பிரபலங்களுக்கு மட்டுமேயான நாடு தானோ?


பிரபலங்களுக்கு மட்டுமேயான  நாடு தானோ?

நண்பர் முரளி ஒரு முக்கிய கேள்வியை எழுப்பியுள்ளார், இதே மாதிரி சைபர் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நானே ஏன் இவ்விசயத்தில் சின்மயிக்கு ஆதரவாக இல்லாமல் உள்ளேன் என்கிறார்.... சின்மயி மீதான ஆபாச வசை தாக்குதல்களை எங்கேயும் நான் ஆதரிக்கவில்லை. அதற்கான நடவடிக்கை அதற்கான நடவடிக்கையாக மட்டுமே இருக்க வேண்டும்  There should be  no special treatment for any one. இப்பிரச்சினையில் என்னுடைய அனைத்து கருத்துகளும் கீழ்கண்டவையை அடிப்படையாக கொண்டே...

1) அதிகாரத்துவத்துக்கு எதிரான என் மிகச்சிறிய எதிர்ப்பு குரல்

என் வலைதளத்தில் வெளிப்படுத்திய கருத்துகளால் கோபம் அடைந்த ஒருவர் தனிப்பட்ட முறையில் என்னை மற்றும் குடுமத்தை தாக்கி(என்னை மட்டுமின்றி வேறு பலரையும்)  எழுதினார், என் மனைவியின் புகைப்படங்கள் ஆபாச தளங்களில் போர்னோ படங்களோடு இணைக்கப்பட்டன, இது தொடர்பாக பல்வேறு புகார்களை சைபர் கிரைமுக்கு அனுப்பினேன், கூகிள் சர்ச்சில் வெளிவந்த புகைப்படங்களுக்காக கூகிளுக்கும் பல்வேறு போர்னோ தளங்களில் வெளியிடப்பட்ட  போட்டோக்களை முடக்க சொல்லி அந்த தளங்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பினேன், இந்த அத்தனையிலும் சைபர் கிரைம் மெயில் ஐடியையும் சிசியில் போட்டிருந்தேன், இது தொடர்பாக பலமுறை தொலைபேசியிலும் பேசி புகார் அளித்தேன், ஒரு விசயத்தை நிச்சயம் பாராட்ட வேண்டும், அனைத்தையும் பொறுமையாக கேட்டாலும் புகார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை, முடிந்த அளவு பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என்ற அறிவுரையே வழங்கப்பட்டது, நான் அதிகபட்சமாக கேட்டது இம்மாதிரியான செயல்களை அந்த நபர் செய்வதை நிறுத்த செய்யுங்கள் என்றதே.

ஒரு சாதாரணனான‌ என் புகார் தொடர்பாக(என்னை மாதிரி மிகப்பலர் அளித்த புகார்) எந்த நடவடிக்கையும் இல்லை, ஆனால் ஒரு பிரபலம் அளித்த புகாருக்கு உடனடியாக சிறைக்கு கொண்டு அடைத்தது வரையான நடவடிக்கை எனில் அப்போ என் மாதிரியான சாதாரண மக்களுக்கு என எதுவுமில்லை, பிரபலமாக இருந்தால் மட்டுமே எமக்கான நியாயம் கிட்டும், இன்று தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக ஒரு பிரபலத்துக்கு சாதாரணனைவிட ஸ்பெசல் ட்ரீட்மெண்ட் கிடைக்கிறதென்றால், ஒரு சாதரணர் மீது ஒரு பிரபலம் அத்துமீறினால் என்ன செய்ய இயலும் என்ற பயம் வருகின்றது.


சமீபத்தில் டிவி நடிகர் வெங்கட் மற்றும் அவர்களின் தாயார் மீது ஒருவர் புகார் அளித்திருந்தார், வாடகைக்கு விட்டுருந்த அந்த சாதாரணரின் இடத்தை காலி செய்ய மாட்டோம், நாங்கள் செல்வாக்கானவர்கள் என்று மிரட்டுவதாக, அது தொடர்பாக அந்த பிரபல டிவி நடிகர்கள் கைது செய்யப்பட்டார்களா என்ன? இதெல்லாம் ஒரு சாதாரண குடிமகனை பயமுறுத்துகிறது.

 ஒரு சாதாரண பொது சனத்தை விட கொஞ்சம் அதிகமான பிரபலத்தை உடைய டிவி பிரபலங்களுக்கு இவ்வளவு செல்வாக்கும் உள்ளதென்றால் இதையும் விட மிகப்பிரபலமான சினிமா நடிகர்கள், அதையும் விட அதிக பலமுள்ள அரசியல் கட்சிதலைவர்கள் இவர்களையும் விட பெரும் அதிகார மைய்யங்களான ஜெயலலிதா, கருணாநிதி அவர்களை போன்ற அரசு அதிகாரமுடையோட் அவர்களையும் விட மாபெரும் அதிகாரமய்யமான சோனியா காந்தி அவர்களின் செல்வாக்கும் அவர்கள் அதிகாரமும் அவர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய இயலுமே. உண்மையில் சொல்லப்போனால் இம்மாதிரி பெரும் அதிகாரம் படைத்தவர்கள் போடும் பிச்சை தான் அவர்களையெல்லாம் விமர்சித்துவிட்டு இன்னமும் நாம் சாதாரணமாக சுற்றி திரிவது...

2) இடஒதுக்கீடு பற்றிய சின்மயியின் புரிதலற்ற கருத்து பரப்பல்.
    இடஒதுக்கீட்டினால் படித்தவனாகிய நான், இடஒதுக்கீடு தொடர்பாக இடஒதுக்கீட்டை ஆதரித்து தொடர்ந்து எழுதியும் பேசிக்கொண்டும் வருபவன், இடஒதுக்கீடு தொடர்பான சின்மயியின் கருத்துகள் மட்டுமின்றி அது தொடர்பான எந்த ஒரு விளக்கத்தையும் பெற்றுக்கொள்ளவும் உரையாடவும் அவர் தயாராக இல்லை, நூற்றுக்கு அருகில் மதிப்பெண் வாங்கியிருக்கும் ஒரு பெண்ணுக்கு மருத்துவ சீட்டு கிடைக்கவில்லை என்று கூறி இடஒதுக்கீடு தேவையா என்று கேள்வியை மட்டும் எழுப்புகிறார் சின்மயி. இடஒதுக்கீடு தொடர்பான ஒரு விவாதத்தை திறப்பவர் அது தொடர்பான ஒரு பார்வையை வைத்துவிட்டு மறுப்புக்கான எந்த இடத்தையும் அளிக்காமல் அந்த விவாதத்தை மூடுகிறார், எது வேண்டுமானாலும் சொல்லட்டும் என்று சொல்லி ஒதுக்கிவிட்டு போக என்னை போன்ற ஒரு சாதாரணன் அல்ல அவர் , எனக்கெல்லாம் வெறும் 400 பேர் டிவிட்டரில் தொடர்கிறார்கள் என்றால் அவரை இலட்சக்கணக்கானவர்கள் தொடர்கிறார்கள், அவர் சொல்லும் செய்தி லட்சக்கணக்கானோரை சென்றடைகிறது. இடஒதுக்கீட்டை பயன்படுத்திய எம்மை போன்றோரை இது சமூக தளத்தில் சிக்கலுக்கு உண்டாக்கும் செயலாகும், இது சமூக தளத்தில் இடஒதுக்கீட்டை பயன்படுத்திய எம்மை போன்றோரை கீழாக பிறரை பார்க்க தூண்டும், இது எம் போன்ற இடஒதுக்கீட்டை பயன்படுத்தியவர்கள் மீதும் இடஒதுக்கீட்டு ஆதரவாளர்கள் மீதும் ஒருவிதமான உளவியல் தாக்குதலை ஏற்படுத்தும்.இது மேலும் மேலும் இடஒதுக்கீடு பற்றிய தவறான பிரச்சாரத்தை முன்னெடுக்கும் வாய்ப்பாக உள்ளது. ஒன்று இம்மாதிரியான விசயங்களில் பிரபலங்கள் விவாதங்களை திறந்தால் அதன் எதிர்கருத்துகளையும் சொல்வதற்க்கு இடமளித்து  தொடர்ந்து நடத்த வேண்டுமோயொழிய நான் மட்டும் எதுவேண்டுமானாலும் சொல்வேன் என்று சொல்லிவிட்டு போவது தவறானது. இடஒதுக்கீட்டுக்கு எதிரான பரப்புரைகளை தொடர்ந்து எதிர்த்து வருபவன் நான். இது

2) இதில் சாதி எங்கே வந்தது?
சின்மயி பல்வேறு இடங்களில் அய்யாங்கார் சாதியை குறிப்பிடும் இடங்களில் Higheyngar என்று குறிப்பிட்டுள்ளார் அது மட்டுமின்றி ஒரு இடத்தில் அவர்களுக்கு இதற்கெல்லாம் நேரமில்லை, அவர்கள் நாசாவில் டாலர்களில் சம்பாதிப்பதில் பிசியாக உள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரு பொதுவெளியில் சாதாரணமாக Higheyngar என்று குறிப்பிட்டு பேசுவது பிற சாதிகளை சேர்ந்தவர்களை உளவியல் ரீதியாக தாக்குதலை, உளைச்சலை ஏற்படுத்தும் செயல்.

3) தலித் மற்றும் பிற சாதித்தலைவர்களை விமர்சித்தது
தலித் அரசியலிலும் பிற்படுத்தப்பட்டோர் அரசியலிலும் மிகுந்த ஈடுபாடுடையவன் நான், இது தொடர்பாக தலித் மற்றும் பிறபடுத்தப்பட்ட இயக்கத்தலைவர்களுடன் சில இடங்களில் இணைந்து பணியாற்றியுள்ளேன், பணியாற்றிக்கொண்டுள்ளேன். சாதிய படிநிலை சமூகமான இந்தியாவில் அரசியலானாலும் சரி சமூகமானாலும் சரி சாதியை பிரிக்க முடியாத அளவிற்க்கு உள்ளது. மொழியால் உமக்கு ஏதேனும் மறுக்கப்பட்டால் அந்த மொழியை கொண்டு தான் அதை பெற வேண்டும், மதத்தால் உமது உரிமைகள் மறுக்கப்பட்டால் அந்த மதத்தை அடையாளமாக கொண்டுதான் போராட வேண்டும், அது போல சாதியால் மறுக்கப்படும் உரிமைகளை சாதியாக கொண்டு தான் பெற்றாகவேண்டும், சின்மயி "சோ கால்ட் தாழ்த்தப்பட்டவர்கள்" என்று யாருமில்லை, அரசியல்வாதிகளுக்கு சாதி ஓட்டுக்காக சாதியை வைத்திருக்கிறார்கள் என்று பொருள் பட பேசுகிறார், இதிலும் அதே போல கருத்தை கொட்டிவிட்டு விவாதத்தை மூடுகிறார்...

வர்றார் சண்டியர் என்ற தலைப்பில் ஒருவர் படம் எடுத்த போது வராத எதிர்ப்பும் போராட்டமும் சண்டியர் என கமல் படம் எடுத்த போது எழுந்தது, ஏனெனில் கமலின் ரீச்சும் வீச்சும் அதிகம் அதைப்போலவே எம் போன்ற ஒரு சாதாரணனின் பேச்சை விட சின்மயி போன்ற பிரபலங்களின் பேச்சும் வீச்சும் அதிகம்.

4)மக்கள் ஊடகங்கள் கைவிட்டு போகும் நிலைக்கான எதிர்ப்பு
அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் சினிமா போன்ற மாஸ் மீடியாக்களும் பிரபலங்களுக்காகன ஊடகங்கள், அவர்களின் பேச்சு மட்டுமே அதில் பதிவாகும், அதில் எதிர்தரப்பில் உரையாட கூட எதிட்தரப்பில் பிரபலமானவராக இருந்தாக வேண்டும், ஆனால் இணையம் குறிப்பாக வலைப்பதிவுகள், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்றவை மக்கள் ஊடகங்களாக இருந்துவருகின்றன, ஒரு சாதாரண வேறு எந்த ஊடகத்திலும் பிரபலமாக இல்லாத ராஜன் லீக்ஸ் போன்றவர்கள் மக்கள் ஊடகத்தில் ஓரளவுக்கு பிரபலங்களுக்கு இணையாக ஃபாலோயர்ஸ்களை பெற முடிந்துள்ளது, ஆனால் இங்கேயும் பிரபலங்கள் மட்டுமே கருத்து சொல்ல முடியும் என்ற நிலை உருவாவது ஆல்டர்நேட்டிவ் மீடியா ஆதரவாளனான, மக்கள் ஊடக ஆதரவாளனான என்னால் சாதாரணமாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை...

கற்பழிக்கப்பட்ட பெண்களின் கேஸ்கள் பலதும் பெரிய நடவடிக்கை ஏதுமின்றி அப்படியே கிடக்க தமிழகமெங்கும் தினந்தோறும் ஒவ்வொரு குழாயடியிலும் நடந்து கொண்டிருக்கும் ஒரு சாதாரண சண்டை போன்றதொரு வாய்ச்சண்டைக்கு  சிறை அளவு கொண்டு சொல்ல ஒரு பிரபலத்தால் முடியுமெனில் இந்தியாவும் தமிழகமும் பிரபலங்கள் மட்டுமே வாழத்தகுதியான ஊர் தானோ?


நாட்டில் கற்பழிக்கப்பட்ட பெண்களின் புகார்களெல்லாம் அப்படியே கிடக்க சாதாரணமாக பக்கத்து பக்கத்து வீடுகளின்

5 பின்னூட்டங்கள்:

said...

சரியான கேள்விகள்..நல்ல பதிவு

said...

நியாயமான கருத்துகள். இந்தியாவில் பிரபலங்களுக்காக்த்தான் நாட்டை அரசாட்சி செய்கின்றார்கள்.
நல்ல வேளை ராஜனை என்கவுன்டர் செய்யவில்லை. பணக்கார பொண்ணுக்கு ஒன்னு நடந்தால் உலகமே போர் கொடி உயர்த்தும். ஆனால் ஏழை பொண்ணுகளுக்கு ஏதாவது நடந்தால் வழக்கு போட்டாலும் எதுவும் கிடைக்காது.
வாசாத்தி வன்கொடுமை வழக்கு தொடர்பாக நம்ம புரட்சி தலைவி அந்த பெண்கள் பொய் சொல்வதாக கூறினார். இந்த கருத்தை வேறு யாராவது பணக்கார பொண்ணுக்கோ, ஐயர் ஆத்து பொண்ணுக்கோ நடந்திருந்தால் சொல்லியிருப்பாரா?
இன்று வடஇந்தியாவில் பல தலித் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளக்கப்படுகிரார்கள். அந்த பெண்களின் உடன்பட்டு தான் அது நடைபெற்றதாக கூறுகின்றார்கள்.
இதையே அதிக்க சாதி பெண்களுக்கு நடந்தால் அவ்வாறு சொல்ல முடியுமா? எல்லாம் அதிகார திமிர்.

சின்மயிக்கும் இருப்பது சாதீய, அதிகார திமிர். அதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
சின்மயியை ஆபாசமா படம் வெளியிட்டதாக கூறினார்கள். அப்படி படம் ஒன்றையும் காணோம்.
பின்பு ஆபாசமாக டுவிட் பண்ணியதாக கூறினார்கள்.

இதில் ராஜன் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் என்ன? ராஜன் ஆபாசமாக எழுதிய ஏதாவது ஆதாரம் உண்டா?
இது பேய்களின் அரசாட்சி. அதுதான் இப்படி இருக்கிறது.

முருகவேள்.
சேலம்.

said...

நியாயமான கருத்துகள். இந்தியாவில் பிரபலங்களுக்காக்த்தான் நாட்டை அரசாட்சி செய்கின்றார்கள்.
நல்ல வேளை ராஜனை என்கவுன்டர் செய்யவில்லை. பணக்கார பொண்ணுக்கு ஒன்னு நடந்தால் உலகமே போர் கொடி உயர்த்தும். ஆனால் ஏழை பொண்ணுகளுக்கு ஏதாவது நடந்தால் வழக்கு போட்டாலும் எதுவும் கிடைக்காது.
வாசாத்தி வன்கொடுமை வழக்கு தொடர்பாக நம்ம புரட்சி தலைவி அந்த பெண்கள் பொய் சொல்வதாக கூறினார். இந்த கருத்தை வேறு யாராவது பணக்கார பொண்ணுக்கோ, ஐயர் ஆத்து பொண்ணுக்கோ நடந்திருந்தால் சொல்லியிருப்பாரா?
இன்று வடஇந்தியாவில் பல தலித் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளக்கப்படுகிரார்கள். அந்த பெண்களின் உடன்பட்டு தான் அது நடைபெற்றதாக கூறுகின்றார்கள்.
இதையே அதிக்க சாதி பெண்களுக்கு நடந்தால் அவ்வாறு சொல்ல முடியுமா? எல்லாம் அதிகார திமிர்.

சின்மயிக்கும் இருப்பது சாதீய, அதிகார திமிர். அதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
சின்மயியை ஆபாசமா படம் வெளியிட்டதாக கூறினார்கள். அப்படி படம் ஒன்றையும் காணோம்.
பின்பு ஆபாசமாக டுவிட் பண்ணியதாக கூறினார்கள்.

இதில் ராஜன் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் என்ன? ராஜன் ஆபாசமாக எழுதிய ஏதாவது ஆதாரம் உண்டா?
இது பேய்களின் அரசாட்சி. அதுதான் இப்படி இருக்கிறது.

முருகவேள்.
சேலம்.

said...

நேர்த்தியான நேர்மையான கருத்துக்கள், வரிக்கு வரி உடன்படுகிறேன். பிரபலங்களுக்குக் கொடுக்கப்படும் முன்னுரிமை, அதே நேரம் சாதாரண மக்களுக்கு நேரும் அலைச்சல் எனப்து எரிச்சலைக் கொடுக்கிறது. காவல்துறையினரின் அத்து மீறல் இன்னும் இணையக் கருத்து சுதந்திரத்தின் மீது மிகப்பெரிய அச்சத்தினை ஏற்படுத்துகிறது.

said...

Manushya Puthiran-:

சின்மயி விவகாரம் பற்றி இனி எழுத நேரக்கூடாது என்று நேற்றிரவு கடவுளை பிரார்த்தித்துவிட்டு தூங்கப் போனேன். ஆனால் கடவுள் சின்மயி பக்கம் இல்லாததாலும் நேற்று நான் எழுதிய குறிப்பிற்கு நண்பர்கள் ஆற்றியிருக்கும் எதிர்வினை காரணமாகவும் சில வார்த்தைகள் மீண்டும் சொல்ல வேண்டியதாகிவிட்டது. ஒரு இளம் எழுத்தாளர் என் வாழ்க்கையில் முதன் முதலாக உருப்படியாக பேசுகிறேன் என்று பாராட்டுகிறார். ஒரு சர்வதேச தமிழ் எழுத்தாளர் சுஜாதாவிடம் இல்லாத ஆபாசமா சின்மயிடம் இருக்கிறது என்று கேட்கிறார். இதுபோன்ற அபத்த களஞ்சியங்களுக்கு இடையே நான் முகவும் மதிக்கும் வெங்கடேஷ் சக்கரவர்த்தி போன்ற நண்பர்களும் இந்த விவாத்தில் பங்கேற்றிருப்பதால் பதில் சொல்லவேண்டிய பொறுப்பு இருக்கிறது.
புதிய தலைமுறை, சத்யம் இரண்டிலும் நடந்த விவாதத்தில் பெண்கள் உடல் சார்ந்து ஆபாசமாக விமர்சிக்கப்படுவதை கடுமையாக கண்டித்து பேசியிருக்கிறேன். சின்மயிக்கு செய்யப்பட்ட எதிர்வினையை நான் எந்த இடத்திலும் ஆதரிக்கவோ நியாயப்படுத்தவோ இல்லை. இதில் சம்பந்தபட்ட இரண்டு தரப்புமே ஒரு விவாதத்தை நடத்துவதற்கான தகுதியற்றவர்கள் என்பதையும் பதிவு செய்திருக்கிறேன்.

ஆனால் இந்த பிரச்சினை வெறும் பாலியல் விவகாரம் மட்டும் அல்ல. ஒரு இனப்படுகொலையை புலால் உண்ணும் பழகத்திற்கு இணையாக பேசுகிறார் சின்மயி. இது தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்துகிறது என்றும் புலால் உண்ணும் பழக்கமுள்ள என்னை புண்படுத்துகிறது என்றும் நான் காவல்துறையிடம் சென்றால் என்ன நடவடிக்கை எடுத்திருப்பார்கள்? இணையத்தில் மீனா கந்த கந்தசாமிமீது தொடுக்கப்பட்ட ஆபாசத் தாக்குதல்கள் தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கபட்டு எத்தனை பேர் கைது செய்யப்பட்டார்கள்?

இங்கு அரசியல் அதிகாரம், ஊடக அதிகாரம், காவல்துறை அதிகாரம், நீதிதுறை அதிகாரம் அனைத்திலும் சாதிய ரீதியான – சமூக பொருளாதார அந்தஸ்து ரீதியான பாரபட்சங்கள் மண்டிக்கிடக்கின்றன. இதைத்தான் நான் இந்தப் பிரச்சினையில் மைய்யபடுத்த விரும்புகிறேன்.

மீனவர் படுகொலை, இட ஒதுக்கீடு போன்றவை தமிழ் சமூகத்தின் அரசியல் சரித்திரத்திரம் சார்ந்த ஆதாரமான பிரச்சினைகள். கோடிக்கணகான மக்களின் உணர்வுகள் இதில் சம்பந்தப்பட்டிருக்கின்றன. இது சம்பந்தமாக ஒருவர் எந்த ஒரு வரலாற்றுப் பார்வையும் சமூகப் பார்வையும் இல்லாமல் பேசுவது என்பது கருத்துச் சுதந்திரம் என்று மட்டும்தான் புரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?

ஆபாசம் என்பது பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் மட்டும்தான் என்று உங்களுக்கு யார் சொல்லித் தந்தது? கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை காயப்படுத்துவது, அவர்களின் வரலாற்றுத் துயரங்களை அவமதிப்பது எல்லாம் ஆபாசமாகாதா?
குஷ்புவின் மீது தமிழகம் முழுக்க தாக்குதல் தொடுக்கப்பட்டபோது அவருக்கு ஆதரவாக தீவிரமாக குரல் கொடுத்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் சின்மயி விவகாரத்தில் வெளிப்படும் இனவாதத்தையும் சாதிதிமிரையும் அதிகார வர்க்க தொடர்புகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளமல் அவர் மீதான பாலியல் விமர்சங்களை மட்டும் தனியாக எடுத்து விவாதிக்க முடியாது.

நீங்கள் தெருவில் சென்றுகொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் உங்கள் தலையில் தன் வீட்டு மாடியிலிருந்து குப்பையைக் கொட்டுகிறார். நீங்கள் அண்ணந்து பார்த்து கெட்ட வார்த்தை சொல்லி திட்டுகிறீர்கள். ஆனால் குப்பையைக் கொட்டுகிறவருக்கு அது அவருடைய உரிமை என்றும் கெட்ட வார்த்தை சொல்லி திட்டியவர் மட்டும் சமூக விரோதி என்றும் விவாதிப்பது என்ன நியாயம்?

கூடங்குளத்தில் பெண்களை ஆபாசமாக பேசிய காவல்துறையினர் மேல் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?

எல்லாவற்றிலும் நுண் அரசியல் பேசும் நண்பர்கள் எல்லாம் இந்தப் பிரச்சினையில் சின்மயியின் மனோபாவம், காவல்துறையின் அதீத அக்கறை, இணையத்தின் மீது கண்காணிப்பையும் ஒடுக்குமுறையையும் கொண்டுவர விரும்பும் அரசு… இது போன்ற பிரச்சினைகளை எப்படிக் கையாள்கிறது என்பதையெல்லாம் இணைத்து பேச மறுப்பது ஏன்?

நான் சின்மயிக்கு ஆதரவாக தெருவில் நின்று போராட தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்கு முன்பு அவர் தமிழர்களிடமும் தலித்துகளிடமும் தனக்கு மாறான வாழ்க்கைமுறையும் உணவுப் பழக்கமும் கொண்டவர்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும்