செலிபிரட்டி அட்ராசிட்டி! - சின்மயிக்கு செக்ஸ் தொல்லை கொடுக்கும் 6 பேர்?


நேற்று நான் இந்த ட்விட்டை எழுதும் போது முதலில்  சின்மயி  கூறியதாக "என்னைப் பற்றி ஐந்து பேர் கொண்ட ஒரு குழு அவதூறாகவும், கீழ்த்தரமாகவும் டிவிட்டர், பேஸ்புக் மூலம் பிரசாரம் செய்து வருகிறது" என்ற அளவிலேயே பத்திரிக்கைகளில் வந்திருந்தன, ஆனால் பிறக்கு "சின்மயிக்கு ஆபாச தொல்லை கொடுத்தது இந்த 6 பேர்தான்!", "சின்மயிக்கு செக்ஸ் தொல்லை கொடுக்கும் 6 பேர்" என்றெல்லாம் ஒரு கோடி பேர் படிக்கும் தினத்தந்தியிலும் பல இலட்சம் பேர் படிக்கும் தட்ஸ்தமிழிலும் வர ஆரம்பித்துள்ளது, செக்ஸ் தொல்லை என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டு, பேச்சாலோ செய்கையாலோ பாலியல் உறவுக்கு அழைக்கும் செயல் பற்றிய குற்றம்.

இந்த குற்றச்சாட்டு தவறானதாகவோ அல்லது அதிகப்படியானதாகவோ கருதினால் புகார் அளிக்கப்பட்டவர்கள் சின்மயி மீது அவதூறு வழக்கு தொடுக்கலாம்(defamation case).

செய்திகள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்பதை பற்றி சின்மயியே கூறிய ஒரு டிவிட்டை குறிப்பிட விரும்புகிறேன்.

Chinmayi
@ezharai Someday you ll need to meet an intelligent journalist to tell you how news is made 'newsworthy'

சின்மயின் மேற்கண்ட கூற்றுப்படி ஒரு கோடி பேர் படிக்கும் தினத்தந்தியிலும் மேலும் பல பத்திரிக்கைகளிலும் வந்த "சின்மயிக்கு செக்ஸ் தொல்லை கொடுக்கும் 6 பேர்" என்ற செய்தி எப்படி 'newsworthy' ஆக ஆக்கப்பட்டது?

http://365ttt.blogspot.in/2011/12/famous-tamil-twitter-conversation.html

http://www.rajanleaks.com/2012/03/blog-post.html

சின்மயியின் டிவிட்டை படித்து பாருங்கள் "சோ கால்ட் தாழ்த்தப்பட்டவர்கள்" என்றெல்லாம் பொங்கியிருப்பார்...

இந்த பிரச்சினை பல மாதங்களாக இருந்து வந்துள்ளது, குறிப்பாக ராஜன்லீக்ஸ் க்கும் சின்மயிக்கும் இடஒதுக்கீடு தொடர்பாக கருத்தியல் ரீதியாக கடும் வேறுபாடு இருந்துள்ளது. பல மாதங்களாக இருந்த பிரச்சினைக்கு உடனடியாக அப்போதோ அல்லது அடுத்து வந்த சில நாட்களிலோ மாதங்களிலோ புகார் அளித்திருக்கலாம், அதை செய்யாமல் தற்போது  சின்மயி பணப்பிரச்சினைக்காக ஒருவர் மீது புகார் கொடுக்க சென்றவர் போனதே போனோம் இதுக்கும் குடுத்துடுவோம் என்ற ரீதியில்  புகார் கொடுத்தது மட்டுமின்றி செக்ஸ் தொல்லை என்ற அளவில் ஊடகங்களில் அதை பிரச்சாரப்படுத்தியுள்ளார். குறிப்பாக ஒரு உதவிப்பேராசிரியருக்கு இதில் தொடர்புள்ளது ஒரு உதவிப்பேராசிரியருக்கு இதில் தொடர்புள்ளது என்று அழுத்தி சொல்லிவைத்தது அவரின் வேலைக்கு வேட்டு வைக்க வேண்டுமென்ற எண்ணத்தில் சொன்னது போலவே உள்ளது.

சின்மயியை பொதுவெளியில் ஆபாசமாக பேசியவர்கள் அதற்கான எதிர்வினைகளையும் குற்றச்சாட்டையும் எதிர் நோக்கித்தான் ஆகவேண்டும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் மீது சின்மயி சாற்றிய குற்றசாட்டை மறுக்கும் பட்சத்திலோ அதிகப்படியான குற்றச்சாட்டு என்று கருதும் பட்சத்திலோ ,

1) சென்னை சைபர் கிரைம் ஒருதலைபட்சமாக ஒரு பக்க குற்றச்சாட்டின் அடிப்படையில் எந்த முடிவையும் எடுக்காது என்றே நம்புகிறேன், எனவே தாமாகவோ அல்லது ஒரு வழக்கறிஞரின் உதவியுடனோ அவர்களுக்கு தகுந்த விளக்கம் அளிக்கலாம்,

2)சின்மயி உங்களை பற்றி தரக்குறைவாக விமர்சித்திருந்தால் அதற்கான ஆதாரங்களுடன் கவுண்டர் ஃபைலிங் செய்யலாம்.சின்மயி பொது வெளியில் பேசிய எழுதிய  பிற கருத்துகள் உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தால்  அதற்காகவும் கூட புகார் அளிக்கலாம்.

சின்மயி தொடர்பாக என்றில்லாமல் பொதுவாக குறிப்பிடுகிறேன்.

கன்வென்சனல் ஊடகங்களான அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் அனைத்தும் பிரபலங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கும், அவைகள் பிரபலங்களின் ஊடகங்களாக தான் இருந்ததேயொழிய சாதாரண பொது மக்களின் ஊடகங்களாகஇருப்பதில்லை, இம்மாதிரியான மெயின்ஸ்ட்ரீம் ஊடகங்களில் பிரபலங்கள் ஏதேனும் ஒரு கருத்தை உதிர்த்து விட்டு போய்விடுவார்கள், அதற்க்கு மாய்ந்து மாய்ந்து பொதுமக்கள் யாரேனும் மறுப்பு எழுதினாலும் அவைகள் எதுவும் பிரசுரமாகாது, இணைய ஊடகங்களான வலைப்பதிவுகள், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்றவைதான் பிரபலங்களையும் பொதுமக்களையும் ஒரே தளத்திற்க்கு கொண்டு வந்தன, இங்கே பிரபலம் என்ற பீடத்தின் மேல் உட்கார்ந்து கருத்து சொல்லிவிட்டு ஓடிவிட முடியாது, பிரபலங்கள் கருத்து உதிர்த்தாலும் அதற்க்கு மறுப்புகள் எதிர்வினைகள் வந்து சேரும். இந்த மனமுதிர்ச்சி அற்ற பிரபலங்கள் மிக மோசமான குற்றச்சாட்டுகளை பல கோடி பேர் படிக்கும் ஊடகங்கள் வழியாக தங்களின் பிரபலத்தை தவறாக பயன்படுத்தி வெளிப்படுத்தினால், அனைவரும் பிரபலங்களின் கருத்துக்கு எதிர்கருத்து சொல்லவோ அய்யோ நமக்கென்னப்பா என்று விலகிப்போகும் வாய்ப்புண்டு, இது  இணையம் என்பது  பொது மக்கள் ஊடகமாக இல்லாமல் கண்வென்சனல் ஊடகங்களை போன்றே பிரபலங்களுக்கான ஊடகமாக மாறிவிடும்.

பிரபல நடிகை குஷ்பு அவர்கள் டிவிட்டரில் இயங்கி வருகிறார், இணைய வெளியில் இயங்கி வரும் அவரை நான் பார்த்த வரையில் யாரும் தரக்குறைவாக விமர்சிப்பதோ பேசுவதோ இல்லை, குஷ்பு மேம் என்றோ குஷ்பு மேடம் என்றோ தான் பலரும் குறிப்பிடுகிறார்கள், அதற்காக குஷ்பு தன் கருத்தை எங்கேயும் வலியுறுத்தாமல் இருந்ததில்லை, தன் கருத்தின் மீதான விமர்சனங்களை இணையத்தில் குஷ்பு எப்படி கையாள்கிறார் என்பதே அவரை குஷ்பு மேடம் என்றும் குஷ்பு மேம் என்றும் அழைக்க வைக்கின்றது, குஷ்பு ஒரு கட்சியில் இருக்கிறார் என்பதால் அல்ல, ஏனெனில் குஷ்புவின் கட்சித்தலைவர் கருணாநிதியை அவரோட ஃபேஸ்புக் இணையப்பக்கத்தில் கடும் விமர்சனங்களை பொழிந்து தள்ளினர் இணைய பயன்பாட்டாளார்கள்.

இணையம் பொது மக்கள் ஊடகமாக இருக்க வேண்டுமா? அல்லது  பிரபலங்களின் ஊடகங்களாக இருக்க போகின்றதா என்பது இந்த கேஸில் ஆரம்பித்து இனி வரும் காலங்களில் தெரிந்து விடும்.

இதுநாள் வரை இதற்க்கு நேரமில்லை, அதற்க்கு நேரமில்லை என்று சாக்கு போக்கு சொல்பவர்களிடமும் சரி பல நேரங்களில் என் மனைவியிடமும் சின்மயியை பார், திரைப்பாடல்கள் பாடுறாங்க, கச்சேரி டிவி நிகழ்ச்சி செய்யாறாங்க,  ஒரு நிறுவனம் நடத்துறாங்க இதோடு வலைப்பதிவும் டிவிட்டரிலும் இயங்குகிறார், சரியாக நேரத்தை முறைப்படுத்தினால் செய்யமுடியும் என்று ஒரு முன்மாதிரியாக மட்டுமே சொல்லிக்கொண்டு வந்திருக்கிறேன், சின்மயின் தொடக்ககால வலைப்பதிவுகளில் நான் ஆதரித்து பின்னூட்டமிட்டுள்ளேன், ஆனால் இப்போது சொல்கிறேன் I HATE YOU CHINMAYI

2 பின்னூட்டங்கள்:

said...

அண்ணா,நீங்க தந்த இணைப்பில் உள்ள டுவிட்டர்களை படித்த வரை என் பத்தாப்பு ஆங்கில அறிவுக்கு எட்டிய வரை எனக்கு ஆபாசமாக எங்கேயும் தோன்றவில்லையே.....தனியாக தொந்திரவு செய்தார்களா?
ஒண்ணுமே புரியலே....எப்படினாலும் அவங்க ஜாதியை விட மாட்டாங்கனு சொல்றாங்க
சொரணை கெட்ட சமுதாயம் இன்னும் கோவில் குளம்னு அவாள் பின்னாடியே சுத்துதுங்க...

said...

" குஷ்பு மேம் என்றோ குஷ்பு மேடம் என்றோ தான் பலரும் குறிப்பிடுகிறார்கள்,"
மேம் என்றோ மேடம் என்றோ சுட்டாவிட்டல் அது தரக் குறைவான உரையாடல் என்று கருத்துகிறீர்களா? ஏன் குஷ்பு என்றோ அல்லது mrs .kushpu என்றோ அழைப்பதை தர குறைவாக கருத்துகிறீர்களா?
என்னை பொறுத்தவரை நான் குஷ்புடன் உரையாட வேண்டிய சந்தர்ப்பம் வந்தால் குஷ்பு என்றே குறிப்பிடுவேன் அன்றி மேம் அல்லது மேடம் என்று குறிப்பிட மாட்டேன்.
எல்லாவற்றையும் மேலை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம் ஆனால் மேடம் அல்லது மேம் மட்டும் தவிர்த்து விடுகிறோம்.
(மேடம் ஆங்கில சொல்தான் ஆனால் இப்போது அங்கு பயன் படுத்துவது குறைவு. இங்கும் பெரிய நிறுவனக்களில் பாவனை இல்லை)