ஈழத்தமிழனா? புலிகள் அழிந்து போகட்டும் - கருணாநிதியின் கடுப்பு

நாளை ஈழம் உருவாகுமென்றால் ஆட்சியையே இழக்க தயாரென்று மற்றுமொரு காமெடியை ஆரம்பித்து வைத்துள்ளார் தமிழின தலைவர்(?) மு.கருணாநிதி.

இதற்கு முன் இரு முறை ஆட்சியை கருணாநிதி ஏன் இழந்தார் என்பதை நாக.இளங்கோவன் அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார் இங்கே

தமிழின உணர்வாளர்களிலிருந்து எல்லோருக்கும் கலைஞரின் அமைதியை கண்டு ஆச்சரியமும் ஆவேசமும் குழப்பமும் அடைந்துள்ளார்கள், ஈழப்போராட்டத்தின் பிரச்சினைகளுக்கு முதல்வர் கருணாநிதி இப்போது புதிய கண்டுபிடிப்பாக சொல்லிக்கொண்டிருப்பது பிற போராளி இயக்கங்களுடனான புலிகளின் மோதல் என்றும் அதையே கிளிப்பிள்ளை போல பல உடன்பிறப்புகள் நம்புவதும் கருணாநிதிக்கும் திமுகவிற்கு இவர்கள் வாழ்க்கைப்பட்டவர்கள்(நன்றி அறிவுமதி) என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள்.

இதற்கும் மேல் யாராவது உண்ணாநிலை போராட்டம், போராட்டம் என்றால் அய்யகோ... ஆரிய சதியை பாரீர் என்று போலி கூச்சல் வேறு.

தயாநிதி மாறனுக்கு கேபினேட் மந்திரி பதவி வாங்குவதற்கும், டிஆர்ஸ் சந்திரசேகருக்கு அளிக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து துறையை அடம்பிடித்து மீண்டும் வாங்கிய கருணாநிதிக்கு ஈழத்திற்காக சோனியாவிடம் ஒரு துரும்பை கூட தூக்கி போடமுடியாததன் காரணம் என்ன? கருணாநிதியால் முடியது என உடன்பிறப்புகள் தொடர்ந்து நினைக்கலாம், ஆனால் கருணாநிதி யின் புலிகளின் மீதான "ஈகோ" ஈழத்தமிழருக்காக எதையுமே செய்ய நினைக்கவில்லை என்பதே காரணம்.

கருணாநிதி எந்த காலத்திலும் ராஜீவ்காந்தி கொலைக்கு முன்பு பின்பு என எக்காலத்திலும் விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக இருந்ததில்லை, ஏனெனில் விடுதலைப்புலிகளின் காட் ஃபாதராக திகழ்ந்தது எம்ஜிஆர் அவர்கள். மேலும் இன்றைக்கும் ஈழத்தமிழர்களின் குறிப்பாக புலி ஆதரவு பகுதியில் எம்ஜிஆர் தான் ஹீரோ, அங்கே கலைஞர் வெறும் ஜீரோ தான்.

80களின் மத்தியில் ஈழத்தமிழ் போராளி இயக்கங்களுக்காக கருணாநிதி திரட்டியபோது(இதுவும் கூட எம்ஜிஆருக்கு போட்டியாக)கருணாநிதியிடமிருந்து நிதி பெறக்கூடாது என பிரபாகரனுக்கு எம்ஜிஆர் தெரிவித்தார்.

போராளிகள் தமிழகத்தில் இருந்த காலகட்டங்களில் எத்தனையோ தலைவர்களோடு பழகிய புலிகள் கருணாநிதியுடன் எந்த நெருக்கத்திலும் இருந்ததில்லை.

எம்ஜிஆருக்கு புலிகள் செல்லபிள்ளைகள் என்றால் கருணாநிதியின் செல்லபிள்ளைகள் டெலோ, இந்த டெலோ இப்போது இருக்குமிடம் தெரியாமல் உள்ளது, ஈழப்போராளிகள் எம்ஜிஆரா கருணாநிதியா என்றால் கருணாநிதி பக்கம் என்ற அமிர்தலிங்கத்தை கொலை செய்தது புலிகள் என்பதாலும் தற்போது ஈழத்தமிழர்கள் அழிவு என்றால் அதில் புலிகளும் சேர்ந்ததே என்பதுமே கருணாநிதியின் கனத்த மவுனத்தின் பிண்ணனி காரணங்கள்.

புலிகள் சரியா தவறா என்பதை விட புலிகளை அழிக்கிறோமென மொத்த ஈழத்தமிழர்களையும் அழிக்கும் சிங்கள, இந்திய அரசாங்கங்களுக்கும், தன் ஈகோவிற்காக ஈழத்தமிழினமே அழிந்தாலும் பரவாயில்லை புலிகள் அழிந்து போகட்டும் என அமைதிகாக்கும் தமிழின தலைவர்(?) கருணாநிதியும் காரணமே.

தன் இனத்திற்காக அதன் மேன்மைக்காக, அதன் சுதந்திரத்திற்காக உயிரையும் தர தயாரக உள்ள, தந்த தமிழர்கள் எங்கே? தன் சொந்த ஈகோவிற்காக தமிழீழ இனமே அழிந்தாலும் பரவாயில்லை என இருக்கும் தமிழினதலைவர் எங்கே.

பார்பனியத்திற்கு எதிர்ப்பு, ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு என்று கூறி அரசு, அதிகாரம், தொழில்,மகன், மகள், சொந்தம் பந்தமென எல்லாவற்றிற்காகவும் மேலும் சொந்த ஈகோவுக்காகவும் தம் இனத்தை அழிக்கும் செயலுக்கு உடைந்தையாக உள்ள தலைமை வேண்டுமா?

தமிழின உணர்வாளர்களே அடையாளம் காண்பீர்கள் புதிய தமிழின தலைமைய, தன் இனத்திற்காக தம் உயிரை தர தயாராகும், இளைய தலைமையாக இருக்கட்டும். தன் புள்ளைகுட்டிகளின் மந்திரி பதவிக்காக எம் இனத்தை அடகு வைக்காத தலைமையாக இருக்கட்டும்.

28 பின்னூட்டங்கள்:

said...

http://www.sangam.org/articles/view/?id=172

http://nayanam.blogspot.com/2009/01/raqs-recently-asked-qns-on-dmk-part1.html

http://www.rediff.com/news/nov/29ltte1.htm

said...

அத்தகைய மனிதரின் கட்சியில் பலத்த புலி ஆதரவாளராக வைகோ எப்படி வந்தார். அந்த பின்னனியும் கொஞ்சம் சொல்லுங்க

said...

'தமிழின உணர்வாளர்களே அடையாளம் காண்பீர்கள் புதிய தமிழின தலைமைய, தன் இனத்திற்காக தம் உயிரை தர தயாராகும், இளைய தலைமையாக இருக்கட்டும். தன் புள்ளைகுட்டிகளின் மந்திரி பதவிக்காக எம் இனத்தை அடகு வைக்காத தலைமையாக இருக்கட்டும்'

அப்படியானால், மருத்துவர் ராமதாசும்
தேறமாட்டார்.நீங்கள் யார் இதற்கு பொருத்தமானவர் என்று எழுதலாம்.

said...

ஈழத்திலே போராளிகளுக்குள் நடந்த சண்டை ஈழப் போராட்டத்தின் கருப்பு பக்கம் தான். அதனை எளிதாக கடந்து சென்று விட முடியாது. ஆனால் வரலாற்று ரீதியிலான அந்த தவறை தன்னுடைய அரசியல் சுயலாபத்திற்கும், பதவியை விட்டு விலக முடியாத கையாலாகததனத்திற்கும் தான் திருக்குவளை முத்துவேல் கருணாநிதி பயன்படுத்திக் கொள்கிறார். ஈழப் பிரச்சனை குறித்து பேசி கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தால் அவரது பதில் சகோதர படுகொலையில் வந்து முடியும். தன்னுடைய பலவீனத்தை மறைக்க பழியை கோரிக்கை வைத்தவன் மீதே போட்டு விட்டு தப்பிக்க நினைக்கிறார். ஆனால் ஈழத்து சகோதர படுகொலையில் தற்பொழுது அவருடன் கூட்டணி அமைத்து இருக்கும் சோனியாவின் கணவர் ராஜீவ் ஆட்சியில் இருந்த உளவுத்துறைக்கு உள்ள பங்களிப்பு குறித்து யாரும் பேசுவதில்லை.

இன்றைக்கு ஜெயலலிதாவையும், கருணாநிதியையும் ஒரே தராசில் வைத்து தான் எடை போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சோ, ஹிந்து ராம் போன்றவர்களின் கொள்கைப் பிரச்சார பீரங்கியாக கருணாநிதி மாறிப் போனது தான் ஜெயலலிதாவின் திராவிட பரிமாணத்தை விட மோசமான பரிமாணமாக உள்ளது.

******

ஈழப் போராளிகளின் சகோதர சண்டை குறித்து பேசும் முத்துவேல் கருணாநிதியின் பிள்ளைகளான ஸ்டாலின் - அழகிரி சண்டையில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இந்த கருணாநிதி என்ன பதில் சொல்லப் போகிறார் ? அவரின் இடத்திற்கு அவருக்குப் பிறகு யார் வரப் போகிறார்கள் என்று நடந்து வரும் சண்டையில் கொல்லப்பட்ட அப்பாவிகள் நிறையப் பேர் உள்ள நிலையில் அதற்கு பதில் சொல்ல முடியாத கருணாநிதிக்கு ஈழத்தில் நடந்த சகோதரப் படுகொலை குறித்து பேச என்ன யோக்கியதை உள்ளது ?

தா.கிருஷ்ணன் ஸ்டாலின் ஆதரவாளர் என்பதற்காக கொல்லப்பட்டாரே ? அவரை கொன்றவர்கள் யார் ?

மாறனுக்கும் - அழகிரிக்கும் நடந்த கருணாநிதியின் குடும்ப சண்டையில் பலியானார்களே மூன்று அப்பாவி தினகரன் ஊழியர்கள், அவர்களின் உயிருக்கு இந்த கருணாநிதி என்ன பதில் சொல்லப் போகிறார் ?

******

கருணாநிதியின் ஈகோ என்பதை விட கருணாநிதியின் அப்பட்டமான பதவி ஆசையும், தனக்கு பிறகு ஆட்சியை பத்திரமாக தன் வாரிசுகளிடம் ஒப்படைக்கும் ஆசையும் தான் அவரின் தற்போதைய நிலைப்பாட்டிற்கு காரணம்.

அவர், தான், தன் குடும்பம் என புத்திசாலித்தனமாக தான் உள்ளார்.
தமிழினத்தலைவர் என்று கொண்டாடியவர்களை தான் முட்டாளாக்கி விட்டார்

said...

//அவர், தான், தன் குடும்பம் என புத்திசாலித்தனமாக தான் உள்ளார்.
தமிழினத்தலைவர் என்று கொண்டாடியவர்களை தான் முட்டாளாக்கி விட்டார்
//
அதானே....

திமுகவையும் கருணாநிதியையும் மறுபரிசீலனை செய்யும் நேரம் வந்துவிட்டது தமிழினத்துக்கு

said...

//எம்ஜிஆருக்கு புலிகள் செல்லபிள்ளைகள் என்றால் கருணாநிதியின் செல்லபிள்ளைகள் ஈபிஆர்எல்எஃப்,// EPRLF for CPI (M). Karunanidhi supported TELO.

said...

Peter said...
//எம்ஜிஆருக்கு புலிகள் செல்லபிள்ளைகள் என்றால் கருணாநிதியின் செல்லபிள்ளைகள் ஈபிஆர்எல்எஃப்,// EPRLF for CPI (M). Karunanidhi supported TELO.
//
பிழைக்கு மன்னிக்கவும் பதிவில் மாற்றிவிட்டேன்....

வேறு விவாதத்திற்குள் போக வேண்டாமென்றாலும் ஈபிஆர்எல்எஃப் - மகஇக இரண்டும் அடிக்கும் ஜாயிண்ட்டும் அது இணையும் புள்ளியும் எது? 'ரா' 'ரா' இந்தியன் ரா ரா....

said...

சூப்பரா போடுறாங்கப்பா தமிழ்மணத்துல இந்த பதிவுக்கு ஓட்டு... சும்மாவா 40 ஆயிரம் ஓட்டுல திருமங்கலத்துல ஜெயிச்சவங்களாச்சே....

said...

ஒரு காலத்தில் என் போன்ற ஈழத்தமிழர்கள் திராவிடக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்கள்.நாத்திகவாதம்,என்பதை தவிர பெரியாரின் கொள்கைகளான சாதி ஒழிப்பு,பெண்ணடிமை எதிர்ப்பு மூட நம்பிக்கை எதிர்ப்பு மற்றும் அண்ணாவின் தமிழ் இன மொழிப் பற்றினால் நாங்கள் கவரப் பட்டோம்.ஈழத்தமிழர்கள் தமிழ் சைவம் என்று இரண்டையும் தங்கள் இரு கண்களாகக் கருதும் பாரம்பரியத்தில் வந்ததால் நாத்திக வாதம் அங்கு அவ்வளவாக வேரூன்றவில்லை.
நாங்கள் எப்போதுமே திராவிடக் கட்சிகளுக்குத்தான் எமது மானசீக ஆதரவைக் கொடுத்தோம். ஆனால் இன்று இரு பெரிய திராவிடக் கட்சிகளுமே ஈழத்தமிழர்களுக்குத் துரோகம் செய்கிற கட்சிகளாக மாறி விட்டன.
ஜெயலலிதா முழுத்தமிழ் இனத்துக்குமே இந்தியத் தமிழர்களுக்கும் சேர்த்துத்தான் எதிரியாகவும் சிங்கள அரசின் பிரதிநிதி போலவும் கருத்து தெரிவித்து செயல் படுகிறார்.
கருணாநிதியோ தனது குடும்பம் பதவி என்பன பற்றி மட்டுமே அக்கறை காட்டி தமிழ் நாட்டு மக்களையும் உலகத் தமிழர்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்.
நாங்கள் அன்பு வைத்த திராவிடக் கட்சிகள் இப்படி மாறியது மிகவும் கவலை தருகிறது.
என் பெயர் சிவகுமார் .

said...

கருணாநிதியை விட ஈழத்து கருணா எவ்வளவோ மேல்.

கருணாநிதி பதவிக்காக மட்டுமே அரசியல் செய்கிறார்.அன்று இந்திரா காலில் விழுந்ததிலிருந்து,இன்று சோனியா காலில் விழுவதுவரை.

இந்திய அரசில் பலமாக யார் இருந்தாலும் சரி அவர்கள் காலில் விழ தனக்கு மட்டுமே முதல் உரிமை என்று எண்ணி செயல்படுவார்.வேறு யாராவது விழுந்துவிட்டால்,ஆரிய சதி,அவாள் இவாள் பற்றி, "கருணாநிதி தமிழில்" கவிதை வந்துவிடும்.

இப்போது அத்வானி காலில் விழ சகுனம் பார்த்துக்கொண்டுள்ளார்.

இது போன்ற நபர்களை தமிழன் என்று சொல்வதே கேவலம்,அதிலும் தலைவனாம்.

said...

திரு நாக.இளங்கோவன் அவர்களின் பதிவையும் படித்தாயிற்று.
நீங்கள் சொல்லும் ஈகோ பிரச்சனை உண்மை. எம்.ஜி.ஆர் ஒரு போராளி இயக்கத்தையும், கலைஞர் ஒரு போராளி இயக்கத்தையும் ஆதரித்து இவர்களின் அரசியல் சித்து விளையாட்டை ஈழ மக்கள் தலையில் கட்டியது முற்றிலும் உண்மை. இது எங்கு போய் முடியும் என்று தெரியாத நிலை தான் தற்போதைய நிலை.
ஈகோ பிரச்சனையால் தான் உலகப் போர் எல்லாம் மூண்டது. ஏன் ஈராக் போரே ஈகோ பிரச்சனையால் தான் நடந்தது. அங்கு எந்த பேரழிவு ஆயுதமும் இல்லை. இப்போது புஷ் சொல்வது என்ன? "உளவுத்துறையின் தவறானத் தகவல்களால் போர் தொடுத்துவிட்டேன்". அதற்குக் கொடுத்த விலை என்ன? எத்தனை குற்றுயிரும் குலை உயிரும்?

said...

My guess is something like this..

USA wants to set up its base in Srilanka and therefore India is almost behaving like Isreal and waging proxy war in Srilanka for the sake of USA.It is for this reason that USA is now backing India compared to Pakistan.
Karunanidhi was asked to prevent any upraisals in the state of Tamilnadu and for this he might be compensated. He is doing this job efficiently by threatening others,
arresting people.If it gets worse then he have his powerful
weapons like saying "I am ready to die for the cause of Tamil eelam".."Ready to lose the power".."They are trying
to bring down my government" etc.Even now he knows that
the Primeminister is going for an Operation and it might take a months time for him to resume office thats why Karunanidhi has said this is the Ultimate request.
Karunanidhi will further buy time stating that the primeminister
is not well.Meanwhile he will be desperately hoping that LTTE will be totally destroyed with in that time.

From my point of view Karunanidhi is worst than Jayalalitha
because Jayalalitha is an enemy but "Karuna"nidhi is a traitor.
He is using the good will that people have for him against people's wishes..for his personal benefit.People have to understand that and protest against DMK.

said...

////அவர், தான், தன் குடும்பம் என புத்திசாலித்தனமாக தான் உள்ளார்.
தமிழினத்தலைவர் என்று கொண்டாடியவர்களை தான் முட்டாளாக்கி விட்டார்
//
அதானே....

திமுகவையும் கருணாநிதியையும் மறுபரிசீலனை செய்யும் நேரம் வந்துவிட்டது தமிழினத்துக்கு//

நீங்க எல்லாம் அவர்களை பற்றி லேட்டா புரிந்துயிருக்கிறீர்கள் என்பது தான் உண்மை! அவர் ஆரம்பம் முதலே தான் தன் குடும்பம் பதவி என்ற நிலையில் மட்டுமே வாழ்ந்தவர் என்பது தான் நிதர்சனம்!


//சூப்பரா போடுறாங்கப்பா தமிழ்மணத்துல இந்த பதிவுக்கு ஓட்டு... சும்மாவா 40 ஆயிரம் ஓட்டுல திருமங்கலத்துல ஜெயிச்சவங்களாச்சே....// இதுவும் நீங்க லேட்டா புரிந்த கொண்டிருக்கிறீர்கள் அவர்களுக்கு எதிரான கொள்கை / ஓட்டு எதுவாயினும் அதை ஜெயிக்க அவர்களுக்கு தெரிந்த ஒரே வழி அட்ரஸ் இல்லாமல் செய்வது தான்! தமிழ்மணத்தில் வரவில்லை என்றால் இந்த பதிவின் ஆக்கம் யாருக்கும் சென்றடையாது என்ற நல்ல எண்ணம்:)) இதற்கு பின் யார் என்று எனக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும் :)))))))

said...

:)

Anputan
Singai Nathan

said...

சரியாகச் சுட்டி இருக்கிறீர்கள். வேறு மாற்று இல்லாத நிலையில் பெருசை வைச்சு காலம் தள்ள வேண்டி இருக்கு.

மாற்றுத் தலைமைகள் குறித்தும், பொதுவில் தமிழர்களின் எதிர் காலம் குறித்தும் உங்கள் இடுகைகளை எதிர்பார்க்கிறேன்.

said...

1. On 2002 April Prabakaran addressed a press meet. That was a great time India was about to allow peace negotion in one of Indian City. that was a good time after 1991.

2. Anton Balasingam asked Indian government for treatment. India also about to agree.

Those were great oppertunity. Jayalalitha completly opposed those by using her 'terrosit / killer of Rajiv'. She brought a speical motion in Assembly to bring or arrest Prapakaran for Rajiv case.

That time it was supported by only one party. not communists. only DMK. (yes it is true DMK supported that motion).

Don't expect any thing from Karunanidhi.

Why this PMK always throwing the ball to DMK hence they too part of UPA govt.???

said...

http://tvpravi.blogspot.com/2009/01/blog-post_1078.html

said...

அருமையான ஒரு அலசல்.
வாழ்த்துக்கள்.

said...

//கருணாநிதி எந்த காலத்திலும் ராஜீவ்காந்தி கொலைக்கு முன்பு பின்பு என எக்காலத்திலும் விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக இருந்ததில்லை, ஏனெனில் விடுதலைப்புலிகளின் காட் ஃபாதராக திகழ்ந்தது எம்ஜிஆர் அவர்கள். மேலும் இன்றைக்கும் ஈழத்தமிழர்களின் குறிப்பாக புலி ஆதரவு பகுதியில் எம்ஜிஆர் தான் ஹீரோ, அங்கே கலைஞர் வெறும் ஜீரோ தான்.//

இதமட்டும் நாம் பாமர மக்கள் கிட்ட சேர்க்கவேண்டியது நம் கடமை.


நம் முதல்வர் ஆரம்பம் (அண்ணா காலம் தொட்டே) முதலே தெளிவாகத்தான் உள்ளார் நாம் தான் ஏமாந்தோம்...


தோழமையுடன்

முகமது பாருக்

said...

//கருணாநிதி எந்த காலத்திலும் ராஜீவ்காந்தி கொலைக்கு முன்பு பின்பு என எக்காலத்திலும் விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக இருந்ததில்லை, ஏனெனில் விடுதலைப்புலிகளின் காட் ஃபாதராக திகழ்ந்தது எம்ஜிஆர் அவர்கள். மேலும் இன்றைக்கும் ஈழத்தமிழர்களின் குறிப்பாக புலி ஆதரவு பகுதியில் எம்ஜிஆர் தான் ஹீரோ, அங்கே கலைஞர் வெறும் ஜீரோ தான்.//

இதமட்டும் நாம் பாமர மக்கள் கிட்ட சேர்க்கவேண்டியது நம் கடமை.


நம் முதல்வர் ஆரம்பம் (அண்ணா காலம் தொட்டே) முதலே தெளிவாகத்தான் உள்ளார் நாம் தான் ஏமாந்தோம்...


தோழமையுடன்

முகமது பாருக்

said...

//"ஈழத்தமிழனா? புலிகள் அழிந்து போகட்டும் - கருணாநிதியின் கடுப்பு"//

இது கருணாநிதியின் கடுப்பு அல்ல.

ஒரு இனத்துரோகம்,நம்பிக்கை துரோகம், மக்கள் விரோதம், நம்பவைத்து கழுத்தறுத்தல் ஆட்சிக்கு ஆதரவு விலக்கம் என்றால் ஆடிப்போகாதா மைய அரசு அதனுடன் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.

பொதுவுடைமக் கட்சி இராசா சொன்னார் கெஞ்சுவது சனநாயகம் அல்ல என்று கருணாநிதிக்கு இது தெரியாதா என்ன? அவர் தனக்கு எதுவும் நேராதவரை அப்படியே இருப்பார்.//கருணாநிதியை விட ஈழத்து கருணா எவ்வளவோ மேல்.//

கருணா(நிதி) என்றாலே துரோகம் தான் பொருள் போலிருக்கிறது.

கருணாநிதியின் ஈகோ என்பதை விட கருணாநிதியின் சுயநலம், தனது ஆட்சி நீடிக்கவேண்டும். ஆனால் எவன் செத்தாலும் இவருக்கு பரவாயில்லை. தொடர்ந்து இந்திய தமிழர்களின் சிங்கள எதிர்ப்பு உணர்வை சிதைக்கிற வேலையை தொடர்ந்து செய்கிறார்.

இப்போது கூடப் பாருங்கள் இன்று சனவரி 25 2009 ஆனால் பிப்ரவரி 15 க்குள் கூடுமாம் தி.மு.க குழு 20 நாள் எதற்கு? 20 நாட்கள்வரை மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிப்பது, இவர் வேலை,

சமீபத்தில் மக்கள் எழுச்சி மீண்டும் ஏற்படும் நிலை வந்த போது இராசாவை அனுப்பி வேறு ஒரு காரணத்தை அவிழ்த்து விட்டார்.அதுவரை காலம் கடத்தி மத்திய அரசுக்கு துணைபோவது கருணாநிதிதான். அவர்களை பாதுகாக்க எதையாவது ஒரு பொய்யான காரணத்தை வெளிப்படுத்துவார்.

எப்படியாவது காலத்தை கடத்துவது, எப்போதும் எதையாவது தமிழர்களுக்கு செய்வார் என நம்ப வைப்பது. கடைசியில் கழுத்தறுப்பது என்பது கருணாநிதியில் தொடர் வேலையாக இருக்கிறது. காலம் பதில் சொல்லும்.

said...

//ஈழத்தமிழர்கள் தமிழ் சைவம் என்று இரண்டையும் தங்கள் இரு கண்களாகக் கருதும் பாரம்பரியத்தில் வந்ததால் நாத்திக வாதம் அங்கு அவ்வளவாக வேரூன்றவில்லை. //

சிவக்குமார்,

நீங்கள் தெளிவாக சைவம் என்று சொல்லிவிட்டீர்கள். நாங்கள் சொல்லத்தெரியாமல் முருகனும் மாரியம்மனும் என்று சொல்கிறோம்.

said...

கருணாநிதியா? தமிழனத்தலைவரா?!

இல்லை,இல்லை...

அவர் தமிழ் ஈனத்தலைவராச்சே!

புரிந்துகொள் தமிழினமே!

அழகிரியின் ஆர்ப்பாட்டமே கூடிய சீக்கிரம் இவரின் குடும்பத்திற்கு சாவுமணியடிக்கும் என்பது மட்டும் உண்மை.

said...

வரலாறு சரியாக உள்ளது.
எதையெல்லாம் எதிர்த்து தி.மு.கவை தீயசக்தி வளர்ந்ததோ...அதனை எல்லாம் இன்று தி.மு.க ஆதரிக்கும்.

இந்தியை எதிர்த்தார்கள் பின் தீயசக்தியின் பேரன் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என, "எனது பேரன் தயாநிதிக்கு இந்தி சரளமாக பேச தெரியும், அவனை வெற்றி பெற வைத்தால் தமிழர்களுக்காக டெல்லியில் இந்தியில் பேசி உங்களுக்கு வேண்டியதை செய்வான் என்று கூறியதும் இதே தீயசக்திதான். இந்தியை எதிர்க்கவும் செய்தது இன்று ஆதரிக்கவும் செய்கிறது.
அது போல் காலத்தின் கட்டாயத்தால் விடுதலைபுலிகள் தலைமையில் நாளை ஈழம் அமையும் அன்று இந்த தீயசக்தி ஈழத்தில் நாளிதழ் பதிப்பையும், தொலைக்காட்சி ஒளிபரப்ப உரிமையும் கேட்டு நிற்கும்.

said...

தமிழ் ஈன தலைவர் கருணாநிதியின் திமுக செயற்குழு கூட்டத்தின் முடிவுகளும் அதற்கு பின்னான பேட்டியில் கருணாநிதி தொடர்ந்து வற்புறுத்தி பேசும் கருணாநிதியின் ஆதரவாளராக இருந்த அமிர்தலிங்கம் கொலை, சகோதர யுத்தம் பற்றி அழுத்தி பேசுவதும் தமிழ் ஈன தலைவர் கருணாநிதிக்கு இனத்தை விட சொந்த ஈகோ எவ்வளவு கேவலமாக ஆட்டிவைக்கிறது என்பதும் இந்த பதிவில் சொன்ன விசயங்கள் எத்தனை தூரம் உண்மையாக உள்ளது என்பதையும் தெரிவிக்கிறது.

said...

//பார்பனியத்திற்கு எதிர்ப்பு, ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு என்று கூறி அரசு, அதிகாரம், தொழில்,மகன், மகள், சொந்தம் பந்தமென எல்லாவற்றிற்காகவும் மேலும் சொந்த ஈகோவுக்காகவும் தம் இனத்தை அழிக்கும் செயலுக்கு உடைந்தையாக உள்ள தலைமை வேண்டுமா?//

என்ன தல, வர வர அக்மார்க் ரத்தத்தின் ரத்தமாவே மாறிட்டு வறிங்க? :)

said...

//என்ன தல, வர வர அக்மார்க் ரத்தத்தின் ரத்தமாவே மாறிட்டு வறிங்க? :)
//
உடன்பிறப்பாக இருந்த என்னை ரத்தத்தின்ரத்தமாக்கியது யார்குற்றம்? என் குற்றமா? அல்லது 'கொ'லைஞரின் குற்றமா?

said...

ஒருத்தர் வெள்ளை சுண்ணாம்பு, இன்னொருத்தர் தார் டின்னோடு அலைகிறீர்கள்.

(அன்றைய ) முதல்வர் கருணாநிதி ஈழ்த்திலிருந்து திரும்பிய இந்திய அமைதிப் படையை
வரவேற்க போகவில்லை. இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று அப்போது எழுதினார்கள். அப்போது கருணாநிதி எதிர்கட்சியிலும் இல்லை. எம் ஜி ஆர் இல்லவே இல்லை.