இணையத்தில் செலிபிரட்டிகளுக்கு கொம்பு முளைத்துவிடவில்லை - பாடகி சின்மயி யின் பரபரப்பு புகார்!

பொதுவில் பேசும் பேச்சுக்கு வரும் பின்விளைவுகளை எதிர்நோக்கும் மனப்பக்குவம் இல்லாதவர்கள், தயவு செய்து பொது இடங்களில் ஆல் இன் ஆல் அழகு ராஜா/ராணி போல கருத்து சொல்வதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் ஒரு அரசியல், சமூக கருத்தை உதிர்க்கும் முன் நூறு முறை யோசித்து செய்ய வேண்டும், பாடகி சின்மயி இடஒதுக்கீட்டு எதிராகவும், ஈழம் பற்றிய சர்ச்சையான கருத்துகளை உதிர்த்த போது அதற்க்கு மிகவும் சாதாரணமாகவும் டீசண்டாகவும் வந்த எதிர்வினைகளை மிக மூர்க்கத்தனமாகவும், மிகுந்த அலட்சியப்போக்குடனும் அதை எதிர்கொண்டார்.  அதை ஒரு உரையாடலாகவோ விமர்சனமாகவோ அவர் கருதவில்லை....

இணையம் ஒரு சுதந்திர பூமி இங்கே, செலிபரிட்டிகளுக்கு கொஞ்சம் கூடுதலாக ஃபாலோயர்கள் இருப்பார்கள் என்பதை தவிர பிரபலங்கள், செலிபரிட்டிகளுக்கு ஸ்பெசலாக இங்கே எந்த கொம்பும் முளைத்துவிடுவதில்லை,  கருத்து என்று எதை உதிர்த்தாலும் சைலண்ட்டாக போகமாட்டார்கள் எதிர்வினைகள் இருக்கும் அதை முறையாக எதிர்கொள்ள தைரியம் இல்லாதவர்கள் பேசாமல் இருக்க வேண்டும்.

பாடகி சின்மயி பற்றி மிகக்கேவலமாக பேசியும் சித்தரித்தும் வந்தவர்களை கடுமையாக எதிர்க்க வேண்டும், எமது கடும் கண்டனங்கள், . சின்மயி புகார் கொடுத்திருப்பதாக வந்திருக்கும் செய்திகளை படித்தால் சின்மயி செகண்ட் ஆஃப்பை மட்டுமே புகாராக தந்துள்ளார், ஃபர்ஸ்ட் ஆஃபை எங்கேயும் சொல்லவில்லை போலும்...

நானும் இணைய ஆபாச சித்தரிப்பில் முன்பு மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தேன், அதன் வலி எமக்கும் தெரியும், சிங்கப்பூரில் பிரபலமாக இருந்த ஒரு சமூக இணையதளத்தில் என் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டு அதில் நான் பாம்பேவிலிருந்து பெண்களை கொண்டுவந்து தொழில் செய்வதாக மூர்த்தி என்பவன் குறிப்பிட ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட போன்கால்கள், எல்லா வித இன(சீன, இந்திய, மலாய்) ஆட்களும் அழைத்து பொண்ணு புரோக்கர் தானே நீ, பொண்ணு இருக்கா, எவ்ளோ ரேட்டு என்று கேட்ட போது அதை என்னால் இயல்பானதாக எடுக்க  முடியவில்லை தான். என் குடும்ப பெண்களின் போட்டோகளை ஆபாச தளங்களில் அப்லோட் செய்யப்பட்டிருந்த போது அதை நீக்க படாத பாடு பட்டேன், கூகிள் சர்ச்சில் ஆபாச போட்டோக்களுடன் எங்கள் போட்டோக்களும் வந்ததை கூகிளுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பும் அளவுக்கு போக வேண்டியிருந்தது. இதில் சென்னை சைபர் கிரைம் காவல்துறையின் ஒத்துழைப்புடன் ஒரு முடிவுக்கு கொண்டு வந்தோம்.

சின்மயி இப்பிரச்சினையிலிருந்து மன உறுதியுடன் மீண்டு வர விரும்புகிறேன், அதே சமயம் சர்ச்சைக்குறிய கருத்துகளை பொதுவில் உதிர்க்கும் போது  அதன் டீசண்டான எதிர்வினைகளை அதற்குறிய மரியாதையுடன் அலட்சியப்படுத்தாமல் எதிர்கொள்ள வேண்டும், நான் பெரிய அப்பாடக்கர், கருத்து மட்டுமே சொல்லுவேன் எதிர்வினைகள் என் மயிருக்கு சமம் என்ற அலட்சியத்துடன் செயல்படுவது சரியான நிலைப்பாடு அல்ல.

இன்டர்நெட்டில் ஆபாசப் படம் : பாடகி சின்மயி பரபரப்பு புகார்!
http://www.soundcameraaction.com/cinema-news/item/452-singar-chinmayi-files-a-complaint-about-degrading-pictures-on-twitter

சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்யப்பட்ட பிரபல ட்வீட்டர்கள் விபரம்
http://www.tamilveli.com/v2.0/index.php?itemId=363010


 

4 பின்னூட்டங்கள்:

said...

||அதே சமயம் சர்ச்சைக்குறிய கருத்துகளை பொதுவில் உதிர்க்கும் போது அதன் டீசண்டான எதிர்வினைகளை அதற்குறிய மரியாதையுடன் அலட்சியப்படுத்தாமல் எதிர்கொள்ள வேண்டும், நான் பெரிய அப்பாடக்கர், கருத்து மட்டுமே சொல்லுவேன் எதிர்வினைகள் என் மயிருக்கு சமம் என்ற அலட்சியத்துடன் செயல்படுவது சரியான நிலைப்பாடு அல்ல.||

இது முதன்மையான விடயம்.

said...

குழலி,

நல்ல கருத்தாக்கம்.

//பொதுவில் பேசும் பேச்சுக்கு வரும் பின்விளைவுகளை எதிர்நோக்கும் மனப்பக்குவம் இல்லாதவர்கள், தயவு செய்து பொது இடங்களில் ஆல் இன் ஆல் அழகு ராஜா/ராணி போல கருத்து சொல்வதை தவிர்க்க வேண்டும். //

இதனை பிராபல்யப்பதிவர்கள் என நினைப்பவர்களும் படித்து திருந்த வேண்டும்.

ஒரு கும்பலை சேர்த்துக்கொண்டு கும்மியடித்து நான் பிராபல்யப்பதிவர் எனக்கு வானத்துக்கீழே எல்லாம் தெரியும், நீ என்ன கருத்து சொல்வது என குதிக்கிறார்கள் சிலர் :-))

இணையத்தில் அவர்கள் பதிவுக்கு ஹிட்ஸ் அதிகம் கிடைப்பதாலேயே கொம்பு முளைத்துவிட்டதாக நினைக்கும் சினிமா அஸிஸ்டெண்ட் இயக்குனர்கள் இப்பதிவைப்படித்து மனம் திருந்துவார்களா?

said...

உங்க பதிவையும் முதல் பகுதி இரண்டாம் பகுதின்னு பிரிச்சே படிக்க வேண்டியிருக்கு.


சோம்பேறித்தனப்படாமல், இன்னும் எழுதியிருக்கலாமே

said...

//சிங்கப்பூரில் பிரபலமாக இருந்த ஒரு சமூக இணையதளத்தில் என் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டு அதில் நான் பாம்பேவிலிருந்து பெண்களை கொண்டுவந்து தொழில் செய்வதாக மூர்த்தி என்பவன்//

போலி டோண்டு என்றால் இன்னும் நன்றாக தெரியும்...