்ந்தவர்கள் என்று கருதி வந்தோமே?

said...

தமிழீழம் திறந்த பொருளாதாரக் கொள்கையோ என்ன கோதாரிக் கொள்கையோ கொண்டிருக்கட்டும். அந்த நேரம் அதையெதிர்த்துப் "போர்" புரிய உங்களைப் போன்றவர்கள் உருவாகாமலா போய்விடுவார்கள்?

சிக்கல் என்னவென்றால்,
தமிழீழம் உருவானால், திறந்த பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் (அதுவும் ஊகத்தின் அடிப்படையில்) என்ற காரணத்தால் ஈழத்தமிழினம் அழிவதை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?

அதுக்குப்பிறகு, சிங்களப் பாட்டாளிகளோடு சேர்ந்து புரட்சி செய்தல் என்ற கூற முன்பு, அந்தச் சிங்களப் பாட்டாளிகள் எங்கிருக்கிறார்கள் என்பதைச் சொல்லுங்கள். இனி எங்காவது வேற்றுக்கிரகத்திலிருந்து வரப்போகிறார்களா? அல்லது இப்போது இலங்கையில் இருக்கும் சிங்களப்பாட்டாளிகளைத்தான் சொல்கிறீர்களா? அப்படியானால் இலங்கையில் நடைபெற்ற அண்மைய தேர்தல் முடிவுகளை ஒருமுறை பார்த்துவிட்டு, அதன்வழி சிங்களப் பாட்டாளிகளின் எண்ணத்தை "உய்த்து" உணர்ந்துவிட்டுச் சொல்லுங்கள். அதன்பின் பேசுவோம், இணைந்த புரட்சியும் புண்ணாக்கும் பற்றி.

தமிழர்களுக்கு சமஷ்டி அடிப்படையில்கூட அதிகாரத்தைப் பகிர விரும்பாத சிங்களப் "பாட்டாளி" வர்க்கத்துடன் இணைந்து என்ன புரட்சி வேண்டிக்கிடக்கிறது? இதையறித்தான் அண்மைய தேர்தல் முடிவுகளைப் பார்த்து களநிலைமையை உணரச் சொல்லிக் கேடேன்.

தோழர்கள் ஒப்பீட்டளவில் வாசிப்பும் உலகறிவும் அதிகமானவர்கள் என்று அறிவோம். ஆனால் நிகழ்காலமும் யதார்த்தமும் தான் இடையிடையே உதைக்கிறது. அதை ஈழத்துத் தோழர்களிடம் பார்த்துவிட்டோம். இப்போது உங்கள் முறை.

said...

இலங்கையில் சுரண்டுவதற்கு என்ன இருக்கிறது என்று கேட்கும் குழலிக்கு, சுரண்டல் என்பதன் பல பரிமாணங்களை விளக்கி ஆகவேண்டும் போலுள்ளது.சுரண்டல் என்றால் ஒரு பன்னாட்டு கம்பெனி வந்திறங்கி 400 ஏக்கருக்கு பூமியை தோண்டி நிலக்கரியை அள்ளிக்கொண்டு செல்வது மட்டும்தான் எனச் சிலர் புரிந்து வைத்துள்ளார்கள்.இலங்கையின் கால் நடை வளர்ப்பையும் மொத்த பால் உற்பத்தியையும், முடக்கி விட்டு நெஸ்லே பால் பவுடர் உள்ளிறங்கி அடிமைப்படுத்துவதும் சுரண்டல்தான்.என்.டி.பி.சி. எனும் இந்திய நிறுவனம் அங்கு போய் அனல் மின் நிலையம் அமைத்து ஈழத்துக்கு யூனிட்டுக்கு இவ்வளவு தொகை என மின்விநியோகம் செய்வதும் தேசம் கடந்த சுரண்டல்தான்.இந்தியன் ஆயில் கார்ப்பொரேசன் அந்நாட்டின் ஒட்டுமொத்த எண்ணெய் விநியோகத்தைக் கைப்பற்றி ஏகபோகமாவதும் சுரண்டல்தான்.செல்போன் சேவை, விவசாய அபிவிருத்தி சேவை என எண்ணிலடங்கா சுரண்டல்களும் உள்ளன.ஏகாதிபத்தியத்தின் குறியீடான கோக்கும், ஆயத்த ஆடைகளும், மற்றும் பல்விதமான எலெக்றானிக் சாதனங்களும் விற்க ஈழம் போன்ற பரந்த சந்தையும் ஏகாதிபத்தியத்துக்கு தேவை.அவர்கள் (மேலை தேசத்தினர்) ஓய்வெடுத்து குஷியாய் இருக்க பீச் ரிசார்ட்டுகள் அமைக்க இலங்கையின் கடற்கரையில் மூன்றில் இரண்டு பங்கை வைத்திருக்கும் புலிகளின் ஒத்துழைப்பு அவர்களுக்கு தேவை.இருக்கவே இருக்கு..போரினால் நாசமடைந்த ஈழத்தை மறுசீரமைப்பு செய்கிறோம் என்று உள்ளே இறங்கி..அதன்பேரில் தரப்பட இருக்கும் பில்லியன் டாலர்கள் கடனை முடிவின்றி வட்டியாக வசூலிக்க..


குழலிக்கு புரிகிறதா?

************

தமிழ்த் தேசியம் பேசும் தலைவர்கள், குறைந்தபட்சம் தங்கள் கொள்கைகளுக்காவது விசுவாசமாக இருக்கிறார்களா?முதலில் தமிழ்வழிக் கல்வியை எடுத்துக் கொள்வோம்.5ஆம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப்பாடமாக்கு எனக்கோரி தமிழ்ச்சான்றோர் பேரவை உண்ணாநோன்பு இருந்தது.

அதன் நிறுவனர் நா.அருணாசலமோ தன் பேரனை ஊட்டியில் உள்ள தமிழே சொல்லித்தரப்படாத உயர்தர கான்வெண்ட் ஒன்றில் படிக்க வைத்துள்ளார். பெயர்த்தியையும் மெட்ரிகுலேசனில்தான் படிக்க வைத்துள்ளார்.ராமதாசின் பேரன் (அன்புமணியின் மகன்) தில்லியில் 8 தமிழ்ப்பள்ளிகள் இருந்தும் இந்தி,இங்கிலீசு பள்ளியில்தான் படிக்கிறான்.வீரமணி கும்பலைக் கேட்கவே வேண்டாம்.. 'பெரியார் தமிழை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் காட்டுமிராண்டி மொழி' என்று சொன்ன கருத்து, வீரமணி மெட்ரிகுலேசன் வியாபாரம் நடத்த உதவுகிறது..தமிழ் தேசியம் பேசும் பலரின் வீட்டுக்குள் தமிழே வாசிக்கத் தெரியாது என்பதுதான் உண்மை.மெற்றிகுலேசன் பள்ளிகளின் சங்கத்தலைவர் மதிமுக காரர். ஆனால் கட்சியில் பேசுவது தமிழ் ஈழம்..தமிழ் தேசியம்..திமுகவில் சற்குணம்,பூங்கோதை ஆலடி அருணா, கீதா ஜீவன் என ஆரம்பித்து வட்டச்செயலாளர் வரை தமிழை ஒழிக்கும் பணியை செம்மையாகச் செய்து வருகின்றனர்.தமிழ்தேசிய தலைவர்களில் பலரும் இட ஒதுக்கீட்டுக்கொள்கையை ஆதரிப்பவர்கள்தான்.அவர்கள், "தமிழ் வழிக்கல்வியில் +2 முடிப்பவர்களுக்கு அவர்களின் விகிதாச்சார அடிப்படையில் மருத்துவம்,பொறியியல் கல்வியிலும் அரசு வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வேண்டும்" எனக் குரல் கொடுப்பார்களா? மாட்டார்கள்.. ஏனெனில் அதனால் பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்கள் அவர்கள் குடும்பங்களாகவே பெரும்பாலும் இருக்கும். கர்நாடக மாநிலத்தில் இம்மாதிரியான இட ஒதுக்கீடு ஏற்கெனவே இருக்கிறது. தமிழ்நாட்டில் இதனை முதல் முதலாக எதிர்ப்பவர் மாமா வீரமணியாகத்தான் இருப்பார். ஏனெனில் திக வில் 99% பேரின் குழந்தைகளுக்கு தமிழ் அவ்வளவாக வாசிக்க வராது...வாசிக்கவே ஆளில்லாத வீடுகளுக்கு விடுதலை பேப்பர் வரும் என்பது முரண் நகைதான்.தமிழ்வழிக் கல்வியின் சீரழிவு மறுகாலனி ஆதிக்கத்துடன் நேரடி சம்பந்தப்பட்டது..காலனி ஆதிக்கத்தை வீழ்த்தாமல் தாய்மொழி வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதை எத்தனை தமிழ்த் தேசியர்கள் புரிந்திருக்கிறார்கள்?


புல்டோசர்

said...

இலங்கையில் சுரண்டுவதற்கு என்ன இருக்கிறது என்று கேட்கும் குழலிக்கு, சுரண்டல் என்பதன் பல பரிமாணங்களை விளக்கி ஆகவேண்டும் போலுள்ளது.


சுரண்டல் என்றால் ஒரு பன்னாட்டு கம்பெனி வந்திறங்கி 400 ஏக்கருக்கு பூமியை தோண்டி நிலக்கரியை அள்ளிக்கொண்டு செல்வது மட்டும்தான் எனச் சிலர் புரிந்து வைத்துள்ளார்கள்.இலங்கையின் கால் நடை வளர்ப்பையும் மொத்த பால் உற்பத்தியையும், முடக்கி விட்டு நெஸ்லே பால் பவுடர் உள்ளிறங்கி அடிமைப்படுத்துவதும் சுரண்டல்தான்.என்.டி.பி.சி. எனும் இந்திய நிறுவனம் அங்கு போய் அனல் மின் நிலையம் அமைத்து ஈழத்துக்கு யூனிட்டுக்கு இவ்வளவு தொகை என மின்விநியோகம் செய்வதும் தேசம் கடந்த சுரண்டல்தான்.இந்தியன் ஆயில் கார்ப்பொரேசன் அந்நாட்டின் ஒட்டுமொத்த எண்ணெய் விநியோகத்தைக் கைப்பற்றி ஏகபோகமாவதும் சுரண்டல்தான்.செல்போன் சேவை, விவசாய அபிவிருத்தி சேவை என எண்ணிலடங்கா சுரண்டல்களும் உள்ளன.ஏகாதிபத்தியத்தின் குறியீடான கோக்கும், ஆயத்த ஆடைகளும், மற்றும் பல்விதமான எலெக்றானிக் சாதனங்களும் விற்க ஈழம் போன்ற பரந்த சந்தையும் ஏகாதிபத்தியத்துக்கு தேவை.அவர்கள் (மேலை தேசத்தினர்) ஓய்வெடுத்து குஷியாய் இருக்க பீச் ரிசார்ட்டுகள் அமைக்க இலங்கையின் கடற்கரையில் மூன்றில் இரண்டு பங்கை வைத்திருக்கும் புலிகளின் ஒத்துழைப்பு அவர்களுக்கு தேவை.இருக்கவே இருக்கு..போரினால் நாசமடைந்த ஈழத்தை மறுசீரமைப்பு செய்கிறோம் என்று உள்ளே இறங்கி..அதன்பேரில் தரப்பட இருக்கும் பில்லியன் டாலர்கள் கடனை முடிவின்றி வட்டியாக வசூலிக்க..


குழலிக்கு புரிகிறதா?

************

தமிழ்த் தேசியம் பேசும் தலைவர்கள், குறைந்தபட்சம் தங்கள் கொள்கைகளுக்காவது விசுவாசமாக இருக்கிறார்களா?முதலில் தமிழ்வழிக் கல்வியை எடுத்துக் கொள்வோம்.5ஆம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப்பாடமாக்கு எனக்கோரி தமிழ்ச்சான்றோர் பேரவை உண்ணாநோன்பு இருந்தது.

அதன் நிறுவனர் நா.அருணாசலமோ தன் பேரனை ஊட்டியில் உள்ள தமிழே சொல்லித்தரப்படாத உயர்தர கான்வெண்ட் ஒன்றில் படிக்க வைத்துள்ளார். பெயர்த்தியையும் மெட்ரிகுலேசனில்தான் படிக்க வைத்துள்ளார்.ராமதாசின் பேரன் (அன்புமணியின் மகன்) தில்லியில் 8 தமிழ்ப்பள்ளிகள் இருந்தும் இந்தி,இங்கிலீசு பள்ளியில்தான் படிக்கிறான்.வீரமணி கும்பலைக் கேட்கவே வேண்டாம்.. 'பெரியார் தமிழை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் காட்டுமிராண்டி மொழி' என்று சொன்ன கருத்து, வீரமணி மெட்ரிகுலேசன் வியாபாரம் நடத்த உதவுகிறது..தமிழ் தேசியம் பேசும் பலரின் வீட்டுக்குள் தமிழே வாசிக்கத் தெரியாது என்பதுதான் உண்மை.மெற்றிகுலேசன் பள்ளிகளின் சங்கத்தலைவர் மதிமுக காரர். ஆனால் கட்சியில் பேசுவது தமிழ் ஈழம்..தமிழ் தேசியம்..திமுகவில் சற்குணம்,பூங்கோதை ஆலடி அருணா, கீதா ஜீவன் என ஆரம்பித்து வட்டச்செயலாளர் வரை தமிழை ஒழிக்கும் பணியை செம்மையாகச் செய்து வருகின்றனர்.தமிழ்தேசிய தலைவர்களில் பலரும் இட ஒதுக்கீட்டுக்கொள்கையை ஆதரிப்பவர்கள்தான்.அவர்கள், "தமிழ் வழிக்கல்வியில் +2 முடிப்பவர்களுக்கு அவர்களின் விகிதாச்சார அடிப்படையில் மருத்துவம்,பொறியியல் கல்வியிலும் அரசு வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வேண்டும்" எனக் குரல் கொடுப்பார்களா? மாட்டார்கள்.. ஏனெனில் அதனால் பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்கள் அவர்கள் குடும்பங்களாகவே பெரும்பாலும் இருக்கும். கர்நாடக மாநிலத்தில் இம்மாதிரியான இட ஒதுக்கீடு ஏற்கெனவே இருக்கிறது. தமிழ்நாட்டில் இதனை முதல் முதலாக எதிர்ப்பவர் மாமா வீரமணியாகத்தான் இருப்பார். ஏனெனில் திக வில் 99% பேரின் குழந்தைகளுக்கு தமிழ் அவ்வளவாக வாசிக்க வராது...வாசிக்கவே ஆளில்லாத வீடுகளுக்கு விடுதலை பேப்பர் வரும் என்பது முரண் நகைதான்.தமிழ்வழிக் கல்வியின் சீரழிவு மறுகாலனி ஆதிக்கத்துடன் நேரடி சம்பந்தப்பட்டது..காலனி ஆதிக்கத்தை வீழ்த்தாமல் தாய்மொழி வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதை எத்தனை தமிழ்த் தேசியர்கள் புரிந்திருக்கிறார்கள்?


அசுரனுடைய பதிவில் புல்டோசர இட்டிருக்கும் பின்னூட்டம்் புல்டோசர

said...

ஐய்யனை அய்யர் என்று நிறுவவும் முத்திரை குத்தவும் ஏன் இவ்வளவு ஆர்வமாயிருக்கிறீர்கள்?

இந்த ஒரு விடயம், இந்தப்பதிவில் வெளிப்படும் உங்கள் தமிழீழ ஆதரவின் நேர்மைத்தன்மையை சந்தேகப்பட வைக்கிறது.

உங்கள் தமிழீழ ஆதரவு ஈழத்தமிழ் மக்கள் மீது கொண்ட அக்கறையாலா அல்லது தீவிர இடதுசாரிகள் மீதான வெறுப்பினாலா?

said...

//ஒவ்வொரு பதார்த்தமா எதார்த்தமா பேசுவோம்..//

அப்படியா? ராமதாஸ் ரிலையன்ஸ் விசயத்தில் நடந்து கொண்டதில், அசுரன் எழுப்பிய ஒவ்வொரு 'எதார்த்தமான, பதார்த்தமான' கேள்விகளுக்கும் நீங்கள் பதிலளித்து விட்டீர்களா?

தியாகு சொல்லியிருப்பதைப் போல, "நான் கேள்விதான் கேப்பேன், எனக்கு கேள்வி கேட்க மட்டும்தான் தெரியும்" என்பதுதான் தமிழ் தேசிய முறுக்கோ?

தோழர் இரயாகரன் குறிப்பாக, இக்கேள்விகளுக்கு இங்கே பதிலளித்துள்ளார். அதற்கு முன்பாக, ஒவ்வொரு 'பதார்த்தமாக' சில விசயங்கள்:

1. தோழர் அசுரன் சுட்டியிருப்பது போல், முதலில் ராமதாசும், கருணாநிதியும் தமிழீழத்திற்கு செய்த சேவைகள் என்ன என்பதை தாங்கள் தயை கூர்ந்து விளக்க வேண்டும். எல்லா சமயங்களிலும், புதிய, புதிய கேள்விகளில் நீங்கள் ஒளிந்து கொள்ள முடியாது.

2.புலிகளின் பாசிசத்தை உறுதியோடு ஏற்க மறுக்கும் அதே வேளையில்,
கிட்டுவை நடுக்கடலில் இந்தியக் கடற்படை சுட்டுக் கொலை செய்த பொழுது, அதனை பகிரங்கமாக அம்பலப்படுத்திப் பேசிய ஒரே அமைப்பு, ம.க.இ.க-வா? பா.ம.க-வா? ஒரே பத்திரிக்கை புதிய ஜனநாயகமா? முரசொலியா?

3. தமிழீழம், தமிழீழம் என்று உணர்ச்சி முறுக்கேறுபவர்களுக்கெல்லாம், காஷ்மீரும், மணிப்பூரும் கண்ணில் படுவதில்லையே ஏன்? அங்கே இருப்பவர்களெல்லாம், தேசிய இன விடுதலைக்காகவாவது, உயிரோடு இருக்க வேண்டாமா? கார்கில் யுத்தம் நடந்த பொழுது, இந்திய-பாகிஸ்தான் அரசுகளின் தேசிய இன ஒடுக்குமுறையை துணிந்து மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திய ம.க.இ.க இந்திய தேசியத்தை ஆதரிக்கிறதா? அல்லது நிதிவசூல் செய்து கார்கிலுக்கு அனுப்பிய திமுகவும், பாமகவும் இந்திய தேசியத்தை ஆதரிக்கின்றனவா? ஏன், ஈழத்தமிழன் உசுரு மட்டும்தான் உசுரா? மத்தவன் உசுரெல்லாம் மசுரா?

3. வல்லபேசன் என்ற மருதையன்தான் ம.க.இ.கவின் செயலாளராகவும், ஒரு முன்மாதிரிப் புரட்சியாளனாகவும் தமிழகத்தில் செயலாற்றிக் கொண்டிருக்கிறார். அவருடைய அரசியல் நேர்மையையும், துணிவையும், புரட்சிகர உணர்வையும் சந்தேகிக்கிற யோக்கியவான் இங்கே யார்? 'காஷ்மீர், ஜீமாகானின் தாயா? உங்களது கூத்தியாளா?'("போராடும் தருணங்கள்"-ன் இறுதி வரி) என்று கேட்டார் மருதையன். ஒரே ஒரு மேடையில் மட்டுமாவது இந்த வார்த்தைகளை சொல்லிப் பார்க்கச் சொல்லேன், தமிழ் தேசிய காப்பாளர்களை.

தமிழீழ விடுதலைக்காக உணர்ச்சிப் புண்ணாக்கில் உருகி வெடிப்பவர்கள், இங்கே தமிழகத்தின் எத்தனை மக்கள் போராட்டங்களில் முன்னணியாக நின்றார்கள்? அதனால் தான் சொல்கிறோம், இந்த சவடால் பேர்வழிகளெல்லாம் 'தமிழினப் பிழைப்புவாதிகள்'என்று.

தோழர் அசுரன், மற்றும் இரயாகரன் எழுப்பியுள்ள எதிர்வினைகளுக்கு ஒவ்வொரு 'பதார்த்தமாக' பதிலளிக்கவும். மீண்டும் இன்னொரு 'பதார்த்ததிற்கு' தாவி ஓடி விட வேண்டாம்.

said...

தோழர் அரசு பால்ராஜ் மற்றூம் ஏ ராமதாஸ் செய்தது இதுக்கு பதில் சொல் ஏ கருணாநிதி செய்த இதற்கு பதில் சொல் என்று என்னை போட்டு நோண்டிக்கொண்டிருக்கும் மற்ற தோழர்களுக்கும், நான் திமுகவோ அல்லது பாமக கட்சிகளை கொள்கை பரப்பு செயலாளனோ அல்லது திக வின் மாநில துணை செயலாளனோ அல்ல....


எனக்கென்று அரசியல் உண்டு, எனக்கென்ற ஒவ்வொரு பிரச்சினையிலும் நிலைப்பாடு உண்டு, அந்த நிலைப்பாடு அதே பிரச்சினையில் திமுக, திக பாமக என எந்த கட்சியின் நிலைப்பாட்டோடு ஒத்துள்ளதோ அதனை ஆதரிப்பேன்... அதற்காக அந்த கட்சிகளின் எல்லா அரசியலுக்கும் நான் எப்படி பொறுப்பாவேன்....

காஷ்மீர் பிரச்சினை பற்றி என் கருத்தென்ன என்று கேளுங்கள்? அப்சல் விவகாரத்தில் நான் என்ன எழுதியிருக்கிறேன் என பாருங்கள், ஈழ தமிழ்விவகாரத்தில் என் நிலைப்பாடு என்ன என்று பாருங்கள், இடஒதுக்கீடும் அப்படியே.....

அதே சமயம் உலகின் ஒரே யோக்கிய இயக்கமாக அத்தனை பேரின் மீதும் சேறடித்து பார்ப்பனீய எதிர்ப்பை நீர்க்க வைக்க முயலும் ஒரு இயக்கத்தின் பார்ப்பன தலைமையை, முக்கியமாக என் அரசியல் நிலைப்பாடுகளுக்கு எதிரான ஒரு பார்ப்பன தலைமையை நான் கேள்வி கேட்கிறேன், என் அரசியல் நிலைப்பாடுகளுக்கு எதிரான அந்த பார்ப்பன தலைமையை தலையை தூக்கில் வைத்து ஆடும் அதன் ரசிகர்கள் பதில் சொல்கிறார்கள்....

என் அரசியல் வேறு பாமக, திமுக, திக அரசியல் வேறு, என் அரசியலை நான் மட்டுமே நிர்ணயிக்கிறேன், எந்த சித்தாந்தங்களுமோ எந்த தலைமையுமோ அல்ல.... பாமகவுடன் மாநில பிரிப்பிலும், திமுகவுடன் பல விடயங்களிலும் திகவுடன் அதிகார முன்னெடுப்பில் கலக்காமையையும் மேலும் பல விடயங்களில் நான் முரண்படுகிறேன், ஆனால் என் முக்கிய அதாவது என் அடிப்படை அரசியல் நிலைப்பாடுகளில் இந்த இயக்கங்களின் நிலைப்பாட்டிலும் வேறுபாடுகள் இல்லை அல்லது மிக குறைவு....

ஆனால் ம க இ க வின் அரசியல் நிலைப்பாடுகள் என் அரசியல் நிலைப்பாடுகளின் அடிப்படைக்கே வேறானது என்னும் போது அதை கேள்வி எழுப்புவது மட்டுமல்ல அந்த இயக்கத்தின் பார்ப்பன தலைமையின் செயல்பாட்டின் மீதே சந்தேகம் உள்ளது, தீவிரமான செயல்பாடுள்ள ஆட்களை இழுத்து அவர்களை அமுக்குவதே நோக்கமாக இருக்கலாம்...

said...

தோழர்களுக்கு,
வல்லபேசு அய்யர், ருக்மாங்கத் அய்யர் இவர்களில் யார் தோழர் மருதையன், யார் வீராசாமி? கொஞ்சம் சொல்லுங்களேன் தோழர்களே

said...

அந்த புகைப்படத்தில் இருக்கும் படுகொலை, சிங்கள ராணுவத்தின் (ஆம் சிங்கள ராணுவம்தான், இலங்கை ராணுவம் அல்ல) யூனிபார்ம் அணிந்த புலித்தோழர்களால் செய்யப்பட்டது என்பதும், வேண்டுமென்றே சிங்கள் ராணுவத்தின் தடயங்களை விட்டுச் சென்று, பொதுமக்கள் ஆதரவும், உலக ஆதரவும் தங்கள் பக்கம் திரும்பவேண்டுமென்று திட்டமிட்டு செய்யப்பட்டது என்பதும் ஆதாரப்பூர்வமாக பல ஏடுகளில் வெளியிடப்பட்டுவிட்டது என்பதும் உங்களுக்கு தெரியுமா?

அதனால்தான் புலிகள் இயக்கம் ஒரு பாசிச இயக்கம் என்று அழைக்கப்படுகிறது.

Ignorance is bliss!

said...

ஆக மொத்தத்தில் அய்யா, தனிக்காட்டு ராஜாவாக்கும்? சரி, இப்படிப் பேசுவோம்.உமது 'சொந்த' அரசியலுக்காக இதுவரை நீங்கள் செய்திருக்கும், மக்களை அணிதிரட்டுவதற்கான அரசியல் செயல்பாடுகள் என்ன?

ஈழப் பிரச்சினைக்கு தீர்வுப் புண்ணாக்கு வழங்கி விட்டு உங்கள் லாப்-டாப்பை தட்டிக் கொண்டிருப்பீர்களாக்கும்? இருபது வருடங்களுக்கும் மேலாக, புரட்சியே வாழ்க்கையாய், மக்களை சார்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சியாளர்களை எந்த ஆதாரமுமின்றி, அவர்களது வாழ்க்கை, நடைமுறை எதையும் கருத்தில் கொள்ளாமல், அவர்கள் பிறந்த சாதிக்காக 'சந்தேகம்' கொள்வீர்களாக்கும்?

உனது யோக்கியதை என்ன? அதை முதலில் சொல்.சும்மா கட்டுரை எழுதினேன், கவிதை எழுதினேன் என்றெல்லாம் கதையளக்கக் கூடாது. நிலைப்பாடுகள் மூளைக்குள் ஆர்ப்பரித்துக் கொண்டிருப்பதால் எதற்கும் பிரயோசனமில்லை. தெருவில் நின்று பேசிப் பார், பிறகு தெரியும் சேதி. ஈழப் பிரச்சினைக்காக உனது தீர்வையே முன்வைத்து தமிழகத்தில் பத்து பொதுக் கூட்டம் நடத்துவோம். வந்து பேசத் தயாரா?

said...

குழலி !

மருதைய்யன் அய்யரா இருந்துட்டு போராரு அதனால எந்த விதத்தில் இந்த நாடு பாதிக்கப்பட்டதுன்னு சொல்லமுடியுமா?

போராடுபவனை அய்யர்னு முத்திரை குத்துவதன் மூலம் நீங்கள் யாருக்கு சேவை செய்கிறீர்கள் .

மயூரன் அவர்கள் கேட்டமாதிரி .

மணியாட்டிய அய்யருக்கு போராடும் தகுதி இல்லைன்னு எங்காவது சொல்லி இருக்காரா அய்யா இராமதாசு !

மரம்வெட்டுபவனுக்கு மட்டுதான் புரட்சிகர சிந்தனை சொந்தம்னு எவனாவது உங்ககிட்ட சொன்னானா ?

சரி உலகத்தில இருக்கிற அய்யர கொல்லனும் , அய்யரோட கருத்துக்களை கொல்லனும் என்ற இரண்டு விசயம் வந்தா எதை செய்வீர்கள் .

(யப்பா இந்த தியாகு ஒரு சேசு அய்யர்னு சொல்லி தப்புசுடாதீங்க)

அதென்னா 200 சதவீதம் நேர்மைன்னு புதுசா ஒரு கணக்கு சொல்ரீங்க அதை நேரடியா வாங்க காட்டிடுரோம்
சிங்கப்பூருக்கெல்லாம்
ஏற்றுமதி செய்யமுடியாது நேர்மையை .

ரொம்ப குழுப்பிக்க வேண்டியதில்லை .

உங்ககிட்ட பேச ஒரே விசயம்தான் இருக்கும் மருதையன் அய்யர் அப்படிங்கிறது.

நான் சொல்லவா மருதையன்ன அய்யர்
அவங்க அப்பா அய்யா இப்படி பரம்படை அய்யர் சரி அதனால என்ன இப்போ ?

அவர் கோவிலில் மணியாட்டிகிட்டு இருக்காரா .
திண்ணியத்தில் மலம் திணித்த உங்க மாதிரி பெரிய சாதிகாரனோட ம்ல்லுகட்டுகிறாரா ?

அதுதானே உங்கள் வாதமா இருக்கனும்

பதினாரு வயதினிலே சப்பானி மாதிரி :
" அந்தாளு அய்யர் , அந்தாளு அய்யர்"
இதையே சொல்கிட்டு .

என்னா சின்னபுள்ள தனமா இருக்கு .

said...

சகோதரர்களே....
ஒரு ஈழத்தமிழனின் உருக்கமான வேண்டுகோள்....
உங்களது விவாதங்களுக்காக எங்கள் மனங்களை புண்படுத்தாதீர்கள். சிங்களப் பேரினவாததின் கோரப்பசிக்கு எம் குழந்தைகளை காவுகொடுத்துக்கொண்டிருக்கும், (தற்போது தினமும் 4 அல்லது 5 கொலைகளாவது விழுகின்ற்ன)வெளியே சென்ற பிள்ளை வீடு திரும்புமோ என்று தினமும் தாய்மார்கள் எங்கி தவிக்கயில்,

"அந்த புகைப்படத்தில் இருக்கும் படுகொலை, சிங்கள ராணுவத்தின் (ஆம் சிங்கள ராணுவம்தான், இலங்கை ராணுவம் அல்ல) யூனிபார்ம் அணிந்த புலித்தோழர்களால் செய்யப்பட்டது என்பதும், வேண்டுமென்றே சிங்கள் ராணுவத்தின் தடயங்களை விட்டுச் சென்று, பொதுமக்கள் ஆதரவும், உலக ஆதரவும் தங்கள் பக்கம் திரும்பவேண்டுமென்று திட்டமிட்டு செய்யப்பட்டது என்பதும் ஆதாரப்பூர்வமாக பல ஏடுகளில் வெளியிடப்பட்டுவிட்டது என்பதும் உங்களுக்கு தெரியுமா?
"
போன்ற கூற்றுக்கள் உன்மை தெரிந்த எம்மை எப்படி பாதித்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்:
ஐயா புல்டோசர், உங்கள் கீழ்த்தரமான அரசியலுக்கு எம் மரணங்களை விற்காதீர்கள்
படத்தில் உள்ள படுகொலைகள் நடந்தபோது நானும் மன்னாரில், அதே ஊரில் இருந்தவந்தான். என்ன நடந்தது என்று எனக்கு நன்றாக தெரியும்...
தயவுசெய்து எங்கள் பிணங்களில் நின்று அரசியல் செய்யாதீர்கள்..

said...

இங்கு ஈழத்தமிழர் என பிண்ணூட்டமிட்டிருப்பவருக்கு,
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த பின்னூட்டம் டோசர் என்ற பெயரில்தான் இடப்பட்டிருக்கிறதே ஒழிய, புல்டோசர் என்ற பெயரில் இடப்படவில்லை என்பதனை சாதரணமாக பார்த்தாலே தெரியும், ஒருவேளை வெளி என்று ஒருவர் போட்டிருந்தால் அதனை மிதக்கும் வெளி என்று நீங்கள் எடுத்துக்கொள்வீர்களா,
பின்னூட்டமிட்ட எல்லா இடங்களிடும் அவர் புல்டோசர் என்றுதான் போட்டிருக்கிறாரே தவிர டோர் என்று எங்குமே போட்டதில்லை, அதனை விடுத்து புல்டோசரிடம் உங்கள் கீழ்தரமான அரசியல் என்று சொல்வதிலிருந்தே நீங்கள் எதனை நிறுவ வருகிறீர்கள் என்ற உள்நோக்கம் புரிகிறது,
புல்டோசர் எனும் பெயரோடு ஆதாரபூர்வமாக ஆதாரபூர்வமாக பின்னூட்டமிட்டுக் கொண்டிருக்கும் தோழர்.புல்டோசரை தூற்றுவதற்கு இப்படி உணர்ச்சிபூர்வமான ஒரு ஏற்பாடா? இதனை எப்படி எடுத்துக்கொள்வது, மேலும் அந்த பின்னூட்டத்தில் புலித்தோழர்கள் என்று புலிகளை விளித்திருக்கிறது, எல்லோரையும் தோழர்கள் என்று அழைக்கும் பழக்கம் ம.க.இ.கவினருக்கு என்றுமே கிடையாது, அப்படி அழைப்பதற்கு அவர்கள் சி.பி.எம்மினரோ, பின்நவீனத்துவவாதிகளோ கிடையாது, மார்க்சியவாதிகள்.. 80களில் புலிகள் சோசலிச தமிழீழம் என்று சொல்லிய போது கூட ம.க.இ.க அவர்களை தோழர்கள் என்று அழைத்தது கிடையாது போராளிகள் என்றுதான் பு.ஜவும் பு.கவும் எழுதியது, ஒரு அரைநிலப்பிரபுத்துவ அரைக்காலனிய நாட்டில ஜனநாயகப் புரட்சிதான நடத்துமுடியுமேயல்லாமல் சோசலிச புரட்சி நடத்தமுடியாது ஆகவே சோசலிச தமிழீழம் என்பது தெளிவற்ற போர்தந்திரம் என்று விமர்சித்தது புதிய ஜனநாயகம், இன்று புலிகள் கம்யூனிஸ்டுகளை பூதங்கள் என்கிறார்கள், அமெரிக்கா சாத்தானின் ஆதரவை எதிர்பார்க்கும் போது கம்யூனிஸ்டுகள் பூதங்களாகத்தான் தெரிவார்கள். உடனே பேரினவாத கட்சியான ஜே.வி.பியோடு சேர்த்துவைத்து முத்திரை குத்திவிடாதீர்கள், அவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று நம்புபவர்கள் சோசலிச கட்சி என்று பெயர் வைத்திருந்த ஹிட்லரையும் கம்யூனிஸ்டு என்றுதான் நம்பவேண்டும், சரி இதெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் எந்த ம.க.இ.கவினரும் புலிகளை தோழர்கள் என்றழைக்கும் அளவிற்கு பாமரர்கள் கிடையாது என்பதற்காகத்தான். அந்த பின்னூட்டத்தில் துருத்திக்கொண்டு நிற்கும் தோழர் எனும் சொல் வேண்டுமென்ற எமது தோழர்களை முத்திரை குத்துவதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றுதான் ஐயுறவேண்டியிருக்கிறது. இதனையெல்லாம் கவனதில் கொண்டு யார் அந்த கீழ்தரமான அரசியலை செய்தவர்கள், யாருக்கு தோழர்.புல்டோசரை வாயடைக்க அவரை உணர்ச்சிபூர்வமான அரசியலில் சிக்கவைக்கவேண்டிய தேவை இருக்கிறது என்பதையெல்லாம் தெரிந்து கொண்டு நீங்கள் கண்டிக்க கிளம்பினால் நன்றாயிருக்கும்..

ஸ்டாலின்