பணமா? ஈழமா? மற்றும் சில தொகுதி நிலவரங்கள்

தற்போது வாக்கு பதிவு நடைபெற்று கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பணமா? ஈழமா? என்ற அளவில் போட்டி, ஈழம் அதிக அளவில் தாக்கத்தை உருவாக்கினால் திமுக-காங்கிரஸ் மொத்தமாக ஊத்திக்கொள்ளவும் வாய்ப்புள்ளது... பணம் அதிகமென்றால் அதிமுக கூட்டணியின் வெற்றி தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளது, யார் மீதும் நம்பிக்கையில்லாமல் 49ஓ போடுவதும் நடக்கிறது எனக்கு முன் வரிசையில் நின்றிருந்தவ்ர் 49ஓ போட்டார்.

போட்டி மிக கடுமையாக உள்ளது, பெரும்பாலான தொகுதிகள் கணிக்க இயலாததாகவே உள்ளது, பத்தாயிரத்துக்கும் குறைவான வாக்குவித்தியாசம் என்பது 4 கிளை செயலாளரோ, ஒரு நகர செயலாளரோ கவிழ்த்துவிட்டாலே தொகுதி கை மாறிவிடும் என்ற நிலையில் கணிப்பு தப்பி போக நிறைய வாய்ப்புகள் உண்டு.

மிககுறைந்த வாக்குவித்தியாசம் என்றாலும் சில தொகுதி நிலவரங்கள் கீழே... ஒவ்வொரு தொகுதிக்குட்பட்ட சிலரிடம் பேசியது, பழைய புள்ளிவிபரங்கள், தொகுதி மறுசீரமைப்பு, கூட்டணி, ஈழம், பணம், உள்ளூர் மற்றும் உள்குத்து அரசியல் என பல விசயங்களை கொண்டே இது தனிப்பட்டு என்னால் கணிக்கப்பட்டுள்ளது. வரும் ஆனா வராது என சொல்ல விரும்பவில்லை, ஒரு ஓட்டு வித்தியாசமென்றாலும் இது தான் என்று சொல்லவே விரும்புகிறேன், எல்லா கணக்கும் 16ம் தேதி நண்பகலுக்கு முன்பே தெரிந்துவிடும்.

வட சென்னை - தா.பாண்டியன்

மத்திய சென்னை - தயாநிதி மாறன்

தென்சென்னை - சிட்லபாக்கம் ராஜேந்திரன்

காஞ்சிபுரம் - டாக்டர் ராமகிருஷ்ணன்

ஸ்ரீபெரும்புத்தூர் - ஏ.கே.மூர்த்தி
எல்லாவற்றிலும் சம வலுவிருந்தாலும் மத்திய தரவர்கத்திடமும் மிடில்கிளாஸ் பெண்களிடமும் மூர்த்தி எடுத்துள்ள நல்ல பெயர் வெகுசில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை படுத்தும்.

விழுப்புரம் - ஆனந்தன்
வாக்குவித்தியாசம் 30 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும், கட்சி பாகுபாடின்றி தலித் மற்றும் தலித் அல்லாதோராக சாதியாக பிளந்துள்ள தொகுதி விடுதலை சிறுத்தைகளுக்கு பாதகமாக உள்ளது.

பாண்டிச்சேரி - நாராயணசாமி
வாக்குவித்தியாசம் 20 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும், கூட்டணி பலம் மற்றும் எல்லாம் பண மயம். ஈழப்பிரச்சினை இங்கு நன்றாக எடுபட்டிருந்தாலும் அதையெல்லாம் ஓட்டாக்குமளவுக்கு பாமகவிற்கு பலமான கட்டமைப்பு மற்றும் கூட்டணி அதிமுகவுக்கு செல்வாக்கு இல்லாததே காங்கிரசை போட்டு பார்க்க இயலாமல் உள்ளது.

கடலூர் - எம்.சி.சம்பத் (விஜயகாந்த் கட்சி சுமாராக ஒரு இலட்சம் வாக்குகளை பெறும்)வாக்குவித்தியாசம் 30 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்

சிதம்பரம் - கணிக்க இயலவில்லை
வாக்கு வித்தியாசம் 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்கும், தொகுதி மறுசீரமைப்பில் விடுதலை சிறுத்தைகளின் வலுவான மங்களூர், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பாதி இவை களுக்கு பதில் பாமக வலுவான ஜெயங்கொண்டமும், அரியலூரும்(இங்கே சிறுத்தைகளும் வலுவானநிலையில் உள்ளார்கள்), குன்னம் சிதம்பரம் தொகுதியில் வந்திருப்பது, கட்சி வித்தியாசமில்லாமல் சாதியால் தொகுதி பிளவுபட்டுள்ளதும் திருமாவிற்கு பாதகமான அம்சங்கள்.

அரக்கோணம் - ஜெகத்ரட்சகன் / ஏ.வேலு - கணிக்க இயலவில்லை

கள்ளக்குறிச்சி - தன்ராஜ் வாக்குவித்தியாசம் 10-15 ஆயிரம், கொமுபே வின் புண்ணியம் கொஞ்சம் தன்ராஜை முன்னிலை படுத்தும்.


திருவண்ணாமலை - வேணுகோபால், வாக்குவித்தியாசம் 10 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் குருவின் நல்ல(?) பெயரும் வேணுகோபாலின் நல்ல பெயரும் என்ற பரப்புரை வேணுகோபால் முந்த முக்கிய காரணியாக இருக்கும்

தர்மபுரி ‍- டாக்டர் செந்தில்

7 பின்னூட்டங்கள்:

said...

//திருவண்ணாமலை - வேணுகோபால், வாக்குவித்தியாசம் 10 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் குருவின் நல்ல(?) பெயரும் வேணுகோபாலின் நல்ல பெயரும் என்ற பரப்புரை வேணுகோபால் முந்த முக்கிய காரணியாக இருக்கும்//

Guru Win by 45000 votes

//சிதம்பரம் - கணிக்க இயலவில்லை
வாக்கு வித்தியாசம் 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்கும், தொகுதி மறுசீரமைப்பில் விடுதலை சிறுத்தைகளின் வலுவான மங்களூர், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பாதி இவை களுக்கு பதில் பாமக வலுவான ஜெயங்கொண்டமும், அரியலூரும்(இங்கே சிறுத்தைகளும் வலுவானநிலையில் உள்ளார்கள்), குன்னம் சிதம்பரம் தொகுதியில் வந்திருப்பது, கட்சி வித்தியாசமில்லாமல் சாதியால் தொகுதி பிளவுபட்டுள்ளதும் திருமாவிற்கு பாதகமான அம்சங்கள்.//
Ponnusamy win by 60000 votes

//பாண்டிச்சேரி - நாராயணசாமி
வாக்குவித்தியாசம் 20 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும், கூட்டணி பலம் மற்றும் எல்லாம் பண மயம். ஈழப்பிரச்சினை இங்கு நன்றாக எடுபட்டிருந்தாலும் அதையெல்லாம் ஓட்டாக்குமளவுக்கு பாமகவிற்கு பலமான கட்டமைப்பு மற்றும் கூட்டணி அதிமுகவுக்கு செல்வாக்கு இல்லாததே காங்கிரசை போட்டு பார்க்க இயலாமல் உள்ளது.//
Ramadas win by 7500 votes

said...

நம்ம ஏரியா மட்டும் தானா..,
மீதியெல்லாம்...?

said...

Friend,

will see saturday......

said...

no comments??
Thanks Kuzhali. I was waiting for your views on the elections.
Thanks for sharing this.
What about the other constituencies?

Will eelam emerge as the single deciding factor apart from the other usual factor??

said...

நல்ல கணிப்பு கொழலி. அப்படியே நடந்தது.

said...

hi,
Wait for time... always time is the medicine for all issues. These kind of ettapans(DMK family members) will destroy themself after the death of karuna ettapa thatha..

katchigal marum, nadagam marum.. wait for the time
wait for big comedies..

Houston tamilan

said...

chozhan and kuzhali....

just a reminder..

Guru, ponnusamy, senthil, ramadass , velu all had a worse defeat..

a k murthy alone lost by 30K votes
rest of all more than 50K