அழகிய தமிழ் பெயர் தேவை

நண்பரின் ஆண் குழந்தைக்கு அழகிய தூய தமிழ்பெயர் தேவை, ஆங்கில எழுத்து P,N ஆகியவைகளில் ஆரம்பிப்பது போல இருந்தால் மிக்க சிறப்பு...

நித்திலன் என்ற பெயரின் பொருள் தெரிந்தாலும் யாரேனும் கூறுங்கள்

நன்றி

22 பின்னூட்டங்கள்:

said...

பொன் நிலவன்

said...

நித்திலன் தமிழ் பெயர் போல் தெரியவில்லை, நித்தி-ய என்றால் நாள் தோறும் அல்லது நிரந்தர(மானவன்) என்ற பொருளில் வரும் பகுதி, பல பெயர்களில் (கிருஷ்ணன், இராமன்) 'ன்' விகுதி போட்டு தமிழ் பெயர் என்பதாக நினைப்பது போல் இதுவும் ஒன்று என்பதாக நினைக்கிறேன்.

said...

பொன்வளன்
பொற் கதிர்/கதிரவன்
பொன் நளன்
பொன்வேந்தன்
பொன்னரசு
பொன் உளன் (பொன்னுளன்)
பொன்னழகன்
பொற் பகலவன்
பொன் நிலவன்
பொன்னன்பன்
நலவேந்தன்
நல்முகன்
நிறைச் செல்வன் (குறையாத செல்வம் உடையவன்)
நிறை வளன் (குன்றாத வளம் உடையவன்)
நாவேந்தன்
நல்லமுதன்

இவையெல்லாம் வழக்கில் இல்லாத எளிய (புதிய!) பெயர்கள்

said...

Nithilan Azhagana Name. Its meaning like a Shiny like a Pearl. Actually v searched and selected for my sister-in-laws son.

said...

நித்திலம் என்றால் முத்து

-- வேல் --

said...

நகுலன்

பிரதாபன்

பாண்டியன்

பரம்/பரமன்

புஷ்பன்

நாகராசன்

நாகா

நித்தியானந்தன் (நல்ல பெயர்தாங்க)

பேர் வைச்சா சொல்லுங்க

இப்படிக்கு

கண்டபடி பெயர்/பட்டைபெயர் வைப்போர் சங்கம்

said...

for follow up

said...

நித்தலா என்றால் முத்து என்று பொருள் நினைக்கின்றேன்.

நித்தலன் முத்து போன்றவன்

said...

புகழேந்தி,நற்றமிழன்,நீலமுதன்,பரிதியன்,பூந்தமிழன்,பேரறிவாளன்.

said...

நந்திவர்மன்,நெடுஞ்சேரலாதன்,பெருவழுதி இவை ஈழத்தில் பிரபலமானவை.முயற்சித்து பாரும் நண்பனரே.

said...

நித்தில‌ம் என்ப‌து த‌மிழ்ச்சொல் தான்

இராம்.கி அவ‌ர்க‌ளின் வ‌லைப்ப‌திவில் ப‌டித்த‌து.

1.நில்‍‍ = நிற்று = நித்து= நித்திலம் = நிலைத்திருப்பது

2.நித்திலம் > நெத்தில் = நெத்தி= நெதி = நிதி

முத்தைக் குறிக்கும்,பின்பு செல்வ‌த்தையும் குறிக்கும் சொல்லாக‌ மாறிய‌து.

பெண்ணாக‌ இருந்தால் நித்திலா என்றும்
ஆணாக‌ இருந்தால் நித்தில‌ன் என்றும் பெயர் வைப்ப‌தில் த‌வறு இல்லை.

................................

இன்னொரு அருமையான சொல் நேத்திர‌ன்

நேத்திர‌ம் என்றால் க‌ண், அன்பு என்று த‌மிழில் பொருள்

நேயம் = நேச‌ம் = நேத‌ம்

said...

பொற்கோ
பூங்குன்றன்
புலிக்கொடி
நக்கீரன்
நாவரசு
பூவரசன்
நெடியவன்
புலிக்கொற்றன்
புவியரசு
புலியூரான்

said...

https://www.blogger.com/comment.g?blogID=5690699&postID=8766730310820734431
இந்த சுட்டியில் விளக்கம் உள்ளது.

பெயரிலி அண்ணையின் மகன் பெயர் நித்திலன்.அவருடைய விளக்கத்தைக் கேட்டு இங்கே பதியுங்களேன்.

said...

இந்த சுட்டியில் சென்று நீங்களே தேர்வு செய்யலாமே...http://web.archive.org/web/20071219210216/www.nithiththurai.com/name/index1.html

said...

http://web.archive.org/web/20071219210216/www.nithiththurai.com/name/index1.html

இந்த தளத்தில் இருந்து நீங்களே தேர்வு செய்யுங்கள் தோழரே..

said...

NITHILAM endraal MUTHU.{THOOYMAYANA ,KALANGAMATRA,}
NITHILAN, NITHILA endraal THOOYAVAN, THOOYAVAL ena poarul padum...Indha peyar thooya Thamizh. EVVIDHA SANDHAGAMUM INDRI KOORIYIRUKKIRAEN

said...

இந்த பெயரெல்லாம் தமிழ் பேரே அல்ல...... கோவி கண்ணன் பட்டியலில் நல்ல தமிழ் பெயர்கள் இருக்கின்றன..... பொன்வண்ணன், புகழேந்தி எல்லாம் நல்ல தமிழ் பெயர்... நகுலன் என்பது தமிழ் அல்ல அது நகுல் என்றால் வடமொழியில் கீரி என்று அர்த்தம்

நகுலன் - வடமொழி - கீரி போன்றவன்

பிரதாபன் - வடமொழி

பாண்டியன் - தமிழ்

பரம்/பரமன் - வடமொழி

புஷ்பன் - வடமொழி - பூ போன்றவன்

நாகராசன் - வடமொழி - பாம்புகளின் மன்னன்

நாகா - வடமொழி - பாம்பு

நித்தியானந்தன் - வடமொழி - எங்கும் ஆனந்தன் கொள்பவன் ( சரியாப் போச்சு )

said...

அடிக்கடி இப்படி தமிழ் பேரு கேட்டுகிட்டு இருக்கீறே! என்னா மேட்டரு?!

said...

வந்திய தேவன்
வளவன் இளந்திரையன்
வளவன் இளஞ்செழியன்
வாணவ‌ன் சுந்தரன்
வாசீகன்
விபீசணன்
விநயாதித்தன்
விஜய தொண்டைமான்
விஜயாதிதன்
விஜயேந்திரன்
விஜயசேகரன்
விஜயபார்த்திபன்
வினையாதரன்
வித்யாதரன்
வித்யாதர தொண்டைமான்
வித்யானந்தன்
வெற்றிமாறன்
வெற்றிவேந்தன்
வெற்றிகுமரன்
வேழவேந்தன்
வேழசுந்தரன்
வேணு பிரகலாதன்
வேதாந்தன்
வேந்தன் அமுதன்
வேத விநாயகன்

said...

mughil,

said...

அழகிய தமிழ் பெயர்களின் தொகுப்பு - தமிழ் வளர்ச்சிக் கழகம்
http://www.southdreamz.com/tamil-baby-names

said...

நல்ல இருக்கு
thanks
mrknaughty